Monday, July 31, 2006

இலவச அரசன் 23ஆம் பின்னூட்டக்கேசி

நம்முடைய நீண்ட நாள் ஆசை எப்படியாவது ஒரு படமெடுக்கணும்ங்கறது தான்ங்க...ஆனாப் பாருங்க அதுக்கு நிறைய காரணிகள் சரியா அமையணும்.. நம்ம அரைவேக்காட்டுத் தனத்துக்கு அதெல்லாம் சரிப்படாதுன்னு நம்ம பினாத்தலார் சொல்ற மாதிரி அடங்குடா மவனேன்னு ஆசையை லகான் போட்டு அடக்கி வச்சுருந்தேன்.. ஆங்கிலேயப் பாணியிலான அந்த அடக்கு முறையையும் மீறி நம்ம கலைத் தாகம் தலை விரித்து தண்ணிக் கேட்டு ஆடுனா நான் என்னப் பண்றது சொல்லுங்க...

ஒரு சூப்பர் கதைச் சிக்கிருச்சு... உடனே அந்தக் கதைக்கு தோதான்னா கலைஞனைத் தேட ஆரம்பிச்சேன்... பட்டுன்னு நினைவுக்கு வந்தது.. நமக்கு ரசிகர் மன்ற தலைவர் பதவி எல்லாம் கவுரவப்படுத்துன தலைவர் பின்னூட்டப் புயலார் கொத்ஸ் தான்...

தன் அயராதப் பின்னூட்டப் பணிகள் மற்றும் அவ்வப்போது செய்யும் அலுவலகப் பணிகளுக்கு இடையிலும் நமக்கு நேரம் ஒதுக்கிக் கதைக் கேட்க ஒத்துக் கொண்டார். அந்தப் பெருந்தனமைக்கு ஒரு நன்றி சொல்லிக்கிறேன்..

"'அதாவது... இது ஒரு சரித்திரக் கதை.... ''
நான் இப்படி ஆரம்பிச்சதும் ஒரு ஆழ்ந்த தியான நிலைக்கு பி.பு போயிட்டார். மோவாக் கட்டயிலே கையை ஊன்றி கிட்டு அப்படியே தீவிரமாக் கதைக் கேட்க ஆரம்பிச்சார்.

"கிபி. 1800, இந்தியாவில்ல ஒவ்வொரு ராசாவும் 10- 15 கலியாணமெல்லாம் பண்ணி கணக்கற்ற இளவரசர்களையும் இளவரசிகளையும் உருவாக்கி நாட்டை ஒரு வீடு போல் ஆக்கி ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந்தக் காலம். "

கொத்ஸ் மேலும் கவனமாகக் கதைக் கேட்க ஆரம்பித்தார்.

"இந்த நேரம் இங்கிலாந்தில் இருந்து ஆன் சைட் புரொஜ்க்ட்க்காக இந்தியா வந்திறங்கிய பல ஹார்ட்வேர் கைஸ் இந்தியாவை ஒரு கிளைன்ட் பிளேஸ் என்றும் பாராமல்.. பல வைரஸ்களை நாசுக்காய் நம் மீது டவுண்லோட் செய்த படி இருந்தனர். நம்முடைய விலை மதிக்க முடியாத சொத்துக்களை அவர்களது சர்வ்ருக்கும் அப்லோட் செயதப் படி அட்டகாசம் புரிந்தனர். பல ஜலபொல டகால்டி மன்னர்களும் அவ்வப்போது வெள்ளையர்கள் காட்டிய கிளு கிளுப் படங்களில் மயங்கி... அந்த நினைப்பிலேயே தவறாக இயங்கி ஆன் சைட் வந்த அந்நிய அனானி கூட்டத்திடம் கோலியாய் உருண்டு கேலியாய் நின்றனர்...

கொத்ஸ் தலையை நிமிர்த்தி நம்மைப் பார்க்கிறார்...

"இங்கேத் தான் தலைவா உங்க இன்ட்ரோ.....
நீங்கப் பின்னூட்டக்கேசி அப்படிங்கற ஒரு பெரும் தேசப் பக்தி மிக்க வலைப்பதியும் அரசர். அப்படியே தஞ்சாவூர் தவில் ஒலிக்க நாதஸ்வர பேக் கிரவுண்ட்ல்ல.... ஒரு கம்ப்யூட்டர்ல்ல ஜூம் பண்றோம்... அங்கே....
ஒரு ஆயிரம் குதிரைகள் புழுதி கிளப்ப வருது... நீங்க முன்னாடி வருவீங்கன்னு உங்க ரசிகர்கள் உங்களைத் தேடுவாங்க பட் நீங்க பின்னாடி வர்றீங்க.. இங்கே நாம கேரக்டரை எஸ்டாப்ளிஷ் பண்றோம்.
பின்னூட்டியக் கறையினைத் துடைப்போம்
பின் ஈட்டியாய் மாறி அழிப்போம்....

