Friday, October 13, 2006

லகே ரகோ கொத்ஸ் பாய்

வணக்கம் மக்கா,

பீலிங் பதிவுப் போட்டுட்டு பீலிங்காத் திரிஞ்சிகிட்டு இருந்த எனக்கு அமெரிக்காவில்ல இருந்து போன்.. அரக்க பரக்க போனை எடுத்தா என் தானைத் தலைவர் கொத்ஸ் லைன்ல்ல இருக்கார்.

என்னய்யா ஆச்சு உனக்கு.. ஏன் இப்படி அப்படின்னு அக்கறையா நமக்கு நாலு வார்த்தைச் சொன்னவர்..சரி சரி.. நமக்கு டக்குன்னு ஒரு படம் பண்ணனும் கதை ரெடி பண்ணு.. யாகூல்ல ஆன்லைன்ல்ல வர்றேன் கதையச் சொல்லுன்னுட்டு போயிட்டார்.நமக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல.. மறுபடியும் நம்ம கலைத்தாகத்துக்கு தலைவரே பீர் ஊத்துறாரேன்னு பொங்கி வழிஞ்சுது நம்ம மனசு.

"சரா.. ஏலேய் சரா" அப்படின்னு நம்ம நண்பனுக்குப் போனைப் போட்டுக் கூப்ப்ட்டேன்..லைன்ல்ல வந்தவன் ஆனந்தக் கூத்தாடிட்டான்.. அடுத்த அரை மணி நேரத்துல்ல மெரீனாக் காந்தி சிலைக்குக் கீழே வானத்தைப் பாத்துகிட்டு கதை ஆலோசனையிலே நாங்க ஆழமா இறங்கிட்டோம்ய்யா.

"தேவ்.. ஒரு அருமையானக் கதை இருக்கு சொல்லுறேன் கேளு"
"சொல்லு"
"நம்ம கொத்ஸ்பாய் பழைய வண்ணாரப் பேட்டை ஏரியாவில்ல பெரிய தாதா. அவர் பேரு சொன்னாலே நம்ம மொத்தச் சென்னையும் நடுங்கும்"
" அப்புறம்.. அவருக்கு ஒரு சிஷ்ய புள்ள கூடவே வ்ர்றான்.. அவன் பேர் ப்யூஸ் கேரியர்"
"பேர் வித்தியாசமா இருக்கே"

"நம்ம தலைவர்க்கு காலையிலே எந்தரிச்சு ரெகுலராக தேன்மணம் எப் எம் கேக்குறது வழக்கம் அது ஒரு பிளாக் ரேடியோ.. அதுல்ல சங்வி அப்படின்னு ஒரு சூப்பர் பிகர் டெய்லி தன்னோட மெலடியான வாய்ஸ்ல்ல கவிதைச் சொல்லும்.. அதுல்ல இம்ப்ரஸ் ஆவுற நம்ம தலைவர் அந்தப் பொண்ணு எழுதற பிளாக்க்கு மட்டுமில்லாம அந்தப் பொண்ணுக்கே பயங்கர பேன் ஆகி லவ்ஸ் வூடுறார்"

"சூப்பர் ஸ்டோரிப்பா"

"அப்புறம் அந்தப் பொண்ணு ஒரு நாள் தன் பிளாக்ல்ல வெண்பா எழுதும் போட்டி வைக்குது.. ஜெயிக்கறவங்களுக்கு தன் கையலே வெண்பொங்கல் சாப்பிடுற வாய்ப்பும் தருவதாகச் சொல்லுது.. நம்மத் தல முடிவு பண்ணிடுறாரு அவர் வெண்பா எழுதி வெற்றி பெற்று விடுவதுன்னு"

"அப்புறம்"

"அவர் சிஷ்யன் ப்யூஸ் கேரியர்கிட்டே போன் போட்டு வெண்பான்னா என்னன்னு விசாரிக்கிறார். புதுசா வந்த பிகர் மினிஷா லம்பா சிஸ்டரா இருந்தாலும் இருக்கும் தலை.. ஆனா எப்படியும் எல்லா விவரங்களையும் விசாரித்துச் சொல்லுவதாகச் சொல்கிறான்"

"ம்ம்ம் அதுக்குப் பிறகு விசாரிக்கிறானா?"

