Saturday, August 22, 2009

பதிவோடிகள் - 3

சிபிகுமார் வீட்டு மொட்டை மாடியில் உக்காந்து குசும்பனும் சிபிகுமாரும் தீவிரமா எதையோ யோசிச்சுட்டு இருந்தாயங்க....

"டேய் மாப்பிள்ளைகளா......" அப்படின்னு சவுண்ட் விட்டுகிட்டே மாடிக்கு ஆயில்ஸ் ஏறி வந்துகிட்டு இருந்தார்..பின்னாடி பொட்டி படுக்கை எல்லாம் ஒரு சுத்து சுத்தி கையோட எடுத்துகிட்டு அல்ட்ரா மாடர்ன்னா ஒரு பைய வந்து நின்னான்...

"ஆர்டா இது பழைய தில்லானா மோகனாம்பாள் நாகேஷ் மூஞ்சியை மாஸ்க்கா செஞ்சு மாட்டிட்டு வந்த மாதிரி பதிவோடிகள்ல்ல ஒரு புது கேரக்டர்....." குசும்பன் காலை சுழத்தி சிபி தலையைத் தாண்டி எடுத்துப் போட்டுட்டு உக்காந்து ஒரு கேள்வி கேட்டாப்புல்ல...

"என்ன குசு...." ஆயில்ஸ் திக்க...

"டேய் என் பேரை ஷார்ட்டா கூப்பிடக் கூடாதுன்னு உங்கிட்ட எத்தனை வாட்டி சொல்லுறது.....அப்புறம் உன் பேரை நான் தமிழ் படுத்தி கூப்பிடுவேன் சொல்லிட்டேன்...." குசும்பர் டென்சன் ஆக...

"அட இல்லப்பா புல்லா சொல்லத் தான் வந்தேன்... மூச்சு வாங்க நடந்து வந்தேனா...அதுல்லா கொஞ்சம் கேப் விட்டதுல்ல மாறி போச்சிப்பா" ஆயில்ஸ் விளக்கம் கொடுக்க...

"ஆயில்ஸ் மாறி போகல்ல நாறி போயிருச்சு..." சிபிக்குமார் திரும்பி ப்ஞ்ச் டயலாக் சொல்லிட்டு வானத்தைப் பாத்து திரும்பவும் யோசனையாகிடுரார்.

"குசும்பா உனக்கு தெரிஞ்சவன் தானாமே...அப்படி தான் ஊர் முக்குல்ல நின்னு வழி கேட்டுட்டு இருந்தான் நான் தான் கூட்டி வந்தேன்...."

"டேய் நானெல்லாம் மக்கள் தொண்டன்டா....பல பேருக்கு என்னைத் தெரியும்...ஆனா அந்த பல பேரை எல்லாம் நான் தெரிஞ்சுக்க முடியுமா... முக்கா கிலோ மூளையை வச்சு முக்கா நிமிசம் யோசிச்சாக் கூட இந்த லாஜிக் புரியணுமே ஆயில்ஸ்...சரி சரி இந்த நாகேஸ் மூஞ்சியை எங்க பிக் அப் பண்ணியோ அங்கேயே ட்ராப் பண்ணிட்டு அவ பாக்கெட்ல்ல எதாவது இருந்தா எடுத்துட்டு வந்துரு....."

ஆயில்ஸ் சரின்னு தலையாட்டிட்டு திரும்ப...நாகேஷ் மாஸ்க்கை கழட்டிட்டு படு ஸ்டைலா தலையைத் தூக்குறார் அந்த புது கேரக்டர்...

"டேய் மாப்பி சென்ஷி நீயா சொல்லவே இல்ல.... என்ன இது மாஸ்க்"

"பன்னிக் காச்சல் மேட்டருக்கு மாஸ்க் போட்டா நல்லதுன்னு சொன்னாங்க அது தான் எனக்கு பிடிச்ச நாகேஷ் சார் மாஸ்க் போட்டுட்டு வந்தேன்...எப்பூடி?"

"அட பன்னிக் காச்சல் எல்லாம் உனக்கு வரவே வராதுடா மாப்பி....நீ வீணா பயந்துருக்க..."

