Tuesday, April 21, 2009

ஒரு ஒப்பாரி

நித்தம் சோறு தேடும் பணி
நியாயம் பேசவும் தடுத்திடும் ஆயிரம் சட்டம்
மனிதம் காயப்பட்டாலும்
மனத்தோரம் மட்டும் அழுதிட முடியும்
கொடுமை எனக் கண்டும்
கோபம் கொள்ள அவகாசமில்லை

அரசியல் வியாபாரக் கட்சிகளின்
அறிக்கை விளம்பரங்களில்
இருக்கும் ஒரு ஓட்டையும் விற்று
இடுப்பு கோவணத்தையும் தொலைக்கப் போகும் அவலம்


விற்றது தமிழ்
திமு கழகம்

தமிழா...அது யாருக்கு வேணும்
அதிமு கழகம்

கொள்கையின்றி
கோட்டைக்கு வழி கேட்கும்
தேமுதி கழகம்

கூட்டணி வியாபாரம்
சூடு பிடிக்குது
மிச்ச அரசியல் கம்பெனிகளுக்கு

சொந்த மண்ணிலே
நொந்த தமிழன் நான்

தீவுத் தமிழனே...
தீராத் துயரச் சகோதரனே..

உனக்கு என்னச் செய்வேன்
உள்ளத்தைக் கிழித்து
உள்ளிருக்கும் உயிரை உருக்கி
உரக்க ஒப்பாரி தான் பாட இயலும்

தீவு சிவக்கிறேதே....
தீரா பழி சரித்திரத்தில் சேர்கிறதே....

ஓட்டு வியாபாரிகளின்
அரசியல் வேட்டுச் சத்தங்களில்
தமிழினத்தின் சோகம்
தெருவினில் நாதியற்று திரியுதே...

3 comments:

ஆயில்யன் said...

//தீவு சிவக்கிறேதே....
தீரா பழி சரித்திரத்தில் சேர்கிறதே//


உண்மை !

மீண்டும் எட்டப்ப சரித்திரம் வரலாற்று ஏட்டில் எழுதப்படலாம் :((

கோபிநாத் said...

;-(

Unknown said...

சரியான வார்த்தைகள் ஆயில்ஸ்..சொல்ல நினைப்பது எவ்வளவோ இருந்தாலும் சொல்லமுடியவில்லை...

நெஞ்சு பொறுக்குதில்லையே..பாரதி சொன்னது தான் நினைவுக்கு வருது

tamil10