Wednesday, August 30, 2006

தஞ்சைத் தாராள சாமி.

நம்ம நட்பு கல்யாணத்துக்குப் போயிட்டு அந்தக் கதையைச் சொல்லாம கண்ட கதையைச் சொல்லிட்டு திரியறன்னு மெயில் வழியா வந்த முந்நூத்துச் சொச்சம் வாசகர்கள் கிட்டயும் மாப்பு கேட்டுகிட்டு கல்யாணக் கதைக்கு வர்றேன்...

கல்யாண வீடுன்னா நாலு பேர் வருவாங்க போவாங்க தானே.. அப்படித்தான் அவரும் சிங்கப்பூர்ல்ல இருந்து காரைக்குடி கல்யாணத்துக்கு வந்து இருந்தார். மாப்பிள்ளை நமக்கு டவுசர் காலத்து நட்புன்னா... சிங்கப்பூர் காரருக்கு ஜீன்ஸ் பேண்ட்டைத் தோய்க்காம போட பழகுனக் காலத்து நட்பாம்...

சொந்த ஊர் மன்னார்குடின்னு அறிமுகமாகிட்டார். கொஞ்ச நேரத்துல்ல தோள்ல்ல கையைப் போடற அளவுக்கு பழகி அதுக்கும் கொஞ்ச நேரத்துல்ல
நாலு வீட்டு கல்யாணத்துல்ல வந்து புள்ளகளைச் சைட் அடிக்கிற நாய்க்கு லொள்ளைப் பாரு. லோலாயத்தைப் பாரு...எகத்தாளத்தைப் பாருன்னு வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம், மானம் மாரியாத்தா இப்படி எல்லாத்தையும் விட்டு விலகி ஒரு பெரும் நட்பு வட்டமாயிட்டோம்ன்னாப் பாருங்களேன்..

மனுசனுக்கு சிரிக்க விட்டு பேசி சில்லறையை சிதற விடுறதுன்னா அப்படி ஒரு ஆர்வம்... சிங்கப்பூர் வாழ்க்கை.. முடிஞ்சுப் போன கல்லூரி வாழ்க்கை அப்படி இப்படின்னு பேச்சுப் பட்டம் எட்டுத் திக்கிலும் சுழன்று பறந்தது.. அப்படியே வலைப் பக்கம் பேச்சு சட்டுன்னு திரும்பிச்சு...

டுபுக்கு... ஏஜெண்ட்.. குழலி..அப்படின்னு போனப் பேச்சு கைப்புள்ளன்னு திரும்பிச்சு.. இந்தா வந்துருச்சுப் பாரு அப்படின்னு நினைக்கையிலே டக்குன்னு சாரி சொல்லி நம்ம பீலிங்ஸ்க்கு பீலிங்கஸ் கொடுத்துப்புட்டார். சாரிங்க.. நான் இந்தச் சென்னைக் கச்சேரி எல்லாம் படிச்சதே இல்லிங்க அப்படின்னார்....பட் இந்த வ.வா.சஙக்ம் எல்லாம் நான் படிக்கிறது உண்டுங்க... வெத்தா எழுதுனாலும் வெயிட்டாச் சிரிக்க வச்சுடுறீஙன்னு சொன்னார்.. ( அதைப் பாராட்டுன்னு எடுத்துப் பத்திரமாப் பாக்கெட்டுக்குள்ளே வச்சுகிட்டேன்) ஆமா உங்கக் குரூப்ல்ல பொன்ஸ் அக்கா ன்னு ஒருத்தர் எழுதுனாங்களே அவங்க எங்கக் காணும்ன்னு கேட்டார்... அந்தக் கேள்விப் பரவாயில்லை அடுத்தாப்பல்ல பொன்ஸ் அக்காவுக்கு ஒரு நாப்பது நாப்பதைஞ்சு வயசு இருக்குமான்னுக் கேட்டு கதிகலங்க வச்சுட்டார்...

சரி அப்புறம் அவர் பதிவுகளைப் பத்தியும் நம்மைப் பத்தியும் விசாரிச்சு விவரமெல்லாம் குறிச்சுகிட்டார்.

