Friday, December 08, 2006

மா மன்னாரு அன்ட் கோ சாப்ட்வேர் (பி) லிமிட்

வணக்கம் மக்கா,
முடிவு பண்ணிட்டோம்ல்ல.. கலை உலக வாழக்கையோட ஒரு பிஸினஸ் மகாராசாவாம் அவதாரமெடுக்கிறதுன்னு.. நம்ம சகா நம்ம நண்பன் சரா லாங் லீவ் போட்டுட்டுப் போனாலும் போனாரு நம்ம லெப்ட் ஹேண்ட் ரிப்பேர் ஆன மாதிரி ஆயிடுச்சு..சரின்னு பொது வாழ்க்கையிலே இருந்து ஒதுங்க முடியுமா.. நம்ம இன்னொரு நண்பர் ( பேர் பின்னாலச் சொல்லுறேன்) கொடுத்த ஐடியாவில்ல முடிவு பண்ணி இறங்கிட்டோம்ல்ல..

ஆமா கம்பெனி ஆரம்பிக்கப் போறோம்.. காலத்துக்கு ஏத்தாப்புல்ல கலெக்ஷ்ன் கல்லாவை நிரப்புற கம்பெனி... ஆமாங்க.. கச்சேரிகாரன் இனி கம்பெனிகாரன் ஆகப் போறாரு...

ஜொள்ளுப் பேட்டை டைம்ஸ்ல்ல விளம்பரம் எல்லாம் கொடுத்தாச்சிங்கோ...

"பீப்பிள் வான்டட்.. நியூ சாப்ட்வேர் கம்பெனி லாஞ்ச்... "

எச்.ஆர் மேனஜரா... யாரைப் போடலாம்ன்னு ஒரே குழப்பம்ஸ் ஆப் இன்டியாவா இருக்கும் போது நம்ம தளபதி சிபி வந்து நயந்தாராவோட கலக்கல் ரெஸ்யூம் ஒண்ணு கொடுத்தார்...

டமீல் சாப்ட்வேர் கம்பினியா நாக்குத் டமீல் கம்பினி இப்புடு லேது.. மன வாடு ஆந்துருல்ல கம்பினி காவாலி.. அக்கட உன்னவா? ந்னு அந்த அம்மா ஜிலேபி பாஷையில் பீட்டுருடு விட தளபதி பயங்கர அப்செட்..

அட்லீஸ்ட் பூமிகாவது ஓ.கே பண்ணுங்கப்பா நகத்தை பல்லுக்கு இடையில் வச்சுகிட்டு பயங்கர குறும்பு பண்ணிகிட்டு இருக்கார்.

அப்புறம் நம்ம ஜொ...(ஆமாங்க கிளைன்ட வாயில்ல ஜொள்ளு சரியா நுழையாதக் காரணத்தினால் ஜொன்னு சுருக்கிட்டோம்) அவர் பேட்டை பிகர்கள் லிஸ்ட்ன்னு ஒரு ஆறே முக்கால் லட்சத்து 78 ஆயிரத்து நானூத்து நாப்பதிரண்டு பேரோட ரெஸ்யூம் கொண்டு வந்துக் கொடுத்தார்.. தற்சமயம் அந்த அப்ளிகேஷன்ஸ் எல்லாம் படிச்சு ஷார்ட் லிஸ்ட் பண்ற வேலையைக் கொருக்கு பேட்டை மூணாவது சந்துல்ல நாலாவது பில்டிங்க்ல்ல இருக்க முதல் மாடியில் இயங்குற ரெஸ்யூம்கிரிகிரி அப்படிங்கற கம்பெனிக்கு அவுட் சோர்ஸ் பண்ணியிருக்கோம்.

ஜொ பயங்கர டென்சனா ரிசல்ட்டுக்கு வெயிட்டீங்க்..

நிலைமை இப்படி போக.. வழி இல்லாம போர்ட் ஆப் இயக்குனர்கள் பட்டியலில் அவசரமா அவசரமாச் சேர்த்தப் பெயர்கள்..

