Friday, September 29, 2006

பயணங்கள் முடிவதில்லை - 1

வணக்கம்ங்கோ சிறு வயசுல்ல இருந்தே நமக்கு ஊர் சுத்தணும்ன்னு ரொம்ப ஆசைங்க.. அதுல்லயும் நாம படிச்ச இடங்களைப் போய் பாக்கறதுல்ல ஒரு தனி விருப்பம்.

ஜாலியான் வாலா பாக் பள்ளிக்கொடத்துல்ல வாத்தியார் பாடமாச் சொன்னப்போவும் சரி பின்னாடி எதோ டி.வி.யிலே பட்மாப பார்த்தப்போவும் சரி அந்த இடமும் அங்கே நடந்த நிகழ்ச்சியும் நம்ம மனசுல்ல ஆழ்மாப் பதிஞ்சுப் போச்சு.. அப்படி நான் பார்க்க ஆசைப் பட்ட ஜாலியான் வாலா பாகை இந்த் மாதம் நணபன் ஒருவன் பஞ்சாப் போலாம்டான்னு போட்ட பிளான் புண்ணியத்துல்ல பார்க முடிஞ்சது.

A PICTURE IS WORTH THOUSAND WORDS அப்படின்னு சொல்லுவாங்க.. ஜாலியான்வாலா பாக்ல்ல நான் எடுத்த புகைப்படஙக்ள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ளது ஜாலியன் வாலா பாக். நம்ம திருவல்லிக்கேணி கடைவீதி மாதிரி ஒரு கூட்ட நெரிசலான வீதியில் இருக்குது இந்த இடம். இங்கிருந்து கூப்பிடு தூரத்தில் சீக்கியர்களின் புனிதத் தலமானப் பொற்கோயில் அமைந்துள்ளது.











இங்கேப் பாக்குறீங்களே இந்த சந்து வழியாத் தான் டயர் தன் காட்டுக் கூட்டத்தை ஓட்டிகிட்டு வந்து இருக்கான்.











இங்கிருந்து தான் அப்பாவிப் பொதுமக்களை நோக்கி வெறித்தனமானத் தூப்பாக்கி தாக்குதல் நடத்தி இருக்கிறான் டயர். ( இந்த்ச் செயலுக்கு ஆங்கில அரசு அவனுக்கு மெடல் வேறு குத்தியதாம்)











தியாகிகளின் உயிருக்கு குறி வைக்கப் பட்ட தோட்டாக்கள் அதை விடுத்து சுவற்றில் போய தாக்கி நிற்கின்றன. நல்லாப் பாருங்க குண்டுகள் பாயந்த இடங்கள் பச்சை வண்ண்ச் சதுரங்களீல் குறிக்கப்பட்டுள்ளன.













உயிர் காக்க இங்கு தான் 200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் குதித்துள்ளனர். இப்போதும் அந்த மரண ஓலங்கள் அந்தக் கிணற்றுக்குள் லேசாக எதிரொலிக்கின்றன.












ஜாலியான் வாலாபாக் தற்சமயம் ஒரு அழகிய பூங்கா வடிவம் கொண்டுள்ளது. ஒரு பொது அமைப்பு அதை பராமரித்து வருகிறது. அந்த இடத்தில் ஒரு அழகிய அமைதி குடிக்கொண்டுளளது.











மேலே பாக்குறீங்களே அது ஜாலியான் வாலாபாக் ப்டுகொலைகளுக்கு மௌனமாகச் சாட்சிச் சொல்லும் சுவர். அந்த சுவத்துல்ல போய்

"சும்மாவா வந்தது சுதந்திரம்"

அப்படின்னு த்மிழ்ல்ல எழுதுணும்ன்னு தோணுச்சு...

பயணம் தொடரும்...

10 comments:

வந்தியத்தேவன் said...

சூப்பர் பதிவு ஜூலியன் வாலாபாக் படுகொலைகள் என்றும் மறக்கமுடியாதவை, இதேமாதிரி பல படுகொலைகளை ஈழத்தில் நடத்தியுள்ளனர் சிங்கள இராணுவத்தினர். தமிழன் ஈழம்

அனுசுயா said...

