சமீப காலமா தமிழ் படங்கள் பார்ப்பது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குற்றவாளிக்கு வழங்கபடும் தண்டனையாகவே தோன்ற ஆரம்பித்துவிட்டது.... ஏகன்...சேவல்...வாரணமாயிரம் கொஞ்சம் தேவலாம்) இப்படி வரிசையாக வாங்கி கட்டிக் கொண்டு வலி தாங்க முடியவில்லை...
பள்ளி காலம் வரை ஆங்கில படமென்றால் அது ஜாக்கி சான் படம் தான்... அதிகம் பேசாமல் அந்தரத்தில் அசால்ட் காட்டும் ஜாக்கி தான் நமக்கு தெரிந்த் ஹாலிவுட் ஆக்டர்.. அதுக்குப் பொறவு கொஞ்சம் விவரம் புரிய ஆரம்பிச்சப்போ புருஸ்லீ... ஸ்டோலன்...அப்புறம் வாயிலே செகண்ட் நேம் இன்னிக்கு வரைக்கும் சிக்கினா சின்னாப்பின்னமாகும் புகழுக்குச் சொந்தக்காரரான கலிபோர்னியா கவர்னர் அர்னால்ட்....
அப்புறம் இடையிலே ரொம்ப நாள் ஆங்கில படம்ன்னாலே..தொலை தூரம் ஓடிய காலங்கள் எல்லாம் உண்டு... அதற்கான காரணங்கள் பின் எப்போதாவது ஆபிசர் பதிவுகளின் அரசல் புரசலாக வெளிவரலாம்ன்னு வைங்க... பேசிக்கா உண்மை என்னன்னா.. வெள்ளைக் காரன் வெத்தலை பாக்கை மென்னு துப்புற மாதிரி பேசுற அந்த மொழி நமக்கு சட்டுன்னு பிடிபடாது....இதுன்னால எத்தனையோ ஆங்கிலப் படங்களைப் பார்த்து அதன் பெருமை எனக்கு புலப்படாமலே போனதுண்டு...
கிளாடியேட்டர் போன்ற படததைப் பாக்குறேன்னு கிளம்பி போய் தியேட்டரில் தூங்கிய அனுபவம் எனக்கு உண்டு.. லார்ட் ஆப் த ரிங்க்ஸ் பாக்கப் போய் ஒண்ணும் புரியாமல் வழக்கம் போல எல்லோரும் ஆகான்னு ஆச்சரியம் காட்டும் போது எங்க குரூப் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஆஆஆஆஆஆகான்னு அலப்பரையா ஆச்சரியம் காட்டி முன் சீட்ல்ல இருந்த ஒரு ஆண்ட்டிகிட்ட இங்கிலீஸ்ல்ல சொல்லமுடியாத அளவுக்கு அவமானப்பட்ட வரலாறும் நமக்கு உண்டு...அப்புறம் சில படமெல்லாம் முடிஞ்ச பொறவும் இனிமேத் தாண்டா முக்கிய டர்னிங் பாயிண்ட்டே வருதுன்னு ஆவலா வாய் பிளந்து உக்காந்து டைட்டில் கார்ட் பார்த்து ஏமாந்து எழுந்த கதையெல்லாம் நம்ம இங்கிலீசு படம் பாக்கப் போன அர்சியல்ல சாதாரணம்ப்பா...
இப்படி எல்லாம் இருந்த நானும் இன்னிக்கு நாலு இங்கிலீசு படம்.. பிரெஞ்சு படம்.. இத்தாலி படமெல்லாம் பாத்து புரிஞ்சுப் பரவசப்படுறேன்னு அதுக்கு காரணம் டிவிடி... முக்கியமா சப் டைட்டிலும் வர்ற டிவிடி... நோட் த பாயிண்ட் இங்கிலீசு பட்மும் நாங்க இங்கிலீசி சப் டைட்டிலோடத் தான் பார்ப்போம்....
