Friday, September 01, 2006

மோகன்ராஜ்க்குப் பொண்ணுப் பார்த்தாச்சு

டிஸ்கி: 'இவர்' 'அவர்' இல்ல எனபதைத் தெளிவா முதல்லயே சொல்லிடுறேன்

நமக்கு ரொம்ப நெருக்கமானப் பங்காளிப் பேரு மோகன் ராஜ்ங்க... இன்னிக்குக் காலையிலே ரொம்ப நாள் கழிச்சுப் பயகிட்ட இருந்து ஒரு மெயில் வந்துருந்துச்சு...

மாப்பூ..எனக்கு கல்யாணம்டா.. பொண்ணுப் பாத்துட்டாங்கடா.. தேதி நவம்பர்ல்ல இருக்கும்ன்னு ரத்தினச் சுருக்கமா நாலே வரி

அடக் கொக்கமக்கான்னு சீட்ல்ல இருந்து எகிறி குதிச்சே புட்டேன் நான்...
இவனுக்கெல்லாம் கல்யாணம் நடக்குதுன்னா அது எல்லாம் புளுட்டோ பண்ற சதின்னு நினைச்சுகிட்டேன்..

இருக்காதாப் பின்னே..

பத்து வயசில்ல இருந்தே நமக்கு மோகன் பழக்கம்ங்க.. பய நல்லவன்.. ரொம்ப நல்லவன்.. அறிவுல்ல எல்லாம் அசகாய சூரன்... விவரமானப் பய தான்.
அவனுக்கு ஒரே ஒரு விசயம் தான் விவகாரம். அதுப் பொண்ணுங்க விஷயம்... தப்பா நினைச்சுராதீங்க, பய அப்படி எல்லாம் இல்லை...
ஒரு பொண்ணுன்னா எப்படி இருக்கணும்ன்னு நம்ம புரட்சித் தலைவருக்கும் சூப்பர்ஸ்டாருக்கும் அItalicப்புறம் அதிகம் பஞ்ச் டயலாக் பேசுன பைய இவனாத் தான் இருப்பான்...

எங்களுக்கெல்லாம் சைக்கிள் ஓட்ட பழகுறதுக்கு முன்னாலே சைட் அடிக்கப் பழக்குனவன் அவன்.

பத்து பைசா ஆசை சாக்லேட்டை ''ஆர்டினாக்கி" வச்சு அஞ்சாம் கிளாஸ் படிக்கும் போதே அம்பிகான்னு அம்சமான ஒரு கேரளாப் பொண்ணைச் செட் பண்ண ட்ரைப் பண்ணி அந்தப் புள்ள ஆர்டினுக்கு அர்த்தம் புரியாம என் சாக்லேட்டை இந்தப் பைய நசுக்கிபுட்டான்னு மேரி மிஸ் கிட்ட போட்டுக் கொடுக்க பய பரிதாபமா முழிச்சான் பார்க்கணும்.

ஆறாம் கிளாஸ்ல்ல அம்பிகா ஆசை அத்துகிட்டுப் போய் சோனாலிக்கான்னு ஒரு சேட்டுபொண்ணு மேல கண்டப் படி காதலாகி அதன் பயனா, முக்குத் தெரு பங்கஜம் மாமி கிட்டே போய் ஏக்.. தோ... தீன்... அப்படின்னு முக்கி அலறனதுல்ல மையிலாப்பூர் பகுதியிலே கணிசமானப் பேர் அவன் தயவுல்ல இலவசமாவே ஹிந்தி கத்துகிட்டாங்க. அப்போ அண்ணே நம்ம கிட்ட வந்து கயாமத் சே கயாமத் தக்., தில் தோ மாந்தா நஹின் அப்படின்னு அள்ளி விடுறது எல்லாம் ரொம்ப நாள வரைக்கும் எதோ சேட்டு வீட்டு பலகாரம்ன்னு தான் நினைச்சிகிட்டு இருந்தோம்.

சோனாலிக்கா மேரி ஜான்... அப்படின்னு அடிக்கடி புலம்புவான்... இதைக் கேட்டுபுட்டு நம்ம சங்கத்து ( அது வ.வி.ச) பய ஒருத்தன் சோனாலிக்கா கிறிஸ்டீன்னாடா அவங்க அப்பா பேர் ஜான்ங்கற அப்படின்னு அப்பாவியாக் கேட்டுட்டான்...

