Monday, August 17, 2009

பதிவோடிகள் - 2


கலாய் கலாய் கலக்கலாய் கலாய்..... ஹேய் ஹேய்....

சைக்கிளை மிதிச்சுட்டு கையைக் காற்றில் ஆட விட்டுகிட்டே ஸ்டைலா நம்ம குசும்பன் ஒரு பொண்ணு பின்னாடி சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி போயிட்டு இருக்கார்...
அப்போ அங்கே குறுக்கே பாய்ந்து கை போடுகிறார் அபி அப்பா....


ஹே சன்...டியர் குசும்பன்....ஒரு பொண்ணைப் பாத்தா ஹீரோன்னா காதல் பண்ணனும்....அது தான் லாஜிக்.... இப்படி எப்பவும் எல்லாரையும் எங்கேயும் கலாய்க்கக் கூடாது....அது சரியா வராது..

செம சீரியசா அபிஅப்பா அட்வைஸ் பண்ண....சைக்கிளை சைட் ஸ்டாண்ட் போட்டுட்டு இறங்கி வர்றார்...

அலோ அலோ....ஓவர் பிலீங் எல்லாம் வேணாம்....காதல் எல்லாம் பண்ண தேவ் வேற கேரக்டர் புக் பண்ணியிருப்பாப்பல்ல... என்னையும் உங்களையும் ஒரு ரோல் கொடுத்து கூப்பிட்டா அதுவும் உங்களை டாடியாவும் என்னை சன்னாவும் கூப்பிட்டா எதுக்குன்னு தெரியாதா.... ஜஸ்ட் பார் கலாய்... பாக்குற எல்லாரையும் நான் கலாய்ப்பேன்.... கலாய்க்கறதுல்ல அப்போ அப்போ நான் கேப் விட்டா உங்க பிளாஷ் பேக் எல்லாம் எடுத்து எனக்குச் சொல்லி மோட்டிவேசன் பண்ணி என்னைக் கலாய்க்கறதுல்ல என்னை நெக்ஸ்ட் லெவலுக்கு கொண்டு போய் விடணும் அது தான் உங்க ரோலோட வேலை ஓகே வான்னு கேக்குறார் குசும்பர்

அவ்வளவு தான் அப்படியே கையைச் சுழற்றுரார் அபி அப்பா...சூப்பர் ஸ்டார் மாதிரி அவர் கையிலே ஒரு கூலிங் கிளாஸ் வருது....இன்னொரு வாட்டி சுத்துரார் ஒரு கோட் வருது...அதை அப்படியே எடுத்து மாட்டுறார்...கை தட்டுரார்..குசும்பன் சைக்கிள் அபி அப்பா கிட்ட வந்து அதுவா பிரேக் அடிச்சு நிக்குது,,,அதுல்ல தாவி ஏறி உக்காராரு அபி அப்பா...

மீசிக் சேஞ்ச்..அப்படின்னு அபி அப்பா சவுண்ட் விட...ஓரம் போ...ஓரம் போ...அபி அப்பா வண்டி வருது...ஓரம் போ...ஓரம் போ..... கலாய் கலாய் கலக்கலாய் கலாய் கலாய்...ரீமிக்ஸும் ஒலிக்க சைக்கிளில் அதே பொண்ணை அபி அப்பா ரூட் விட்ட படி கலாய்க்க போகிறார்..

ம்ம்ம் இப்போ உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமே நம்ம சிபி குமார், ஆயில்ஸ், அப்புறம் குசும்பன் மூணு நேரம் நெருக்கமான நண்பர்கள்...எப்பவுமே ஒண்ணாவே திரிவாங்க...ஒண்ணாவே இருப்பாய்ங்க....அவங்க தான் பதிவோடிகள்....மத்தவங்க எல்லாம் வெறும் பதிவர்கள்...

டேய் மச்சி... என்னடா இது....தப்பு இல்லையா....

குசும்பன் சிபிகுமாரோட லேப்டாப்பை நொண்டி நொங்கு எடுத்துகிட்டு இருந்தார்....என்னவெல்லாமோ அடிச்சு தேடிகிட்டு இருக்கார்....

டேய் குசும்பா... நண்பய்ன் நம்மளை நம்பி அவன் லேப் டாப்பையே கொடுத்துட்டு போயிருக்கான்...அதை இப்படி நொண்டுற.....வேணாம்டா..

மச்சி புதுசா பிரபுதேவாவைக் கலாய்க்க ஒரு மேட்டர் சிக்கியிருக்கு..அதுக்கு தோதாப் போட ஒரு 9தாரா போட்டோ கிடைக்கும்ன்னு தேடுறேன்..கிடைக்க மாட்டேங்குது...கூகிள் அடிச்சு தேடுனா..அது நேரா சிபிகுமார் ஐபி அட்ரஸ் கொடுத்து அங்கே போய் தேடுன்னு தொரத்தி அனுப்புது நான் என்னப் பண்ணுவேன்... 9தாராகிட்ட கூட இல்லாத பல ஸ்டில் இந்தாளு கிட்ட இருக்குதாம்...

இருந்தாலும் நண்ய்பன் எவ்வளவு கஸ்ட்டப்பட்டு கண்ட கண்ட சைட் எல்லாம் போய் கண்முழிச்சு...சேத்து வச்ச படம்டா அவனுக்கு தெரியாமா எடுக்குறது தப்புடா தெரிஞ்சா அவன் மனசு என்ன பாடு படும்......

