வணக்கம் மக்கா,
இந்த வாரமும் மறுக்க வெயிலை... (படத்தத் தான்) பாக்க ஒரு குரூப் என்னிய கார் எல்லாம் வச்சி கடத்திக் கொண்டு போய் டிக்கெட் எடுக்க விட்டக் கொடுமைய நான் என்னன்னு சொல்லுவேன்..
இந்த வருசம் முடிய இன்னும் ஒரு 10 - 12 நாள் பாக்கி இருக்கும்ன்னு நினைக்கிறேன்...
இந்த சமயத்துல்ல நம்ம நடு மண்டையிலே ஒரு கேள்வி உக்காந்துகிட்டு நாட்டியமாடுதுங்க... விக்கி பயல்வளைக் கேளுங்கன்னு சொல்லுறீயளா.. ம்ஹும் சில விஷயங்களுக்கு நமக்கு நாமே திட்டம் தாங்க சரியா வரும்...
வேற ஒண்ணும் இல்லைங்க.. ஒரு சிறப்பான வாழ்க்கை வாழ என்ன வழின்னு தான்ங்க கேள்வி ஆரம்பிச்சது... ஆரம்பிச்சு ஆரம் வட்டம் ஆர்ப்பாட்டம்ன்னு அண்டமெல்லாம் சுத்தி வந்து நம்ம நடு மண்டையிலே நின்னுக்கிட்டு பதில் சொல்லுங்கண்ணேன்னு செம டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சது..
நானும் என்னவெல்லாம் சொல்லிப் பார்த்தேன்..
அடேய் பய மக்கா..
வாழ்க்கை ஒரு வாழப் பழம் அதை உரிச்சு வாயிலே போட்டவன் எல்லாம் ஆளைக் காணும்..
அதுன்னாலே அது அப்படித் தான்... ஆத்து வெள்ளம் மாதிரி வாழ்ந்துட்டுப் போயிருணும் ரொம்பக் கேள்வி கேட்கப்பிடாதுன்னு பச்சப் புள்ளக்குச் சொல்லுற மாதிரிச் சொல்லியும் அது அழிச்சாட்டியம் தாங்கல்ல மக்கா....
எப்பவோ நம்ம பதிவுலகச் சகா மனதின் ஓசையார் ஒரு புத்தகத்துப் பெயரைச் சொல்லி படி மாப்பூன்னு அன்பா நம்ம அறிவு வளர்ச்சிக்கு வரப்பு வெட்டியிருந்தார்.. அவர் சொன்னக் கையோட மூர் மார்கெட் பக்கம் அலைஞ்சி திரிஞ்சு அந்தப் புத்தகத்தை வாங்கிட்டேன்...
அந்த புத்தகத்தில் ஒரு குருவும் சிஷ்யனும் பேசிக்கிற மாதிரி போதனைத் தோரணையிலே கதை நகரும்... நிறைய விஷ்யங்கள் அட போட வைக்கும் படியான் செய்திகள்..
சே இது இம்புட்டு எளிமையான விஷ்யம் ஆச்சே... செய்யலாமே...
அப்படிங்கற மாதிரி செய்திகள் அந்தப் புத்தகம் முழுக்க வழிஞ்சு கிடக்கு...
புத்தகத்தைப் படிக்கும் போது பய மக்கா நம்ம வாழ்க்கையை நம்ம முதுகு பின்னால வச்சுகிட்டு வேற எங்கிட்டு எல்லாமோ தேடுறோமேடான்னு ஒரு உணர்வு தட்டுச்சுங்க...
சாமி எதைத் தேடிடா இம்புட்டு வேகமா ஓடுற கொஞ்சம் நில்லுய்யா.. பின்னாலேப் பார்.. ஓன் வாழ்க்கை அங்கிட்டே நிக்குது நீ தான் அதை விட்டுட்டு எங்கிட்டோ ஓடிக்கிட்டு இருக்கேன்னு சொல்லாமச் சொல்லுது அந்தப் புத்தகம்.
ஒரு சின்ன விடுகதை மாதிரி கதையைச் சொல்லி குரு தன் சிஷ்யனுக்கு வாழ்க்கையை எதிர் கொள்ளக் கொடுக்கும் டிப்ஸ் சட்டுன்னு நம்ம மனசுல்லயும் ஒட்டிக்குது..