"ஆங் பயங்கரமா விசாரிச்சு அது எதோ தமிழ் டிபார்ட்மென்ட் சம்பந்தப் பட்ட மேட்டர்ன்னு சொல்லுறான்.

தலை..பெரிசா விஷயம் ஒண்ணுமில்ல மாங்கா, தேங்கான்னு சிம்பிள் மேட்டர் தான். உடனே நம்ம தலை மாங்கா, தேங்கான்னா கோயம்பேடு மார்க்கெட்ல்ல கிடைக்குமான்னு கேட்க..அதுப் பத்தியும் விசார்ப்பதாச் சொல்லுகிறான் ப்யூஸ் கேரியர்"

"அப்புறம் எப்படி வெண்பா எழுதுறாங்க?"

"இங்கே தான் மேட்டரே.. நம்ம ப்யூஸ் கேரியர் இந்தப் பிளாக்ல்ல எல்லாம் வெண்பா எழுதுற எஸ்.கே, வெண்பா வாத்தி மாதிரி நம்ம மக்களை எல்லாம் கடத்திட்டு வந்து நம்ம தலக் கொதஸ்க்காக வெண்பா எழுத வைக்கிறான்"

"ஆகா.. நல்லாயிருக்கு சரா மேலேப் போ"

"அப்புறம் தலைவர் வெண்பா போட்டியிலே ஜெயிச்சுப் பரிசு வாங்கப் போறார்..அங்கே ஒரு பாட்டு போடுறோம்.. நம்ம தளபதி சிபி வழக்கம் போல நல்ல வரிகளை ரெடி பண்ணிடுவார்..அப்புறம் தலைவர் பிகர் கையால வெண்பொங்கல் சாப்பிடுறார்.. அப்போ அந்தப் பிகர் தலைவர்கிட்டெ வெண்பாப் பத்தி நிறைய கேள்வி கேக்குது"

"தலிவர் மாட்டிக்கிறாரா?"

"இல்ல தலிவர் செமையா டபாய்க்கிறார். உம்பா உம்பா அப்படின்னு பஞ்சதந்திரம் பாடு எல்லாம் பாடிக் கலக்குறார். அவரை ஒரு வெண்பா பாடச் சொல்லி பிகர் பீலிங்காக் கேட்க.. தலைவர் அதை விட பீலிங்கா அன்னிக்குத் தான் அவங்க வெண்பாச் சொல்லிக்கொடுத்த குருவோட மாமியார் மண்டையப் போட்ட நாள் அதுன்னால அவர் வெண்பா பாட முடியாதுன்னு எஸ் ஆயிடுரார்"

"அப்பாடா மாட்டிக்குவாரோன்னு பயந்துட்டேன்.. தலீவர் மாட்டுன்னா ரசிகர்கள் செம கடுப்பாயிடுவாங்க"

"அது தெரியும்ண்ணா.. அப்புறமும் உடாம அந்தப் பொண்ணு தலைவரை வெண்பா எப்போப் பாடுவீங்கன்னு கேக்க தலைவர் வழி இல்லாம சனிக்கிழமை அந்த்ப் பொண்ணு பிளாக்ல்ல வந்துப் பாடுறதா ஒத்துக்கிடுறார்"

"இது கஷட்டம்டா சாமி.."

"ப்யூஸ் கேரியர் என்ன என்னமோ கொடுக்கிறான்.. எதுவும் ஓர்க் அவுட் ஆகாது போகவே தலைவர் நேரா தேவனேயபாவாணர் லைப்ரரிக்குப் போய் இரவு பகலாக உக்காந்து வெண்பா படிக்கிறார். அப்போ கவிச்சக்கரவர்த்தி கம்பர் தலைவ்ருக்குத் தரிசனம் தர்றார்.. அவர் வெண்பாவின் மகிமையை தற்காலம் எப்படி மறந்துப் போச்சின்னு தலைகிட்ட சொல்லுறார்.. இங்கிட்டு கதை டேக் ஆப் ஆகுது"

"ஆகா இதெல்லாம் ரைட்.. நம்ம தலைவர்க்கு பைட் அவர் ரெகுலர் ஸ்டைல் பஞ்ச் டயலாக், வில்லன், இந்த் மேட்டர் எல்லாம் இல்லைன்னா எப்படி?"

