Friday, March 13, 2009

அழுவாச்சி காவியம்

கவிப்பேரரசு அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்..அவர் எழுதிய பல புத்தங்களைத் தேடிப் பிடித்து படித்து சுவைத்திருக்கிறேன்...திரையில் அவர் வைத்த படைப்புகளின் சுவையை விட அவரது புத்தகப் படைப்புகளுக்கு சுவை அதிகம் எனக் கருதுபவர்களில் நானும் ஒருவன்...

கவிஞர் எழுதிய சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் புத்தகம் என் கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த பாதித்த ஒரு புத்தகம் அதை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன்,.. பலருக்குப் படிக்கப் பரிந்துரைத்திருக்கிறேன்.. பரிசாக கூட அளித்துள்ளேன்...

கள்ளி காட்டு இதிகாசம் கவிஞரின் இன்னொரு யதார்த்ததை வாசகனுக்கு பக்குவ பதார்த்தமாய் அளிக்கப் பட்ட ஒரு கவின் மிகு படைப்பு...
அணைக் கட்ட தம் கிராமம் தொலைத்த மக்களின் வாழ்க்கை முறையையும் வலியையும் ஒருங்கே பதிவு செய்திருப்பார்...

அந்த பேயத் தேவக் கிழவனின் ஒவ்வொரு அனுபவமும் நம்மையும் அவனுடன் அழைத்துச் சென்ற வாழச்செய்யும்...

கவிஞரின் இன்னொரு இலக்கிய மைல் கல்லாய் வருணிக்கப்படும் கருவாச்சி காவியம் புத்தகத்தை வாசிக்க வெகு நாட்களாக எண்ணியும் பல வித காரணங்களால் வாசிக்க இயலாது போனது.. இந்த முறை புத்தகக் கண்காட்சியில் காசு கொடுத்து வாங்கி இரண்டு மாதம் கழித்து இப்போது தான் வாசிக்க முடிந்தது...

ம்ம்ம் மதுரை மண் வாசனை ஒவ்வொரு பக்கத்திலும் அள்ளி பூசப்பட்டுள்ளது... வட்டார வழக்கில் தனி ராஜ்ஜியமே நடத்தியுள்ளார் கவிஞர்....அந்த சொக்கத் தேவன் பட்டியின் வீதிகளில் கவிஞர் நம் கரம் பிடித்து அழைத்துச் சென்று உலா விடுகிறார்.. ஒரு கட்டத்தில் மக்கா.. இது உங்க ஊர்.. போய் பழகி பாருங்கய்யான்னு அங்குள்ள மக்களோடு நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்....

வெள்ளந்தி மக்களின் வினயமற்ற வாழ்க்கையை வாகாக நமக்கு சொல்லிக் கொண்டே போகிறார்... கிராமத்து சோறு வைக்கிறார்... பட்டிக்காட்டு பாசம் குழைத்து குழம்பும் பரிமாறுகிறார்...இந்த புள்ள கருவாச்சி கதையைக் கேளுங்கய்யான்னு அங்கனக் குள்ளேயே வாசகனுக்கு ஒரு குடிசையும் வேய்ந்து குடியே அமர்த்துகிறார் கவிஞர்...

அந்தூரூ மாடு கன்னு ஆடு குட்டி அம்புட்டு மேலயும் நமக்கு ஒரு பிடித்தம் ஏற்படுத்துகிறார்...பாவப்பட்ட மக்கள் வாழ்க்கையின் வலியோடு அவர் தம் வலவிகளின் குலவி கலவி என சகல சங்கதியையும் நமக்கு சத்தமின்றி கவிஞர் கதையாகச் சொல்லிக் கொண்டே போகிறார்...

ஆகா.. ஒஹோன்னு அப்படியே பயணம் போவுது வாசகனுக்கு,,,,
ஆனாலும் படிக்க படிக்க ஒரு சின்ன நெருடல்.... கருவாச்சி மெய்யாலுமே பாவப்பட்டவளா... இல்ல பாவப்ட்டவளா காட்டப் படுறாளான்னு.... கருவாச்சியின் வாழ்க்கை சம்பவங்கள் பலவும் வலிந்து திணிக்கப்பட்டது போலவே தெரிகிறது....
காவிய நாயகன்னா.... நாயகனை நல்லவனா... வல்லவனா... நாலும் தெரிஞ்சவனா.. காட்டணும் கஷ்ட்டம் எல்லாம் தாண்டி கடல மலைத் தாண்டி செயிக்கறவன் காவிய நாயகன் .. காவியத் தலைவன்...

