வணக்கம் மக்கா,
ரொம்ப நாளைக்குப் பிறவு தனுஷ் நடிச்சப் படம் ஒண்ணைத் தைரியமாப் பாக்கப் போனேங்க... நம்ம சிவாஜி கணேசன் அன்னிக்கு நடிச்ச டாப் கிளாஸ் படமான திருவிளையாடல் படத்திலிருந்து டைட்டில் மட்டும் கடன் வாங்கிட்டு கலகலன்னு ஒரு படம் எடுத்துருக்காங்க...
கதை ஒரு வரி தான்.. ஏழைப் பையன் பணக்காரப் பொண்ணைக் காதலிக்கிறான்... கைப்பிடிக்கிறானா?அதுக்குத் திரைக்கதை அமைத்து ஆட்டம் போட்டிருக்கிறார் பூபதி பாண்டியன்.
நல்ல சினிமாவை ரசிக்க ஒரு கூட்டம் உண்டு அது போல் ஜனரஞ்சக சினிமாவை ரசிக்கவும் ஒரு கூட்டம் உண்டு. இந்தப் படம் பக்கா ஜனரஞ்சகப் படம்.
திரு என்னும் தனுஷ் குரு என்னும் உங்கள் செல்லம் பிரகாஷ் ராஜ் (டைட்டில் கார்டில் அப்படித் தான் பட்டம் போடுறாங்கப்பா)தங்கை ஸ்ரேயாவை லவ்வுகிறார். இந்தக் காதலில் மட்டுமின்றி தன் வாழ்க்கைக் குறிக்கோளிலும் வெற்றியடைய திரு செய்யும் விளையாடல்களைத் தமிழ் சினிமாப் பார்முலாப் படி காமெடி, ஹீரோயிசம், பஞ்ச் டயலாக்ஸ், பாடல்கள், சென்டிமென்ட் என சரி விகிதத்தில் கலந்து கொடுத்து தயாரிப்பாளரின் கல்லாக் கலெக்ஷனை நல்லாவே நிறைக்கிறார் இயக்குனர்.
தனுஷ்க்கு இது இன்னொரு திருடா திருடின்னு சொல்லலாம்... பலத் தோல்விப் படங்களுக்குப் பின் கொஞ்சம் எழுந்து நிற்க இந்தப் படம் உதவும்.அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி இன்னொமொரு நடுத்தர குடும்பத்து விடலைப் பையன் ரோல். தனுஷ் நல்லாவே பயன்படுத்தியிருக்கார். கலகலப்பாய் வந்துப் போகும் வேடம். அதற்கு கச்சிதமாய் பொருந்துகிறார். சண்டைக் காட்சிகளில் ஜாக்கி சானின் பாணியை முயன்றிருக்கிறார். ஒரளவு செட் ஆகிறது. அந்த ஹேர் ஸ்டைல் தான் கன்டினியூட்டி காமெடி செய்கிறது.
ஸ்ரேயா...வருகிறார்... காதலிக்கிறார்.. டூயட் பாடுகிறார்... அவ்வப்போது அழுகிறார்... மீண்டும் வருகிறார்... காதலிக்கிறார்.. டூயட் பாடுகிறார்... தமிழ் சினிமாக்களின் இலக்கணம் மீறாத ஒரு கதாநாயகி வேடம் அவருக்கு.
செல்லம் பிரகாஷ் ராஜ்க்கு இன்னொரு அம்சமான அண்ணன் வேடம். தங்கைக்காக எதையும் செய்யத் துணியும் அண்ணனாய் அல்லோலப் படுத்துகிறார். கொடுத்த வேடத்தை நிறைவாய் செய்திருக்கிறார். என்னம்மா கண்ணு பாடலில் கொஞ்சம் ஏமாற்றுகிறார்.
இளவரசு பிரகாஷ்ராஜின் செயலராக சிரிப்பிற்கு தீனிப் போடுகிறார். கருணாஸ், சுகுமார் அன்ட் கோ முழுவதும் செய்ய முயலும் காமெடிகளை இளவ்ரசு தனியாளாகச் செய்து கைத்தட்டல்களை அள்ளிப் போகிறார்.
இவர்கள் தவிர தனுஷின் பெற்றோராக வரும் மௌலி, சரண்யா, தம்பியாக வரும் சின்னப் பையன் எல்லோரும் பாத்திரங்களைப் பொருத்தமாகச் செய்துள்ளனர்.
பாடல்கள் திரைக்கதைக்கு வேகத் தடைகள். இமான் இசை சுமார் ரகம். பின்னணி இசைக்கான வாய்ப்புக்கள் அதிகமில்லை.
லாஜிக் மறந்து சிரிக்க..ரசிக்க... நிச்சய உத்தரவாதம் இந்த திருவிளையாடல் ஆரம்பம்
21 comments:
தேவ்,
நீங்கள் சொல்வதைப்பார்த்தால் படம் பார்கலாம் என்ற வகையில் வருகிறதா ?
படத்தில் சிம்புவுக்கு எதிராக பஞ்ச் டயலாக்கெல்லாம் இல்லையா ?
