Saturday, August 15, 2009

பதிவோடிகள் - 1

பதிவோடிகள் அறிமுகம்

இவர் தான் சிபி குமார்.... காதலுக்காக நாலஞ்சு வருசமா கோயில் கோயிலா போயிட்டும் வந்துட்டும் இருக்கார் அவர் கையிலே லேப் டாப் வேற..அதுல்ல ஒரு மொபைல் கனெக்ஷ்ன் வேற...என்னன்னு கேக்குறீங்களா....அவர் ஒரு பிரபல பதிவர்...அவர் மாமாவுக்கு ஒரு பொண்ணு...அந்த பொண்ணை இவர் கட்டணும்ன்னா இவர் எப்படியாவது ஒரு அம்பது ஆன்மீக பதிவாது போடணும்ன்னு கண்டிசன் போட்டிருக்கார் அவங்க மாமா....காதலுக்காக ஆன்மீகப் பதிவு போட நம்ம சிபி குமார் போகாத ஊர் இல்ல ஏறாத கோயில் இல்ல...அவர் பதிவுன்னு போட உக்காந்தா பாவம் அவருக்கு வர்றது எல்லாம் கலாய்த்தல்...இல்ல அதை விட கொடுமையா பின் நவீனத்துவம்..அவரும் என்னத் தான் பண்ணுவார்...அவர் மாமா வேற யாருமில்ல... பதிவுலகத்துல்ல ஆன்மீக சிங்கம்ன்னு பேர் எடுத்த நம்ம கே.ஆர்.எஸ் அய்யா தான்...( எப்பூடி)

இப்போ நாம பாக்குற இவர் ஆரணி ஆயில்ஸ்...தமிழ் சினிமால்ல புதுசா யாராவது ஒரு கதாநாயகியோ..தமிழ் பதிவுல்ல புதுசா யாராவது பதிவோ போட வந்திட்டா... அந்த நாயகியோட போட்டோ இவர் ஜிடாக்ல்லயும்...அந்த பதிவரோட பதிவுல்ல இவரோட கமெண்ட் குறைந்த பட்சம் ஒரு நாலு இல்ல அஞ்சாவது இருக்கும்....சொந்தமா அத்தைப் பொண்ணு இல்லாத நம்ம ஆயில்ஸ் மத்த எல்லாப் பொண்ணையும் மாமன் பொண்ணா நினைச்சு உருகுற ஒரு பாசக்கார தமிழ் பையபுள்ள இவருக்கு ஒரு ஆசை...எப்படியாவது ஒரு நாலு இங்கிலீஷ் பதிவு போட்டு ஹாலிவுட் பிகர் ஒண்ணையாவது கரெக்ட் பண்ணி மாயவரம் திருவிழாவுக்கு கூட்டிட்டு வந்து கும்மியடிக்கணும்ன்னு..அதுக்காக பல நாளா பல இங்கிலீஷ் பதிவை இவரும் பல மாதிரி படிச்சு உருப் போட்டு ரெடியாகிட்டு இருக்கார்... லேட்டஸ்ட்டா இவர் படிச்ச பதிவுல்ல இருந்த பாட்டை இப்போவும் இவர் ஆபிஸ்ல்ல உக்காந்து உரக்கப் படிச்சு உரு எத்திகிட்டு இருக்காராம்..அந்த பாட்டு...

