லூஸ் பெண்ணே ... லூஸ் பெண்ணே ... லூஸ் பையன் உம் மேலத் தான் லூஸாச் சுத்துறான்...
இந்தப் பாட்டு தான் கதை...
முதல் பாதியில் தன் நிஜக் காதலி (!!!??) நயன் தாரா மீது லூசாகி காதலாகி லூசுத்தனமான காதல்கவித்துவமான காரியங்களைச் செய்கிறார் சிம்பு. இரண்டாவது பாதியில் வரும் பிளாஷ் பேக்கில் இதே லூஸ் தனங்களைச் சிம்பு ரொம்பவே அதிகப்படியான சென்டிமென்ட் பூச்சுற்றல்களோடு தன் பள்ளிக் கூடக் காதலி ரிமா சென்னுடன் செய்கிறார்.
படம் துவங்கும் போது காதல் அனுபவமே இல்லாததுப் போல் பேசும் சிம்பு தன் எதிர்காலக் காதலி குறித்த கற்பனையுடன் இருப்பது போல் காட்சிகள் விரிகின்றன....நயனைக் கோயிலில் வழக்கமானத் தமிழ் பட பார்முலாவை மீறாமல் சந்திக்கும் சிம்பு அவர் மீது லூசாகிறார் (நோட் த் பாயிண்ட் இது காதல்ன்னு தப்பா நினைக்கக்கூடாது)
அப்புறம் என்ன சிம்பு பல்லன் என்ற பெயரின் கமலின் கல்யாணராமனாக வந்து நயன் பின்னால் லூசாக அலைகிறார். காதலுக்கு அழகு முக்கியம் இல்லை என்ற மகத்தானக் கருத்தைக் காட்டப் பல்லனாக வருகிறாராம். நயன் மனத்தில் செருப்புத் திருடி இடம் பிடிக்கும் சிம்பு.. நயனின் கட்டிலில் இரண்டு உம்மா கொடுத்து இடம் பிடிக்கிறார். இது எல்லாம் நடக்கும் வரை நயனுக்கு சிம்பு தான் விரிவுரையாளராக இருக்கும் (அதே கல்லூரியில் ஒரு மாணவன் தான் என்பது தெரியாதாம்.. அட நம்புங்கப்பா)
தெரிந்தவுடன் வயதில் தன்னை விட மூன்று வயது சின்னவனான சிம்புவை மணக்க மறுக்கிறார் நயன்.அப்புறம் லூஸ் பையன் தன் காதலியை நினைத்து பல அழகிய அரைகுறை உடை உடுத்திய மாடல் அழகிகளுடன் கவலையாக லூசு பெண்ணே பாட்டு பாடி நம்மையும் கவலைக் கொள்ளச் செய்கிறார்...
இடையில் சிம்புவின் நண்பர் கூட்டணி ஒன்று சிம்புவின் எல்லா லூசுத்தனங்களுக்கும் ஓ போடுவதற்காகவே படம் நெடுக வருகின்றன.
காதல் சந்த்யா, லொள்ளு சபா சந்தானம், சத்யன், ரேடியோ சிட்டி ஆர்.ஜே நண்டு.. அந்த நண்பர் பட்டாளத்தில் கொஞ்சம் வயதுமுதிர்ந்த அங்கிளாக எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, சந்தானம் மற்றும் சேகரின் டைமிங் ஜோக்குகள் சில ரசிக்க படி உள்ளன.
இடைவேளைக்குப் பிறகு வரும் பிளாஷ் பேக்கில்,பள்ளிக்காலத்தில் சிம்புவுக்கு ரிமா சென் மீது காதல் என்றால் ரிமாவுக்கு சிம்பு மீது சைக்கோத் தனமானக் காதல்.இந்தக் காதல் ஒரு கட்டத்தில் முறிகிறது.
அப்புறம் என்ன நீங்க நினைக்கிறது சரி தான்.. சிம்பு படையப்பா ஆகிறார்.. ரிமா நீலாம்பரி ஆகிறார்..( அப்படின்னு நாம நினைச்சுகிட்டுப் படம் பார்க்கணும்) ரிமாவா இது... ஸ்கூல் பொண்ணாய் ரிமா வரும் குளோஸ் அப் காட்சிகளில் அது எதோ ஒரு முதியோர் கல்விக்கூடமோ என்ற சந்தேகம் நமக்குள் எழுவதை நம்மால் தடுக்கமுடியவில்லை. படத்துக்கு எவ்வளவோ செலவு பண்ண தேனப்பன் ரிமா மேக்கப்க்கும் அஞ்சு பத்து அதிகம் பார்க்காமல் செலவு பண்ணியிருக்கலாம். மேக்கபில்லாமல் நடிக்க தைரியம் வேணும் ரிமா.. ஆனா பார்க்க அதை விட தைரியம் அதிகம் வேணும்.
