நேத்து ஆல்பர்ட் தியேட்டர்ல்ல மழைக்கு ஒதுங்கலாம்ன்னு ஓதுங்குனா.. அங்கிட்டு பேனர்ல்ல அலையென எழுவோம்.. தலையென வாழ்வோம்ன்னு ஒரு பேனர்...
கவுண்ட்டர்க்குள்ள கையை நீட்டுனா டிக்கெட் கொடுத்துட்டாங்க... "அல்டிமேட் ஸ்டார்" அஜீத் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இரண்டு படங்கள் பரமசிவன், திருப்பதி பார்த்து நொந்த நிலையில் அதிகமான மனத்தைரியத்தோடு வரலாறு பார்க்க நண்பர்களோடு போயிருந்தேன்.
அரங்கிற்குள் நுழையும் முன் நம்மை ஈர்த்த விஷயஙக்ள். அஜீத்தின் மூன்று வேடங்கள், ரஹமானின் இசை, நாயகி அசின், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் ஜனரஞசகமான இயக்கம்.
அஜீத் ரசிகர்களின் ஆரவாரம் அடங்கிய வெகு நேரம் ஆகியும் கதையை நோக்கி படம் நகர்ந்த மாதிரி தெரியவில்லை. நகைச்சுவை என்ற பெயரில் ஆரம்பக் காட்சிகளில் வழியும் இரட்டை அர்த்த சம்பவங்களின் கோர்வையில் கதை மெல்ல நகர்கிறது. அதில் ஆங்காங்கு வேகத் தடைகளாய் பாடல் காட்சிகள் வேறு..
வீல் சேரே வாழ்க்கையாகிப் போன பாசமான 'காட்பாதர்' தந்தை அஜீத், பொறுப்புகளைச் சுமக்க விருப்பமின்றி இளமை.. இளமை எனக் கூத்து கட்டும் பணக்கார மகன் அஜீத்...அவர் நண்பர்கள், அவர் காதலியாக அசின், தந்தையின் விசுவாசமான் வேலையாள் பாண்டு எனக் கதை களம் முதல் பாதியில் விரிகிறது
மூன்றாவது அஜீத் எங்கே என வினா எழும் போது அதுவே இடைவேளை நெருங்குகையில் திரைக்கதையில் முடிச்சாய் விழுகினறது...
கடல்மீன்கள் என்றொரு பழைய கமல் படத்தில் பார்த்தக் கதை தான்...
தந்தை தாய்க்கு துரோகம் இழைத்து விட்டதாய் நினைத்து குரோதம் கொள்ளூம் வில்லன் மகனாய் இன்னொரு அஜீத்.. வில்லன் அஜீத் தந்தை - தம்பி வாழ்க்கையில் மர்ம புயலாய் வீசுகிறார். விபரீதங்களை விளைவிக்கிறார். தந்தையைக் கொல்ல வெறீயோடு அலைகிறார்.
இந்த நிலையில் காட்பாதரின் பிளாஷ் பேக் ஆரம்பம்...
நாட்டிய கலைஞராய் தந்தை அஜீத்... அவரின் பெண்மை கலந்த நளின நடைப்பாவஙகளை காரணம் காட்டி அஜீத்தை மணக்க மறுத்து அவமானபடுத்தும் அம்மா கனிகா..கல்யாணம் தடைப்பட.. அப்புறம் என்ன அஜீத் பொங்குகிறார்... தன் ஆண்மைக்கு சவால் விடும் கனிகாவை அவர் சம்மதமின்றி அம்மா ஆக்குகிறார். இரட்டைக் குழந்தைகள் பிறக்கினறன்... இதுக்கும் மேல என்ன நடந்து இருக்கும் என் தமிழ் திரைப்பட் ரசிகர்கள் நீங்கள் கட்டாயம் ஊகித்து விடுவீர்கள் எனப்தால் இத்தோடி கதையை விட்டு விடுகிறேன்.
கடைசியில் மசாலாத் தடவப் பட்ட காரணங்கள் சொல்லி இயக்குனர் காட்பாதர் குடும்பம் இணைய வழி செய்கிறார். இணையும் போது பாதர் காட் பாதர் ஆகிறார்.