அப்போ அவர் பாக்கெட்டுல்ல இருந்த செல்போன்ல்ல சந்திரபாபு ட்யூன்ல்ல ஒரு பாட்டுக் கேட்டுச்சு..எழுந்துத் தனியாப் போனவர்., லைட்டானச் சிந்தனை சீட்டியடிக்க முகத்தைத் தடவிக்கிட்டே வந்து உக்காந்தார்.

"ஏனுங்க எதாவது பிரச்சனையா?" நமக்கு அம்புட்டு நேரம் சிரிக்க சிரிக்கப் பேசுன மனுஷன் கரண்ட் கம்பியிலே கால் வச்சப் பூனைக் குட்டி மாதிரி ஆனதுப் பார்த்து சங்கடமாப் போச்சு.

"சென்னையிலே இருந்து என் பிரண்ட் பேசுனான்.. அவனுக்கு ஒரு பிரச்சனை.." கோணல் பக்கஙக்ள் சாரு மாதிரி பேச ஆரம்பித்தார். நான் கதைக் கேக்குற ஆசையிலே கன்னத்துல்ல கையை வச்சுகிட்டு பக்கத்துல்ல அழுத்தமா உக்காந்துகிட்டேன்.

"நீங்க நக்கீரன் படிப்பீங்களா? "
" எப்பவாச்சும்... "
" ஒரு ரெண்டு வாரம் முன்னால நக்கீரன்ல்ல கூட வந்து இருந்துச்சு... அவனுக்கு ஒரு தங்கச்சி.. நல்லாப் படிக்கும்.. பிள்ஸ் டூவில்ல கூட நல்ல மார்க்.. 85% வாங்கியிருந்துச்சு"

"அந்தப் பொண்ணுக்கு என்ன?"

அந்தப் பொண்ணின் தோற்றத்தை கொஞ்ச நேரம் சிலாகித்து வ்ருணித்து விட்டு மேலேத் தொடர்ந்தார். (நண்பன் தங்கச்சியாம்...)

"காலேஜ்க்கு படிக்க மெட்ராஸ் வந்துச்சு... மவுண்ட் ரோட் பக்கம் எதோ ஒரு காலேஜ் சொன்னான் பேர் ஞாபகம் இல்லை.."
"எத்திராஜா.."
"அது இல்ல"
"அப்படின்னா.. ஸ்டெல்லா மாரிஸ்"
" சரியாத் தெரியல்ல... அங்கிட்டுப் படிக்கச் சேந்துச்சு... அவங்க அப்பாவுக்கு அதுல்ல இஷ்ட்டமே இல்லையாமா... பொண்ணு இப்படி ஊர் விட்டு ஊர் போறது எல்லாம்"

"சரி என்னாச்சு?"
" பொண்ணு ஹாஸ்ட்டல்லத் தங்கிப் படிச்சிருக்கு..அப்படியே சாயங்காலமா எதோ ஒரு சென்டர்ல்ல கம்யூட்டர் கோர்ஸ்ல்ல சேந்துருக்கு"
"கம்ப்யூட்டர் கோர்ஸ் நல்லது தானே"
" அட இருப்பா.. அந்த சென்டர்க்கு ஆம்பிளைப் பசஙக்ளும் வருவாங்க இல்ல.. அதுல்லயும் உங்கச் சென்னையிலே இருக்க பணக்காரப் பசங்களைக் கேட்கவே வேணாம்... நேரத்துக்கு ஒரு செல்... புதுசாக் கார்... கையிலே டிஜி... எதையாவது படம் புடிக்கிறேன்னு என்ன என்னமோப் படம் புடிக்கிறது.. இப்படி ஒரு கூட்டம் சீரழிஞ்சு திரியுது இல்ல"

"யோவ் அப்படி கூட்டம் எல்லா ஊர்ல்லயும் தான் இருக்கு.. சென்னை மட்டும் என்னய்யா?"