ஆனா அதே நேரம் ஒரு பெண் பிள்ளையை காவிய நாயகிக்கணும்னா... அவளை ஒரு பாவப்பட்ட பிறப்பாவே உருவகிக்கணும்ங்கறது என்ன சட்டமோ தெரியல்ல...

அந்தப் பெண்ணுக்கு எல்லாமே கஷ்ட்டமாகவே வருவதும்... அவள் வாழ்க்கையில் அவளுக்கு உதவ வருபவருகளுக்கும் பெருங் கஷ்ட்டம் வருவது எனவும் கருவாச்சி கதையிலும் கவிஞர் அதே சட்டத்தை மீறாமல் கதையை செலுத்தியிருப்பது சற்று சங்கடம் அளிக்கிறது...ஒரு கட்டத்தில் கருவாச்சி காவியம்ங்கறதுக்கு பதில் அழுவாச்சி காவியம்ன்னே பேர் வச்சிருக்கலாம் போலிருக்கேன்னு யோசிக்க வைக்கிறார் கவிஞர்...

கதையின் முடிவு... தொலைக்காட்சி நெடுந்தொடரின் வாடை அடிக்கிறது... அந்தக் காலத்து தமிழ் படத்தின் முடிவு வாசனை வேறு... கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருசன்....

சொக்கத்தேவன் பட்டி வீதிகளையும் மனிதர்களையும் ரசித்த அளவுக்கு என்னால் எனோ கருவாச்சிக்கு நடப்பதாய் கவிஞர் சொல்லும் சம்பவ்ங்களை ஏற்கவும் முடியவில்லை...ஒப்பவும் முடியவில்லை...

கருவாச்சியை கடும் பிரயத்தனப் பட்டாவது காவிய நாயகி ஆக்கியே தீருவேன் எனக் கவிஞர் முயலவது ஆங்காங்கே சம்பவங்களாய் ஒட்டுதல் இன்றி விலகி நிற்கின்றன...

ம்ம்ம் அடுத்தக் கவிஞரின் படைப்பில் தத்துவ அலங்காரங்களின்றி யதார்த்தங்களின் அழகு தோரணங்கள் தொங்குமா என ஆவலான எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறேன்...

15 comments:

நாகை சிவா said...

//
கவிஞர் எழுதிய சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் புத்தகம் என் கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த பாதித்த ஒரு புத்தகம் அதை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன்,.. பலருக்குப் படிக்கப் பரிந்துரைத்திருக்கிறேன்.. பரிசாக கூட அளித்துள்ளேன்...//

ஆமாம் ஆமாம் :)))

பழைய வைரமுத்துவை இழுந்து விட்டதாக தோனுகிறது

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்ட்டூ :))

ஆயில்யன் said...

//சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் புத்தகம் என் கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த பாதித்த ஒரு புத்தகம் அதை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன்//

நானும் கூட பல முறை திரும்ப திரும்ப படித்த புத்தகம் :)

ஆயில்யன் said...

//ஒரு பெண் பிள்ளையை காவிய நாயகிக்கணும்னா... அவளை ஒரு பாவப்பட்ட பிறப்பாவே உருவகிக்கணும்ங்கறது என்ன சட்டமோ தெரியல்ல...
//

:(((((

மாதேவி said...

"பலருக்குப் படிக்கப் பரிந்துரைத்திருக்கிறேன்.. பரிசாக கூட அளித்துள்ளேன்..." படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கும் தூண்டியுள்ளீர்கள் நன்றி.

கோபிநாத் said...

சேம் பிளட் ;)

கிருஷ்ணா said...

கவிப்பேரரசரை எனக்கும் பிடிக்கும்! அவருடைய "ஏ இரண்டாயிரமே.. ஏது கொணர்வாய் எனக்கு?" என்ற கவிதையை ஒரு புதினத்தில் படித்துவிட்டுத்தான்.. நானும் கவிதை எழுத ஆரம்பித்தேன்.. அவருடைய கவிதைகளை இரசித்திருக்கிறேன்.. இன்னமும் நாவல்களை வாசிக்கும் வாய்ப்பும் நேரமும் கிட்டியதில்லை..

உங்கள் விமர்சனத்திலும், பின்னூட்டங்களிலும் உங்களின் ஏமாற்றத்தை உணர முடிகிறது..

www.kavithamil.blogspot.com
www.krishnausj1.blogspot.com

தேவ் | Dev said...