விவ் பார்டனர் ( அது ஒண்ணும் இல்லங்க வாங்க விவசாயி.. பங்காளி அப்படின்னு கூப்பிடுவோம் அதுக்குத் தான் கொஞ்சம் தகாஸ் நகாஸ் வேலை எல்லாம் பண்ணி விவ் பார்ட்னர்ன்னு மாத்திட்டோம்)

ப்ரீ பன்ச்சர் ( இலவசம்ன்னா ப்ரீயாம் கொத்து அப்படின்னா BUNCHஆமா.. கொத்தனார் அந்த 'னார்' ல்ல 'னா' கட் பண்ணி 'ர்' மட்டும் சேர்த்து அப்படியே போட்டு அவரையும் சேர்த்தாச்சு..

எல்லாம் நியூமராலஜி.. அப்புறம் பேஷனாலஜி.. கிளைன்ட் சைக்காலஜி.. பிரேட்டும் பட்டரும், பீசாவும், பர்க்கரும் திங்கற அசலூர்காரப் பைய நம்ம பேரைக் கொலைப் பண்ண விடலாமா.... நம்மளே பண்ணிகிட்டா அது மருவாதின்னு மாத்திட்டோம்ல்ல.

இது தவிர எஸ்.பிளாபரார். டி.சி. கான்சர்ட்டர், கட்.டி.பாய், இவங்கக் கூட இயக்குனர்கள் வரிசையிலே இருக்காங்க...

ம்ம்ம்.. அட ஹெச்.ஆர் மேனேஜர் அவசரமாப் போடணும்ன்னு சொன்னவுடனே.. மனதின் ஓசை.. அட நம்ம மனச்சாட்சியிலே இருந்து ஒரு சவுண்ட் கேட்டுச்சு.. நல்லா கேள்விக் கேக்கத் தெரிஞ்சவங்களா ஹெ.ஆர்ல்ல போடுங்கப்பான்னு...

ஆகா டக்குன்னு டவுட்டே இல்லாமா முடிவு பண்ணிட்டோம் நம்ம மா மன்னார் கோவுக்கு மூணு ஹெச்.ஆர் மேனேஜர்ன்னு

எல்லாரையும் உக்காரவச்சு இருபத்திய்யொரு கேள்வி கேட்டு கடைசியிலே அவரே பதிலும் சொல்லுவாரே நம்ம கிராண்ட் மாஸ்டர்... அவர் தான் நம்ம கம்பெனி சீப் ஹெ.ஆர் மேனேஜர். அவருக்கு அஸிடென்ட்டா யாரை வைக்கலாம்ன்னு பயங்கர ஆலோசனைக்குப் பிறகு தக..தக.. தங்கவேட்டை புகழ் சல்யூட் நீலாம்பரி அக்கான்னு ஏகமனதா மேலிடத்து ரெகமண்டேஷனோடு முடிவாச்சு....

போர்ட் ஆப் இயக்குனர்கள் எல்லாம் அயல்நாடுகளுக்குக் கிளைன்ட் புடிக்க அவசரமாக் கப்பல் பிளைட்ன்னு கிளம்பிப் போயிட்டதுன்னாலே.. ரெக்ரூட்மன்ட் வேலையை நம்ம கிராண்ட் மாஸ்ட்டர் சாரும் நிலாம்பரியும் செய்ய வேண்டியதாப் போச்சு....

முதல் ரெஸ்யூம் வேலு நாயக்கர் தாராவி மும்பை....

ஆகா என்ன ஒரு கேப்ஷன்ப்பா ..
நாலு வரி கோடு நல்லாயிருக்கணும்ன்னா எதுவுமே தப்பு இல்ல...

ஆகா வித்தியாசமா இருக்கே ஈ யாளை செலக்ட செஞ்சு கால் அனுப்பு

"மாஸ்டர் இதைப் பாருங்க..."

"அய்யோடா எந்தா இது ரெஸ்யூம்க்குப் பதிலா ஜாதகம்..."

ஆயிரம் கோடி அதிசயம் கொண்டது பாபா ஜாதகம்... என்ற பாட்டு எங்கிருந்தோ ஒலிக்கிறது..

"எந்தா சாங் கேக்குது?"

ப்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆஆஆஆ .. பாபா...பக்மா!!!! பக்மா!!! பாபா...பக்மா!!!! பக்மா!!! தப்பு தப்பு தப்பு தப்பு தப்பு தப்பு எரரரு .....