வாங்க கண்ணன் சார்,
திருடா திருடி படத்தை நீங்கள் ரசித்திருப்பீர்கள் ஆனால் இந்தப் படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது
நானும் பார்த்தேன்...
அந்த தம்பி கேரக்டர் சூப்பர் (திருடா திருடி அண்ணன் மாதிரி)
ஷ்ரியாவை இன்னும் நல்லா பயன்படுத்தி இருக்கலாம். தனுஷ் எதுக்கு ஷேவ் கூட பண்ணாம கேவலமா இருந்தானு புரியல...
படம் தாராளமா பார்க்கலாம்...
(என்னமா கண்ணு பாட்டை இப்படி கெடுத்திருக்க வேண்டாம்)
என்னாது...
தனுஷ் படம் நல்லாருக்கா..
மெய்யாவா..
மெய்யாலுமா ???
நல்லா இருந்தா சரிதான் :))
நீங்க இப்பிடிச் சொல்றீங்க. படம் பாத்த நண்பனை இன்னமும் நிதானத்துக்குக் கொண்டு வரமுடியலை. பார்த்துட்டு நேத்து லீவுக்கும் ஆபீஸ் போய்ட்டான். அதே நெனைவாவே இருக்கு ராகவன்னு கதறி அழுகுறான். :-(( ரொம்பச் சங்கடமாப் போச்சு.
நானும் ரெண்டொரு சீன்கள் டிவியில பாத்தேன். உண்மையிலேயே தாங்க முடியலைங்க. ஒருவேளை சினிமாவை ரசிக்கிறதுக்குன்னு இருக்குற திறமை அல்லது சினிமை (ஆண்மை பெண்மை மாதிரி) நமக்கில்லையோ!
படமெல்லாம் ஓகே'தான்.... ஆனா அந்த பஞ்ச் டயலாக் கொடுமையை கேட்டுபிட்டு எங்கே போய் முட்டிக்கிறதுன்னு தான் தெரியலை????
//நானும் பார்த்தேன்...
அந்த தம்பி கேரக்டர் சூப்பர் (திருடா திருடி அண்ணன் மாதிரி)
ஷ்ரியாவை இன்னும் நல்லா பயன்படுத்தி இருக்கலாம். தனுஷ் எதுக்கு ஷேவ் கூட பண்ணாம கேவலமா இருந்தானு புரியல...
படம் தாராளமா பார்க்கலாம்...//
வெட்டி நம்ம ரசனைக் கிட்டத் தட்ட ஒத்துப் போகுதுப்பா:)
//(என்னமா கண்ணு பாட்டை இப்படி கெடுத்திருக்க வேண்டாம்) //
இந்தப் பாட்டைப் பொறுத்த வரை நான் தனுஷ் கிட்ட அதிகம் எதிர்பார்க்கல்ல.. பிரகாஷ் ராஜும் இப்படி உப்பு சப்பு இல்லாம வந்துப் போவார்ன்னு எதிர்பார்க்கல்ல
//என்னாது...
தனுஷ் படம் நல்லாருக்கா..
மெய்யாவா..
மெய்யாலுமா ???//
நட்பு.. இதே சந்தேகம் எனக்கும் பயங்கரமா இருந்த கண்டித் தான் இந்தப் படம் ரிலீசான எந்த தியேட்டர் பக்கமும் லுக் கூட வூடாம இருந்தேன் நானும்.. அப்பால பிரிண்ட் பத்திரிக்கை எல்லாம் தனுஷ் படம் பாக்கலாம்ப்பாங்கற மாதிரி ரைட் கொடுத்த கண்டி நானும் ரிஸ்க் எடுத்து படத்தப் பாத்தேன்ப்பா.. பார்த்தக் கையோட ஓங்க அல்லாருக்கும் சொல்லணும்ன்னு தான் போஸ்டிங் போட்டேன்ப்பா.. ரைட்டா
//நல்லா இருந்தா சரிதான் :))//
பிளேடு பிரதரு சொம்மாச் சொல்லக்கூடாதுப்பா ஒனக்கு பிக் ஹார்ட் தான்ப்பா.. வாய்த்து எல்லாம் அள்ளி வூடுறே.. க்ரேட்ப்பா நீயு
//நீங்க இப்பிடிச் சொல்றீங்க. படம் பாத்த நண்பனை இன்னமும் நிதானத்துக்குக் கொண்டு வரமுடியலை. பார்த்துட்டு நேத்து லீவுக்கும் ஆபீஸ் போய்ட்டான். அதே நெனைவாவே இருக்கு ராகவன்னு கதறி அழுகுறான். :-(( ரொம்பச் சங்கடமாப் போச்சு.//
வாங்க ராகவன்,
ம்ம் என்னச் சொல்லுறது.. இந்தப் படம் வந்து தமிழ் சினிமாவை புதுசா எதோ உயரத்துக்குக் கொண்டு போகப் போற படம் கிடையாது... ஒரு நல்ல டைம் பாஸ் மூவி...
