Monday, June 18, 2007

சிவாஜி எப்படி - 2

சிவாஜி எப்படி? - 1

"It doesnt matter how deep u fall.. All that matters is how u bounce back..."


பாபா தோல்வி என ஊடகங்களும் மற்றவர்களும் பொங்கி பொங்கல் வைத்து முடித்தக் கதையும் அதன் பின் வந்த விசுவரூபம் எடுத்த சந்திரமுகியின் வெற்றியும் இந்த சொல்லாடலுடன் பொருத்திப் பார்க்க முடிகிறது.. விழுவது அவமானம் அல்ல.. விழுந்தேக் கிடப்பது தான் அவமானம்.. பொதுவாக ரஜினி படங்களில் மறைமுகமாக ஒலிக்கும் கருத்து இது தான்.. இந்தப் பாணி கருத்து கொண்ட படங்கள் தான் அவரை இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக.. 'தலைவர்' என்ற அடைமொழியோடு இன்றளவும் நடைப்போட வைக்கிறது எனச் சொல்லலாம்.

திரைப்படங்களில் மூன்று மணி நேரங்களில் விழுந்து எழுவது லாஜிக் இல்லா மேஜிக்... ரஜினி நிஜ வாழ்க்கையில் அதை தன் தொழிலில் சாத்தியப்படுத்திக் காட்ட முடிந்ததை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது.. 52 வயதில் பாபா தோல்வி... 55ல் மீண்டு(ம்) சந்திரமுகி வெற்றி.. 57ல் உலகமே எதிர்பார்க்கும் சிவாஜி என மீண்டு(ம்) மீண்டு(ம்) கிடுகிடுவென இன்னொரு ரவுண்டுக்கு ரஜினி ரெடி...

'சூப்பர் ஸ்டார்' என்ற எழுத்துக்கள் திரையில் தெரிந்ததும் ஆரம்பித்த ஆரவாரம் உச்சம் அடைந்தது...




ரஜினி படங்களில் அவர் அறிமுக காட்சி மிகவும் எதிர்பார்க்கப்படும் விசயங்களில் ஒன்று. 'பாம்புக்கு முத்தம் கொடுப்பார்...' 'பூசணிக்காயைத் தலையால் சிதறடித்து வணக்கம் வைப்பார்..' இப்படி இயக்குனரின் கற்பனா சக்தி ரஜினியின் அறிமுகக் காட்சியில் கண்டப்படி கரை உடைக்கும்.. இந்தப் படத்தில் ஷங்கர் மெனக்கெடவில்லை.. சும்மா ஒரு சாதாரணமான அறிமுகத்தைக் கொடுத்து ரசிகர்களுக்கு 'தலைவர்' முகம் காட்டச்செய்கிறார்...

சும்மா அதிருதுல்ல...இயக்குனர் ஷங்கரும் அதிர்ந்து விட்டாரோ என்னவோ சூப்பர் ஸ்டாரை இயக்கும் அதிர்ச்சியில் திரைக்கதை என்ற ஒரு மேட்டரை சுத்தமாக ஓரம் கட்டி வைத்து விட்டு படத்தைக் கிளப்புகிறார்...

வழக்கம் போல் அதாவது சந்திரமுகி, பாபாவுக்கு முந்தைய ரஜினியாய் 'சிவாஜி' ரஜினி வருகிறார்.. நாட்டுக்கு நல்லது செய்ய விரும்பும் ஒரு நல்லவனாய் தலைவர்... துவக்கத்தில் கொஞ்சமாய் படத்தில் ஷங்கர் வாசனை அடித்தாலும்..( ஆரம்ப அலுவலக காட்சிகள்) ஷங்கரின் அரசாங்க இயந்திரம் மீதானக் கருத்துக்கள் துளிர்க்க ஆரம்பிக்கும் போது..

"ஷங்கர் கண்ணா ....COOL நான் இருக்கேன் நான் பார்த்துக்குறேன் COOL " அப்படின்னு தலைவர் குரல் ஒலித்ததோ என்னவோ... மற்ற ரஜினி இயக்குனர்கள் (கே.எஸ். ரவிக்குமார் படையப்பா, பி.வாசு சந்திரமுகி, சுந்தர்.C. அருணாச்சல்ம்) போல் சமர்த்தாய் ரஜினியுடன் வந்து பல்லேலக்கா பாட்டில் கால் அசைத்து விட்டு போகிறார் ஷங்கர்.

