Thursday, April 30, 2009

GIANT ரோபோ

காலசட்டைப் போட்டக் காலத்திலே எல்லாம் நமக்கு இருந்த ஒரே தொலைக்காட்சி நம்ம தூர்தர்ஷ்ன் தான்...அப்போ எல்லாம் மிமிக்கிரி பண்ணுறவங்க மறக்காம சென்னைத் தொலைக்காட்சியை வச்சு ஒரு பிட் நகைச்சுவை போட மறந்தது இல்லை.... அதுவும் அந்த மாலை வேளையிலே ஒரு அஞ்சு ஆறு மணிக்கு ஒரு முட்டையும் அது சுத்தி இரண்டு உருளையும் ஒரு இசையோட வரும் பாருங்க.... தூர்தர்ஷன் லோகோ தான்...அதுக்கு பிறகு ஒரு வர்ணனையாளர் வருவார்... வணக்கம் நேயர்களே... சென்னைத் தொலைக்காட்சியின் இன்றைய மாலை ஒளிபரப்பு பேண்ட் 1 சேனல் 4ங்கில் இனிதே ஆரம்பம் ஆகிறது அப்படிம்பார்... இந்த அறிவிப்பை மிமிக்கிரி செய்யாத கலைஞர்களே அன்று கிடையாது....அன்னிக்கெல்லாம் தூர்தர்ஷன் மவுசு மவுசு தான்...

இன்னிக்கு புள்ளங்க எல்லாம் சுட்டி டிவி டோராவுக்கு எப்படி கிறங்கி கிடக்குதோ..அப்படி அந்த காலத்துல்ல நாங்களும் ரவுண்ட் கட்டிப் பார்த்த சில டிவி தொடர்கள் இருக்கு...அதை எல்லாம் பத்தி யோசிச்சப்போ..நம்ம சிறு வயசு ஹீரோ ஞாபகத்துக்கு வந்துட்டார்..

சனிக்கிழமை தோறும் சாயங்காலம் இந்திபடம் போடுவாங்களே அதுக்கு முன்னாடி இந்த தொடர் வரும்....தொடர் பேர் ஜெயண்ட் ரோபோ.....ஒரு ஜப்பான் கார சின்னப் பையன் அவன் பேர் ஜானி..அவன் கையிலே ஒரு வாட்ச் ஒண்ணு இருக்கும் ஆபத்து வரும் போது அந்த வாட்ச்சை அப்படி இப்படி திருகி... அந்த பையன் ஜெயண்ட் ரோபோ அப்படின்னு கூப்பிடுவான் பாருங்க...அப்ப நம்ம ரோபோ அண்ணாச்சி.. மெல்ல கண்ணு முழிச்சு...மெதுவா மேலுக்கு சோம்பல் எல்லாம் முறிச்சு...அங்கிட்டும் இங்கிட்டும் அசைஞ்சு அசைஞ்சு புறப்படுவார் பாருங்க...அப்படி ஒரு கெத்தாயிருக்கும்.... சில சமயம் ஜானி வேறு எங்கேயோ சிக்கிட்டு வாட்ச் வழியாக் குரல் கொடுக்கும் போது நம்ம ரோபோ சும்மா ராக்கெட் வேகத்துல்ல வானத்துல்ல தவ்வி பறக்குற அந்த ஸ்டைல் இருக்கு பாருங்க.... இயந்திர மனுசனுக்கு தீவாளி ராக்கெட் வேசம் கட்டுனாப்புல்ல பின்னாலே புகை கிளம்ப அட்டகாசம் பண்ணுவார்...

ஜானி பையன் வேண்டாதவங்க கிட்டச் சிக்குறதும் ரோபோ அவனை காப்பாத்தக் கிளம்புறதுன்னும் தூள் பறக்கும் தொடரின் ஒவ்வொரு பாகமும்...சில சமயம் ஜானி ரோபோவைக் காப்பாத்தறதும் நடக்கும்...ரோபோ எந்திரம் தான்னாலும் அதுக்கும் ஜானி பையனுக்கு நடுவில் ஒரு அற்புதமான நட்பு சிருஷ்ட்டிக்கப்பட்டிருக்கும்.. அந்த சென்டிமெண்ட் சின்னஞ்சிறு வயசுல்ல மனசை எவ்வளவு கலங்கடிச்சு இருக்கு தெரியுமா...அனுபவிச்சுப் பாத்தவங்க கண்டிப்பா ஒத்துப்பாங்க...

ஜானி வாட்ச்சை தொலைக்கும் போதெல்லாம்...அவன் ரோபோ கூட எப்படி பேசப் போறானோன்னு நமக்குப் பதறும்...அப்புறம் ரோபோவை அழிக்க வில்லன் கோஷ்ட்டி திட்டம் போட்டு ரோபோவைத் தாக்க கிளம்பும் போதெல்லாம் நமக்கு மனசு துடிக்கும்..

இது எல்லாம் வாரம் வாரம் நடக்கும்...ஒவ்வொரு வார முடிவிலும் ஜானியும் ரோபோவும் எப்படியாவது ஜெயிச்சுருவாங்க.... அதைப் பாத்துட்டு அப்படியே ஆனந்தமா தெருவில்ல விளையாடப் போயிருவோம்...

இணையத்துல்ல அங்கங்கே தேடுனதுல்ல சிக்குன நம்ம பாசத்துக்குரிய ஜெயன்ட் ரோபோ சாரின் படங்கள் உங்கள் பார்வைக்கு

10 comments:

ஆயில்யன் said...

ஒ எனக்கு மறந்தே போச்சு சுத்தமா... ! :(

ஒரு வேளை எங்க காலத்துல நின்னுப்போயிருக்கும்போல...!