அப்படின்னு ஒரு சாங்... ஷங்கர் மகாதேவன் வாய்ஸ்ல்ல வைக்கிறோம்.....

மக்களுக்காக, விடிய விடிய யோசிச்சும் நீங்கப் பதிவு போடாமா தவிக்கிறீங்க.... பெரும் போராட்டத்துக்கு அப்புறம் கடைசியா பதிவு தலைப்பை மட்டும் போட்டுட்டு அயர்ந்துத் தூங்கப் போறீங்க...
பட் காலையிலே நீங்க கண் முழிச்சு உங்க அம்மாவை வணங்கிட்டு வந்து கம்யூட்டரைத் திறக்கிறீங்க... பார்த்தா பதிவு இல்ல நீங்கப் போட்ட தலைப்புக்கே ஒரு 500 பின்னூட்டம் வந்து இருக்கு....

அப்படியே அண்ணாமலையிலே சூப்பர்ஸ்டாருக்கு கொடுக்குற பி.ஜி.எம் கொடுக்குறோம்....

ஒரு சாதரண டப்பா கம்ப்யூட்டர் முன்னாடி இருந்து நீங்க அப்படியே படி படியா பின்னூட்டம் வாங்கி வளர்ந்துலாப் டாப் தூக்கிட்டு டூவின் டவர்ஸ்ல்ல குறுக்கும் நெடுக்குமா நடக்குறீங்க. ( டுவின் டவர்ஸ் இடிந்துப் போனாலும் அதே மாதிரி நாம் செட் போடுறோம்) அந்த அளவுக்கு ஒரு அபார வளர்ச்சி... நாடெங்கும் உங்க புகழ் பரவுது.

நீ போட்டால் பதிவு அழகு...
நீ விடும் ரீல் அழகு....
அப்படின்னு ஒரு ட்ரீம் சாங்...

கொத்ஸ் புன்னகைப் பூக்க ... நாம் மேலும் தொடர்கிறோம்.

ஆங் இங்கே தான் கதையிலே டர்னிங் பாயிண்ட்...
ஆமா நீங்க திரும்பி நிக்குறீங்க.. அப்போ மிசிசொமெ..மிசிச்சொமெ.. அப்படின்னு வெஸ்ட்ர்ன் பி.ஜி.எம்.. டிஜிட்டல் சவ்ண்ட்ல்ல அலற விடுறோம்....

செவ்வாய் கிரகத்திலிருக்கும் பின்னூட்டா பல்கலைக் கழகம் உங்களுக்கு மாபெரும் பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செயகிறது...

அந்த பட்டம் தான் இலவச அரசன் 23ஆம் பின்னூட்டக்கேசி என்பது... நீங்களும் அந்தப் பட்டம் வாங்க... அரசர் உடையில் இடுப்பில் உடை வாள் ஏந்தி குதிரையில் ஸ்டூல் போட்டு ஏற போகும் நேரத்தில்

"ஸ்டாப் இட் பின்னூட்டக்கேசி...U ARE NOT ELIGIBLE FOR THIS AWARD... "
அப்படின்னு ஒரு வெள்ளைக் காரன் பெரும் படையோடு வந்து நிற்கிறான்.

அப்போவும் மிசிசொமெ..மிசிச்சொமெ.. அப்படின்னு வெஸ்ட்ர்ன் பி.ஜி.எம்.. டிஜிட்டல் சவ்ண்ட்ல்ல அலற விடுறோம்....
குதிரை ஏறாமல் சும்மா ராயல் வாக் விட்டு நீங்க வர்றீங்க....