ஏழு எளிமையான் வழிவகைகளை ரொம்பவே அழுத்தமாச் சொல்லியிருக்கார் ஆசிரியர்.
முதலில்.. நம்ம எல்லோருக்குமே ஆட்சி அதிகாரம்ன்னா ஒரு சின்ன மயக்கம் இருக்கத் தான் செய்யுது.. அதுக்குத் தான் நமக்குன்னே ஆண்டவன் ஒரு பெரிய ஏரியாவை உள்ளுக்குள்ளே ஒதுக்கிக் கொடுத்து இருக்காரே ஆனாப் பாருங்க நாம அதைக் கண்டுக்குறதே இல்லை.. ஆமாம்ங்க
ஆளணும்.. நாம ஒவ்வொருத்தரும் நம்ம மனசை ஆளணும்....
மனத்தை ஆண்டாப் போதுங்க.. அமைதியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்ட மாதிரி தான்..
இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் வாழ்க்கையின் நோக்கம்ன்னு ஒண்ணுக் கண்டிப்பா இருக்கும்ன்னு நம்புங்க.. உங்க வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிச்சு.. உங்க மனசு கிட்ட அந்த நோக்கத்தை அறிமுகப் படுத்தி கைகுலுக்க வைங்க... அப்புறம் என்ன மனம் நோக்கத்தின் இலக்கு நோக்கி மெதுவா மெதுவா உங்களை நகர்த்திச் செல்லும்
நோக்கம் புரிந்தாலே வாழ்க்கையிலே பாதி ஏக்கங்கள் தீரும்
நோக்கம் தெரிஞ்சுப் போச்சு அதை நோக்கி அப்படியே நகரும் போது லைட்டா நம்ம கவரவுத்துக்குப் பங்கம் வர்றலாம்.. விதி வில்லங்கமா டேகரேட் பண்ணி வந்து நம்ம வீதியிலே இழுத்து விட்டு வித்தைக் காட்டலாம்.. எதுவும் நடக்கலாம் இல்லையா... அதுனால நாம என்ன செய்யணும்..நம்மை நாம சுய பரிசோதனைச் செஞ்சுகிட்டு சுய் மேம்பாட்டுல்ல இறங்கிடணும்.. அதுல்ல ஒரு விடா முயற்சி வேணும்.. நமக்கு நாமே முதல்ல விசிலைப் போடுவோம் அப்புறம் ஊரே கூட வந்து கச்சேரி வைக்கும் பாருங்க..
தொடர்ச்சியான சுய மேம்பாடு வாழ்கையை அதன் உயரங்களுக்குச் வளர உரம் போடும்
அடுத்து சொல்லுறது தாடி வச்ச நம்ம வள்ளுவர் தாத்தால்ல இருந்து தடி பிடிச்சி நடந்த நம்ம ஒளவையார் பாட்டி வரைக்கும் சொல்லிக் கொடுத்த மேட்டர் தான்.. ஒழுக்கம்..
இதைக் கூடவே வச்சிகிட்டா நிறைய வேண்டாதக் கும்பலை எல்லாம் நம்ம வாழ்கையிலே கேரண்டியாக் கும்மியடிக்காமாப் பாத்துக்கலாமாம்.
ஒழுக்கம் அஸ்திவாரம் போட்டு ஒவ்வொரு செங்கல்லாப் பாத்து பாத்துக் கட்டுன வாழ்க்கைங்கற வீட்டுக்கு டாப் மாதிரி அதாவது கூரை மாதிரி ஓ.கேவா
நெக்ஸ்ட் மேட்டர் இன்னும் ரொம்ப டக்கர் விசயம் தான்.. கண் முன்னாடியே காணமாப் போயிட்டு இருக்கும்.. எந்த போலீஸோ.. எந்த ராணுவமே வந்தாலும் மீட்டு தர முடியாது.. அதுனால அதை பயங்கர ஜாக்கிரதையா பயன் படுத்திக்கணுமாம்.. அது படா தில்லாங்லங்கடி மேட்டர்.. எல்லாருக்கும் சமம் தான்.. ஆனா அதை எப்படி மாத்தி வச்சிக்குறோம்ங்கறது நம்ம கையிலே தான் இருக்கு.. இன்னும் புரியல்லயா..