""இருக்குதுண்ணா மாயன்சிங் அப்படின்னு ஒரு பெரிய பிளாகர்.. கிட்டத்தட்ட ஒரு 500 பிளாக், 1256 பிளாகர் ஐடி, அப்புறம் அவருக்குன்னு ஒரு 3456 அனானி மன்றங்கள் அப்படின்னு பெரிய கை அவர்.. நட்பு காரணமா நம்ம தலைவர் மாயன்சிங் எழுதுற வெத்துப் பதிவுக்கெல்லாம் 1000 - 5000ன்னு பின்னூட்டம் போட்டு வளர்த்துவிடுறார். மாயன் சிங்க்கு எதிரா எழுதுறவங்க பதிவுக்கு எல்லாம் வ்ர்ற பின்னூட்டத்தை மேஜிக் மாடுரேஷன் முறையிலே காலி பண்ணி கலங்க வைக்கிறார்."

"ம்ம் அப்புறம்.. "

"ஒரு கட்டத்துல்ல மாயன் சிங் தலைவர் லவ்ஸ் பண்ற பொண்ணு பிளாக்கையே காலி பண்ண்ச் சொல்லித் தலைவர்கிட்டேச் சொல்ல.. அப்புறம் தலையோட சிஷ்யனை வச்சே அந்த பிளாககைக் காலி பண்ண.. தலைவருக்கும் மாயன்சிங்க்கும் முட்டிக்குது"

"இங்கே பைட் எல்லாம் வைக்கிறோம்.. அந்தப் பொண்ணுகிட்ட லவ்ஸ் சொல்ல தலைவர் அந்தப் பொன்ணு அப்புறம் அவங்கச் சொந்தங்களை எல்லாம் கூட்டிட்டு கிஷ்கிந்தாப் போறார்.. அங்கே ஒரு பாட்டு நம்ம கவிஞர் நவீன்பிரகாஷ் ப்ரியன் கிட்டே சொன்னா ஆளுக்கு ஒரு நல்ல காதல் பாட்டு போட்டுருவாங்க,,, தலைவர் காதலைச் சொல்லருதுக்குள்ளே பெரிய பிரச்சனை வந்து வில்லன் கூட மோதல் ஆயிடுது"

"ம்ம்ம் அப்புறம் என்ன நடக்குது?"

" இங்கே தான் புதுமை.. தலைவர் கோபமாப் போய் வில்லனைப் புரட்ட்ப் போக.. கம்பர் வர்றார்.. வெண்பா வழியிலே எதுக்கும் தீர்வு உண்டுன்னு சொல்லுறார். அதாவது தலைவர் வழ்க்கமாப் போடுற பின்னூட்டத்தை எல்லாம் சுத்த தமிழ் வெண்பாக்கள்ல்ல போடச் சொல்லுறார்"

"ம்ம்ம்"

"தலைவர் அப்படியே செய்யுறார்,, தனியா வெண்பாக்குன்னு பதிவு தொடங்கி அங்கே வெண்பாப் பயிற்சி கொடுக்குறார்.. அவ்ர் கிட்ட் பயிற்சி எடுத்தவங்க எல்லாம் மாயன் சிங் பிளாக்ல்ல போய் வெண்பாப் பின்னூட்டமாப் போட்டுத் தாக்குறாங்க...தமிழேத் தெரியாத மாயன் சிங் இதுன்னால டென்ஷன் ஆகுறான்"

"தலைக்கு வெண்பாவில்ல பஞ்ச் டயலாக் எல்லாம் இருக்கா?"

"நல்லாக் கேட்டீங்க போங்க.. மாயன் சிங் கடுப்பாகி கொத்ஸ் அடிக்க ஆள் அனுப்புறான்..அவங்களை நம்ம தலைவர் வெண்பாவில்ல அடி அடின்னு அடிச்சு துவைக்கிறார். அப்புறம் என்ன தியேட்டர்ல்ல விசில் பறக்குது"

"கிளைமேக்ஸ் என்ன.. ?"

