Tuesday, October 03, 2006

வரி விலக்கு

வணக்கம் மக்கா,
உழைப்பாளி இல்லாத நாடு தான் இங்கே இல்லையேயாஅவன் உழைப்பாலே பிழைக்காதப் பேர் தான் இங்கே இல்லையேயா.. எதோ ஒரு பண்பலைவரிசையில் தலீவர் பாட்டுக் கேட்டுகிட்டு இருந்தேன்.

அப்போ நம்ம பங்காளி ராஜா ( கொங்கு ராசா இல்லீங்க) சனிக்கிழமையாச்சே.. பய வேற பேச்சு இலர் வாழ்கை மறுபடியும் வாழ்றானேன்னு ஒரு வித வருத்தமானப் பாசத்தோடு நம்மளைப் பாக்க வந்து இருந்தான்.

ஐ.நா சபை ஷசி தரூர் ஆரம்பிச்சு அதிமுக சசி சித்தி ( அவக அம்மான்னா இவக சித்தி தானே) வரைக்கும் ரெண்டு பேரும் மோட்டுவளை இடிஞ்சுத் தகர அள்வுக்குப் பேசிகிட்டு இருந்தோம். அப்போ நம்ம பங்காளி அவனுக்கு சென்னையிலே பெரிய கம்பெனியிலே ஒரு நல்ல தொகையிலே ஒரு வேலைக் கிடைச்சுருக்குன்னு அவ்வளவு சுரத்தையே இல்லாமச் சொன்னான்.

அட மாப்பூ இது பீரைப் பொங்க வச்சு சிக்குன கோழியை வறுத்து தலைகீழாத் தொங்கவிட்டுக் கொண்டாட வேண்டிய மேட்டர் ஆச்சே இப்படி கொசு கடிப்பட்டு சிக்குன் குனியா வருமான்னு தவிக்கறவன் மாதிரி சொல்லுற?

"அப்புறம் என்னப் பண்றது.. சம்பளம் அதிகம் தான். ஆனா எவ்வளவு அதிகம் வருதோ அம்புட்டையும் வரியாக் கட்டி வறுமைக் கோட்டுக்குக் கீழேப் போயிருவேன் போலிருக்கே"

"அடக் கிரகம் புடிச்சவனே வரி கட்டுறது எவ்வளவு நல்ல விஷயம் தெரியுமா.. நாம கட்டுற வரி இந்த நாட்டுக்கே உயிர் மாதிரி... நாட்டோட வளர்ச்சிக்கு ஊட்டம் மாதிரி.. வரி தாண்டா நம்ம நாட்டையே வாழ வைக்குது புரியுதா?"

பங்கு நான் பேசுனதைக் கேட்டு விழி பிதுங்கிட்டான். ஒரு நிமிசம் என்னையே மேலும் கீழும் பார்த்துட்டுக் கேட்டான்.
"ஆமா வர்ற உள்ளாட்சித் தேர்தல்ல அம்மா கட்சியிலே இல்ல திராவிடர் கேப்டன் கட்சியிலே நிக்கப் போறீயா என்ன?"

"ஏன் அப்படி கேக்குற?.. நான் அரசியல் பேசவே இல்லியேடா"

"அட என்ன மாப்பூ... முதல்வர் கலைஞரை இம்புட்டுத் தாக்கிப் பேசிபுட்டு இப்படி ஜகா வாங்குற?"

"நான் எப்போடா கலைஞரைத் தாக்குனேன்?"

"நீ தாண்டா செமத் தாக்கு தாக்குன!"

