தலைவர் கொத்ஸ் வழக்கம் போல நம்ம சட்டையைப் பிடிச்சு இழுத்து இந்த எட்டுக்குள்ளேத் தள்ளி விட்டுட்டார்..இப்போ கையிலேக் குச்சியை வச்சுகிட்டு எங்கப்பா எட்டு... சீக்கிரம் போட்டுக் காட்டுன்னு மிரட்டுறார்....இந்தா நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ அவரும் வாய்யான்னு கூப்பிடுறார் எட்டு போட
என் வாழ்க்கையிலே நடந்த பல சத்திய சோதனைகளை உங்க கிட்ட சொல்லுறேன்...(இப்படி நானும் சொல்லணும்ன்னு எம்புட்டு நாள் விட்டத்தைப் பாத்து யோசிச்சுருப்பேன்)..
1.வியாபாரம்ன்னா நமக்கு சிறு வயசுல்ல இருந்து உசுருங்க..ஆனா அதுக்கு வந்தச் சத்திய சோதனைகள் ஏராளம்ங்க...எட்டாம் கிளாஸ் படிக்கும் போது...நான் சொந்தமாப் படிக்க வச்சிருந்தக் கதைப் பொஸ்தகம் அப்புறம் எங்க அப்பாரு படிக்க வச்சிருந்தப் பொஸ்தகம் எல்லாம் நிறையக் கிடக்குறதைப் பார்த்ததும் நம்ம மனசுல்ல வியாபார திட்டம் ஒண்ணு ஒகோன்னு வளர ஆரம்பிச்சது....பெரிய அட்டை ஓண்ணை ரெடி பண்ணி அதுல்ல "தேவ் லெண்டிங் லைப்ரரி"ன்னு பெருசா எழுதி வீட்டு வாசல்ல தொங்க விட்டு..கஷ்ட்டப் பட்டு கஸ்டமர் எலலாம் புடிச்சு ஆளுக்கு அஞ்சு ரூவா வசூல் பண்ணி உறுப்பினராச் சேத்து வியாபாரத்தை விஸ்தரிக்க யோசிக்கும் போது வந்தது காப்பரீச்சை...
கணிதத் தேர்வுன்னு நினைக்குறேன்...நமக்கு கணித அறிவு ஆறாம் அறிவுக்கும் அப்புறமா ஆண்ட்வன் வைக்க மறந்த அறிவு..எங்கப்பா (ஸ்கூல் வாத்தியார்) தான் நமக்கு ட்யூஷன் மாஸ்டர்.. கொட்டு வாங்கி கதற கதற் படிச்சிட்டு இருக்கும் போது கட்டையிலே போற கஸ்டமர் வந்து கதவு பக்கம் நிக்குறான்..கஸ்டமர் சர்வீசா கணிதமான்னு சத்திய சோதனை எனக்கு....பட்டுன்னு நடு மண்டையிலே விழுந்தக் கொட்டுல்ல.. என் முதல் வியாபாரம் மூட்டைக் கட்டி மூலைக்குப் போனது...
கிட்டத்தட்ட அழுதுகிட்டே அஞ்சு ரூவாயை ரிபண்ட் பண்ணிட்டு கணக்குப் பாடத்து ரிவிசனுக்குத் திரும்புனேன்...அதுக்குப் பின்னாடியும் நம்ம வியாபார ஆசைகள் தொடர்ந்ததும் விதியின் வில்லத்தனம் என்னோடு மோதியதில் போனா போகுதுன்னு நான் விட்டுக்கொடுத்ததும் பின்னாளில் நான் எழுதப் போகும் என் வரலாற்றில் விரிவாய் படித்து அறிந்துக் கொள்ளுங்கள்..