"அது மட்டும் சஸ்பென்ஸ் இப்போதைக்கு இந்தக் கதையை டெவலப் பண்ணி தலைவர்கிட்டச் சொல்லுங்க..அவர் ஓ,கே சொன்னா மேலே தாக்கிடலாம்"

"ம்ம் சரி.. இந்த ப்யூஸ் கேரியர், மாயன் சிங் , தலைவர் டாவடிக்கற பொண்ணு ரோல் இதுக்கு எல்லாம் யாரைப் போடலாம்ன்னு யோசிக்கிறேன்"

" அண்ணே ப்யூஸ் கேரிய்ர் ரோல் நான் பண்ணட்டுமா.. நல்லா நடிப்பேனண்ணா"

சராவை ஒரு ஆங்கிளாய் பார்த்துச் சிரித்தேன்.. தலைவர் ஆன்லைன் வருவாரா எனக் காத்திருக்கிறேன்.

இப்போதைக்கு இதுவரை நாங்கள் யோசித்தக் கதை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

தலைவரின் அன்பு ரசிகர்கள் கதையை மேலும் மெருகேற்ற ஐடியாக்களை அள்ளிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆங்.. படம் பேர் அதான்ங்க தமிழ் பெயரா வைக்கணும்ன்னு யோசிச்சிகிட்டு இருக்கோம் அதுக்கும் ஐடியா கொடுங்களேன் ப்ளீஸ்

32 comments:

மனதின் ஓசை said...

தேவு,
என்னவோ போ..என்னென்னவோ பன்னுர.. நடத்து ராசா.. நடத்து..

//அன்னிக்கு அவங்க வெண்பாச் சொல்லிக்கொடுத்த குருவோட மாமியார் மண்டையப் போட்ட நாள் அதுன்னால அவர் வெண்பா பாட முடியாதுன்னு எஸ் ஆயிடுரார்"//
சூப்பர்..

//வெண்பா வழியிலே எதுக்கும் தீர்வு உண்டுன்னு சொல்லுறார் :-)//
இது வேறயா?

படத்துக்கு பேர் யோசிச்சிகிட்டு இருக்கேன்..சீக்கிரம் சொல்றேன்.

ILA(a)இளா said...

கொத்ஸ்கிரி

இராம் said...

//ஆங்.. படம் பேர் அதான்ங்க தமிழ் பெயரா வைக்கணும்ன்னு யோசிச்சிகிட்டு இருக்கோம் அதுக்கும் ஐடியா கொடுங்களேன் ப்ளீஸ் //

இது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் முயற்சி செச்சு பார்ப்போமே!!!
வெண் பாவலன்!
வெண்பாஜி! (இது தமிழான்னு கேட்கபிடாது)
வெண் பாவதாரம்!

மின்னுது மின்னல் said...

கொத்ஸ் பாத்து தலக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்க..விக் வைக்குறாதா வேண்டாமானு..

படத்திற்க்கு பேரு

பதில் ஒன்று தா..

(வரிவிலக்கு உண்டுல)


நல்லாயிருங்கப்பு...:)

பொன்ஸ்~~Poorna said...

வெண்பாட்டுக்கொரு தலைவன்
வெண்ணை ச்சே, வெண்பா பாட்டுக்காரன்
வெண்பா கண்ட வெண்பெருஞ்சோழன்

மின்னுது மின்னல் said...

சிபி சார்பாக
கதாநாயகியாக நம்மநயண்தாராவை சிபாரிசு பண்ணுகிறேன்.

மணியன் said...

கதையை சுவாரசியமான இடத்தில் நிறுத்திவிட்டீர்களே! எனக்குத் தோன்றிய தலைப்புகள்:
1. பதிவை மீட்ட பாவலன் ( கடைசியில் ப்ளாக்கை மீட்டு லவ்ஸை கை பிடிக்கிறார்தானே!)

2. கொட்டமடி கொத்தனாரே !

இலவசக்கொத்தனார் said...