"சரி சரி.. கேளுய்யா.. அப்படி ஒரு விளங்காதப் பயல்வளோட இந்தப் பொண்ணுக்கும் அது பிரண்டுக்கும் சகவாசம் ஆகிப் போச்சாம். அப்புறம் கார்ல்ல கும்பலாக் கிளம்பி ஒரே கூத்தாம். இந்தப் புள்ளகளைத் தண்ணியடிக்க பழக்கி.. ராத்திரி டிஸ்கோ.. அது இதுன்னு ச்சே என்னச் சொல்லுறது"

"ஆமாய்யா இப்போ இப்படி நிறைய நடக்குது.. மனசுக்கே கஷ்ட்டமாயிருக்கு சாமி"

"ஒரு நாள் இந்தப் புள்ளக ஹாஸ்ட்டல் வார்டன் கிட்ட வசமாச் சிக்கிறுச்சுகளாம். பசங்களும் கூட மாட்டிக்க.. ஒரே ரசாபாசமாப் போயிருச்சாம். வார்டன் ஊருக்கு போனைப் போட நம்ம பிரணட்....அவன் அப்பா எல்லாரும் ராத்திரியே ரயிலேறி சென்னைக்குப் போயிட்டாஙக"

" நான் கூட இதைப் படிச்ச மாதிரி இருக்கு,, அப்புறம் என்ன ஆச்சு?"

" விடியல்குள்ளே புள்ளக ரெண்டும் ஹாஸ்ட்டல் கேட்டைத் தாண்டி தப்பிச்சு ஓடிருச்சுங்களம்"

"பாருடா பொம்பளைப் புள்ளகளுக்கு இருக்க தைரியத்தை..!!!"

"பிரண்டும் அவங்க அப்பாவும்.. பொண்ணைத் தேடாத இடமில்லை... கிட்டத் தட்ட கிறுக்கேப் பிடிச்சுப் போச்சுங்க."

" சே பாவம்ங்க உங்க பிரண்ட்"

" ஆமாங்க. அப்புறம் அப்படி இப்படி போலீஸ் உதவியோட பொண்ணுங்க இருக்க இடத்தைக் கண்டுபிடிச்சுட்டாங்க"

" எங்கே இருந்தாங்க?"

" பெரம்பூர்ல்ல ஒரு பழைய வீட்டுல்ல இருந்துச்சுங்க"
"பிறகு என்னாச்சு?"

"அங்கேப் போய் பொண்ணுங்களைப் பார்த்தா பிரண்டுக்கும் அவங்க அப்பாவுக்கும் பயங்கர அதிர்ச்சி...ரெண்டும் வெள்ளைப் புடவைக் கட்டிகிட்டு நிக்குதுங்க"

" அய்யய்யோ என்னங்க ஆச்சு அந்தப் பசங்க எங்கே?"

"இதையேத் தான் பிரண்டும் அவங்க அப்பாவும் அந்தப் பொண்ணுங்க கிட்டக் கேட்டுருக்காங்க"

"அதுக்கு அந்த ரெண்டு பொண்ணுங்களும்.... "

"சொல்லுங்க. சார்... "

"அதுக்கு அந்த ரெண்டு பொண்ணுங்களும்....நாங்க ரெண்டு பேரும் உஜாலாவுக்கு மாறிட்டோம். இனிமே இப்படித் தான் பளிச்சுன்னு வெள்ளைப் புடவைக் கட்டுவோம்ன்னு சொன்னாங்களாம்.."

கதையை அந்த இடத்தில் நிறுத்தியதும்....

இதே தாங்க... இவ்வளவு நேரம் இந்தக் கதையைப் படிச்சிட்டு இப்போ உங்க முகத்துல்ல இருக்கே அதே கோபம் தான்ங்க எனக்கும் வந்துச்சு...

நெக்ஸ்ட் மீட் பண்ணுவோமா...

22 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

அய்ய்ய்ய்யோஓஓஓஓஓஓஓஒ:))))))

என்னா தேவண்ணா இப்படி போட்டு தாளிச்சு எடுக்கறீங்க ??? :(( ஆனாலும் ரொம்பதான் கும்புங்கோ அவருக்கு !! :))


//அடுத்தாப்பல்ல பொன்ஸ் அக்காவுக்கு ஒரு நாப்பது நாப்பதைஞ்சு வயசு இருக்குமான்னுக் கேட்டு கதிகலங்க வச்சுட்டார்...//

அட இதென்னாது பொன்ஸக்காவுக்கே தெரியாத விசயம் போல :)) இவ்ளோ தெகிரியமா எழுதிபுட்டீங்க தூரத்திலே யாரோ பிளிரிகிட்டு வர்ர சத்தம் கேக்கலே ?? :))

karthik said...

