Wednesday, March 11, 2009

கொஞ்சம் EKI... கொஞ்சம் OSI...

1977.... 831....
என்னப்பா கணக்கு இது.....

மேல இருக்க மேட்டரை எல்லாம் ஒரு மாதிரியா கூட்டிக் கழிச்சு புரிஞ்சுகிட்டு சூரியன் படத்துல்ல நம்ம பன்னிக்குட்டி ராமசாமி ஒரு வசனம் சொல்லுவாரு பாருங்க அதாங்க அரசியல்ல இதெல்லாம் சாதரணம்ப்பா...அதை சூரியன் படத்து ஹீரோ கிட்ட இப்போ யாராவது சொன்னா.... அவர் என்ன சொல்லூவாரு...

ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI

நாங்க என்னச் சொல்லுறோம்ன்னா
ஒண்ணுல்ல விழுந்தா நோ கட் அவுட்
இன்னொண்ணுல்ல விழுந்தா தான் கட் அவுட்
இல்லன்னா ரெண்டுல்லயுமே கெட் அவுட்...

மதுரை...வருவோம்ல்ல...

வடிவேலு கிட்டே நம்ம டாக்சி ட்ரைவர் சொல்லுவாரே அதே மேட்டரை..மல்லிப்பூ மாநாகர் உள்ளே போய் ஆட்சி பண்ணுறவருகிட்டே தகிரியமா யாராவது சொல்லிட்டு வந்தா.. சொல்லிட்டு வந்தவங்க நிலைமை என்னவாகும்....

ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI

நாம என்னச் சொல்லுறேன்னா...சொன்னா வாரணம் ஆயிரமாகவும் இருக்கலாம்...இல்ல பத்தாயிரமாகவும் இருக்கலாம்..

கலாநிதி...தயாநிதி...தேர்தல் நிதி...நெஞ்சுக்கு நீதி... கழகத் தலைவர் கருணாநிதி

பராசக்தியிலே வருமே ஒரு பாட்டு ஓ ரசிக்கும் சீமானே....அந்த பாட்டை திமுக தேர்தல் பிரச்சார டைம்ல்ல கொள்கை பாட்டுன்னா தப்பா போட்டா அந்த ஸ்பீக்கர் செட் சொந்தக்காரர் என்ன ஆவார்...

ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI

நாங்க என்னச் சொல்லுறோம்ன்னா

இதெல்லாம் இப்போ முக்கியமான மேட்டரா... தமிழனுக்கு வேற எங்கோ மனம் பறக்கிறது....(எங்கே பறக்குது... எதுக்கு பறக்குதுன்னு எல்லாம் என்னைக் கேக்கக் கூடாது சொல்லிட்டேன்.

மம்மி மம்மி மாடர்ன் பிரெட்

பழைய விளம்பர பாடலை அதிமுக உண்ணாவிரத பந்தல்ல போய் நின்னுகிட்டு உச்சாஸ்தியிலே பாடுனா என்னாகும்...

ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI

நாங்க என்னச் சொல்லுறோம்ன்னா...
"ஜெ" ஹோ சொல்லி பாருங்க...ஸ்லம் டாக் கூட மில்லியனேர் ஆயிடலாம்....

பல்லேலக்கா..பல்லேலக்கா..சேலத்துக்கா...திருச்சிக்கா...திருத்தணிக்கா...அண்ணன் வந்தா இப்போ தமிழ்நாடும் அமெரிக்கா...

அப்படின்னா எந்திரன் எந்திரிச்சு வந்தா இங்கேயும் ரிசசன் வருமா அமெரிக்கா மாதிரி அப்படின்னு அப்பாவியா கேக்குற ஐடி பிரொபசனலைச் என்னச் சொல்லுறது...

ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI

நாங்க என்னச் சொல்லுறோம்னா
கண்ணா கடமையைச் செய் பலனை எதிர்பார்...

இப்படி ஒரு பதிவுக்கு பின்னூட்டம் வந்தா என்னச் சொல்லுறது... வர்றல்லன்னா என்னச் சொல்லுறது..

ஆப்சன் 1 EKI ஆப்சன் 2 OSI

19 comments:

இராம்/Raam said...

மீ த ஃபர்ஸ்ட்... :))

இராம்/Raam said...

OSI :- இந்த acronym நம்மது'ண்ணே..... Copyrights permission வாங்கி வைக்கனும்... :)

நாகை சிவா said...

EKI!

ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்

ஏண்ணன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

என்னய்யா இப்படி கிளம்பிட்டீங்க

நாகை சிவா said...

ஒன்னு இரண்டு உள்குத்து வச்சு ஒரு பதிவு போடலாம். வெறும் உள்குத்தை வச்சே ஒரு பதிவு உங்களால் மட்டும் தான் போட முடியும்.

நல்லா இருங்க சாமி....

நாகை சிவா said...

இந்த பதிவு புரிஞ்சவங்க புத்திசாலிங்க

இந்த பதிவு புரியாதவங்க பாக்கியசாலிங்க

நான் புத்திசாலி :((((

ஸ்ரீதர்கண்ணன் said...

இப்படி ஒரு பதிவுக்கு பின்னூட்டம் வந்தா என்னச் சொல்லுறது... வர்றல்லன்னா என்னச் சொல்லுறது..

ILA said...

என்ன எழவுடா இதுன்னு யாரும் இன்னும் பின்னூட்டம் போடலையா?

கோபிநாத் said...

அண்ணே ஆப்சன் மட்டும் தான் புரியல !!

தேவ் | Dev said...

ஆப்சன் காப்பி ரைட் நன்றி ராயல் ராம் !!!!

தேவ் | Dev said...

EKI - ENNA KODUMAI ITHU
OSI - ONNUM SOLLURATHUKKU ILLAI

--சங்கம் மொழி காப்பி ரைட்ஸ் நன்றி சங்கத்தான்ஸ்

தேவ் | Dev said...

//நாகை சிவா said...
ஒன்னு இரண்டு உள்குத்து வச்சு ஒரு பதிவு போடலாம். வெறும் உள்குத்தை வச்சே ஒரு பதிவு உங்களால் மட்டும் தான் போட முடியும்.

நல்லா இருங்க சாமி....//
ஆகா இப்படி வெளிபடையா உலகமே படிக்கற படி "தெளிவா'' ஒளிவு மறைவு இல்லாம பதிவு போட்டா அதை உள்குத்து பதிவுன்னு திசை திருப்புவதா... புலி சரியில்லை உன் போக்கு....அடுத்தும் உன் நிலை இப்படியே தொடர்ந்தால் தில்லி சென்று நான் கண்ட படி அறிக்கை விட வேண்டியிருக்கும் என உன்னை உணர்வுபூர்வமாய் எச்சரிக்கிறேன்... புரியுதா....

தேவ் | Dev said...

//ஸ்ரீதர்கண்ணன் said...
இப்படி ஒரு பதிவுக்கு பின்னூட்டம் வந்தா என்னச் சொல்லுறது... வர்றல்லன்னா என்னச் சொல்லுறது..//

அய்யோ அய்யோ அதுக்கும் தான் ஆப்சன் கொடுத்திருக்கோமே ஆபிசர்.... !!!

தேவ் | Dev said...

// ILA said...
என்ன எழவுடா இதுன்னு யாரும் இன்னும் பின்னூட்டம் போடலையா?//
ஒரு வேளை கச்சேரி வாசல்ல இங்கு வெட்டியான்களுக்கு அனுமதியில்லங்கற அவங்க படிச்சிட்டுப் போயிட்டாங்களோ என்னவோ....!!! விசாரிச்சி பாருங்கண்ணா

தேவ் | Dev said...

//கோபிநாத் said...
அண்ணே ஆப்சன் மட்டும் தான் புரியல !!//
இப்போ புரிஞ்சுப் போச்சா கோபி...

ஆயில்யன் said...

//அப்படின்னா எந்திரன் எந்திரிச்சு வந்தா இங்கேயும் ரிசசன் வருமா அமெரிக்கா மாதிரி அப்படின்னு அப்பாவியா கேக்குற ஐடி பிரொபசனலைச் என்னச் சொல்லுறது...
//

:))))))))))))

பினாத்தல் சுரேஷ் said...

EKI OSI

தேவ் | Dev said...

//ஆயில்யன் said...
//அப்படின்னா எந்திரன் எந்திரிச்சு வந்தா இங்கேயும் ரிசசன் வருமா அமெரிக்கா மாதிரி அப்படின்னு அப்பாவியா கேக்குற ஐடி பிரொபசனலைச் என்னச் சொல்லுறது...
//


:))))))))))))//
ஆயில்ஸ் புரிஞ்சுப் போச்சா... ரைட் சிரிங்க....

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

ஒரு வெறியோடதான் பதிவு போடுவிங்க போல... :)

tamil10