வணக்கம் மக்கா.
எஸ் பிலிம்ஸ் நம்ம இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் பசுபதி, பரத், பாவனா, ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்..
எஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூன்று தொடர் வெற்றிகளுக்குப் பின் நாலாவதா வந்திருக்கப் படம்..இசை ஜி.வி.பிரகாஷ், (நம்ம சிக்குப் புக்கு ரயிலு பாட்டு பாடுன அந்தச் சின்னப் பையன் தான் இப்போ ஒரளவு வளந்து தனிக் கடைப் போட்டிருக்கார்.) ஆலபம் அப்படின்னு சில வருஷங்களுக்கு முன்னாடி வந்த ஒரு படத்தை இயக்குன வசந்த பாலன் இந்தப் படத்தை இயக்கிருக்கார்.
பைபிளில் கெட்ட குமாரன் கதைன்னு ஒரு கதை இருக்கு (PRODIGAL SON)..அதை ஒத்த ஒரு கதைக் களத்தில் தான் வெயில் திரைப்படத்தின் நிகழ்வுகள் பின்னப்பட்டுள்ளன..ஒரு அழுத்தமானக் கதைக் களத்தைத் தேர்ந்துடுத்த இயக்குனருக்கு நம்ம பாராட்டுக்களைச் சொல்லியே ஆகணும்.
ஒரு மனிதன் ஆசிர்வதிக்கப் பட்டவன்.. இன்னொரு மனிதன் சபிக்கப்பட்டவன்... அவர்கள் இருவரும் சகோதரர்கள்... இது தான் கதை.
சபிக்கப் பட்ட மனிதனின் பார்வையில் கதைச் சொல்லப் படுகிறது. ஆரம்பத்தில் பசுபதியின் ஆர்ப்பாட்டமான அறிமுகத்துடன் துவங்கி..வெயிலோடு விளையாடி பாடலில் பார்வையாளர்களை அப்படியே நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
வெயிலோடு விளையாடி பாடல் இசையும் சரி.. படமாக்கப் பட்ட விதமும் சரி... காமிராவில் ஒரு ஓவியமே எழுதியிருக்காங்கப்பா..தென் தமிழ் நாட்டு கிராம வாழ்க்கையை அந்தப் பாடல ஒரு ஆல்பமாக்கி நம் கண்களுக்கு விருந்து வைக்கிறது.
அதற்குப் பின் படம் கொஞ்சம் வேகம் குறைகிறது..பள்ளிக்கூடத்தைக் கட்டடித்து விட்டு வாத்தியார் படத்தை வாயில் சிகரெட் புகைத்தப் படி (ஆமா வாத்தியார் ரசிகர்கள் அவ்வளவா தம் அடிக்க மாட்டாங்கன்னு ஒரு பேச்சு அது பொய்யா) பார்த்து அப்பாவிடம் பிடிப்பட்டு அப்பாவின் அடக்கு முறைக்கு ஆளாகி அவமானப்பட்டு வீட்டில் இருந்து ஊரை விட்டு பணம் நகைத் திருடிக் கொண்டு ஓடுகிறான் அண்ணன் முருகேசன். கரெக்ட் நீங்க எதிர்பார்க்கிற மாதிரியேத் தான் பணம் நகைத் தொலைத்து ஒரு தியேட்டரில் தஞ்சம் அடைகிறான்.. அங்கேயே வேலைச் செய்கிறான்..தியேட்டர் ஆப்பரேட்டராக வளர்கிறான்..( எதிர் ஹோட்டல் காரப் பெண்ணை காதலிக்கிறான்...(ஓட்டல் கார புதுமுகமாய் நடித்திருக்கும் பெண் பழைய ஜானி படம் தீபாவை ஞாபகப் படுத்துகிறார்)
இந்தக் கட்டத்தில் திரையரங்கக் காட்சிகள் என்ற பெயரில் திரைப்படங்களின் ட்ரெயிலராய் ஓட்டித் தள்ளுகிறார் இயக்குனர். ஏன் சார் உங்க படத்தைப் பாக்க வந்தா ஏற்க்னவே பார்த்து முடிச்ச்ப் படத்தை எல்லாம் விடாம மறுபடியும் பாக்க வைக்கிறீங்க.. நாங்க என்ன பரீட்சைக்கு ரிவிஷன் பண்ணவா தியேட்டருக்கு வந்தோம்.)