எங்க ஆபிஸ்ல்ல நானும் 10 மணி நேரம் தான் வேலைப் பாக்குறேன்... எங்க நிறுவனத்தின் முதலாளியும் 10 மணி நேரம் தான் வேலை??!!! பாக்குறார்..என்னோட பத்து மணி நேரங்களுக்கு பொருளாதார ரீதியாகக் கிடைக்கும் மரியாதை அவரோட 10 மணி நேரத்து கூட ஒப்பிட்டுப் பார்த்தா ரொம்ப... ஹி..ஹி
ஆக அது என்ன விசயம்ன்னு விளங்கிச்சா மக்கா.. காலத்தை மதிக்கக் கத்துக்கிட்டா நம்ம வாழ்க்கைக்கும் மதிப்பு கூடுமாம்
உனக்கென வாழ்வது வாழ்க்கை இல்லை.. ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை.. ஓடனே ரொம்ப யோசிக்காதீஙக்... அடுத்தவங்களுக்கு பலன் தர்ற மாதிரி ஒரு மரம் ந்ட்டு வச்சு இருக்க வரைக்கும் அதுக்கு தண்ணி ஊத்துறது கூட ஒரு சேவைத் தான்...
நல்லதொரு வாழ்க்கை நாலு பேர்க்கு நன்மைச் செய்வதில் அடையாளம் காணப் படுகிறதாம்.
கடைசியா.. 2006க்கு வாங்க... முடிஞ்சுப் போச்சு 2005.. வரப் போகுது 2007.. சூப்பரா அமையும் கவலை வேண்டாம்.. ஆனா இப்போ இன்னிக்கு இன்னும் மீதியிருக்க் நேரம் அதுல்ல வாழுவோம்..
கடமையச் செய்ங்க... தோடா இன்னிக்குத் தான் என் வாழ்க்கையிலே கடைசி நாள்ன்னா எப்படி இருப்போமோ அப்படி வாழணுமாம்...
அதாவது.. நல்லதே செய் நைனா.. அதையும் அப்புறம் பண்ணிக்கலாம்ன்னு அப்பீட் ஆகமா இன்னிக்கே ஜோராச் செய்யணுமாம்
தோடா ந்டு மண்டையிலே இருந்தக் கேள்வி ஒரு குதி குடிச்சு என் முன்னாடி வந்து நின்னு ஒரே நக்கல் சிரிப்பு சிரிக்குதுங்க...
என்ன நக்கலா அப்படின்னு நான் கேட்டா?
ம்ஹும் அதெல்லாம் இல்லை. உன்னிய நக்கல் அடிச்சு நான் என்னைக் கேவலப் படுத்துவேனா?
அப்படி எல்லாம் இல்ல...
சொல்லுதல் யார்க்கும் எளியவாம்.. அதைக் கேட்டுக் கைத்தட்டி சொன்னவனைத் தலையிலே வச்சு கரகம் ஆடுவது இன்னும் எளியவாம்...அப்படின்னு இழுத்துச்சு..
போது நிப்பாட்டிக்க எங்களுக்கு என்னச் சொல்ல வர்றேன்னுப் புரிஞ்சுப் போச்சு.. இப்போப் புறப்படு 2007 டிசம்பர் இதே தேதிக்கு ரிட்டன் வா அப்போப் பேசிக்கலாம்.. சொல்லி ஒரு வழியாக் கேள்விக்கு டாட்டா காட்டினேன்
Thanks THE MONK WHO SOLD THE FERRARI BY ROBIN SHARMA and Hamid for your recommendation to read
25 comments:
ஆஆஆ!! தலையெல்லாம் சுத்துதே. (அட அவரைச் சொல்லலைப்பா, என்னோட தலையே தான்). இந்த மாதிரி எல்லாம் தத்துவமா பொழிஞ்சா என்னை மாதிரி சின்னப் பசங்க உடம்பு தாங்குமா? பாத்து ராசா!
