Friday, August 04, 2006

உறவுகள் - தேன்கூடு போட்டிக்கு அல்ல

வணக்க்கம்ங்க.. போனத் தடவை நான் பின்னூட்டப் புயலாருக்குச் சொன்னக் கதையைக் கேட்டு மக்கள் கண்கலங்கி கண்டபடி பீலிங் ஆகி ராதிதிரி ரெண்டு மணிக்கெல்லாம் எஙக பக்கத்தூட்டு லேண்ட லைன் நம்பர் கண்டுபிடிச்சு போனைப் போட்டு என்னிய வர வைச்சு வாழ்த்து மழை பொழியற அளவுக்கு போயிடுச்சு.

தலைவர் ஆல்ப்ஸ் மலையிலே இன்னும் முழு ஓயவு முடியாத நிலையிலும்.... சங்கத்து மக்களின் அன்பு பிடியிலிருந்து இன்னும் விடுபட முடியாமல் தவிக்கும் நிலையில் ஷூட்டீங் போவதில் சற்று தாமதம் ஏற்பட்டு விட்டது..

அந்தக் கேப்பில் அடுத்து என்ன செய்யலாம் எனத் தளபதியாரின் பதிவைப் படித்து விட்டு அட்டையாம் பட்டி பனமரத்தடியில் பதநீரில் ஸ்ட்ராப் போட்டு உறிஞ்சிய வண்ணம் நானும் நம்ம பாசக் கார அசோசிய்ட் சரவணனும் திங்க் பண்ணிகிட்டு இருக்கும் போது...

தட் டக் டக்ட்டகட் அப்படின்னு அந்த ஹய்டெக் ஹவேஸ்ல்ல சவுண்ட்...

"அண்ணே.. என்ன இங்கிட்டு? " அப்படின்னு சவுண்ட்.

கேட்ட கொரலா இருக்கேன்னு பத்நீரைப் படக்குன்னு குடிச்சுட்டு எழும்பிப் பார்த்தா அட நம்ம பாண்டி... பாண்டிக்கு பக்காத்துல்ல படா ஸ்டைலா கையிலே லாப் டாப் எல்லாம் வச்சுகிட்டு படு கிளாமரா ஒருத்தர் உக்காந்துகிட்டு இருக்கார்.

ஆரா இருக்கும் அந்த மச்சகார மன்னாருன்னு நம்ம மனசுக்குள்ளே திங்க் பண்ணும் போதே நம்ம மனச்சாட்சி டக்குன்னு பேசிருச்சு..
அட நம்ம சரவணன் தான்.. டபக்க்ன்னு..

"ஏனுங்கண்ணா.. அந்தப் பொட்டிக்குள்ளே இருந்து தலையை வெளியே எடுக்கவே மாட்டீங்களா.. ஆருண்ணா நீங்கன்னு" அலறலாய் கேட்டான்.

'தேவண்ணா உமக்கும் உம்ம கூட புதுசா இருக்க அஸ்க்கும் ( அதான் அசோசியேட்டாம்) ரொம்ப நக்கலாப் போச்சு... இது யார் தெரியுமா.... " ன்னு பாண்டி ஆரம்பிக்கவும் முன்னாடி அந்த ஸ்டைல் பார்ட்டி கையிலிருந்த லாப் டாப் மெகா சவுண்ட்ல்ல பாட ஆரம்பிச்சது..

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்தத் தொழிலாளி
விவசாயி.. விவசாயி.. விவசாயி...

டிராக்டரில் இருந்து டிராக் சூட் போட்டு குதித்த விவசாயி...
"ஹாய் கைஸ்... ஐயாம் விவசாயி..விவ்ன்னு கூப்பிடலாம்.. இல்ல வேளாண் தோழான்னு நீட்டி வாய் வலிக்க கூப்பிடலாம்.. இட்ஸ் யுவர் விஷ்" எனறார்..

"ஆகா விவசாயிங்கீரீங்கங்க.. ஆனா இப்படி மெகா ஸ்டைலா இருக்கீங்களே எப்படிண்ணா? " நம்ம சரா ஸ்லோவாக் கேட்டாப்பல்ல.

"ஹே விவசாயின்ன ஓடனே.. நீ என்னைத் தப்பா நினைச்சுட்டியா மேன்.. நான் பண்றது கார்ப்ரேட் விவசாயம்.."
"அப்படின்னா?"
" அது எல்லாம் உனக்கு இப்போச் சொல்ல முடியாதுப்பா..உன் பிரச்சனைக்கு வருவோம் இப்போ.."