காதல் தியேட்டர் என ஒரு சீராக ஓடும் முருகேசனின் வாழ்க்கையில் மீண்டும் விதி விளையாடுகிறது.. காதல் தோல்வி, காதலியின் மரணம்,(பாவம்ய்யா அந்தப் புது முகம் இப்படி அநியாயமாச் சாகடிச்சிட்டீங்களேய்யா) தியேட்டர் மூடல் என மீண்டும் சாப செண்டிமெண்ட் தாய பாஸ், பல்லாங்குழி பரம் பதம் என எல்லா டைப் கேம்ஸும் விளையாடி அதுவும் களைப்படைஞ்சு.. படம் பாக்குற நம்மையும் களைப்படைய வச்சு காபி தண்ணி தேட வைச்சுருது. குறிப்பா அந்தக் காதல் தோல்வி காட்சிகள் காதல் படக் கிளைமாக்ஸ் காட்சிகளை நினைவுப் படுத்தி ஏன்ய்யா இப்படி கொலைவெறி உங்களுக்கு படம் பாக்க வந்த எங்க மேலன்னு கதற விட்டுருது
அதே நேரம் முருகேசனின் தம்பி கதிர் தொட்டதெல்லாம் துலங்க.. விளம்பர நிறுவனம் ஆரம்பித்து ஆஹா ஓகோன்னு வளர்கிறான். வள்ரும் போது தொழில் போட்டி வலுக்கிறது. வெட்டுக் குத்து என நீள்கிறது. இடையில் அவனுக்கும் ஒரு காதல்.
இந்நிலையில் எல்லாம் தொலைத்து பரதேசியாக வீடு திரும்புகிறான் முருகேசன். தந்தையின் வெறுப்பு தணியாமல் அவனை இன்னும் வாட்டி வதைக்கிறது, ஆனால் தம்பி கதிர் அண்ணனைக் கொண்டாடுகிறான். தம்பியின் பாசத்துக்குக் கட்டுபட்டு முருகேசன் உள் வீட்டில் உடன் பிறந்த தங்கைகளின் அலட்சியத்தையும் தாங்கிக் கொண்டு இருக்கிறான்.
(அண்ணனை பாசமாப் பார்க்கும் அண்ணனுக்கு எதாவ்து வேலை கீலைச் செய்ய துவங்க ஓத்தாசப் பண்ணலாமில்ல.. கை கால் எல்லாம் திடகாத்திரமாய் இருக்கும் முருகேசனின் நிலையைப் பார்த்து பரிதாபத்திற்குப் பதில் நமக்கு எரிச்சலே மிஞ்சுகிறது... ஏன் டிரைக்டர் சார்.. சென்டிமென்ட் சிம்பதின்னு லாஜிக்கை லாக்கர்ல்ல வச்சி பூட்டிட்டுத் தான் படம் எடுப்பீங்களா?)
முருகேசனுக்கு இன்னொரு ஆறுதல் அவன் சிறு வயது தோழி பாண்டியம்மாள் ( லைட்டா அழகி வாசம் வீசுது இந்த பாண்டிம்மாகிட்ட..தன்னோடச் சுய கவுரவமே கேலிக்குரியதா இருக்க அவர் தெருவில்ல பம்பரம் விளையாடுற மாதிரி காட்டுறது எல்லாம் ஏன்ய்யா? அவர் மனக்கஷ்ட்டத்தோட பாவம் தீப்பொட்டி செஞ்சு கஷ்ட்டபடுர்ற ஸ்ரேயா கையிலே பம்ப்ரம் விடுறது எல்லாம் எப்படிங்க திங்க் பண்றீஙக...?
அப்புறம் என்ன தம்பி கதிரின் தொழில் போட்டியில் அண்ணன் முருகேசன் உயிர் கொடுத்து தம்பியைக் காப்பாற்றி தியாகி ஆகிறார். கடைசியிலெ எல்லாரும் அழுகிறார்கள். வழக்கம் போல் இருக்கும் போது அவ்னை மன்னிக்காத அவன் அப்பாக் கூட அவன் இறந்தப் பிறகு அவ்னுக்கு இரங்கல் போஸ்ட்டர் ஒட்டுவதாய் படம் முடிகிறது.
தோற்றுப் போன மனிதன் முருகேசனாய் பசுபதி சும்மா நடிப்பில் பந்தி பரிமாறி இருக்கார். காதல் காட்சிகளில் மனிதர் ஒரு ரொமாந்ச் லுக் ட்ரை பண்ணியிருக்கார். ஆனாலும் பசுபதியின் வெற்றி என்னவோ ஒரு தோல்வி அடைந்த மனிதனாகவே எழுந்து நிற்கிறது.
