Wednesday, December 06, 2006

தமிழ் பதிவுலகம் 2006 - நம்ம வியூ பாயிண்ட்

வணக்கம் மக்கா,

அட அப்படி இப்படி திரும்பி பார்க்கறதுக்குள்ளே 2006 டிசம்பர் வந்துருச்சு.. வருஷம் முடியப் போகுது.. இந்த வருஷம் எப்படிடா இருந்துச்சுன்னு நமக்கு நாமே திரும்பி பார்த்துக்கறது ஒரு விதத்துல்ல நல்லது.. ஒரு வருஷமா நானும் பதிவுப் போட்டிருக்கேன்.. ப்ல பதிவைப் படிச்சுருக்கேன்.. அதைப் பத்தி பதிவு செய்யவே இந்த பதிவு.. இது நிச்சயமாய் ஒரு விம்ர்சனப் பதிவு அல்ல..

இந்த வருசம் நமக்குத் தெரிஞ்சு ஒரளவுக்கு குழு பதிவுகள் வரத் துவங்கி வெற்றிகரமாச் செயல்படவும் ஆரம்பிச்சு இருக்கு

குழு பதிவுகளில் இந்த வருடம் நான் ஆர்வமாப் படிச்ச பதிவுன்னா அது தேர்தல் 2006... தேர்தல் டைம்ல்ல பல்வேறு கருத்துக்கள், அலசல்கள், செய்திகள்ன்னு பின்னிட்டாங்க... அவங்க உள்ளாட்சி தேர்தல் போது கொஞ்சம் அமைதி ஆயிட்ட மாதிரி எனக்கு ஒரு பிலீங்...

அப்புறம் பார்த்தீங்கண்ணா திராவிட தமிழ்ர்கள்ன்னு ஒரு குழு... அது மேல ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்துச்சு.. இன்னும் இருக்கு.. அவங்க எல்லாம் இன்னும் எழுச்சியாச் செயல்பட்டா நிறைய தகவல் பரிமாற்றங்கள் நடக்கும் அப்படிங்கறது என் தனிப்பட்ட எதிர்பார்ப்பு.

அடுத்து நம்ம சென்னப் பட்டிணம்ங்க.. என்னமா கலக்குறாங்க... ஏற்றமிகு தலைமை.. துடிப்பான உறுப்பினர்கள்.. நான் வளர்ந்து வாழும் சென்னை நகரத்தை மையமாக் கொண்டு பதிவுகள் வரும் இந்த் குழுப் பதிவு நமக்கு ரொம்ப பேவரீட்ங்க.. பதிவுலகைத் தாண்டியும் பதிவாளர்களை இவங்க ஒருங்கிணைக்கச் செய்யும் முயற்சிகள் எனக்கு ஆச்சரியம் தரும் விஷ்யம்.. சென்னைப் பட்டினம் இன்னும் கலக்கணும்...கண்டிப்பாப் பாராட்டியே ஆகணும்.

அடுத்து இப்போத் தான் வளந்து வரும நம்ம விக்கிபிடியாப் பசங்க...நல்ல ஐடியா.. பெரிய பெரிய ஜாம்பவான்கள் ஒண்ணுக் கூடி நம்ம கேள்விக்குப் பதில் சொல்லக் கிளம்பியிருக்காங்க.. நான் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லி ஒரு பதிவை டக்குன்னு போட்டு இவங்களும் நம்ம நம்ம பேவரிட் லிஸ்ட்ல்ல சேந்துட்டாங்க

தமிழை நம்ம மரமண்டைக்கும் புரியற மாதிரி சொல் ஒரு சொல்ன்னு சொல்லிக் கொடுக்குறதும் குழு பதிவுன்னு எடுத்துக்கலாம் ஜி.ராவும் குமரனும் செய்யும் இந்த பணியும் நமக்கு ரொம்பப் புடிச்சு இருக்குங்க..

இயன்ற வரை இனிய தமிழில் எனக்கு வெண்பா வடிக்க சொல்லித் தர்றேன்னு வாக்கு கொடுத்த வெண்பா குழுவும் நான் ரசிச்ச இன்னொரு குழு பதிவு.. வெண்பா வாத்தி இப்போ மிஸ்ஸிங்... யாராவது பார்த்தாச் சொல்லுங்கப்பா

அப்புறம் க.பி.கன்னு ஒரு குழு பதிவு தமாஸ்க்கு தோரணம் கட்டி ஆரம்பிச்சாங்க... என்னத் தான் அதுல்ல உறுப்பினர் ஆக நமக்கு தகுதி இல்லன்னாலும் இதன் ஆரம்பக் கால பதிவுகள் மிகவும் ரசிக்கும் படி இருந்தன. இந்த பதிவு அமைதியாக போனதில் எனக்கு கொஞ்சம் வருத்தமே...