இதையெல்லாம் விக்கி பசங்க கிட்ட கேட்டுடாதே. அவங்க ரொம்ப நல்லவய்ங்க. அளுதுறுவாய்ங்க.
கொத்ஸ் இதுக்குப் பேரு தான் தத்துவமா? யூ மீன் நம்ம கவுண்டர் சொல்லுவாரே பிளாசாபி அதுவா இது?
பாத்தீங்களா? ஒரு கேள்வி என்னைப் படுத்தியப் பாட்டை.. விக்கி பசங்களா இப்போத் தெரியுது.. ஓத்துக்குறேன் நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா
போர்வாள்,
இப்போல்லாம் இங்கிலிபிஸ் பொஸ்தகமா தான் படிக்கிறதா????
ராயல் ஒரு கேள்விக்குப் பதில் தேடி தான் எப்படி ஆயிட்டேன்னு பார்த்தி இல்ல.. இன்னுமொரு கேள்வி கேக்குற.. இதுக்கு நான் பதில் சொல்ல ஆரம்பிச்சா நம்மளை ஆசிரமத்துக்கு பேக் பண்ணி ரசிதை சங்கப் பல்கையிலே ஓட்டிட்டுப் போயிருவார் நம்ம தலைவர் கொத்ஸ்
இதனால எல்லாருக்கும் தெரிவிக்கறது என்னன்னா... நம்ம தம்பி தேவுக்கு "தத்துவ ராசா"ன்ற பட்டம் கிடச்சிருக்கு... அதை எல்லாரும் தெரிஞ்சிக்கணும்னு தான் அப்பூ இந்த பதிவ தம்பி போட்டிருக்கு.....
\ஒழுக்கம் அஸ்திவாரம் போட்டு ஒவ்வொரு செங்கல்லாப் பாத்து பாத்துக் கட்டுன வாழ்க்கைங்கற வீட்டுக்கு டாப் மாதிரி அதாவது கூரை மாதிரி ஓ.கேவா\'
தேவ், நீங்க புத்தகத்தில் படித்த கருத்துக்களை உங்களுக்கே உரியே ஸ்டைலில் பதிவிட்டிருப்பது, படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது,
பாராட்டுக்கள்!!!
மொதல்ல ஒவ்வொரு வார்த்தையாத்தான் படிச்சேன். அப்புறம் தத்துவம் அப்டி, இப்டீன்னு வந்த உடனே, கலர் போட்ட வார்த்தைகளை மட்டுந்தேன் படிச்சேன். சூப்பரா போட்டுருக்கிறீங்கோ..
[ஆமா! Monkக்கு எதுக்கு Ferrari மேல ஆசை. புத்தரா இருக்கனும்னா ஆசை இருக்க கூடாதுல்ல...அதுவும் காஸ்ட்லி ஆசை]
வெயில் படத்தைப் பத்தித் தான் மறுக்கா சொல்லப் போறியோன்னு நெனச்சி பயந்துட்டேன்ப்பா.
//ஆக அது என்ன விசயம்ன்னு விளங்கிச்சா மக்கா.. காலத்தை மதிக்கக் கத்துக்கிட்டா நம்ம வாழ்க்கைக்கும் மதிப்பு கூடுமாம்
உனக்கென வாழ்வது வாழ்க்கை இல்லை.. ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை.. ஓடனே ரொம்ப யோசிக்காதீஙக்... அடுத்தவங்களுக்கு பலன் தர்ற மாதிரி ஒரு மரம் ந்ட்டு வச்சு இருக்க வரைக்கும் அதுக்கு தண்ணி ஊத்துறது கூட ஒரு சேவைத் தான்...//
The Monk Who Sold His Ferrariலேருந்து முக்கியமான கருத்துகளை உன் பாணியிலே அழகாச் சொல்லியிருக்கே. நல்லாயிருக்கப்பு. பதிவுக்கு டேங்கீஸ்.
//இப்போல்லாம் இங்கிலிபிஸ் பொஸ்தகமா தான் படிக்கிறதா???? //
ராயல் ஓன் கேள்விக்கு நேத்த்து தோணாத பதில் நடு சாமாத்துல்ல தோணிச்சிருச்சுப்பா...