TWINKLE TWINKLE LITTLE STAR HOWAI R PAATY VAAT WHAT U ARE
AAP ABOUT THE OLD MONK HIGH
LIKE A DIE MOND IN THE KAI

இவர் பேர் குசும்பர்....உலக ரேஞ்ச் இவர்...இவரைப் பத்தி இவரை விட உங்களுக்குத் தான் அதிகம் தெரியும்..அப்படின்னு இவரே சொல்லுவார்....கொஞ்சமா கொஞ்சமா கலாய்க்க ஆரம்பிச்ச இவர்...மூணு பதிவு போட்ட புது ஆரம்பிச்சு...அப்படியெ உள்ளூர் முக்கு சந்து பெருசு....வட்டம் ...மாவட்டம்...சதுரம்...ஸ்டேட்...சென்ட்ரல்..ஸ்டேட்ஸ்ன்னு கலாய்த்தலே டெவலப் பண்ணி போயிட்டே இருக்கார்...உலக லெவல்ல கலாய்க்கறதுக்கும் குசும்பலுக்கும் ஒரு யுனிவர்சிட்டி ஆரம்பிக்கணும்ங்கறது தான் இவரோட லட்சியம்...அந்த லட்சியத்துக்காக வேர்ல்ட் பேங்க்ல்ல லோன் அப்ளை பண்ணிட்டு அப்படியே துபாயல்ல எதாவது ஷேக் கிட்ட கந்து வட்டிக்கு கடனா டாலர் கிடைக்குமான்னு பாக்க துபாய்க்கு வேலைக்கு போயிருக்கார்....எப்படியும் சீக்கிரம் அமவுண்ட் கிடைச்சுரும் யுனிவர்சிட்டி ஆரம்பிச்சு பெரிய லெவல் வர்றவன் போறவனை எல்லாம் கதற கதற கலாய்ச்சு செட்டில் ஆயிரலாம்ன்னு ஒரு முடிவோட இருக்கார் நம்ம ஆள் குசும்பர்...ஆக்சுவலா துபாய்ல்ல இவர் ஒரு ஷேக் புள்ளய டாவ் அடிச்ச கதையும் அதுக்கு இவருக்கு நம்ம படத்துல்ல டாடியா வர்ற கேரக்டர் பண்ண ஹெல்ப்பை எல்லாம் பின்னாடிப் பாக்கப் போறீங்க..ஆங் இவர் டாடி யாரா....அபி கிட்ட கெஞ்சி பர்மிசன் அவ டாடியைத் தான் நம்ம படத்துக்காக குசும்பரோட குசும்பு டாடியாக்கி இருக்கோம்

நம்ம கதையில்ல இவங்க மூணு பேர் தான் முக்கியமானவங்க... பதிவோடிகள்.....

நம்ம சிபி குமார் அப்பா சிபி பின்நவீனத்துவம் பத்தி பதிவு போடுறது பத்தி படு கேவலமா நம்ம சிபி குமாரை கலாய்க்கறார்...

டேய் சிபி....என்னடா பையன் நீ....குழலி மாதிரி சூடா அரசியலோ...கொத்தனார் மாதிரி குறுக்கா.....

அப்பா

குறுக்கெழுத்துன்னு முழுசா சொல்லுறதுக்குள்ளே தொண்டையில்ல வார்த்தை சிக்கிருச்சு,,,,வெட்டி மாதிரி பல்சுவையாவோ...கவிதா மாதிரி பொது கருத்தோ....லக்கி மாதிரி ஜனரஞ்சகமாவோ...எழுதாம பின்நவீனத்துவம்....என்ன எழவோ.....

அப்பா...அப்படியே நில்லுங்க.....உங்களுக்கு பின்னாடி என்ன இருக்கு....

சுவர்....

அதுக்கும் பின்னாடி.....

அது,,,,வந்து,,,,

திண்ணை...அப்படின்னு சிபி குமார் பாட்டி வாசல்ல இருந்து சொல்ல

அதுக்கும் பின்னாடி.....

சைக்கிள் இருக்குடா எடுபட்ட பையலே... பாட்டி உரலை எடுத்து சிபி குமார் மேல எறிய அதை ஸ்டைலா பிடிச்ச சிபி குமார்...தலை முடியை சிலுப்பி விட்டுட்டு...

அதுக்கும் பின்னாடி.....அப்படின்னு கெத்தா குரல் விடுரார்..

எல்லாரும் மவுனமா நிக்க....

பேக் கிரவுண்ட் அதிர... அது தான் அது தான் பின் நவீனத்துவம்.... சிலருக்கு பின் மட்டும் தெரியும்... தங்கச்சிக்கு அவ சைட் அடிக்கிற பையன் நவீனை மட்டும் தெரியும்....எனக்கு பின்நவீனத்துவம் தெரியும்...உங்களுக்கு எதுவும் தெரியாது...நான் கிளம்புறேன்...என்னைப் பதிவுலகம் அழைக்குது....அவர் ஸ்லோ மோஷனில் வெளியேற மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ பாட்டு ஹய் டெசிபலில் அலறுகிறது....பதிவோடிகள் ஆரம்பிச்சாச்சுப்பா....ஒப்பனிங் எப்பூடி?

16 comments:

அபி அப்பா said...

ஆஹா களை கட்டிடுச்சு தல! இன்ன்னும் 1 மாசத்துக்கு எங்களுக்கு கொண்டாட்டம் தான்!!!!