பேர் எந்தா பரைஞ்சு?

"YO.. B2theA2theB2theA..HIS NAME IS BABA.. BABA hes a macho man... u can trust this man.."
நீலாம்பரி பயங்கர பீலிங்காகி பாட்டாகவே பாடி விடுகிறார்.

"ரெஸ்யூம்க்குப் பதில் ஜாதகம் அனுப்பியிருக்கும் ஈயாள் ஸ்டைல் வல்லியாதாயிட்டு உண்டு.. ஈ ஆளுக்கும் கால் கொடுத்துடு"

"நெக்ஸ்ட் ஆரான்ணு...?"

கேரியர் அப்ஜக்டிவ் படிக்கிறார் நீலாம்பரி

"தெம்புக்கு குடிக்கணும் விவா
சிம்பு அப்பனுக்குத் தெரியும் ஜாவா

அம்மான்னா இங்கிலீஷ்ல்ல மம்மி..
வி.பி. டாட் நெட்ன்னு நான் நல்லாவே அடிப்பேன் கும்மி
என் படம் ஓடுனா அது மிராக்கள்
எனக்கு நல்லாவே தெரியும் ஓராக்கள்"


"ஆகா ஈயாளுக்கு எந்தா ஒரு க்ரியேட்டிவிட்டி.. ஈயாளையும் கூப்பிடு.. பக்ஷ ஈயாள் பேர் எந்தா?"

"பீர்ல்ல மொகம் கழுவுனது ஆரிச்சாமி..
சாப்ட்வேர்ல்ல வயித்து கழுவ வந்துருக்கவன் வீராச்சாமி... வீராச்சாமி... "
கீழே வீராச்சாமி@ டண்டனக்கா.காம்ன்னு போட்டிருக்கு மாஸ்டர் என்று நீலாம்பரி படித்து முடிக்கிறார்.

ஓ.கே எல்லாரையும் திங்கட் கிழமை இன்டர்வியூக்கு வரச் சொல்லி பறையு... எனக்கு இப்போக் கொறச்சுச் சோலி உண்டு.. பிரேக்...
அடுத்து இன்டர்வியூ நிகழ்வுகளையும் நம்ம கச்சேரிக்கு வந்துக் கேட்டு மகிழுங்க...

இந்தப் பதிவினை உங்களுக்கு வழங்குவது செந்தழலாரின் தேடுவேலை டாட் காம்.

43 comments:

செந்தழல் ரவி said...

கலக்கல் கச்சேரி !!!! மிகவும் ரசித்த பதிவுகளில் ஒன்று !!!!

ஜொள்ளுப்பாண்டி said...

:)))))))) ஆஹா தேவு :))))))) கலக்குறீயளே !! சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாப்போய்டும் போல இருக்கே !!!

//அவர் பேட்டை பிகர்கள் லிஸ்ட்ன்னு ஒரு ஆறே முக்கால் லட்சத்து 78 ஆயிரத்து நானூத்து நாப்பதிரண்டு பேரோட ரெஸ்யூம் கொண்டு வந்துக் கொடுத்தார்.//

அண்ணாத்தே பில்டப்பூ ஓவரா இருக்கே !! அதுக்காக லட்சக்கணக்கிலேயா ?? :)))))

இராம் said...

போர்வாள்,

இந்த சாப்டவேர் கம்பெனியே பெங்களுருலேயும் ஆரம்பிக்க மாதிரி எதுவும் ஐடியா இருக்கா????

இராம் said...

//அண்ணாத்தே பில்டப்பூ ஓவரா இருக்கே !! அதுக்காக லட்சக்கணக்கிலேயா ?? :))))) //


என்ன பாண்டிண்ணே இப்பிடி சொல்லிப்பிட்டிங்க?? உங்க திறமைக்கு கோடியே கிடைக்குமில்லே!!!! :-)

தேவ் | Dev said...

நன்றி ரவி.. இந்தப் பதிவில் தங்கள் பதிவின் பெயரையும் சேர்த்து இருக்கேன்... எதோ நம்மால முடிஞ்ச் ஒரு சின்ன விளம்பரம்ங்க...:)

தேவ் | Dev said...

