Wednesday, October 11, 2006

பார்த்தீபா ஓ பார்த்தீபா

வணக்கம் மக்கா,

உள்ளாட்சித் தேர்த்ல் மேடையிலே ஒரு கழகம் இன்னொரு கழகத்தைத் திட்ட இன்னோரு கழகம் வந்த இன்னொரு கழகத்தைத் திட்ட இதைப் பத்திரிக்கைக்குப் பத்திரிக்கைப் போட்டோவோடப் போட்டுத் தாக்க.. இப்போவெல்லாம் மனசுக் கஷ்ட்டமாப் போச்சுன்னா அப்படியே நம்ம தமிழ் பேப்பர் எடுத்துப் படிக்க ஆரம்பிச்சுருவேன்.. அப்புறம் என்ன வடிவேல் காமெடி சீன் பார்த்தா மாதிரி மனசும் லேசாயிடும் அடுத்த வேலையும் நமக்கு சுளுவா ஓடும்...

இந்த வாரம் பேப்பரைப் பொரட்டும் போது படிச்ச மேட்டர் மனசை ஆக்ஸா பிளேட் வச்சு கீறுன மாதிரி வலியெடுத்துப் போச்சுங்க.. யார் கிட்ட என் வலியைச் சொல்லுவேன்.. இங்கன நம்ம கச்சேரியை விட்டா வேற வழி.

எல்லாம் இந்த தீவிரவாத மேட்டர் தான்.. அட தீபாவளிக்கு என்னப் படம் ரிலிஸ் ஆகும்ன்னு பார்க்கலாம்ன்னு பேப்பரைப் பொரட்டுன்னா.. அங்கிட்டு பாம் போட்டான்க.இங்கிட்டு ராக்கெட் விட்டானுங்கன்னு செய்தி முழுக்க புகை மண்டலமாவே இல்ல இருக்கு.. இது என்னடா கலாட்டான்னு அந்தச் செய்தியைப் படிக்க ஆரம்பிச்சேன்..தோடா தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரம் கூட இல்ல.. அதுக்குள்ளே காஷ்மீர் பார்ட்ர்ல்ல வெடி வெடிக்க ஆரம்பிச்சுட்டான்வ..

எல்லைத் தாண்டும் பயங்கரவாதிகள் அப்புறம் எல்லையை நோண்டும் தீராவியாதிகள்ன்னு படிச்சுச் சலிச்சு போன மேட்டர் தான். இருந்தாலும் படிச்சேன்...
காரணம் பார்த்தீபன்...

பார்த்தீபன் எனக்கு உறவுக்காரன் இல்ல.. சினேகிதம் கூட கிடையாது.. அவன் யாரோ எவ்னோ அப்புறம் ஏன் அவ்வள்வு அக்கரைன்னு யோசிக்கிறேன்... இன்னும் பதில் தெரியல்ல...

பார்த்தீபன் 23 வயசு பையன்..சென்னைப் பம்மலைச் சேர்ந்த இளைஞன். அவன் தந்தை இந்திய ராணுவத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இந்த இளைஞனும் இப்போது தான் பயிற்சி முடித்து ராணுவப் பணியில் சேர்ந்து இருக்கிறான். இப்போது காஷ்மீர் தீவிரவாதிகளுடன் நடைப்பெற்ற போரில் தன்னுயிரை இழந்து விட்டான். அவ்வளவு தான் செய்தி..

இதைப் படிச்சிட்டுத் தான் எனக்கு ஒரே பிலீங்க்ஸ்...

தினம் தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் எத்தனையோ அப்பாவிகளும் ராணுவவீரர்களும் இந்த தீராத வியாதியாம் தீவிரவாதத்தால் தாக்கப்பட்டு இறந்துக் கொண்டுதானிருக்கின்றனர்.
அப்போது எல்லாம்,
ஒரு சின்ன அச்சோ..
கொஞசம் அதிகப்பட்சமாய் ஒரு அய்யோ..
இன்னும் மிஞ்சிப்போனால் சில நிமிட வருத்தம்.. அவ்வளவுத் தான் தோன்றியிருக்கிறது என்னிடம்...

இந்த பார்த்தீபன் விஷ்யத்தில் மட்டும் பதிவுப் போட்டும் புலம்பும் அளவிற்கு என்னாயிற்று என்று இன்னும் யோசிக்கிறேன்..
அவன் என் சென்னைப் பட்டணத்தைச் சேர்ந்தவன் என்பதாலா?
பம்மல் எனக்குத் தெரிந்த ஊர் என்பதாலா?

தீவிரவாத்தின் வலி எனக்கு வெகு அருகினில் உணரப்படும் போது எனக்கு இன்னும் அதிகமாய் வலிக்கிறது.. அது தான் காரணம்..

முன்னொரு முறை திருச்சி சரவணனின் மரணம் என்னைத் தாக்கியது...இப்போது பார்த்தீபன்...