தம்பி கதிராக பரத்.. சுறுசுறு பட்டாசு... சும்மாக் கொளூத்திப் போட்டிருக்காங்க.. அவரும் வாங்குன சம்பளத்துக்கு வஞ்சனை இல்லாம ஆடுறார்.. சண்டைப் போடுறார்.. பைக் ஓட்டுறார்.. நடிக்கவும் செஞ்சிருக்கார்.
பாவனா.. பரத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து நடுங்கிப் பின் பரத்தைப் பிடிச்சிருக்குன்னுச் சொல்ல்க் காதலிக்கும் ப்ச்சைக் கிளியாக அவ்ருக்குக் கிடைத்த பாத்திரத்தில் பச்சக்குன்னு மனதில் இடம் பிடிக்கிறார்.
ஸ்ரேயா ரெட்டி.. வாழ்க்கையில் தோற்ற ஒரு மனிதன் மீது பரிவும் நட்பும் கொண்ட ஒரு தோழி பாத்திரத்தில் கொஞ்சமே வருகிறார்.. அவர் பங்குக்கு ஓ.கே..
இது தவிர படத்தில் அம்மாவாக வரும் டி,கே.கலா, அப்பாவா பிடிவாதம் பிடிக்கும் குமார்.. அந்த கிருதா வில்லன் என அவரவர் பாத்திரங்களில் நல்லாவே நடிச்சிருக்காங்க...
இசையில் வெயிலோடு விளையாடி.. உருகுதே மருகுதே... காதல் தீயின் நடனம்.. போன்ற பாடல்கள் ஜி.வி.பிரகாஷ்க்கு ஒரு நல்ல விசிட்டிங் கார்ட் தான்.
கேமரா மதி கலக்கியிருக்கார். போஸ்ட்டரே மிரட்டலா இருக்குதுங்க...
சரி இவ்வளவு இருந்தும் வெயில் படம் ஓடும் போது சீட்ல்ல நெளிய வேண்டியதா இருக்கே ஏன்ய்யா?
அட ஒவ்வெரு அஞ்சு நிமிசத்துக்கும் ஒரு தரம் வாட்ச் பார்க்க வேண்டியதா இருக்க ஏன்ய்யா?
லேசாத் தலை வலிக்கற மாதிரி இருக்கே ஏன்ய்யா?
ம்ஹும் இத்தனை ஏன்களும் இயக்குனர் வசந்த பாலனுக்கு அனுப்பப் படுகின்றன...
நல்ல நடிகர்கள்.. நல்ல பேனர்...நல்ல் டெக்னிஷ்யன்கள் இருந்தும்... திரைக்கதையில் ஆங்காங்கு சென்டிமென்ட் என்ற பெயரில் தெரியும் எக்ஸ்ட்ரா லார்ஜ் லாஜிக் ஓட்டைகள்..படததை முழுசா ரசிக்க விடாமல் நம்மை தடுக்கிறது...
காலம் மாறுதுங்க... அதுக்கு ஏத்தாப்புல்ல நீங்களும் கொஞ்சம் வேகமா.. கலக்கலா கதையைச் சொல்லுங்க...
நான் பார்த்த வரைக்கும் சொல்லணும்ன்னா...
ஆரம்பம் எல்லாம் நல்லாத் தான் இருந்துச்சி.. அப்புறம் இடையிலே திரைக்கதைக்கு வச்ச ஆப்பு.. அப்பப்பூ..
பி.கு: இந்தப் படத்தில் சிறுவர்கள் தம்மடிக்கும் காட்சி சர்வசாதரணமாகக் காட்டப் படுகிறது.. இது தப்பில்லையா.. விவரம் தெரிஞ்சவங்கச் சொல்லுங்கப்பா
21 comments:
ஆல்பம் படத்திலேயே நீங்கள் கூறிய குறைகள் சற்று அதிகமாகவே தெரிந்தது. வசந்தபாலன் இயற்கையிலேயே "செண்டிமெண்ட்" அதிகம் இருக்கிறவர். பாடல் வெளியீட்டு விழாவிலேயே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். இன்னும் படம் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும். நன்றி
வினையூக்கி
அன்புள்ள தோழா... !
