Monday, March 30, 2009

யாழ்பாணத்திற்கு வெகு அருகில்




ரொம்ப நாளாப் போகணும்ன்னு ஆசைப் பட்ட ஒரு ஊர் ராமேஸ்வரம்...இந்த வாரம் தான் அந்த நீண்ட நாள் ஆவல் நினவானது...தீடிரென்னு காரைக்குடி நண்பன் கார்த்தியின் கால்சீட் கிடைக்க கேமராவும் கையுமா ராமேஸ்வரத்துக்கு சனிக்கிழமை ரயிலேறியாச்சு..

காலையிலே காரைக்குடி வரவும் தூக்கத்தைக் கலைச்சு நண்பன் எழுப்பிவிட்டான்...அப்படியே பேசிகிட்டே...அவன் கொண்டு வந்த வைன் பிஸ்கோத்தை சாப்பிட்டுகிட்டேப் பயணத்தை ரசிச்சப்படி ரயில் ஜன்னலோரம் எட்டிப்பாத்துகிட்டே இருந்தேன்...

ரொம்ப நாளா வெறும் சினிமாவுல்லயும் டிவியிலும் மட்டுமே பார்த்த அந்த தமிழகத்தின் பொறியியல் சாதனை பாலத்தை ஜன்னல் வழியாக் கண்ணில் கண்டேன்...பாம்பன் பாலம்.. தீவையும் தமிழகத்தையும் இணைக்கும் இருகரங்களாய் ரயில் பாலமும்..சாலை வழி பாலமும் நீண்டு என்னை வரவேற்பது போலிருந்தது..

ம்ம் ரயில் கதவோரம் போய் நின்னுகிட்டு முடிஞ்சவரைக்கும் க்ளிக் க்ளிக்ன்னு க்ளிக்கி தள்ளுனேன்... கப்பல் வந்தா பாலம் திறக்குமாம்.. நந்தா படத்துல்ல வர்ற முன்பனியா...பாட்டு பாத்துருப்பீங்களே.... கடலோரம் எங்கும் படகுகள்....கடலில் போட்டு வச்ச கோலங்கள் மாதிரி..காலை காற்றில் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தன...

ராமேஸ்வரத்தில் நான் மிகவும் பார்க்க விரும்பிய இடம் தனுஷ்கோடி... தீவுக்குள் இன்னொறு தீவு... 60களில் புயல் அடித்து தமிழகத்தின் ஒரு ஓரம் கொள்ளைப் போனதாய் படித்திருக்கிறேன்...அந்த இடம் தனுஷ்கோடி... வேர்க்காடுன்னு ஓரு ஊர் வரைக்கும் அரசாங்க பஸ் இருக்கு... அங்கிருந்து ஒரு ஆறு கிலோ மீட்டர்..அங்கு தான் மன்னார் விரிகுடாவின் எல்லை... திரும்பிய பக்கமெல்லாம் கடல்... கடல் தாண்டி ஆங்காங்கு மணல் திட்டுக்கள்...
அந்தா அப்படியே போனா சிலோன் வந்துரும்ங்க... வண்டி ஓட்டி வந்தவர் சொன்ன தகவல்...இங்கே இன்னொரு விசயம்...வேர்காட்டிலிருந்து தனுஷ்கோடி போகணும்ன்னா..ஜீப்..இல்லன்னா ஒரு வேன் தான் வழி...மத்த வண்டிக்கெல்லாம் வாய்ப்பு இல்ல.. கடலோரமா ஒரு பாலைவனப் பயணம் அது...ஒரு வேன்ல்ல ஒரு 10- 15 பேரை ஏத்திக்கிறாங்க... நாங்க எல்லாம் வேனுக்கு வெளியே ஒரு பலகை போட்டு அதுல்ல நின்னுகிட்டே கைக்கு வாட்டமா இருந்த கயித்தைப் பிடிச்சு தொங்கிட்டே அந்த 6 கிலோ மீட்டரையும் கொஞ்சம் ஓவரான உயிர் பயத்தோடவே பயணம் போயிட்டு வந்தேன்...

