Tuesday, March 24, 2009

ஓட்டுப் போடுங்க ப்ளீஸ்

வருது வருது விலகு விலகு... இந்தப் பாட்டு இப்போ யாருக்குப் பொருந்துமோ இல்லையோ நம்ம ஐ,பி.எல் தொடருக்குப் பொருந்தும்...

தேர்தலோட வரவு ஐபிஎல்க்கு தடையாக நிற்க....ஐபிஎல் நடத்த முடியாதது இந்தியாவுக்கே அவமானம் என ஆங்காங்கே தேசபக்தர்கள் கொதித்து எழ...அதற்கு பதிலாய் எது அவமானம் என பட்டிமன்ற மேடைக்கு அழைப்பு விடுக்கும் ஆளும் வர்க்கம் என ஒரு வழியாய் தேர்தலுக்கு முட்டி மோத எதோ ஒரு காரணம் கிடைத்து விட்டது நாட்டின் இரு பெரும் அரசியல் வியாபார ஸ்தாபனங்களுக்கு... சாரி அரசியல் கட்சிகளுக்கு...

ஐபிஎல் வேணுமா..தேர்தல் வேணுமான்னு இந்தியர்களைக் கேட்டா...
யாரோ எப்பவோ சொன்னது ஞாபகத்துக்கு வருது...
INDIANS CAN LIVE WITHOUT DEVELOPMENT..BUT NEVER WITHOUT ENTERTAINMENT

உலக மகா ஜனநாயக நாட்டுல்ல அஞ்சு வருசத்துக்கு பொறவு எலெக்ஸ்சன் சீசன் 16...( நம்பர் சரியாத் தெரியல்ல.. தெரிஞ்சவங்கச் சொன்னாத் திருத்திக்கிறேன்)..இந்த முறை தேர்தல்ல பெரிய சுவராஸ்யம் எதுவும் இல்லாமல் எல்லா டிவிகாரங்களூம் முழி பிதுங்கிப் போயிருக்காங்க... ஒவ்வொரு வாட்டியும் எதாவ்து ஒரு மேட்டர் சிக்கும் இவங்களும் அதை வச்சே மீட்டர் போட்டு டிவியில்ல ரியாலிட்டி...ரிவாவ்லர்டீ..ன்னு பாக்குற நம்ம மேல ஓவரா க்ருயால்டி காட்டிருவாங்க.. பாவம் இதுவரை ஐபிஎல் மேட்டர் தவிர பெருசா எதுவும் இல்லை...

மக்கள் அதை விட பாவம்...ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல...எலெக்ஷன் அன்னிக்கு லீவ் விட்டீங்கன்னாப் போதும்...படுத்து ஒரு தூக்கம் போடலாம்ன்னு இப்பவே திட்டம் போடுறாங்க...

அட அமெரிக்காவில்ல மெக்கெயின் ஒபாமா இரண்டு பேரும் ரவுண்ட் கட்டுனப்போக் கூட நம்ம ஊர்ல்ல ஒவ்வொரு தெரு முனை டீக் கடையிலும் கூட ஆளுக்கு அட்லீஸ்ட் முக்கா ரூவாயாது பெட் கட்டுனாங்கப்பா...ஆனா இப்போ உள்ளூர் சந்தையிலே எந்தக் கடைக்கு கிராக்கின்னு யாருக்குமே அக்கறை இல்லை.. அடுத்த வீட்டு அங்கிள் அமெரிக்கா எலெக்ஷ்ன்ல்ல தன்னாலே ஓட்டு போட முடியல்லன்னு அப்படி பீல் பண்ணாரு... உள்ளூர் தேர்தல் மேட்டர் பேசலாம்ன்னு வாயைக் கொடுத்தா... விடுப்பா... நாம போடல்லன்னா என்ன நம்ம ஓட்டு வேஸ்ட்டாவா போக போவுது.... அப்படின்னு சொல்லிட்டு மதுரை குலுங்க குலுங்க நீ நையாண்டி மேளம் கொட்டு அப்படின்னு சன் டீவியிலே ஓடுற சுப்ரமணியபுரம் பாட்டு சவுண்ட்டைக் கூட்டுறார்..

