வாரக் கடைசியிலே 'சொந்த' அலுவலாகக் கோயம்புத்தூர் போயிருந்தேன்.. நாமளும் கோயம்புத்தூர் மாப்பியாகி ஒண்ணரை வருஷம் ஆச்சுங்கோ... அந்தூரு தண்ணி, சோறு, வாழ்க்கை, வசதி, வயல், வரப்பு, பேச்சு, மூச்சு இப்படியான எல்லாம் இப்போ நமக்கும் ஒரள்வுக்கு அத்துப்படி ஆயிருச்சு.. பரீட்சையின்னு வச்சாப் பிட் கிட் அடிக்காம ஆத்தா நான் பாசாயியிட்டேன்னு சொல்லுற அளவுக்கு இருப்பேன்னு ஒரு நம்பிக்கை..
கோயம்புத்தூர் பத்தி இம்புட்டு தெரிஞ்ச நமக்கு வெகு நாளா ஒரு ஆசைங்கோ..அதாவதுங்க இந்த்க் கோயம்புத்தூர் குசும்பு.. கோயம்புத்தூர் குசும்பு ..அப்படின்னு ஒரு மேட்டர் சொல்லுறாங்களே.. அதைப் பத்தி விவரமா விசாரிச்சு தெரிஞ்சுக்கணும்ன்னுங்கறது தான் அது.
நம்ம 'ஆப்'இஸ்ல்ல எல்லாம் அப்டேட் யுவர்செல்ப் அப்படின்னு 'ஆப்'ரேசல் பண்ணும் போது மேனசர்மார்கள் அடிக்கடி சொல்லுவாங்கல்லோ அந்த எபெக்ட்.. நம்ம கோயம்புத்தூர் குசும்பு சம்பந்தமான அறிவுப் பசி புல் மீல்ஸ்க்கு ஆர்டர் கொடுத்துட்டு உக்காந்துட்டு இருந்த நேரம்.
ஒரு மாசத்துக்கு மிந்தி எடுத்த மதிய ரயிலுக்கான (கோவை எக்ஸ்பிரஸ்) டிக்கெட் ரெண்டு காலையும் பிளாட்பாரத்திலே இருந்து வாரி நம்மளை கோயம்புத்தூர் ஜங்க்ஷ்னுக்கு வெளியே விட..ரெண்டு கண்ணு முழியும் பிதுங்க அடுத்து என்னன்னு யோசிச்சுகிட்டு காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பக்கம் சிந்தனைவாதியா நேத்து மதியம் திரிஞ்சுக்கிட்டு இருந்தேன்... ( கோயம்புத்தூர் குசும்பு மேட்டருக்கு லைட்டா ரெஸ்ட் கொடுத்து படுக்க வச்சிட்டு தான்)..
கே.பி.என்.. கான்டி... பர்வீன்... சிட்டி...யுனிவர்சல்...நேஷனல்.. இப்படி அம்புட்டு டிராவல்ஸ்காரனும் சென்னைக்கு டிக்கெட் இல்லைங்க.. அப்படின்னு ஜெராக்ஸ் போட்டாப்பல்ல பதில் சொல்ல.. ஆகா இந்த நாள். நொந்த நாள் தான் போலிருக்கேன்னு.. லேசா நமக்குள்ளே புலம்பல் சவுண்ட் கேக்க ஆரம்பிச்சது...
நம்ம மாம்ஸ்... அதாங்க நமக்குப் பொண்ணுக் கொடுத்தவர் அங்கிட்டு இங்கிட்டுத் திரிஞ்சு யார் புண்ணியத்துல்லியோ எஸ்.ஆர்.எம் டிராவல்ஸ்ல்ல சென்னைக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொடுத்துட்டார்.. ( ஊரை விட்டு அனுப்புனாப் போதும்ன்னு நினைச்சுருப்பார் அப்படின்னு இந்த இடத்துல்ல நீங்கத் தப்பா நினைக்கக் கூடாது சொல்லிட்டேன்.. இது எல்லாம் வேற வகையான பாசம்ங்கோ)
ராத்திரிக்குத் தான் பஸ் சோ கிடைச்சக் கேப்ல்ல கொங்கு தேசத்திலே சிங் மக்களோட உக்காந்து நம்ம பச்சன் புள்ளயும் , ஷாருக்கானும் நடிச்ச கபி அல்விதா நா கஹெனா படம் பார்த்து கொட்டாவி விட்டு எழும்பினேன்
ராத்திரி ஜி.பி தியேட்டருக்கு எதிரே இருக்க ஆம்னி பஸ் ஸ்டாண்ட்க்கு ஒரு ஒன்பது மணிக்குப் பக்கமா வந்துச் சேர்ந்தேன்.
