இந்த வாரம் நம்மக் கூட ஒண்ணாப் பள்ளிகூடத்துல்லப் படிச்ச பய ஒருத்தனுக்குக் கால்கட்டு போட்டாய்ங்க.. அதைப் பாக்க வரச்சொல்லி நமக்கும் ஒரு அழைப்பு வரவே.. பஸ்..லாரின்னு பலதையும் புடிச்சுப் பலகாரம் திங்கறதுக்கு காரைக்குடிக்குக் கிளம்பிட்டேன்...கல்யாண மேட்டர் தான் பதிவாப் போடலாம்ன்னு நினச்சேன்.. ஆனா அதையும் விட இன்னொரு மேட்டர் ரவுசாக் கிடைக்கவே அதை இங்கே எழுதிருவோம்ன்னு களத்துல்ல குதிச்சுட்டேன்.
காரைக்குடி பக்கம் சுவத்துல்ல எல்லாம் சொம்மா சோக்கா கலைஞானி கையிலே டுப்பாக்கி, கண்ணுல்ல ''கூலர்ஸ் போட்டுகிட்டு ''வாக்'' உடற ஸ்டில்ஸ் எல்லாம் பாத்துட்டு... கண்டிப்பா இந்தப் படம் பாக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டு போஸ்ட்டர்ல்ல போட்டுருக்க தியேட்டர் பெயரை விவரமா மனசுல்ல குறிச்சுகிட்டேன்.. நம்ம கூட வந்த நட்பு பக்கா கமல் வெறியர்... தலீவரு படம் பார்த்தே ஆகணும்ன்னு உசுப்பேத்தி விட்டுட்டார்... அப்புறம் என்ன சனிக்கிழமை சாயங்காலம் காரைக்குடி பாண்டியன் தியேட்டர்ல்ல நிரம்பி வழிஞ்ச கூட்டத்துல்ல நாங்களும் போய் ஐக்கியமாயிட்டோம்.
தியேட்டர் ஒரு 25% சதவீதம் புல்லாகி இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. (மனசுக்குள்ளே சென்னை சத்யம் தியேட்டர்ல்ல டிக்கெட் கிடைக்காமப் போன மக்கள் மேல ஒரு சின்ன அனுதாபம் வந்துச்சு) மக்கா காரைக்குடி B,C,D,E சென்டர்ல்ல என்ன வகையறான்னு தெரிஞ்சவங்கச் சொல்லுங்க.
தியேட்டர் வளாகத்துல்ல வழக்கமான கமலை ஆராதிக்கும் கட் அவுட்கள்.. கொடித் தோரணங்கள்.. .அப்புறம் "சேலஞ்ச் லைன்ஸால்" நிறைக்கப்பட்ட ரசிகர் மன்ற போஸ்ட்டர்ஸ் எல்லாம் காரைக்குடியும் கமல் பட வெளியீட்டைத் திருவிழா ரேஞ்ச்ல்ல தான் பாக்குதுங்கறதைத் தெளிவாப் புரிஞ்சிக்க வச்சுது. ஆனா சனிக்கிழமை மாலைக் காட்சியின் கூட்ட அளவு.. சமீபக்கால உலக நாயகனின் படங்கள் அவ்வளவாய் வியாபார வெற்றி பெறதாதை எடுத்துச் சொல்லுவதைப் போல இருந்தது. தியேட்டரில் புதிதாகச் செய்யப்பட்டிருந்த டி.டி.எஸ் வசதி ஒலியின் தரத்தை மேலும் கூட்டியது.
பெயர் போட்டதிலிருந்து ஒரு தீக்குச்சி கிழிச்சப் போட்டக் கணக்கா நமக்குள்ளே எதிர்பார்ப்பு பத்திக்கிச்சு..
ஒரு ரவுடிக்கிட்ட சவால் உட்டு அவன் வூடு தேடி வந்து கமல் ஊடு கட்ட.. அவரை ரவுண்ட் கட்டும் ரவுடிகளை இவர் ரவுண்ட் கட்ட .. தோடா இது நம்ம ஆரிச்சாமி போலீஸ்டான்னு நினைப்பு பில்டப் ஆயிடுச்சு...
அதுக்குள்ளே... டைட்டில் சாங் ஓட ஆரம்பிக்க.... ஆலிவுட் போலீஸ் கணங்கா கமல் அங்கிட்டும் இங்கிட்டும் டுப்பாக்கி சகிதம் நடக்கறது ஓடுறதுன்னு ஒரு பாட்டுக்குள்ளே அவர் கிரைம் பிராஞ்ச் வாழ்க்கையை அடக்கி நமக்குச் சொல்லி படம் பாக்க நம்மளைத் தயார் படுத்துறாங்க...