சிரிப்புக்கு மரியாதைக் கொடுக்கும் நம்ம வ.வா.சங்கமும் அப்படிப்பட்ட குழு பதிவுகளில் ஒண்ணுங்கறது எனக்குத் தனிப்பட்ட முறையில்ல ரொம்ப மகிழ்ச்சியைத் தருது..

சங்கத்தின் ஒரு அங்கமா இருக்கும் தமிழ் சங்கமும் 2006ல் தான் ஆரம்பம் ஆச்சு.. அது இன்னொரு சந்தோஷமான விஷ்யம்..

2006இல் தமிழ் பதிவுலகமும் தமிழ் பதிவர்களும் இன்னும் நான் பேச நினைக்கும் விஷயங்கள் தொடரும்

14 comments:

dondu(#11168674346665545885) said...

"அட அப்படி இப்படி திரும்பி பார்க்கறதுக்குள்ளே 2005 டிசம்பர் வந்துருச்சு.. வருஷம் முடியப் போகுது.."

2005 முடிஞ்சு ஏற்கனவே ஒரு வருஷம் ஆச்சுங்கோவ். 2006 இப்போ முடியப்போவுத்ங்கோவ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இலவசக்கொத்தனார் said...

எல்லாம் சரி, ஆனா இந்த வருஷம் 2006 அப்படின்னு இல்ல நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

அது 2005 தான் எனச் சொல்லி என் வயதைக் குறைத்த தம்பி தேவு 100 வருஷம் (+1) வாழ்க!

இலவசக்கொத்தனார் said...

//சங்கத்தின் ஒரு அங்கமா இருக்கும் தமிழ் சங்கமும் 2005ல் தான் ஆரம்பம் ஆச்சு.. அது இன்னொரு சந்தோஷமான விஷ்யம்..

2005இல் தமிழ் பதிவுலகமும் தமிழ் பதிவர்களும் இன்னும் நான் பேச நினைக்கும் விஷயங்கள் தொடரும்//

முதலில் மாற்றினால் போதுமா? கடைசியிலும் மாற்றம் வேண்டாமா?

என்னய்யா? நைட் சரியா தூங்கலையா? :)))

இலவசக்கொத்தனார் said...

//The Posts and comments in this Blog are all nothing but simulation to make viewers smile and laugh. Sangam Owners makes no representation concerning and does not guarantee the source, originality, accuracy, completeness or reliability of any statement, information, data, finding, interpretation, advice, opinion, or view presented. Copyrights Reserved © 2006 Sirippu Sangam. Template by Isnaini Dot Com//

ஆமாம், உம்ம வார்ப்புருவில் சங்கத்தின் டிஸ்க்ளெய்மர் ஏன்?

dondu(#11168674346665545885) said...

"சங்கத்தின் ஒரு அங்கமா இருக்கும் தமிழ் சங்கமும் 2005ல் தான் ஆரம்பம் ஆச்சு.. அது இன்னொரு சந்தோஷமான விஷ்யம்..

2005இல் தமிழ் பதிவுலகமும் தமிழ் பதிவர்களும் இன்னும் நான் பேச நினைக்கும் விஷயங்கள் தொடரும்"

முறையே 2006 .... மற்றும் 2007?

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: இதெல்லாம் சகஜம். புது வருடம் பிறந்த பின்னாலும் செக்குகளில் பழைய வருடத்தை ஒரு மாதம் வரை பழக்க தோஷத்தில் போடுவது நானும் அடிக்கடி செய்வதே.

Unknown said...

கொத்ஸ், டோண்டு சார்

நம்ம பதிவை வாசிக்கறவங்க எல்லாம் உஷாரா இருக்காங்கங்களான்னு டெஸ்ட் பண்ணத் தான் இப்படி டேட்ல்ல நான் மிஸ்டேக் பண்ணேன்ன்னு சொன்னா நீங்க நம்பவாப் போறீங்க... ஆனாப் பாருங்க அது தான் உண்மை...

ஹி.. ஹி...

dondu(#11168674346665545885) said...

நீங்க இதைத்தான் சொல்வீங்கன்னு நான் ஏற்கனவே நினைத்தேன் என்பதும் நிஜமே. :))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

இலவசக்கொத்தனார் said...

எனக்கு என்னமோ இதெல்லாம் வேணுமுன்னே செஞ்சு பின்னூட்டம் தேத்துற வேலை மாதிரி படுது. என்ன? இது எல்லாம் பி.க.வுக்காகத்தானே?