//கலக்குறீயளே !! சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாப்போய்டும் போல இருக்கே !!!//


புண்ணாகப் போவுதுதா.. மெடிக்கல் ஷாப் ஒண்ணு சைட்ல்ல தொறந்துர வேண்டியது தான்..:)

தேவ் | Dev said...

//அண்ணாத்தே பில்டப்பூ ஓவரா இருக்கே !! அதுக்காக லட்சக்கணக்கிலேயா ?? :))))) //

தம்பி ஜொ உன் லெவல் உனக்கேத் தெரியல்ல உன்னோட பேட்டை புலிக்கேசி மன்னனின் 24 மணி நேர சேவைப் புகழ் அந்தப் புரத்தை விட கணக்கில் பெரியது எனப்தை வரலாறு நாளைச் சொல்லும்.. நான் இன்னிக்கே சொல்லிடேன்.. சரி சரி கமெபெனி வேலை எக்கச்சக்கம் கிடக்குப்பா அதைக் கவ்னி

தேவ் | Dev said...

//போர்வாள்,

இந்த சாப்டவேர் கம்பெனியே பெங்களுருலேயும் ஆரம்பிக்க மாதிரி எதுவும் ஐடியா இருக்கா???? //

ஆமா..ஆமா...

ஓலக மேப்பை இப்போ கையிலே வச்சுக்கிட்டு நம்ம கம்பெனியை எங்கிட்டு எல்லாம் ஓப்பன் பண்ணலாம்ன்னு நேரம் காலம் பார்த்துகிட்டு இருக்கோம்ய்யா

சீக்கிரம் உனக்கு இஷ்ட்டம் இருந்தா உன் ரெஸ்யூமை நம்ம கம்பெனி மெயிலுக்கு அனுப்பி வை.. பெங்களூர் பிராஞ்சுக்கு உன்னிய இன் சார்ஜாப் போட்டுருவோம்யா

தேவ் | Dev said...

//என்ன பாண்டிண்ணே இப்பிடி சொல்லிப்பிட்டிங்க?? உங்க திறமைக்கு கோடியே கிடைக்குமில்லே!!!! :-) //

நல்லாக் கேளு ராம்... பாண்டிக்கு அவன் லெவல் என்னன்னு சரியாப் புரியல்ல

செந்தழல் ரவி said...

கலக்குங்க !!!! இந்த பதிவு எழுத எவ்ளோ நேரம் ஆச்சு தெரிஞ்சுக்கலாமா ????

ஜொள்ளுப்பாண்டி said...

//என்ன பாண்டிண்ணே இப்பிடி சொல்லிப்பிட்டிங்க?? உங்க திறமைக்கு கோடியே கிடைக்குமில்லே!!!! :-) //

தம்பி ராமு தேவோட நீங்களும் கூட்டு சேர்ந்துடீயளா? அப்போ நான் காலிதான் :((. அதெல்லாம் இல்லீங்க மக்கா ?!!!!

ஜொள்ளுப் பேச்சி said...

//அவர் பேட்டை பிகர்கள் லிஸ்ட்ன்னு ஒரு ஆறே முக்கால் லட்சத்து 78 ஆயிரத்து நானூத்து நாப்பதிரண்டு பேரோட ரெஸ்யூம் கொண்டு வந்துக் கொடுத்தார்.//
இந்த பாண்டி இத்தனை பேரைக் கண்டு பிடிச்சு கொடுக்கப் போறாரா?Stomach burning for பேச்சி.பாவம் அவரே பிகர் கிடைக்கமால் கஷ்டப்படுறார்.அதான் பஸ்லே கூட பிகர் பார்க்க போய் யாரோ ஒரு ஆம்பிள்ளை கிட்ட மாட்டிகிட்டார்.இது உங்களுக்கு லட்ச கணக்கில் பிகரை கண்டு பிடிக்க போகுதாக்கும்.

ஜொள்ளுப்பாண்டி said...

//நல்லாக் கேளு ராம்... பாண்டிக்கு அவன் லெவல் என்னன்னு சரியாப் புரியல்ல //

தேவண்ணா என் லெவல்தான் ஊரெல்லாம் பஸ்ஸெல்லாம் கொடி கட்டி பறக்குதே :))))))))))

இலவசக்கொத்தனார் said...