"டேய் இங்கிட்டு கலைஞர் விசுவாசிக நிறைய பேர் படிக்க வருவாங்க.. வம்பு பண்ணி வச்சிட்டுப் போயிராதடா"

"மாப்பூ... நீ என்னச் சொன்ன வரி நாட்டுக்கு உயிர், வளர்ச்சி அப்புறம் நாட்டையே வாழ வைக்குதுன்னு.. இப்போ நம்ம முதல்வர் கலைஞர் எப்படி வேணும்ன்னாலும் படம் எடுத்துட்டு தலைப்பை மட்டும் தமிழ்ல்ல வச்சுட்டா அதுக்கு வரி விலக்குன்னு சொல்லியிருக்காரே அப்படின்னு நாட்டோட உயிரை அவர் எடுத்துட்டார்ங்கற.. நாட்டோட வளர்ச்சியைத் தடுத்துட்டார்ன்னு நீ சொல்லுற.. நாட்டோட வாழ்வையே குலைச்சுட்டார்ன்னு நீ குற்றம் சாட்டுற.. அப்படித் தானே"

"ஆகாக் கிளம்பிட்டான்யா. இனி பூ வச்சு பொட்டு வைக்காம போக மாட்டான் போலிருக்கே"

"என்ன முணுமுணுப்பு"

"மச்சான்.. கலைஞர் தமிழினத் தலைவர்டா, தமிழை வளர்க்கறதை அவர் தன் வாழ் நாள் கட்மையாச் செஞ்சுகிட்டு இருக்கார்.. இப்போ அதனாலத் தான் படமெல்லாம் தமிழ் பெயர் இருந்தா தமிழ் வளரும்ன்னு அப்படிச் சொல்லியிருக்கார்டா"

"அதுன்னால நாட்டுக்கு எவ்வளவு நஷ்ட்டம் தெரியுமா?"

"அது நஷ்ட்டம் இல்ல்டா தமிழ் வளர்க்க நாம் கொடுக்கும் விலை.."

"ஆக எம்டன் மகன் எம் மகன் ஆனாதல்ல... ஜில்லென்ற ஒரு காதல் சில்லுன்னு ஒரு காதல் ஆனாதால்ல... அப்புறம் காட்பாதர் வரலாறு அப்படின்னு மாறுனதால்ல.. தமிழ் வளர்ந்துச்சுன்னு சொல்லுற?"

பங்காளி கேட்டக் கேள்விக்கு என்னப் பதில் சொல்லுறதுன்னு யோசிச்சக் கேப்பல்ல அடுத்தக் கேள்விய வேற கேட்டான்.

"அப்ப்டின்னா.. நான் வேலைப் பாக்குற என் கம்பெனியும் தன் பெயரைத் தமிழ்ல்ல மாத்திகிட்டா அங்கே வேலைப் பாக்குற எல்லாருக்கும் கலைஞர் வரிவிலக்குக் கொடுப்பார்ன்னு சொல்லுற?"

"ஆகா.. இப்படி வேற கிளம்பியிருக்கீங்களா? ஆமா.. இன்போசிஸ்,விப்ரோ, டி.சி.எஸ், ஹெச்.சி.எல், ஐ பிளைக்ஸ் இதுக்கெல்லாம் தமிழ் பெயரா.. என் சின்ன மூளைக்கு தமிழ் படுத்துதல் ரொம்பக் கஷ்ட்டம்டா சாமி... ப்ளீஸ் ஹெல்ப்....

"மச்சான் இன்னொருக் கேள்வி..." பங்கு ஆரம்பிச்சான்.

"போதும் நான் உள்ளாட்சித் தேர்தல் அன்னிக்கு ஊரை விட்டேப் போயிடுறேன்.. என்னிய விட்டுடு.."

21 comments:

நாகை சிவா said...

ஆஹா, நல்லா தான்யா கிளப்புறீங்க. நீங்க(உங்க நண்பர்) கேட்ட கேள்வி ஏதுவுமே தப்பு கிடையாது. இதே நாம் கேட்டா அ.தி.மு.க. சொல்லுறான்ங். இது கேட்டு ஏண்டா தேவையில்லாம முத்திரை குத்திக்கனும் என்று எதையும் கண்டுக்குறது இல்ல.