‘வெயில்’ பட விமர்சனம் பார்த்தேன்…
மிக நன்று…
படத்தை அலசியிருந்த விதமும், சாதக – பாதகங்களைச் சொன்ன முறையும் அசத்தலாக இருந்தன.
எனக்குத் தோன்றுவது இதுதான்.
பசுபதி ஒரு Extra-talented artist. அவரையும் ஒரு சில படங்களிலேயே பிழிந்து எடுத்துவிட்டு… Variety-யே இல்லை என்று ஓரங்கட்டி விடுவார்களோ என்று அஞ்சுகிறேன். இதற்கு முன்னால் இப்படி ஓரங்கப்பட்டவர்கள்தான் கரனும், ரஞ்சித்தும்…
அதேபோல், அசாத்தியத் திறமையிருந்தும், சரியான நேரத்தில் சுதாரித்துக் கொண்டவர்களில் நாசரும், விஜயகுமாரும் இருவர்.
பசுபதி, பிழைத்துக் கொள்வார் என்று நம்ப விரும்புவது என் ஆசை…
ஒரு மிக நல்ல விமர்சனம். Thanks...
+ நேசத்துடன்… இரா. அரங்கன்…
ஆக மொத்தம் ஒரு படம் விடறது இல்லை. இப்படி தமிழ் திரையுலகைத் தனியாகத் தன் தோளில் தாங்கும் தம்பி தேவுக்கு என் நன்றி.
தேவ்,
நல்லா இருக்கு விமர்சனம்,
கொத்ஸ் கேட்டமாதிரி ஒரு படத்தே கூட பார்க்கமே விடுறது கிடையாது போலே.... :-)))
படம் பாத்துட்டீங்களா? நான் அடுத்த வாரம் பாக்கலாமான்னு யோசிக்கிறேன்.
கடைசிப் படம்..பசுபதியும் பாண்டியம்மாளும் ஜூஸ் குடிக்கிற எடத்தப் பாத்தா விருதுநகரு மாதிரி இருக்கு!
நல்ல விமர்சனம்.
ஆனா என்னோட நண்பன் படம் சூப்பர். என்னால அந்தப் படத்தோட சிந்தனையிலிருந்து மீள முடியல. அப்டி, இப்டின்னு கத விட்டான்...
விமர்சனங்றதே ஒருத்தரோட தனிப்பட்ட எண்ணம்தானே. ஒருத்தருக்குப் புடிக்கிறப் படம் இன்னொருத்தருக்குப் புடிக்காது. அப்டி எல்லாருடைய ரசனையும் ஒன்னா இருந்துட்டா அப்புறம் எல்லாமே நல்லப் படமாதான் இருக்கும்.
வாங்க வினையூக்கி,,
//ஆல்பம் படத்திலேயே நீங்கள் கூறிய குறைகள் சற்று அதிகமாகவே தெரிந்தது.//
நான் ஆல்பம் படம் பார்த்ததில்லை.. ஆனால் நீங்கள் சுட்டிய இதே செய்தியை என்னோடு வெயில் படம் பார்த்த நண்பரும் சொன்னார். இயக்குனர் ஷங்கரும் இந்தத் தவறுகளைச் சுட்டிக் காட்டியதாகவும் குறிப்பிட்டார்.
//வசந்தபாலன் இயற்கையிலேயே "செண்டிமெண்ட்" அதிகம் இருக்கிறவர். பாடல் வெளியீட்டு விழாவிலேயே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்.//
:))
//இன்னும் படம் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.//
கண்டிப்பாகப் பாருங்கள்.. வழக்கமான தமிழ் சினிமாவை விட்டு வெளியே வர இயக்குனர் முயற்சித்திருக்கிறார்..
வாங்க அரங்கன்,
//அன்புள்ள தோழா... !
‘வெயில்’ பட விமர்சனம் பார்த்தேன்…
மிக நன்று…
படத்தை அலசியிருந்த விதமும், சாதக – பாதகங்களைச் சொன்ன முறையும் அசத்தலாக இருந்தன.//
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க
//எனக்குத் தோன்றுவது இதுதான்.
பசுபதி ஒரு Extra-talented artist. அவரையும் ஒரு சில படங்களிலேயே பிழிந்து எடுத்துவிட்டு… Variety-யே இல்லை என்று ஓரங்கட்டி விடுவார்களோ என்று அஞ்சுகிறேன். இதற்கு முன்னால் இப்படி ஓரங்கப்பட்டவர்கள்தான் கரனும், ரஞ்சித்தும்…
அதேபோல், அசாத்தியத் திறமையிருந்தும், சரியான நேரத்தில் சுதாரித்துக் கொண்டவர்களில் நாசரும், விஜயகுமாரும் இருவர்.