தேர்தல்ன்னா உங்களையும் என்னையும் மாதிரி ஒரு சாதரண மனிதனுக்கு ஒண்ணுமே இல்லையா.... ஒரு ஒட்டை வச்சுகிட்டு ( அதுவும் போட்டாத் தான் வாதம்....போட விட்டாத் தான் உத்தரவாதம்) நாம என்னப் பண்ணிர முடியும்...இது இப்போ பொதுவா பரவி நம்மைப் போன்ற படித்த மக்களால் நிறுவப்பட்டக் கருத்தாகி போய்விட்டது என்னக் கொடுமையான மேட்டர்...

ஓட்டுப் போட்டு ஒட்டையாகிப் போன தேசம்ன்னு கவிதை எல்லாம் படிச்சிருக்கேன்.. ஆனா உண்மை நிலைமை என்னன்னா ஓட்டுப் போடாமல் தான் நாம் ஓட்டையாகி போயிருக்கோம்ன்னு தோணுது...
அக்கறையின்மையா.... இல்ல இயலாமையா எனக்குச் சரியாப் புரியல்ல... ஆனா ஜனநாயகத்து மேல மைல்டா ஒரு நம்பிக்கையின்மையாத் தான் தேர்தல் நேரத்துல்ல வாக்குப் போடாமல் நாம் தள்ளி நிற்பது எனக்கு படுது....
நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் தனி மனித முன்னேற்றத்துக்கு மட்டும் எவ்வளவு முக்கியம்ன்னு நிறைய நூல்கள் இருக்கு,,,ஆனா நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் ஒரு நாட்டோட மொத்த முன்னேற்றதுக்கும் ரொம்ப அவசியம்... என்னிக்குமே எந்த நிலைமையிலும் நம்ம நம்பிக்கையைத் தொலைக்ககூடாது

தேர்தல்ங்கறது யாரோ சில பேர் பொழுது போகாமல் பொழப்பு இல்லாமல் நடத்துற வித்தைன்னு வீட்டுல்ல இருந்து நாம டிவியிலே கிரிக்கெட் ஸ்கோர் பாக்குற மாதிரியா பாக்கணும்...

இன்னிக்கு இந்த தேர்தல்ல நின்னு ஜெயிக்கப் போறவன் நாளைக்கு ஒண்ணு கூடி ..ஆமா ஒரு 539 பேர் ஒண்ணு கூடி நம்மோட நாளையை நிர்ணயிக்கப் போறான்,,,,அவன் எடுக்கப் போற ஒரு சில முடிவுகள் நம்ம சந்ததிகளைக் கூட பல வருசங்களுக்குப் பாதிக்கலாம்...

அவன் தான் நம்ம சம்பாதிக்கற காசுல்ல எவ்வளவு வரியா வாங்கலாம்... மீதி எதாவது மிஞ்சிச்சுன்னா அதை வாட்....செஸ் இதர வரிகள்ன்னு மொத்தமா ஆட்டயப் போடலாமான்னு முடிவு பண்ணுறவன்...

நம்ம ஊருக்கு ரயில் பஸ் பாலம் கரண்ட் தண்ணி இதெல்லாம் எவ்வளவு படியளக்கலாம்ன்னு சட்டம் போடுறவன்...

நம்ம வீட்டு பசங்க எவ்வளவு படிக்கலாம்... கோட்டாப் போட்டு அவங்க படிப்பை எங்கே நிறுத்தலாம்... படிச்சா வேலை வாய்ப்புக்கு வழி பண்ணலாமா இல்ல அதுல்லயும் கோட்டாப் போட்டு கோலம் போடலாமான்னு யோச்சிச்சு செய்யப் போறவன்...

டிவியிலே நீ என்னப் பாக்கலாம்...நீ என்னப் பாக்கக் கூடாதுன்னு அவன் தான் முடிவு பண்ணுறான் சில நேரத்துல்ல...

பொண்ணைப் பெத்தவன்... மாப்பிள்ளைப் பாக்கும் போது அப்படி பக்குவமாப் பாக்கணுமாம்...பொண்ணோட வாழ்க்கை பிசகிற கூடாதுன்னு அப்படி ஒரு அக்கறை...
மண்ணு..நமக்குன்னு ஒரு அடையாளம் கொடுத்த மண்ணு...அடைக்கலம் கொடுத்த பூமி...அதைக் கண்டவன் கையிலே அப்படியேவா கொடுக்கறது...