இப்படி படம் பாக்கும் போது நமக்கு அந்த ஊர் நடிகர் நடிகை பேர்ல்லாம் பெரிசா ஞாபகம் இருக்காது... ஆனா ஒரு சிலப் பேர் மட்டும் யார்டா இவன் பின்னுறான்டான்னு சொல்ல வைக்கும் அளவுக்கு கூத்து கட்டுவாங்க...அப்படி ஒரு ஆளூ தான் இந்த பதிவோட நாயகன்...
டென்சல் வாஷிங்டன்.....கொஞ்சம் ஒபாமாவுக்கு டிஸ்டண்ட் கசின் லுக் நம்ம ஆளுக்கு.. சமீபத்தில் இவர் நடித்த சில படங்கள் பார்த்தேன்... ரசித்தேன்...வியந்தேன்...
டென்சல் ஒரு நடிகர் மட்டுமில்லை.. இயக்குனரும் ஆவார்...டென்சல் பல படங்களில் நடித்திருந்தாலும்.. நான் பார்த்த படங்கள் ஒரு நாலு இருக்கும்... அமெரிக்கன் கேங்க்ஸ்டர் ( AMERICAN GANSTER)... ட்ரெயினிங் டே(TRAINING DAY)...இன்சைட் மேன்(INSIDE MAN).. அப்புறம் கிரேட் டிபேட்டர்ஸ் (THE GREAT DEBATERS)
இதுல்ல கடைசியாச் சொன்ன கிரேட் டிபேட்டர்ஸ் டென்சலே இயக்கி நடிச்ச படம்... நம்ம ஊர்ல்ல எல்லாம் எப்போடா இப்படி படம் எடுப்பீங்கன்னு கேள்வியை எனக்குள்ள விதைச்ச படம்...அமெரிக்க கறுப்பின வரலாற்றின் ஒரு சின்னப் பக்கம்ன்னு அந்த படத்தில் வரும் சம்பவத்தைச் சொல்லலாம்.. அமெரிக்க கல்லூரிகளில் பட்டிமன்றங்கள்ல்ல பங்கெடுத்துக் கொள்ள ஒரு அணி உண்டு... அப்படி ஒரு கறுப்பின மக்கள் படிக்கும் கல்லூரியின் பட்டிமன்ற அணிக்கு நம்ம டென்சல் தான் சாலமன் பாப்பையா... அதாவது இன் சார்ஜ்... அவர் ஒரு நாலு பேரை தேர்ந்தெடுத்து அந்த புள்ளங்களை அமெரிக்கவிலே மிகப் பெரிய பட்டிமன்ற அணிக்கு சொந்தக்கார கல்லூரியான ஹாவர்ட்க்கு எதிராகப் போட்டிக்கு தயார் படுத்துறார்.. இது தான் கதை... டென்சல் இதில் ஒரு புரட்சி பேராசிரியர் வேடத்தில் வந்து பின்னுகிறார்....
சினிமாங்கறது சந்தேகமின்றி பொழுதுபோக்கு தான் வியாபாரம் தான் அதெல்லாம் சரி... ஆனால் அதில் இப்படி ஒரு இனத்தின் வரலாறு பதிவு செய்ய முடியும் அதை ரசிக்கும் படி ஊருக்குச் சொல்லமுடியும் அப்படிங்கறதுக்கு தி கிரேட் டிபேட்டர்ஸ் நல்லதொரு உதாரணம்...
அடுத்து ட்ரெயினிங் டே...ஒரே நாளல்ல நடக்குற கதை.. போதை ஒழிப்பு துறைக்கு புதுசா ஒரு அப்பரசேட் ( நம்ம ப்ரண்ட்ஸ் வடிவேலு மொழி) வேலைக்கு வர்றான்.. அவனுக்கு தொழில் சொல்லிக் கொடுக்கப் போகும் குரு நாதராய் நம்ம டென்சல்.. மனுசன் அப்படி கலக்கியிருப்பான்.. காலையிலே ஒரு மேதாவியான போலீசா ட்ரெயிங் ஆரம்பிச்சி.. சாயங்காலம் முடியும் போது மொள்ளமாரித்தனமான போலீஸ்டா நானு முகம் காட்டும் அந்த நடிப்பு அசால்ட்ங்க... கண்டிப்பாப் பார்த்து ரசிக்கலாம் இந்தப்படத்தை...