வெட்டிப்பயல் said...

பதிவு கலக்கல் :)

பகலவன் ப்ரமீளா பத்தி எதுவும் சொல்லலையா? ;)

அபி அப்பா said...

போன வருஷம் விவாஜி கலக்குச்சு! இப்ப பதிவோடி அதை தாண்டி ஹிட் கொடுக்க போவுது!!!!

சந்தனமுல்லை said...

//அந்த நாயகியோட போட்டோ இவர் ஜிடாக்ல்ல//

ஜிடாக்லே மட்டுமா.. ஆர்க்குட்லே கம்யூனிட்டி...ஃபோட்டோ போட்டு போஸ்டு-ன்னெல்லாம் கலக்குவாரு எங்க ஆயில்ஸ் பாஸ்!! :-))

சந்தனமுல்லை said...

//எப்படியாவது ஒரு நாலு இங்கிலீஷ் பதிவு போட்டு ஹாலிவுட் பிகர் ஒண்ணையாவது கரெக்ட் பண்ணி மாயவரம் திருவிழாவுக்கு கூட்டிட்டு வந்து கும்மியடிக்கணும்ன்னு//

அவ்வ்வ்வ்...கும்மி மட்டுமா....ஒரு கேமரா வைச்சிருக்காரே..அதுல ஃபோட்டோ வேற எடுப்பாரே..!!! அதை நினைச்சா இன்னும் டெரரா இருக்கு..பாவம்...அந்த ஹாலிவுட் பிகர்!! :-))

சந்தனமுல்லை said...

//TWINKLE TWINKLE LITTLE STAR HOWAI R PAATY VAAT WHAT U ARE
AAP ABOUT THE OLD MONK HIGH
LIKE A DIE MOND IN THE KAI//

சின்ன பாண்டி...இது அநேகமா பெரிய பாண்டி சொல்லிக்கொடுத்தது தானே..உண்மைய சொல்லிடுங்க!! :-))

துபாய் ராஜா said...

//அப்பா...அப்படியே நில்லுங்க.....உங்களுக்கு பின்னாடி என்ன இருக்கு....

சுவர்....

அதுக்கும் பின்னாடி.....

அது,,,,வந்து,,,,

திண்ணை...அப்படின்னு சிபி குமார் பாட்டி வாசல்ல இருந்து சொல்ல

அதுக்கும் பின்னாடி.....

சைக்கிள் இருக்குடா எடுபட்ட பையலே... பாட்டி உரலை எடுத்து சிபி குமார் மேல எறிய அதை ஸ்டைலா பிடிச்ச சிபி குமார்...தலை முடியை சிலுப்பி விட்டுட்டு...

அதுக்கும் பின்னாடி.....அப்படின்னு கெத்தா குரல் விடுரார்..

எல்லாரும் மவுனமா நிக்க....

பேக் கிரவுண்ட் அதிர... அது தான் அது தான் பின் நவீனத்துவம்.... சிலருக்கு பின் மட்டும் தெரியும்... தங்கச்சிக்கு அவ சைட் அடிக்கிற பையன் நவீனை மட்டும் தெரியும்....எனக்கு பின்நவீனத்துவம் தெரியும்...உங்களுக்கு எதுவும் தெரியாது...நான் கிளம்புறேன்...என்னைப் பதிவுலகம் அழைக்குது....அவர் ஸ்லோ மோஷனில் வெளியேற மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ பாட்டு ஹய் டெசிபலில் அலறுகிறது...//

அதிரடி ஆரம்"பிச்சாச்சு". இனி அதகளம் தான்.

தல! தூள். :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பகலவன் ப்ரமீளா பத்தி எதுவும் சொல்லலையா? ;)//

நியாயமான கேள்வி! நியாயமான பதில் சொல்லுங்க தேவ் அண்ணே! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அவர் மாமா வேற யாருமில்ல... பதிவுலகத்துல்ல ஆன்மீக சிங்கம்ன்னு பேர் எடுத்த நம்ம கே.ஆர்.எஸ் அய்யா தான்...( எப்பூடி)//

அடங்....
இந்த சிபிக்கு நான் மா-மா-வா?
அடக் கொடுமையே!
:(((((((((((

சொல்லப் போனா, அந்தப் பொண்ணே என் மாமா பொண்ணு தான்! முறைப்படி எனக்குத் தான்!