கலர் கலரா ஆம்னி பஸ் நிக்குறதேப் பாக்குறதே தனி அழகு. சரி மெயின் மேட்டருக்கு வருவோம்.
நான் பயணம் பண்ண வேண்டிய பஸ் கிளம்புமா அப்படின்னு விசாரணைச் செய்ய வேண்டிய ரேஞ்ச்சுக்கு நம்ம பஸ் சிந்துவார் இல்லாமப் பம்மி பவயமா நின்னுகிட்டு இருந்துச்சு.
ஒரு பதினைஞ்சு நிமிஷம் காத்து இருந்து ஈ விரட்டி.. டீ குடிச்சு... அங்கிட்டும் இங்கிட்டும் பார்த்துப் பொழுது போக்கி.. குனிஞ்சு நிமிந்து எந்தரிச்சதுல்ல.. பஸ் பக்கம் ஒரு சின்ன்க் கூட்டம் சேந்துருச்சு.
(அட நம்மளைப் பாக்க இல்ல.. எல்லாரும் சகப் பயணிகள் தான்)
வெள்ளையும் சொள்ளையுமாப் பஸ் ஓட்டப் போறவங்களும்.. பஸ் கிளீனரும் வண்டி பக்கமா வந்து பத்த வச்சு புகையை பஸ்க்கு முன்னாடி சென்னைக்கு அனுப்பிரணும்ங்கற வீரமான வீறாப்புல்ல விறுவிறுன்னு ஊதிக்கிட்டு இருந்தாங்க...
நம்மளை மாதிரி வெளிச்சப் பொட்டியை வெறிச்சுப் பார்த்து வேலை செய்யற ஆளு ஒருத்தர்.. ஒரு காலத்துல்ல கவுண்டர் கிட்ட கன்னாபின்னான்னு திட்டு வாங்குறவருப் போட்ட டவுசர் எல்லாம் போட்டுகிட்டு தம் ஊதி முடிச்ச களைப்பில் இருந்த ஓட்டுனர் பக்கமாப் போய் நின்னுகிட்டார்.
சும்மா ஒரு சிரிப்பை அள்ளித் தெளிச்சார், அப்படியே நம்ம மனசுல்ல சுத்திகிட்டு இருந்த கேள்வியைக் கொக்கி கணங்கா டிரைவர் காதுல்ல போட்டார் பாருங்க..
"ஏன் சார் சென்னை வண்டி எப்போ எடுப்பீங்க...?" இது டிரவுசர் பார்ட்டி
"இந்தா எடுக்க வேண்டியது தான்" இது ஓட்டுனர்.
"எப்போ சென்னைப் போகும்?"
"ரன்னிங் டைம் 10 ஹவர்ஸ் சாமி"
"அது சரிங்க.. எப்போப் போகும்?"
"சொல்லுறேனேங்க.. ரன்னிங்க் டைம் 10 ஹவர்ஸாகும்ன்னு"
டிரவுசர் விட வில்லை. இன்னும் கொஞ்சம் அதிகமாய் சிரிப்பைச் சிதற விட்டபடி கேட்டார்.
சும்மாச் சொல்லுங்க சார்... தோராயாமா எப்போப் போகும்?
ஓட்டுனர் டிரவுசரை ஏற இறங்கப் பார்த்தார். ஒரு தம் மைப் பற்ற வைத்தார். கிட்டத்தட்ட சத்யராஜ் ஸ்டைலில்.
ஆகா நம்ம அறிவுப் பசிக்கு ஆப் பாயில் கிடைக்கப் போகுதுண்ணோன்னு உள்ளுக்குள்ளே ஒரு பட்சி கூவுற சத்தம் கேட்கவும், நான் நகந்து அவங்கப் பக்கமாப் போய் நின்னுக்கிட்டேன்.