நார்மலா 'என்னை வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே'ன்னு கேட்பாங்க. இங்க அது கூட முடியாது போல இருக்கே.
என்னமோ பண்ணறதுதான் பண்ணறீங்க, நல்ல ஹீரோயினிங்களா போடுங்க, வெளிநாடு எல்லாம் கூட்டுக்கிட்டு போயி சுத்திக் காட்டுங்க. இந்த பைட் சீன் எல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிங்க.
அம்புட்டுதான். அப்புறமா வரேன்.

இலவசக்கொத்தனார் said...

தேவு, என்னய்யா பண்ணுன? இப்போ உன் பதிவும் நெருப்பு நரியில சரியா தெரிய மாட்டேங்குது. வெறும் அலைன்மெண்ட் விவகாரம்தானா இல்லை வேற எதாவதா?

நாகை சிவா said...

//தமிழேத் தெரியாத மாயன் சிங் இதுன்னால டென்ஷன் ஆகுறான்"//

தேவ், இந்த இடத்தில் கதை கொஞ்சம் சறுக்குது பாரு. சுத்த தமிழ் தெரியாத என்று மாத்திக்கலாம். தமிழே தெரியாட்டி லோக்கல் தமிழில் போட்டாலும் வெண்பா வடித்த போட்டாலும் வேஸ்ட் தானே

நாகை சிவா said...

வெண்பாயணம் வச்சா எப்படி இருக்கும் :)

கொத்ஸ் வடித்த வெண்பா

வெண்பாவிற்காக ஒரு காதல்

இது எல்லாம் தேறுதானு பாரு, இன்னும் கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணிட்டு அப்பால வரேன்.

தேவ் | Dev said...

//என்னவோ போ..என்னென்னவோ பன்னுர.. நடத்து ராசா.. நடத்து..//

இப்படி வெத்தாச் சொன்னா எப்படி.. கருத்துச் சொல்லணும் ஓசையாரே கருத்துச் சொல்லணும். அப்போத் தானே நம்ம படம் ஆஸ்கார் பென் ஸ் கார் எல்லாம் வாங்கும்

//படத்துக்கு பேர் யோசிச்சிகிட்டு இருக்கேன்..சீக்கிரம் சொல்றேன்//
இன்னுமா யோசிக்கிறே நீயு?

தேவ் | Dev said...

கொத்ஸ்"கிரி"

ஆகா இளா நீங்கத் தலைவர் ரொம்ப நல்லவர்ன்னு சொல்ல வர்றீங்க கரெக்ட்டா?

இன்றைய கொத்ஸ்கிரி நாளைய கொத்துகறின்னு யாரோ வயக்காட்டுல்லருந்து சவுண்ட் விடுறாங்க யாருப்பா அது?

தேவ் | Dev said...

//வெண் பாவலன்!
வெண்பாஜி! (இது தமிழான்னு கேட்கபிடாது)
வெண் பாவதாரம்! //

வாங்க ராம்,

ஆகா.. ஓகோ.. அருமை.. ஆமா இந்தப் பெயருக்கெல்லாம் வரி விலக்கு கிடைக்கும் இல்ல...

தேவ் | Dev said...

மின்னிட்டீங்களா மின்னலு வந்த வேலைய கரிக்கிட்டாச் செஞ்சுப்புட்டீங்க அப்புறம் என்ன இனி புயல் மழை இடி இதெல்லாம் பின்னாடி வரப்போவுது பாருங்க..

தேவ் | Dev said...

//வெண்பாட்டுக்கொரு தலைவன்
வெண்ணை ச்சே, வெண்பா பாட்டுக்காரன்
வெண்பா கண்ட வெண்பெருஞ்சோழன்//

அக்கா பிரமாதம்... ம்ம்ம் ஆனா கிடைச்சக் கேப்பல்ல கப்பல் ஓட்டிட்டீஙக...

ஆமா இந்தப் பெயர் எல்லாம் சரித்திரப் பட பெயர் மாதிரி இல்ல இருக்கு.. கொஞ்சம் யூத்தா யோசிச்சா நல்லாயிருக்கும்

தேவ் | Dev said...

//சிபி சார்பாக
கதாநாயகியாக நம்மநயண்தாராவை சிபாரிசு பண்ணுகிறேன்.
//
ராம் உங்களுக்கு மேட்டர் தெரியாதா? நயந்தாரா நம்ம தளபதி பேச்சி டூ கா வாமே....

