Thursday, August 24, 2006

தேன்கூடுப் போட்டி முடிவுகள்

வணக்கம்ங்கோ.. கோயம்புத்தூர் டு சென்னை மேட்டரே இன்னும் பின்னூட்டப் புல்லா ஓடிகிட்டு இருக்குங்க... அது நமக்கு சந்தோசம்ங்க... நம்ம நட்பு இளா சுஜாதாப் பெயரச் சொல்லி ஒரு புயலைக் கிளப்பிகிட்டு இருக்கார் பாருங்க... அதுல்ல நம்ம கருத்து என்ன அப்படின்னா... பதிவுன்னு ஒண்ணு போட்டா அதுக்குப் பின்னூட்டம்ன்னு ஒண்ணை நாமளாவது போடணும்.. இது என் தலைவர் பின்னூட்டப் புயலார் எனக்குச் சொல்லிக் கொடுத்தப் பாடம்..

ஏன்னா சீரியலும் எடுத்தாச்சு.. படமும் காட்டியாச்சு அடுத்து என்ன அப்படின்னு யோசிக்கையிலே படக்குன்னு தோணுச்சுப் பாருங்க ஒரு ஐடியா..

சிறு வயசுல்ல இருந்தே நமக்கு இந்த தேர்தல்ன்னா பிரியம் ஜாஸ்தி.. ஒண்ணாம் கிளாஸ் ஆரம்பிச்சு பன்னிரெண்டாம் கிளாஸ் வரைக்கும் பள்ளிக்கொடத்துல்ல எந்தப் பதவிக்குத் தேர்தல் வச்சாலும் நமக்குக் கொண்டாட்டம் தான் போங்க...

தேர்தல் அறிவிச்ச ஓடனே.. நம்ம மூளையிலே புதுசாச் செயதி சேனல் ஒண்ணு ஓபன் ஆகும் பாருங்க.. நம்மகிட்ட ஒரு நாலு பேர் சமபளம் வாங்கமா வேலைப் பாக்க வருவான். அது போதும் என்னியே நானே ஒரு பிரணாய் ராயா நினைச்சு அலம்பல் பண்றதுக்கு...

ஆரம்பிச்சுடானுங்கடா.. இவனுங்க கச்சேரியைன்னு அன்னிக்கே நமக்கு அவார்ட் கொடுத்தவங்க ஏராளம்ன்னாப் பார்த்துக்கங்கோ..

அதாவது யார் ஜெயிப்பான்னு பல வகையிலே அடிச்சுத் துவைச்சி அலசி ஆராஞ்சு அவிஞ்சுக் கணிப்புச் சொல்லுவோம் பாருங்க.. அதுவும் கொத்து மாங்காய்ல்ல கல் விட்டு ஒரு மாங்காக் கீழே விழுந்து தொலைச்சக் கதையா ஓர்க் அவுட் ஆகும் பாருங்க...

அப்புறம் என்ன.. காலரைத் தூக்கி தோள்ல்ல போட்டுகிட்டு வருங்கால முதல்வர் பாடுவாரே ஒரு பாட்டு ... அதாம்ய்யா..

வச்சக் குறி தப்பாது...
இந்தப் புலி தோக்காதுன்னு...

அந்தப் பாட்டைப் பாடிக்கிட்டு திரிவோம் ஒரு குருப்பா...

யாருக்கு எவ்வளவு ஓட்டு விழும்? ஏன் விழும்? எப்படி விழும்?
எல்லாம் விசயத்தையும் அக்கு வேறு ஆணி வேறு... ஐப்பசி வேறுன்னு தோண்டி துருவி விவரமா மணல்ல வட்டம் போட்டு அதையே "பை சார்ட்டா" ஆறாங்கிளாஸ் கால் பரீட்சைக்கு முன்னாடியே பிரசன்டேஷன் பண்ணவங்க நாங்க.

அப்படி எல்லாம் ஒரு சிறந்த கருத்துக் கணிப்பு மேதாவியா நாங்களும் ஒரு காலத்துல்ல வாழ்ந்துகிட்டு இருந்தோம்.. அதையெல்லாம் நினைச்சுப் பாக்குறப்போ இப்போ வெறும் பெருமூச்சு தான் மிஞ்சுது..