2.சென்னைக் கச்சேரின்னு பெயர் வச்சு பதிவுப் போட்டாலும், நமக்கு பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்ங்கற ஊர்பககம் இருக்க் குளத்துக்குடியிருப்புங்கற குக்கிராமம்ஙக்... ஒரு குளமும் அந்தக் குளத்தின் கரையில் இருக்கும் ஒரு சின்ன நிலப்பரப்பளவு கொண்டது எங்க பூர்வீக கிராமம்... (குளம்ன்னா சும்மா மைல் கணக்குல்ல நீண்டு கிடக்குற குளம், கடம்பாக் குளம்ன்னு பேர்).. சிறு வயசுல்ல அந்த ஊர பெரியவர்கள் நமக்கு வச்ச பட்டப் பேர் மெட்ராஸ்காரன்... எலேய் மெட்ராஸ்காரா எப்போ வந்தா? அந்த அன்பானக் குரல்கள் என் வேர்களின் விலாசம் என நம்புகிறேன்... கிட்டத்தட்ட பத்து வ்ருசம் கழிச்சு இந்த முறை என் மகளோடு என் மூதாதையர் மண் பார்க்க ஊர் போனப் போது.. அந்த குரல் கேட்ட வீதிகளின் வெறுமை என்னை உலுக்கியது... வீடுகள் கேட்பாரற்று கிடந்தது மனத்தைக் குடைந்தது... ஒரு பக்கம் சென்னையின் வேகம்.. இன்னொரு பக்கம் கிராமங்களின் வெறுமை...
எதாவது செய்யணும்ய்யா அப்படின்னு அடிக்கடி மனசு சொல்லுது..
3.நமக்கு ரொம்ப பிடிச்ச விளையாட்டு கபடி...கடைசியா விவேகானந்தாக் கல்லூரி துறைகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் களம் இறங்கி... எதிர் அணி கொஞ்சம் கூட இவு இரக்கம் பார்க்காமல் கதற கதற கை கால்ன்னு அமுக்கி அழுத்தி.. இன்னும் சொல்ல முடியாத கொடுமை எல்லாம் பண்ணி...உச்சக்கட்ட ரவுசா அம்பையரைக் கைக்குள்ளேப் போட்டு எங்களைத் தோற்கடித்து அனுப்பியது இன்னும் மனத்தின் ஓரம் ஒரு மில்லி மீட்டர் வடுவாய் மீதம் உள்ளது.. இப்போவோவும் கபடி ஆட ஆசை இருக்கு.... இந்த வேகமான வாழ்க்கையில் அதுக்கு எல்லாம் நேரம் தான் மிச்சமில்ல...
4.பகல்ல குத்துப் பாட்டு கேட்டாலும்.. ராவுல்ல ராசாத் தாலாட்டு தான் சொகம்ன்னு நம்புற கோடிக்கணக்கான ராசா ரசிகர்கள்ல்ல நானும் ஒருத்தன்... ராசா சென்னையிலே இசை நிகழ்ச்சி நடத்துனப்போ 2500 ரூபாய் சொந்தக் காசு போட்டு டிக்கெட் எடுத்து அஞ்சு மணி நேரம் ராகதேவனின் மழையில் நனைந்தது வாழ்க்கையின் சுவையான அனுபவத்தில் ஒன்றுன்னா.. சென்னையில் நம்ம ரஹமான் க்ச்சேரி பண்ணப்போ ஆபிஸ்க்கு (நைட் ஷிப்ட்) அல்வா கொடுத்துட்டு நம்ம நட்பு வட்டத்தோடப் போய் கால் நோக நோக ஆட்டம் போட்டது இன்னொரு வித்தியாசமான அனுபவம்... இசைன்னா நாங்க அவ்வளவு இளிச்சவாய்த் தனம் புடிச்சவங்கன்னு சொல்ல வந்தேன்.. புரிஞ்சுக்கங்க..