சோனாலிக்கா சொரம் பயலுக்கு எப்போத் தெளிஞ்சதோ சரியா ஞாபகம் இல்லை பத்தாம் கிளாஸ் படிக்கும் போது அவனை விட நாலு வயசு மூத்த ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் பொண்ணு மேலப் பித்தாயிட்டான். அவங்க அண்ணன் ஜீன்ஸ் பேண்டைத் திருடிப் போட்டுகிட்டு அந்தப் பொண்ணு முன்னாடி பிலிம் காட்டுறது.... அவங்க அண்ணன் படிக்கிற பெயர் தெரியாத நாவல் எலலாம் எடுத்து அலங்காரமா உக்காந்து சீன் போடுறதுன்னு பய பம்ப்ரமாச் சுத்துனான் அந்தப் பொண்ணு பார்வைக்கு..

வந்தது வினை... அந்தப் பொண்ணுகிட்ட தானும் காலேஜ்ன்னு ரீல் விட்டு வச்சிருக்கான்..( பய பாக்க உயரமா வேற இருப்பான்.. அந்தப் பொண்ணு அதை நம்பியிருக்கு) ஒரு நாள்... என்ன கொஞ்சம் இந்தக் கடையிலே ட்ராப் பண்றீயான்னு கேக்க.. புள்ளையும் ஓ,கே சொல்ல.. அந்தப் பொண்ணு ஊருக்கு போயிருந்த அவங்க பைக் சாவியைக் கொடுக்க நம்மாளு பைக் பில்லியனில் அந்தப் பொண்ணை வச்சுகிட்டு எங்க முன்னாடி கெத்தா ரவுண்ட் விட்டுட்டு போனான்.. பாவம் போற வழியிலே மாசக் கடைசியிலே கொத்தாக் கேஸ் புடிச்சிட்டு இருந்த மாம்ஸ் கிட்ட மாட்டிகிட்டார்ன்... மாட்டுன்னா லைசென்ஸ் கேட்க.. பய முழி பிதுங்க...

அந்நேரம் அங்கிட்டு வந்த ஸ்கூல் வாத்தி.... என்னப்பா மோகன்ராஜ்? இங்கே எங்கேன்னு கேட்க.. விவரம் சொல்ல.. அவர் மாம்ஸைக் காம் பண்ணி பயலை ரிலீஸ் பண்ணி விட்டுட்டு....

"அட என்னம்மா நீ? அவன் தான் சின்னப் பைய.. ஸ்கூல் பாய்.. நீயாவது யோசிக்க வேண்டாமா லைசென் ஸ் இல்லாம இப்படி வரலாமா? மோகன் அக்காவைப் பார்த்துக் கூட்டிட்டுப் போடான்னு"

சொல்லிட்டு கிளம்ப... அதுக்கு மேல நடந்தது என்ன? உங்க ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

நம்ம பைய லேசுல்ல அடங்கல்ல... காலேஜ்ல்ல லவ் லெட்டர் கொடுக்காதே பொண்ணே கிடையாது.

'செருப்படி காதல் வாழ்க்கையின் முதல் படி'

அப்படின்னு ரூம்ல்ல ரூலாவே எழுதி ஒட்டி வாழ்ந்துகிட்டு இருந்தான்.

எங்க ஏரியா இன்ட்ர்நெட் சென்டர் கீ போர்ட் பூராத்துல்லயும் A S L என்ற மூணு எழுத்தும் இவன் விரல் பட்டு தீஞ்சேப் போச்சு.

தலைமுடியை திடீரென்னு தோள் வரைக்கும் வளப்பான்.. இப்படியிருந்தா தான் ஷாலுவுக்குப் பிடிக்கும் அப்படிம்பான்.

அடுத்த வாரமே மொட்டை அடிச்சுட்டு மோவாய்ல்ல லேசா அழுக்கு ஒட்டுனாப்ல்ல ஆட்டுத் தாடி விட்டுகிட்டுத் திரிவான்... இது மேக்னாவுக்குப் பிடிச்சுருக்காம் அப்படின்னு ராயலாப் பேசுவான்.