ஏன் நண்பா, மத்த நாட்டை கம்பெர் பண்ணும் போது நம் நாட்டில் வரி கம்மி தானே. அதுவும் இல்லாம இந்த மேட்டருக்கு நீங்க சிதம்பரத்தை தான் டீல் பண்ணனும். ஏன் கலைஞர வம்புக்கு இழுக்குறீங்க. ஏற்கனவே அவர் சின் குன் குனியா வால நொந்து போயி இருக்காரு....

நாகை சிவா said...

தேவ்,
ஒரு சின்ன சந்தேகம், நம்மள மாதிரி இந்த 4 இலக்கம் இல்ல 5 இலக்கத்தில் சம்பளம் வாங்குபவர்களிடம் இருந்து மட்டும் சரியா வரிய வசூல் பண்ணி விடுகின்றார்கள்.

கோடி கோடியா சம்பாதிக்கும் அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், தொழில் அதிபர்கள் மட்டும் வரி கட்டாம ஜாலியா சுற்றிக்கிட்டு இருக்காங்களே, அவங்களை எல்லாம் என்ன பண்ணுறது

Unknown said...

சிவா,

அந்த முத்திரை குத்தப் படும் மேட்டர் தானே நம்மில் பலரைப் பல இக்கட்டுகளில் சிக்க வைக்கிறது. ஒரு தடவை முத்திரை குத்திட்டு ஐந்து வருடம் நித்திரை கொள்வது நம்ம முன்னோர் நமக்குச் சொல்லிக் கொடுத்த பாடம் அல்லவா

அயல் நாட்டு வரி விவரங்கள் நான் பேசுவது சரியா இருக்காது. நான் இந்திய எல்லையை இது வரைத் தாண்டியதில்லை. வேறு நாடுகளில் வாழ்ந்த அனுபவம் இல்லை. விவரம் அறிந்தவர்கள் சொல்வார்கள் கேட்போம். அட நீங்களே சொல்லலாமே

Unknown said...

//இந்த மேட்டருக்கு நீங்க சிதம்பரத்தை தான் டீல் பண்ணனும். ஏன் கலைஞர வம்புக்கு இழுக்குறீங்க. ஏற்கனவே அவர் சின் குன் குனியா வால நொந்து போயி இருக்காரு.... //

சிதம்பரம் பத்தியும் கருத்து சொல்லலாம் தான் தப்பு இல்ல... ஆனா இங்கிட்டு இருந்து ஆரம்பிப்போம்ன்னு தான் ஆரம்பிச்சேன்

Unknown said...

//கோடி கோடியா சம்பாதிக்கும் அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், தொழில் அதிபர்கள் மட்டும் வரி கட்டாம ஜாலியா சுற்றிக்கிட்டு இருக்காங்களே, அவங்களை எல்லாம் என்ன பண்ணுறது //

அவங்க எல்லாம் தான் ஒண்ணு கூடி பாராட்டு விழா நடத்திடுறாங்களே.. நாலு இலக்கம் அஞ்சு இலக்கம் எல்லாம் வாங்கிட்டு நம்மாலே அவ்வள்வு பெரிய விழாவெல்லாம் நடத்தமுடியல்ல என்னப் பண்றது?

நன்மனம் said...

பதிவு, பின்னூட்டம் எல்லாம் பாத்தா இங்க யாரோ நாட்ட திருத்த முழு மூச்சோட கிளம்பினா மாதிரி தெரியுது.... சரி சரி நடக்கட்டும்.... நல்லது நடந்தா சரி தான். என்ன நான் சொல்லறது....

இலவசக்கொத்தனார் said...

இன்னா? வூடு கீடு மாறிக்கினையா? புச்சாப் போன அட்ரஸ் தேடி ஆட்டோ வராதுன்னு ஐடியா பண்ணி ரவுசு விட்டுக்கினு கீறயா? பாத்து கண்ணு. பார்ட் பார்ட்டா பார்ஸல் பண்ணி அனுப்பிட போறாங்க. கொயந்த குட்டில்லாம் வேற கீது. உனக்கு இன்னாத்துக்கு பெரீய எடத்து பொல்லாப்பு. பாத்து ரோட க்ராஸ் பண்ணிட்டு போய்க்கினே இரு அப்பூ.