வாக்களிப்பது நமது உரிமை மட்டும் அல்ல.. கடமையும் கூட... எதோ சொல்லணும்ன்னு தோணுச்சு சொல்லிட்டேன்..

நம்மச் சொன்னா மட்டும் போதுமா.. இன்னும் நாலு பேர் சொன்னாத் தானே கேப்பீங்க...அதுன்னால இவங்களையும் சொல்லச் சொல்லுறேன்..

பதிவுலகத்தில் வந்தார்க்கு எல்லாம் வரவேற்பு அளிக்க விருந்தினர் மாளிகை அமைத்த நண்பர் சிபி
பதிவுலகப் பகலவன் பினாத்தலார்
பதிவுலக சுப்ரீம் கோர்ட் பாஸ்டன் பாலா
அதிரடி அட்டகாசப் பதிவர் நண்பர் குழலி

19 comments:

Boston Bala said...

---பதிவுலக சுப்ரீம் கோர்ட் பாஸ்டன் பாலா---

ஜர்தாரி மாதிரி யாரும் மென்னுட மாட்டாங்களே ;)

குழலி / Kuzhali said...

அழைப்புக்கு நன்றி தல

Boston Bala said...

இங்கே: http://snapjudge.com/2009/03/24/therthal-2009-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/

ஆயில்யன் said...

அரசியல் வாதி போலல்லாமல் அருமையான பேச்சு !

பலமா கைத்தட்டிக்கிறேன்!

வாய்ப்பிருக்கற எல்லாரும் கட்டாயம் ஓட்டு போடணும்ன்னு நானும் இங்கேயே கோரிக்கை வுட்டுக்கிறேன் !

நாமக்கல் சிபி said...

குட் போஸ்ட்!

கோபிநாத் said...

ஆகா..அண்ணாச்சி சூப்பராக சொல்லிட்டிங்க..;)

நல்லது..நல்லது...;)

கோபிநாத் said...

அப்படியே பதிவோட தலைப்பை ஒரே மாதிரியாக வச்சிட்டா ரொம்ப நல்லாயிருக்கும்...என்னென்னா இது ஒரு தொடர் பதிவு தானே..!?

நாகை சிவா said...

//நாம போடல்லன்னா என்ன நம்ம ஓட்டு வேஸ்ட்டாவா போக போவுது.... அப்படின்னு சொல்லிட்டு மதுரை குலுங்க குலுங்க நீ நையாண்டி மேளம் கொட்டு அப்படின்னு சன் டீவியிலே ஓடுற சுப்ரமணியபுரம் பாட்டு சவுண்ட்டைக் கூட்டுறார்..//

உங்க நுண்ணரசியலை கவனித்து ரசித்தேன்.

நான் சொல்ல வந்ததே சொல்லிட்டீங்க...

இப்போ நான் என்னத்த சொல்லுவேன்...

ஏதாச்சும் சொல்லுறேன் நாளைக்கு !

Unknown said...

//Boston Bala said...
---பதிவுலக சுப்ரீம் கோர்ட் பாஸ்டன் பாலா---

ஜர்தாரி மாதிரி யாரும் மென்னுட மாட்டாங்களே ;)//
அப்படியே மென்னாலும் துப்ப விட்டுருவோமா பாபா :-)

Unknown said...

// குழலி / Kuzhali said...
அழைப்புக்கு நன்றி தல//

அப்படியே சீக்கிரம் போஸ்ட்டையும் போட்ட்ருங்க தல

Unknown said...

//Boston Bala said...
இங்கே: http://snapjudge.com/2009/03/24/therthal-2009-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/
//

பாபா போஸ்ட் மெகா பஞ்ச் போஸ்ட்

Unknown said...

// நாமக்கல் சிபி said...
குட் போஸ்ட்!//
தாங்க்யூ ஆபிசர்

Unknown said...

// ஆயில்யன் said...
அரசியல் வாதி போலல்லாமல் அருமையான பேச்சு !

பலமா கைத்தட்டிக்கிறேன்!