" நம்ம விவ் அண்ணனுக்கு ஊரெல்லாம் கடலைக் காடு இருக்கு.. இப்போ உங்கக் கூட பேசணும்ன்னு சொன்னார்.. அதான் கூட்டிட்டு வந்தேன்.. நீங்க்ப் பேசற வரைக்கும் அண்ணன் அவிங்கக் கடலைக் காட்டைப் பூராவும் பாத்துக்கச் சொல்லி எனக்கு வேலைக் கொடுத்துருக்கார்"

அப்படின்னு சொல்லிட்டு பாண்டி கூலிங்கிளாஸ் எடுத்து மாட்டிகிட்டு டிராக்டரை ஓட்டிக்கிட்டு பறந்துட்டான்.

" அண்ணே.. அண்ணே.. கடலைக் காடு நான் கூட நல்லா பாத்துப்பேன்ண்ணே" எனப் பல்லைக் காட்டிய நம்ம பாசக்கார சராவைக் கெஞ்சிக் கதறி அடக்கிவிட்டு விவசாயியாரைப் பார்த்தேன்.

"ஆமா எங்களுக்கு என்னப் பிரச்சனை..?"

விவசாயி சிரித்தார். "தம்பிகளா... நீங்க பின்னூட்ட சூப்பர் ஸ்டாரை வச்சு படமெடுக்கக் கதைச் சொன்னவங்க தானே.."

"ஆமா.. ஆமா.." கோரஸாச் சொன்னோம்

"இப்போ அவர் படம் நடிக்கிற நிலைமையில்ல இல்லை.."

"ஆமா ஆமா உங்களுக்கு எப்படித் தெரியும்"

'சீ..பேச்சைக் குறை... நான் சொல்லறதைக் கேளு.. படம் மட்டும் தான் எடுப்பீயா.. இல்ல சிரியல்ண்ணாலும் ஓ.கேவா?"

ஆகா எதோ ஒளி தெரியுதேன்னு நானும் தம்பி சராவும் கொத்ஸ் பதில் சொல்லற வரைக்கும் கிடைச்ச கேப்ல்ல இந்த விவசாயி ட்ராக்டர்ல்ல ஏறிட வேண்டியது தான்னு முடிவு பண்ணிகிட்டோம்.

"தம்பி பின்னூட்ட புயல் எல்லாம் வருசத்துக்கு ஒரு பதிவுப் போட்டாலும் நீ இரண்டு வருசத்துக்கு இருநூறு பதிவுப் போட்டுப் பாக்குற பின்னூட்டத்தை எல்லாம் அந்த ஒரு பதிவுல்லப் பாத்துருவார்.. சோ.. நீ நான் எடுக்கப் போற சீரியலுக்கு ஒரு நல்ல கதை இருந்தாச் சொல்லு கேட்போம். ஒரு இரண்டு எக்கரா நிலததை வித்தாவ்து உன்னிய மாதிரி திறமைக் காரனை முன்னுக்குக் கொண்டு வர்றதுன்னு இந்த விவசாயி முடிவு பண்ணிட்டானாப்பா"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்" விவசாயியாரின் பாசததைக் கண்டு என் கண்ணுல்ல ஜலம் பொங்கி வழியுது. சரா ஒரு தம்பளர்ல்ல அந்தத் தண்ணியைப் பிடிச்சு வச்சுகிட்டான்னாப் பாருங்களேன்.

"அட என்ன கன்னு நீ.. சிரீய்ல்ல மத்தவங்க தான் அழுவோணும்.. நீ எல்லாம் அழுவக் கூடாது... உனக்கு பத்து நிமிசம் டைம் அதுக்குள்ளே நல்ல கதையாச் சொல்லுக் கேட்போம்"

"ஏங்கண்ணா.. என்ன மாதிரி கதை வேணும் உங்களுக்குன்னுச் சொன்னீங்கண்ணா சொல்லுவெனுங்க.."

" அடக் கன்னு தலைப்பைக் கேக்குறீயாக்கும்,.. ம்ம் அந்தா அந்த தேன்கூடு இருக்க மரம் தெரியுதா..?"

"நல்லாத் தெரியுதுங்கண்ணா"

"அந்த மரத்துக்கு கீழே எதோ போஸ்ட்டர் இருக்கு அது கண்ணுக்குத் தெரியுதா?"

"ஓ! என்னங்கண்ணா. நல்லாத் தானுங்கண்ணா தெரியுது"

"அதுல்ல என்ன எழுதியிருக்கு?"