"ஆமாங்க நீங்க ட்ரெயின்ல்ல போயிருக்கீங்களா?"
"ஓ எஸ் .. நிறைய தடவை.."
"அப்புறம் இந்த பறக்குற பிளைட்டல்ல?"
"ஓ.எஸ் லாஸ்ட் மந்த் கூட சிங்கப்பூர் டிரிப் போயிருந்தேன்.."
"அப்படிங்களா..சந்தோசம்ங்க...ஆமா இந்த ட்ரெயின்ல்ல ஏறுதக்கு முன்னாடி போய் அந்த இஞ்சின் டிரைவர் கிட்ட இதே மாதிரி எத்தனை மணிக்குப் போகும்ண்ணு எத்தன வாட்டிக் கேட்டிருப்பீங்க... "
"அது.. "ட்ரவுசர் கொஞசமாய் சிரிப்பை சிந்தியது.
சரி.. பிளைட் ஏறும் போது பைலட் கிட்ட போய் இதேக் கேள்வியைக் கேட்டு இருக்கீங்களா?
"இல்ல அது..." டிரவுசர் அசடு வழிய நின்றார்.
ஓட்டுனர் தம் புகையை மேலே ஊதிட்டு டிரவுசரை ஆழமா ஒரு எகத்தாளப் பார்வைப் பார்த்தார்.
அப்புறம் அவர் இப்படி சொல்ல நினைத்து இருக்கலாம்...
" ட்ரெயின் டிரைவர், பிளைட் பைலட் இவங்க கிட்ட எல்லாம் கேட்காம.. என்கிட்டே மட்டும் __________(FILL UP THE BLANKS READERS)
டிரவுசர் பேசாமல் வண்டியில் ஏறினார்.
நான் மெதுவா டிரைவர் பக்கம் மெதுவாய் போய்...
"அண்ணா உங்களுக்கு எந்தூருண்ணா?" அப்படின்னு கேட்டேன்.
"நமக்கு சூலூர்ங்க"
விளங்கிருச்சு சாமி விளங்கிருச்சு...கோயம்புத்தூர் குசும்பு என்னன்னு விளங்கிருச்சுங்கோ...உங்களுக்கும் விளங்கிருச்சாங்க?
37 comments:
//விளங்கிருச்சு சாமி விளங்கிருச்சு...கோயம்புத்தூர் குசும்பு என்னன்னு விளங்கிருச்சுங்கோ...உங்களுக்கும் விளங்கிருச்சாங்க?//
வெளங்கிருச்சு சாமி வெளங்கிருச்சு. "கொங்கு வளநாடு குசும்புடைத்து"ன்னு சும்மாவா சொன்னாங்க? இந்த மாதிரி ப்ராக்டிகல் காமெடி கேக்குறதுலயும் ஒரு தனி ஜாலி தாம்பா.
:)
//ஆளு ஒருத்தர்.. ஒரு காலத்துல்ல கவுண்டர் கிட்ட கன்னாபின்னான்னு திட்டு வாங்குறவருப் போட்ட டவுசர் எல்லாம் போட்டுகிட்டு//
குசும்புக்கு குறைச்சல் இல்லாத ஊருதான் கோவை. அதுசரி அந்த பார்ட்டி நீங்க தானே? சும்மா சொல்லுங்கப்பு யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்
ஒரு பதினைஞ்சு நிமிஷம் காத்து இருந்து ஈ விரட்டி.. டீ குடிச்சு... அங்கிட்டும் இங்கிட்டும் பார்த்துப் பொழுது போக்கி..(konjamaaka sight adichchu) குனிஞ்சு நிமிந்து எந்தரிச்சதுல்ல.. பஸ் பக்கம் ஒரு சின்ன்க் கூட்டம் சேந்துருச்சு.
(அட நம்மளைப் பாக்க இல்ல.. எல்லாரும் சகப் பயணிகள் தான்)/////????
ஒ அது நீங்க தானா சார்...எங்க ஊர்க்கு வந்து எங்களிடமே கிண்டலா...
truly enjoyed.. and this always happens.. nice bit of writing. Thank you..