தனுஷ் கோடியின் மிச்சங்களாய்... ஒரு சர்ச்...பள்ளிக் கட்டடம்...ரயில் நிலையம்...வாட்டர் டாங்க்.தபால் நிலையத்தின் சிதிலமடைந்தக் கட்டடங்கள்...அவைகளோடு அலைப் பார்த்தாக சொல்லும் ஒரு வயதானக் கிழவர்... அலை இப்படித் தான் வந்தது என அவர் தனியே ஒரு கதைச் சொல்லி என் நண்பனிடம் அதற்கு சன்மானமாக 15 ரூபாய் வாங்கிக் கொண்டார்...

திரும்பி வரும் போது..எங்கள் வேன் கூரை மீது அமர்ந்து வந்த மீனவ நண்பரிடம் சும்மா ஊர் வம்பு பேசிகிட்டு வந்தோம்...அங்கிருந்து ஏழு மண்ல் திட்டு தாண்டினால் இந்திய எல்லை வந்து விடும் என்றார்..அதற்கு அப்பால் இருப்பது யாழ்ப்பாணம் என்றார்.. கேக்கறவங்களுக்கு அப்படியே கடல் சாவாரியும் கூட்டிப் போவோம் என்றார்...
யாழ்ப்பாணத்துக்கு ஒரு வேளை ஒருத்தர் கள்ளத்தோணியில் 80களில் போனதாய் ஒருத்தரைச் சொல்லுவாங்களே...அவரை இவர் தான் கூட்டிப் போயிருப்போரோ... எனக்கும் என் நண்பனுக்கும் ஏக சமயத்தில் கேட்க நினைத்த கேள்வி..ஆனாக் கேக்காமலே அவரிடம் விடைப் பெற்றோம்...
ம்ம்ம் யாழ்பாணத்திற்கு மிக அருகில் வந்தும் அங்கு போக் முடியாது... இந்த யுத்தம் ரத்தம் என்ற சச்சரவு இல்லாது இருந்திருக்குமானால்.. நாங்களும் அது வரை போயிருப்போம்...எல்லாம் ஒரு ஆசை தான்.. நம்ம காலத்துக்குள்ளே யுத்தம் நின்னு மறுபடியும் ராமேஸ்வரம் போய் அங்கிருந்து அப்படியே ஜாலியா படகு ஏறி சிலோன் போயிட்டு வரணும்ங்க.... நடக்குமா பாப்போம்...

18 comments:

Anonymous said...

me the first ...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கப்பல் வந்தா பாலம் திறக்குமாம்//

அதான் நீங்க போனீங்களே-ண்ணே! அப்பவுமா திறக்கல? :)

தனுஷ்கோடி, புயலுக்கும் கடற்கோளுக்கும் பின்னர், ஒரு பாலைவன மண் கடல்! இன்னும் புகைப்படம் போடுங்கண்ணே! ஒரு பாழடைந்த சர்ச்சும் தனுஷ்கோடியின் முகங்களில் ஒன்று!

//ஏழு மண்ல் திட்டு தாண்டினால் இந்திய எல்லை வந்து விடும் என்றார்..அதற்கு அப்பால் இருப்பது யாழ்ப்பாணம் என்றார்//

ராமேஸ்வரம் தாண்டினா மிக கிட்டக்க இருப்பது தலைமன்னார்!
இன்னும் மேலாக்கா போனாத் தான் யாழ்ப்பாணம்! பொன்னியின் செல்வன்-ல வந்தியத் தேவன் போற பாதை ஞாபகம் வந்திருச்சி-ண்ணே!