உற்று பார்த்துவிட்டு "உறவுகள் அப்படின்னு எழுதியிருக்குண்ணா"

"நான் கன்னு சிறு வ்யசுல்லயே லண்டன் செர்மனி சப்பான்னு ஒலக விவ்சாயம் பாக்க போனதில்ல தமிழ் படிக்க நேரமில்லாமப் போச்சு கன்னு.. இப்போ எல்லாம் ஸ்பானீஷ்ல்ல எழுதி வச்சுத் தான் கன்னு தமிழ் படிக்கிறது..சரி கன்னு நீ அந்தத் தலைப்புல்லயே ஒரு கதை சொல்லு... இன்னும் அஞ்சு நிமிஷம் தான் உனக்கு டைம்.. ஆமா சொல்லிட்டேன்..."


"ஒரு அருமையானக் கதை இருக்குங்கண்ணா...வேளாண் தோழர் விவசாயி அளிக்கும் உறவுகள்..பேக்கிரவுண்டல்ல உறவுகள் உறவுகள் ஜில் ஜில்ன்னு உங்களுக்குப் பிடிச்சக் கன்னத்தில் முத்தமிட்டால் டியூன்ல்ல ஒரு பாட்டு போடுறோம்.. அஞ்சு நிமிசம் ஓடிப் போகுது..

விவசாயி லாப் டாப் திறந்து சாலிடேர் விளையாட ஆரம்பிக்கிறார்.

"தோட்டம் மாதிரி ஒரு வீடு.... அங்கேத் தான் கதை நடக்குது... ஆரம்பத்துல்ல அந்த் வீட்டுல்ல எல்லா ரூம்ல்லயும் எல்லாரும் சிரிக்கிறாங்க.. சிரிப்புச் சத்தமாக் கேக்குது.. மாறி மாறி சிரிக்கிறாஙக.. இப்படி ஒவ்வொரு ரூமா ஒரு 10 வாரம் காட்டுறோம்.. அப்புறம் சிரிக்கிறவங்களை தனி தனியா இன்னொரு பது வாரம் காட்டுறோம்... "

விவசாயியார் லாப் டாப்ல் இன்னும் மும்முரமாய் மூழ்குகிறார். சரா நோட் பேட் திறந்து அதில் நோட் பண்ணி கொள்கிறான்.

"இங்கே கதையிலே பெரும் டர்னிங் பாயிண்ட்... சிரிச்சவங்க சைலண்ட் ஆகி அப்படியே திரும்பி நிக்குறாங்க... ஒவ்வொருத்தராத் திரும்பறதை ஒரு 20 எபிசோட் காட்டுறோம்.. "
"தேவு ஸ்லோ மோஷ்ன் வைப்பா.." சரா எடுத்துக் கொடுக்க நாம் சராவின் மீது பாசம் கொண்டு கண் கலங்க...

"தேவு நோ சில்லி பிலீங்க்ஸ் கதைச் சொல்ல இன்னும் மூணு நிமிஷம் தான் பாக்கி கன்டினியூ" எனச் சரா கடமை உணர்வின் எல்லைக்கேப் போய் நிற்க நான் கொஞ்சம் பதறி விடுகிறேன்.

"ஆங் டர்னிங் பாயிண்ட் முடிஞ்ச ஓடனே... எல்லாரும் ஒரே குரல்ல ஓ அப்படின்னு அழுவுறாங்க..."

இவ்வளவு நேரம் கம்ப்யூட்டர்ல்ல தலையை விட்ட விவ் டக்கென்று தலையைத் தூக்கி ஆர்வமாய் நம்மைப் பார்க்கிறார். நமக்கும் சந்தோசம்.

"அவங்க ஏன் அழுவுறாங்க ஆடியன்ஸ் மத்தியிலே ஒரு பயங்கரக் கேள்வி இருக்கும்.. அது தான் கதை... அதுக்குப் பதில் தேடி அவங்க எல்லாம் ஆளுக்கு ஒரு வீதியா அலைவாங்க... ஆமா அப்பா ஏன் அழுவுறாருன்னு அம்மாவும்.. அண்ணன் ஏன் அழுவுறார்ன்னு அண்ணியும்.. தங்கச்சி ஏன் அழுவுதுன்னு தம்பியும் ..லண்டன் , செர்மனி, சப்பான்னு நீங்க சிறு வயசுல்ல விவசாயம் பார்த்த எல்லா ஊர் வீதியிலும் அலையறாங்க... அழுவுறாங்க...."

சரா மெதுவா நம்ம கிட்ட "ஏய் தேவு.. ஆமா அடுத்த ரூம்ல்ல இருக்கவன் அழுவுறதைக் கேட்க கடல் தாண்டி அலையறதுக்கு என்னய்யா சம்பந்தம் இருக்கு.."