எல்லாம் தெரியும்டா நொண்ணைகளா....9தாரா எல்லாம் நமக்கு செட் ஆவாதுன்னு நான் எப்பவோ பிகரை மாத்திட்டேன்டா.....டேய் ஆயில்ஸ் உன் லேப்டாப்ல்ல அஞ்சலி போட்டோ எதாவது மிச்சமிருக்கான்னு பாருடா...

குசும்பா... அப்படின்னு அப்பாவியா ஆயில்ஸ் சிபி சொன்னதைக் கேட்டு குசும்பன் பக்கம் திரும்ப...

ஆமா மச்சி... இப்போக் கொஞ்ச முன்னாலேத் தான் உன் லேப்டாப்பை நானே ரைட் அடிச்சு எல்லா பிகர் படத்தையும் எடுத்து ஊருக்கெல்லாம் விநியோகம் பண்ணேன்....இதை எல்லாம் நினைச்சு பீல் பண்ணாதே...மாப்பூ.....

அடப் பாவிகளா அப்போ நான் தான் அவுட்டா... ஆயில்ஸ் அப்பாவியா முழிக்க...

மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ பாடல் அலறுகிறது...

மாப்ளே.... உங்களுக்கே தெரியும்...ஆன்மீகம் தான் எனக்கு எல்லாம்ன்னு.... எனக்கு தேவை எல்லாம்...நீங்க ஒரு 50 ஆன்மீக பதிவு போடணும்...

அப்புறம் அந்த ஹாலிவுட்ல்ல நான் தத்து எடுத்த பொண்ணை உங்க கூட டேட்டிங் அனுப்ப எனக்கு எந்த ஆட்சபேணையும் இல்ல...

மாமா ஹாரி பாட்டர்ல்ல வருமே அதே பொண்ணு தானே....

ஆமா மாப்பிள்ள...அதே பொண்ணு தான்...

அப்போ அங்கே கேட்டுக்கு வெளியே நிக்குற குசும்பன் இதைக் கேட்டு செம கடுப்பு ஆகி..

ஆயில்ஸ் மச்சி... இப்போ நான் அவுட்டா.... கே.ஆர்.எஸ் பொண்ணு ...கே.ஆர்.எஸ் பொண்ணுன்னு சொன்னானே சிபி குமார்....அது அவர் ஹாலிவுட் தத்துப் பொண்ணுன்னு சொல்லவே இல்லையேடா...ஏன் நாங்க ஆன்மீக பதிவு போட மாட்டோமா..... 50 என்ன....500 ஆன்மீக பதிவு போடுவோம்....கலாய்....கலாய்....ஓம்....கலாய்.....கலாய்...நமஹ....

ஆயில்ஸ் குசும்பனின் இந்த திடீர் அவதாரம் கண்டு ஜெர்க்காகி நிற்க....

மீண்டும் மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ...
மொக்க பதிவோ மொக்க மொக்க பதிவோ பாடல் அலறுகிறது...

11 comments:

ஆயில்யன் said...

//கூகிள் அடிச்சு தேடுனா..அது நேரா சிபிகுமார் ஐபி அட்ரஸ் கொடுத்து அங்கே போய் தேடுன்னு தொரத்தி அனுப்புது நான் என்னப் பண்ணுவேன்... 9தாராகிட்ட கூட இல்லாத பல ஸ்டில் இந்தாளு கிட்ட இருக்குதாம்..//


LOL :))))))))))

சென்ஷி said...

செம்ம கலாய்ச்சல் தேவ் :)))

சத்தியமா அந்த போட்டோவும் மேட்டரும் தாங்கலை..

கேஆரெஸ் பொண்ணு ஹாலிவுட் அம்மிணியா. ரைட்டு. நடத்துங்க.
அடுத்த பார்ட்டுக்காக இப்பவே துண்டு போட்டுக்கிட்டு உக்கார்ந்திருக்கேன் :)))

சென்ஷி said...

போட்டோ சூப்பர். குசும்பனுக்கு திருஷ்டி சுத்தி போட்டா பத்தாது. பெரிய இரும்பு சுத்தியே போடணும் :))

சென்ஷி said...

//9தாராகிட்ட கூட இல்லாத பல ஸ்டில் இந்தாளு கிட்ட இருக்குதாம்.../

நல்லவேளை 9தாராவே இவர்கிட்ட தான் இருக்குதுன்னு சொல்ல்லாம போனீங்களே :)

குசும்பன் said...

பாஸ் அந்த பொண்ணு கிட்டக்க போனது பேலன்ஸ் இல்லாம அந்த பொண்ணு மேல விழுந்து ஒரு கிலோ மீட்டர் இருவரும் உருளுவது* போல் ஒரு கிராப்பிக்ஸ் செய்யமுடியுமா?

*(தனி தனியாக இல்லை)

குசும்பன் said...

//போட்டோவும் மேட்டரும் தாங்கலை..//

தம்பி நீ எதுக்கு சொன்ன எப்படி சொன்னன்னு தெரியுமுடேய்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சென்ஷி said...
நல்லவேளை 9தாராவே இவர்கிட்ட தான் இருக்குதுன்னு சொல்ல்லாம போனீங்களே :)//

சென்ஷியண்ணே
அது நல்ல வேளையா? கெட்ட வேளையா? :))

துபாய் ராஜா said...

அடிபொழி ஆசானே !! :))

படமும் ஒண்ணாங்கிளாசாணும். :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கே.ஆர்.எஸ் பொண்ணுன்னு சொன்னானே சிபி குமார்....அது அவர் ஹாலிவுட் தத்துப் பொண்ணுன்னு சொல்லவே இல்லையேடா//

யெம்மாஆஆஆஆஆ
வாட் சன்?????
:)))

கப்பி | Kappi said...

:)))

கோபிநாத் said...

:)))

tamil10