பசுபதி, பிழைத்துக் கொள்வார் என்று நம்ப விரும்புவது என் ஆசை…//
நானும் அதையே வழிமொழிகிறேன்... மஜா படம் பார்த்து இருக்கீங்களா அதுல்ல பசுபதியீன் காமெடி டாப்பாக இருக்கும்.. இப்படிப் பல முகம் கொண்ட ஒரு நடிகன் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருப்பது ஒரு நல்ல விஷ்யம்..
//ஒரு மிக நல்ல விமர்சனம். Thanks...// மீண்டும் நன்றி அரங்கன்
தொடர்ந்து வாங்க உங்க கருத்துக்களைப் பகிருங்க..
//ஆக மொத்தம் ஒரு படம் விடறது இல்லை. //
தலைவரே நான் தமிழனங்கோ!!!
//இப்படி தமிழ் திரையுலகைத் தனியாகத் தன் தோளில் தாங்கும் தம்பி தேவுக்கு என் நன்றி. //
இப்படி எல்லாம் சொன்னா என் கூட எல்லா படத்துக்கும் வந்து டிக்கெட்டும் எடுக்குற என் நண்பர் கோச்சுக்கப் போறாரு:)))
//தேவ்,
நல்லா இருக்கு விமர்சனம், //
டாங்க்யூ ராயலாரே
//கொத்ஸ் கேட்டமாதிரி ஒரு படத்தே கூட பார்க்கமே விடுறது கிடையாது போலே.... :-))) //
ம்ம்ம் கொத்ஸ் பக்கம் எதோ தீஞ்சுப் போன வாசம் வருது என்னன்னு கேளும்ய்யா ராயலாரே!!!
//படம் பாத்துட்டீங்களா? நான் அடுத்த வாரம் பாக்கலாமான்னு யோசிக்கிறேன்.//
ஜி.ரா, நிச்சயமாப் பாருங்க...உங்கப் பாரவையில் படம் எப்படின்னு தெரிஞ்சிக்க நானும் ஆர்வமா இருக்கேன்.
//கடைசிப் படம்..பசுபதியும் பாண்டியம்மாளும் ஜூஸ் குடிக்கிற எடத்தப் பாத்தா விருதுநகரு மாதிரி இருக்கு! //
பெருந்தலைவரின் பிறப்பிடமே தான் சந்தேகம் வேண்டாம்
"Nanga enna paritchaiku revision pannava theatre ku vanthom" nalla arumaiyaana varigal dev. comedy aah comment kuduthirukeenga so intha movie is also in cancel list :)))))) rasigai
நிச்சயம் எங்க தல பசுபதிக்காகவே பார்க்கப் போனேன். கலக்கியிருக்கிறார். ஆனால், தவமாய் தவமிருந்து போல இழுவையை குறைத்திருக்கலாம். தியேட்டரில் எல்லோரும் நெளிகிறார்கள்.
மொத்தத்தில் ஒரு நல்ல படம் தான்.
//"Nanga enna paritchaiku revision pannava theatre ku vanthom" nalla arumaiyaana varigal dev. comedy aah comment kuduthirukeenga so intha movie is also in cancel list :)))))) rasigai //
வாங்க ரசிகை, டக்குன்னு கேன்சல் லிஸ்ட்க்கெல்லாம் கொண்டுப் போயிராதீங்க.. சென்டிமெண்ட் படங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் தாராளமாப் போய் பாருங்க..
//நிச்சயம் எங்க தல பசுபதிக்காகவே பார்க்கப் போனேன். கலக்கியிருக்கிறார்.//
அட உங்களுக்கும் பசுபதி நடிப்பு பிடிக்குமா கைகொடுங்க
//ஆனால், தவமாய் தவமிருந்து போல இழுவையை குறைத்திருக்கலாம். தியேட்டரில் எல்லோரும் நெளிகிறார்கள்.//
கரெக்ட்
//மொத்தத்தில் ஒரு நல்ல படம் தான்.//
ம்ம்ம் ஒரு நல்ல படம் ஜ்ஸ்ட் மிஸ் என்பது என் கருத்து சீனு
போர்வாள்,
விமர்சனம் நல்லா இருந்தது. கொஞ்சம் அதிகமாவே தொவச்சிட்டிங்க போலருக்கு.