"யாராடா நீ...செவ்வாய்க்கு நான் கிளம்பும் போதும் நாறவாயால் நிற்க சொல்கிறாய்"
"ஹே பின்னூட்டக் கேசி.. நான் டைசன்... பிரிட்டீஷ் கவர்மெண்ட் போலீஸ் போர்ஸ்"

"ஓ.. நீ தான் டைசன் துரை என்பவனோ?"
"எஸ்"
"எங்கு வந்தாயடா டைசா?"
"உன் மீது புகார் வந்து இருக்கிறது"
"எனக்கு கார் எல்லாம் வேண்டாம்.. குதிரைச் சவாரி தான் பிடிக்கும்"

"பின்னூட்டக்கேசி.. புகார் என்றால் கம்ப்ளேயண்ட்"
"என்ன... கம்ப்ளெயண்ட்டா யார் கொடுத்தது..எதற்காக?"
"பின்னூட்டக் கயமைத் தனம் பண்ணியிருக்கீயாம் நீ?"
"டைசா சின்னப் பய்லே... என்னப் பேச்சு இது ராஸ்கல்"

"ஆம் பிரிட்டீஷ் சர்க்கார் நடத்தும் பதிவுகளில் நீ பின்னூட்டமிட மறுத்தது முதல் குற்றம்.. அடுத்து அங்கு பின்னூட்டமிட வரும் பிறரையும் பின்னூட்ட விளையாட்டு என நீ உன் பதிவுக்கு ஓட்டிக் கொண்டு போவது மாபெரும் குற்றம்"

"ஆ.... "என சவுண்ட் விட்டபடி பின்னூட்டக்கேசி டைசன் கையிலிருக்கும் லாப் டாப் கனெக்ஷன்களைக் கண்டமேனிக்குப் பிடுங்கி விட்டு அவன் லாப் டாப்பை வாங்கி தரையில் போட்டு உடைக்கிறார்.

"பின்னூட்டக்கேசி.. இது மன்னிக்க முடியாத குற்றம்"

"போடா.. வெறும் அட்டையினால் செய்த வெற்று பெட்டியின் மேல் காம்பேக் பிரச்ரியோ என எழுதி வைத்திருப்பாய் அதை நான் எடுத்து உடைத்து விளையாடுவது குற்றம் என்றால் அந்த குற்றத்தை இன்னும் ஆயிட்ரம் முறை செய்வேன்.. போ போய் மிச்சமுள்ள அட்டைப் பெட்டிகளே எடுத்துவா... அழுக்கு துணிகள் போட்டு ஆற்றுக்கு துவைக்க அனுப்புகிறோம்"

"முடிவாக் கேட்கிறேன்.. பின்னூட்டமிடுவாயா மாட்டாயா"

"பின்னூட்டம்..அதுவும் உன் அதிகாரத்திற்கு பயந்தா... நெவர்... தெரியாமல் தான் கேட்கிறேன்...
பதிவு போட நான் தலைப்புக் கிடைக்காமல் விழித்திருந்தப் போது என்னோடு புல் நைட் விழித்திருந்து என்னோடு லார்ஜ் அடித்து நீயும் யோசித்தாயா...
இல்லை...பதிவுகளை மொத்தமாய் அரசாங்கம் தடைச் செயத் நேரத்தில் என் குலக் கொழுந்துக்களுக்கு பிராக்சி சர்வர் செட் பண்ணிக் கொடுத்து படிக்கத் தான் உதவினாயா நாதாரி பயலே..
அதுப் போகட்டும்.. பிராஜக்ட் மேனஜருக்குத் தெரியாமல் என் பாசமிகு நட்பு கைப்புள்ள பதிவுப் படித்து பி.எமிடம் பிடிப்பட்டு பெஞ்ச் மேல் ஏறி நின்ற போது நீ வாளோடு போய் கைப்புக்குத் தான் தோள் கொடுத்தாயா.. போடா போக்கத்தவனே....
பிளாகர் இருக்கிறது!!! பதிவுகள் பொழிகின்றன!!! உனக்கேன் போட வேண்டும் பின்னூட்டம்... மானம் கெட்டவனே... "

"ஏய் பின்னூட்டக் கேசிசிசிசிசிசிசி..."
"போடா வெள்ளைக்கார குண்டூசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசி...."

உணர்ச்சிப் பொங்க நாம் கதைச் சொல்லி முடிக்க கொத்ஸ் நம்மைப் பாரட்டுகிறார்...

அதுக்கு மேல பின்னூட்டக்கேசி போலீஸ் ஆதிக்கத்தை வென்று எப்படி செவ்வாய் பின்னூட்டா பல்கலைக்கழ்கம் சென்று பட்டம் பெறுகிறார் எனப்து தான் மீதிக் கதை.....

DISCLAIMER: இந்தக் கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் பூமி, செவ்வாய் இன்ன பிற கிரகங்கங்களில் வாழும் வாழ்ந்த வாழப் போகும் யாரையும் குறிப்பிடுவதல்ல... இது முழுக்க முழுக்க கற்பனையே.. கறபனை மட்டுமே.