இது ஒரு ஸ்டைலிஷ் போலீஸ் பிலிம் அப்படின்னு அடுத்த நினைப்பு நமக்குள்ளே மைல்டா ஒட ஆரம்பிக்க.. நம்மையும் மீறி கவுதமின் முந்தைய பட வாசனை நமக்கு லேசாக அடிக்கிறது...இட்ஸ் ஓ.கேம்மா அப்படின்னு தயார்படுத்திகிட்டு உக்கார்ந்தா திரைக்கதை சும்மா அப்துல் கலாம் செஞ்சு விட்ட ராக்கெட் கணக்கா டாப் ஸ்பீட்ல்ல பறக்க ஆரம்பிக்குது...
ஒரு கொலை.. அதுக்கு கொஞ்சம் சென்டிமென்ட் டச் கொடுக்க.... கொலையானது தனக்கு ரொம்ப வேண்டிய நணபரின் மகள்ன்னு ஒரு சின்ன பில்டப்பு... ( தில் படத்துல்ல வர்ற நாசர் கேரக்டர் மாதிரி லேசான சாயலுடன் இதில் நம்ம செல்லம் பிரகாஷ்ராஜ்)
மனுசன் ஒரு சீன்ல்ல வந்து அழுதாலும் பொளந்துக் கட்டுறார்... நடிகன்யா.
அப்புறம் கொலைக்கான தேடல் தொடங்குகிறது...
அமெரிக்கா யார் பாக்கணும்ன்னு ஆசைப் பட்டாங்களோ தெரியல்ல.. அடுத்த கொலைகள் அமெரிக்காவில்... பிரகாஷ்ராஜ் மற்றும் அவர் மனைவியும் அந்தப் பட்டியலில் அடக்கம்.
இங்கிட்டு மீண்டும் கொஞ்சம் சென்டி தூவல்.. ஆமாங்க கமலுக்கு ஒரு மனைவி இருந்திருக்காங்க.. பாவம் அவங்க கமல் போலீஸா வர்ற விக்ரம், வெற்றி விழா படங்கள்ல்ல வர்ற மனைவி கேரக்டர்ஸ் மாதிரி ரொம்ப வித்தியாசமாச் செத்துப் போறாங்க...
மருத்துவமனை.. நாயகன்... நாயகி.. நாயகன் மருத்துவமனையில் ... கவுதம் முந்தையப் படத்தின் தாக்கம் முடியல்லயோ...
இந்தச் சின்ன விஷ்யங்கள் எதிலும் நம் கவனம் அதிகம் பதிய விடாமல் திரைக்கதைப் படுவேகமாய் போகிறது...
கமல் ஒன் மேன் ஆர்மியாய்.. கூட ஒரு வெள்ளைக்கார எடுப்பு போலீஸின் உதவியோடு பகலில் கண்டப்படி துப்பு துலக்கி அந்த விவரங்களை பப்ளிக் பூத் இல் இருந்து இந்திய மேலதிகாரிகளுக்கு அவ்வப்போது தெரிவிக்கிறார். மாலைகளில் ஜோவைச் சந்திக்கிறார்..
ஜோவின் முன்னாள் கணவனிடம்... " I HATE VIOLENCE AGAINST WOMEN IN ANY FORM" என்று பஞ்ச் வசனங்கள் பேசி.. ஜோவின் மனம் கவர்கிறார்??... ஸ்ப்பாபாபா.. இவ்வளவு நேரம் நான் பார்த்தது தமிழ் படம் தான்ன்னு அப்ப அப்ப கன்பரம் பண்ணிக்கிறதுக்கு ஜோ-கமல் சம்பந்தமான அமெரிக்க தமிழ் உரையாடல் காட்சிகள்.
இடைவேளைக்கு கொஞ்சம் முன்னாடி வரை.. ஆமா படம் இனி எப்படிப் போகும்?? யார் கொலைப் பண்ணியிருப்பா??.. ஏன் பண்ணுறான்?? அப்படின்னு ஒரே யோசனையிலே இருந்த நம்ம யோசனையக் கலைக்கறாப்பல்ல கொலைகாரர்களின் அடையாளங்கள் டக்கென வெளுக்க நமக்கு ஒரு சின்ன ஏமாற்றம்.
