Saturday, June 16, 2007

சிவாஜி எப்படி? - 1

"நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்ன்னு யாருக்கும் தெரியாது...ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வருவேன்"



அரசியல் பேசுவதாய் நினைத்தால் மன்னிக்கவும்...மேல குறிப்பிடப்பட்டிருக்கும் வரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1996ல் முத்து திரைப்படத்தில் சொன்ன ஒரு வசனம்,அது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

அவரது நடிப்பில் தற்சமயம் வெளிவந்துள்ள சிவாஜி - தி பாஸ் படத்தின் வெளியீட்டிற்கு இந்த வசனம் மிகவும் பொருந்தும். அட ஆமாங்க.. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப் பட்டு ,வியாபார மற்றும் தொழில் நுட்பக் காலதாமத்தால் ஒரு வழியாக ஜூன் 15 உலகமெங்கும் திரைக்கு வந்தே விட்டது.

சிவாஜியில் ஷங்கர் - ரஹமான் - ஏவி.எம் என ஒரு பிரமாண்டக் கூட்டணியோடு களத்தில் ரஜினி...

பாபா தோல்விக்குப் பின் சந்திரமுகி வெற்றியடைந்த நேரம்...சந்திரமுகியின் வெற்றிக்கு யார் காரணம் என்று ஒரு விவாதமே நடந்தது... சந்திரமுகி சூப்பர் ஸ்டார் படம் அல்ல.. சந்திரமுகியில் நடிகர் ரஜினியும் நடித்திருக்கிறார் அவ்வளவே என ஆங்காங்கே தீர்ப்புகள் எழுதப்பட்டன.. தமிழகத்தில் இனி சூப்பர் ஸ்டார் அத்தியாயங்கள் முடிந்து போயாச்சு என் ஆருடங்கள் சொல்லப்பட்ட நேரம் அறிவிக்கப்பட்ட படம் சிவாஜி - தி பாஸ்..

ரஜினி என்ற குதிரை வென்றது சந்திரமுகியில்.. சிவாஜியில் ரஜினியா...சூப்பர் ஸ்டார் ரஜினியா... இல்லை ஷங்கர் இயக்கும் நடிகர் ரஜினியா இப்படி பக்கம் பக்கமாய் அலசப் பட்டன ஊடகங்களில்... ரஜினியின் சம வயது கதாநாயகர்களும் சின்னப் பெண்களை விரட்டி விரட்டி டூயட் பாடிக்கொண்டிருக்க ரஜினியை மட்டும் வயது என்ற வட்டத்துக்குள் வீழ்த்த பேனா முனைகளும்.. பொட்டித் தட்டும் விரல்களும் தம் பணி முடித்தப் பின்னும் ஓவர்டைம் பார்த்தன...

ஏன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன்னரே உலக திரை வரலாற்றிலே முதன் முறையாக விமர்சனங்கள் கூட வெளியான படம் என்றால் அது ரஜினியின் சிவாஜி தான்..

சிவாஜியைச் சூழ்ந்த ஒவ்வொரு சின்ன விஷயமும் உள்ளூர் கேபிளில் இருந்து உலகத் தொலைக்காட்சிகள் வரை கொலை வெறி வியாபார நோக்கோடு அலசப்பட்டன ஆராயப்பட்டன.. ரஜினி ரசிகன் தகவல் வெள்ளங்களில் மூழ்கிவிடுமளவுக்கு சிவாஜி தகவல்கள் கொட்டப்பட்டன.. பொது மக்களும் கவனிக்கும் அளவு சிவாஜி ஊடகங்களால் ஊதி பெருசாக்கப்பட்டது...

பாடல்கள் வெளியீடு.. அதன் பின் நெட்டில் பாட்டு வந்தது.. ட்ரெயிலர் ஊசி முனை கேப்பில் ஆன் லைனில் முந்தி வந்தது..என கடந்தப் பல மாதங்களாக சிவாஜி சூடு நம்ம சென்னை வெயிலைத் தாண்டி பற்றி எரிந்தது..

சினிமா என்பது கலை என்பதாய் ஒரு புறம் மைக் கட்டிச் சொல்லப்பட்டாலும்.. அடிப்படையில் அது ஒரு வியாபாரம்.. போட்டக் காசை எடுக்கணும்.. அதுவும் சீக்கிரத்தில் எடுக்கணும்... அள்ளி எடுக்கணும்.. இது மேற்கத்திய நாடுகளில் வழக்கத்தில் உள்ள நடைமுறை..

சமீபத்தில் தான் அந்த வகை சிந்தனை நம் இந்தியாவிற்குள் வந்துள்ளது... இந்தி திரைபடங்கள் அந்த வகை வியாபாரத்திற்கு முழுசாய் மாறிவிட்டார்கள்.. நம்ம தென்னகத்து சினிமா ரசிகர்கள் தான் இன்னும் வெற்றியின் கணக்கை நாட்கணக்கோடு கூட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

மேற்கத்திய வியாபார முறையான 'கிராண்ட் ஓப்பனிங்' வகையை தமிழகத்துக்கு சிவாஜி மூலம் அதன் வெளியீட்டாளர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.. அதாவது ஒரே நேரத்தில் பல திரையரங்குகளில் படததை வெளியிட்டு சீக்கிரமாய் போட்ட முதலை எடுக்கும் உத்தி.. இந்த உத்தியும் விம்ர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பது வேறு விஷயம்.