"அந்த ஊரு எல்லாம் நான் மேப்ல்ல கூடச் சரியாப் பாத்தது இல்லப்பா.. இப்படி கதைச் சொல்லி கிளம்புனாத் தான் உண்டு.. உன்னியும் கூட்டிட்டுத் தான் போவேன்.. அதுனால கம்முன்னு கதை கேளு"

விவசாயி மிகவும் ரசித்துக் கதைக் கேட்க ஆரம்பித்தார்.

"இப்படி ஒரு அழுகையால பிரிஞ்ச உறவுகள் ஒரு கட்டத்துல்ல அமெரிக்காவில்ல சந்திக்கறாங்க.. அதுக்கு முன்னாடி அவங்க எப்படி அமெரிக்காவுக்கு வந்துச் சேர ஓலகமெல்லாம் இருக்க நாடுகளை எப்படி எல்லாம் சுத்தி சுத்திக் கஷ்ட்டப்படுறாங்க அப்படிங்கறதை தமிழ் மக்கள் கண்ணீர் வெள்ளத்துல்ல நீந்துற மாதிரி சொல்லப் போறோம்ங்கண்ணா"

"உறவுகளின் மகத்துவம் யாரும் இப்படி சொல்லியிருக்கவே முடியாதுண்ணா"
கதைச் சொல்லும் நேரம் முடிய ஆவலாய் விவசாயியை நாம் பார்க்க... அவர் கண்ணில் தாரை தாரையாய் கண்ணீர் பெருக்கெடுத்து வரப்பினில் ஓடத்துவங்கியது... ஆகா கதைச் சொல்லி விவ்சாயம் பண்ணிப்புட்டோம்யான்னு நானும் சராவும் ஆனந்தத்தில் ஆடிப் போய் நின்றோம்ய்யா.

"கதையைப் பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்லீங்களேன்னு நாம் இழுக்க...
"என்ன கன்னு என் கண் கலங்கிப் போயிருச்சு.. இன்னும் நான் என்னத்தச் சொல்ல..."

"அப்போ கதைக்குத் தேவையானப் புள்ளங்க செலக்ஷன் ஆரம்பிச்சுரலாமா?" அப்படின்னு கேட்டக் கொரலு வந்தத் திசையைப் பார்த்தால்... அட நீங்க நினைச்ச அவரேத் தான்.

"ஆங் அதெல்லாம் நம்ம ஊரு புள்ளங்களையே சொல்லிரலாம்... நான் பாத்துக்குறேன்..."
"அட்வான் ஸ் கொடுத்தா.. நல்லாயிருக்கும்.." நாம் மண்டையைச் சொறிய...
"அட கன்னு நான் என்னச் சொன்னேன்?"ரெண்டு எக்காரக் கதையை மறந்துட்டியா...?"

"அட ஆமாங்க..."
"எப்படி மறக்கலாம்.. அதைய வச்சுத் தானே உம் பொழப்பே நடக்கணும்"

"ஆமாங்க.. அந்த ரெண்டு எக்காரா நிலம் எங்கிங்க இருக்கு?"

"அட அது யாருக்குப்பாத் தெரியும் அவருக்கு மட்டும் தானே தெரியும்?"
"என்னது அவரா என்னங்கச் சொல்லுறீங?"

" ஆமா தம்பி அரசாங்கம் ஆளுக்கு ரெண்டு எக்கார நிலம் தர்றேஏனு சொல்லியிருக்கு.. கொடுத்த ஓடனே அதை வித்து எப்படியும் நாம் சீரியல் எடுக்கிறோம்.. எடுத்து சன் டி.வியிலே விடுறோம்"

"ஸ்ப்ப்ப்பாஆஆஆஆஆ" நானும் நம்ம அஸோசி சராவும் மயக்கமாகுறதுக்கு முன்னாடி கொடுத்த மெல்லிசைத் தான் இது.

டிஸ்கி: இந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருக்கும் விவசாயி நமது பதிவுலகத்தைச் சார்ந்த விவசாயி இல்ல.. இவர் வேற எனபதைத் திட்டமும் தெளிவுமாய் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பதிவும் கற்பனையே.. கற்பனை மட்டுமே....மீண்டும் சந்திப்போம் அது வரை ஹேப்பி வீக் என்ட் மக்கா..

44 comments:

ILA (a) இளா said...

உன் பேச்சி கா

ALIF AHAMED said...

இங்கையும் சீரியலா...!!!!

எஸ்கேப்

ALIF AHAMED said...

இ கொ 500 தான் அடிச்சாரு

கதை வரட்டும்.. படிச்சிட்டு

உன்னைய 1000 எபிசோடுக்கு கொண்டு போயிடுலாம் என்ன ????

ஜொள்ளுப்பாண்டி said...