//ஊரை விட்டு அனுப்புனாப் போதும்ன்னு நினைச்சுருப்பார் அப்படின்னு இந்த இடத்துல்ல நீங்கத் தப்பா நினைக்கக் கூடாது சொல்லிட்டேன்.. இது எல்லாம் வேற வகையான பாசம்ங்கோ)//
தெரியும்ங்க அந்த பாசம் :)
//கலர் கலரா ஆம்னி பஸ் நிக்குறதேப் பாக்குறதே தனி அழகு.//
கலர் கலரா ஆம்னி பஸ் மட்டும் தானா. சரி நம்பிட்டேன், ம் அடுத்து
//"நமக்கு சூலூர்ங்க"//
சூலூர் வேலதாயாமா அவரு பெயரு ...
கொங்கு நாட்டின் பெருமையை உலகறியச் செய்த தேவ் வாழ்கா!
- கொங்கு நாட்டுத் தங்கம்.
தேவண்ணா ரொமப தமாசுதான்:))) ஆமா அந்த டவுசர் போட்ட பார்ட்டி நீங்களா?? சும்மா சொல்லுங்க!!! அரசியல் வாழ்க்கையிலே இதெல்லாம் ஜகஜம்ங்கண்ணா :))))
சூலூர்மா சூலூர்மா
//கொங்கு வளநாடு குசும்புடைத்து"ன்னு சும்மாவா சொன்னாங்க? //
கைப்பு உன் அனுபவம் பேசுதுய்யா.. ஆக உன் தம்பி பக்கத்து வீட்டு தாத்தா கிட்ட பல்பு வாங்குன மாதிரி நீ கோயம்புத்தூர் பார்ட்டி யார் கிட்டவோ நல்லா பல்பு வாங்கியிருக்கன்னு தெரியுது... சட்டுபுட்டுன்னு ஒரு பதிவாப் போடு படிச்சு புளங்காகிதம் அடைவோம்ல்ல
//குசும்புக்கு குறைச்சல் இல்லாத ஊருதான் கோவை. //
ஈரோடு மட்டும் கம்மிங்களா சாமி..
வாங்க டெல்பின், இது உங்க முதல் வரவுன்னு நினைக்கிறேன். உங்க ஆங்கிலப் பதிவுகளை அவ்வப்போதுப் படிச்சிருக்கேன்...
//எங்க ஊர்க்கு வந்து எங்களிடமே கிண்டலா...//
அட என்னங்க அடிக்கடி உங்க ஊருக்கு வர்றேன் போறேன்.. அந்தக் காத்து கொஞ்சமாவது வீசாதா?
//truly enjoyed.. and this always happens.. nice bit of writing. Thank you.. //
Thanks and Pls do keep visiting
//கலர் கலரா ஆம்னி பஸ் மட்டும் தானா. சரி நம்பிட்டேன், ம் அடுத்து//
புலிக்குட்டி கககப்போ
//சூலூர் வேலதாயாமா அவரு பெயரு ... //
இல்லன்னு சொன்னா வேலைக்கு லீவு போட்டு வந்து அவர் பெயரைக் கண்டுபிடிக்கப் போறீயா சொல்லு?
//கொங்கு நாட்டின் பெருமையை உலகறியச் செய்த தேவ் வாழ்கா! //
கொங்கு மண்டலம் தவமாய் தவமிருந்துப் பெற்ற கலாயத்தல் சிங்கமே.. இந்தப் பாராட்டுக்குள்ளே எதுவும் இல்லையே.. நம்பலாமா
அன்னிக்கு நாய் கதைச் சொன்னப்போ இன்டிகேட்டர் போடச் சொன்ன மாதிரி:)))
//ஆமா அந்த டவுசர் போட்ட பார்ட்டி நீங்களா?? சும்மா சொல்லுங்க!!! அரசியல் வாழ்க்கையிலே இதெல்லாம் ஜகஜம்ங்கண்ணா :)))) //
//அதுசரி அந்த பார்ட்டி நீங்க தானே? சும்மா சொல்லுங்கப்பு யார்கிட்டேயும் சொல்லமாட்டேன் //
யப்பா இது பாசம்.. பங்காளி இலைக்கு பாயசம் வர்றல்லன்னாலும் கொஞ்சூண்டு பாய்சனாவது ஊத்தப்பூன்னு பீலிங் பேசுற கூட்டத்து மக்களாச்சே நாம் எல்லாம்.