நாலாம் வருசம் முடிக்கறதுக்குள்ளே இவன் பாத்த அத்தனைப் புள்ளகளுக்கும் ஆள் செட்டாகி கடைசி வருசம் ராக்கி அன்னிக்கு இவனை ஹாஸ்ட்டல் கக்கூஸ்ல்ல ஒளிச்சு வைக்க வேண்டியதாப் போச்சுன்னாக் கேளுங்களேன். அவன் பொழைப்பு அவ்வளவு நாறிப்போச்சு.

மச்சி... உனக்கு வெக்கமே இல்லையாடான்னு ஒரு நாள் ஊத்திவிட்டு கேட்டப்போ...

அழகு மயில் ஆட.. அபிநயங்கள் கூட.. அப்படின்னு ஒரு பழைய ராஜாப் பாட்டை ஊதிகிட்டே அள்ளிவிட்டு ஆடுனான் பாருங்க.... நாங்க மட்டையாயிட்டோம்.

மோகன் ராஜ் அப்புறம் வேலைக் கிடைச்சு நார்த் இன்டியாப் பக்கம் போனான்.. போனில் ஒரு முறை பேசும் போது சோனாலிக்காவுக்காக கற்றுகொண்ட ஹிந்தி இப்போக் கை கொடுக்குதுன்னு சொன்னான்.

அப்புறம் அமெரிக்கா, லன்டன்னு சுத்திட்டு ஆஸ்திரேலியாவில்ல செட்டில் ஆயிட்டான்... எங்க செட்ல்ல ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் ஆகிட்டே வந்துச்சு...

"மச்சான்... கல்யாணம்ன்னு ஒண்ணு பண்ணா.. ஒரு பொண்ணைப் பண்ணனும்டா.. பொண்ணுன்னா மச்சி..பார்த்தவுடனே அப்படியே பொங்கணும்டா.. " யார் கல்யாணத்துக்கோக் கடைசியா வந்திருந்த போது சொன்னான்.

""யூ நோ ஒரு ஐஸ்வர்யா ராய்... கேததரீன் சிட்டா ஜோன்ஸ், ஏஞச்லினா ஜோலி., இல்லை அட்லீஸ்ட் ஒரு ராணி முகர்ஜி, அப்படி ஒரு லுக் வேணும் மச்சி...""

" ஆக நீ சொல்ல வர்றது.. மோகன்ராஜ் ஆகிய் எனக்கு இந்த ஜென்மத்துல்ல நோ மேரேஜ் அப்படித்தானே..."

" நோ.. நோ.. இப்போக் கூட என் ஆபிஸ்ல்ல லிசான்னு ஒரு நைஸ் கேர்ள் .. இத்தாலியன்... எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு" என்றான்.

"அவளுக்கு" நம்ம பங்கு யாரோ கேட்டாங்க..

"இப்போத் தான் ஸ்டார்ட் ஆகி இருக்கு இன்னும் போகணும் அப்புறம் அவளுக்கும் என்னையப் பிடிச்சிடும்" பயங்கரச் சிரியஸாச் சொன்னான்.

இன்னுமாடா நீ இப்படித் திரியறன்னு அவன் அவன் உளுந்துப் பொரண்டுச் சிரிக்க, மோகன் ராஜ் செல்போனில் இருந்த லிசாப் படத்தை எனக்குக் காட்டினான்...

அது ஆச்சு ஆறு மாசம், இப்போ அண்ணனுக்கு கல்யாணம் அதுவும் நம்ம மதுரைப் பக்கம் மேலூர்ல்ல.. பொண்ணு பேர் லிசாவான்னு இனி தான் விசாரிக்கணும்...

இப்போதைக்கு சகலமானவர்களுக்கும் சொல்லிக்கிறது என்னன்னா என் நண்பன் மோகன்ராஜ்க்குப் பொண்ணு பார்த்தாச்சுங்கோ

16 comments:

ALIF AHAMED said...

.. இப்போக் கூட என் ஆபிஸ்ல்ல லிசான்னு ஒரு நைஸ் கேர்ள் .. இத்தாலியன்...
/./
இப்போ அண்ணனுக்கு கல்யாணம் அதுவும் நம்ம மதுரைப் பக்கம் மேலூர்ல்ல.. பொண்ணு பேர் லிசாவான்னு இனி தான் விசாரிக்கணும்...
/./

மேலுர் இத்தாலியன் பொண்ணு சரி சரி நல்லா இருந்தா சரி

வாழ்த்துக்கள் மோகன்ராஜ்..