கைப்புள்ள said...

அடுத்த எலக்ஷன்ல கேப்டன் கச்சியிலே உன் தோஸ்த் நிக்கப் போறாராய்யா தேவு? பாத்தா அப்படி தான் தெரியுது.
:)

Unknown said...

வாங்க நன்மனம்,

//பதிவு, பின்னூட்டம் எல்லாம் பாத்தா இங்க யாரோ நாட்ட திருத்த முழு மூச்சோட கிளம்பினா மாதிரி தெரியுது....//

அப்படியாத் தெரியுது.. சிவா போட்டப் பின்னூட்டத்தால என் பதிவுக்கு இவ்வள்வு பாராட்டா... தேங்க்யூ தேங்க்யூ ( அப்பாடா ஆட்டோ அனுப்புனா சூடானுக்கும் ஒண்ணு அனுப்புங்கய்யா)

// சரி சரி நடக்கட்டும்.... நல்லது நடந்தா சரி தான். என்ன நான் சொல்லறது....//

என்னுடைய தாழ்மையான எண்ணமும் அதே அதே. இங்கிட்டு நாம் பின்னும் வலையிலே எந்தப் பெரிய மீனும் சிக்காதுன்னு தெரிஞ்சும் பின்னுற வலையை பின்னிகிட்டு தானே இருக்கோம்.

Unknown said...

//இன்னா? வூடு கீடு மாறிக்கினையா? புச்சாப் போன அட்ரஸ் தேடி ஆட்டோ வராதுன்னு ஐடியா பண்ணி ரவுசு விட்டுக்கினு கீறயா? பாத்து கண்ணு. பார்ட் பார்ட்டா பார்ஸல் பண்ணி அனுப்பிட போறாங்க. கொயந்த குட்டில்லாம் வேற கீது. உனக்கு இன்னாத்துக்கு பெரீய எடத்து பொல்லாப்பு. பாத்து ரோட க்ராஸ் பண்ணிட்டு போய்க்கினே இரு அப்பூ.//

ஆகா சும்மாப் போனவனைச் சுரண்டி விட்ட கதையா நம்ம பங்கு நம்ம கிட்ட பேசுன மேட்டரை யதார்த்தமா வலையிலே நாம பின்னிவிட்டா.. இவர் வந்து நம்மளை கரண்ட் கம்பியிலே காலை வைன்னு இழுத்து விட்டு இஸ்த்திரி போட்டுருவாரு போலருக்கு...

அய்யா உங்க டயலாக் யூஸ் பண்ணிக்கிறேன் ஐயாம் தி எஸ்கேப்

மனதின் ஓசை said...

அரசின் நோக்கம் சரியானததாக இருந்தாலும் இன்னும் சிறப்பாக செயல்படுத்தி இருக்கலாம்.
அதே போல் சிக்கன்குனியா விசயத்திலும் வேகமாக செயல்பட தவறிவிட்டது..

Unknown said...

//அடுத்த எலக்ஷன்ல கேப்டன் கச்சியிலே உன் தோஸ்த் நிக்கப் போறாராய்யா தேவு? பாத்தா அப்படி தான் தெரியுது.//

கேப்டன்ன்னு சொல்லாதே கைப்பு திராவிடன்ன்னு சொல்லு...

இன்றைய முரசு நாளைய அரசு அப்படிங்கறீஙக...

கைப்புள்ள said...

//கேப்டன்ன்னு சொல்லாதே கைப்பு திராவிடன்ன்னு சொல்லு...

இன்றைய முரசு நாளைய அரசு அப்படிங்கறீஙக...//

நான் ஒன்னும் ங்கலை...யப்பா ஆளை வுடு...நான் வரலை இந்த வெளையாட்டுக்கு.

மனதின் ஓசை said...