கதாநாயகியா கேடி படத்துல்ல நடிச்ச பொண்ணுங்கள்ல்ல ஒண்ணைப் புக் பண்ணிருவோம்.

கைப்புள்ள said...

//ஆங்.. படம் பேர் அதான்ங்க தமிழ் பெயரா வைக்கணும்ன்னு யோசிச்சிகிட்டு இருக்கோம் அதுக்கும் ஐடியா கொடுங்களேன் ப்ளீஸ்//

1. எங்க ஊரு வெண்பாகாரன்
2. வெண்பா பாடவா
3. வெண்பாட்சா
4. வெண்பாண்டி
5. படிச்ச கொத்தனார்
6. வலையூர் வெண்பட்டியான்
7. வெண்பாவிலிருந்து வண்டிச்சத்தம் வரை

கைப்புள்ள said...

8. வெண்பாச்சாரியா

கைப்புள்ள said...

8. வெண்பாச்சாரியா

தேவ் | Dev said...

//கதையை சுவாரசியமான இடத்தில் நிறுத்திவிட்டீர்களே! //

வாங்க மணியன் முழுக் கதையை இப்போவே சொல்லிட்டா எப்படி மீதியை வெள்ளித் திரையில் காண்க....

//எனக்குத் தோன்றிய தலைப்புகள்:
1. பதிவை மீட்ட பாவலன் ( கடைசியில் ப்ளாக்கை மீட்டு லவ்ஸை கை பிடிக்கிறார்தானே!)

2. கொட்டமடி கொத்தனாரே ! //

ஆகா அருமையானத் தலைப்பு.. வரி விலக்கு நிச்சயம்

தேவ் | Dev said...

//நார்மலா 'என்னை வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே'ன்னு கேட்பாங்க. இங்க அது கூட முடியாது போல இருக்கே.//

தலைவா நாடே சிக்கன் குனியா டெங்குன்னு நொங்கு வாங்கி நலிந்துக் கிடக்கும் போது அவ்ர்களுக்கு அருமருந்து நகைச்சுவை மட்டுமேன்னு உங்கள் குருஜி சிரிப்பூர் சித்தர்ஜி சொன்னதா நீங்கக் காட்டுன ரூட்ல்ல தான் நாங்கப் போயிட்டு இருக்கோம்

தேவ் | Dev said...

//என்னமோ பண்ணறதுதான் பண்ணறீங்க, நல்ல ஹீரோயினிங்களா போடுங்க, வெளிநாடு எல்லாம் கூட்டுக்கிட்டு போயி சுத்திக் காட்டுங்க. இந்த பைட் சீன் எல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிங்க.
அம்புட்டுதான். அப்புறமா வரேன்.//

உங்கள் ஆணைத் தலைவா.. நம்ம ரசிகர்களும் உங்களை வெளிநாட்டு மாடல் அழகிகளோடு ஆட்டம் போட்டுப் பார்க்கணும்ன்னு துடியா துடிக்கிறாங்க தலிவா.. சிவாகிட்ட்ச் சொல்லி சூடான்ல்ல லொக்கேஷ்ன் பாக்கச் சொல்லிடவா?

தேவ் | Dev said...

//தேவு, என்னய்யா பண்ணுன? இப்போ உன் பதிவும் நெருப்பு நரியில சரியா தெரிய மாட்டேங்குது. வெறும் அலைன்மெண்ட் விவகாரம்தானா இல்லை வேற எதாவதா? //

நம்ம படம் இன்னும் பூஜையேப் போடல்ல அதுக்குள்ளே எதிர்ப்பா.. தலீவா இது அவங்க சதியாத் தான் இருக்கும் தர்மம் வெல்லும் நெருப்பு நரியில் நம் பதிவுகள் கொளுந்டு விட்டு விரைவில் எரியும்.

( கேட்டக் கேள்விக்கு சரியாப் பதில் தெரியல்லன்னா இப்படித் தான் எதாவது பேசணும்.. செக் பண்ணுறேன் கொத்ஸ்)

தேவ் | Dev said...

