Friday, August 18, 2006

சும்மா ஒரு தசவாதாரப் பதிவு

வணக்கம்ங்க...

போன தடவை உங்களை எல்லாம் சீரியல் எடுக்குறேன்னு சொல்லி கதைச் சொல்லிட்டுப் போனதுக்கு அப்புறம் இந்தா இப்போத் தான் மறுபடியும் கச்சேரிப் பக்கம் வர்றேனுங்க.

கச்சேரியில்ல என்னப் பண்ணாக் கலகலக்கும்ன்னு பிலீங்கா திங்க் பண்ண ஆரம்பிச்சக் கேப்ல்ல நம்ம சரா ஊருக்கு வாங்கன்னு ஒரு கூட்டத்தைக் கூட்டிட்டு எஸ் ஆயிட்டாரு. வயக்காட்டுப் பக்கம் போலாம்ன்னு பார்த்தா விவசாயி கவிதையை விதைச்சுட்டு இலக்கியம் இலந்தைப் பழம்ன்னு நம்மை மிரட்டல் பாரவைப் பாக்க..

நான் பம்மி மெதுவா லாரி ஏறி ஹவேஸ் பக்கம் வந்தா அங்கே நம்ம மக்கள் கையிலே கேமராவும் கையுமா அலையுறாங்க.. ஒருத்தர் போற வர்ற காரையெல்லாம் படம் புடிச்சுகிட்டு இருக்காங்க.. இன்னொருத்தர் ரோட்டோரமா அப்பிராணியாத் திரியற ஆடு மாடு ஓணான் பல்லி எல்லாத்துக்கும் கிட்டப் போய் நின்னுக்கிட்டு ... பிதாமகன் சூர்யா ஸ்டைல்ல சிரி சிரி சிரின்னு டயலாக் எல்லாம் பேசி பயமுறுத்திகிட்டு இருந்தார்.

ம்ம்ஹும் இதெல்லாம் நமக்கு சரிபடாதுன்னு முடிவு பண்ணிட்டு லாரி நின்ன இடத்தைப் பாக்குறேன்...

ஆகா.. நல்ல ஐடியா.. அது ஒரு சினிமா தியேட்டர்... சரிடா இந்தப் படத்தைப் பார்த்துட்டு விமர்சனம் எழுதி ஒரு மதன் ரேஞ்சுக்குப் போயிட வேண்டியது தான்ன்னு பீல் பண்ணிட்டு முளைக்காத தாடியை எல்லாம் ஸ்டெடி பண்ணிகிட்டு.. தியேட்டர்குள்ளேப் போனா... ஆகா திமிராமா படம்.. படக்கென்னு நம்ம கொங்கு ராசாவும் வாத்தியார் இளவஞ்சியும் போட்டப் பதிவு எச்சரிக்கை நினைப்புக்கு வர டிக்கெட் எடுக்காமலே திரும்பிட்டேன்...

அட என்னத் தான் சாமி பண்றது.. பதிவுக்கு இவ்வளவு பில்டப் எல்லாம் கொடுத்தாச்சு...

அதே தியேட்டர்ல்ல விரைவில் வருகிறதுன்னு மூங்கில் தட்டியிலே ஒரு போஸ்ட்டர்...கொஞ்சம் உத்துப் பாக்குறேன்... நம்ம கலைஞானி படம்ங்க..இந்தா இம்புட்டு நேரம் என் பதிவை நேரம் காலம் போனது தெரியாமப் படிச்சுட்டுப் போக்கத்த பய பொழுது போகமல் எழுதி நம்ம உசுரை எடுத்துட்டான்னு நீங்க யாரும் சொல்லிடக் கூடாது இல்ல.. அந்த தட்டியில்ல இருந்த படம் உங்க பாரவைக்கு











என்னமா வேசம் கட்டுறாருப்பா இந்தாளு...

நான் முடிவு பண்ணிட்டேன் விமர்சனம்ன்னு ஒண்ணு பண்ணா அது இந்தப் படத்தைத் தான் பண்ணனும்ன்னு அது வரைக்கு விமர்சன ஆசைக்கெல்லாம் வெயிட்டிஸ் விட்டுட்டு இருக்க வேலையைப் பாக்கப் போறேனுங்க...

13 comments:

ILA (a) இளா said...

தெரியும்யா இப்படிதான் ஏதாவது கிறுக்கு வைப்பேன்னு. கோவை பக்கம் நெருங்கிய சொந்தம் இருக்குன்னு நல்லா தெரியுது. இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லே. ஒரு தட்டியில இருக்கிற ஒரு போஸ்டர பார்த்துபுட்டு இப்படி ஒரு பதிவா? இலவசமா கிடைச்சா எத வேணுமின்னாலும் கொத்து கொத்துன்னு கொத்துவீங்களோ?

மனதின் ஓசை said...

//என்னமா வேசம் கட்டுறாருப்பா இந்தாளு...//

ஆமம்யா..ரொம்பவே கலக்கறாரு...

நிச்சயமாக நல்ல படமா இருக்கும்.. வந்ததும் பக்கனும்..
படம் எப்ப தேவு ரிலீஸு? தேதி தெரியுமா?

கைப்புள்ள said...

ஆமாம்பா...இந்த படத்துக்கு மீஜிக் ஹிமேஷ் ரேஷமியாங்குற வடநாட்டுத் தம்பியாமே? இதப் பத்தி ஒனக்கு எதுனாத் தெரியுமா?

உங்கள் நண்பன்(சரா) said...