//பத்நீரைப் படக்குன்னு குடிச்சுட்டு எழும்பிப் பார்த்தா //

ஏண்ணே சுண்ணாம்பு போட்டா போடாமலா ;)) ?? ஒரு மரத்து பதனி தானே ??;))

சீக்கிரம் சொல்லுங்க தேவு காத்துகிட்டு இருக்கேன் :)

ALIF AHAMED said...

//
ஏண்ணே சுண்ணாம்பு போட்டா போடாமலா ;)) ?? ஒரு மரத்து பதனி தானே ??;))
//

இது என்னா கேள்வி சுண்ணாம்பு போடாம தானே நாம பதனீர் குடிப்போம்..:::))))

ALIF AHAMED said...

//
ஒரு மரத்து பதனி தானே ??;))
//

கலயத்தை மரமே கட்டிக்கிட்டா அது இளநீர்..

கலயத்தை நாம கட்டுனா அது பதநீர்..

ஆஹா தத்துவமா வருதே....

கப்பி | Kappi said...

அடங்கொப்பரானே...

சீரியல் ஆரம்பிச்சிட்டாங்க டோய்..

உங்கள் நண்பன்(சரா) said...

ILA(a)இளா said... /
/உன் பேச்சி கா //

விவ் சார்... விவ் சார்...
கொஞ்சம் வெயிட் பண்ணுங்கசார்... நீங்க அப்படியே உருகி உள்ளயே போராமாதிரி ஒரு கத சொல்லிடுறோம்..

அண்ணே.. நாந்தாண்ணே உன் அசோசியேட் சரா(நியுமராலஸி படி மாத்தியாச்சுங்கோ...)

தேவு..மப்பப் போட்டீனா எந்திரிக்கவே மாட்டியே... எந்திரி, டிரக்டர் சத்தம் வேற கேட்குது, அந்தப் பாண்டி வர்ரமாதிரி இருக்கு அதுக்குள்ள எதாவது கத ரெடி பண்ணனும்...


அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

//நீங்க்ப் பேசற வரைக்கும் அண்ணன் அவிங்கக் கடலைக் காட்டைப் பூராவும் பாத்துக்கச் சொல்லி எனக்கு வேலைக் கொடுத்துருக்கார்"//

பழக்கடப் பாண்டி ஒம் புத்தி தெரியாதா...?
கடலக்காட்ல இருக்கிர எதாவது ஒரு நாட்டுக்கட்டய கடல போட்டு உஷார் பண்ணலாம்னு போர..
கேட்டா வேலை கொடுத்திருக்காராம் நீம் பாக்குர வேலை எங்களுக்கு தெரியாது பாரு,

அன்புடன்...
சரவணன்.

Santhosh said...

//அட என்ன கன்னு நீ.. சிரீய்ல்ல மத்தவங்க தான் அழுவோணும்.. நீ எல்லாம் அழுவக் கூடாது... //
ஆகா தேவு உன்னையவிட விவாக்கு சீரியல் எடுக்குற எல்லாத்தகுதியும் அவரே ஏன் இதை எடுக்கக்கூடாது.

உங்கள் நண்பன்(சரா) said...

சந்தோஷ் said...
//ஆகா தேவு உன்னையவிட விவாக்கு சீரியல் எடுக்குற எல்லாத்தகுதியும் அவரே ஏன் இதை எடுக்கக்கூடாது.//

யாருப்பா அது... ஓ! சந்தோஷா ஏன் எங்க பொழப்புல மண்ணப் போடுர(திட்டும் போது கூட விவ ஒங்க மண்ணப் பத்தி தான் திட்டுறோம் , பாத்தீங்களா எந்தளவுக்கு கதையில ஒன்றிப் போயிருக்கோம்னு)

சும்மாவே இந்த நடிகர்களெல்லாம் படம்புடிக்க வர்றேம்னு சதாய்கிறானுக இதுன நீர் என்னடானா புரொடியுசரையும் வரச் சொல்லுர...
போயாப் ....போஓஓஓ.....
மனுசனத் திங் பண்ண விடுங்கப்பா...

பட டிஸ்கசன்னா என்னன்னமோ கிடைக்கும்னு(??!) வந்தா இந்த ஆள் என்னடானா பனமரத்தடில பதநீ குடிக்க விடுரான்.

தேவு நேரம் ஆச்சுல நாம டெவலப் பன்னுனத சொல்ல வேண்டியது தானே...


அன்புடன்...
சரவணன்.

VSK said...

கதய சொல்லுங்கப்பா...சீக்கிரம்!

ALIF AHAMED said...

ரெண்டு நாள் முடிச்சு போச்சி கதைய UPDATE பண்ணுப்பு

கோவி.கண்ணன் said...