"ம்ம்ம்ம் உண்மையாவா"

"பின்னே மனுசனுக்கு வர்ற வியாதி எல்லாம் உனக்கு வருமா சொல்லு....சரி....என்ன விசயம்...சொல்லு"

"மாப்பி காதல்டா.... அயாம் லவ் ஒண் கேர்ள்.....டீப்லி மேட்லீ...சின்சியர்லி....சூப்பர்லி....சீரியசஸ்லீ.....யு மை பிரண்ட் ஹெல்பி மீ...."

"மை பிரண்ட் ஹெல்ப் வேணும்னா மலேசியாவுக்குல்ல போகணும்... இங்கே எதுக்கு வந்த...?"

"நோ குசும்பு ப்ளீஸ்...லவ் அன்ட் லவ் ஒன்லி... நோ மேரேஜ் ஐ வில் டை....சீரியஸ்"

இதைக் கேட்டதும் அப்படியே எங்கிருந்தோ பேக் கிரவுண்ட் மீசிக் அதிர ஆரம்பிக்குது...

சிபிகுமார் முதுகு கை கால் எல்லாம் துடிக்க பொங்கி எழுந்து திரும்புறார்...

மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...... பாட்டு டெசிபல் ஏறுது...


சிபிகுமார் ஆயில்ஸ் குசும்பன் மூணு பேரும் புது கேரக்டரோட வேகமா நடந்து மாடி எல்லாம் ஜம்ப் பண்ணி வீதி எல்லாம் வேர்வை வழிய நடந்து அங்கிட்டும் இங்கிட்டும் வெறிதனமாய் பாத்துகிட்டு கடைசியா சிபிகுமார் வீட்டு முன்னாடி இருக்க ஒரு டிவிஎஸ் 50 வண்டியை ஸ்டார்ட பண்ணுறாங்க....

குசும்பன் ஸ்டார்ட் பண்ண சிபி பின்னாடி உக்கார ஆயில்ஸ் முன்னாடி செட்டில் ஆகுறார்.. சென்ஷி அப்போ நான் எப்படி வருவேன்ன்னு பரிதாபமாக் கேக்க...

ம்ம்ம் நீ முன்னாடி ஓடிகிட்டே வழி காட்டுனாத் தானே நாங்க பின்னாடியே வண்டியிலே வந்து பொண்ணைத் தூக்கி உன்னோடச் சேர்த்து வைக்க முடியும்....குசும்பன் லாஜிக்கா பதில் சொல்ல..

ஆகா அந்த ஊருக்கு எனக்கு வழி தெரியாதே...எப்படி நான் காட்டுவேன்..அதுவும் ஓடிகிட்டே....ரொம்ப கஸ்ட்டம் மாப்பி...அப்படின்னு சென்ஷி கையை விரிக்க...

அப்படி என்னடா ஊர்.......அது.... ஆயில்ஸ் ஆவேசமாகி கேக்க...

அது வந்து.....அமெரிக்கா மாப்பி....அது தான் என்னோட காதலி இருக்க ஊர்......பேக் கிரவுண்ட் மீசிக் அறுந்து ஓட....டிவிஎஸ் 50ஐ அப்படியே போட்டுட்டு மூணு பேரும் வந்தவனைத் திரும்பிக் கூட பாக்கமா நடையைக் கட்டுறாங்க...

டேய் மாப்பு.... நான் அவளை தீவிரமாய் லவ் பண்ணுறேன்டா....அவ இல்லன்னா மெய்யாலுமே செத்துருவேன்டா....வந்தவன் பீலிங்கா மெரட்ட... மூணு பேர் அப்படி இப்படி யோசிச்சி ஒரு முடிவுக்கு வர்றாங்க....

நண்பய்ன் ஆசைப் பட்டுட்டான்.... காதலிச்சிட்டான்... அதைச் சேத்து வைக்குறது தான் நட்பு அப்படின்னு பகலவன் பிரமீளாவே சொல்லியிருக்கார்..." சிபி தீவிரமான போஸ்ல்ல சொல்ல...

அது யார் பகலவன் பிரமீளா பலான பட டைரக்டர் பேர் மாதிரி இருக்கு....குசும்பன் சொல்ல....