இங்கிலீஸ் பொஸ்தகமா படிக்கிறீயளான்னு கேட்டுட்டு மொழிப் பிரச்சினையை சைலண்ட்டா ஆரம்பிச்சி வைக்கப் பாக்குற நீ.. அப்படி எல்லாம் பொரளி கிளப்பி கிளாப் அடிக்கப்பிடாது...
பொது வாழ்க்கைன்னா நாலு இடத்துல்ல இருக்க நல்ல விசயத்தையும் நாமும் தெரிஞ்சிக்கணும் அடுத்தவங்களுக்குச் சொல்லணும்லே.. அதுக்காக அமேசான் காட்டுல்ல இருக்கவங்க மொழியிலே பொஸ்தகம் கிடைச்சாலும் படிக்கோணும்ப்பா.. அது தான் நமக்கு நல்ல்து...
//இதனால எல்லாருக்கும் தெரிவிக்கறது என்னன்னா... நம்ம தம்பி தேவுக்கு "தத்துவ ராசா"ன்ற பட்டம் கிடச்சிருக்கு... அதை எல்லாரும் தெரிஞ்சிக்கணும்னு தான் அப்பூ இந்த பதிவ தம்பி போட்டிருக்கு.....//
என்ன இம்சையக்கா சொல்லாமக் கொள்ளாம டக்குன்னு வந்து பின்னூட்டத்திலே பட்டத்தைத் தார்ரீய.. ஒரு விழா இல்லையா.. ஒரு தனிப் அப்திவு இல்லையா...
ம் இது எல்லாம் நல்லா இல்ல.. நீங்க அரசியா இருந்து என்னைப் பயன் ஒரு பதிவுப் போட்டு ஓங்க தம்பி எம்புட்டு பெரிய தத்துவம் எல்லாம் சொல்லுறார்ன்னு ஊருக்கே எடுத்துச் சொல்ல வேணாமா நீங்க... சொல்லுங்க இம்சையக்கா
//தேவ், நீங்க புத்தகத்தில் படித்த கருத்துக்களை உங்களுக்கே உரியே ஸ்டைலில் பதிவிட்டிருப்பது, படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது,
பாராட்டுக்கள்!!! //
ஐ திவ்யா.. அந்த சின்னப் புள்ள போட்டா ரொம்ப் நல்லா இருக்கு.. கருத்தை மெய்யாலுமே தானே பாராட்டிக்கிறீங்க.. இதுல்ல காமெடி கீமெடி எதுவும் இல்லையே :)
தேவ்..
காமடி.. காதல்.. கதை.. தத்துவம்.. எல்லாத்துலயும் கலக்குறியே... எப்படிய்யா?
சரி..ஒரு மேட்டர்..வெளில சொல்லிடாத.. நான் இன்னும் அந்த பொஸ்தகத்த முழுசா படிச்சி முடிக்கல..
//மொதல்ல ஒவ்வொரு வார்த்தையாத்தான் படிச்சேன். அப்புறம் தத்துவம் அப்டி, இப்டீன்னு வந்த உடனே, கலர் போட்ட வார்த்தைகளை மட்டுந்தேன் படிச்சேன். சூப்பரா போட்டுருக்கிறீங்கோ..//
ஜி.. எந்த கலர் வார்த்தை உங்களுக்கு ரொம்ப புடிச்சதுன்னு நீங்க சொல்லவே இல்லையே...:))
//[ஆமா! Monkக்கு எதுக்கு Ferrari மேல ஆசை. புத்தரா இருக்கனும்னா ஆசை இருக்க கூடாதுல்ல...அதுவும் காஸ்ட்லி ஆசை] //
நானும் அதே கேள்வியோடத் தான் பொஸ்தகத்தைப் படிக்கவே ஆரம்பிச்சேன்..
படிக்கப் படிக்கத் தான் விளங்குது.. அவர் அந்த கார் ஆசையை எப்படி படியா படியாத் துறந்து புத்தர் போன அதே ரூட்ல்ல போனார்ன்னு சொல்ல வர்றார்ன்னு ஜி.. புத்தர் போன ரூட்க்கு தேவையில்லை அப்படிங்கறது தான் பொஸ்தகத்தோட மேட்டரே..