//" ஆமா தம்பி அரசாங்கம் ஆளுக்கு ரெண்டு எக்கார நிலம் தர்றேஏனு சொல்லியிருக்கு.. கொடுத்த ஓடனே அதை வித்து எப்படியும் நாம் சீரியல் எடுக்கிறோம்.. எடுத்து சன் டி.வியிலே விடுறோம்"
//
சரா ... முழு வசனமும் வயிறைப் புன்னாக்கியது. குறிப்பாக மேலே அரசாங்க இரண்டு ஏக்கர் ... சிரிப்பும் சிந்திப்பும் அருமை அருமை !
:))))

உங்கள் நண்பன்(சரா) said...

கோவி கண்ணன் சார்..
உங்களுடைய அருமை அருமை பாராட்டுக்கள் அனைத்தும் டைரட்டர் தேவுக்கே, அவர்தான் ஆக்கம்,
நான் வெறும் ஊக்கம் மட்டுமே,

(ஆஹா... ஆக்கத்தையும் ஊக்கத்த்யும் வைத்து ஒரு கவிதைப் பின்னூட்டம் ரெடி..)


அன்புடன்,
சரவணன்.

நாகை சிவா said...

அந்த விவ்சாயி, நம்ம விவ் கிடையாதுல

Unknown said...

//உன் பேச்சி கா//

ண்ணே டிராக்டர் பத்தி எல்லாம் சொன்னதுல்ல அது நீங்கண்ணு கன்பியூஸ் ஆயிட்டிங்களா.. அது வேற ஆளுண்ணே.. நம்மப் பாண்டிக்கு கட்லைக் காட்டுல்ல வேலைப் போட்டுக் கொடுத்தவர் அவர்.

ண்ணே யூ பார் மிஸ்டேக்கேன்... ஓ.கே

Unknown said...

//இங்கையும் சீரியலா...!!!!//

மின்னலு வேற எங்கப்பூ சிரியல் ஓடுது.. பதிவுலகில் மொத முறையா நான் விடலாம்ண்ணு இருந்த பஞ்ச் டயலாக்குக்கே ஆப்பு வச்சுட்டியே...

Unknown said...

//இ கொ 500 தான் அடிச்சாரு//

மின்னலு அது போன வாரம்.. தலைவர் தலைவர் தான்.. இன்னும் அடிப் பின்னிக்கிட்டு இருக்கார்ப்போ.

//கதை வரட்டும்.. படிச்சிட்டு
உன்னைய 1000 எபிசோடுக்கு கொண்டு போயிடுலாம் என்ன ???? //
க்குத் தான் எம்மேல எம்புட்டு பாசம்... இந்த மேட்டருக்காக உன்னியத் தனியா கவ்னிச்சுருவோம்

Unknown said...

//ஏண்ணே சுண்ணாம்பு போட்டா போடாமலா ;)) ?? ஒரு மரத்து பதனி தானே ??;)) //
என்னப்பூ பாண்டி என்னிய நீ புரிஞ்சி அறிஞ்சு தெரிஞ்சிக்கிட்டது எல்லாம் இவ்வளவு தானா? சே வெட்கம் வெல்கம் வேதனை ...

Unknown said...

//இது என்னா கேள்வி சுண்ணாம்பு போடாம தானே நாம பதனீர் குடிப்போம்..:::)))) //

மின்னலு செல்லம் நல்லாச் சொல்லுப்பூ பாண்டி புள்ளக்கு சிலபஸ் எல்லாம் மறந்துப் போயிடுச்சாம்:)

Unknown said...

//கலயத்தை மரமே கட்டிக்கிட்டா அது இளநீர்..

கலயத்தை நாம கட்டுனா அது பதநீர்..

ஆஹா தத்துவமா வருதே.... //

மின்னலு செல்லம் ஆமா சிபி வீட்டுக்கும் உங்க வீட்டுக்கும் எம்புட்டு தூரம்... எதுக்கும் ஜன்னலைக் கொஞ்சம் சாத்தியே வைப்பூ

Unknown said...

//அடங்கொப்பரானே...

சீரியல் ஆரம்பிச்சிட்டாங்க டோய்.. //

கப்பி கூல் டவுண் ... இப்படி நீங்களே பதறி சிதறி கதறிகிட்டு நின்னா.. பாவம்ய்யா உங்க குதிர கொந்தளிக்குதுப் பாருங்க...அய்யோ அய்யோ...

நிலா said...

//" ஆமா தம்பி அரசாங்கம் ஆளுக்கு ரெண்டு எக்கார நிலம் தர்றேஏனு சொல்லியிருக்கு.. கொடுத்த ஓடனே அதை வித்து எப்படியும் நாம் சீரியல் எடுக்கிறோம்.. எடுத்து சன் டி.வியிலே விடுறோம்"
//

:-)))

கைப்புள்ள said...