ஜாலியன் வாலாபாக் பற்றிய நல்ல பதிவு. ஊர் சுத்த தேர்ந்தெடுத்த இடம் அருமை. இந்திய மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய இடம்.

மாதங்கி said...

மிகவும் அவசியமான பதிவு தேவ்.

கைப்புள்ள said...

தேவ்,
மிகவும் வித்தியாசமான பயண அனுபவமா இருந்துருக்கும்னு நம்பறேன். படங்களும் வர்ணனையும் நல்லா இருந்துச்சு. எப்பவாச்சும் வாய்ப்பு கெடச்சா இந்த எடங்களைப் போய் பாக்கணும்.

Anonymous said...

HI Da,
One important personality of Indian freedom struggle is Bhagath Singh. His Visit to Jallian Valla bagh made him enter into the freedom struggle. He collected the sand of Jallian Valla bagh and use to see it, whenver he needs energy to free his motherland. Hope this info adds a feather to your post.

Ravusuparty Ramanath

Unknown said...

வாங்க தமிழன் வாழ்த்துக்களுக்கு நன்றி.

//இதேமாதிரி பல படுகொலைகளை ஈழத்தில் நடத்தியுள்ளனர் சிங்கள இராணுவத்தினர்//

எதற்கும் ஒரு முடிவு உண்டு. கட்டாயம் உங்கள் இருள் கவ்விய இரவுகளுக்கும் ஒரு ஒளி பொங்கும் விடியல் உண்டு.

Unknown said...

வாங்க அனுசுயா,

மிகச் சரியானக் கருத்து. நான் அங்கு சென்று இருந்தச் சமயம் திருப்பூரில் ஒரு கல்லூரி மாணவ மாணவியர் கூட்டம் அங்குச் சுற்றுலா வந்திருந்தனர். இப்போதெல்லாம் தில்லி செல்லும் மக்கள் ஒரு நாள் ஒதுக்கி பஞ்சாப் அமிர்தசரஸ் சென்று பொற்கோயில், ஜாலியன் வாலாபாக் மற்றும் அருகினில் இருக்கும் வாகா இந்திய-பாகிஸ்தான் எல்லையையும் பார்த்து விட்டு போகிறார்கள் எனபதாக அந்த மாணவர்களிடம் உரையாடும் போது அறிந்துக் கொள்ளமுடிந்தது.

Unknown said...

//மிகவும் அவசியமான பதிவு தேவ்.//
- நன்றி மாதங்கி

//எப்பவாச்சும் வாய்ப்பு கெடச்சா இந்த எடங்களைப் போய் பாக்கணும். //

கைப்பு வாய்ப்புக்களை உருவாக்கிக் கொண்டாவது இந்த இடத்தைப் பார்த்து விடுங்கள்

Unknown said...

ராமநாதா பகத்சிங் பற்றி நீ சொன்ன இந்தத் தகவ்லுக்கு மிகவும் நன்றி. நானும் இந்த தகவலை அறிந்துக் கொண்டேன். பகத்சிங் மாதிரி ஒரு வீரனை உண்ர்வால் உருவாக்கிய அந்த ரத்தப் பூமியினி நானும் நின்றேன் எனபதை அறியும் போது என் மனம் நெகிழ்கிறது

நாகை சிவா said...

மிகவும் அருமையான பதிவு தேவ்.
ஒவ்வொரு இந்தியனும் காண வேண்டிய இடம்.

கடைசியில் நீங்கள் சொன்ன வார்த்தைகளும் சத்தியமன வார்த்தை.

நம் பள்ளி, கல்லூரிகளில் இன்ப சுற்றுலா அழைத்து செல்வதற்கு பதில் இது போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று சரித்திரத்தையும், நம் சுகந்திர அடைவதற்கு பெற்ற இன்னல், இழந்த உயிர்கள் காட்ட வேண்டும். பாடத்தில் படித்து மண்டையில் ஏறுவதை விட நேரில் பார்த்து மனதில் ஏற்றுவது தான் சரியான வழி.

tamil10