//கடமையச் செய்ங்க... தோடா இன்னிக்குத் தான் என் வாழ்க்கையிலே கடைசி நாள்ன்னா எப்படி இருப்போமோ அப்படி வாழணுமாம்...//
ரொம்பச் சரியா சொல்லியிருகீங்க தேவ் :)) பயனுள்ள உங்கள் பாணியில் சுவாரஸ்யமாக :))
\"//தேவ், நீங்க புத்தகத்தில் படித்த கருத்துக்களை உங்களுக்கே உரியே ஸ்டைலில் பதிவிட்டிருப்பது, படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது,
பாராட்டுக்கள்!!! //
ஐ திவ்யா.. அந்த சின்னப் புள்ள போட்டா ரொம்ப் நல்லா இருக்கு.. கருத்தை மெய்யாலுமே தானே பாராட்டிக்கிறீங்க.. இதுல்ல காமெடி கீமெடி எதுவும் இல்லையே :)\
தேவ், நான் 'ஹீரோ' வை வைத்து காமடி கீமெடி எல்லாம் பண்றதில்லீங்கோ......இதெப்படியிருக்கு???
// என்ன இம்சையக்கா சொல்லாமக் கொள்ளாம டக்குன்னு வந்து பின்னூட்டத்திலே பட்டத்தைத் தார்ரீய.. ஒரு விழா இல்லையா.. ஒரு தனிப் அப்திவு இல்லையா...
//
பொருளாதாரம் ரொம்ப மோசமா இருக்கு தம்பி... அதான் விழா இல்ல... இல்லாட்டி தம்பிக்காக இத கூட செய்ய மாட்டேனா? தம்பி தான் சீமைக்கெல்லாம் போயி தத்துவஞ்சொல்லி அக்கா மானத்தை காப்பாத்தோனும்...
// ம் இது எல்லாம் நல்லா இல்ல.. நீங்க அரசியா இருந்து என்னைப் பயன் ஒரு பதிவுப் போட்டு ஓங்க தம்பி எம்புட்டு பெரிய தத்துவம் எல்லாம் சொல்லுறார்ன்னு ஊருக்கே எடுத்துச் சொல்ல வேணாமா நீங்க... சொல்லுங்க இம்சையக்கா
//
இப்படியெல்லாம் கேள்வி கேட்டா..... நான்...... வேணாம்.... அழுதுடுவேன்.....
தேவ்,
நீங்க சொல்றத பார்த்தா இது அருமையான புத்தகம் போலிருக்கிறதே!!!
எங்க ரூம்ல இருந்தும் பல நாட்கள் படிக்காமலே விட்டுவிட்டேன்...
சந்தர்ப்பம் கிடைக்கும் போது தவறவிட மாட்டேன்!!!
//ரொம்பச் சரியா சொல்லியிருகீங்க தேவ் :)) பயனுள்ள உங்கள் பாணியில் சுவாரஸ்யமாக :)) //
வாங்க நவீன்.. பொஸ்தகத்திலேப் போட்டிருந்ததை அப்படியே எடுத்து விட்டுருக்கேன் அவ்வளவே.. நல்லாயிருக்குன்னு நீங்கச் சொல்லிடிடீங்க:)
//தேவ், நான் 'ஹீரோ' வை வைத்து காமடி கீமெடி எல்லாம் பண்றதில்லீங்கோ......இதெப்படியிருக்கு??? //
ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க இப்போத் தான் ஸ்டார் மியுசிக்ன்னு சவுண்ட் என் காதுல்ல சத்தமாக் கேக்குதுங்கோ...ஐ யாம் தி எஸ்கேப்
//பொருளாதாரம் ரொம்ப மோசமா இருக்கு தம்பி... அதான் விழா இல்ல... இல்லாட்டி தம்பிக்காக இத கூட செய்ய மாட்டேனா? தம்பி தான் சீமைக்கெல்லாம் போயி தத்துவஞ்சொல்லி அக்கா மானத்தை காப்பாத்தோனும்...//
ம்ம்ம் நெஞ்சு பொறுக்குதில்லையே..அக்கா உனக்கா இந்த நிலைமை... என் கண்ணுல்ல கண்ணீர் தண்ணி லாரியில்லே இருந்து லீக் ஆவுற மெட்ரோ வாட்டர் மாதிரி ஓவர் ப்ளோ ஆவுதே நான் என்னப் பண்ணுவேன்..