தேவு,
சூப்பரா இருக்குதுப்பா. இன்னும் சிரிச்சு முடிக்கலை.

//உற்று பார்த்துவிட்டு "உறவுகள் அப்படின்னு எழுதியிருக்குண்ணா"

"நான் கன்னு சிறு வ்யசுல்லயே லண்டன் செர்மனி சப்பான்னு ஒலக விவ்சாயம் பாக்க போனதில்ல தமிழ் படிக்க நேரமில்லாமப் போச்சு கன்னு.. இப்போ எல்லாம் ஸ்பானீஷ்ல்ல எழுதி வச்சுத் தான் கன்னு தமிழ் படிக்கிறது..சரி கன்னு நீ அந்தத் தலைப்புல்லயே ஒரு கதை சொல்லு... இன்னும் அஞ்சு நிமிஷம் தான் உனக்கு டைம்.. ஆமா சொல்லிட்டேன்..."//

பின்னி பெடலெடுத்திருக்கே.
:)

இப்ப ஆல் இன் ஆல் அழகு ராஜா இங்க வருவாரு பாரேன்.

துபாய் ராஜா said...

//"அந்த ஊரு எல்லாம் நான் மேப்ல்ல கூடச் சரியாப் பாத்தது இல்லப்பா.. இப்படி கதைச் சொல்லி கிளம்புனாத் தான் உண்டு.. உன்னியும் கூட்டிட்டுத் தான் போவேன்.. அதுனால கம்முன்னு கதை கேளு"//

தேவு,சின்னதிரை,பெரியதிரை டிஸ்கசன்
சீக்ரட்லாம் வெளிய வுடுற.பார்த்துப்பா,
ஆராவது ஆட்டோ அனுப்பிடப்போறாங்க.

ILA (a) இளா said...

//இந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருக்கும் விவசாயி நமது பதிவுலகத்தைச் சார்ந்த விவசாயி இல்ல.//
என்னையா நெனச்சுகிட்டீங்க இந்த சங்கத்து மக்கள் எல்லாம், அன்னைக்கு கைப்பு ஒரு சீதேவி , மூதேவி கதையை எழுதிபுட்டு இது சங்கத்து விவசாயி இல்லே, இவர் ரொம்ப நல்ல் விவசாயின்னார், அப்போ நான் என்ன கெட்ட.......
சகவாசம் உள்ள விவசாயியா?
நீரு இன்னைக்கு அந்த விவசாயி இல்லேங்கிறீர், ஆஆஆஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கப்பி | Kappi said...

மாப்பி..

சீரியல் கலக்கல்..

//இந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருக்கும் விவசாயி நமது பதிவுலகத்தைச் சார்ந்த விவசாயி இல்ல.. //

"அந்த பாவியைக் கல்லால் அடிக்காதீர்" -வசனம் ஞாபகம் வருது ;))

ILA (a) இளா said...

//இந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருக்கும் விவசாயி நமது பதிவுலகத்தைச் சார்ந்த விவசாயி இல்ல.. இவர் வேற எனபதைத் திட்டமும் தெளிவுமாய் தெரிவித்துக் கொள்கிறேன்//
என்ன திட்டம், சதித்திட்டம் தானே.

Unknown said...

//அண்ணே.. நாந்தாண்ணே உன் அசோசியேட் சரா(நியுமராலஸி படி மாத்தியாச்சுங்கோ...)//
அதெல்லாம் நல்லாப் பண்ணு போனப் பதிவில்ல தலைவர் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லச் சொன்னா மட்டும் எஸ் ஆயிரு

Unknown said...

//கடலக்காட்ல இருக்கிர எதாவது ஒரு நாட்டுக்கட்டய கடல போட்டு உஷார் பண்ணலாம்னு போர..
கேட்டா வேலை கொடுத்திருக்காராம் நீம் பாக்குர வேலை எங்களுக்கு தெரியாது பாரு,//

விவசாயம் செய்ய நீயும் கத்துக்கோ.. அதை விட்டுட்டு நோ சில்லி பீலிங்க்ஸ் ஆமா

Unknown said...

//ஆகா தேவு உன்னையவிட விவாக்கு சீரியல் எடுக்குற எல்லாத்தகுதியும் அவரே ஏன் இதை எடுக்கக்கூடாது//

ஆமா சந்தோஷு இதுல்ல உள்குத்து ( காமெடி) வெளிகுத்து ( கீமெடி) எதுவும் இல்லையே..

Unknown said...