ALIF AHAMED said...

டிஸ்கி: 'இவர்' 'அவர்' இல்ல எனபதைத் தெளிவா முதல்லயே சொல்லிடுறேன்
/./

அதான பாத்தேன்..:

இராம்/Raam said...

//மோகன் ராஜ் அப்புறம் வேலைக் கிடைச்சு நார்த் இன்டியாப் பக்கம் போனான்.. //

இது யாருக்கோ வச்ச உள்குத்து.....
:-))))))

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
'செருப்படி காதல் வாழ்க்கையின் முதல் படி'
///

பெரிய பெரிய கொள்கையெல்லாம் வைச்சிருக்கறாறே பெரிய ஆளா இருப்பார் போல

பொன்ஸ்~~Poorna said...

//நோ.. நோ.. இப்போக் கூட என் ஆபிஸ்ல்ல லிசான்னு ஒரு நைஸ் கேர்ள் .. இத்தாலியன்... எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு" என்றான்.

"அவளுக்கு" நம்ம பங்கு யாரோ கேட்டாங்க..

"இப்போத் தான் ஸ்டார்ட் ஆகி இருக்கு இன்னும் போகணும் அப்புறம் அவளுக்கும் என்னையப் பிடிச்சிடும்" பயங்கரச் சிரியஸாச் சொன்னான்.
///
:)))))))))))))))))))))))))

செம காமெடி தேவ்.. லிஸாவைப் படம் பிடிச்சி வச்சிருக்கும் உங்க மோகன்ராஜுக்கே இத்தனை நாளாச்சா!.. அப்போ ஓணானைப் படம் பிடிக்கும் நம்ம அவருக்கு ? :))

ILA (a) இளா said...

::No Comments::
"மாப்புக்கு கண்ணாலம், பங்காளிங்கயெல்லாம் வாழை மரம் கட்டுங்க."

"உன்கிட்ட இனிமே எவனாவது போன்ல பேசுவான்?"

"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு"

"என் ஊட்ட தாண்டித்தானே உன் ஊட்டுக்கு போவனும்"

"கோயிலுக்கு வரச் சொல்லி இருக்காங்க"

புரிய மனுசக்கு புரிஞ்சா சரி. இல்லாட்டி வழக்கம் போல ங்கேன்னு முழிச்சாலும் சரி. ஊதுர சங்க நீ ஊதிட்டே, நானும் பின்னூட்டேன்.

இலவசக்கொத்தனார் said...

முதலிலேயே டிஸ்கி - என்னடா இது விவகாரமா தொடங்குதேன்னு பார்த்தா இதுவும் ஒரு மோகன்ராஜ் கதை.

அந்த பேர் வெச்சாலே ஆப்பு வாங்க வேண்டியது அவசியமாகும் போல இருக்கே. வருங்காலப் பெற்றோரே, ப்ளீஸ் நோட்.

சரி, அதான் புள்ளைக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சில்ல. மாப்ளே, வாழ்த்துடா, எங்கடா ட்ரீட்டு? அப்படின்னு கேட்டுட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதானே. அதென்ன பழங்கதை எல்லாம் எடுத்து வெள்ளாவி போட்டு அலசறது?

பயபுள்ள ஒரு கெத்தா இருக்கட்டும் அப்படின்னு அந்த பொண்ணு கிட்ட போயி நம்ம நண்பனாக்கும், பெரீய்ய்ய எழுத்தாளன் அப்படின்னு உன்னப் பத்தி ஒரு பில்டப் குடுத்து வெச்சுருந்தான்னு வெச்சுக்கோ. அதை நம்பி அந்த பொண்ணும் இங்க வந்து இதெல்லாம் படிச்சா... ஏம்பா இப்படி அடுத்தவன் வாழ்க்கையில் விளையாடறீங்க....

Anu said...

புளுட்டோ பண்ற சதின்னு நினைச்சுகிட்டேன்..

Dev
paavam pluto..adai yen vambukku izhukkaringa..:)

நாகை சிவா said...