இன்சைட் மேன்... ஒரு பேங்க் கொள்ளை.. அதை விசாரிக்க வரும் போலீஸ் டிடெடிக்வ் நம்ம டென்சல்... வினோதமான பேங்க் கொள்ளை அது.. பணம் எதுவும் பறிபோகாமல்... மொத்த பணயக்கைதியில் ஒரு கைதிக்கும் சேதாரமின்றி விடுதலை ஆகி... பணயக் கைதிகளோடு கொள்ளையர்களும் சாதுர்யமாக தப்பி வந்து கூட்டத்தோடு கூட்டமாய் கலந்து நிற்க.. அதன் பின்னணியைத் துப்பறியும் ஒரு விறு விறு படம் இன்சைட்மேன்...
அமெரிக்கன் கேங்க்ஸ்டர் கோட்டு சுட்டு போட்ட தாதாவா அலட்டல் இல்லாமல் டென்சல் நடித்த இன்னொரு படம்...மாடர்ன் டே காட் பாதர் படம்ன்னு கூட சொல்லலாம்... ஒரு மனிதனுக்குள் எவ்வளவு நடிப்புடா சாமி..
இங்கே நடிப்புன்னா முகத்துல்ல முக்கா கிலோ மைதா மாவைப் பூசி முகம் மாற்றி மாறுவேட போட்டிக்கு கிளம்புவது இல்லன்னா கிராம்பிக்ஸ் கொண்டு முகத்தை நீட்டி முழக்கி டெக்னிக்கல் வித்தை காட்டுவது என்று இலக்கணம் உருவாக்கபட்டு விட்டது....
டென்சல் கொடுத்து வச்சவர் ஆலிவுட்ல்ல நடிக்கிறார்.. கோலிவுட்ல்ல இருந்திருந்தார்ன்னு... மன்றம் வச்சு மைக் கட்டி வா தலைவா வண்ணாரப்பேட்டை தொகுதியிலே எம்.எல்.ஏ ஆவலாம்ன்னு நம்ம ரசிக கண்மணிகள் ரவுசு பன்ணியிருந்தாலும் ஆச்சரியமில்ல...அங்கெல்லாம் நடிகன் நடிகனாய் திரையில் இருக்க.... ரசிக்க முடிகிறது...
இதுப் போல என்னைக் கவர்ந்த இன்னும் சில ஆங்கில படங்கள் நடிகர்கள் பத்தி சமயம கிடைக்கும் போது பதியறேன்...
22 comments:
சென்னைக் கச்சேரியில் ஆலிவுட்டாஆஆ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
கோபி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. நம்ம தலையப்பத்தி தேவ் எழுதியிருக்காரு.
அதுல விட்டுப்போன மத்த படத்த பத்தில்லாம் சொல்லு :)))
/
இங்கே நடிப்புன்னா முகத்துல்ல முக்கா கிலோ மைதா மாவைப் பூசி முகம் மாற்றி மாறுவேட போட்டிக்கு கிளம்புவது
/
/
டென்சல் கொடுத்து வச்சவர் ஆலிவுட்ல்ல நடிக்கிறார்.. கோலிவுட்ல்ல இருந்திருந்தார்ன்னு... மன்றம் வச்சு மைக் கட்டி வா தலைவா வண்ணாரப்பேட்டை தொகுதியிலே எம்.எல்.ஏ ஆவலாம்ன்னு நம்ம ரசிக கண்மணிகள் ரவுசு பன்ணியிருந்தாலும் ஆச்சரியமில்ல...
