படிச்சவன் எல்லாம் பையைத் தூக்கி தோள்ல்ல போட்டுட்டு பைக்கையோ காரையோ கிளப்பிக்கிட்டு வேலைக்குத் தான் போவாங்க...அரசியல்ன்னா அவங்களுக்கு பேப்பர் பேச்சும் இணைய சாட்டும் தான்ன்னு ஒரு பொதுவானக் கருத்து இருக்கு..அதை பெரிதாக மறுக்கமுடியாது..படித்த இளைஞர்களுக்கு இன்னும் நம் நாட்டில் பொருளாதார விடுதலையே ஒரு பெரும் சவாலாகத் தான் உள்ளது..முதலில் பொருளாதார சுயநிறைவு.... பின்னால் தான் அவனால் அடுத்தக் காரியங்களைப் பற்றியே சிந்திக்க முடிகிறது..என்னச் செய்ய அந்த சுயநிறைவு அடையும் முன்னரே பலருக்கு ஆயுளே நிறைந்து போகிறது...
படித்த இளைஞர்கள்..அதுவும் குறிப்பாக பணக்காரத் தகப்பன்களுக்கு பிறக்காத இளைஞர்கள் சுயசிந்தையோடு அரசியலுக்கு வருவது இரு கரம் கொண்டு வரவேற்க வேண்டிய விஷயம்...அதிலும் இன்றைய தேர்தல் களம் இருக்கும் நிலையில் உண்மையிலே பாராட்டப் பட வேண்டிய விஷயம்
வெறும் பாராட்டுக்களோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்படி வரும் வேட்பாளருக்கு அரசியலில் அடித்தளம் அமைத்து தரும் நல்ல காரியமும் நம்மைப் போன்ற குடிமக்களையே சாரும்..அப்படி ஒரு அரிய வாய்ப்பு தென்சென்னை மக்களுக்கு கிடைத்து உள்ளது..வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் கூட்டணி..தெய்வக் கூட்டணி...கரன்சி கூட்டணி...பூத் கேப்சர் கூட்டணி...என ஏகத்தும் ஒவ்வொரு தொகுதியும் கொதித்து கொந்தளிக்கும் போது....தென்சென்னையில் ஐ.ஐ.எம்ல் படித்த ஒரு இளைஞன் தேர்தல் களம் காண்கிறார்...
29 வயது சரத்பாபு...அறிவையும் படிப்பையும் உழைப்பையும் நம்பி களம் காண்கிறார்
பிறப்பு சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில்...அம்மா செய்த இட்லி வியாபார மூலதனத்தில் ஐ.ஐ.எம் படிப்பு...பிட்ஸ் பிலானியில் பொறியியல் படிப்பு...எனப் பல பட்டங்கள் பெற்றவர்..சொந்தமாய் தொழில் செய்து வெற்றி பெற்றவர்.... யூத் ஐகான் விருது பெற்றவர்...
ஒரு எம்.பி.யா நல்லாப் படிச்ச பையன் ஒருத்தன் வரணும்ங்கறது நம்மில் பலர் எத்தனையோ இடங்களில் அங்கலாய்த்து இருக்கிறோம்.. இதோ ஒரு வாய்ப்பு....
கழகங்களுக்கு காவடி தூக்க வாக்களிக்காமல்... ஒரு மாற்றத்துக்கு நாளைய நம் தலைமுறையின் ஏற்றத்துக்கு ஒரு வாக்கு போடலாமே...
கொஞ்சம் யோசிங்க.....இந்தச் செய்தியை அப்படியே நாலு பேருக்கும் சொல்லுங்க...
VOTE FOR A CHANGE...
VOTE FOR SOMEONE FROM YOU...
சரத்பாபுவின் வலைத்தளம் நன்றி நம்ம ரிப்பிட்டேய் கோபி
10 comments:
வாழ்த்துக்கள்
இது போன்ற வேட்பாளர்கள்,
கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டியவையே....!
me the 1st...
நானே போடணும்-ன்னு இருந்தேண்ணா! நேத்து தான் ராகவன் கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன், அவிங்க தொகுதியின் இந்த நம்பிக்கை நட்சத்திரம் பற்றி!
அதுனால என்ன? பரவலா எடுத்துச் சொல்லுவோம்! சங்கத்துலயும் போடுறேன் சரத்பாபு அறிமுகம்!
http://sarathbabu.co.in/in/
//அம்மா செய்த இட்லி வியாபார மூலதனத்தில் ஐ.ஐ.எம் படிப்பு...பிட்ஸ் பிலானியில் பொறியியல் படிப்பு..//
அது மட்டும் இல்லண்ணே! படிச்சி முடிச்சப்பறம் தொடங்கின தொழிலும் உணவு சப்ளை, படித்த கல்லூரிகளின் கேன்டீனுக்கே! இப்போ Food King ன்னு நாட்டின் பல கல்லூரிகளுக்கு ஒட்டு மொத்த தரமான உணவு சப்ளை! அத்தனை மாணவர்களுக்கும் வீட்டுச் சாப்பாடு போல!
அந்தந்த தொகுதியின் ஒவ்வொரு வேட்பாளர் பற்றிய சிறு குறிப்பை, யாராச்சும் தொண்டு நிறுவனங்கள் திரட்டிக் கொடுக்கணும்!
கட்சி சம்பந்தமா இல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கை முன்னேன்றம்/சாதனை விவரங்கள் மட்டும்!
கட்சி கொள்கை(?)க்கு பிரசாரம் அவங்கவங்க பண்ணிப்பாங்க!
ஆனா தனிப்பட்ட விவரம் திரட்டிக் கொடுத்தா, கட்சிக்கு ஓட்டா? வேட்பாளுருக்கு ஓட்டா-ன்னு, முடிவு பண்ண நம் போன்ற மக்களுக்கும், இளைஞர்களுக்கும் ஈசியா இருக்கும்!
அண்ணாச்சி...இந்த இணைப்பையும் பதிவுல போடுங்கள்
http://www.sarathbabu.co.in/
சரத்பாபு வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
pls boycott this fraud electoral system for our tamil eelam peoples... what is idea on this issue in your sarath
//ஆயில்யன் said...
வாழ்த்துக்கள்
இது போன்ற வேட்பாளர்கள்,
கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டியவையே....!//
ஆயில்ஸ் உங்களுக்குத் தெரிஞ்ச நாலு பேருக்கு அப்படியே சேதியை பரப்புங்க
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
me the 1st...
நானே போடணும்-ன்னு இருந்தேண்ணா! நேத்து தான் ராகவன் கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன், அவிங்க தொகுதியின் இந்த நம்பிக்கை நட்சத்திரம் பற்றி!
அதுனால என்ன? பரவலா எடுத்துச் சொல்லுவோம்! சங்கத்துலயும் போடுறேன் சரத்பாபு அறிமுகம்!//
மிக்க நன்றி கே.ஆர்.எஸ் ..சங்கத்தில் இவரை அறிமுகபடுத்துவது நிச்சயம் ஒரு நல்ல விஷயம் கண்டிப்பாக செய்யுங்கள்
//கோபிநாத் said...
அண்ணாச்சி...இந்த இணைப்பையும் பதிவுல போடுங்கள்
http://www.sarathbabu.co.in/
சரத்பாபு வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
போட்டுருவோம்...
// Anonymous said...
pls boycott this fraud electoral system for our tamil eelam peoples... what is idea on this issue in your sarath//
Anony..i have published your comments here.. I wish to convey that i am not campaigning for sarath. I am suggesting that he seems to be a deserving candidate.
Like you i would also like to know his stance on various issues..
Post a Comment