Saturday, January 20, 2007

குரு பார்த்தாச்சு.

ஜனவரி 12... தூத்துக்குடி நியூ கிளியோபேட்ரா தியேட்டர்.. மதியம் 2 மணி காட்சி (காலைக் காட்சிக்குப் பொட்டி வர்றலங்க). ஒண்ணு இரண்டு பேர் வாசலில் டிக்கெட்டுக்கு நிக்க நானும் போய் நின்னேன். இந்தியிலே பாக்கணும்ன்னு முடிவு பண்ண படம்... தமிழ்ல்ல பார்க்கும் படி ஆயிருச்சு. கொஞ்ச நேரத்துல்ல ஓரளவு கூட்டம் கூடி அரங்கம் நிரம்புற அளவுக்கு கூட்டம் சேந்துருச்சு. குரு கதை இந்நேரத்துக்குள்ள எல்லாருக்கும் மனப்பாடமே ஆகுற அளவுக்கு வலைகள்ல்ல நம்ம பதிவர்கள் பந்தி பரிமாறிட்டாங்க..

படத்தோட விளம்பரங்கள்ல்ல போட்டுருக்க மாதிரி...
VILLAGER...VISINORY..WINNER ஒத்த வரி தான் கதை...
அப்துல் கலாமின் கனவு காணுங்கள் தத்துவத்தைக் கையில் எடுத்துக் கொண்டு..அதில் அம்பானியின் கதையை கலந்து...ஓரளவு மணி பிராண்ட் ( மணி பிராண்ட் மசாலா விளக்கம் வேண்டுமா இங்கேச் சுட்டுங்கள்) மசாலாச் சேர்த்து கமகமவென சமைக்கப்பட்டிருக்கும் முழு விருந்து தான் குரு.
மணிரத்னம் படங்களைத் தவறவிடாமல் பார்த்த சினிமா ரசிகர்களுக்கு நாயகன், இருவர், ரோஜா, மெளனராகம் உள்ளிட்ட அவரது பழைய படங்கள் பிளாஷ் பேக்காய் தங்கள் முன் ஓடுவதை யாராலும் தடுக்க முடியாது. பல காட்சிகளின் அமைப்பு மணியின் ரிமிக்ஸ் திறமையைக் காட்டுகினறன.
அபிஷேக் பச்சன் அசத்தல்... சூர்யா இன்னும் அசத்தல்... சூர்யா திரையில் வரல்லன்னாலும் திரைக்குப் பின்னால் இருந்து ஒளிர்கிறார். ஜூனியர் பச்சன் குரு பாயாக பாந்தமாய் பொருந்துகிறார். நிறைவானப் பங்களிப்பு.
ஐஸ்வர்யா ஆரம்பத்தில் வெறும் அழகு.. ஆழ வெட்டிய ரவிக்கையில் கவர்ச்சி உலா வருகிறார். மழையில் நனைகிறார். ஆடுகிறார். பாடுகிறார். அபிஷேக்கோடு காதல் காட்சிகளில் பின்னி பிணைகிறார். காதல் காட்சிகள் மணியின் இருவர் படக் காட்சிகளை நினைவுப் படுத்துகின்றன.
மிதுன் சக்கரவர்த்தி நானாஜி வேடத்தில் கலக்கியிருக்கிறார். டிஸ்கோ டான்சர் என ஆட்டம் போட்ட மிதுனா இது என புருவம் உயர்த்த வைக்கிறார். அவருக்கு நாசர் குரல் கொடுத்திருப்பது கச்சிதம்.
மாதவனுக்கு ஒரு சின்ன வேடம். ஆள் ரொம்ப இளைத்திருக்கிறார். மணி அவரை ஒரு நடிகராக நன்றாகவே இழைத்திருக்கிறார். பத்திரிக்கை நிருபராய் சாகசங்கள் செய்கிறார். குருவை எதிர்க்கிறார். வித்யா பாலன் மீது காதல் கொள்கிறார். அபிஷேக் ஐஸ்வர்யா காதல் கொஞ்சம் பெரிய கவிதை என்றால்.. மாதவன் வித்யா பாலன் காதல் ஒரு சின்ன ஹக்கூ ( ஹைக்கூவே சிறுசுத் தான்ன்னு சொல்லுறீங்களா?)

வித்யா பாலன் குருவின் மனிதநேயத்தைக் காட்டுவதற்காகவே உருவாக்கப் பட்ட ஒரு செயற்கை கதாபாத்திரமாய் வருகிறார். குரு மீது பாசமும் மாதவன் மீது காதலும் கொள்கிறார். மாதவனோடு கல்யாணம் செய்து கொண்டு கொஞ்ச நாளில் செத்துப் போகிறார். குருவின் நல்ல பக்கத்தை வெளிபடுத்த வலுக்கட்டாயமாய் திணிக்கப்பட்ட ஒரு பாத்திரமாகவே வித்யா பாலன் வந்துப் போகிறார்.

