Friday, July 28, 2006

டெல்லிக் கச்சேரி

நேத்து ராத்திரி ஆபிஸ் வேலை முடிச்சுட்டு வூட்டுக்குப் போய் ராச்சாப்பாடு எல்லாம் ஆனதுக்கு பொறவு ஊர் வம்பு தும்புகளை எல்லாம் தெரிஞ்சிக்கலாம்ன்னு ஒரு திடீர் ஆசை. உடனே ரிமோட்டைக் கையிலேடுத்து டிவி. பொட்டியைத் திருப்புனேன்.

வழக்கமா நமக்கு ராத்திரி டைம்ன்னா கவுண்டர் தமாஸ் இல்லன்னா நம்ம கைப்பு டமாஸ் இப்படி எதாவது சிரிப்பு நிகழ்ச்சி எதாவது சேனல்ல ஓடுனாப் பாத்துட்டு அப்படியே சிரிச்சாப்ல்ல தூங்குறது வழக்கம்..

நேத்து என்னமோ அப்படியே சேனல் விட்டு சேனல் தாவுண்ணா.. NDTVயிலே ஒரு வயசு புள்ள சிரிச்சாப்பல்ல கார் ஓட்டுறதைத் திரும்பத் திரும்பக் காட்டிக்கிட்டு இருந்தாயங்க.

அட நம்ம ஊருகாரரு நாராயண் கார்த்திக்குப் போட்டியாத் தான் இந்தப் புள்ள கிளம்பிருச்சோன்னு ஆவலாப் பாக்க ஆரம்பிச்சேன். சுத்துப் பட்டுல்ல நிக்கறவங்களுக்கெல்லாம் பறக்கற முத்தமெல்லாம் வேற அள்ளிவிட்டுகிட்டு இருந்துச்சு.. மொகத்துல்ல ஒரே சந்தோஷம்.. ஆத்தாடி கட்டாயம் எதோ வெட்டி சாய்க்கிற சாதனைத் தான் பண்ணியிருக்கணும்ன்னு நானும் இன்னும் ஆர்வமாப் பாக்க உக்காந்தேன்.

ஆகா.. அந்த புள்ளங்ககிட்ட பேட்டி எல்லாம் வேற எடுத்து வெளுத்துக் கட்டுனாயங்க. ஆத்தாடி அப்புறம் கூட முன் சீட்டல்ல ஒரு பச்சப் புள்ள்க் கணங்காச் சிரிப்பைச் சிதற் விட்டுகிட்டு இருந்தான் ஒரு ஒருத்தன்.
யப்பா என்ன ஒரு ஸ்மைல்டா சாமி... அவன் இந்தக் கிரகத்துல்லயே இல்ல..

பின் சீட்டுல்ல இன்னொரு புள்ள... அது காதுல்ல ஓட்டுனாப்பல்ல செல் போன்... அம்மாடியோ என்ன நடக்குது.. நமக்கு வெளங்கல்ல.... விவரமாப் பாக்கலாம்ன்னு பக்கத்து சேனலுக்குப் பாயஞ்சேன்... CNN IBN, HEADLINES TODAY, TIMES NOW, AAJ TAK, STAR NEWS அம்புட்டு டிவியிலும் இவிங்கத் தான் கலக்கலா லக்க லக்கன்னு பல்லைக் காட்டி படத்துக்கு போஸ் கொடுத்துட்டு இருந்தாயங்க..

விவரம் பெரிசா ஒண்ணுமில்லைங்க...

மூணு பேருக்கும் கையிலே ஒரு சிம்பிளான சோனாடா கோல்ட் கார் கிடைச்சிருக்கு.. உட்னே புள்ளங்களுக்கு ஒரு ஆசை.. இந்தக் காரை யாரவது பெரிய மனுசன் முன்னாடி ஓட்டிக் காட்டுனா நல்லாயிருக்கும்ன்னு.. உடனே எடு வண்டியைன்னு.. டில்லி ரேஸ் கோர்ஸ் ரோட்டுக்கு விட்டுருக்காயங்க.. அங்கிட்டுப் பார்த்தா பிரதமர் வீடு இருந்திருக்கு...

ஆயிரம் தான் சுயமா எந்த முடிவும் எடுக்காமல் சோனியா அம்மா சொல்லுறதுக்கெல்லாம் தலையை ஆட்டிகிட்டு இருந்தாலும் அவரும் பெரிய மனுஷன் தானே.. அதான் சல்லுன்னு உள்ளேக் காரை விட்டுட்டாங்க...

SPG மக்களும் புள்ளங்களைப் பெரிசா அதட்டமா பெரிய மனசோட உள்ளே விட்ருக்காங்க... இதைப் போய் பெரிசா செக்யூரிட்டி பிர்ச்சனை அது இதுன்னு அலம்பல பண்றாய்ங்க....

இதன் மூலம் இந்தியா தான் ஒரு ஜனநாயக நாடு என்பதை உலக நாடுகளுக்கு அழுத்தமாய் எடுத்துரைத்திருக்கிறது.. ஓட்டுப் போட்ட யாரும் எந்நேரமும பிரதமரைக் கூட எந்தக் கெடுபிடியும் இல்லாமல் சந்திக்க முடியுங்கறதைக் காட்டி உலக நாடுகளைக் கலங்க அடிச்சுருக்காங்க

வாழ்க சனநாயகம்... வாழ்க பாரதம்.