/
:)))))))))))
ROTFL
தேவ்,
டென்சலின் அட்டகாசமான படங்களில் நீங்கள் இங்கே சொல்லியிருக்கும் படங்கள் வெகு குறைவு..
John Q(மகனின் இதய அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையை கைப்பற்றும் படம்),
Philadelphia(Tom Hanks உடன் போட்டிபோட்டு நடித்திருக்கும் படம்), The Bone Collector,
The Hurricane,
Remember the Titans,
Man on Fire(இதை காப்பியடித்து தமிழில் ஒரு கொடுமையான படம் அர்ஜுன் நடித்து வெளிவந்தது.), Glory,
He Got Game
//வெள்ளைக் காரன் வெத்தலை பாக்கை மென்னு துப்புற மாதிரி பேசுற அந்த மொழி நமக்கு சட்டுன்னு பிடிபடாது....இதுன்னால எத்தனையோ ஆங்கிலப் படங்களைப் பார்த்து அதன் பெருமை எனக்கு புலப்படாமலே போனதுண்டு...
///
மீ டூ
ஸேம் பிளட்!
//நோட் த பாயிண்ட் இங்கிலீசு பட்மும் நாங்க இங்கிலீசி சப் டைட்டிலோடத் தான் பார்ப்போம்.... //
நாங்களும் தான்... :)
நீங்கள் சொன்ன படங்களில் Inside Man, American Gangster நானும் பார்த்திருக்கிறேன்.
தமிழ்ல இப்பிடி படமெல்லாம் வரும் எண்றது கனவுதான்.. :(
\\சொல்லமுடியாத அளவுக்கு அவமானப்பட்ட வரலாறும் நமக்கு உண்டு\\
இதெல்லாம் இல்லைன்னா எப்படிண்ணே....இது போல பல பல்புகளும் எனக்கு உண்டு ;))
டென்சல் வாஷிங்டன் ;)
எனக்கு மிகவும் பிடித்த ஆங்கில நடிகர்..;))
நீங்க சொன்னாது போல கிரேட் டிபேட்டர்ஸ் நல்ல படம். எனக்கு இந்த நாலு படங்களில் ட்ரெயினிங் டே மட்டும் பிடிக்கல...மத்தபடி எல்லா படத்தையும் பார்த்துட்டேன்.
இன்சைட் மேன் டைட்டில் இசை நம்ம ரகுமானோட தைய்யா...தைய்யா வரும்...;) இன்சைட் மேன் 2 வர போகுது தகவல் சொன்னாங்க.
அமெரிக்கன் கேங்க்ஸ்டர் - அட அட ரெண்டு சிங்கங்கள் சேர்த்து கலக்கியிருக்கும் படத்தை. அதுல டென்சலை பிடிக்க வரும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த காட்சி. தேவலாயத்தை விட்டு வெளியில் வந்து ஒரு பார்வை பார்பாரு பாருங்க அட அட பின்னியிருப்பான் மனுஷன் ;)
நேரம் கிடைக்கும் போது இதையும் பாருங்கள்
1. Man on Fire http://www.imdb.com/title/tt0328107/
அந்த குட்டி பெண்ணு கூட அவர் வர சீன் எல்லாம் அழகான கவிதை போல இருக்கும். அந்த குட்டி பெண்ணு ஒரு காட்சியில அப்படியே சுத்தி போயி கட்டிலில் விழுவா மிக அழகான காட்சி அது ;)
2.John Q http://www.imdb.com/title/tt0251160/
அப்பா பையன் கதை...யப்பா...அந்த கடைசி போன் சீன்ல கலக்கியிருப்பாரு...கண்ணுல இருக்குற கண்ணீர் வெளியில எப்படா வருமுன்னு பார்க்குறவனங்களை துடிக்க வச்சிடும். பின்னியிருப்பாரு ;))
3. The Bone Collector
http://www.imdb.com/title/tt0145681/
4. Crimson Tide
http://www.imdb.com/title/tt0112740/
டென்சிலை எனக்கு அறிமுகப்படுத்திய படம்...இந்த டிவிடியை பொங்கிஷமாக வச்சியிருக்கேன் ;)) கடைசி காட்சியில ஒரு கன்னத்துல ஒங்கி ஒரு அடிவிழும்..எந்த அதிர்வும் இல்லமால் மரம் மாதிரி நிப்பாரு...ஆனா கண்ணுல மட்டும் கண்ணீர் வந்துக்கிட்டு இருக்கும். ;) மறக்கவே முடியாத காட்சி.