சிம்புவை அடைய ரிமா போடும் திட்டங்களைச் சிம்பு யாரையோ உசுப்பேற்றும் படி பிஞ்ச் டயலாக் எல்லாம் பேசி (ஆமாங்க இது சத்யமா பஞ்ச் டயலாக் இல்ல) சவால் விட்ட படி ஸ்டைலாக யார் மாதிரியோ ஸ்லோ மோஷனில் நடந்து தவிடு பொடி ஆக்குகிறார்.
டைட்டில் கார்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று போடுகிறார்கள் அந்த டைட்டிலுக்குத் தகுந்தப் படி பிஞ்ச்சோ பிஞ்ச் டயலாக்ஸ் தான் போங்க...
நான் கவனிச்ச ஒரு சில பிஞ்சிங் டயலாக்ஸ் இதோ
" நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்ன்னு ஆசைப் படுறே..ஆனா நான் அந்த அம்பானியாவே ஆகணும்ன்னு ஆசைப் படுறேன்."
"நீ என்னையும் என் காதலையும் ஒதுக்கிட்டே.. தூக்கி எறிஞ்சுட்ட.. அதுக்காக நான் போலீஸ் கோர்ட்ன்னு தாடி விட்டுகிட்டு தண்ணியடிச்சுட்டுப் போய் நிப்பேன்னு நினைச்சியா... நான் உன்னைவிட அழகா,கும்ன்னு , ஜம்முன்னு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி வாழ்ந்துக் காட்டுறேன் பாரு..."
இசை யுவன்.. பாடல்கள் எல்லாம் எப்.எம் ரேடியோக்களின் புண்ணியத்தில் ஏற்கனவே சூப்பர் ஹிட். (அந்த நம்பிக்கையிலே தானே படம் பார்க்கவே போனேன்). குறிப்பா டி.ஆர் பாடிய யம்மாடி.. ஆத்தாடி..பாடலில் திரையரங்கம் எழுந்து ஆடுகிறது. டி.ஆரும் இந்தப் பாட்டில் ஆடுகிறார்.
அந்நியன் பாணி முடிவு..ரிமா மனநலக் காப்பகம் செல்கிறார்...அங்கு மூன்று வருடங்கள் இருந்து திருந்தியதாய் பாலகுமாரன்(இவரே வசனம் மன நல மருத்துவராய் தலைக் காட்டுகிறார்.) ஆமோதிக்க திரும்புகிறார்...
ஆனால் அதே லூஸ் பெண்ணாக மீண்டும் சிம்புவைச் சந்திக்கிறார்.... TO BE CONTINUED
என்ற வார்த்தைகள் திரையில் தெரிய திரையரங்கின் வாசல் நோக்கி தலைதெறித்து ஓடிய மொத்த கும்பலில் நானும் ஒருத்தன்.
முதல் பாதியில் லூஸ் பையன் சிம்பு... லூஸ் பொண்ணு நயன் தாரா
அடுத்த பாதியில் லூஸ் பையன் சிம்பு... லூஸ் பொண்ணு ரிமா சென்.
படம் முடியும் போது படம் பார்த்தவங்க எல்லாரும்.... அட நீங்களே புரிஞ்சிக்கோங்க...
மன்மதனில் மனம் கவர்ந்த சிம்பு இதில் இயக்குனராகவும் நடிகராகவும் மிஸ்ஸிங்..
27 comments:
//" நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்ன்னு ஆசைப் படுறே..ஆனா நான் அந்த அம்பானியாவே ஆகணும்ன்னு ஆசைப் படுறேன்."
"நீ என்னையும் என் காதலையும் ஒதுக்கிட்டே.. தூக்கி எறிஞ்சுட்ட.. அதுக்காக நான் போலீஸ் கோர்ட்ன்னு தாடி விட்டுகிட்டு தண்ணியடிச்சுட்டுப் போய் நிப்பேன்னு நினைச்சியா... நான் உன்னைவிட அழகா,கும்ன்னு , ஜம்முன்னு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி வாழ்ந்துக் காட்டுறேன் பாரு..."
//
இதுவா பிஞ்சி வசனம் !
பழத்த வசனம் !
:))
ம் புண்பட்ட மனது !
:)
தேவ்,
ஆக, நான் எதிர்பார்த்த மாதிரிதான் இருக்குன்றீங்க!
படம் ஆரம்பத்துல மஸாக்கிஸ்ட் மனோபாவம் கொண்டவர்களுக்கு மட்டுமேன்னு ஒரு டிஸ்கி போட்டிருக்கலாமோ?
//" நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்ன்னு ஆசைப் படுறே..ஆனா நான் அந்த அம்பானியாவே ஆகணும்ன்னு ஆசைப் படுறேன்."
