Sunday, June 14, 2009

வீக் என்ட் டைம் பாஸ்

வருங்கால முதல்வர்(கள்) சினிமா

தோரணை தமிழ் சினிமா ரசிகனோட சொரணைக்கு இன்னொரு சவாலாம்... படம் பாத்தவங்க எல்லாம் பேசிக்குறாங்க..மாஸ் ஹீரோக்கள்..மன்னிக்கணும் வருங்கால ஜார்ஜ் கோட்டை கோமகன்கள் ( இதுக்கு தானே ஆசைப்படுறீங்க அழகேசர்களா) நடிச்ச படங்கள் எல்லாம் மொத்தமா மாவு கட்டு போட்டுகிட்டு படுத்த நிலையிலே...( அயன் விதி விலக்கு சூர்யா மாஸ் ஹீரோ லிஸ்ட்ல்ல இல்லங்கறது என் கருத்து) யதார்த்த படங்கள் பட்டயைக் கிளப்புது பாக்ஸ் ஆபிஸ்ல்ல...இந்த வருசத்தில்ல பாத்தீங்கன்னா... வெண்ணிலா கபடிக் குழு...யாவரும் நலம்...பசங்க ...இது எல்லாம் கோட்டைக்கு ரூட் போடாத படங்கள்...நல்லாவே இருந்துச்சு.... இந்த வருசம் தேர்தல்ன்னு மெகா படம் சம்மர் முழுக்க மெகா ரிலீஸ் ஆனதல்ல மக்கள் நம்ம கோடம்பாக்கத்து தளபதிகளைக் கவுத்துட்டாங்களோ என்னவோ....எப்படியும் நம்ம தளபதிகள் மனம் தளராமல் திரும்பி வருவாங்கங்கறது என் நம்பிக்கை.... நம்மளும் அவங்களை எல்லாம் கை விட்டுருவோமா என்ன....சோ ஆல் தளபதிஸ் கீப் கன்டினியூங்...

மோசர் பேர் டிவிடி

சினிமா ரசிகர்களுக்கு ஒரு நல்ல விசயம்... எக்கச்சக்கப் படங்கள் சல்லிசான விலையில்ல..தரமான பிரிண்ட் வேற...பழைய கருப்பு வெள்ளை காலத்துல்ல இருந்து தற்கால சுப்ரமண்யபுரம் வரைக்கும் அப்டேட் ஆகியிருக்கு இவங்க மூவி டேட்டா பேஸ்...தமிழனுக்கு.. சினிமாவும் கிரிக்கெட்டும் இரு பெரும் மதங்கள்..ஒரு சிலருக்கு ரஜினி டெண்டுல்கர் குலசாமின்னா... இன்னும் சிலருக்கு தோணி...அஜித் குலசாமி... இப்படி குல சாமிகள் பல... மோசர் பேருக்கு இந்த வெவரம் நல்லாத் தெரிஞ்சு இருப்பதால் தான்.. நம்ம தெரு முனை அண்ணாச்சி கடையிலே கூட டிவிடி வியாபாரம் ஆரம்பிச்சு இருக்காங்க....ஓடுதாண்ணு பொறுத்து இருந்து தான் பாக்கணும்.. ஆனா இது ஒரு நல்ல முயற்சி... இந்த வாரம் பொட்டிக் கடையிலே நமக்கு சிக்குன இரண்டு படம் கலைஞரின் பராசக்தி...இன்னொன்ணு பாலசந்தரின் பாமா விஜயம்...

இந்த வார டிவிடி வாட்ச்

கோதாவரின்னு ஒரு தெலுங்கு படம்...நம்ம கமல் பார்த்த முதல் நாளாய்ன்னு வே.விளையாடுல்ல உருகுவாரே அதே பொண்ணு தான்...இதுல்ல நாயகி...கதைன்னு சொல்லணும்ன்னா...வெள்ளைக்காரன் எடுத்த டைட்டானிக்கை கொஞ்சம் நம்ம ஊர் மசாலாப் போட்டு பக்குவமா பரிமாறுன்னா என்னக் கிடைக்குமோ அதான் கதை...கோதாவரி நதியிலே ஒரு படகு பயணத்துல்ல நடக்குற சுவாரஸ்யமான சம்பவங்களை மெல்லிய காதல் சேர்த்து ரசிக்கும் படி சொல்லியிருக்கார் இயக்குனர் சேகர் கம்முலா...இந்த இயக்குனர் ஒரு முன்னாள் சாப்ட்வேர் பார்ட்டி... இப்போ படம் எடுக்கப் போயிட்டதால ரெசசன்ல்ல இருந்து எஸ்கேப் ஆயிட்டார்...வீக் என்ட் மதியத்தை மனசுக்குப் புடிச்சவங்களைப் பக்கத்துல்ல வச்சுகிட்டே பார்த்தா...மாலை பொழுதில் ரொமான் ஸ்க்கு வாய்ப்பு உண்டு என ஜோசியம் தெரியாத மணவாடு நண்பன் ஒருத்தன் சொன்னான்..சேகர் கமுலாவின் ஆனந்த....ஹேப்பி டேஸ் ..போன்ற படங்களும் காதல் மனம் கொண்டவர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் என்பதைக் கொசுறாச் சொல்லிக்கிறேன்..