பிகு: இந்தப் படத்திற்கு ஒரு நல்ல தாராள மனம் கொண்ட தயாரிப்பாளர் வேண்டும்.

Friday, July 28, 2006

டெல்லிக் கச்சேரி

நேத்து ராத்திரி ஆபிஸ் வேலை முடிச்சுட்டு வூட்டுக்குப் போய் ராச்சாப்பாடு எல்லாம் ஆனதுக்கு பொறவு ஊர் வம்பு தும்புகளை எல்லாம் தெரிஞ்சிக்கலாம்ன்னு ஒரு திடீர் ஆசை. உடனே ரிமோட்டைக் கையிலேடுத்து டிவி. பொட்டியைத் திருப்புனேன்.

வழக்கமா நமக்கு ராத்திரி டைம்ன்னா கவுண்டர் தமாஸ் இல்லன்னா நம்ம கைப்பு டமாஸ் இப்படி எதாவது சிரிப்பு நிகழ்ச்சி எதாவது சேனல்ல ஓடுனாப் பாத்துட்டு அப்படியே சிரிச்சாப்ல்ல தூங்குறது வழக்கம்..

நேத்து என்னமோ அப்படியே சேனல் விட்டு சேனல் தாவுண்ணா.. NDTVயிலே ஒரு வயசு புள்ள சிரிச்சாப்பல்ல கார் ஓட்டுறதைத் திரும்பத் திரும்பக் காட்டிக்கிட்டு இருந்தாயங்க.

அட நம்ம ஊருகாரரு நாராயண் கார்த்திக்குப் போட்டியாத் தான் இந்தப் புள்ள கிளம்பிருச்சோன்னு ஆவலாப் பாக்க ஆரம்பிச்சேன். சுத்துப் பட்டுல்ல நிக்கறவங்களுக்கெல்லாம் பறக்கற முத்தமெல்லாம் வேற அள்ளிவிட்டுகிட்டு இருந்துச்சு.. மொகத்துல்ல ஒரே சந்தோஷம்.. ஆத்தாடி கட்டாயம் எதோ வெட்டி சாய்க்கிற சாதனைத் தான் பண்ணியிருக்கணும்ன்னு நானும் இன்னும் ஆர்வமாப் பாக்க உக்காந்தேன்.

ஆகா.. அந்த புள்ளங்ககிட்ட பேட்டி எல்லாம் வேற எடுத்து வெளுத்துக் கட்டுனாயங்க. ஆத்தாடி அப்புறம் கூட முன் சீட்டல்ல ஒரு பச்சப் புள்ள்க் கணங்காச் சிரிப்பைச் சிதற் விட்டுகிட்டு இருந்தான் ஒரு ஒருத்தன்.
யப்பா என்ன ஒரு ஸ்மைல்டா சாமி... அவன் இந்தக் கிரகத்துல்லயே இல்ல..

பின் சீட்டுல்ல இன்னொரு புள்ள... அது காதுல்ல ஓட்டுனாப்பல்ல செல் போன்... அம்மாடியோ என்ன நடக்குது.. நமக்கு வெளங்கல்ல.... விவரமாப் பாக்கலாம்ன்னு பக்கத்து சேனலுக்குப் பாயஞ்சேன்... CNN IBN, HEADLINES TODAY, TIMES NOW, AAJ TAK, STAR NEWS அம்புட்டு டிவியிலும் இவிங்கத் தான் கலக்கலா லக்க லக்கன்னு பல்லைக் காட்டி படத்துக்கு போஸ் கொடுத்துட்டு இருந்தாயங்க..

விவரம் பெரிசா ஒண்ணுமில்லைங்க...

மூணு பேருக்கும் கையிலே ஒரு சிம்பிளான சோனாடா கோல்ட் கார் கிடைச்சிருக்கு.. உட்னே புள்ளங்களுக்கு ஒரு ஆசை.. இந்தக் காரை யாரவது பெரிய மனுசன் முன்னாடி ஓட்டிக் காட்டுனா நல்லாயிருக்கும்ன்னு.. உடனே எடு வண்டியைன்னு.. டில்லி ரேஸ் கோர்ஸ் ரோட்டுக்கு விட்டுருக்காயங்க.. அங்கிட்டுப் பார்த்தா பிரதமர் வீடு இருந்திருக்கு...

ஆயிரம் தான் சுயமா எந்த முடிவும் எடுக்காமல் சோனியா அம்மா சொல்லுறதுக்கெல்லாம் தலையை ஆட்டிகிட்டு இருந்தாலும் அவரும் பெரிய மனுஷன் தானே.. அதான் சல்லுன்னு உள்ளேக் காரை விட்டுட்டாங்க...