:)

இலவசக்கொத்தனார் said...

//வெத்தா எழுதுனாலும் வெயிட்டாச் சிரிக்க வச்சுடுறீஙன்னு சொன்னார்..//

அது அங்க மட்டுமில்ல. இங்கயையும்தான்னு சொல்ல வேண்டியதுதானே.

சிங்கை ஆளுங்க கிட்ட சாக்கிரதை கண்ணு.

கப்பி பய said...

மாப்பு,

ஏன்..ஏன்..ஏன்???

ஏன் இந்த கொலை வெறி??? :))

இளமதி said...

அந்த நண்பர் ஒழுங்கா ஊருக்கு போய் சேந்தரா?

தேவ் | Dev said...

//என்னா தேவண்ணா இப்படி போட்டு தாளிச்சு எடுக்கறீங்க ??? :((//

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் தத்துவம் தான் பாண்டி:))

//ஆனாலும் ரொம்பதான் கும்புங்கோ அவருக்கு !! :))//

அவரும் பதிவெல்லாம் படிக்கறவரு தான் நீ இப்போச் சொன்னது கட்டாயம் அவர் காதுல்ல விழுந்து இருக்கும்.....:)))

தேவ் | Dev said...

//அட இதென்னாது பொன்ஸக்காவுக்கே தெரியாத விசயம் போல :)) இவ்ளோ தெகிரியமா எழுதிபுட்டீங்க தூரத்திலே யாரோ பிளிரிகிட்டு வர்ர சத்தம் கேக்கலே ?? :))//

பாண்டி மெய்யாலுமே அவர் கேட்டார்ப்பா ஆனா ஒரு சின்னத் திருத்தம் அவர் 35- 40 ஆன்னு கேட்டார் நான் டைப் பண்ண அவசரத்துல்ல 40 - 45ன்னு அடிச்சுட்டேன்.:))))

தேவ் | Dev said...

வாங்க கார்த்திக் (எ) த........தா....சா.....

தேவ் | Dev said...

//அது அங்க மட்டுமில்ல. இங்கயையும்தான்னு சொல்ல வேண்டியதுதானே.
//
கொத்ஸ் சொல்ல விடவே இல்லை அதான் மேட்டர்

//சிங்கை ஆளுங்க கிட்ட சாக்கிரதை கண்ணு. //
சிங்கையை விட நாட்டுல்ல இப்போ சிவகங்கைத் தொல்லைத் தான் தாங்கல்ல சாமி

தேவ் | Dev said...

//மாப்பு,

ஏன்..ஏன்..ஏன்???

ஏன் இந்த கொலை வெறி??? :)) //

கப்பி நீர் ஒருத்தர் தான்வே என் உண்மையான பீலிங்க்ஸைப் புரிஞ்சுப் பின்னூட்டம் போட்டிருக்கீர்.. இதை நான் என்னைக்குமே மறக்கவே மாட்டேன் ... கொலை வெறியேத் தான்... உனக்கும் எனக்கு வலிச்ச மாதிரியே வலிக்குதா :(

தேவ் | Dev said...

//அந்த நண்பர் ஒழுங்கா ஊருக்கு போய் சேந்தரா? //

வாங்க இளமதி, நாங்க அரை மணி நேரம் கதைக் கேட்டதுல்ல குத்துயிரும் குலையுயிருமா ஆயிட்டோம்.. எங்களால அவரை ஒண்ணுமே பண்ண முடியல்ல.. சிங்கைப் போற வழியிலே வேற யாருக்காவது கதைச் சொல்லி கட்டுப் போட்டுகிட்டாரான்னு சரியாத் தெரியல்ல்:)

மின்னுது மின்னல் said...

இதுல நெக்ஸ்டு மீட் வேறயா

ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க..

:::)))

கடைசியா திகிலா இருக்கு..:^

பொன்ஸ்~~Poorna said...