இந்த NDTV, CNN IBN சேனல்ல எல்லாம் ஒரு முன்னோட்டமாக் காட்டுவாங்களே
அதிலும் குறிப்பா பர்க்கா தத் வர்ற ஒரு முன்னோட்டம் நமக்கு ரொம்ப பிடிக்கும்.. அதாவது அந்தம்மா செய்தி சேகரிப்புக்காக ஒவ்வொரு வாட்டியும் எவ்வளவு மெனக்கெட்டு இருக்காங்கங்கறதை அந்த தொகுப்புல்ல காட்டுவாங்க...சுனாமி, ஆப்கானிஸ்தான் போர், கார்கில் போர்முனை, மும்பை குண்டு வெடிப்பு இப்படி பல விஷ்யங்களைப் பத்தி அந்த அம்மாவோட வீடியோ கிளிப்பீங்ஸ் காட்டுவாங்க.. ரொம்ப நல்லாயிருக்கும் இதை ஒவ்வோரு வாட்டிப் பாக்கும் போது எனக்குள்ளே ஒரு ராஜ்தீப் சர் தேசாய் இருக்கானோன்னு எனக்கே எம் மேல ஒரு டவுட் வரும்ன்னா பாருங்க....

''மச்சி பிரபுக்கும் குஸ்புக்கும் கல்யாணமாம் தெரியுமா? அவங்க அப்பா சிவாஜிக்கு செமக் கோபமாம்.. ''

''கொய்யாலே நம்ம சாந்தி டீச்சர் லவ் மேரேஜ் பண்ணப் போறாங்களாம்ப்பூ... "

"மேட்டர் தெரியுமா.. நம்ம காலனி பொண்ணு அம்சவேணி பக்கத்துக் காலனி பையனோட ஓடிப் போயிருச்சாம்... "

இப்படி நான் ஒளிப்பரப்பிய .. சே நான்ன்னு தனியாச் சொல்லக் கூடாது.. (IT WAS A TEAM AND IT WAS TEAM WORK) மயிர் கூச்செறிய வைக்கும் பிளாஷ் நியூஸ் ஏராளம்

தேர்தல் செய்திகள்ன்னு பார்த்தீங்கன்னா...

எங்க பள்ளிக்கொடத்துல்ல நடந்த அம்புட்டு தேர்தல்லயும் நான் ஓட்டுப் போட்டேனோ இல்லயோ இந்தச் செய்தி சேகரிப்பு வேலையைத் தவறாமப் பண்ணிடுவோம்ல்ல..

மக்கா இன்றையத் த்லைப்புச் செய்தி..

''நம்ம கிளாஸ் தேர்தலில் தலைவர் போட்டிக்கு நிக்கும் சுரேஷ் வர்ற சனிக்கிழமை அவங்க வீட்டுல்ல நமக்கெல்லாம் ராத்திரி எட்டு மணிக்கு மேல நல்ல படம் காட்டப் போறான் மறக்காம வந்துறுங்க....''

"மக்கா.. அவன் படம் தானே காட்டுறான் நான் போஸ்ட்டரே தாரேன்..." எதிரணி ஆவேசம்

வெல்லப் போவது யாரு? இப்படி ஆரம்பிச்சு..

சனிக்கிழம இரவு வீடியோ காட்சி கரண்ட் கட்டினால் பாதிக்கப்பட்டது முதல்... போஸ்ட்டர் வினியோகத்திற்கு முன் போஸ்ட்டர்கள் களவாடப் பட்டது வரை விவரமாக் ஸ்கூப் நியூஸ் எல்லாம் ஒளிபரப்பிய பெருமை நமக்கு எட்டாம் கிளாஸ்ல்லயே கிடைச்சாச்சு.

இவ்வளவு நாள் நமக்குள்ளே தூங்கிட்டு இருந்த அந்த INVVESTIGATIVE JOURNALIST இப்போ எழும்பி உக்காந்துட்டு எதாவது வேலைக் கொடுன்னு நம்மை கெஞ்சலாப் பாக்குறான்.. அதான் முடிவு பண்ணிட்டேன் அடுத்த தேன்கூடு தேர்தல் போட்டி முடிவுகளைப் பத்தி விரிவா அலசி ஒரு தொடர் செய்தி சேவை செய்யலாம்ன்னு

செய்தி சேகரிக்க அனுபவமுள்ள அனுபவ்மில்லாதவர்கள் இந்தப் பணியில் உதவ் விருப்பமுள்ளவர்கள் என்னையோ அல்லது என் நண்பன் சராவையோ அணுகலாம். எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு கட்டாயம் உண்டு.

விரைவில் சந்திப்போம்

16 comments:

Anitha Pavankumar said...

all the best Dev...

தேவ் | Dev said...