உனக்குன்னு நம்ம நாட்டு மக்கள் அன்பளிப்பாக் கொடுத்த அம்புட்டு பொற்காசு, காராம் பசு, வைரம், வைடூரியம், எக்ஸ்ட்ரா..எக்ஸ்ட்ரா..எல்லாம் என்னக்கா ஆச்சு?
//இப்படியெல்லாம் கேள்வி கேட்டா..... நான்...... வேணாம்.... அழுதுடுவேன்.....//
இம்சைக்கா நீ அழுவாதே.. உன் கண்ணுல்ல கண்ணீர் வந்தா இந்த் தம்பி மனசு தாங்காது... பிரீயா விடு... அப்பாலக்கா ஓன் நிதி நிலைமை சரியான பொறவு தம்பிக்கு கட் அவுட், டிஜிட்டல் பேனர், பேரணி இப்படி எல்லாம் நிறைய செஞ்சிக்கோக்கா.. இப்போ பீல் ஆவுறத்தை விடு.
//வெயில் படத்தைப் பத்தித் தான் மறுக்கா சொல்லப் போறியோன்னு நெனச்சி பயந்துட்டேன்ப்பா. //
கைப்பு வெயில் பத்தி இன்னொருக்கா படிக்கவே நீ இந்த ரேஞ்சுக்குப் பீல் ஆவுறியே.. நான் இரண்டு தடவப் பாத்துட்டு எம்மா பீல் ஆயிருப்பேன்.. என் சோகக் கடத்தல் கதையை இன்னொரு பதீவாப் போடுறேன் அங்கே வந்து இதே ரேஞ்சுக்குப் பீல் பண்ணனும் என்னாப் புரியுதா?
//
The Monk Who Sold His Ferrariலேருந்து முக்கியமான கருத்துகளை உன் பாணியிலே அழகாச் சொல்லியிருக்கே. நல்லாயிருக்கப்பு. பதிவுக்கு டேங்கீஸ். //
டேங்கிஸ்க்கு பதில் நானும் ஒரு டேங்க்ஸ் யூ சொல்லிக்கிறேன்ப்பா
தேவ்..
//காமடி.. காதல்.. கதை.. தத்துவம்.. எல்லாத்துலயும் கலக்குறியே... எப்படிய்யா? //
யப்பா வாங்குன காசுக்கு மேலக் கூவக்கூடாது மக்கள் கண்டுபிடிச்சுருவாங்க..ஹி ஹி
//சரி..ஒரு மேட்டர்..வெளில சொல்லிடாத.. நான் இன்னும் அந்த பொஸ்தகத்த முழுசா படிச்சி முடிக்கல.. //
கடத்திக் கொண்டு போய் ரூம் போட்டு அடிச்சிக் கேட்டாலும் கண்டிப்பா சொல்ல மாட்டோம்ல்ல.. நீ என்னிய நம்பலாம்..!!!
//தேவ்,
நீங்க சொல்றத பார்த்தா இது அருமையான புத்தகம் போலிருக்கிறதே!!!
எங்க ரூம்ல இருந்தும் பல நாட்கள் படிக்காமலே விட்டுவிட்டேன்...
சந்தர்ப்பம் கிடைக்கும் போது தவறவிட மாட்டேன்!!! //
இதே மாதிரி இந்தா நம்ம கிட்ட இன்னும் நிறைய பொஸ்தகம் கிடக்குது வெட்டி. அதுல்ல ஷிவ் கேராவின் யு கேன் வின்.. அப்புறம் மேன் ஆர் பிரம் மார்ஸ் விமென் ஆர் பிரம் வீனஸ் இதெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லலாம்..நான் அந்தப் பொஸ்தகத்தை எல்லாம் படிக்க முயற்சி பண்றேன்.. நீங்க நம்ம மாங்க் என்னச் சொல்லுறார் ஒருக்காப் படிச்சுப் பாருங்க...
Post a Comment