5. Deja Vu
http://www.imdb.com/title/tt0453467/
தாஸ்சும், கப்பியும் கூட இந்த படத்துக்கு விமர்சனம் எழுதியிருப்பாங்க..;)
போர்வாள்!
சரியான பார்ட்டி அவர். செம ரவுசு பார்ட்டி.
Training Day, Inside Man பாத்தாச்சு. மற்ற இரண்டும் இன்னும் இல்லை. அவர் கலெக்சன் இருக்கு. சீக்கிரமே பாத்துட்ட வேண்டியது தான்.
//இலவசக்கொத்தனார் said...
சென்னைக் கச்சேரியில் ஆலிவுட்டாஆஆ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.//
கொத்ஸ் கொத்ஸ் எம்புட்டு நாளா தான் உள்ளூர்ல்ல விசிலடிக்கிறது அதான் டிவிடி சப் டைட்டில் இன்டர் நேஷனல் லெவலுக்கு போயிட்டு இருக்கோம்....
//சென்ஷி said...
கோபி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. நம்ம தலையப்பத்தி தேவ் எழுதியிருக்காரு.
அதுல விட்டுப்போன மத்த படத்த பத்தில்லாம் சொல்லு :)))//
ஆகா வலையுலகில் அவருக்குன்னு ஒரு கூட்டமே இருக்கா அதுக்கு கோபி தான் தலைவரா.. ஒரு பதிவு மூலம் எவ்வளவு விசயம் வெளிய வருதுப்பா
// மங்களூர் சிவா said...
/
இங்கே நடிப்புன்னா முகத்துல்ல முக்கா கிலோ மைதா மாவைப் பூசி முகம் மாற்றி மாறுவேட போட்டிக்கு கிளம்புவது
/
/
டென்சல் கொடுத்து வச்சவர் ஆலிவுட்ல்ல நடிக்கிறார்.. கோலிவுட்ல்ல இருந்திருந்தார்ன்னு... மன்றம் வச்சு மைக் கட்டி வா தலைவா வண்ணாரப்பேட்டை தொகுதியிலே எம்.எல்.ஏ ஆவலாம்ன்னு நம்ம ரசிக கண்மணிகள் ரவுசு பன்ணியிருந்தாலும் ஆச்சரியமில்ல...
/
:)))))))))))
ROTFL//
கல்யாணத்துக்குப் பொறவும் ROTFLaa ம்ம்ம் நீ வீரன் தான் :)))
// மங்களூர் சிவா said...
/
இங்கே நடிப்புன்னா முகத்துல்ல முக்கா கிலோ மைதா மாவைப் பூசி முகம் மாற்றி மாறுவேட போட்டிக்கு கிளம்புவது
/
/
டென்சல் கொடுத்து வச்சவர் ஆலிவுட்ல்ல நடிக்கிறார்.. கோலிவுட்ல்ல இருந்திருந்தார்ன்னு... மன்றம் வச்சு மைக் கட்டி வா தலைவா வண்ணாரப்பேட்டை தொகுதியிலே எம்.எல்.ஏ ஆவலாம்ன்னு நம்ம ரசிக கண்மணிகள் ரவுசு பன்ணியிருந்தாலும் ஆச்சரியமில்ல...
/
:)))))))))))
ROTFL//
கல்யாணத்துக்குப் பொறவும் ROTFLaa ம்ம்ம் நீ வீரன் தான் :)))
//Anonymous said...