நாப்பது அம்பது ஆன்மீகப் பதிவா? நானூறு "ஆண்"மீகப் பதிவு போட்ட எனக்கே இன்னும் எங்க மாமா பொண்ணு கொடுக்கலை! இந்தச் சிபி குமாருக்கு எல்லாமா கொடுக்கப் போறாரு? போயி பேசாம குசும்பன் கால்-ல வுழச் சொல்லுங்க! :))

குசும்பன் said...

//பதிவுலகத்துல்ல ஆன்மீக சிங்கம்ன்னு பேர் எடுத்த நம்ம கே.ஆர்.எஸ் அய்யா தான்...( எப்பூடி)//

சிபிக்கே வயசு 55 அவரோட மாமா கே ஆர் எஸ் ஆஹா ஆஹா சூப்பர்!
ஸ்ட்ரைட்டா 60ஆம் கல்யாணமா?:)

குசும்பன் said...

//சொந்தமா அத்தைப் பொண்ணு இல்லாத நம்ம ஆயில்ஸ் மத்த எல்லாப் பொண்ணையும் மாமன் பொண்ணா நினைச்சு உருகுற ஒரு பாசக்கார தமிழ் பையபுள்ள //

ஊருக்கு போன ஒரு மாசத்தில் ஜிம் எல்லாம் போய் இப்ப கும்முன்னு வந்திருக்கார், இப்ப பார்த்தாலே அழகில் மயங்கிடுவாங்க பொண்ணுங்க!
(மயங்கி என்பது அந்த மயங்கி இல்ல:))

குசும்பன் said...

//பதிவோடிகள் ஆரம்பிச்சாச்சுப்பா....ஒப்பனிங் எப்பூடி?//

சம்போ சிவ சம்போ சிவ சிவ சிவ சம்போ!


தேவ் ஒரு கையிண்ட் ரிக்வெஸ்ட், அந்த இரும்பு பைப்பால அடிவாங்கும் கேரக்டருக்கு டூப் போடாம நம்ம ஆயில்யன் நடிக்க ரொம்ப ஆசைப்படுகிறார்:) பைப்பும் ஒரிஜினலா இருக்கனும் என்று ரொம்ப ஆசைப்படுறார்! கொஞ்சம் பார்த்து செய்யுங்க சித்தப்பு:) அப்புறம் அந்த கார் டயருக்குள் கால் விடும் கேரட்டரை சிபியே செய்யனுமாம்:) ஹீரோயினை நான் ஆட்டைய போடுவது மாதிரி ஒரு ட்விஸ்ட் இருந்தா நல்லா இருக்கும்:) ஆனா கே.ஆர்.எஸ் பொண்ணு என்று நினைக்கும் பொழுதுதான் எங்க அதுவும் அவுங்க அப்பா மாதிரியே இருந்துடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு:)))

சென்ஷி said...

//கே.ஆர்.எஸ் பொண்ணு என்று நினைக்கும் பொழுதுதான் எங்க அதுவும் அவுங்க அப்பா மாதிரியே இருந்துடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு:)))//

LOL :-))))

ஓவர் குசும்பு மாப்ள உனக்கு ;-)))

கோபிநாத் said...

அட்டகாசம் ;))

பின் நவீனத்துவம் கலக்கல் ;))

நிஜமா நல்லவன் said...

/ சந்தனமுல்லை said...

//அந்த நாயகியோட போட்டோ இவர் ஜிடாக்ல்ல//

ஜிடாக்லே மட்டுமா.. ஆர்க்குட்லே கம்யூனிட்டி...ஃபோட்டோ போட்டு போஸ்டு-ன்னெல்லாம் கலக்குவாரு எங்க ஆயில்ஸ் பாஸ்!! :-))/

Repeattuuu...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@குசும்பா
//கே.ஆர்.எஸ் பொண்ணு என்று நினைக்கும் பொழுதுதான் எங்க அதுவும் அவுங்க அப்பா மாதிரியே இருந்துடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு:)))//

ஹிஹி!
குசும்பா! அது! அந்த பயம் இருக்கட்டும்! :))

பை தி வே அந்தப் பொண்ணு பொறந்தே இருபத்தியஞ்சு நாளு தான் ஆவுது! கைக் கொழந்தை-ப்பா! தேவு போடுற சேவு - இதையெல்லாமா நம்பிக் களத்துல எறங்குவ? :)))

tamil10