//நம்ம காலத்துக்குள்ளே யுத்தம் நின்னு மறுபடியும் ராமேஸ்வரம் போய் அங்கிருந்து அப்படியே ஜாலியா படகு ஏறி சிலோன் போயிட்டு வரணும்ங்க....//

ஆகா!
கனவு மெய்ப்பட வேணும்! கைவசம் ஆவது விரைவினில் வேணும்!

எத்தனையோ ஊர்-ல தேசம் விட்டு தேசம் பஸ்-ல போயி வராங்க! வேலையும் பாக்குறாங்க!
அமெரிக்கா-கனடா நயாகாரா பாலம், சிங்கை-மலேசியா ஜோஹர் பாரு, லண்டன்-பாரீஸ், ஆம்ஸடர்டாம்-ஜெர்மனி...இந்தியா-நேபாளம் யாத்திரை...இப்படி நிறைய..

இதே போல ஈழத்துக்கும் இன்பமாகப் போகும் நாளும் வந்திடாதோ.....

ஆயில்யன் said...

//எல்லாம் ஒரு ஆசை தான்.. நம்ம காலத்துக்குள்ளே யுத்தம் நின்னு மறுபடியும் ராமேஸ்வரம் போய் அங்கிருந்து அப்படியே ஜாலியா படகு ஏறி சிலோன் போயிட்டு வரணும்ங்க.... நடக்குமா பாப்போம்...
//

இவ்ளோ தூரம் வந்துட்டோம் ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்திடலாமே என்று ஏங்க வைக்கும் மனம்தான் எனக்கும்...!

:(

எதிர்ப்பார்த்து காத்திருப்போம் அந்த நாளினை....!

Unknown said...

அனானியாரே... வருகைக்கு நன்றி... பேரைச் சொல்லி இருந்தா யார் அந்த மீ அப்பட்டின்னு தெரிஞ்சுக்குவோம்ல்ல

Unknown said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கப்பல் வந்தா பாலம் திறக்குமாம்//

அதான் நீங்க போனீங்களே-ண்ணே! அப்பவுமா திறக்கல? :)
//

திறக்கவே இல்லை கே.ஆர்.எஸ் ஒரு வேளை வீக் என்ட் கப்பலுக்கு எல்லாம் லீவோ :(

நீங்கச் சொன்ன மத்த விசயங்கள் எனக்கு மட்டுமல்ல நம்ம கச்சேரிக்கு வர்ற மத்த நண்பர்களுக்கும் புதுத் தகவலாத் தான் இருக்கும்...அது மட்டுமில்லாமல்..ராமேஸ்வரம் பத்திய ஆன்மீகத் தகவல்கள் கொடுப்பதற்கு சரியான ஆள் நீங்கத் தான்...அது பத்தியும் எதாவது சொல்லுவீங்கன்னு எதிர்பாத்தேன்.. ஆனா அது எல்லாம் பல பதிவுகளுக்கான மேட்டர்.. ஒரு பின்னூட்டத்தில் நிச்சயம் அடங்காது... டைம் கிடைக்கும் போது பகிருங்க...

ம்ம்ம் கனவு மெய்பட முழு மனதோட காத்திருப்போம்...ஒண்ணா ஒரு ட்ரிப் போட்டுருவோம் :))))

Unknown said...

// ஆயில்யன் said...
//எல்லாம் ஒரு ஆசை தான்.. நம்ம காலத்துக்குள்ளே யுத்தம் நின்னு மறுபடியும் ராமேஸ்வரம் போய் அங்கிருந்து அப்படியே ஜாலியா படகு ஏறி சிலோன் போயிட்டு வரணும்ங்க.... நடக்குமா பாப்போம்...
//

இவ்ளோ தூரம் வந்துட்டோம் ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்திடலாமே என்று ஏங்க வைக்கும் மனம்தான் எனக்கும்...!