யோவ் என் பேரை (!!) ரிப்'பேர்' பண்ணக் கிளம்பிட்டீங்களா? நல்லா இருங்கடா சாமிங்களா.

:)))))

நாமக்கல் சிபி said...

:))

நாமக்கல் சிபி said...

:))

தேவ்!
பூமிகா மேட்டரும் கவனிச்சிட்டீங்களா?

Divya said...

\"
"தெம்புக்கு குடிக்கணும் விவா
சிம்பு அப்பனுக்குத் தெரியும் ஜாவா
அம்மான்னா இங்கிலீஷ்ல்ல மம்மி..
வி.பி. டாட் நெட்ன்னு நான் நல்லாவே அடிப்பேன் கும்மி
என் படம் ஓடுனா அது மிராக்கள்
எனக்கு நல்லாவே தெரியும் ஓராக்கள்"\"

தேவ் கச்சேரி கலக்கல்ஸ்!!

Anonymous said...

எல்லாம் ஓ.கே. ஆனா அந்த வீராசாமிதான் கொஞ்சம்...

அந்த ஜொ அவ்வளவு பெரிய ஆளா? அவருடைய சேவை. நாட்டுக்குத் தேவை.

Anonymous said...

Can i get a job at ur mannar&co. dev ;) rasigai

நிலா said...

தேவ்
உங்க காமெடி டிராக் பொதுவா நல்லா சிரிக்க வைக்கும்.... இது இத்துனூண்டு புன்னகை கூட வரலீங்க... கேச் அப் சாரே! :-)

rajansahai said...

அசந்துங்க அப்பு....

G.Ragavan said...

டண்டணக்கா டணக்கு
ஜிஞ்சினுக்கா ஜினுக்கு
என் ப்ரோகிராம வைரஸ் கடிச்சிருச்சுப்பா...ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்னு ஒர்த்தர் வெட்டியா அழுகுறாரு. அவரையும் நேர்முகத் தேர்வுக்கு வரச்சொல்லுங்க.

நாமக்கல் சிபி said...

//அவர் பேட்டை பிகர்கள் லிஸ்ட்ன்னு ஒரு ஆறே முக்கால் லட்சத்து 78 ஆயிரத்து நானூத்து நாப்பதிரண்டு பேரோட ரெஸ்யூம் கொண்டு வந்துக் கொடுத்தார்//

அந்த ரெஸ்யூம் எல்லாமே அவர்கிட்ட இருந்த மொத்த ரெஸ்யூம்ஸில 1/10 ன்னு ஷார்ட் லிஸ்ட் பண்ணி கொண்டுவந்தது!

:)

தேவ் | Dev said...

//கலக்குங்க !!!! இந்த பதிவு எழுத எவ்ளோ நேரம் ஆச்சு தெரிஞ்சுக்கலாமா ???? //

முக்கால் மணி நேரம் ஆச்சுங்க ரவி.

தேவ் | Dev said...

//தம்பி ராமு தேவோட நீங்களும் கூட்டு சேர்ந்துடீயளா? அப்போ நான் காலிதான் :((. அதெல்லாம் இல்லீங்க மக்கா ?!!!! //

ஜொ கூட்டும் இல்ல பொரியலும் அல்ல.. ஆனாலும் உனக்கு தன்னடக்கம் ரொம்பவும் ஜாஸ்தி தான் :))

தேவ் | Dev said...

//இந்த பாண்டி இத்தனை பேரைக் கண்டு பிடிச்சு கொடுக்கப் போறாரா?Stomach burning for பேச்சி.பாவம் அவரே பிகர் கிடைக்கமால் கஷ்டப்படுறார்.//
//அதான் பஸ்லே கூட பிகர் பார்க்க போய் யாரோ ஒரு ஆம்பிள்ளை கிட்ட மாட்டிகிட்டார்.இது உங்களுக்கு லட்ச கணக்கில் பிகரை கண்டு பிடிக்க போகுதாக்கும்.//

பேச்சி தங்கச்சி இது எல்லாம் நம்ம் பாண்டிக்கு விரோதமாக் கிளப்பி விடப் படும் புரளி இதை எல்லாம் நீ நம்பக் கூடாது

அகில உலக ஜொள்ளர்கள் மாநாட்டுக்கு ட்ரூல்ஸ்பெர்க் மாநகருக்குப் போயிருக்க நம்ம பாண்டி வந்து உங்க கேள்விக்குக் கண்டிப்பாப் பதில் சொல்லுவார்.