நீங்கள் சொல்வது போல செண்டிமெண்ட் காட்சிகள் பல தொல்லைப்படுத்தியது உண்மைதான். பசுபதியின் திறமையான நடிப்பால் அவ்வளவு மோசமானதாக தெரியவில்லை.
இடைவேளைக்கு பிறகு திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். படம் பெருசா இருக்கறமாதிரி தோண வெச்சிடுச்சி.
ரசிக்க வைக்கும்காட்சிகள் நிறைய இருந்ததால் நூட்ரல்ல வுடுவோம்.
http://penathal.blogspot.com/2006/12/20-dec-06.html
பினாத்தலாரும் படம் பார்த்துவிட்டார், விஅம்ர்சனமும் எழுதிவிட்டார்.
என்ன, பெரும்பாலும் ஒத்துப்போனாலும், Final Verdict வேற வேற மாதிரி கொடுத்திருக்கோம்;-(
படத்தை அதிகமாகவே துவைத்து காய போட்டு இருக்கிறீர்கள்.
சராசரி ரசிகனை சற்றே நெளிய வைக்கும் படம்தான் என்றாலும் கதையின் களம் தோற்ற ஒருவனுடைய கதை போன்ற களங்களால் படம் கவன ஈர்ப்பினை பெறுகிறது.
ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.
//விமர்சனம் நல்லா இருந்தது. கொஞ்சம் அதிகமாவே தொவச்சிட்டிங்க போலருக்கு.
நீங்கள் சொல்வது போல செண்டிமெண்ட் காட்சிகள் பல தொல்லைப்படுத்தியது உண்மைதான். பசுபதியின் திறமையான நடிப்பால் அவ்வளவு மோசமானதாக தெரியவில்லை.
இடைவேளைக்கு பிறகு திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். படம் பெருசா இருக்கறமாதிரி தோண வெச்சிடுச்சி.
ரசிக்க வைக்கும்காட்சிகள் நிறைய இருந்ததால் நூட்ரல்ல வுடுவோம். //
வாங்க தம்பி,
ஒரு புதிய கதை களம். புதிய சினிமா முயற்சி நிச்சயமா நாமப் பாராட்டியே ஆகணும். ஆனா என்ன இன்னும் கொஞ்சம் சிரத்தையாச் சில விஷயங்கள்ல்ல கவனம் செலுத்தி இன்னும் அருமையானப் படமாக் கொடுத்துருக்கலாம் அப்படிங்கறது தான் என்ன்னோட ஆசை. அதைத் தான் சொல்லியிருக்கேன்.
மத்தப் படி நீங்க சொல்லியிருக்க மாதிரி நியுட்டராலவே விட்டுருவோம் ரைட் ரைட்
//http://penathal.blogspot.com/2006/12/20-dec-06.html
பினாத்தலாரும் படம் பார்த்துவிட்டார், விஅம்ர்சனமும் எழுதிவிட்டார்.//
பினாத்தாலரின் விம்ர்சனம் படித்தேன் ரசித்தேன் :)
//என்ன, பெரும்பாலும் ஒத்துப்போனாலும், Final Verdict வேற வேற மாதிரி கொடுத்திருக்கோம்;-( //
பினாத்தாலரே.. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு வெயில் தற்போதைய நிலவரப் படி வெற்றி படமே :)
//படத்தை அதிகமாகவே துவைத்து காய போட்டு இருக்கிறீர்கள்.
சராசரி ரசிகனை சற்றே நெளிய வைக்கும் படம்தான் என்றாலும் கதையின் களம் தோற்ற ஒருவனுடைய கதை போன்ற களங்களால் படம் கவன ஈர்ப்பினை பெறுகிறது.
ஒரு முறை பார்க்க வேண்டிய படம். //
சாத்வீகன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
படம் ரசிகர்களால் ஏற்று கொள்ளப் பட்டு வெற்றிகரமாக ஓடிக்கிட்டு இருக்குதுங்க.. முன்னாடியே நான் கொடுத்த விளக்கம் மாதிரி இன்னும் கொஞ்சம் மென்க் கெட்டிருந்தால் படம் இன்னும் உயரங்களை நிச்சய்ம் தொட்டிருக்கும் அந்த ஆதங்கமே என் விம்ர்சனம்.
Post a Comment