5.அரசியல்ல அப்படி ஒரு ஆர்வம் நமக்கு.. எட்டாம் கிளாஸ்ல்ல கணக்கு அறிவு கொஞ்சம் கம்மியானப் போனக் காரணத்தால... கள்ள ஓட்டுப் போட்டு கூட இருந்த நண்பர்களாலே தோற்கடிக்கப்பட்ட ஒரு நல்லவன் பதிவை இப்போ நீங்க எல்லாம் படிச்சுட்டு இருக்கீங்க...எல்லாம் ஒரு சாக்லேட் பிரச்சனையாலே கிளாஸ் லீடர் தேர்தலில் நூல் இழையில் தோற்று போனேன்..வகுப்புக்கு வராதவன் ஓட்டையும் போட்டு என் கிளாஸ் லீடர் கனவில் பெரிய ஓட்டையைப் போட்டார்கள்... என்னய மாதிரி எனக்கு சிவிக்ஸ் (குடுமியல்) எடுத்த டீச்சரும் கணக்குல்ல கோட்டைய விட்டாங்க...நான் கோட்டைக்குப் போக முடியல்ல அன்னிலிருந்து அரசியலை ஆழமாய் பார்க்கத் தொடங்குனேன்... இன்னும் ஆழமாப் பாத்துகிடே இருக்கேன்... நம்ம பன்னிக்குட்டி ராமசாமி சொல்ற மாதிரி அரசியல்ல நான் தோத்தது எல்லாம் ரொம்ப சாதாரணம் அப்பா
6.திட்டம் போடாம தேசந்தரமாப் பயணம் போறதுன்னா.. எடு வண்டின்னு ரைட் விடுற அளு நானு.. யோசிக்காம.. சும்மா ஒரு நாள் நாடு நகரம் காடு கரை எல்லாம் சுத்தலாம்ன்னு சொல்லி கிளம்புறது கல்லூரிகாலத்துல்ல இருந்து பழகுன விசயம்.. இன்னுமும் தொடருது.. அப்படி போய் வந்த பயணங்களில் மறக்க முடியாதது கர்னாடகா மாநிலத்திலுள்ள ஜாக் நீர்வீழ்ச்சி தான்.. சும்மா 2 கீலோ மீட்டருக்கு அதிகமான ஆழமானப் பாதையில் அருவி விழும் இடம் தரிசிக்கும் ஆவலில் இறங்கி உயிருக்குச்ச் சேதம் இல்லாம திரும்புனது எங்க குடும்பத்து மக்கள் செஞ்சப் புண்ணியம்ன்னு நினைக்கிறேன்..இப்படி பயணம் போகும் போது சுமோ மாதிரி வண்டிகள் எடுத்துட்டுப் போறது பழக்கம்.. அந்த ஓட்டுனரோடு ஐக்கியமாகி உள்ளூர் தகவல்கள் வாங்குவது சுவரஸ்யமான விசயம்..சில சமயம் புயல் மழை பாதை தவறி போய் இப்படி சில இரவுகளைச் சாலையோரம் வண்டியிலே கழித்த அனுபவமும் உண்டு.. மொத்தத்தில் நமக்கு பயணப்பித்து ஜாஸ்திங்கோ..
7.எந்த மதத்தில் பிறந்து வளர்ந்தேனோ அந்த மதம் எனக்குச் சொன்னக் கடவுளை ஆழமாய் நம்பும் ஆத்திகன் நான்.. அப்படி இருந்தாலும் என் மதம் சார்ந்த மனிதர்கள் இன்றளவும் சொல்லும் மதத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை.. அதிகமா இதைப் பத்தி பேசுனா... உனக்கு நல்லது நடக்காதுன்னு சொல்லி பெரியவங்கப் பயமுறுத்தி வச்சுருராங்க... மதம் விட மனிதம் முக்கியமல்லவா...மத வாதம் வேண்டாம் எனபது என் கருத்து.. ஆனால் மதவாதிகள் சொல்லுவதோ மதத்திலே வாதம் கூடாது என்று... அட போங்கப்பா நீங்களும் உங்க பொழப்பும்..
I BELIVE IN THE GOD WHO BELIEVES IN ME..
8.நட்புக்கு என்றும் மரியாதை கொடுக்கணும்ன்னு இயன்ற வரை முயற்சிப்பேன்..