SPG மக்களும் புள்ளங்களைப் பெரிசா அதட்டமா பெரிய மனசோட உள்ளே விட்ருக்காங்க... இதைப் போய் பெரிசா செக்யூரிட்டி பிர்ச்சனை அது இதுன்னு அலம்பல பண்றாய்ங்க....

இதன் மூலம் இந்தியா தான் ஒரு ஜனநாயக நாடு என்பதை உலக நாடுகளுக்கு அழுத்தமாய் எடுத்துரைத்திருக்கிறது.. ஓட்டுப் போட்ட யாரும் எந்நேரமும பிரதமரைக் கூட எந்தக் கெடுபிடியும் இல்லாமல் சந்திக்க முடியுங்கறதைக் காட்டி உலக நாடுகளைக் கலங்க அடிச்சுருக்காங்க

வாழ்க சனநாயகம்... வாழ்க பாரதம்.

பி.கு: நம்ம சென்னைக் கச்சேரி சார்பா டில்லி பிரதமர் அலுவலகத்திற்கு நம்ம யுவன் சங்கர் ராஜா மியூசிக் போட்ட புதுப்பேட்டை படத்தில் வர்ற
" எங்க ஏரியா உள்ளே வராதே....." பாட்டை சிடிப் போட்டு இந்தா இப்போத் தான் கோரியர் பண்ணியிருக்கோம்.. நாளையில்ல இருந்து அந்தப் பாட்டு அங்கே 24 மணி நேரமும் அலறி அலர்ட்டாக்கிடும்..

CNN IBN செய்திகள்

Thursday, July 27, 2006

பஜார்ல்ல உஜார் இல்லன்னா...

ஒரு ஆறு ஏழுவருசம் முன்னாடி இருக்கும்ண்ணு நினைக்கிறேன்... செவ்வகம் போய் வட்டம் வந்தது.

"ஆ..அஸ்க்..புஸ்க்..சிடி டிஸ்க் நான் தர மாட்டேன்ப்பா எஙக அண்ணா லண்டன்ல்ல இருந்து அனுப்பி இருக்கான்.. விலை ஜாஸ்தியாம் "அப்படின்னு நம்ம சகா ஒருத்தர் படா பீட்டர் விட்டுகிட்டு திரிஞ்சான்.

பட்டம் பட்டமாப் போட்டு நடிகர், இயக்குநர், தயாரிப்புகாரரு எல்லாம் குனிஞ்சு நிமிந்து சான்பிரான்சிஸ்கோ மல்டி பிளக்ஸ்ல்லருந்து நம்ம டவுண் சவுத் ஆட்டையாம் பட்டி வரைக்கும் படம் ரிலீஸ் பண்ணா.. நம்ம ஆளு தம்மாத்தூண்டு வட்டத்துக்குள் அவிங்க அத்தனைப் பேத்துக் கொட்டத்தையும் அடக்கி சுருக்கி டிஸ்க்ன்னு இறக்கி கிராக்கி பாக்க ஆரம்பிச்சுட்டான்.

அப்போ நம்ம கிட்ட இருந்த நிதி வசதிக்கு வட்டமெல்லாம் கொஞ்சம் சாஸ்திங்கறதாலே ( இப்பவும் பத்தாக் குறை தான்... என்னப் பண்ண இந்தியனாச்சே). அந்த வட்டங்களைப் பத்தி ஒரு கனவோடு வாழ்ந்தக் காலம்..

வருஷம் உருண்டோடக் காலமும் கொசுவர்த்தி சுருள் கணக்காக சுருண்டு ஓடுச்சு.. அதுல்ல பாருங்க வெத்துப் பய்லா விட்டம் பார்த்த நாமளும் வட்டத்துல்ல படம் வாங்கிப் பாக்குற லெவலுக்கு வந்துட்டோம்ய்யா. மொத மொத வட்டத்துல்ல படம் காட்டுற பொட்டியை நம்ம நண்பன் ஒருத்தன் மூலமா துபாய்ல்லருந்து வாங்கி வீட்டுக்கு எடுத்துட்டு வந்ததும் நாம எடுத்துக்கிட்ட மொதல் சபதமே திருட்டு வட்டத்துல்ல படம் பாக்குறதில்லைங்கறது தான் ( ஒரு உண்மையான இந்திய குடி மகன் சாமி நான்)

