DECISIONS MAKE A MAN எவ்வளவு சரியான கருத்து...
இன்று காலையில் இருந்து என் சிந்தனையில் இந்தக் கருத்து நீக்கமற நிறைந்து நின்றது.. சில வரிகள் சும்மா படிக்கும் போதோ கேக்கும் போதோ நம்மை அதிகம் பாதிப்பதில்லை...ஆனா அந்தக் கருத்தை ஒத்த சூழ்நிலையில் இருக்கும் போது அதே வரிகள் நம்மை மிகவும் பாதிக்கின்றன....
எதோ ஒரு படத்துல்ல இளையதளபதி விஜய் பஞ்ச்சா ஒரு டயாலக் சொல்லுவார்...நான் ஒரு தடவை ஒரு முடிவெடுத்துட்டா அதை நானே மாத்த முடியாதுன்னு....அந்த வரியில்ல எவ்வளவு அர்த்தம் இருக்கு கொஞ்சம் யோசிச்சா புரியும்...
பொதுவாக ஒரு முடிவு எடுத்துட்டா அதுல்ல நிலைச்சு நிக்கணும்...அப்படி நிலைச்சு நிக்காம நாணல் மாதிரி அடிக்கிற காத்துக்கெல்லாம் வளைஞ்சு வளைஞ்சு முடிவை மாத்துனா...அப்படியிருக்குறவன் நிலைமை கேலிக்கூத்தாய் முடிஞ்சுப் போகும்....
முடிவு எடுக்க எவ்வளவு யோசிக்கிறோமோ அதே அளவு திடமா அதைச் செயல்படுத்துறதுக்கும் துணிச்சல் வேணும்..ஆற்றல் வேணும்...இல்லன்னா எடுக்குற முடிவு வெத்தாப் போயிடும்...முடிவு எடுக்குற மனிதனோட கெத்தும் போயிடும்..
முடிவுகளை எடுக்கறதுக்கு முன்னாடி யோசிக்கறவன் அறிவாளி... முடிவெடுத்தப் பின்னால் அதைப் பத்தி யோசிக்கறவன் அறிவிலி.....அறிவாளிகள் கொண்டாடப்படுவார்கள்...அறிவிலிகள் துண்டாடப்படுவார்கள்...
கல்வி என்பது ஒரு மனிதனுக்கு தன் வாழ்க்கையைக் குறித்த முடிவுகளை எடுக்கச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.. கல்வி தவறும் பட்சத்தில் பெரியோர்களாவது அதை நிச்சயமாக செய்ய வேண்டும்... ஒரு மனிதனின் வாழ்க்கை அவன் எடுக்கும் முடிவுகளைச் சார்ந்தே அமைகிறது...
இப்படி முடிவெடுக்கத் தெரியாமல் வாழ்க்கையை நகர்த்தும் மனிதனுக்கு ஒரு நாள் வாழ்க்கையே முடிவு எடுக்கச் சொல்லிக் கொடுக்கிறது...ஆனால் என்ன் அது வாங்கும் ட்யூசன் பீஸ் ஸ்பெஷல் கிளாஸ் டொனேஷன் ரொம்ப அதிகம்....
சில நேரம் எடுத்த முடிவுகள் அன்புக்காகவும் நட்புக்காகவும் இன்னும் பிற பாசத்துக்குரிய விசயங்களுக்காகவும் மாற்றப்படலாம் இல்லையேல் ஒத்திப் போட படலாம்..அதுவும் காலத்தின் கட்டாயத்தால் காயப்படுத்தப்படலாம்.. என்னக் கேவலக்கூடப் படுத்தபடலாம்... அதன் மூலம் நம்மை நாலு பேர் கைக்கொட்டி சிரித்து சந்தோசக் கூடப் படலாம்.. இதெல்லாம் மேல சொன்ன ட்யூசன் பீஸில் அடங்கும்....
நாம் எடுக்கும் சரியான முடிவுகள் நம் வெற்றிக்கான பாதைகள்... நாம் எடுக்கும் தவறான முடிவுகள் என்றோ நம் பெற போகும் வெற்றிகளுக்கான பாடங்கள் எனத் தான் எண்ண வேண்டும்..
இதைப் படிக்கறவங்க இப்போ எதாவது முடிவு எடுக்கப் போறீங்கன்னா....ப்ளீஸ் கொஞ்சம் நிதானம்...ஆனா முடிவெடுத்துட்டா அதை யாருக்காகவும் மாத்தாதீங்க... முடிவுகளை மாற்றினால் பல அவமானங்கள் வெகுமானங்களாய் கிடைக்கலாம்...ஏன் சில நல்லவர்கள் கூட உங்களுக்கு கெட்டவர்களாகத் தெரிவார்கள்...
முடிவுகள் பல ஆரம்பங்களின் அஸ்திவாரம் என்பது என் நம்பிக்கை.....
அந்த நம்பிக்கையில் இந்த பதிவை முடிக்கிறேன்..