/சரி, அதான் புள்ளைக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சில்ல. மாப்ளே, வாழ்த்துடா, எங்கடா ட்ரீட்டு? அப்படின்னு கேட்டுட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதானே. அதென்ன பழங்கதை எல்லாம் எடுத்து வெள்ளாவி போட்டு அலசறது?//

அதானே! மதிச்சு கூப்பிட்டு இருக்கான். போயி அவன் சோகத்தில் பங்கு எடுத்து கொண்டு வாழ்த்தி விட்டு வர வேண்டியது தானே. தேவையில்லாமல் பழய வரலாறுகளை எல்லாம் எதற்கு புரட்ட வேண்டும்.

கைப்புள்ள said...

//இப்போதைக்கு சகலமானவர்களுக்கும் சொல்லிக்கிறது என்னன்னா என் நண்பன் மோகன்ராஜ்க்குப் பொண்ணு பார்த்தாச்சுங்கோ//

என்னோட வாழ்த்துகளையும் சொல்லிடுப்பா.

Anonymous said...

@தேவ்...

அங்க கவிதை பொங்குது... இங்க இவ்ளோ நக்கலா.. நடத்துங்க

@மோகன்ராஜ்..

யப்பா ராசா.. வாழ்த்துக்கள்..
நட்பு இருக்க வேண்டியதுதான்... ஆனா அதுக்காக இல்லாத பில்டப் எல்லாம் நண்பர்கள் முன்னாடி விட்டு இன்னைக்கு கச்சேரில சிங்கியடிக்குறீங்க..

அம்மணிய இந்த பக்கம் வராம பாதுக்கோங்க... பொண்ணு மதுரை பக்கமாம... மக்கா ஆஞ்சுபுடுவாய்ங்க!!!

Unknown said...

டிஸ்கி போட்டும் இவ்வள்வு பேர் அவரை இப்படி வம்புக்கு இழுத்தா நான் என்னய்யா பண்றது.. அவர் ரொம்ப நல்லவரு தான் இருந்தாலும் அதுக்காக இப்படியா?

:)))))))

மனதின் ஓசை said...

//அந்த பேர் வெச்சாலே ஆப்பு வாங்க வேண்டியது அவசியமாகும் போல இருக்கே. வருங்காலப் பெற்றோரே, ப்ளீஸ் நோட். //

பாவம்யா அவரு.. விட்டுடுங்களேன் :-)

jokes apart.. தேவு, ரொம்ப நாளா எனக்குள்ள இருக்கற கேள்வி..
உன் நண்பன் மோகன்ராஜ் மாதிரி வாழ்ற்து சரியா தப்பா? இல்ல உத்தமபத்திரன வாழறது தான் சரியா?
நேயர்கள் கருத்து என்னன்னும் பார்ப்போம். :-)

Unknown said...

//தேவு, ரொம்ப நாளா எனக்குள்ள இருக்கற கேள்வி..
உன் நண்பன் மோகன்ராஜ் மாதிரி வாழ்ற்து சரியா தப்பா? இல்ல உத்தமபத்திரன வாழறது தான் சரியா?
நேயர்கள் கருத்து என்னன்னும் பார்ப்போம். :-) //

ஹமீத் விடுமய்யா என் நண்பன் மோகன்ராஜ்க்கு வாலிப வயசு வாழ்ந்துட்டுப் போறான். உனக்கு எனக்கு எல்லாம் இனி அந்த நினைப்பு வந்தாலே ஆப்பு அங்கிட்டும் இங்கிட்டும் காத்திட்டு இருக்குங்கறதை மறந்துறாதே:))

மனதின் ஓசை said...

// உனக்கு எனக்கு எல்லாம் இனி அந்த நினைப்பு வந்தாலே ஆப்பு அங்கிட்டும் இங்கிட்டும் காத்திட்டு இருக்குங்கறதை மறந்துறாதே:)) //

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

மனதின் ஓசை said...

//உனக்கு எனக்கு எல்லாம் இனி அந்த நினைப்பு வந்தாலே ஆப்பு அங்கிட்டும் இங்கிட்டும் காத்திட்டு இருக்குங்கறதை மறந்துறாதே:)) //


அங்கிட்டும் இங்கிட்டுமா? தேவு.. பெரிய ஆளா இருப்ப போல !!!

tamil10