80 களின் மத்தியில் ரஜினியின் கால்ஷிட் கிடைத்தால் என்னக் கதைச் சொல்லுவார்களோ அதே கதையை கொஞ்சம் 90 களின் ரஜினி பாணி கலந்து.... மிக்ஸ்யில் அடித்து குழம்பு வைத்திருக்கிறார்கள்... சும்மா நேத்து வச்ச மீன் குழம்பு ருசியாய் ரசிகர்களுக்கு பக்கா விருந்து.

படத்தில் போட்டக் காசைச் சம்பாதிப்பதைப் பற்றி தயாரிப்பாளர் யோசித்தாரோ என்னவோ.. ஷங்கர் தன் உதவியாளர்களிடம் ரஜினி ரசிகர்களின் விசில் சத்தம் சம்பாதிக்க என்னவெல்லாம் செய்யலாம் எனப் போட்டி அறிவித்தாரோ என்னவோ...

அதன் பயனாய் ரசிகர்களுக்குக் கிடைத்தது..

இளமையான ரஜினியின் தோற்றம்... ஆரம்பக் காலத்தில் தொடங்கி இன்று வரை ரஜினி ரசிகர்களை வசிகரீத்த அவர் ஹேர் ஸ்டைல்... சிகரெட் தவிர்த்த அவரது இன்னப் பிற ட்ரேட் மார்க் ஸ்டைல்கள் அதாவது கண்ணாடி சுழற்றுவது.. சுலோ மோஷனில் பின்னணி இசை அதிர நடப்பது.. காமெடி கலந்த பைட்..

ரஜினியின் பழைய படங்களில் இருந்து தேடி தேடி காட்சிகளை அமைத்து இருக்கிறார்கள்..

ஷங்கரின் அசிண்டெட் டைரக்டர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்.. ஷங்கரே தேடிப் பிடித்திருந்தால் அவருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லலாம் ரசிகர்கள்.. பின்னே பழைய சுறு சுறு ரஜினியை திரையில் ஒரு 20 வயது குறைத்துக் காட்டி படம் பாக்கப் போன அனைத்து ரஜினி ரசிகர்களின் வயதையும் ஒரு இருபது குறைத்து விட்டார் அல்லவா.. ( சராசரி ரஜினி ரசிகனுக்கு இப்போது முப்பது வயது என்று வையுங்கள்) ரசிகர்களையும் வயதைத் தொலைக்க வைத்து லாஜிக் மீறிய ரஜினி மேஜிக் காட்சிகளாய் சிவாஜி திரையில் விரிந்தது...

ஒரு ரஜினி ரசிகனாய் மட்டுமல்லாமல்... சினிமா ஒரு மாயாஜால மந்திர உலகம் அதில் ரஜினி ஒரு சர்வவல்லமை பொருந்திய நாயகன் என்பதை ஒத்துக் கொண்ட பொது ஜனங்களும் திரையரங்குகளில் குழந்தைகளாய் மாறி கும்மாளமாய் சிவாஜியின் நகைச்சுவைக் காட்சிகளை ரசித்தனர்..

சினிமா என்பது பொழுது போக்கு மட்டுமே என்பது தான் ரஜினி படங்களின் அடிப்படை கட்டுமான அமைப்பு.. காலப் போக்கில் அதில் சேர்க்கப்பட்ட இதர கட்டுமானங்கள் ஏராளம்... அந்தச் சுமையை ரஜினியும் 90களின் இறுதி வரை நன்றாகவே சுமந்தார்...

WHEN THINGS GO WRONG STICK TO THE BASICS...இது அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும்.. சினிமாவுக்கும் நடிப்புக்கும் மட்டும் விதிவிலக்கா என்ன? ரஜினி தன் அடிப்படை பலமான ஜனரஞ்சக படங்களுக்கு திரும்பி விட்டார்.. எனபதை சிவாஜியின் ஆரம்பக் காட்சிகள் ஆணித் தரமாய் அறிவுறுத்தின...