//அந்தப் பொண்ணின் தோற்றத்தை கொஞ்ச நேரம் சிலாகித்து வ்ருணித்து விட்டு மேலேத் தொடர்ந்தார். (நண்பன் தங்கச்சியாம்...)
//
இதப் படிக்கும்போது தேவ் தம்பி, அக்காவுக்கு நல்லா ஒரு ஐம்பது- ஐம்பத்தஞ்சு வயசாயிடுச்சுன்னே சொல்லி வைப்பா.. உனக்குப் புண்யமாப் போகட்டும் :)

ஆனா, இந்த உஜாலாவைப் படிச்சிட்டு எனக்கு சிரிப்பு தாங்கலை.. இதை ஏன் சங்கத்துல போடாம சென்னைக் கச்சேரியில் போட்டுட்டீங்க? உங்க சிங்கை நண்பர் படிக்காமலே போய்டப் போறாரு.. :))

கைப்புள்ள said...

//பட் இந்த வ.வா.சஙக்ம் எல்லாம் நான் படிக்கிறது உண்டுங்க... வெத்தா எழுதுனாலும் வெயிட்டாச் சிரிக்க வச்சுடுறீஙன்னு சொன்னார்.. ( அதைப் பாராட்டுன்னு எடுத்துப் பத்திரமாப் பாக்கெட்டுக்குள்ளே வச்சுகிட்டேன்) ஆமா உங்கக் குரூப்ல்ல பொன்ஸ் அக்கா ன்னு ஒருத்தர் //

யாருப்பா அந்த பச்சை மண்ணு? எங்கிருந்தாலும் நல்லாருய்யா தாராளசாமி!

//"அதுக்கு அந்த ரெண்டு பொண்ணுங்களும்....நாங்க ரெண்டு பேரும் உஜாலாவுக்கு மாறிட்டோம். இனிமே இப்படித் தான் பளிச்சுன்னு வெள்ளைப் புடவைக் கட்டுவோம்ன்னு //

கதையை நீ ஆரம்பிக்க சொள்ள வே.வி. கதையைத் தான் ஆரம்பிக்கிறியோன்னு ஒன்னைய தப்பா நெனச்சிட்டேன்யா. இம்புட்டு ஒரு சூப்பர் கதையைச் சொல்லிருக்கே...உன்னை எப்படி பாராட்டுறதுனே தெரியலைமா.

தேவ் | Dev said...

அக்கா கச்சேரி அட்ரஸ் எல்லாம் அவருக்கு கரெக்ட்டாக் கொடுத்தாச்சு அதுனால இனி அவ்ர் இங்கிட்டும் வந்துருவார் அதுனால கண்டிப்பாப் படிச்சுருப்பார்.

பொன்ஸ் அக்கா சொல்ல மறந்துட்டேனே நம்ம சிங்கை நண்பருக்கு வய்சௌ ஒரு 60 இருக்கும்:)

தேவ் | Dev said...

//யாருப்பா அந்த பச்சை மண்ணு? எங்கிருந்தாலும் நல்லாருய்யா தாராளசாமி! //
தாராள சாமி உன் பதிவில்ல கூடப் பின்னூட்டமெல்லாம் போடுவாராம். கண்டுபிடி பார்ப்போம்

//கதையை நீ ஆரம்பிக்க சொள்ள வே.வி. கதையைத் தான் ஆரம்பிக்கிறியோன்னு ஒன்னைய தப்பா நெனச்சிட்டேன்யா. இம்புட்டு ஒரு சூப்பர் கதையைச் சொல்லிருக்கே...உன்னை எப்படி பாராட்டுறதுனே தெரியலைமா. //
எல்லாம் புகழும் அவருக்கே

Anonymous said...

;)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Anonymous said...

மாப்பு,

ஏன்..ஏன்..ஏன்???

ஏன் இந்த கொலை வெறி??? :))

Anonymous said...

SUPER APPU, WHO IS THAT T.T.SWAMY?

தேவ் | Dev said...

வாங்க அனானி,

யப்பா எவ்வளவு நீளமான புன்னகை...:)

தேவ் | Dev said...

அனானி,

அந்த தஞ்சை தாராள சாமி இந்தப் பதிவுல்ல பின்னூட்டம் போட்டுருக்கார் கொஞ்சம் நல்லாப் பாருங்க:)

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10