ஆனா அது நான் இல்ல... மோகன் அன்னிக்கு கோவை வந்தாரான்னு எனக்குத் தெரியாது.. வேணும்ன்னா நீங்க கேளுங்கய்யா
வாங்க கோபிநாத் உங்களுக்கு சூலூர்ங்களா?
தேவ்,
தெரியாம தான் கேட்குறேன்.. கோயம்பத்தூர் குசும்பைத் தெரிந்துகொள்ள இத்தனை பாடா?!! ராத்திரி வேளையில், பஸ் டிரைவர் கிட்ட எல்லாம் பேச்சு கொடுத்துகிட்டு.. (உசுரே அவரு கைல தான் இருக்குன்னு ஏதாச்சும் நெனப்பிருக்கா? !!)
பேசாம நம்ம தளபதிக்கு ஒரு போன் போட்டு வந்து பார்த்துட்டு போகச் சொல்லி இருக்கலாமே.. நாமக்கல், கோவை, சென்னைன்னு எல்லா ஊர் குசும்பையும் ஒண்ணா சேர்த்துக் காட்டி இருப்பாரே!!!
வாங்க பொன்ஸ் ...
நினைச்சேன் இன்னும் யாரும் நம்ம கிட்ட GEOGRAPHY OF THE INCIDENT, AUTO BIOGRAPHY OF THE HAPPENING எல்லாம்கேட்கவில்லையேன்னு அந்தக் குறையை தீத்து வ்ச்சுட்டீங்கப் போங்க..
//தெரியாம தான் கேட்குறேன்.. கோயம்பத்தூர் குசும்பைத் தெரிந்துகொள்ள இத்தனை பாடா?!! //
சிக்கனமா செலவு இல்லாம தெரிஞ்சுக்கணும்ன்னு ஒரு ஆசை.. உங்களை மாதிரி எல்லாம் ஒரு போனைப் போட்டு பேசி அதுக்கு வர்ற எஸ்.டி.டி பில் அது இதுன்னு கட்டி கஷ்ட்டமெல்லாம் பட வேணாம்ன்னு பார்த்தேன் அது தான் இந்தப் பாடு பட வேண்டியதாப் போச்சுங்கோ
//பஸ் டிரைவர் கிட்ட எல்லாம் பேச்சு கொடுத்துகிட்டு.. (உசுரே அவரு கைல தான் இருக்குன்னு ஏதாச்சும் நெனப்பிருக்கா? !!)//
இதைத் தான்ங்க அந்த டிரவுசர் கிட்ட நானும் கேட்க நினைச்சேன்...
//பேசாம நம்ம தளபதிக்கு ஒரு போன் போட்டு வந்து பார்த்துட்டு போகச் சொல்லி இருக்கலாமே.. நாமக்கல், கோவை, சென்னைன்னு எல்லா ஊர் குசும்பையும் ஒண்ணா சேர்த்துக் காட்டி இருப்பாரே!!!//
போலீஸ் போலீஸ் இங்கே ஒருத்தங்க கொலை முயற்சிக்கு ஐடியா கொடுத்துட்டு இருக்காங்க.. வாங்க வந்துப் புடிச்சிட்டுப் போங்க...
யோவ், இந்த போலீஸ் அதுக்கு எல்லாம் வர மாட்டாரு. எங்கனா பின்னூட்டக் கயமைத்தனம் கண்ணுல பட்டா சொல்லு வருவாரு.
என்னாது? அதுக்கும் வரதில்லையா? ஒரு வேளை ரிடயர் ஆகிட்டாரோ என்னமோ. ஸ்டேஷனாண்டை போயி விசாரிச்சுப் பாரு!
//உங்களை மாதிரி எல்லாம் ஒரு போனைப் போட்டு பேசி அதுக்கு வர்ற எஸ்.டி.டி பில் அது இதுன்னு கட்டி கஷ்ட்டமெல்லாம் பட வேணாம்ன்னு பார்த்தேன்//
"AutoBiograpy of உள்குத்து" புக் கடன் கிடைக்குமா?