Thanks Anitha

sumathi.s said...

enn appu ethai vida azhga pesa yaaraala mudiyumungoo.machi appadiyee ponga.

sumathi.s said...

enn appu ethai vida azhga pesa yaaraala mudiyumungoo.machi appadiyee ponga.

ILA(a)இளா said...

சேர ஆசைதான் ஆனா தமிழ்மணம், தேந்கூடெல்லாம் என் தோட்டம் பக்கமே வரது இல்லையே. கேள்வி கேக்காம் சேர்த்துக்கனும் , அப்படின்னா எஸ் கியூச் மி, மே ஐ கமின்?

தேவ் | Dev said...

சுமதி சுமதி நீங்க என்னச் சொல்ல வர்றீங்க?

ரெண்டு தடவைச் சொல்லியிருக்கீங்க.. நான் நாலு தடவை படிச்சேன் ஆனாலும் ஒண்ணும் விளஙகல்லங்க

தேவ் | Dev said...

வாங்க இளா, நாங்க ரொம்ப ஸ்ட்டீரிக்ட் இந்த தமிழ் வலை உலகிலே அப்படி ஒரு ஸ்ட்ரீக்டை நீங்கப் பாக்கவே முடியாது... எங்களுக்கு எல்லாம் நேர்மை 'நாணயம்" ரொம்ப முக்கியம்... புரியுதாங்கோ

கைப்புள்ள said...

யப்பா! நான் கூட இந்த இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸம் நல்லா பண்ணுவேன்பா...என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோ. ஆனா இந்த வாட்டி நாய்க்கு பிஸ்கெட் நான் தான் போடுவேன்...நீ உள்ளே போய் தேடனும். ஓகே?

உங்கள் நண்பன் said...

//ரெண்டு தடவைச் சொல்லியிருக்கீங்க.. நான் நாலு தடவை படிச்சேன் ஆனாலும் ஒண்ணும் விளஙகல்லங்க //

நீ நாலு தடவை தானா, குட்டி பதினாறு அடி பாஞ்சும் கண்டுபுடிக்கமுடியலை!

:))))))

அன்புடன்...
சரவணன்.

Sandra White said...

phentermine - health insurance - debt consolidation - home equity loans Nice comment.. I ll come back for sure :]

Sandra White said...

phentermine - health insurance - debt consolidation - home equity loans Nice comment.. I ll come back for sure :]

Sandra White said...

phentermine - health insurance - debt consolidation - home equity loans Nice comment.. I ll come back for sure :]

Sandra White said...

phentermine - health insurance - debt consolidation - home equity loans Nice comment.. I ll come back for sure :]

தேவ் | Dev said...

//யப்பா! நான் கூட இந்த இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸம் நல்லா பண்ணுவேன்பா...என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோ. ஆனா இந்த வாட்டி நாய்க்கு பிஸ்கெட் நான் தான் போடுவேன்...நீ உள்ளே போய் தேடனும். ஓகே?//

தல நீ மொதல்ல தலைக்கு நல்லா ஷாம்புப் போட்டு குளிச்சுட்டு வா அப்புறம் உன்னிய ஆட்டத்துக்குச் சேத்துக்கலாமா வேணாமான்னு சொல்லுறேன்.

தேவ் | Dev said...

//நீ நாலு தடவை தானா, குட்டி பதினாறு அடி பாஞ்சும் கண்டுபுடிக்கமுடியலை!//

SHAME SHAME PUPPY SHAME !!!!

உங்கள் நண்பன் said...

கைப்புள்ள said...
//யப்பா! நான் கூட இந்த இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸம் நல்லா பண்ணுவேன்பா...//

ஹலோ.. கைப்பூ அதை நாங்க சொல்லனும்!

//ஆனா இந்த வாட்டி நாய்க்கு பிஸ்கெட் நான் தான் போடுவேன்...நீ உள்ளே போய் தேடனும். ஓகே? //

என்னாயா ஆளு நீயி? இன்னும் நாய்க்கு பிஸ்கோத்து போடுறேன்,
கழுதைக்கு காகிதம் போடுறேன்னு!உன்னையல்லாம் "ஒட்டகத்துல" கட்டிவச்சு அடிக்கனுமையா!
தல சொன்னத கேட்டைல? இது பெரிய லெவல் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸம்,வேனுமினா டைனோசருக்கு புல்லுப்போடு சரியா?


ஆமா தேவு! எனக்கு வந்த 500+ அப்ளிகேசனை உனக்கு புறாவுல கொரியர் அனுப்பி இருந்தேனே, கெடச்சதா?

அன்புடன்...
சரவணன்.

tamil10