சிவாஜி வெளியாகி மூன்று நாட்கள் ஆகி உள்ள நிலையில் சென்னைப் போன்ற பெருநகரங்களில் இந்த் முறை வெற்றி பெற்றுள்ளது எனச் சொல்லலாம்.. சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் இந்த முறையின் வெற்றி விவாதத்துக்கு உரியதே...

சிவாஜி சுற்றிய அரசியல் சர்ச்சைகளைப் பற்றி நாம் இந்தப் பதிவில் விவாதிக்க வில்லை..அதனால் அவைகளை விட்டு விடுவோம்...

சிவாஜி படத்துக்குக் கொடுத்தப் பில்டப்பு மாதிரி சிவாஜி விமர்சனத்துக்கும் ஒரு பில்டப்பு கொடுத்தாச்சு.. அப்புறம் என்ன?

ரசிகர்கள் ரஜினியிடம் இந்தப் படத்தின் மூலம் என்ன எதிர்பார்க்கிறார்கள்....

விசாரித்த வரையில் ஒரு நிறைவான பொழுதுபோக்கு படம்.. ரஜினியிடம் கடந்தக் காலங்களில் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்த அரசியல் வழிகாட்டுதல்களை இம்முறை ரசிகர்கள் குறைத்துக் கொண்டார்கள் என்றே சொல்லலாம்... 80களில் இருந்த ரஜினியிடம் அவர் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அதே எதிர்பார்ப்போடு சிவாஜிக்கான கவுண்ட் டவுண் சொல்ல ஆரம்பித்தார்கள் ரஜினி ரசிகர்கள்

இந்த முறை ரஜினியின் ரசிகர் பட்டாளத்துடன் இன்னொரு தலைமுறையும் சேர்ந்துக் கொண்டிருந்தது...

எதிர்பார்ப்புகள் எகிறி நிற்க.. பந்தயக் குதிரை சிவாஜியின் ரிலீஸ் கிட்டத் தட்டத் திருவிழாக் கணக்காய் டிவிக்களிலும் பத்திரிக்கைகளிலும் பிரமாண்டப் படுததப்பட்டு

சென்னையில் வியாழன் அன்று இரவு படம் வெளியானது...



ஏ.ஆர்.ரஹமானின் புதிய துள்ளல் இசையோடு சூப்பர் ஸ்டார் என்ற எழுத்துக்கள் திரையில் மின்ன... ரஜினி என்ற மூன்றெழுத்து திரையில் நிறைய எழுந்த ஆரவாரம் தமிழ் திரை ரசிகர்களுக்கு மட்டுமே பரிச்சயமான ஒரு விழாவின் துவக்க உரை...

மேலும் சிவாஜி பார்வை தொடரும்...

சிவாஜி எப்படி? - 2

10 comments:

மனதின் ஓசை said...

அமர்க்களமான ஆரம்பம். அடுத்த பகுதி எப்ப?

கப்பி | Kappi said...

//அமர்க்களமான ஆரம்பம். அடுத்த பகுதி எப்ப?//

repeatu :))

ILA (a) இளா said...

தேவ்- இங்கே இருக்கும் விநியோகஸ்தர் எனக்கு பழக்கமாகிவிட்டார். அதனைப்பற்றிய ஒரு பதிவு இருக்கும். ஆனா இது என்பார்வையில் இருக்கும்

சீனு said...

//ஏ.ஆர்.ரஹமானின் புதிய துள்ளல் இசையோடு //

இன்னும் படம் பாக்கல. ஆனா, பின்னனி இசை சகிக்கலை என்று நண்பன் படம் பார்த்து சொன்னான்.

ஜி said...

தலைவர் இண்ட்ரோதான் கொஞ்சம் ரசிக்கும்படியா இல்ல :((

சூப்பர் ஸ்டார் டைட்டில் மியுசிக்... புதிய இசை... அருமை....

Unknown said...

super start dev.Please continue

நாகை சிவா said...

////அமர்க்களமான ஆரம்பம். அடுத்த பகுதி எப்ப?//

repeatu :)) //

ரீப்பிட்டோ ரிப்பிட்டு....

நாகை சிவா said...

//பாபா தோல்விக்குப் பின் //

நெருக்கி 20 கோடி சம்பாதித்த படம் தோல்வியா... இந்த கணக்கு எனக்கு புரியலங்க.... எதிர்பார்த்த வெற்றி இல்லை என்று சொல்லாம்...

நாகை சிவா said...

//சிவாஜியைச் சூழ்ந்த ஒவ்வொரு சின்ன விஷயமும் உள்ளூர் கேபிளில் இருந்து உலகத் தொலைக்காட்சிகள் வரை கொலை வெறி வியாபார நோக்கோடு அலசப்பட்டன ஆராயப்பட்டன.. //

:-)))))

//பொது மக்களும் கவனிக்கும் அளவு சிவாஜி ஊடகங்களால் ஊதி பெருசாக்கப்பட்டது...//

இந்தியாவேங்கும்....

நாகை சிவா said...

தேவ்.... படம் வெற்றி என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான்...

சிவாஜி மாதிரி ரீலிஸ் ஆவதற்கு முன்பு இந்தியாவையே கலங்கடித்த படம் வேற ஏது இருக்காது என்பது என் திண்ணம்.......

அது போதுமய்யா.... திரும்பி பாக்க மட்டும் அல்ல... யோசிக்கவும் வச்சுல... சும்மா அதிருதுச்சுல....

டிவிடி கேட்டு இங்க இருக்கும் நார்த்திஸ் எல்லாம் அன்பு தொல்லை பண்ணுறாங்க....

tamil10