WE ARE DOCTORS CUM KILLERS WHAT A GOOD COMBINATION... யம்மாடியோவ் இது டாக்டர்கள் கைத்தட்டி வரவேற்க போற பஞ்ச் டயலாக். நமக்கு அடிவயிறு லைட்டாக் கலங்கியிருச்சு.. நம்ம பயத்துக்குக் காரணம். நமக்குப் பக்கத்து சீட்டுல்ல கூட உக்காந்துப் படம் பாத்ததும் ஒரு டாக்டர்.
இடைவேளைக்கு அப்புறம் பாதியிலே திரி அணைஞ்ச ராக்கெட் ரிட்டன் ஆன மாதிரி கொஞசம் படத்துல்ல வேகம் குறைஞ்சுப் போச்சுன்னு எனக்கு ஒரு பீலிங்... சரி விடு எதாவ்து பண்ணுவாங்கப்பூன்னு பார்த்துகிட்டு இருந்தேன்...
"ஏய்.. இளா...
அவனைப் போடணும்...
உன்னைப் போடணும்... "
தனுஷ் பட டயலாக் மாதிரி இருக்கா.. அப்படி இல்ல இது.. இது... வில்லன் ஆவேசமாப் பேசுற டயலாக்.
கமல் + எடுப்பு வெள்ளைக்கார போலீஸ் சொம்மா வில்லன் குரூப் இருக்க இடத்தைச் செக் பண்ணப் போக... டாக்டர் கில்லர்ஸ் டென்சன் ஆகி எடுப்புப் போலீஸைப் போட்டுத் தள்ளுறாங்க... நம்ம போலீஸ் கத்தி குத்து வாங்கிட்டு காபி வித் அனு டாக் ஷோ மாதிரி வில்லன் கிட்ட சுவத்துல்ல சாஞ்சு உக்காந்துகிட்டு கதைக் கேக்குறார்.
கதையைப் படா இன்ட்ர்ஸ்ட்டா சொல்லுற வில்லன் அப்பப்போ டென்சன் ஆகி
"இளா..எந்திரி.. அவனைப் போடணும்ன்னு" சொல்லிகிட்டே கதையையும் பிலீங்கா சொல்லுறான்.. கமல் அப்பப்போ அவனுங்களை உசுப்பேத்துற மாதிரி அவுட் ஆப சிலபஸ் கேள்வி கேட்டா மட்டும்.. வில்லன் கையிலே கிடைக்குற பாட்டிலை எல்லாம் சரக்கோடு கமல் மேல வீசி எறியறான்... கமல் அதுக்கு அப்படி இப்படி நகந்து தப்பிக்கிறார். ( ஏனோத் தெரியல்ல புலிக்கேசியிலே வடிவேலு கரடி மேல அம்பு விடுற சீன் எல்லாம் ஞாபகம் வந்துருச்சு)
கமலைப் போட்டுத் தள்ள போறதா ஒரு முப்பது தடவைக் கூவிட்டு.. உடைச்ச சரக்குப் பாட்டில் மேட்டர் எல்லாத்தையும் வீணாக்கமல் தீ வச்சுக் கொளுத்திட்டு அவங்க எஸ் ஆயிடுறாங்க.. நம்ம கமல் ஜன்னல் வழியா V சம்மர் சால்ட் அடிச்சு கார்பேஜ் டின்ல்ல விழுந்து ''அசால்ட்'' ஆகாமத் தப்பிக்கிறார்
நம்ம வில்லன் கோஷ்ட்டி அடி உதைப் பட்டு ரத்தக் களறியா வெளியேறி.. அப்படியே ஒரு பிளைட் புடிச்சு இந்தியாவுக்கு வந்துடுறாங்க.. ( விசா எல்லாம் ஒரு மேட்டரே இல்லையோ.. மல்டிப்பில் என்டிரி விசாவா.. எப்படி மக்கா டக்கென்னு டிக்கெட் எல்லாம் உசார் பண்ரீஙக..அவன் அவன் அங்கிட்டு இருந்து இங்கே கிளம்பனும்ன்னா ஆறு மாசம் எல்லாம் பிளான் போடுறான் பயபுள்ளக நினைச்சாக் கொலைப் பண்ணிட்டு பிளைட் ஏறிடுறாயங்களே எப்படி சாமி எப்படி? ம்ம்ம் மறுநாள் திருச்சியில்ல இருந்து சென்னை டிக்கெட்டுக்கு அல்லாடிகிட்டு இருந்தோம் 'நாங்க' அந்த வயித்தெரிச்சல்)
இருக்கட்டும்.. அப்புறமென்ன.. இந்தியாவுக்கு கமல் வர்றாரு.. தொரத்துறார்.. நடுவில்ல அவங்க இவர் கூட இருக்க போலீஸ் காரரைப் போடறாங்க.. போட்டுட்டு நம்ம ஆழ்வார் பேட்டை பிரிட்ஜ்ல்ல அசால்ட்டா RMKV REVERSIBLE சில்க்க்கு ஹோர்டிங் வைக்கிற மாதிரி கட்டி தொங்க விடுறாங்க... அதுல்ல கமலுக்கு மிரட்டல் மெசெஜ் வேற..