11 comments:
//முடிவுகள் பல ஆரம்பங்களின் அஸ்திவாரம் என்பது என் நம்பிக்கை.....//
நான் ஜோரா கைதட்டியாச்சுங்க!!
அன்புடன் அருணா
// அன்புடன் அருணா said...
//முடிவுகள் பல ஆரம்பங்களின் அஸ்திவாரம் என்பது என் நம்பிக்கை.....//
நான் ஜோரா கைதட்டியாச்சுங்க!!
அன்புடன் அருணா
//
வாங்க அருணா... கைத்தட்டலுக்கு மிக்க நன்றி...இது ஒரு மிக மிக சீரியஸ் பதிவு என்று தெரிந்து தானே கைத்தட்டுனீங்க....:)))))
//ஆனா முடிவெடுத்துட்டா அதை யாருக்காகவும் மாத்தாதீங்க... முடிவுகளை மாற்றினால் பல அவமானங்கள் வெகுமானங்களாய் கிடைக்கலாம்...ஏன் சில நல்லவர்கள் கூட உங்களுக்கு கெட்டவர்களாகத் தெரிவார்கள்...
//
ரொம்ப சரியான கருத்து!
\\நாம் எடுக்கும் சரியான முடிவுகள் நம் வெற்றிக்கான பாதைகள்... நாம் எடுக்கும் தவறான முடிவுகள் என்றோ நம் பெற போகும் வெற்றிகளுக்கான பாடங்கள் எனத் தான் எண்ண வேண்டும்..\\
சூப்பரு;))
//இதைப் படிக்கறவங்க இப்போ எதாவது முடிவு எடுக்கப் போறீங்கன்னா....//
எட்டி எட்டி பார்ப்பேன்! இப்போ ஃபாலோயராவே ஆயிட்டேன்!
முடிவு எடுத்தாச்சுண்ணே! எடுத்தாச்சு! :)
//ப்ளீஸ் கொஞ்சம் நிதானம்...ஆனா முடிவெடுத்துட்டா அதை யாருக்காகவும் மாத்தாதீங்க//
மாத்த மாட்டேன்-ண்ணே! மாத்த மாட்டேன்! :)
//ஏன் சில நல்லவர்கள் கூட உங்களுக்கு கெட்டவர்களாகத் தெரிவார்கள்...//
:)))
நல்லவர்-ன்னு மனசு சொல்லும் போது, அவர் கெட்டவராத் தெரிய காரணம் என்ன-ண்ணே?
// சந்தனமுல்லை said...
//ஆனா முடிவெடுத்துட்டா அதை யாருக்காகவும் மாத்தாதீங்க... முடிவுகளை மாற்றினால் பல அவமானங்கள் வெகுமானங்களாய் கிடைக்கலாம்...ஏன் சில நல்லவர்கள் கூட உங்களுக்கு கெட்டவர்களாகத் தெரிவார்கள்...
//
ரொம்ப சரியான கருத்து!
//
வருகைக்கு நன்றி சந்தனமுல்லை !
// கோபிநாத் said...
\\நாம் எடுக்கும் சரியான முடிவுகள் நம் வெற்றிக்கான பாதைகள்... நாம் எடுக்கும் தவறான முடிவுகள் என்றோ நம் பெற போகும் வெற்றிகளுக்கான பாடங்கள் எனத் தான் எண்ண வேண்டும்..\\
சூப்பரு;))
//
தாங்க்ஸ் கோபி !!
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//இதைப் படிக்கறவங்க இப்போ எதாவது முடிவு எடுக்கப் போறீங்கன்னா....//
எட்டி எட்டி பார்ப்பேன்! இப்போ ஃபாலோயராவே ஆயிட்டேன்!
முடிவு எடுத்தாச்சுண்ணே! எடுத்தாச்சு! :)
//ப்ளீஸ் கொஞ்சம் நிதானம்...ஆனா முடிவெடுத்துட்டா அதை யாருக்காகவும் மாத்தாதீங்க//
மாத்த மாட்டேன்-ண்ணே! மாத்த மாட்டேன்! :)
//
ஹி..ஹி....கே.ஆர்.எஸ் !!!!
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஏன் சில நல்லவர்கள் கூட உங்களுக்கு கெட்டவர்களாகத் தெரிவார்கள்...//
:)))
நல்லவர்-ன்னு மனசு சொல்லும் போது, அவர் கெட்டவராத் தெரிய காரணம் என்ன-ண்ணே?
//
மனம் அறிவு இரண்டுக்கும் வேறு வேறு குணங்கள்..சமயங்களில் அறிவைச் சார்ந்து இருப்பதே சிறந்ததுன்னு படுது :()
\நாம் எடுக்கும் சரியான முடிவுகள் நம் வெற்றிக்கான பாதைகள்... நாம் எடுக்கும் தவறான முடிவுகள் என்றோ நம் பெற போகும் வெற்றிகளுக்கான பாடங்கள் எனத் தான் எண்ண வேண்டும்..\\
This is wht I believe too, there is never a wrong decision, Its always our decision! and its our life
Good to read your post after a long time. And I hope your family is doing good :)
Sri
Post a Comment