பட் ஞாயிற்றுகிழமைகளில் காலை வேளைகளில் பார்த்த சிக்மா அறிவியல் விண்வெளி தொடர் மட்டும் நல்லா ஞாபகத்துல இருக்கு :)))

Sridhar V said...

சுட்டிப் பொண்ணு அம்லு இதைப் பாத்துதான் தமிழ்ல எடுத்தாங்க. இங்கே வேத்து கிரகவாசி ஒருத்தர் வருவார். ரொம்ப சின்ன வயசுல பாத்தது அங்கிள். உங்களுக்கு நல்லாவே ஞாபகம் இருக்கும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அண்ணா,
இது என்ன "எந்திரனுக்கு" முன்னோட்டப் பதிவா? :)

ஆனாலும் ஜானி சாக்கோ & ஜயன்ட் ரோபோ கொசுவத்தி சூப்பரு!

இது எங்களைப் போல யூத்துங்க காலத்தில் சனிக்கிழமை மதியம் 12மணிக்கு ரீ-ப்ளே பண்ணாங்க! இந்தாங்க அதோட பதிவு!
http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_2321.htmlYoutube காணொளி:
http://www.youtube.com/v/1_lsFSRYvVw

கோபிநாத் said...

எனக்கு ரொம்ப பிடிச்ச தொடர் இது..;)

\\சனிக்கிழமை தோறும் சாயங்காலம் \\

எனக்கு தெரிஞ்சி புதன்கிழமைகூட வந்திருக்கு 7 மணிக்கு ;)

Vadielan R said...

தல இன்னிக்கு என்னோட சின்ன பருவத்துக்கு போயிட்டு வந்த எபெக்ட் கொடுத்திட்டிங்க ஜியன்ட் ரோபோ மறக்க முடியுமா???????? சொல்லுங்க பார்ப்போம். திரும்ப ஞாபகபடுத்தினதுக்கு அத்தோட அதோட சீரியல் டிவிடி கிடைக்குதா பார்த்து சொல்லுங்க???

Unknown said...

// ஆயில்யன் said...
ஒ எனக்கு மறந்தே போச்சு சுத்தமா... ! :(

ஒரு வேளை எங்க காலத்துல நின்னுப்போயிருக்கும்போல...!

பட் ஞாயிற்றுகிழமைகளில் காலை வேளைகளில் பார்த்த சிக்மா அறிவியல் விண்வெளி தொடர் மட்டும் நல்லா ஞாபகத்துல இருக்கு :)))
//

80களின் இறுதியில் இந்த தொடர் வந்ததா ஞாபகம்.... ஆமா உங்க காலம்ங்கறது எந்த காலம் ஆயில்ஸ் :-)

Unknown said...

///Sridhar Narayanan said...
சுட்டிப் பொண்ணு அம்லு இதைப் பாத்துதான் தமிழ்ல எடுத்தாங்க. இங்கே வேத்து கிரகவாசி ஒருத்தர் வருவார். ரொம்ப சின்ன வயசுல பாத்தது அங்கிள். உங்களுக்கு நல்லாவே ஞாபகம் இருக்கும்.
//
சுட்டிப் பொண்ணு அம்லு..ஆகா ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...நம்ம தமிழ் படமும் சரி தொடரும் சரி அங்கிட்டு இங்கிட்டு கொஞ்சம் கடன் வாங்கி கலக்கி விடுவது தானே சாரே

Unknown said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அண்ணா,
இது என்ன "எந்திரனுக்கு" முன்னோட்டப் பதிவா? :)

ஆனாலும் ஜானி சாக்கோ & ஜயன்ட் ரோபோ கொசுவத்தி சூப்பரு!

இது எங்களைப் போல யூத்துங்க காலத்தில் சனிக்கிழமை மதியம் 12மணிக்கு ரீ-ப்ளே பண்ணாங்க! இந்தாங்க அதோட பதிவு!
http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_2321.htmlYoutube காணொளி:
http://www.youtube.com/v/1_lsFSRYvVw
//

எந்திரனும் இந்த கதையும் ஒண்ணா....கே.ஆர்.எஸ் அப்படியா.... மெய்யாவா....

உங்கப் பதிவு இன்னும் நல்ல விரிவான கொசுவத்தி பதிவு ரசித்துப் படித்தேன் ....வாழ்க தங்கை குலம்... :-)

Unknown said...

//கோபிநாத் said...
எனக்கு ரொம்ப பிடிச்ச தொடர் இது..;)

\\சனிக்கிழமை தோறும் சாயங்காலம் \\

எனக்கு தெரிஞ்சி புதன்கிழமைகூட வந்திருக்கு 7 மணிக்கு ;)
//

சனிக்கிழமை தான் எனக்கு ஞாபகம் இருக்கு கோபி...புதன் கிழமை ஞாபகம் இல்லையே...

Unknown said...

//வடிவேலன் ஆர். said...
தல இன்னிக்கு என்னோட சின்ன பருவத்துக்கு போயிட்டு வந்த எபெக்ட் கொடுத்திட்டிங்க ஜியன்ட் ரோபோ மறக்க முடியுமா???????? சொல்லுங்க பார்ப்போம். திரும்ப ஞாபகபடுத்தினதுக்கு அத்தோட அதோட சீரியல் டிவிடி கிடைக்குதா பார்த்து சொல்லுங்க???
//
வாங்க வடிவேலன்... டிவிடி பத்தி சரியான தகவல் இல்லை.. ஆனா யூ ட்யூப்ல்ல கண்டிப்பா கிடைக்கும் தேடிப் பாருங்க

tamil10