அது நான் தான்...எனக்குள்ள இருக்க பின் நவீனத்துவ இலக்கியவாதியோட பேர் அது..சரி அதைப் பத்தி பொறவு பேசுவோம்..இப்போக் காதல் முக்கியம் கிளம்புங்க...ஸ்டார்ட் மீசிக்..."

மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...... மீண்டும் பாட்டு டெசிபல் ஏறுது...

டேய் மாப்பி அமெரிக்கா எப்படி போறது,.... ஆயில்ஸ் சிரீயசா யோசனையிலே கேக்க...

எதுக்கும் கவலைப் படாதீங்க அதுக்கெல்லாம் நம்ம பயபுள்ள ஒருத்தன் இருக்கான்....பாசக்கார பய....அம்புட்டு நேசக்காரன்...நட்புன்னா அப்படி ஒரு நண்பய்ன் அவன்...சொல்லிகிட்டே சிபிகுமார் போனைப் போடுறார்...சரியா மூணு வாட்டி ரிங் விட்டுட்டு கட் பண்ணுறார்....வருது வருது விலகு விலகு வேங்கை வெளியே வருது காலர் ட்யூன் அடித்து அடித்து ஓய்கிறது...

என்ன இது....போனை போட்டப்பல்ல இல்ல..பேச வேண்டியது தானே...அது என்ன கட் பண்ணுறது...

அது தான் சொன்னோம்ல்ல பாசக்கார பைய...அவனே போன் போடுவான்....அவன் யார்ன்னு உனக்கு இப்போத் தெரியாது அமெரிக்கா போனாத் தெரிஞ்சுடும்...

அடுத்த சில நிமிடங்களில் போன் வருகிறது... புலி...புலி ஸ்பீக்கீங்....புலி ஸ்பீக்கீங் பிரம் யு என் ஓ.....

டேய் மாப்பி.....அப்படின்னு ஆரம்பிச்சி பின்னாடி சாங் ஒலிக்க...சிபிகுமார் எல்லா விவரத்தையும் ஆவேசமா சொல்ல போன் பேச்சு முடிகிறது....

ஓ.கே. நாம இன்னும் இரண்டு நாள்ல்ல அமெரிக்கா கிளம்புறோம்.....பயபுள்ள இருக்கான் அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான்...நாம போறோம்ய்யா.....டண்டணக்க டண்டணக்க.....அப்படியே சீன் கட்டாகி ஏர்போர்ட் போவுது.... அங்கே அப்படியே பெர்மூடா கூலிங் கிளாஸ் கெட்ப்பல்ல ஏர்ஹோஸ்டஸ் இலியானா கூட ஒரு செம ராப் ராக் லோக்கல் குத்து பாட்டு....

இந்த டான்ஸ்ல்ல பதிவுலக மூத்த பதிவர்கள் கலந்து குத்து குத்துன்னு குத்தாட்டம் போட வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது...

அப்படியே பிளைட் நீயுயார்க் ஏர்போர்ட்ல்ல லேண்ட் ஆவுது...அங்கே ஷாருக்கானை விசாரிச்ச அதே அதிகாரி நம்ம பதிவோடிகளை விசாரிக்குறார்....நம்ம பயபுள்ளக அங்கேயும் நக்கலும் நையாண்டியுமாப் பேச..தனி ரூம்க்கு கூட்டிட்டுப் போய் குத்த வைக்கிறாங்க...அங்கே ஒரு ஓரமா ஆல்ரெடி ஒருத்தர் குத்த வச்சு சுவத்தைப் பாத்தப் படி இருக்கார்....

மூணு பேரும் அவரைக் கண்டுக்காம இன்னொறு பக்கமாப் போய் உக்காருராங்க...

டாப் ஆங்கிள்...சைட் ஆங்கிள்...லோ ஆங்கிள்ன்னு சுத்தி சுத்தி கேமரா போவுது...அப்புறம் அந்த வெள்ளைக்கார ஆபிசர் வர்றார்...

ஒய் ஆர் யு இன் அமெரிக்கா..பர்பஸ் ஆப் விசிட்

லவ் ஆபிசர்... திஸ் பாய் சென்ஷி...லவ் ஒன் கேர்ள்...