அஜீத் தந்தை வேடத்தில் ஜொலிக்கிறார். அதுவும் நாட்டியக் கலைஞராய் கலைந்த தலைமுடியில் அவர் நடக்கும் அந்த நடைக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.
வில்லன் அஜீத் நிறைவு. அந்த கோபப்பார்வை.. ஆவேச அசைவுகள் என வில்லன் பாத்திரத்தை மிகைப் படுத்ததாமல் செய்துள்ளார்.
அசினுக்கு அதிகம் வேலையில்லை. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அவ்வளவே. FAIREVER QUEEN FOREVER AJITH என படத்தில் ரொமான்ஸ் ராகம் பாடுகிறார்.
ரமேஷ் கண்ணா, சுமன் ஷெட்டி ( 7ஜி ரெயின்போ காலனி, ஜெயம்) , ராஜீ சுந்தரம் குரூப் டான்சர்கள் என ஒரு பட்டாளமும், வழக்கமான வில்லன்கள் பொன்னம்பலம், மன்சூரலிகான் ஆகியோரும் நகைச்சுவைக் களத்தில் இறக்கிவிடப்பட்டிருந்தாலும் ஓரிரு காட்சிகளில் வரும் மனோகர் கைத்தட்டலை அள்ளிச் செல்கிறார்.
கனிகா கதையோடு வருகிறார். முதலில் ஆவேசமாய் இளமையாய் பின் பாதியில் அமைதியும் அவதியுமாய்.
இன்னிசை என்ற பாடல் அஜித்தின் நடிப்புக்கு 'ஓ' போட வைக்கிறது.
ரஹமான் இசையோடு ஒரு பாட்லும் பாடியிருக்கிறார்.
சுஜாதா, சந்தானபாரதி, ராஜேஷ், விஜயன் போன்றோரும் படத்தில் உண்டு.
ஆக மொத்தம் நம்மால் பொறுத்துக் கொள்ள முடிந்த அளவிலான பூச்சுற்றல்களோடு, சென்டிமெண்ட் கலவையைத் தூவி அஜித் நடிப்பில் ஒரு பார்க்கக் கூடிய பொழுதுபோக்கு படம் படைத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
மொத்தத்தில் அஜீத் ரசிகர்களுக்கு இது 'தல' தீபாவளி தான்...பின்னே தீபாவளிக்குத் திரைக்கு வந்த எல்லாப் படத்துல்லயும் இப்படமே முன்னணியாமே....
10 comments:
மீண்டும் "தல"யின் எழுட்சி....
Ajith is next to kamal......
Varalaru is really rocking......
தீபாவளி "தல" தீபாவளி
//மிக விவரமாகவும் எளிமையாகவும் எழுதிவருகிறீர்கள். தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள். //
பார்க்கக் கூடிய படம், நல்ல படம்னு சொல்ல வர்றீங்க? விமர்சனத்துக்கு மிக்க நன்றி. உங்க ஸ்டைல்ல நல்ல பதிவு. கவுண்ட்டருக்குள்ள கைய விட்டேன் டிக்கெட் கொடுத்துட்டாங்க இதெல்லாம் அக்மார்க் கச்சேரி ஸ்டைல்
:)
அப்போ வரலாறு ஹிட்டுதான்னு சொல்றீங்களா ???
***
தல போல வருமா :-))))
ஆதவன், அனானி, சிவா வருகைக்கும் தருகைக்கும் நன்றி
கைப்புள்ள தங்கள் ரசனைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
சோம்பேறி பையன் வரலாறு வெற்றியடையத் தகுதியுடைய படமே.
அப்பாடா...
தலைக்கு ஒரு ப்ரேக் கிடைச்சுதுனு நினைக்கிறேன்...
ஆனால் என்ன பிரச்சனைனா தல ஃபேன்ஸ் அட்டகாசம் தாங்க முடியாது.
கே.எஸ்.ரவிக்குமார் ஏமாத்திட்டாருனு ஏதோ ரிவியுல படிச்ச நியாபகம். உண்மையா?
ஆஜித் கெரட்டருக்கு தகுன்தமாதிரி குரலை மாத்தி பேஸினா அருமையா இருக்கும்
Post a Comment