//கோவை பக்கம் நெருங்கிய சொந்தம் இருக்குன்னு நல்லா தெரியுது. //


அடப்பாவி தேவு சொல்லவே இல்லை, அண்ணி எங்க ஊர் தானா?
,இளா சொல்லுரதையெல்லாம் காதிலையே வாங்காத! ஆமா நம்ம அடுத்த கதை என்ன ஆச்சு? எதப் பத்தி ? வா அப்படியே பனங்காட்டுக்குள்ள போய் மல்லாக்கப் படுத்து யோசிப்போம்!


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

//தெரியும்யா இப்படிதான் ஏதாவது கிறுக்கு வைப்பேன்னு. // - ஊரோடு ஒத்து வாழ்

//இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லே.// - ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

//ஒரு தட்டியில இருக்கிற ஒரு போஸ்டர பார்த்துபுட்டு இப்படி ஒரு பதிவா? // - கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்

Unknown said...

//இலவசமா கிடைச்சா எத வேணுமின்னாலும் கொத்து கொத்துன்னு கொத்துவீங்களோ?//

இலவசமா...
கொத்து கொத்துன்னு கொத்துவீங்களோ..

தலைவர் வெளியூர் சென்றுள்ள தைரியத்தில் இப்படி ஒரு சர்ச்சைக் கிளப்ப முயற்சி செய்து பாக்குறீங்களா... வம்பை விலைக்கு வாங்கி விக்குற கூட்டத்திலே நீரும் சேர்ந்து விட்டீரோ?

Unknown said...

//நிச்சயமாக நல்ல படமா இருக்கும்.. // அப்படியே நம்புவோம்

//வந்ததும் பக்கனும்..//
கமல் ரசிகர்கள் கோபப்பட்ப் போறாங்கங்க நிதானமவே பாருங்க படம் எப்படியும் 25 வாரம் ஓடும்

//படம் எப்ப தேவு ரிலீஸு? தேதி தெரியுமா? //
இந்த ரிலீஸ் விட இப்போ ஆபிஸ்ல்ல வேற ரிலீஸ் தேதி சொல்லி நமக்குப் பீதி கிளப்பிட்டாங்கய்யா.

ஆனாலும் நீங்கக் கேட்டதுக்காக சொல்லுறேன்.. ஆக்ஸ்ட் 25 அவதாரத்துக்கு முந்தி வேட்டையாடும் படலம படமா வருதுங்கோ ( தகவலுக்கு நன்றி ஜி.கௌதம்)

உங்கள் நண்பன்(சரா) said...

தேவு-
அனானி யாரையாவது அனுப்பவா? சொல்லு கை வசம் நெறையாப் பேரு இருக்காங்க ஒரு ஃபோன் போட்டாப் போதும் வந்துடுவாங்க!


அன்புடன்...
சரவணன்.

நாகை சிவா said...

என்னய்யா இப்படி கிளம்பிட்ட...

அந்த படத்த விமர்சனம் பண்ண போறேன் என்பதை சொல்லுவதற்கு இப்படி ஒரு பில்டப்பா. சரி சரி விமர்சனம் பண்ணுவதற்கு முன்னால் ஐடியாவுக்கு நம்ம பதிவுல ஒரு நாலு படத்தை சும்மா ஆஞ்சு வச்சி இருக்கேன். பாத்து தெரிஞ்ச்சுக்கோ என்ன.

Unknown said...

//ஆமாம்பா...இந்த படத்துக்கு மீஜிக் ஹிமேஷ் ரேஷமியாங்குற வடநாட்டுத் தம்பியாமே? இதப் பத்தி ஒனக்கு எதுனாத் தெரியுமா? //


அப்பூ இப்போ அந்த அண்ணாத்தே தான் வடநாட்டுல்ல டாப் மிஜிக் டைரக்டராமே.. அண்ணாத்தே போட்டப் பாட்டை என்னத்தன்னுச் சொல்லுறது..ஹிந்தியிலே நல்லாத் தான் மிஜிக் போடுறாரு.. தமிழ்ல்ல வெயிட் அன்ட் சீ

Unknown said...

//அடுத்த கதை என்ன ஆச்சு? எதப் பத்தி ? வா அப்படியே பனங்காட்டுக்குள்ள போய் மல்லாக்கப் படுத்து யோசிப்போம்!//

அடுத்துக் கதை எல்லாம் இல்லை சரா.. ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கலாம்ன்னு ஐடியா இருக்கு.. சீப் ரிப்போர்ட்டர் படக்வி காலியா இருக்கு.. HOW ABOUT U?

Unknown said...

//அனானி யாரையாவது அனுப்பவா? சொல்லு கை வசம் நெறையாப் பேரு இருக்காங்க ஒரு ஃபோன் போட்டாப் போதும் வந்துடுவாங்க//
என்னது பீசா கார்னர் டோர் டெலிவரி மாதிரி ஆர்டர் கேக்குற... விட்டா அவஙக்ளே வந்துப் பதிவும் போட்டு பதிலுக்குப் பின்னூட்டமும் போடுவாங்கப் போலிருக்கு

Unknown said...

//அந்த படத்த விமர்சனம் பண்ண போறேன் என்பதை சொல்லுவதற்கு இப்படி ஒரு பில்டப்பா.//
எல்லாம் பெரியவர் பன்னிக்குட்டி ராமசாமி கொடுத்த ஐடியா தானுங்கோ

// சரி சரி விமர்சனம் பண்ணுவதற்கு முன்னால் ஐடியாவுக்கு நம்ம பதிவுல ஒரு நாலு படத்தை சும்மா ஆஞ்சு வச்சி இருக்கேன். பாத்து தெரிஞ்ச்சுக்கோ என்ன. //

வராமப் பின்னே

tamil10