சிவாஜியின் சில்லி சூனியக் காட்சிகள்...பழக..பழக காட்சிகள்.. போன்றவை ரஜினியின் அண்ணாமலை பாம்பு பிராண்ட் நகைச்சுவைப் பாணியில் சிரிப்பை சிந்தாமல் சிதறாமல் அள்ளியது என்றால் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.

அன்று பள்ளியில் படிக்கும் போது பார்த்த எங்கள் ரஜினி அங்கிள் மீண்டும் திரையில் என்று ரஜினி ரசிக கண்மணிகள் பரவசமடைந்தது உண்மை... இரண்டு தலைமுறையை வசப் படுத்திய அந்த நட்சத்திரத்தின் ஆட்டத்தில் மெய்யாலுமே முதல் பாதி அரங்கம் பாதி சிரிப்பும் ..மீதி கொண்டாட்டமுமாய் களைக் கட்டியது...

7 comments:

நாகை சிவா said...

//சும்மா நேத்து வச்ச மீன் குழம்பு ருசியாய் ரசிகர்களுக்கு பக்கா விருந்து.
//

அட... சும்மா மணமும் ருசியும் அள்ளுமே...

நாகை சிவா said...

//ரஜினி தன் அடிப்படை பலமான ஜனரஞ்சக படங்களுக்கு திரும்பி விட்டார்.. //

அதானே.. வேண்டும்...

G.Ragavan said...

விமர்சனம் பிரமாதகக் கொடுத்திருக்கின்றீர்கள். ஷங்கர் இயக்கியிருந்தாலும் அவருடைய வழக்கமான படமாக இது இருக்காது என்று எதிர்பார்த்ததுதான். ஸ்ரீதர் என்று இயக்குனர். அந்தக் காலத்தில் மிகப் பெரிய இயக்குனர். அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சிவாஜியை வைத்து நிறையப் படங்கள் எடுத்திருக்கிறார். ஆனால் அதெல்லாம் ஸ்ரீதர் படத்தில் சிவாஜி என்றிருக்கும். புனர்ஜென்மம், நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு..இப்பிடி நிறைய. அப்படியிருக்கையில் எம்.ஜி.ஆரை இயக்க ஒரு வாய்ப்பு. படம் எப்படி இருந்திருக்கும்? ஸ்ரீதர் இயக்கியிருந்தாலும்...அது எம்.ஜி.ஆர் படமாக இருந்தது. அதே நேரத்தில் அதற்குப் பிறகு வந்த எம்.ஜி.ஆர் படங்களுக்கு அதுவே அடித்தளமாக இருந்தது. குறிப்பாக அந்தப் படத்து வேட்டிக்கட்டு..அதற்குப் பிறகு வந்த எம்.ஜி.ஆர் படங்களில் எல்லாம் வந்தது. பாடல்கள் சூப்பர் ஹிட். படமும் சூப்பர் ஹிட். அந்தப் படந்தான் உரிமைக்குரல். இங்க சிவாஜி. ஆனா ஒன்னு...இந்த வரலாறு திரும்புறது சினிமாவோட மட்டும் நிக்கனும்னு விரும்புறேன். அதுதான் ரஜினுக்கும் நல்லது. நமக்கும் நல்லது.

முத்து, படையப்பா படங்கள் எனக்குப் பிடிக்கும். பொழுதுபோக்குப் படங்குற வகையில சிவாஜியும் பிடிக்கும்னுதான் தோணுது.

இராம்/Raam said...

அட்டகாசமான விமர்சனம் தேவ்,


ரஜினியை ரொம்ப இளமையா பார்க்க ஆச்சரியமா இருந்துச்சு.... அவருடைய பழைய படங்களிலே இருந்த அதே ஸ்டைல்... :)

முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை படத்தோட பாணி ரஜினி தான் இனிமே கிடைக்கவே கிடைக்கமாட்டார்.. :)

Padmapriya said...

Very well said Dev.
Very much fair and justified review

-Priya

மனதின் ஓசை said...

தேவ் நல்லா போகுது...

//"It doesnt matter how deep u fall.. All that matters is how u bounce back..." //

அது...

Pranavkrishna said...

Brilliant Review Devnath!!

tamil10