//"AutoBiograpy of உள்குத்து" புக் கடன் கிடைக்குமா? //
ம்ம்ம் தற்சமயம் ''HISTORY OF உள்குத்து'' புக் தான் இருக்கு அதுவும் நான் கடனாத் தான் வாங்கிப் படிச்சுகிட்டு இருக்கேன். ஒண்ணும் புரிய மாட்டேங்குதுங்க...யார் கிட்ட கேட்டா விவரம் கிடைக்கும்ன்னு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்..
ஆமா பொன்ஸ் நீங்க எப்பவாது கோவை பக்கம் போயிருக்கீங்களா?
தேவு!
பத்திரமா சென்னை போய்ச் சேர்ந்துட்டியா?
டிரைவரு மட்டும் கோவைக்காரர் ஆனாதால் நீ கொஞ்சம் தான் குசும்ப பாத்திருப்ப!
அதே நேரம் அந்த டவுசர் பார்ட்டியும் கோவையா இருந்திருந்தா அங்க நடக்கிற ரகலையே வேற!
அன்புடன்...
சரவணன்.
மச்சான் எல்லாத்தையும் சொன்னே- ஆம்னி பஸ் ஸடாண்ட்ல இரண்டு வாட்டி தம் அடிச்சதை மட்டும் சொல்லாம வீட்டிட்டியே - மாம்ஸ் ப்ளாக்கைப் படிச்சா விவகாரம் ஆயிடப் போவுதுன்னு சொல்லாம விட்டுட்டியா?
//யோவ், இந்த போலீஸ் அதுக்கு எல்லாம் வர மாட்டாரு. எங்கனா பின்னூட்டக் கயமைத்தனம் கண்ணுல பட்டா சொல்லு வருவாரு. //
கொத்ஸ் நான் நிசமான காக்கி சட்டைப் போலீஸைத் தான் கூப்பிட்டேன்... அட நம்புங்க கொத்ஸ்
//என்னாது? அதுக்கும் வரதில்லையா? ஒரு வேளை ரிடயர் ஆகிட்டாரோ என்னமோ. ஸ்டேஷனாண்டை போயி விசாரிச்சுப் பாரு! //
ANOTHER MURDER ATTEMPT NO NO ...இது கோயம்புத்தூர் குசும்பை விட ஜாஸ்திங்க சாமி...
//அதே நேரம் அந்த டவுசர் பார்ட்டியும் கோவையா இருந்திருந்தா அங்க நடக்கிற ரகலையே வேற! //
என்னடாக் கோயம்புத்தூர் பத்தி பதிவு போட்டுருக்கோம் மண்ணின் மைந்தனைக் காணுமேன்னு பார்த்தேன் வாய்யா சரா... ஆமா அந்த டிரவுசர் இடத்துல்ல நீ இருந்திருந்தா என்னய்யா பண்ணியிருப்ப பளிச்சுன்னு சொல்லுப் பார்ப்போம்
அனானி அப்பு ஆட்டத்துக்கு நான் வர்றல்லண்ணா.. ப்ளீஸ் எச்யூஸ் மீ டாங்கஸ்யூ
கொயமுத்தூர் குசும்ப விட உம்ம எழுத்துலயும் பின்னுட்டத்துலயும் இருக்கிற குசுன்பு அதிகமா இருக்குங்கன்ண்ணோவ்..
வாங்க மனதின் ஓசை.. என்ன வேலைப் பளு சாஸ்தியா? அப்படி என்னங்க நான் குசும்பு பண்ணேன்...எதோ அப்பிராணியா ஒரு பதிவுப் போட்டுகிட்டு இருக்கேன்..
//ஆமா அந்த டிரவுசர் இடத்துல்ல நீ இருந்திருந்தா என்னய்யா பண்ணியிருப்ப பளிச்சுன்னு சொல்லுப் பார்ப்போம் //
//" ட்ரெயின் டிரைவர், பிளைட் பைலட் இவங்க கிட்ட எல்லாம் கேட்காம.. என்கிட்டே மட்டும் __________(FILL UP THE BLANKS READERS)
//
யோவ் டைவரு!
கேட்ட ஒடனே ஒனக்கு கோவ...... மட்டும் பொத்துகிட்டு வருதில்ல,
அந்தா ஒருத்தன் ஒன்னுமே தெரியாத மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு! அவன் தான் கேட்கச் சொன்னான்,
எங்க ஏங்கிட்ட கேட்ட மாதிரி அவங்கிட்டயும் கேளு பாப்போம்? தேவு டைவரு அண்ணாத்தே உங்கிட்ட தான் வர்ராரு!