சபதம்ன்னு ஒண்ணு எடுத்தா சோதனைன்னு ஒண்ணு வந்து தானே தீரும்... வந்துச்சு எனக்கும்.. புதுசா வட்டம் வாங்க மியூசிக் வேர்ல்ட்க்கு ஸ்பென் ஸர் பிளாஸா போயிருந்தேன்.அங்கிட்டு இங்கீலீஸ் தமிழ் இந்தின்னு வட்டத்துக்கு வகைவகையா ஜிகுஜிகுன்னு அட்டைப் போட்டு பளபளன்னு வச்சிருந்தான்...
நமக்கு அதை எல்லாம் பாத்ததும் பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்த்த மாதிரி ஒரு மெகா சந்தோஷம்

தம்பி தேவ்.. அள்ளிக்கோடான்னு களத்துல்ல இறங்குனேன்...
நமக்கு ரொம்ப பிடிச்ச படமாத் தேடிக்கிட்டே வந்தேன்... ஆகா... ஆல்பட்ல்ல பார்த்து விசிலிடிச்சே தொண்டைக் கட்டிகிட்ட தலைவர் படம் பாட்சா.. என்ன ஸ்டில்.. எம்மாம் ஸ்டைல்.. எடுறா அதை
அது ஒரு டி.வி.டி வட்டம்... வழவழப்பான தாளில் அருமையான சூப்பர் ஸ்டார் படம்,

அப்புறம் வட்டதுல்ல அந்த மெனு ஆப்ஷ்ன், இந்த மெனு ஆப்ஷன்னு அள்ளி தெளிச்சு நம்ம மனசை அப்படியே பிளைட் ஏத்தி பறக்கவிட்டுடாங்க....
வட்டத்துப் பொட்டியைத் திருப்பி பாக்குறேன் பிளைட் கிராஷ் ஆன சவுண்ட் நமக்கு மட்டும் கேக்குது... விலையைப் பார்த்த 600 ரூபாய்க்கு ஒரு ரூபாய் கம்மி... ஆகா தம்மாத்தூண்டு வட்டத்துக்கு ஆறு நூறு ரூபா தாளை இழப்பதா? நமக்கும் மூளை எல்லாம் இருக்குல்ல.. அது கொடுத்த அடவைசை அக்கறையாக் கேட்டுக்கிட்டு வட்டத்தை எடுத்த அதே இடத்துல்ல அலுங்காம குலுங்காமல் வச்சுட்டு அடுத்த படத்தைத் தேட ஆரம்பிச்சேன்.

எம்.சீ.யார், சிவாசி படம் சித்த விலைக் கம்மியா இருந்துச்சு ஒரு நூறு ரூபா தாள் கம்மியாச் சொன்னாங்க. தலை கிர்ன்னு சுத்தி நின்னுச்சு. வட்டக் கன்வு திட்டம் கொட்டமடிப்பது மெல்லக் குறைய ஆரம்பித்தது.

என்னடா இது? இப்போ என்ன பண்றது?

நமக்கு தான் இங்கிலீஸ் நல்லா புரியுமே.. அதுவும் சாக்கி சான் பேசி நடிச்ச படம்ண்ணா நச்ன்னு புரியுமேன்னு அங்கிட்டு நம்ம மேதாவிப் பாரவையை மேயவிட்டேன். ஆகா.. தமிழ் வாழ்கன்னு கொடி பிடிக்கிற அளவுக்கு வெள்ளைக்கார பயமக்க எடுத்தப் படத்து விலையெல்லாம் தாறுமாறா இருந்துச்சு... ஒன்பது நூறு ரூபா தாள்..

ஆத்தாடி.. தாங்காதுப்பூன்னு பம்மிட்டேன்.

அந்த நேரம் அங்கிட்டு பூப்போட்ட சட்டைப் போட்டுகிட்டு வேலைக்கு இருந்த பையன் ஒருத்தன் அரை குரை இங்கிலீஷ்ல்ல "HOW CAN I HELP U? "
என்று வேறு கேட்டு மானத்தை மேல் மாடிக்கு காத்து வாங்க அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டான்.

சரிடா தேவ்.. இவ்வளவு தூரம் வந்துட்ட.. என்ன ஆனாலும் சரி வட்டம் வாங்காமல் போகக்கூடாது நம்ம இதயத்தின் இரும்பு ஆணை மீற முடியுமா?( இதன் மூலமா எனக்கெல்லாம் இரும்பு இதயம்ன்னு சொல்லிக்கிறேன்)

இனி இப்படித் தேடக் கூடாதுடா... திருப்பு வட்டப் பொட்டியை..
ஆமா ஒவ்வொரு பொட்டியாத் திருப்பி விலையை மட்டும் பாத்துகிட்டு வந்தேன்...