மில்லியன் டாலர் கேள்வி...

பெரிய பிரதருக்கு தென் தமிழ்நாடு...அப்புறம் தில்லின்னு ஷேர் கொடுத்தாச்சு... அடுத்த பிரதருக்கு தமிழ்நாட்டையே கொடுத்தாச்சு...சிஸ்டருக்கு கூட தில்லியிலே ஒரு ஷேரா ராஜ்யசபையிலே இடம் கொடுத்தாச்சு... பேரனுக்கு கூட அமைச்சர்ன்னு அந்தஸ்து கொடுத்தாச்சு...

இதெல்லா இருக்க..இவங்க வீட்டுல்ல இன்னொரு லிட்டில் பிரதர் இருக்காராமே..பல பேருக்கு அவரை அதிகமாத் தெரியாது...ஆனாலும் அவர் ரொம்ப்ப்ப்ப்ப்ப்வே நல்லவரு போல இருக்கு...

டாடி டாடி அவனுக்கு அது கொடுத்த...இவனுக்கு இது கொடுத்த...அவளுக்கு அது கொடுத்த...எனக்கு என்னக் கொடுப்பன்னு கேக்கவே இல்லையா....இல்ல கேட்டது நமக்கு தெரியல்லயா... இதுவே மில்லியன் டாலர் கேள்வி..

படிச்சதுல்ல பிடிச்சது..

நண்பன் ஒருத்தன் அனுப்புன எஸ்.எம்.எஸ்
வெற்றி என்பது யாதெனின்.. ஒரு கையெழுத்து ஆட்டோகிராபாக மாறுவதே...

8 comments:

சென்ஷி said...

மொசர் பேர்ல நிறைய்ய பழைய்ய படம் கிடைச்சுருக்குது. ரொம்பநாள் தேடிட்டு இருந்த சிவாஜியோட உத்தமபுத்திரன் அப்படி ஒரு பொட்டிக்கடையிலதான் கிடைச்சது :))

அதனாலேயே எப்பவுமே மொசர் மேல கண்ணு உண்டு..

SMS மேட்டர் நல்லாயிருக்குது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நண்பன் ஒருத்தன் அனுப்புன எஸ்.எம்.எஸ்//

தேவ் அண்ணே...
இந்த செக்குல ஒரு கையெழுத்து போடுங்க ப்ளீஸ்! :)
சென்ஷி, நீயும் ஒரு கையெழுத்து வாங்கிக்கோ-ப்பா! :)

//இந்த வருசத்தில்ல பாத்தீங்கன்னா... வெண்ணிலா கபடிக் குழு...யாவரும் நலம்...பசங்க//

பசங்க ஜூப்பரு! படு வித்தியாசம்!
பசங்க ஸ்டில்லு தான் வவாச முகப்பில்! :)

இந்த மூனுத்துலே உங்க பரிசு எதுக்குண்ணே?

Santhosh said...

மாபி,
கோதாவரி படம் பத்தி காந்தி செத்துட்டாரான்னு கேக்குற மாதிரி ரொம்ப லேட்டா மேட்டர் போட்டு இருக்கே... அந்த படத்தை பாத்து தான் நானும் கார்த்திக்கும் தனி ரசிகர் மன்றமே ஆரபித்தோம்....

பாசகி said...

//SMS மேட்டர் நல்லாயிருக்குது!//

Repeatae

Unknown said...

வாய்யா சென்ஷி.... நீயும் நம்மளை மாதிரி தானா..இப்போ சென்னையிலே ஆங்காங்கே மோசர் பேருக்குன்னு தனி பிரத்யேக கடைகளும் திறந்துருக்காங்க...தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களும் கிடைப்பது சிறப்பு...

நம்ம கோபி ஒரு தடவை சென்னை வந்திருந்தப்போ அவனும் கூட சேர்ந்து இந்த டிவிடி எல்லாம் தேடுனது ஒரு நல்ல அனுபவம்... கோபி நியாபகம் இருக்கா.... சிட்டி சென்டர் லேண்ட் மார்க்....

Unknown said...

செக் எல்லாம் ஆட்ட வேண்டிய வஸ்து அதுல்ல போய் கையெழுத்து எல்லாம் போட்டா எண்ணெய்ல்ல வழிஞ்சுப் போயிராது...

கே.ஆர்.எஸ் நம்ம பரிசு.....பக்கடா...குட்டிமணி.. அப்புறம் புஜ்ஜிம்மாவுக்கே....!!!!!

Unknown said...

மாப்பி....கார்த்தி கமலினி ப்ரொபைல் பிக் வரலாறு இது தானா.... நான் கோதாவரி ரொம்ப நாள் முன்னாடியே பாத்தாலும் போன வாரம் மறுபடியும் பாத்தேன்டா அது தான் எழுத தோணுச்சு..அப்புறம் கமலினிவோட கம்யம்....ஆனந்த்.... படங்கள் கூட சூப்பர் ரகம் தான்....

Unknown said...

//பாசகி said...
//SMS மேட்டர் நல்லாயிருக்குது!//

Repeatae
//

நன்றிங்கோ

tamil10