//என்னுடைய தாழ்மையான எண்ணமும் அதே அதே. இங்கிட்டு நாம் பின்னும் வலையிலே எந்தப் பெரிய மீனும் சிக்காதுன்னு தெரிஞ்சும் பின்னுற வலையை பின்னிகிட்டு தானே இருக்கோம்.//

சத்தியமான உண்மை தேவ்.. ஒரு காலத்தில் மீன்கள் மாட்டும்...

சரி.. நமது நாடு திருந்த என்ன வழி..
அரசியல்வாதிகளை மொத்தமாக நாடு கடத்துவது/ கொல்வது போன்ற பதில் வேண்டாம் அது சாத்தியமில்லை....
செய்யகூடிய, ஒரு 10-20 வருஷத்திலாவது மாற வழிகள் எதும் இருக்கிறதா? நாம் உணர வேண்டியது என்ன? செய்ய வேண்டியது என்ன?

மனதின் ஓசை said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

//நான் ஒன்னும் ங்கலை...யப்பா ஆளை வுடு...நான் வரலை இந்த வெளையாட்டுக்கு. //

யோவ் கைப்பு இதே மாதிரி தான் நம்ம பங்குகிட்ட கெஞ்சுனேன் கதறுனேன்.. என்னியப் பார்த்து என் மூக்கு மேல விரல் வச்சு நாட்டு மேல அக்கறையே இல்லாத நாதாரி பயன்னு என்னியத் திட்டிட்டான்...

உன் பிலீங் எனக்குப் புரியுது நம்ம பிலீங் அவனுக்குப் புரியல்லயே.. விடு கைப்பு நாம ஒண்ணா எஸ்கேப் ஆயிடுவோம்

Unknown said...

//சரி.. நமது நாடு திருந்த என்ன வழி..
அரசியல்வாதிகளை மொத்தமாக நாடு கடத்துவது/ கொல்வது போன்ற பதில் வேண்டாம் அது சாத்தியமில்லை....
செய்யகூடிய, ஒரு 10-20 வருஷத்திலாவது மாற வழிகள் எதும் இருக்கிறதா? நாம் உணர வேண்டியது என்ன? செய்ய வேண்டியது என்ன? //

ம்ம் ஹமீது நீங்களும் நம்ம பங்கு மாதிரி படு சிரீயசாக் கேள்வி எல்லாம் கேக்க ஆரம்பிச்சுட்டீங்க.. ஒரு வேளை நாட்டுல்ல இருக்க எல்லோரும் இதை மாதிரி கேள்விக் கேட்க ஆரம்பிச்சா எதாவது வழி பிறக்குமா?

ஆமா இந்த வரி விலக்கு என்னிய மாதிரி ஏழை மென்பொருள் தொழிலாளிக்கு கிடைக்க வழியே இல்லையா?

என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்கண்ணா?

நாகை சிவா said...

ஆஹா, போர் வாள் ஆட்டம் நீங்க எதிர்பாத்த மாதிரியே சூடு பிடிக்குது போல. என்ன விடுங்க சாமி.....

அண்ணன் நன்மனம், ரொம்ப தாங்கஸ்ங்கோ.....

அண்ணாத்த தேவ், புது டெம்பு சூப்பரோ சூப்பர்........

கப்பி | Kappi said...

நல்ல பதிவு தேவ்!

Unknown said...

//ஆஹா, போர் வாள் ஆட்டம் நீங்க எதிர்பாத்த மாதிரியே சூடு பிடிக்குது போல. என்ன விடுங்க சாமி....//
புலிக்குட்டி புரியற மாதிரி பேசு...:)

//அண்ணன் நன்மனம், ரொம்ப தாங்கஸ்ங்கோ.....//
நன்மனத்தாரையே கலாய்க்கிறீயா புலிக்குட்டி.. நேரம் தான்

//அண்ணாத்த தேவ், புது டெம்பு சூப்பரோ சூப்பர்........ //
இது ஒண்ணு தான் விளங்குறாப்பல்ல சொல்லியிருக்க நீ டாங்க்ஸ்ப்பா

Unknown said...

//நல்ல பதிவு தேவ்!//
நன்றி கப்பி.

tamil10