கமல் தொடர்ந்து தொரத்துறார்.. ஆமா ஜோ எதுக்குன்னுப் பாக்குறீங்களா.. கரெக்ட் உங்க கெஸ்.. அதுக்குத் தான்.. கடைசியிலே வில்லன் தூக்கிட்டுப் போய்... அஜால் குஜால் பண்ண முயல்.. கமல் வந்து வேட்டையாடி வில்லன்களின் விளையாட்டை முடித்து வைக்கிறார்.
கடசி அரை மணி நேர நிகழ்வுகள் அனைத்தும் கா.கா ரீப்பிட்டே.. கிளைமேக்ஸ்ல் ஒரு சின்னத் திருத்தம் ஜோ இதில் எஸ்கேப்....
படம் முடிஞ்சு வெளியே வரும் போது... ஒரு ரசிகர் சொன்னது..
பாட்டு சூப்பர்..பைட்டு ஓ.கே... ஆனா இந்த் லவ் சீன்ல்ல மட்டும் ஜோதிகா- சூர்யா கெமிஸ்டிரி மிஸ்ஸிங்.. வில்லன் கூட பரவாயில்லப்பா... ஆக இது காக்க காக்க.. ரீப்பீட்டே.
கல்லா நிறைவதிலும் காக்க காக்கப் போல் வசூல் சாதனை படைக்க நம்ம வாழ்த்துக்கள்
22 comments:
Good One
especially
விக்ரம், வெற்றி விழா படங்கள்ல்ல வர்ற மனைவி கேரக்டர்ஸ் மாதிரி ரொம்ப வித்தியாசமாச் செத்துப் போறாங்க...
//"ஏய்.. இளா...
அவனைப் போடணும்...
உன்னைப் போடணும்... "//
வெவசாயத்தை மட்டும் பாருங்கன்னா கேக்கறாரா இந்த மனுசன்? பாரு பேரைக் கெடுத்துட்டு வந்து நிக்கிறாரு.
தேவுச்செல்லம்,அக்குவேறு ஆணிவேறா
அலசிப் பிழிந்து,காயப்போட்டு,அயர்ன்
பண்ணி மடிச்சி வச்சுட்டே போ.
அனிதா ---> நீங்க படம் பார்த்தாச்சா?
சிபி ---> இந்தப் புன்னகைக்கு அர்த்தம் என்னவோ?
//வெவசாயத்தை மட்டும் பாருங்கன்னா கேக்கறாரா இந்த மனுசன்? பாரு பேரைக் கெடுத்துட்டு வந்து நிக்கிறாரு.//
டாக்டர்கள் கதையிலே வெவசாயியை ஏன்ப்ப இழுத்து விடுற?
///'கவுதமி'யின்' முந்தைய பட வாசனை/ என்று முதலில் படித்தேன். என்ன செய்ய தலைவர் பத்தி நினைத்தாலே இலவச இணைப்பா அந்த நினைப்பும் வருதே//
முதல் வரவு நல்வரவு ஆகுக.. ம்ம்ம் முதல் பின்னூட்டத்துல்லயே சிக்ஸ்ர் அடிக்குறீங்களே..
தொடர்ந்து நம்ம கச்சேரிக்கு வாங்க தம்பி
ராஜா , நாம என்னப் பெரிசா சொல்லிட்டோம்... அங்கனே தல அடிச்சுக் கிளப்பறதை ஒரு நடைப் போய் பாத்துட்டு வாய்யா
தேவு கொஞ்சம் ஓவராத்தான் ஓட்டி இருக்கீங்க. படம் அவ்வளவு மோசமில்லை. கட்டாயம் பார்க்கக்கூடிய லெவலில்தான் இருக்கு.