பி.கு: நம்ம சென்னைக் கச்சேரி சார்பா டில்லி பிரதமர் அலுவலகத்திற்கு நம்ம யுவன் சங்கர் ராஜா மியூசிக் போட்ட புதுப்பேட்டை படத்தில் வர்ற
" எங்க ஏரியா உள்ளே வராதே....." பாட்டை சிடிப் போட்டு இந்தா இப்போத் தான் கோரியர் பண்ணியிருக்கோம்.. நாளையில்ல இருந்து அந்தப் பாட்டு அங்கே 24 மணி நேரமும் அலறி அலர்ட்டாக்கிடும்..

CNN IBN செய்திகள்

13 comments:

நன்மனம் said...

கச்சேரி கல கட்ட ஆரம்பிச்சிடுச்சு போல!!!!!

பெரியப்பா ஊட்டு சமாசாரத்த எல்லாம் சோக்கா சொல்லி இருக்க போ.

இப்ப அந்த புள்ளய்ங்க கதி என்ன.....1,2,3,4,5,6....1,2,3,4,5,6....

கைப்புள்ள said...

//இதைப் போய் பெரிசா செக்யூரிட்டி பிர்ச்சனை அது இதுன்னு அலம்பல பண்றாய்ங்க....//

போன வாரக் கடைசி முழுசும் பிரின்ஸ்ங்கிற சின்ன பையன் போர்வெல்ல விழுந்ததை வெளியே எடுக்கறதை புடிச்சிக்கிட்டாங்க. இந்த வாரத்தை ஓட்ட எதனா வேணும்ல? அதுக்குத் தான் இப்படி போல...ஆனா இந்த விசயத்துல எண்டிடிவி, சீ நியூஸ், ஆஜ் தக் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்காங்க.

மங்கை said...

ரொம்ப correct கைப்புள்ள sir.. ஒன்னும் இல்லாதத பெருசு பண்ணுவாங்க ..

Syam said...

//CNN IBN, HEADLINES TODAY, TIMES NOW, AAJ TAK, STAR NEWS அம்புட்டு டிவியிலும் இவிங்கத் தான் //

தல சொன்னாமாதிரி இவிங்க பிஸினெஸ் நடக்கனும் இல்ல.... :-)

நாகை சிவா said...

ஹுக்கும் நீர் அவிங்கள பற்றி வாயேடுத்த, பிடிச்சு உள்ள வச்சுட்டானுங்க. நல்லா இருய்யா நல்லா இரு.

மனதின் ஓசை said...

//அட நம்ம ஊருகாரரு நாராயண் கார்த்திக்குப் போட்டியாத் தான் இந்தப் புள்ள கிளம்பிருச்சோன்னு ஆவலாப் பாக்க ஆரம்பிச்சேன்.//

நெஜம்ம்ம்ம்மா? அதனாலதானா?

//கையிலே ஒரு சிம்பிளான சோனாடா கோல்ட் கார் கிடைச்சிருக்கு.. //
??????

Unknown said...

//கச்சேரி கல கட்ட ஆரம்பிச்சிடுச்சு போல!!!!!//
அப்படிங்கறீங்க.. நீங்க சொன்னா ரைட் தான்.

//பெரியப்பா ஊட்டு சமாசாரத்த எல்லாம் சோக்கா சொல்லி இரு
க்க போ.//
அப்படியா அவர் உங்கப் பெரியப்பாவா சொல்லவே இல்ல நீங்க ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு தன்னடக்கம் கூடாது.

//இப்ப அந்த புள்ளய்ங்க கதி என்ன.....1,2,3,4,5,6....1,2,3,4,5,6....//
பாண்டி நோட் பண்ணிக்க... ஆமா அதையும் டிவியிலே காட்டுவாயங்களா...

Unknown said...

கைப்பு இது பிரதமர் சம்பந்தப் பட்ட பாதுகாப்பு விவரம்ங்கறது ஒரு பக்கம் இருந்தாலும் வாலிப வய்சுன்னு பசங்க அடிக்கிற லூட்டி கொஞ்சம் ஓவராத் தான் போய்கிட்டு இருக்கோன்னு நினைக்கத் தோணுது.. விளையாட்டு வினையாகும் அஞ்சாம் கிளாஸ் பாடப்பொஸ்தகத்துல்ல படிச்சது அப்பூ..

Unknown said...

கைப்பு, மங்கை, சீயாம் --> உங்கள் கருத்துக்கள் கிட்டத் தட்ட சரிதான். இப்போவெல்லாம். எல்லா டி.வி. சேனல்களும் நம்ம ஊரு நக்கீரன், ஜூவி, ரிப்போர்ட்டர் ரேஞ்சுக்கு துப்பறியும் வேலைகளில் இறங்கிட்டாங்க.. அது சில விஷ்யங்களில் டூ மசசா போயிடுது.

Unknown said...

//ஹுக்கும் நீர் அவிங்கள பற்றி வாயேடுத்த, பிடிச்சு உள்ள வச்சுட்டானுங்க. நல்லா இருய்யா நல்லா இரு. //

யோவ் புலிக்குட்டி அதுல்ல உமக்கு என்னய்யா அம்புட்டு பீலிங்? :)

துபாய் ராஜா said...

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பது இச்சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகிவிட்டது.

Unknown said...

மனதின் ஓசை

உங்களுக்கு ஒண்ணுமே புரியல்ல போங்க ஹி..ஹி..

Unknown said...

//இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பது இச்சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகிவிட்டது. //

அதே அதே

tamil10