//
கவிஞர் எழுதிய சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் புத்தகம் என் கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த பாதித்த ஒரு புத்தகம் அதை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன்,.. பலருக்குப் படிக்கப் பரிந்துரைத்திருக்கிறேன்.. பரிசாக கூட அளித்துள்ளேன்...//

ஆமாம் ஆமாம் :)))

பழைய வைரமுத்துவை இழுந்து விட்டதாக தோனுகிறது//

அந்த வருத்தம் எனக்கு நிறையவே இருக்கிறது சிவா!!!

தேவ் | Dev said...

//ஆயில்யன் said...
மீ த பர்ஸ்ட்ட்டூ :))

//

ஆயில்ஸ் ஜஸ்ட் மிஸ் :)))

தேவ் | Dev said...

ஆயில்யன் said...
//சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் புத்தகம் என் கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த பாதித்த ஒரு புத்தகம் அதை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன்//

நானும் கூட பல முறை திரும்ப திரும்ப படித்த புத்தகம் :)

//

கவிஞரின் மிகச் சிறந்த படைப்பு அது என்பது என் கருத்து.

தேவ் | Dev said...

//மாதேவி said...
"பலருக்குப் படிக்கப் பரிந்துரைத்திருக்கிறேன்.. பரிசாக கூட அளித்துள்ளேன்..." படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கும் தூண்டியுள்ளீர்கள் நன்றி.

//

நிச்சயமாய் படிங்க மகாதேவி.. கவிஞர் எழுதிய பல நல்ல சுவாரஸ்யமான நூல்கள் உள்ளன,, பதிவுல்ல ஒண்ணு ரெண்டு மட்டும் தான் நான் சொல்லியிருக்கேன்,,,

தேவ் | Dev said...

//கோபிநாத் said...
சேம் பிளட் ;)//

என்னய்யா கோபி ஒரு வரியிலே சொல்லி முடிச்சிட்டே இன்னும் விரிவாச் சொல்லலாமே....

தேவ் | Dev said...

//கிருஷ்ணா said...
கவிப்பேரரசரை எனக்கும் பிடிக்கும்! அவருடைய "ஏ இரண்டாயிரமே.. ஏது கொணர்வாய் எனக்கு?" என்ற கவிதையை ஒரு புதினத்தில் படித்துவிட்டுத்தான்.. நானும் கவிதை எழுத ஆரம்பித்தேன்.. அவருடைய கவிதைகளை இரசித்திருக்கிறேன்.. இன்னமும் நாவல்களை வாசிக்கும் வாய்ப்பும் நேரமும் கிட்டியதில்லை..

உங்கள் விமர்சனத்திலும், பின்னூட்டங்களிலும் உங்களின் ஏமாற்றத்தை உணர முடிகிறது..

www.kavithamil.blogspot.com
www.krishnausj1.blogspot.com//

வாங்க கிருஷ்ணா.. கவிஞரையோ கவிஞரின் படைப்புகளையோ விமர்சிக்கும் தகுதி எனக்கு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.. படித்தவுடன் ஒரு சாதாரண வாசகனுக்கு ஏற்படும் உணர்வுகளையே இங்கு பதிவு செய்துள்ளேன்...

தமிழன்-கறுப்பி... said...

வைரமுத்துவை ஒரு காலத்தில் வெறியோடு வாசித்தவன் இப்பொழுதும் வாசிக்கிறேன் இல்லை என்பதல்ல ஆனால் பழைய வைரமுத்து இப்பொழுது இல்லை என்பது எனக்கும் சோகம்தான்... அவரிடமிருந்து நிறைந்த படைப்புகளை எதிர் பார்ப்வர்களுள் நானும் ஒருவன்..

சிகரங்களை நோக்கி, ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்,
தண்ணீர் தேசம்,
மீண்டும் என் தொட்டிலுக்கு, இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல
என்று
பல தடைவைகள் வாசித்த புத்தகங்கள் நிறைய
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்

எப்பொழுதும் என்னோடு இருக்கும் புத்தகம்(அதுக்கு காரணம் சொல்லணுமா)

தேவ் | Dev said...

// தமிழன்-கறுப்பி... said...

வாங்க என்னை மாதிரியே நீங்களும் இருந்திருக்கீங்க...சிகரங்களை நோக்கி நான் சொல்ல மறந்த ஒரு புத்தகம்...அதை நீங்களே சொல்லிட்டீங்க....பெரும்பான்மையான படைப்பாளிகள் ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைந்தப் பின் அவர்களிடம் மிச்சம் எதுவும் இல்லையோன்னு நினைக்க வச்சுடுறாங்க இல்லையா...

tamil10