தேவ் | Dev said...

//தேவண்ணா என் லெவல்தான் ஊரெல்லாம் பஸ்ஸெல்லாம் கொடி கட்டி பறக்குதே :)))))))))) //

ஆமா பாண்டி நம்ம சிவா தம்பி சூடான்ல்ல் இருந்து போன் பண்ணிச் சொன்னான் அவங்க ஊர் டவுண் பஸ்ல்ல கூட உன் பேர் போட்ட கொடி கட்டியிருக்காமா.. ம்ம்ம் பெரிய ஆளாயிட்ட நீயு..

தேவ் | Dev said...

//யோவ் என் பேரை (!!) ரிப்'பேர்' பண்ணக் கிளம்பிட்டீங்களா?//
என்ன தலைவரே இப்படி எல்லாம் கேள்விக் கேட்டு எங்களை கண்ட படி பீலிங் ஆவ உடுறீங்க....

//நல்லா இருங்கடா சாமிங்களா. //
தோ பாருங்கடா அடுத்த வரியிலே எங்களை எல்லாம் சாமிகளான்னு சொல்லு எக்ஸ்ட்ரா பீலிங் விட வைக்கிறார் இவர் தாண்டா உண்மையான தலைவர்.. தலைவர் கொத்ஸ் வாழ்க...

//:))))) //
இந்த ஸ்மைல் போதும் தலைவரே எங்களை இதுக்கு மேலயும் பீலிங் ஆக்காதீங்க....(ஆனந்தக் கண்ணீரில் நனைஞ்ச்சிட்டோம் )

தேவ் | Dev said...

//:)) //
தளபதி = புன்னகை மன்னன் :))

தேவ் | Dev said...

//:))

தேவ்!
பூமிகா மேட்டரும் கவனிச்சிட்டீங்களா? //

தளபதி அனைத்து அசைவுகளையும் தொண்டர் படை ஆர்வத்துடன் கவனிக்கிறது... தளபதி அம்மாவின் ஆசிகளோடு...ஹி...ஹி...

தேவ் | Dev said...

//தேவ் கச்சேரி கலக்கல்ஸ்!! //

'கலாட்டா' திவ்யா சொன்னா ரைட்ட் தான்:)

தேவ் | Dev said...

//எல்லாம் ஓ.கே. ஆனா அந்த வீராசாமிதான் கொஞ்சம்...//
வாங்க ஜி.. வீராச்சாமி தான் கொஞ்சம்ன்னு நிறுத்திட்டீங்களே...

//அந்த ஜொ அவ்வளவு பெரிய ஆளா? அவருடைய சேவை. நாட்டுக்குத் தேவை. //

அட என்னங்க ஜி.. ஜொ வைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா... பேச்சிம்மா.. பேச்சி தங்கச்சிம்மா.. வாம்மா வந்து நம்ம அருமை பெருமை எல்லாத்தையும் எடுத்து ஜி க்கு சொல்லு:)))))

தேவ் | Dev said...

//Can i get a job at ur mannar&co. dev ;) rasigai //

வாங்க ரசிகை...

முதல்ல இன்ட்ர்வியூக்கு வரணும்.. கேக்கற கேள்விகெல்லாம் கரிக்கெட்டாப் பதில் சொல்லனும் அப்புறம் அப்பாயிண்ட்மென்ட்.. நாங்க எல்லாம் பக்கா ரூல்ஸ் ஓரியண்டட் கம்பெனிங்கோ

தேவ் | Dev said...

//தேவ்
உங்க காமெடி டிராக் பொதுவா நல்லா சிரிக்க வைக்கும்.... இது இத்துனூண்டு புன்னகை கூட வரலீங்க... கேச் அப் சாரே! :-) //

என்னங்க நிலாக்கா,

இப்படி ஒரேடியா வாரி விட்டுட்டீங்க.. கொஞ்சுண்டு கூடவா சிப்பு வர்றல்ல.. ம்ம்

தேவ் | Dev said...