வாய்ப்பிருக்கற எல்லாரும் கட்டாயம் ஓட்டு போடணும்ன்னு நானும் இங்கேயே கோரிக்கை வுட்டுக்கிறேன் !
//
தாங்க்யூ ஆயில்ஸ்..அப்படியே நீங்களும் உங்களுக்கு தெரிஞ்ச மக்களுக்கும் ஓட்டுப் போடச் சொல்லி வாய்ஸ் கொடுங்க பாஸ்

Unknown said...

// ஆயில்யன் said...
அரசியல் வாதி போலல்லாமல் அருமையான பேச்சு !

பலமா கைத்தட்டிக்கிறேன்!

வாய்ப்பிருக்கற எல்லாரும் கட்டாயம் ஓட்டு போடணும்ன்னு நானும் இங்கேயே கோரிக்கை வுட்டுக்கிறேன் !
//
தாங்க்யூ ஆயில்ஸ்..அப்படியே நீங்களும் உங்களுக்கு தெரிஞ்ச மக்களுக்கும் ஓட்டுப் போடச் சொல்லி வாய்ஸ் கொடுங்க பாஸ்

Unknown said...

//கோபிநாத் said...
ஆகா..அண்ணாச்சி சூப்பராக சொல்லிட்டிங்க..;)

நல்லது..நல்லது...;)
//

எதோ நம்மால முடிஞ்ச ஒரு சின்ன விசயம்ப்பா

Unknown said...

//கோபிநாத் said...
அப்படியே பதிவோட தலைப்பை ஒரே மாதிரியாக வச்சிட்டா ரொம்ப நல்லாயிருக்கும்...என்னென்னா இது ஒரு தொடர் பதிவு தானே..!?

4:18 AM, March 25, 2009
//

என்னத் தலைப்பு வைக்கலாம் சொல்லு கோபி

Unknown said...

//நாகை சிவா said...
//நாம போடல்லன்னா என்ன நம்ம ஓட்டு வேஸ்ட்டாவா போக போவுது.... அப்படின்னு சொல்லிட்டு மதுரை குலுங்க குலுங்க நீ நையாண்டி மேளம் கொட்டு அப்படின்னு சன் டீவியிலே ஓடுற சுப்ரமணியபுரம் பாட்டு சவுண்ட்டைக் கூட்டுறார்..//

உங்க நுண்ணரசியலை கவனித்து ரசித்தேன்.

நான் சொல்ல வந்ததே சொல்லிட்டீங்க...

இப்போ நான் என்னத்த சொல்லுவேன்...

ஏதாச்சும் சொல்லுறேன் நாளைக்கு !
//

நீ சொல்லுறதுக்கா மேட்டர் இல்ல... அய்யோ அய்யோ

கோபிநாத் said...

\\தேவ் | Dev said...
//கோபிநாத் said...
அப்படியே பதிவோட தலைப்பை ஒரே மாதிரியாக வச்சிட்டா ரொம்ப நல்லாயிருக்கும்...என்னென்னா இது ஒரு தொடர் பதிவு தானே..!?

4:18 AM, March 25, 2009
//

என்னத் தலைப்பு வைக்கலாம் சொல்லு கோபி
\\

நம்ம சந்தோஷ் அண்ணாச்சி தானே கூப்பிட்டாரு அதனால அவரு வச்ச தலைப்பையே எல்லோரும் வைக்கலாம்.

http://santhoshpakkangal.blogspot.com/2009/03/blog-post.html

இளைஞர்களே ஓட்டு போடுங்க ப்ளீஸ் ;)

Unknown said...

//நம்ம சந்தோஷ் அண்ணாச்சி தானே கூப்பிட்டாரு அதனால அவரு வச்ச தலைப்பையே எல்லோரும் வைக்கலாம்.

http://santhoshpakkangal.blogspot.com/2009/03/blog-post.html

இளைஞர்களே ஓட்டு போடுங்க ப்ளீஸ் ;)//

ரைட்டோய் கோபி...எல்லாரும் ஓட்டு போடணும்ன்னுங்கறது தான் நம்மோட நோக்கம்...சோ கொஞ்சம் மாத்தி ஓட்டுப் போடுங்க ப்ளீஸ் அப்படின்னு வச்சுருவோம்..ஓ.கேவா??

tamil10