//தேவு நேரம் ஆச்சுல நாம டெவலப் பன்னுனத சொல்ல வேண்டியது தானே...//

//கதய சொல்லுங்கப்பா...சீக்கிரம்! //

ஆச்சுங்கோ கதையை விளக்கமாச் சொல்லியாச்சுங்கோ... இனி மக்களே நீங்கத் தான் இதமாப் பதமா எடுத்து விவ் கிட்டச் சொல்லி ஆக வேண்டியதைப் பார்க்கோணும்.

Unknown said...

//சரா ... முழு வசனமும் வயிறைப் புன்னாக்கியது. குறிப்பாக மேலே அரசாங்க இரண்டு ஏக்கர் ... சிரிப்பும் சிந்திப்பும் அருமை அருமை !//

//கோவி கண்ணன் சார்..
உங்களுடைய அருமை அருமை பாராட்டுக்கள் அனைத்தும் டைரட்டர் தேவுக்கே, அவர்தான் ஆக்கம்,
நான் வெறும் ஊக்கம் மட்டுமே, //

கோவி சார் சரா எனக்கு அசோஸியட்டாக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செய்தேனோ.. (இதுல்ல உள் வெளி குத்துக்கள் இல்லையாக்கும்)

Unknown said...

//அந்த விவ்சாயி, நம்ம விவ் கிடையாதுல
//

புலிக்குட்டி எல்லா விவசாயியும் நம்ம விவ்சாயி தான்.. ஆனா இந்த விவசாயி நம்ம விவ்சாயி இல்ல ஹி ஹி

Unknown said...

வாங்க நிலாக்கா இலக்கணப் பிழையெல்லாம் இப்போ அளவோட பண்ணுறேனா? பார்த்துச் சொல்லுங்க.

Unknown said...

//இப்ப ஆல் இன் ஆல் அழகு ராஜா இங்க வருவாரு பாரேன். //

ஐ ஐ வர்றலியே!!! வர்றலியே!!!!

Unknown said...

//தேவு,சின்னதிரை,பெரியதிரை டிஸ்கசன்
சீக்ரட்லாம் வெளிய வுடுற.பார்த்துப்பா,
ஆராவது ஆட்டோ அனுப்பிடப்போறாங்க. //

அட நீ வேறப்பா நான் குடியிருக்கும் தெருவுக்கு சின்ன சைக்கிள் கூட வரமுடியாது.. நாங்க எல்லாம் விவரம் இல்ல.

Unknown said...

/ஆஆஆஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

என்ன சவுண்ட் இது டிராக்டர் டயர் பஞ்சர் ஆகி காத்து வெளியே போற மாதிரி.. NON SENSE

Unknown said...

//மாப்பி..

சீரியல் கலக்கல்..//

டாங்க்ஸ் கப்பி

//"அந்த பாவியைக் கல்லால் அடிக்காதீர்" -வசனம் ஞாபகம் வருது ;)) ?/ உனக்குமா கப்பி...

Unknown said...

//என்ன திட்டம், சதித்திட்டம் தானே. //

சரா மறுபடியும் நம் மீது குற்றச் சாட்டு வாப்பா வந்து பதில் சொல்லு.

உங்கள் நண்பன்(சரா) said...

ஹ ஹ ஹ....

திட்டமா...?யார் போடுவது திட்டம்,

திட்டம் போடுமளவுக்கு எங்கள் புத்தி போகவில்லை மட்டம்,

விவ் எங்களை பகைத்தால் யாருக்கு நட்டம்,

சிலர் நினைக்கின்றனர் எங்களுக்கு கட்ட கட்டம்,

எங்களுக்கு யாரும் போட முடியாது சட்டம்,

யாராலும் அடக்க முடியாதது எங்களின் கொட்டம்,

படிக்காமலே நாங்க வாங்குவோம் பட்டம்,


ஏ டண்டனக்கு... ஏ டணக்குனக்கு...




இங்கு குறிப்பிடப்பட்டுள்ள "விவ்", என்பது நமது விவசாயியை அல்ல, அண்ணன் தேவு அடிக்கடி குறிப்பிடுவது போல்
"எல்லா விவசாயியும் நம்ம விவ்சாயி தான்..
ஆனா இந்த விவசாயி நம்ம விவ்சாயி இல்ல "
என்பதை தெளிவுபடுத்திக் கொள்கின்றோம்.



அன்புடன்...
சரவணன்.

Unknown said...

சரா அய்யா செல்லம் நாட்டு சரக்கு அடிச்சுட்டு நடு ரோட்டுல்ல ஆடாதேன்னா கேக்குறீயா?

உங்கள் நண்பன்(சரா) said...

அண்ணன் தேவு-வின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து என் ஆட்டத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்.



அன்புடன்...
சரவணன்.

tamil10