:(

எதிர்ப்பார்த்து காத்திருப்போம் அந்த நாளினை....!
//

நிச்சயாம ஆயில்ஸ் அது ஒரு நன்னாளாகவே இருக்கும்.. வியாபாரம்..சுற்றுலா... என பல வகையில் நன்மையாகவே அமையும்...எத்தனையோ பாலங்கள் கட்டியாச்சு... இதுக்கும் ஒண்ணு கட்டாமலாப் போயிடுவாங்க...காத்திருப்போம் :)))

கானா பிரபா said...

kalakkal boss

சந்தனமுல்லை said...

நல்லா எழுதியிருக்கீங்க! அந்த நாள் சீக்கிரம் வர வேண்டுகிறேன்!

கைப்புள்ள said...

பயணக்கட்டுரையும் படங்களும் அருமைப்பா. ரெண்டு அண்டை நாடுகளுக்குத் தொடும்தூரம் வரை போய் வந்துட்டே...பாகிஸ்தான் மற்றும் இலங்கை.

//நம்ம காலத்துக்குள்ளே யுத்தம் நின்னு மறுபடியும் ராமேஸ்வரம் போய் அங்கிருந்து அப்படியே ஜாலியா படகு ஏறி சிலோன் போயிட்டு வரணும்ங்க.... நடக்குமா பாப்போம்...
//

ஆமென்.

நாகை சிவா said...

:)

நல்ல கட்டுரை!

நாகையில் இருந்தே படகு வச்சு போயிடலாம். அந்த நாளுக்காக காத்து இருப்போம்.

கோபிநாத் said...

இம்புட்டு தூரம் போயிட்டிங்க...கண்டிப்பாக யாழ்பாணத்தையும் பார்த்துடுவிங்க ;)

Anonymous said...

//அவைகளோடு அலைப் பார்த்தாக சொல்லும் ஒரு வயதானக் கிழவர்... //

I read abt him long time back. before tsunami came.. amazed to know tat he is still there.

I have been to danushkodi when i was a kid. everything blur now. thanks for the pic. nice article btw. :-)

Unknown said...

//கானா பிரபா said...
kalakkal boss

//

நன்றி கானாபிரபா !!!

Unknown said...

// சந்தனமுல்லை said...
நல்லா எழுதியிருக்கீங்க! அந்த நாள் சீக்கிரம் வர வேண்டுகிறேன்!//

நன்றி சந்தனமுல்லை

Unknown said...

// கைப்புள்ள said...
பயணக்கட்டுரையும் படங்களும் அருமைப்பா. ரெண்டு அண்டை நாடுகளுக்குத் தொடும்தூரம் வரை போய் வந்துட்டே...பாகிஸ்தான் மற்றும் இலங்கை.

//நம்ம காலத்துக்குள்ளே யுத்தம் நின்னு மறுபடியும் ராமேஸ்வரம் போய் அங்கிருந்து அப்படியே ஜாலியா படகு ஏறி சிலோன் போயிட்டு வரணும்ங்க.... நடக்குமா பாப்போம்...
//

ஆமென்.//

நன்றி நண்பா!!!

Unknown said...

//நாகை சிவா said...
:)

நல்ல கட்டுரை!

நாகையில் இருந்தே படகு வச்சு போயிடலாம். அந்த நாளுக்காக காத்து இருப்போம்.
//

அப்படி ஒரு நாள் வந்தால் அது நிச்சயம் திருநாளே சிவா

Unknown said...

// கோபிநாத் said...
இம்புட்டு தூரம் போயிட்டிங்க...கண்டிப்பாக யாழ்பாணத்தையும் பார்த்துடுவிங்க ;)
//

ஆமென்

Unknown said...

//Triumph said...
//அவைகளோடு அலைப் பார்த்தாக சொல்லும் ஒரு வயதானக் கிழவர்... //

I read abt him long time back. before tsunami came.. amazed to know tat he is still there.

I have been to danushkodi when i was a kid. everything blur now. thanks for the pic. nice article btw. :-)
//

Thanks triumph!!!

tamil10