நோ சென்ஷி.... சென் ஹி...ஆபிசர் சொல்ல

நோ ஹி... ஹி ஷி ஒன்லி....ஆயில்ஸ் விளக்க முயல...

ஆபிசர் சென்ஷியை எழும்பி நிற்க சொல்லுகிறார்...அவரை ஏற இறங்க பாத்துட்டு...

நோ ஷி.... ஒன்லி ஹி.... ஐ செக் ஹிம்....

"டேய் இது வேற மாதிரி போவுது...சமாளிடா..." குசும்பரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது..

"ஆபிசர் யு பார் மிஸ்டேக்கன்....ஹி ...ஹி ஒன்லி.... பட் நேம் ஷி.... சென்ஷி.... ஹி லவ் ஒன் கேர்ள்... ட்ரு லவ்...ஒகே..."

ஆபிசர் புரிஞ்ச மாதிரி தலையாட்ட நம்ம மக்களுக்கு தைரியம் வருது...

"லவ் ப்ராப்ளம்... நோ ஒர்க் அவுட்...வீ கம் இன் குரூப் டு வின் த லவ்..ஹி மேரேஜ் ஷி....

"நோ ஷி மேரேஜ் ஷி....சென்ஷி ரைட்"

"எஸ் எஸ் ஷி ( சென்ஷியைக் காட்டி) மேரேஜ் ஷி ( அப்படின்னு வேற பக்கம் பொண்ணைச் சுட்டி காட்டி சொல்லுறார் குசும்பர்

"ஓ.கே...கிவ் மீ த கேர்ள்ஸ் அட்ரஸ்... யு ஹேவ் இட்" அந்த ஆபிசர் கேட்க

டேய் சென்ஷி மாப்பி உன் லவ்வர் அட்ரஸைக் கேக்குறார் எடுத்து கொடுடா..அதைப் பாத்து புரிஞ்சுட்டு நம்மளை விட்டுருவார்.. அப்புறம் நம்ம புலி இந்நேரம் இங்கே வந்து இருப்பான்...வந்து நம்மைக் கூட்டிட்டுப் போயிருவான்டா....

சென்ஷி பாக்கெட்டில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து ஆபிசரிடம் நீட்டுகிறார்..ஆபிசர் அதைப் படிச்சுட்டு செம கலவரமாகப் பார்க்கிறார் அவர் பார்வை இன்னொரு ஓரம் சுவத்தைப் பாத்து குத்த வச்சிருக்கும் அந்த இன்னொரு கேரக்டரையும் இவங்களையும் மாறி மாறி பாக்குறார்.. அப்புறம் போனை எடுத்து அவசரமா யாருக்கோ பேசுறார்...அடுத்த ஒண்ணு ரெண்டு நிமிசத்துல்ல திபு திபுன்னு ஒரு இருபது முப்பது அமெரிக்கா போலீஸ் பாய்ஞ்சு உள்ளே வர்றாங்க....

"ஆத்தி என்ன இது.... மொத்தப் போலீசும் இப்படி ரவுண்ட் கட்டுது.." ஆயில்ஸ் டெரர் ஆயிட்டப்பல்ல

"இரு இனியும் பொறுக்க முடியாது... நம்ம புலிக்குப் போனைப் போட்டுருவோம்..சைலண்ட்டா ஒரு செல்போனை எடுத்து சிபி மீண்டும் மூணு மிஸ்ட் கால் விடுறார்...மூணாவது கால் அடிக்கும் போது...

"ஆபிசர் போன் ரிங்கிங் இன் யுவர் பாக்கெட் ப்ளிஸ் பிக் அப்" அந்த இன்னொறு மூலையிலே இருந்து திரும்பாமலே சவுண்ட் வருது...

"இது நம்ம புலி குரல் ஆச்சே.... புலீஈஈஈஈஈஈஈஈ.....நீயா....." மூணு பேரும் பாசத்தோடு அந்த இன்னொரு மூலைக்கு பாய்கிறார்கள்

"கிட்ட வராதீங்க வெள்ளைக்கார போலீஸ் கிட்ட துப்பாக்கியைக் கடன் வாங்கி சுட்டுருவேன்...உங்க சகவாசமே வேணாம்ன்னு தானே சூடான்ல்ல சூடா செட்டில் ஆனேன்..அப்பவும் வியாழக்கிழமை நைட் ஆனா குசும்பா நீயும் உங்க டேடியும் போன் போட்டு...நீ வெறும் புலியா....இல்ல....கொட்டை எடுத்த புளியான்னு கேட்டு கலாய்ச்சீங்க..அதை எல்லாம் மறந்து லவ் மேட்டர்ன்னு உதவ வந்தா இப்படி தந்தூரி அடுப்புல்ல தொங்க விட்ட சிக்கன் மாதிரி உக்கார வச்சிட்டீங்களே..."