அம்பானி பொன்னு என்று ரஜினியின் மகளை குறித்தும்.
///"நீ என்னையும் என் காதலையும் ஒதுக்கிட்டே.. தூக்கி எறிஞ்சுட்ட.. அதுக்காக நான் போலீஸ் கோர்ட்ன்னு தாடி விட்டுகிட்டு தண்ணியடிச்சுட்டுப் போய் நிப்பேன்னு நினைச்சியா... நான் உன்னைவிட அழகா,கும்ன்னு , ஜம்முன்னு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி வாழ்ந்துக் காட்டுறேன் பாரு..."
//
தேவதையை கண்டேன் படத்தின் கதையை குத்திக்காட்டி, இந்த இரு வசனங்களும் தனுசை குறி வைத்திருக்கின்றன.
//படம் முடியும் போது படம் பார்த்தவங்க எல்லாரும்.... அட நீங்களே புரிஞ்சிக்கோங்க//
ஒத்தை வரியில நெத்தியடி
// நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்ன்னு ஆசைப் படுறே..ஆனா நான் அந்த அம்பானியாவே ஆகணும்ன்னு ஆசைப் படுறேன்."//
சீ..சீ இந்தப் பழம் புளிக்கும்... நல்ல நகைச்சுவை வசனம்.
//ஆனால் அதே லூஸ் பெண்ணாக மீண்டும் சிம்புவைச் சந்திக்கிறார்.... TO BE CONTINUED
என்ற வார்த்தைகள் திரையில் தெரிய திரையரங்கின் வாசல் நோக்கி தலைதெறித்து ஓடிய மொத்த கும்பலில் நானும் ஒருத்தன்.//
எச்சரிக்கைக்கு மிக்க நன்றி தேவ். இனிமே வல்லவன்னு பேரைக் கேட்டாலே உசாரு தான்.
சந்தியா பற்றி ஒரு வார்த்தயும் சொல்லலையே
Dev Kanna,
Un first..day First show aarvam ennum pogalai nu nenaikirean ..aana nee black ticketla padam paarthu ..upset aanathu un vimarsanam lerthey puriyuthu ..but thanks for saving others from watching ..un vimarsanam oru saturatory warning for Vallavan..naan ethirparthau maathiri than nadanthirrukku ..the rest of the things like Nayan -simbu hearbreak, Simbu to only concentrate on acting will follow ..
TR style la oru (pinch dialogue)
Annanaley (selvarag) azhivan thanusu..aana thanna layei azhivan enthu simbu
expecting your vimarsanams on other diwali releases..
Ravusuparty Ramanathan
வல்லவன் :-))))))0
தேவ்,
விமர்சனத்தை விடுங்க சந்தியானு ஒரு கேரளத்து பைங்கிளிய பத்தி ஒன்னுமே சொல்லாம விட்டு எங்க பிஞ்சு மனச இப்படி பஞ்சர் பண்ணிட்டீங்களே. இது நியாயமா?
தேவ்,
விமர்சனத்தை விடுங்க சந்தியானு ஒரு கேரளத்து பைங்கிளிய பத்தி ஒன்னுமே சொல்லாம விட்டு எங்க பிஞ்சு மனச இப்படி பஞ்சர் பண்ணிட்டீங்களே. இது நியாயமா?
//படம் முடியும் போது படம் பார்த்தவங்க எல்லாரும்.... அட நீங்களே புரிஞ்சிக்கோங்க...//
இத எல்லாம் நாங்க சிம்புவின் ஆரம்ப கால படங்களை பாத்த அப்பவே முடிவு பண்ணியாச்சு. அவரு படத்தை பார்த்து ஒரு 10, 15 நல்லா இருக்குனு சொன்னா தான் அவரு படத்தை பார்ப்பதை பற்றி யோசிக்கவே செய்வோம்.
//ஸ்கூல் பொண்ணாய் ரிமா வரும் குளோஸ் அப் காட்சிகளில் அது எதோ ஒரு முதியோர் கல்விக்கூடமோ என்ற சந்தேகம் நமக்குள் எழுவதை நம்மால் தடுக்கமுடியவில்லை. படத்துக்கு எவ்வளவோ செலவு பண்ண தேனப்பன் ரிமா மேக்கப்க்கும் அஞ்சு பத்து அதிகம் பார்க்காமல் செலவு பண்ணியிருக்கலாம். மேக்கபில்லாமல் நடிக்க தைரியம் வேணும் ரிமா.. ஆனா பார்க்க அதை விட தைரியம் அதிகம் வேணும்.//
:-)
//இதுவா பிஞ்சி வசனம் !
பழத்த வசனம் !
:))
ம் புண்பட்ட மனது !