தேவ்,
டென்சலின் அட்டகாசமான படங்களில் நீங்கள் இங்கே சொல்லியிருக்கும் படங்கள் வெகு குறைவு..
John Q(மகனின் இதய அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையை கைப்பற்றும் படம்),
Philadelphia(Tom Hanks உடன் போட்டிபோட்டு நடித்திருக்கும் படம்), The Bone Collector,
The Hurricane,
Remember the Titans,
Man on Fire(இதை காப்பியடித்து தமிழில் ஒரு கொடுமையான படம் அர்ஜுன் நடித்து வெளிவந்தது.), Glory,
He Got Game//
அனானி தகவலுக்கு நன்றி... பதிவோட நோக்கமே டென்சல் நடித்த மற்ற படங்கள் பத்திய தகவல்களை நம்ம மக்கள் பகிர்ந்து கொள்ளுவார்களே அப்படிங்கற ஆர்வம் தான்.. அதுக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு...
//ஆயில்யன் said...
//வெள்ளைக் காரன் வெத்தலை பாக்கை மென்னு துப்புற மாதிரி பேசுற அந்த மொழி நமக்கு சட்டுன்னு பிடிபடாது....இதுன்னால எத்தனையோ ஆங்கிலப் படங்களைப் பார்த்து அதன் பெருமை எனக்கு புலப்படாமலே போனதுண்டு...
///
மீ டூ
ஸேம் பிளட்!//
இதுக்கு எல்லாம் கலங்கலாமா... நாம் எல்லாம் யார்... புரிந்தும் புரியாமலும் தொடரட்டும் நம் கலையுலக ரசிகப் பணி... ஒகே...
//நிமல்-NiMaL said...
//நோட் த பாயிண்ட் இங்கிலீசு பட்மும் நாங்க இங்கிலீசி சப் டைட்டிலோடத் தான் பார்ப்போம்.... //
நாங்களும் தான்... :)
நீங்கள் சொன்ன படங்களில் Inside Man, American Gangster நானும் பார்த்திருக்கிறேன்.
தமிழ்ல இப்பிடி படமெல்லாம் வரும் எண்றது கனவுதான்.. :(
//
நிமல் மத்த இரண்டு படங்களையும் பாருங்கள் கண்டிப்பா ரசிப்பீங்க.. அது மட்டுமில்லாமல் நம்ம மக்கள் இங்கே ஒரு பெரிய பட்டியலே கொடுத்து இருக்காங்க லைன் கட்டி பாத்துர வேன்டியது தான்..
//கோபிநாத் said...
\\சொல்லமுடியாத அளவுக்கு அவமானப்பட்ட வரலாறும் நமக்கு உண்டு\\
இதெல்லாம் இல்லைன்னா எப்படிண்ணே....இது போல பல பல்புகளும் எனக்கு உண்டு ;))//
சேம் வரலாறா.. அய்யோ அய்யோ :)))
கோபி கண்ணா.. பதிவின் பயன் அடைந்தேன் உன் பின்னூட்டத்தில்... டென்சல் படப்பட்டியலை ஒரு சிறு குறிப்போட கொடுத்து இருக்கே... இது எனக்கு மட்டுமில்லாமல் மத்த மக்களுக்கும் பயன் கொடுக்கும்ன்னு நம்புறேன்.. தேங்க் யூ
//நாகை சிவா said...
போர்வாள்!
சரியான பார்ட்டி அவர். செம ரவுசு பார்ட்டி.
Training Day, Inside Man பாத்தாச்சு. மற்ற இரண்டும் இன்னும் இல்லை. அவர் கலெக்சன் இருக்கு. சீக்கிரமே பாத்துட்ட வேண்டியது தான்.
//
கோபி கொடுத்த லிஸ்ட்டையும் சேத்துக்கோ புலி..
cry freedom பாருங்க
If u get a chance watch John Q,
Post a Comment