"என்னத் தான் ஆச்சு...."

"அந்த பேப்பர்ல்ல இருந்த அட்ரஸ் என்னன்னு தெரியுமா? நானும் அவசரத்துல்ல மெயிலை பிரிண்ட் எடுத்துட்டு வந்து நீட்டுனேன்..இப்போ நீங்களும் நீட்டிட்டீங்க"

"ஒயிட் ஹவுஸ் ..வாஷிங்டன்.....அன்ட் யு சே யுவர் லவ்வர்ஸ் டேட் இஸ் த பிரசிடேண்ட் ஆப் அமெரிக்கா...." ஆபிசர் ஆக்ரோசமாக் கேக்க, நம்ம பயபுள்ளக நெஞ்சுக்கு நடுவே கையை இறுக்கி கட்டிட்டு பரிதாபமா சென்ஷியைப் பாக்குறாங்க...

"ஆமாடா மாப்பி...என் லவ்வர் அப்பா அமெரிக்காவுக்கே பிரசிடெண்ட் டா..ஆனா இப்போ ரிட்டையர்ட் ஆயிட்டதாச் சொன்னா....லவ்ல்ல பிக்ஸ் ஆயிட்டேன்... நீங்க தான் என்னைச் சேர்த்து வைக்கணும்..சென்ஷி சிரியசா பீலிங்க்கா பேச....

பகலவன் பிரமீளா என்னச் சொல்லுறார்ன்னா.....

மூடுய்யா நொண்ணை....பேக்கிராவுண்ட் மீசிக் கொடுத்த பில்டப்ல்ல எங்கே போறோம்ன்னு கூட தெரியாமா உன் கூட கிளம்பி வந்தேன் பாரு....இப்போ இங்கே ஹஸ்கூல்ல பாய் ஸ்குவட் பசங்கல்ல இருந்து அப்பரசட் போலீஸ் வரைக்கும் வந்து அன்டர் ட்ராயரோட நிக்க வச்சு கேள்வியாக் கேட்டு குடைய போறாங்க....

பகலவன் பீரமீளா என்னச் சொல்லுறார்ன்னா...

யோவ் டென்சன் ஏத்தாதே.... அன்டர் டராயரோட நிக்க வைப்பாங்களா...சூடான்ல்ல இருந்து சூடா கிளம்புனதுல்ல அதை எல்லாம் போட மறந்து கிளம்பிட்டேன்டா.....புலி பதற...

பகலவன் பிரமீளாவும் இவ்வளவு நேரமா அதைத் தான் சொல்ல முயற்சி பண்ணிட்டு இருந்தார்... நீயேச் சொல்லிட்ட... சிபிகுமார் மீண்டு சிந்தனையில் ஆழ்கிறார்..

அதே நேரம்...

"YES SIR...4 TERROISTS DETAINED...SUSPECTED TO BE AL QAEDA...WHITE HOUSE ADDRESS IN HANDS..THEY WERE PROCEEDING TOWARDS WHITE HOUSE...."

13 comments:

குசும்பன் said...

//இப்படி தந்தூரி அடுப்புல்ல தொங்க விட்ட சிக்கன் மாதிரி உக்கார வச்சிட்டீங்களே..."//

செம காமெடி! கலக்கிட்டீங்க தேவ்!

கானா பிரபா said...

"டேய் மாப்பிள்ளைகளா......" அப்படின்னு சவுண்ட் விட்டுகிட்டே மாடிக்கு ஆயில்ஸ் ஏறி வந்துகிட்டு இருந்தார்..//

ஹை, ஆயில்ஸ் கூட இருக்கார். நல்லா போயிட்டிருக்கு.

இய‌ற்கை said...