:) //
கோவி.கண்ணன் பிஞ்சிங் டயலாக் எல்லாத்துக்கும் நீங்க பஞ்சிங் டயலாக்கா பதில் சொல்லிட்டீங்களே. :)))
//படம் ஆரம்பத்துல மஸாக்கிஸ்ட் மனோபாவம் கொண்டவர்களுக்கு மட்டுமேன்னு ஒரு டிஸ்கி போட்டிருக்கலாமோ? //
போட்டுருவோம் பினாத்தாலாரே.. மஸாகிஸ்ட் மனோபாவம்ன்னா என்னன்னு உங்க ஸ்டைல்ல மக்களுக்கு விளக்கமா ஒரு பதிவு போட்டு விளக்கிட்டீங்கன்னா புண்ணியமாப் போகும்ய்யா:))
//அம்பானி பொன்னு என்று ரஜினியின் மகளை குறித்தும்.//
//தேவதையை கண்டேன் படத்தின் கதையை குத்திக்காட்டி, இந்த இரு வசனங்களும் தனுசை குறி வைத்திருக்கின்றன//
வாங்க கார்மேகராஜா தகவலுக்கு நன்றி.:))
நன்றி இளா
//சீ..சீ இந்தப் பழம் புளிக்கும்... நல்ல நகைச்சுவை வசனம். //
:)நன்றி சேவியர்
//எச்சரிக்கைக்கு மிக்க நன்றி தேவ். இனிமே வல்லவன்னு பேரைக் கேட்டாலே உசாரு தான். //
//நல்ல வேலை என் பர்ஸ் தப்பிச்சது. நன்றி அய்யா! //
கைப்புள்ள, மோகன் YOU ARE THE ESCAPE.. ACTUALLY GREAT ESCAPE
அனானி, சிவா, நிலா, சோம்பேறி பையன் - உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி.
சிவா, அனானி - சந்த்யா பற்றி விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளேனே நன்றாகப் பாருங்கள். சந்த்யா சிம்புவோடு வரும் கும்பலில் ஒருத்தராக படம் நெடுக வருகிறார். அவ்வளவே...
//Annanaley (selvarag) azhivan thanusu..aana thanna layei azhivan enthu simbu //
Ramanatha your punch dialogue is routed to Simbhu and TR thru this blog.. They are regular readers of my blog.. can u believe it :)
இந்தப் படத்தைப் பார்த்த துரத்ர்ஷ்ட்டசாலிகளில் நானும் ஒருவன். இடைவேளை வரை எப்போது இடைவேளை வரும் என்று காத்திருந்தேன். இடைவேளைக்குப் பிறகு எப்போது படம் முற்றும் என்று காத்திருந்தேன். சிம்பு படதிற்காகக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.
படத்த பாத்து நொந்து நூலா போன லூசு பையன் களில் நானும் ஒருவன்...
சிம்ப்பு பாணியில் சொன்னா "யார் முதல்ல சொந்தமா படம் எடுக்கரான் கரது முக்கியம் இல்ல... யார் கடசில ஜெயிக்கறான் கரதுதான் முக்கியம்..."
இந்த படமோ இல்ல சிம்ப்புவோ ஜெயிச்சா, தமிழ் சினிமாவ அ ந்த ஆண்டவனாலயும் காப்பாத்த முடியாது...
தீபக், பர்ட் விடுங்க இது தமிழ் சினிமா உலகம் இதுக்குப் போய் இப்படி பீல் பண்ணலாமா?
வருகைக்கும் தருகைக்கும் நன்றி.
//TO BE CONTINUED
என்ற வார்த்தைகள் திரையில் தெரிய திரையரங்கின் வாசல் நோக்கி தலைதெறித்து ஓடிய மொத்த கும்பலில் நானும் ஒருத்தன்.//
மிகவும் ரசித்துச் சிரித்த வரி!
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
விடாம போய் பார்த்தீங்களே,
நீங்க மயிலை மன்னாரை நல்லா படிச்சீங்கன்னு நினைக்கிறேன்!
ச.சா.வி.!
:))
அடுத்து, தர்மபுரியை எதிர்பார்க்கலாமா?
சொ.செ.சூ!
:(
appa unmaiyane loosu yaaru producera? intha mathiri kuppiku eppadingae finance panrangae?
//திரையில் தெரிய திரையரங்கின் வாசல் நோக்கி தலைதெறித்து ஓடிய மொத்த கும்பலில் நானும் ஒருத்தன்.
//
தெகிறியமா முழுபடம் பார்த்தீங்களே அதுக்கே உங்களுக்கு அவார்டு குடுக்கலாம் :-)
லொள்ளு சபா ரசிகர்களுக்கு மிக்க நன்றி..
வல்லவன் சந்தானம் நடித்த அனைத்து லொல்லு சபா விடியோக்களையும் பார்த்து சிரித்து மகிழ இங்கே வருகை தாருங்கள்
Post a Comment