எனக்கு நண்பர்கள் குறைவு.. ஆனால் நான் நிறையப் பேருக்கு நண்பன்....(அய்யோ சும்மா பஞ்ச் வந்து தானா உக்காருதுங்க!!!)
இந்த ஒற்றை வரியிலுள்ள பொருளை நட்புள்ளம் கொண்டவ்ர்கள் அனைவரும் தங்கள் வாழ்விலும் உணர்ந்திருப்பார்கள் அப்படின்னு நினைக்கிறேன்...
எட்டுப் போட்டாச்சு இனி எகிறலாம்ல்ல
எட்டுக்குள் அழைப்பவர்கள் :-
1. ஜொள்ளு பாண்டி
2. கொங்கு ராசா
3. பினாத்தல் சுரேஷ்
4. JK
5. நந்தா
6. சுதர்சன் கோபால்
7. சந்திப்பு
8. அனுசுயா
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
15 comments:
தம்பி தேவு,
இப்படி ஒரு பதிவு போட்டு 'நம்ம' காலேஜ் மானத்தைக் காப்பாத்திட்ட!! :)) (என்ன சொல்லறேன் புரியுதா?)
உம்ம 6ஆவது பாயிண்டுதான்யா ரொம்பவே புடிச்சிருக்கு!
1, அண்ணன் நம்மளும் யாபாரம் பண்ணினோம், ராங்க் கார்டு அடிச்சு... நல்ல வரும்படிண்ணன்...
3, அங்கன கபடி இங்கன கூடைப்பந்து...
4, 6, சேம் பின்ச்... கிள்ளிக்கோங்க...
Interesting...and yenna bandha vendi irruku...wat to write nu. Drama ma neenga...poya poyaaaaaaaaa..
//அய்யோ சும்மா பஞ்ச் வந்து தானா உக்காருதுங்க!!//
Sivaji paartha effecta?
Any how good 8 but ithuku license kuduka mudiyathu engaluku 81/2 pottathan license :))))))))
சூப்பர்... :))
1.நீர் பொருளாதார மேதையாகியிருக்க வேண்டியவரோ? விடுங்க இன்னும் காலமிருக்கு :)
2. நான் பூர்வீக கிராமத்துக்கு போயே வருசமாச்சுப்பா...ஆனா நீங்க சொல்ர அளவுக்கு இன்னும் வெறுமையா மாறல... ஊர்லையும் , மக்கள் மனசுலையும் கொஞ்சம் பசுமை மிச்சமிருக்கு.
3. நம்ம வெளையாட்டே வேற...
4,6 சேம் பிளட்
5. :)
7. நோ கமெண்ட்ஸ் :)
8. ம்ம்ம் சரிதான். நட்பு கூட சிலசமயம் ஒருவழிப் பாதைல பயணிக்கும்.
எட்டு பெருசா இருக்கிறதால உங்களுக்கு லைசன்ஸ் கிடைக்குமாங்கரது சந்தேகம் தான் :)
//எனக்கு நண்பர்கள் குறைவு.. ஆனால் நான் நிறையப் பேருக்கு நண்பன்.// டச்சிங்டச்சிங்.. சேம்பிஞ்ச் :)
தேவ் அண்ணே,
நல்லாத்தேன் இருக்கு இந்த எட்டும்..
எட்டுப்பதிவில ஒரு டாப் எட்டு போடலாமான்னு ஒரு ஐடியா வருது..
நல்லவேளை நீங்களாச்சும் என்னைக் கூப்பிட்டீங்களே:(
சீனியர் எல்லாம் மத்த சக சீனியர்களைக் கூப்பிட்டுட்டாங்க, புதுசா வந்தவங்களும் அதே மாதிரி ஜோடி பிடிச்சுட்டாங்க..
எனக்கு ஏன் இந்த இரண்டிலும் இல்லாத நிலை:(
கொஞ்சநாள்தானே ப்ரேக் விட்டேன்.. மறந்தே விட்டீர்களா கண்மணிகளா??????????????
தேவா...எட்டோ "மகா"தேவா....