இதுக்குள்ளே அங்கண வந்த ரெண்டு குட்டைப் பாவாடைப் பொண்ணுங்க ஆளுக்கு நாலு இங்கீலிஷ் படத்தை அள்ளிகிட்டு பில் போடப்போயிட்டாங்க...
இப்போ நம்ம பக்கமா ஒரு பெர்மூடா போட்ட வெள்ளைக் காரனும் அவன் கேர்ள்பிரண்டும் எதோ வட்டத்தைப் பிராண்டாத குறையாப் பார்த்துகிட்டு நின்னாங்க.

ஒண்ணே முக்கால் மணி நேரமா தேடித் திரிஞ்சு தவிச்சுப் பாக்குறேன்.. ஒரு வட்டப் பொட்டியிலே விலைக்குப் பக்கத்துல்ல 200ன்னு போட்டிருக்கு... கண்ணைக் கசக்கிட்டு மறூபடியும் பாக்குறேன் அட ஆமா 200 தான்...

தேவ் முடிவெடுத்துடு.. இது தான் வட்டத்துல்ல நீ பாக்கப் போற முதல் திரைக்காவியம்....வாங்குறதுன்னு முடிவு பண்ணிட்டு படம் என்னன்னு திரும்பிப் பார்த்தா...

அது ஒரு இந்திப் படம்...கஹோன்னா பியார் ஹேய்... நம்ம ஆறு விரல் புகழ் ஹிரித்திக் ரோஷனின் முதல் படம்... எடுத்துகிட்டு போய் பில் போட்டு பணத்தைக் கட்டிட்டு கிளம்பினேன்...

இப்படித் தாங்க என்னுடைய நீண்ட நாள் வட்டக் கனவு நிறைவேறிச்சு..

பி.கு: பதிவின் தலைப்புக்கும் பதிவிற்கும் உள்ள சமப்ந்தம் உங்களில் யாருக்காவது தெரிந்தால் தனி மடலில் எனக்கும் தெரியப் படுத்தவும்.

Monday, July 24, 2006

நட்பு எனப் படுவது யாதெனின்..

ஆகஸ்ட் மாசம்... இது நட்பு மாசம்ன்னு சொல்லலாம்... ஆர்ச்சீஸ் கேலரியிலிருந்து அடுத்த தெரு கேபிள் காரன் வரைக்கும் நட்பைக் கொண்டாடி கும்மி அடிச்சு குலவைப் போட்டுருவாயங்க.. நம்ம பதிவுலும் நட்பைக் கொண்டாடணும்ன்னு ஒரு முடிவு பண்ணிட்டோம்ல்ல

யாரும் விதைக்கவில்லை...
தண்ணீரும் ஊற்றவில்லை...
தானாய் முளைத்தது
தளிர்த்து வளர்ந்தது...
பூத்துக் குலுங்கியது...
உனக்கும் எனக்கும் நட்பு...

இது எல்லாம் நான் கல்லூரிக் காலத்திலே கிறுக்கின கிறுக்கல். இப்போ இந்தக் கிறுக்கலைப் படிக்கும் போது அப்படியே மனசுக்குள்ளே லைட்டா மழையடிக்குது... சன்னமான சவுண்ட்டில் இடி முழக்கம்.. ஒண்ணு இரண்டு மின்னல்.. அப்படியே ரகளையா ஒரு மான்சூன் கச்சேரி நடக்க ஆரம்பிச்சுடுது....நட்பு அது அழகான மியூசிக் மாதிரி...

கையெழுத்துப் புத்தகத்தின்
கடைசிப் பக்கத்தில்
பெயரோடு முகவ்ரியும்
எழுதும் போது
எனக்குப் புரியவில்லை
அடுத்த சில ஆண்டுகளில்
நாம் ஒருவரை ஒருவர்
தொலைக்கப் போகிறோம் என்று...


பழைய ஆட்டோகிராப் நோட் புத்தகத்தை புரட்டும் போது என்ன என்னவோ ஞாபகங்கள். யாரோ சொன்னது நினைவுக்கு வருது..

"நாம் வாழும் வாழ்க்கையை வெறும் வருடங்களை வைத்து எண்ணிவிடக் கூடாது..நாம் பெற்றிருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை வைத்தே எண்ண வேண்டுமாம்..."

அப்படி எண்ணலாம்ன்னு ஒரு சின்ன யோசனைத் துளிர் விட்டது...
விளைவுகளைப் பத்தி யோசிக்கமா எண்ண ஆரம்பித்தேன்...