சரி என் பங்குக்கு - தனியா அமெரிக்கா போகும் போது எகானமி கிளாஸ்ஸில் போன கமல், ஜோவுடன் திரும்பி வரும்போது பிஸினஸ் கிளாஸில் வருகிறாரே. அதுதான் காதலிக்க வசதி என்றா? :)
வாங்க கொத்ஸ்.. என்னுடைய எண்ணம் படத்தை ஓட்ட வேண்டும் எனப்து அல்ல...இன்னும் சொல்லணும்ன்னா முதல் பாதி வரை நான் படத்தை ரொம்பவே ரசிச்சுப் பார்த்தேன். இடைவேளைக்குப் பிறகு அளவுக்கு அதிகமான ரீப்பிட் ரீல் சுற்றப் பட்டதால் கொஞ்சம் போரடித்துப் போனது.. MOST OF THE SEQUENCES WERE EASILY PREDICTABLE and THE RESEMBLENCE WAS TOO MUCH
//சரி என் பங்குக்கு - தனியா அமெரிக்கா போகும் போது எகானமி கிளாஸ்ஸில் போன கமல், ஜோவுடன் திரும்பி வரும்போது பிஸினஸ் கிளாஸில் வருகிறாரே. அதுதான் காதலிக்க வசதி என்றா? :) //
ஆகா இந்த பிளைட் மேட்டர் பா.பா எப்படி விட்டார்ன்னு தெரியல்லியே
இந்த சுத்துச் சுத்தி;படத்தைப் பார்க்கவேண்டாமெனக் கூறியதுக்கு நன்றி!
யோகன் பாரிஸ்
என்னை கேட்டால் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்பேன்.
இரண்டாவது பாதியில் படத்தின் டெம்போ சுத்தமாக காலி.
அதே போல ஸ்டேட்ஸ்ல் அவர்கள் ஸ்டூடண்ட்ஸ் விசாவில் போயிருந்தால் எப்போது வேண்டுமானலும் இந்தியா வரலாம் என நினைக்கிறேன்.
மற்றபடி உங்கள் கருத்துடன் என் நண்பர்கள் கருத்தும் ஒத்துபோகிறது. கமல் எப்படி கோட்டைவிட்டார் என்று தெரியவில்லை.
//ஏனோத் தெரியல்ல புலிக்கேசியிலே வடிவேலு கரடி மேல அம்பு விடுற சீன் எல்லாம் ஞாபகம் வந்துருச்சு//
கலக்கலோ கலக்கல் :))
//டாக்டர்கள் கதையிலே வெவசாயியை //
அவரையும் இழுத்தாச்சா? இது அவருக்குத் தெரியுமா?
//இந்த சுத்துச் சுத்தி;படத்தைப் பார்க்கவேண்டாமெனக் கூறியதுக்கு நன்றி!
யோகன் பாரிஸ் //
:)
கடைசி பக்கம் உங்கள் முதல் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//கலக்கலோ கலக்கல் :)) //
இளமதி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களூக்கும் மிக்க நன்றி
//அவரையும் இழுத்தாச்சா? இது அவருக்குத் தெரியுமா? //
:)
ஓகே.. படம் எப்படியும் பார்க்கணும் எனக்கு.. கௌதம், ஜோதிகா.. பாட்டு வேற நல்லா இருக்கு..
ஆமா, பாட்டுக்கள் பற்றி ஒண்ணும் சொல்லவில்லை.. ??
Machi ..vimarsanam ellam ..kaal mela kaal pottukittu nalla ..sathyaraj kanakaa than pannuraa ..naan ennum padam pakkalai ..parthuttu vanthu onnakku mail adikirean
//ஆமா, பாட்டுக்கள் பற்றி ஒண்ணும் சொல்லவில்லை.. ?? //
பொன்ஸ் பாடல்கள் அனைத்தும் அருமை. கௌதம் - ஹாரிஸ் - தாமரை மீண்டும் ஒரு முறை தாங்கள் ஒரு வெற்றி கூட்டணி என நிருப்பித்து உள்ளனர்.
ஆமாங்க நீங்க கேட்டதுக்கு அப்புறம் யோசிக்கும் போது தான் தெரியுது சி.டி.யிலே வரும் உயிரிலே அப்படின்னு ஒரு பாட்டு அது படத்துல்ல வரவே காணும்... காரைக்குடியிலே கட் பண்ணிட்டாங்களா இல்லை மொத்தமாவே தூக்கிட்டாங்களான்னு தெரியல்ல
//Machi ..vimarsanam ellam ..kaal mela kaal pottukittu nalla ..sathyaraj kanakaa than pannuraa ..naan ennum padam pakkalai ..parthuttu vanthu onnakku mail adikirean //
நன்றி நண்பா.. எல்லாம் உன் கிட்டக் கத்துக்கிட்ட பாடம் தான்ய்யா...
Post a Comment