உங்க பிரண்ட் என்ன எதிர்பார்ப்போடப் படத்துக்குப் போனாரோத் தெரியல்லயே...எதுக்கும் விசாரிச்சு சொல்லுங்க...ஹி..ஹி...
//நானும் ரெண்டொரு சீன்கள் டிவியில பாத்தேன். உண்மையிலேயே தாங்க முடியலைங்க. ஒருவேளை சினிமாவை ரசிக்கிறதுக்குன்னு இருக்குற திறமை அல்லது சினிமை (ஆண்மை பெண்மை மாதிரி) நமக்கில்லையோ! //
ஆஹா புதுசாச் சொல் ஒரு சொல்லா.... 'சினிமை'
//தனுஷ்க்கு இது இன்னொரு திருடா திருடின்னு சொல்லலாம்... பலத் தோல்விப் படங்களுக்குப் பின் கொஞ்சம் எழுந்து நிற்க இந்தப் படம் உதவும்.//
அப்போ "பிரெய்ன் ஃபிரையை" வீட்டுல கழட்டி வச்சிட்டுப் போனா எஞ்சாய் பண்ணலாம்னு சொல்லறே?
:)
//தனுஷ்க்கு இது இன்னொரு திருடா திருடின்னு சொல்லலாம்... பலத் தோல்விப் படங்களுக்குப் பின் கொஞ்சம் எழுந்து நிற்க இந்தப் படம் உதவும்//
அப்போ "பிரெய்ன் ஃபிரையை" வீட்டுல கழட்டி வச்சிட்டுப் போனா எஞ்சாய் பண்ணலாம்னு சொல்லறே?
//இந்தப் படம் வந்து தமிழ் சினிமாவை புதுசா எதோ உயரத்துக்குக் கொண்டு போகப் போற படம் கிடையாது... ஒரு நல்ல டைம் பாஸ் மூவி...
//
கரெக்ட் தான்..படம் ஓகே தான்...
ஆனா அப்பப்ப ஏதாவது மொக்கை டயலாக் பேசி கடுப்படிச்சிடறாங்களே!
அதுவும் க்ளைமாக்ஸ்..யப்பா!! :)))
'என்னம்மா கண்ணு' பாட்டும் சொதப்பல், படமாக்கினதும் சொதப்பல்!அந்த பாட்டு மேல டைரக்டருக்கும் இமானுக்கும் அப்படி என்ன கோவமோ?
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
படம் படு (கடுப்பேத்துர) கடி , ஒரே ரணகளமாப் போச்சு :(
I also saw the movie and enjoyed dev thanx for ur perfect comment abt this movie "Logic maranthu sirikka.. rasikka " :) rasigai
//அப்போ "பிரெய்ன் ஃபிரையை" வீட்டுல கழட்டி வச்சிட்டுப் போனா எஞ்சாய் பண்ணலாம்னு சொல்லறே?
:) //
நிச்சயமா இது ஒரு மாஸ் என்டெயின்மென்ட் மூவி.. சோ என்ஜாய் கைப்ஸ்
வாங்க கப்பி,
//கரெக்ட் தான்..படம் ஓகே தான்...
ஆனா அப்பப்ப ஏதாவது மொக்கை டயலாக் பேசி கடுப்படிச்சிடறாங்களே!
அதுவும் க்ளைமாக்ஸ்..யப்பா!! :)))
'என்னம்மா கண்ணு' பாட்டும் சொதப்பல், படமாக்கினதும் சொதப்பல்!அந்த பாட்டு மேல டைரக்டருக்கும் இமானுக்கும் அப்படி என்ன கோவமோ? //
என்னம்மா கண்ணு பாட்டுல்ல சூப்பர் ஸ்டாரும் கொங்குத் தமிழனும் என்னம்மா லூட்டி அடிச்சியிருப்பாங்க... அந்த அளவுல்ல கால் பகுதியைக் கூட மருமக புள்ளயும், செல்லமும் நெருங்கல்ல
மசாலாப் படத்துல்ல கிளைமேக்ஸ்ல்ல வேற என்ன எதிர்பார்க்க முடியும் கப்பி... கொடுத்தக் காசுக்கு நல்லா கூத்துக் கட்டியிருந்தாங்க அம்புட்டுத் தான்..:)
//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//
வாங்க தஞ்சை தாராளசாமி உங்க கிட்டப் பேச வேண்டிய மேட்டர் ஏராளம் இருக்கு... புத்தாண்டு வாழ்த்துக்கள்
//படம் படு (கடுப்பேத்துர) கடி , ஒரே ரணகளமாப் போச்சு :( //
அடடா தமிழ் சினிமா உங்களூக்கு ஒத்துக்காது போலிருக்கே.. இவங்க எல்லாம் இப்படித் தான் சாமி படம் எடுப்பாங்க.. ஒண்ணு படம் பாத்து சகிக்க பழகுங்க... இல்ல படம் பாக்கறதே நிப்பாட்டிருங்க...:)
//I also saw the movie and enjoyed dev thanx for ur perfect comment abt this movie "Logic maranthu sirikka.. rasikka " :) rasigai //
ரசிகை நீங்களும் படம் பார்த்தாச்சா... குட் குட்..
Post a Comment