//தேவ், இந்த இடத்தில் கதை கொஞ்சம் சறுக்குது பாரு. சுத்த தமிழ் தெரியாத என்று மாத்திக்கலாம். தமிழே தெரியாட்டி லோக்கல் தமிழில் போட்டாலும் வெண்பா வடித்த போட்டாலும் வேஸ்ட் தானே//

இதுக்குத் தான் புலிக்குட்டி வேணும்ங்கறது... உடனே கிளம்பி டிஸ்கஷனுக்கு வா தம்பி.. இன்னும் கதையை மேலும் மெருகேற்ற வேண்டும்.. பறந்து வா..

தேவ் | Dev said...

//வெண்பாயணம் வச்சா எப்படி இருக்கும் :)

கொத்ஸ் வடித்த வெண்பா

வெண்பாவிற்காக ஒரு காதல்//

அமர்களமான பெயர்கள்.. ஆகா பிரமாதம்

//இது எல்லாம் தேறுதானு பாரு, இன்னும் கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணிட்டு அப்பால வரேன். //

புலிக்குட்டி உன் கடமையுணர்வு தலைவரையும் கலங்க வைக்கப் போகுது பாரேன்.

தேவ் | Dev said...

//1. எங்க ஊரு வெண்பாகாரன்
2. வெண்பா பாடவா
3. வெண்பாட்சா
4. வெண்பாண்டி
5. படிச்ச கொத்தனார்
6. வலையூர் வெண்பட்டியான்
7. வெண்பாவிலிருந்து வண்டிச்சத்தம் வரை
8. வெண்பாச்சாரியா //

கைப்பு எத்தனைப் பெயர் எடுத்து விட்டுருக்கே ராசா. ஆமா இந்தப் பெயர்கள்ல்ல எல்லாம் இன்சைட் குத்து அவுட்சைட் குத்துன்னு எதுவும் இல்லையே.. ஏன்னா எங்களுக்கு அரசியல் பிடிக்காது...

தேவ் | Dev said...

தலைவா... வாங்க... இனி நீங்கத் தான் வந்து உங்க முடிவைச் சொல்லணும்...

படத்துக்குப் பெயர் என்ன?

உங்கக்கூட நடிக்கப் போகும் மக்கள் யார்ன்னு.. எல்லாரும் ஆவலா இருக்காங்க வாங்க தலைவா வாங்க

பினாத்தல் சுரேஷ் said...

நான் ஏற்கனவே போட்ட பின்னூட்டம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.. அதில் இருந்தது இதுதான்:

அருமையான பதிவு தேவ். கலக்கிட்டீங்க! வெண்பான்றதாலே கம்பரை விட காளமேகம் இன்னும் பொருத்தமா இருந்திருக்காது? மிக நன்றாக அமைந்துள்ள சடையர்.

என் பங்குக்கு சில தலைப்புகள்:

1. Keep it up Koths boy! (கீழே சின்னதாக தமிழில் வரிவிலக்குக்காக: தேமா தீவிரவாதி)

2. வெண்பா ஆசிரியப்பா உனக்கும் எனக்கும்

3. சில்லுனு ஒரு வெண்பா!

4. தளை தட்டாத தலை!

இந்தப்பின்னூட்டம் மறுக்கப்படும் அளவுக்கு கருத்து சுதந்திரம் மிதித்து கூழாக்கி கசக்கி பிழியப்படுகிறதே.. அந்தகோ.. கேட்பாரில்லையா?

ஜொள்ளுப்பாண்டி said...

//மறுபடியும் நம்ம கலைத்தாகத்துக்கு தலைவரே பீர் ஊத்துறாரேன்னு பொங்கி வழிஞ்சுது நம்ம மனசு.//

:))))))))))))

படத்துக்கு தலைப்பா இதையும் கொஞ்சம் கவனிங்கண்ணா

'வெண்பா வெண்ட்ரு'
'தளைபாரு களைந்தாடு'
'வெண்பாகொண்டான்'
'வெண்பா வெளைஞ்ச மனசு'
'ஒரு பீரும் ரெண்டு வெண்பாவும்'
" வெண்பாஜி "

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10