அன்புடன்...
சரவணன்.
ச்ரா நல்லாத் தானேப் பேசிகிட்டு இருந்த ஏன் இப்படி ஒரு நினைப்பு... சிக்கி சிதற விட்டுருவப் போலிருக்கு..
ஓத்துக்குறேன் சாமி நீ கோயம்புத்தூர்காரன் தான்னு
கோவை டூ சென்னை - தலைப்பே தப்பு. நான் என்னமோ கோவையிலிருந்து சென்னை போன அனுபவத்தை எடுத்து வுடுவீங்கன்னு பாத்தா இது என்னமோ... கோவை குசும்பா இல்லே இருக்கு.
அதுக்கு கோவை குசும்பூன்னு போட்டிருக்கலாமே. என்னமோ போங்க. பயண அனுபவத்தெ எதிர்பாத்து ஏமாந்து போயிட்டோம்.
இதுதான் சென்னை குசும்போ?
கோவை டூ சென்னை - தலைப்பே தப்பு. நான் என்னமோ கோவையிலிருந்து சென்னை போன அனுபவத்தை எடுத்து வுடுவீங்கன்னு பாத்தா இது என்னமோ... கோவை குசும்பா இல்லே இருக்கு.
அதுக்கு கோவை குசும்பூன்னு போட்டிருக்கலாமே. என்னமோ போங்க. பயண அனுபவத்தெ எதிர்பாத்து ஏமாந்து போயிட்டோம்.
இதுதான் சென்னை குசும்போ?
//"அண்ணா உங்களுக்கு எந்தூருண்ணா?" அப்படின்னு கேட்டேன்.
"நமக்கு சூலூர்ங்க"//
அது....
//கோவை டூ சென்னை - தலைப்பே தப்பு. //
வாங்க ராசா,
இதுக்குப் பதில் சொல்லுறதுக்கு முன்னாடி.. உங்க ஊரு எது அப்படின்னு சொல்லிட்டீங்கன்னா... நாங்க உஷ்ராப் பதில் சொல்லுவோம்ல்ல
//நான் என்னமோ கோவையிலிருந்து சென்னை போன அனுபவத்தை எடுத்து வுடுவீங்கன்னு பாத்தா இது என்னமோ... கோவை குசும்பா இல்லே இருக்கு. அதுக்கு கோவை குசும்பூன்னு போட்டிருக்கலாமே. என்னமோ போங்க. பயண அனுபவத்தெ எதிர்பாத்து ஏமாந்து போயிட்டோம்.//
இது ஒரு பயணத்தின் ஆரம்பக் கதை... வெகுசீக்கிரம் பயணம் போனக் கதையையும் போட்டுருவோம்
//இதுதான் சென்னை குசும்போ? //
ஆகா சாமி... குசும்பு எல்லாம் பெரிய சமாச்சாரம் அதெல்லாம் நம்ப கோயம்புத்தூர் மக்களுக்கு மட்டுமே சொந்தம்
வாஙக சுதர்சன் கோபால்,
அது.. ஆமாங்க அதே தானுங்க...:)
We tamilians are more senti and in particular the bus and lorry drivers are more sentimental.
You all must have seen the vivek comedy in minnale wherein he says the vehicle running on 98 spare parts will only rely on a lemon for its safe travel.
SO also all these drivers they never say the arrival time i dont know what is so special or forbidden about it.
When the railways running so many services releases a timeatable indicating each train where it starts where it reaches in all its pages, What prevents these fellows in informing the time of arrival.
If they say that telling the arrival time is a bad omen then why these travel agents take reservation bookings for the next trip when they are not sure of tomorrow.
It is needs much more than a sulur kusumbu to teach a lesson to those fellows to tell that in a train time table and in flight schedule the time is written making it not necessary to ask the information from these useless fellows.
வாங்க நாகராஜ் நல்லாத் தான் சொல்லியிருக்கீங்க...கருத்துக்களை அப்படியே பார்சல் போட்டு பஸ் டிரைவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன் ..தொடர்ந்து வாங்க உங்க கருத்துக்களைச் சொல்லுங்க
Post a Comment