மனசுங்கறது ஆண்டவன் கொடுத்த குதிரைங்கற விஷயம் அப்போத் தான் நமக்கு விளங்கிச்சு. சும்மா லேசாத் தட்டி விட்டேன் பாருங்க. அப்படியே வாலை ஒரு சுழட்டு சுழட்டுட்டி தலைத் தெறிக்க ஓட ஆரம்பிச்சுடுச்சு... அப்படி இப்படி உதாரா நம்ம புலிக்கேசி மாதிரி தொத்தித் தாவி நானும் அந்தக் குதிரையில் ஏறிகிட்டேன்... என்னுடையப் பயணம் பழைய பாதைகளை நோக்கி போனது... மனக்குதிரைக்கு லகான் போட்டு பிடிச்சு நிறுத்துறேன்....

அது ஒரு மழைக்காலம்
ஈர நிலமாய் இதயம்
உழுது போனாய்
உன் பெயரோடு
என் பெயரைச்
சேர்த்து எழுதிப் போனாய்...


ஆமாங்க... நான் யார்ன்னு எனக்கே தெரியாதக் காலத்துல்ல.. எனக்காக கொரலு விட்ட கூட்டம் ஒண்ணு இருந்துச்சுங்க... அந்தக் கூட்டத்தை இதோ இப்போ நினைச்சுப் பார்க்கும் போதே மனசுக்குள்ளே மான்சூன் கச்சேரி களைக் கட்டிடுச்சுப் போங்க...

இதயத்து ஓரத்தில் பாதி கடிச்ச கமர் கட்டு சுவைகளும்...
இலந்தப் பழ வாசனையும்..
இன்னும் மிச்சமிருப்பது எனக்கேக் கூட பிடிபடாத ஆச்ச்ரியம்..

கடைசிப் பெஞ்சு கவிழ்ந்தது ஒரு காலத்துல்ல என் வாழ்க்கையைப் பொறுத்த வரை டைட்டானிக் கவுந்துப் போனதை விட பெரிய செய்தி...
அதுக்குக் காரணமானவனைக் கழிவறையில் பின் பக்கமாய் போய் தாக்கி நட்புக்கு அஸ்திவாரம் போட்டுக் கொண்டது அதை விட பெரிய செய்தி....

மறந்துப் போயிருக்கும்
எத்தனையோ செய்திகளை
மீண்டும் சந்தித்த ஒற்றை பொழுதினில்
உன் நக்கல் சிரிப்பு
சொல்லாமல் சொன்னது
அது தானோ நட்பு..

துள்ளித் திரிந்த அன்றைய சென்னை வீதிகளில் இன்றைய மனம் மெது நடைப் போட்டது. அதே சுவர்கள்.. அதே ஜன்னல்கள்... மோதிய அதே கதவுகள்... சில அடையாளங்கள் மாறியிருந்தன..

நினைக்கவில்லை...
கிடைத்தப் பொருள் கிடைத்த இடத்திலேத் தொலைந்துப் போகுமென்று...

விசாரிக்க நினைக்கையில் தொண்டைக் குழிக்குள் ஒரு அழுத்தம்...காலத்தின் இடைவெளியில் இன்னொரு இடைச்சொருகல்...

மனம் வேகமாய் நகர்கிறது... என்னில் ஒரு பாதி மட்டும் என்னோடு வர மறுத்து அங்கேயே நின்று ஏக்கப் பார்வைப் பார்க்கிறது...

மேடைப் போட்டு
அறிவிக்கத் தேவையில்லை
கடமையென்னும் கயிற்றில்
கட்டி வைக்க அவசியம் இல்லை..
இதயததின் ஒரு ஓரம் போதும்
நினைத்தவுடன் பூப்பதற்கு..
அதற்கு நட்பு என்று பெயர்...

நண்பா என்று என்னை யாராவது அழைக்கும் போதெல்லாம் எனக்கு உங்க ஞாபகம் தாண்டா வருது..

(80களின் துவக்கத்தில் என்னோடு கோபாலபுரம் சாரதா உயர்நிலைப் பள்ளியில் துவக்கக் கல்வி கற்ற என் இனிய நண்பர்கள் பாலாஜி, சதீஷ், பர்த்லோமியா டயஸ் மற்றும் பி.எம்.ரவிக்குமாருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்)

டேய் உங்கள்ல்ல எவனாவது இதைப் படிச்சா எனக்கு ஒரு மின்மடல் போடுங்க....ரொம்ப சந்தோஷப் படுவேன்

tamil10