//அசந்துங்க அப்பு.... //

ஒங்களுக்கு மருதையா?

வாங்க ராஜன் சஹாய் அசத்திருவோம் அப்பு..:)))

தேவ் | Dev said...

//டண்டணக்கா டணக்கு
ஜிஞ்சினுக்கா ஜினுக்கு//

ஆகா ராகவன் நான் படம் எடுக்கும் போது இப்படிஒரு லிரிக் கொடுக்காமப் போயிட்டீங்களே...
இந்த லைன் போட்டு பாட்டு கட்டி எங்க தலைவர் கொத்ஸ் ஒரு மூவ்மெண்ட் கொடுத்திருந்தா டோட்டல் வேர்ல்ட்மே எழுந்து அலப்பரைக் கொடுத்துருக்குமே..

//என் ப்ரோகிராம வைரஸ் கடிச்சிருச்சுப்பா...ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்னு ஒர்த்தர் வெட்டியா அழுகுறாரு. அவரையும் நேர்முகத் தேர்வுக்கு வரச்சொல்லுங்க. //

அப்படி எல்லாம் அழப் பிடாதுன்னுச் சொல்லி அவர் கையிலே குச்சி மிட்டாயும் குவி உருண்டையும் கொடுத்து ஒடனே நம்ம கம்பெனிக்கு இன்டர்வியூ அனுப்பி வைங்க...

தேவ் | Dev said...

வைரஸ் கடிச்ச புரோகிரம்க்கு நம்ம மா மன்னார் அன்ட் கோ வில்ல மருந்து சாப்ட்வேர் சல்லிசான விலையிலே கிடைக்கு வாங்குறீயளா.. ஒங்களுக்கு டிஸ்கவுண்ட் எலலாம் தார்றோம்ய்யா..

தேவ் | Dev said...

//அந்த ரெஸ்யூம் எல்லாமே அவர்கிட்ட இருந்த மொத்த ரெஸ்யூம்ஸில 1/10 ன்னு ஷார்ட் லிஸ்ட் பண்ணி கொண்டுவந்தது!

:) //

ஜொ பா.. ம்ம் தளபதியே உனக்காக வந்து சவுண்ட் கொடுக்கிறார்ன்னா உன் ரேஞ்சுப் பத்தி நான் என்ன சொல்லுறது.. ம்ம்ம் நடத்துங்கய்யா

நாமக்கல் சிபி said...

கச்சேரி அருமைங்க தேவ்...

ஜொள்ளு ரேஞ்சுக்கு ஆறே முக்கால் லட்சத்து 78 ஆயிரத்து நானூத்து நாப்பதிரண்டு பேரோட ரெஸ்யூம் ரொம்ப கம்மி...

//ஆகா என்ன ஒரு கேப்ஷன்ப்பா ..
நாலு வரி கோடு நல்லாயிருக்கணும்ன்னா எதுவுமே தப்பு இல்ல...
//
சூப்பர்...

//
"தெம்புக்கு குடிக்கணும் விவா
சிம்பு அப்பனுக்குத் தெரியும் ஜாவா
அம்மான்னா இங்கிலீஷ்ல்ல மம்மி..
வி.பி. டாட் நெட்ன்னு நான் நல்லாவே அடிப்பேன் கும்மி
என் படம் ஓடுனா அது மிராக்கள்
எனக்கு நல்லாவே தெரியும் ஓராக்கள்"//

ஆஹா... படம் கிளப்பறீங்களே தேவ்!!!!

Anonymous said...

bayangara bore....and lengthy...

தேவ் | Dev said...

//ஜொள்ளு ரேஞ்சுக்கு ஆறே முக்கால் லட்சத்து 78 ஆயிரத்து நானூத்து நாப்பதிரண்டு பேரோட ரெஸ்யூம் ரொம்ப கம்மி...//

வெட்டி இதை நான் சொன்னா நம்ம ஜொள்ளு ஒத்துக்க மாட்டேன்னு அடம் பிடிக்குறார்ப்பா.. நீயு நல்லா எடுத்துச் சொல்லு..:)

தேவ் | Dev said...

//bayangara bore....and lengthy...

//

:)))

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10