ஹா..ஹா.. சூப்பர் காமெடி:-))

சந்தனமுல்லை said...

//"ஆர்டா இது பழைய தில்லானா மோகனாம்பாள் நாகேஷ் மூஞ்சியை மாஸ்க்கா செஞ்சு மாட்டிட்டு வந்த மாதிரி பதிவோடிகள்ல்ல ஒரு புது கேரக்டர்....."//


ஆகா....சென்ஷிக்கு நாகேஷ் மாஸ்க்கா!! அவ்வ்வ்!!

சந்தனமுல்லை said...

//குசும்பன் ஸ்டார்ட் பண்ண சிபி பின்னாடி உக்கார ஆயில்ஸ் முன்னாடி செட்டில் ஆகுறார்.. //

:-))) இப்படி டேமேஜ் பண்ணிட்டீங்களே!! ஆயில்ஸ் பாஸ்-க்கு முன்னாடி சீட்டா...அதை பேபி சீட்டுன்னு நாங்க சொல்லுவோம்!!

சந்தனமுல்லை said...

விறுவிறுப்பா போகுது தேவ்!! அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!! :-)

ஆயில்யன் said...

//கிட்ட வராதீங்க வெள்ளைக்கார போலீஸ் கிட்ட துப்பாக்கியைக் கடன் வாங்கி சுட்டுருவேன்...உங்க சகவாசமே வேணாம்ன்னு தானே சூடான்ல்ல சூடா செட்டில் ஆனேன்..அப்பவும் வியாழக்கிழமை நைட் ஆனா குசும்பா நீயும் உங்க டேடியும் போன் போட்டு...நீ வெறும் புலியா....இல்ல....கொட்டை எடுத்த புளியான்னு கேட்டு கலாய்ச்சீங்க..அதை எல்லாம் மறந்து லவ் மேட்டர்ன்னு உதவ வந்தா இப்படி தந்தூரி அடுப்புல்ல தொங்க விட்ட சிக்கன் மாதிரி உக்கார வச்சிட்டீங்களே..."//

:))))

புலி எண்ட்ரீ கலக்கல் பாஸ் :)

ஆயில்யன் said...

/ஒயிட் ஹவுஸ் ..வாஷிங்டன்.....அன்ட் யு சே யுவர் லவ்வர்ஸ் டேட் இஸ் த பிரசிடேண்ட் ஆப் அமெரிக்கா.//

அவ்வ்வ்வ்வ் பயபுள்ளை கவுஜ எழுதி எழுதி அங்கன போயி லிங்கை புடிச்சு வைச்சிருக்குடோய்ய்ய்ய்ய்ய்ய்:))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

:)
ஜூப்பரு!
வரிக்கு வரி! அதுவும் புலியோட வரி! :)

வெள்ளை மாளிகைக்கு வெள்ளை அடிக்க வந்த வெள்ளை உள்ளங்களே-ன்னு ஒரு ப்ரமீளா சாங் வைக்கறதில்லையா? :)

துபாய் ராஜா said...

//என்ன குசு...." ஆயில்ஸ் திக்க...

"டேய் என் பேரை ஷார்ட்டா கூப்பிடக் கூடாதுன்னு உங்கிட்ட எத்தனை வாட்டி சொல்லுறது.....அப்புறம் உன் பேரை நான் தமிழ் படுத்தி கூப்பிடுவேன் சொல்லிட்டேன்...." குசும்பர் டென்சன் ஆக...//

முடியல.வலிக்குது.

சிரிச்சி,சிரிச்சி நெஞ்சும்,குகு... குலுங்கி,குலுங்கி சிரிச்சி வயிறும்
வலிக்குது.... :))

கோபிநாத் said...

அட்டகாசமான பகுதி இது ;)))

கூடவே மாப்பியை கிழிச்சிருக்கும் விதம் அருமையே அருமை ;)))

மாப்பியோட காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போதற்க்கு மிக்க நன்றிண்ணே ;))

SanjaiGandhi said...

படம் தான் பட்டைய கிளப்புது. :))

அபி அப்பா said...

பதிவுலக நகைச்சுவைல டுபுக்குக்கு ஒப்பிட நீங்க மட்டும் தான் தேவ்!!!!!!!

tamil10