// பெரிய அட்டை ஓண்ணை ரெடி பண்ணி அதுல்ல "தேவ் லெண்டிங் லைப்ரரி"ன்னு பெருசா எழுதி வீட்டு வாசல்ல தொங்க விட்டு //
ஆகா...அந்தப் புத்தகங்கள்ளாம் இன்னமும் இருக்கா? இருந்துச்சுன்னா எனக்குப் பரிசாக் குடுத்துருங்களேன் :)
// என் மூதாதையர் மண் பார்க்க ஊர் போனப் போது.. அந்த குரல் கேட்ட வீதிகளின் வெறுமை என்னை உலுக்கியது... வீடுகள் கேட்பாரற்று கிடந்தது மனத்தைக் குடைந்தது //
இது எங்க ஊருக்குப் பொருந்துங்க. சின்ன வயசுல போனப்பல்லாம் கலகலன்னு இருந்த ஊரு...இப்ப வெறிச்சுன்னு இருக்கு. எப்பவாச்சும் யாராச்சுங் கண்ணுல பட்டு...பெரும்பாலும் வயசானவங்க.."ராகவா...எப்ப வந்த" ஒரு இழுவை ஒவ்வொரு சொல்லிலும் இருக்கும். "அப்பா அம்மா வரலியா? எங்களையெல்லாம் மறந்தாச்சா" இப்பிடித்தான் கேப்பாங்க. ரொம்பச் சங்கடமா இருக்குங்க. இங்க நெதர்லாந்துல பாருங்க...ஆம்ஸ்டர்டாம்ல வேல பாக்காங்க. ஆனா பக்கத்துல ஏதாச்சும் பட்டிக்காட்டுல தங்கீருக்காங்க. நெதமும் வரப்போக இருக்காங்க. நம்மூர்ல.....
// ஆனால் மதவாதிகள் சொல்லுவதோ மதத்திலே வாதம் கூடாது என்று... //
இது தவறான கருத்துதான். எனக்கும் ஏற்பில்லை. Nothing Stays. நிற்பது இருக்கலாம். ஆனால் நிலைப்பது எதுவுமில்லை. இறையருளைத் தவிர. இதுதான் என்னோட கருத்து.
// அட போங்கப்பா நீங்களும் உங்க பொழப்பும்..
I BELIVE IN THE GOD WHO BELIEVES IN ME..//
அதே அதே போடா போடான்னு போய்க்கிட்டேயிருக்கனும்.
// எனக்கு நண்பர்கள் குறைவு.. ஆனால் நான் நிறையப் பேருக்கு நண்பன்....//
அட்ரா அட்ரா அட்ரா...சூப்பரு. :)
தேவ் 8 போட அழைத்தமைக்கு நன்றி
ரொம்ப சுலபமா அழைச்சிட்டிங்க... ஆட்டங் காட்டலாம்னா... விட மாட்டீங்க போலருக்கு.... மண்டைக்குள்ள எட்டு. எட்டா எதப் போடுறதுன்னு சிந்திக்க வேண்டியிருக்கு.... எட்டுப் போட்டு குட்டு வாங்காமல் இருந்தால் சரி!
Dev
You have a really interesting blog going on.
Will keep visiting
கரெக்டா "வியர்டு"க்கு கோத்து விட்டீங்க. இப்போ எட்டுக்கும் கோத்து விட்டுடீங்க.
நல்லா இருங்க. எப்படி யோசிச்சாலும் ஒரு மேட்டர் கூட தோண மாட்டீங்குது. 8 மேட்டருக்கு எங்க போறது......
யோசிக்கணும். புடிக்காத விஷயம். எப்படின்னாலும் உங்க எட்டு அளவுக்கு வராது.
எட்டு போட்டமா லைசன்ஸ் வாங்கிட்டோமானு போகாம என்னையும் கோத்துவிட்டிருக்கீங்க..
நீங்க ரொம்ப நல்லவருங்க....
என்னோட எட்டு
வந்து படிச்சு பாருங்க....
http://saralil.blogspot.com/2007/06/blog-post_30.html
Post a Comment