எங்கிட்டோ...
எவனோ....
எப்படியோ...
எக்கேடு நடந்தா எனக்கென்ன?
இந்த நினைப்பு என்னை என்னிடமே தலைக்குனிந்து நிற்க செய்கிறது...

அட வேற என்னச் சொல்ல ஒரு ரெண்டு மூணு நாளு அந்த பயலை நினைச்சு மனசுக் கஷ்ட்டப்படும் அப்புறம் நம்ம மனசு கழட்டி வச்ச எருமை மாட்டு தோல் சட்டையை மாட்டிகிட்டு எல்லாத்தையும் மறந்துட்டு நம்ம பொழைப்பைப் பாக்க கிளம்பத் தான் போறேன்.. அலுவலகத்திலேப் பொட்டியத் தட்டிட்டு மேலதிகாரிசொல்லுறதைக் கேட்டுகிட்டு.. ஒண்ணாம் தேதியானா ஏ.டி.எம் வாசல்ல கையிலே கார்டை வச்சிகிட்டு தேவுடு காத்துகிட்டு.. இது தானே நம்ம வாழ்க்கை.. இதுல்ல ஏன் இந்த வருத்தம்.. நாட்டைப் பத்திய் கவலை கத்திரிக்கா எல்லாம்... (கேக்குது கேக்குது கேட்கிற கேள்வி எல்லாம் கேக்குது) ஆனா என்னச் செய்வேன் முடியல்லயே.. எங்காவது இப்படி எதாவது நடந்தா ஓரமா உக்காந்து ஒப்பாரி வைக்கவாது விடுங்கப்பா

இந்தப் பதிவின் மூலம் பார்த்தீபா.... உன் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நான் தலை வணங்குகிறேன்..
உன் இழப்பைத் தாங்கிக் கொள்ள உன் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்.

5 comments:

செந்தில் குமரன் said...

இன்னும் எத்தனை காலத்திற்கு இது தொடரும்? இது முடிவுக்கு வரும் அறிகுறிகள் தெரிகிறதா? இதற்கு இங்கு கணிணி முன் உட்கார்ந்து கொண்டு நான் என்ன செய்கிறேன்?

நான் இங்கு அமைதியாக அமைதியாக அமர்ந்து என் குடும்பம் என் வாழ்க்கை என்று வாழ்க்கையைக் களிக்க இன்னும் ஒரு உயிர் பிரிந்திருக்கிறது. இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்ய முடியும் என்னால். நெஞ்சு கனக்கிறது.

பார்த்தீபன் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என் அஞ்சலிகள்.

Boston Bala said...

anjali

சிவபாலன்: லெப்டினென்ட் பார்த்திபனுக்கு வீர அஞ்சலி

(Your blog template does not specify utf-8 in the individual posts!?)

தேவ் | Dev said...

குமரன் இது நம்மில் பலரது மனத்திலும் உள்ள எண்ணம் தான். எதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பே நம்மை எதாவது செய்ய வைக்கும் என் நாம் நம்புவோம்

தேவ் | Dev said...

Baba Thanks for letting me know the bug.

bug fixed now. :)

மனதின் ஓசை said...

தேவ்,
நீ கூறியது போல பலரின் உள்ளத்தில் உள்ள உண்ர்ச்சிதான் இது.. உனக்கு ஒரு பார்த்திபன் போல் ஒவ்வொருவருக்கும் ஏதொ ஒரு நிகழ்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது..
இது நெஞ்சில் அவ்வப்போது அறைந்தாலும், நாமே நமக்கு ஏற்படுத்திக் கொண்ட சிறையில்/வேலியில் இருந்து வெளி வர மறுக்கிறோம்.. அதற்கான தைரியம் இல்லை நம்மிடம். ஒரு குறிப்பிட்ட எல்லை கொட்டை தாண்ட இயலாதவராய் இருக்கிறோம். இப்படியே இருந்தால் பார்த்திபன் போன்றவரும் இன்னும் கொஞ்ச காலத்தில் கானாமல் போய் விடுவார்கள். அதன்பின் நம் எல்லைகொட்டுக்குள்ளும் நாம் பயந்த/சந்திக்க விரும்பாத நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும்.. நாமே பார்த்திபனாக வேண்டிய கட்டாயம் எழும். அதுவரை இந்த இயலாமை, மனத்தை வெறுமையாக்கி போலி புன்னகை சிந்தி வாழ்வில் வெற்றி பெற்றதாக வெளியே காட்டிக்கொள்ள மட்டுமே வழி செய்யும்.

//எங்கிட்டோ...
எவனோ....
எப்படியோ...
எக்கேடு நடந்தா எனக்கென்ன?
இந்த நினைப்பு என்னை என்னிடமே தலைக்குனிந்து நிற்க செய்கிறது...
//
என்னிடமும்..

tamil10