சரி, சொல்ல மறந்துட்டேனே. விக்கி, வெண்பான்னு நம்ம பதிவு ரெண்டு சொல்லி இருக்கீங்க. ரொம்ப நன்றி. :)

G.Ragavan said...

நல்ல திறனாய்வு. மேலோட்டமானது என்றாலும் நல்லதைச் சொல்லும் பதிவு என்று பாராட்ட வேண்டும்.

இன்னொரு குழுப்பதிவைச் சொல்லியே ஆக வேண்டும். முருகனருள் (muruganarul.blogspot.com) என்ற பெயரில் சிபி, எஸ்.கே, குமரன் மற்றும் நான் ஆகியோர் இணைந்து முருகன் பாடல்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். முதலில் எழுத்து வடிவில் கொடுத்தோம். பிறகு ஒலியையும் இணைத்தோம். கடந்த முறை இன்னும் ஒரு புதுமையான் நான் எழுதிய முருகன் கவிதைக்கு ஜெயஸ்ரீ அவர்கள் மெட்டிட்டு பாடி இணைத்தோம். அதற்குப் பின்னணி இசைக்கோர்ப்பு எதுவும் செய்யவில்லை. ஒருவேளை நாளை அதுவும் நடக்கலாம். முருகனருள் இருந்தால். இதில் முருகனை முன்னிறுத்தி மட்டுமே பதிவுகள். அடுத்தவரிடம் குற்றம் கண்டுபிடித்துப் பதிவிடுவதையோ பின்னூட்டமிடுவதையோ தவிர்க்கிறோம்.

Unknown said...

//நீங்க இதைத்தான் சொல்வீங்கன்னு நான் ஏற்கனவே நினைத்தேன் என்பதும் நிஜமே. :))))))))//

அதையும் கண்டுபிடிச்சாச்சா...!!!! ஒரு மனுஷன் வேற எப்படித் தாங்க சிந்திச்சுப் பதில் பேசுறது!!!:)))

Unknown said...

//எனக்கு என்னமோ இதெல்லாம் வேணுமுன்னே செஞ்சு பின்னூட்டம் தேத்துற வேலை மாதிரி படுது. என்ன? இது எல்லாம் பி.க.வுக்காகத்தானே?//

குருஜி கூட இருந்து வித்தை எல்லாம் சொல்லிக் கொடுத்துட்டு இப்படி காக்கிச் சட்டை மாட்டுனவரு கேள்வி எல்லாம் கேட்டா நான் ரொம்ப பாவம் ஆமாச் சொல்லிட்டேன்..

Unknown said...

//சரி, சொல்ல மறந்துட்டேனே. விக்கி, வெண்பான்னு நம்ம பதிவு ரெண்டு சொல்லி இருக்கீங்க. ரொம்ப நன்றி. :)//

இப்போவாது நன்றிங்கற வார்த்தை உங்க நாக்குல்ல இருந்து சிலிப் ஆச்சே சந்தோஷம்ய்யா ரொம்ப சந்தோஷம்

Unknown said...

வாங்க ஜி.ரா,

//நல்ல திறனாய்வு. மேலோட்டமானது என்றாலும் நல்லதைச் சொல்லும் பதிவு என்று பாராட்ட வேண்டும்.//


நன்றி ஜி.ரா

Unknown said...

//இன்னொரு குழுப்பதிவைச் சொல்லியே ஆக வேண்டும். முருகனருள் (muruganarul.blogspot.com) என்ற பெயரில் சிபி, எஸ்.கே, குமரன் மற்றும் நான் ஆகியோர் இணைந்து முருகன் பாடல்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். முதலில் எழுத்து வடிவில் கொடுத்தோம். பிறகு ஒலியையும் இணைத்தோம். கடந்த முறை இன்னும் ஒரு புதுமையான் நான் எழுதிய முருகன் கவிதைக்கு ஜெயஸ்ரீ அவர்கள் மெட்டிட்டு பாடி இணைத்தோம். அதற்குப் பின்னணி இசைக்கோர்ப்பு எதுவும் செய்யவில்லை. ஒருவேளை நாளை அதுவும் நடக்கலாம். முருகனருள் இருந்தால். இதில் முருகனை முன்னிறுத்தி மட்டுமே பதிவுகள். அடுத்தவரிடம் குற்றம் கண்டுபிடித்துப் பதிவிடுவதையோ பின்னூட்டமிடுவதையோ தவிர்க்கிறோம். //

மிக்க நல்ல விஷ்யம் ஜி.ரா.. உங்க இன்னொரு குழு பற்றியும் விரிவாக என் பதிவிலேயே விளக்கம் கொடுத்துட்டீங்க.. இது நம்ம பதிவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே,

tamil10