இசை ஏ.ஆர்.ரஹமான்... பின்னணி ஹம்மிங் அள்ளுகிறார் கைத்தட்டலை. ஆனால் தமிழில் பாடல்களும் வரிகளும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை.
உயிரேவில் கலக்கிய இதே வைரமுத்து-ரஹமான் - மணிரத்னம் கூட்டணியை குருவில் தேட வேண்டி உள்ளது... உயிரேவில்பாடல்களின் வரிகளும் இசையும் ஏற்படுத்திய தாக்கம் குரு வில் ஏனோ சுத்தமாக இல்லை. கிட்டத் தட்ட எல்லாப் பாடல்களும் காதுகளில் சொய்ங் என்ற இரைச்சலாவே விழுந்தன.மையா..மையா.. மட்டும் அதிலும் மையா..மையா .. வார்த்தைகள் மட்டும் தான் காதில் சரியாய் விழுந்தது.
கேமரா ராஜிவ் மேனன்.. காட்சிகளுக்கு கூடுதல் மெருகு ஏற்றியிருக்கிறார். படம் கண்களுக்கு நிச்சயம் குளிர்ச்சி. செட் போட்டவரும் கலக்கியிருக்கிறார். மணி படங்களில் வரும் ATTENTION TO DETAILS இதிலும் மிஸ்ஸாகவில்லை
எல்லாம் ரைட் மணி...
உயிரே ஏற்கனவே நீங்க ஒரு கல் வச்சு அடிச்சு இரண்டு மாங்காப் பறிக்க செஞ்ச முதல் முயற்சி... அதாங்க இந்தியிலே எடுத்துட்டு அதுக்கு பின்னாடி தமிழ் சாயம் பூசி ஷாருக்கான் மனிஷாவை எல்லாம் நம்ம தமிழ் மக்களோட மக்களாக் காட்ட முயற்சி பண்ணியிருந்தீங்க.
அதுக் கூட பரவாயில்ல....

ஆனா குருவுல்ல கதைப் படி குருநாத் தேசிகன் இலஞ்சி என்ற நெல்லைக் கிராமத்தைச் சேர்ந்தவர்... அப்படின்னு சொல்லிட்டு தின்னவேலி மக்களுக்கு குஜராத் உடைகள் போட்டு விட்டு கோமாளிக் கூத்துக் கட்டியிருக்கீங்களே இது நியாமா?

வட இந்திய உடைகள்..வட இந்திய கலாச்சார பாடல்கள் இப்படி இலஞ்சி கிராமத்தையும் தின்னவேலியையும் அப்படியே அலாக்காத் தூக்கி குஜராத்க்குக் கொண்டு போய் குத்த வச்சுட்டீங்களே இது உங்க படைப்பை நீங்களே லொள்ளு சபா பண்ண மாதிரி இல்ல இருக்கு
குரு நிச்சயம் ஒரு நல்ல படம் அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனா இந்த தமிழ் டப்பிங் அதற்கு அவசியமா?
வியாபாரம் தான் முக்கியம் இல்லங்கலே ஆனா இந்த டப்பிங் ரொம்பவே நெருடுது...நேரடியா தமிழ் படம் கொடுக்கல்லன்னாலும் பரவாயில்ல உங்க ரசிகர்கள் தாங்கிப்பாங்க.. இப்படி யதார்த்தங்களைக் கொன்று விடும் டப்பிங் படங்களைத் தவிர்த்து விடுங்கள். இன்னைக்கு நிலையிலே கடல் தாண்டிய நிலையில் இருக்கும் நம்ம அடுத்த தலைமுறைக்குச் சினிமாவுல்ல தான் கிராமத்தை எல்லாம் காட்ட வேண்டி இருக்கு அதுவும் உங்களுக்குன்னு ஒரு மதிப்பு இருக்கு... நீங்க எடுக்குற படத்துல்ல இது தான் தின்னவேலின்னு நீங்கச் சொன்னா எங்க அடுத்த தலைமுறை தமிழன் அதை அப்படியே நம்பிருவான் மணி...சோ ப்ளீஸ் திங்க்...
மொத்ததில் குரு ஒரு நம்பிக்கையின் கதை... நிச்சயம் பார்க்கலாம்.. முடிந்தால் இந்தியிலேப் பாருங்கள் தமிழ் சப் டைட்டில்களோடு.

30 comments:

இராம்/Raam said...

நல்ல விமர்சனம் தேவ்,

இன்னிக்குதான் இந்த படத்தைப் பார்க்கலாமின்னு ஐடியா, அதுக்கு முன்னாடி உங்க விமர்சனம் படிச்சது நல்லா இருக்கு :)

இலவசக்கொத்தனார் said...

எச்சூஸ் மீ.

//முடிந்தால் இந்தியிலேப் பாருங்கள் தமிழ் சப் டைட்டில்களோடு.//

நம்ம கைப்பூ பட கதைச் சுருக்கம் மொழி மாறுன போது கதையே மாறிப் போச்சு.

இன்னுமா இந்த சப் டைட்டில் மோகம்? :))))

அப்புறம் சப் டைட்டிலுக்கு அங்க எவ்வளவு தமிழ் வார்த்தைங்க வந்து இருக்கு, நாம எல்லாம் உபயோகிச்சாத்தானே மக்களுக்கு தெரிய வரும்! :)

G.Ragavan said...

கிளியோபாட்ராவா? ஜுமாஞ்சி பாத்தது...தமிழில். தேட்டர் இன்னமும் நல்லாயிருக்கா?

குருவைத் தமிழ்ப்படுத்தும் போது குஜராத்துன்னே போட்டிருக்கலாம். தப்பில்லைன்னுதான் தோணுது. எலஞ்சின்னு போட்டுட்டு பண்பாட்டுக் கொலை செய்றத விட....அது தாவலை.

படம் பார்க்கனுங்குற விருப்பம் எனக்கு மொதல்லயிருந்தே இருக்கலை. இத்தன விமர்சனங்களைப் படிச்ச பிறகும் அப்படியொரு விருப்பம் எனக்கு வரும்னா.....மன்னிக்க. வராது.

Deekshanya said...

என்னது தூத்துக்குடியா? நானும் அந்த ஊர் பிரஜைதான். அம்மா அப்பா எல்லாரும் அந்த ஊர்லதான் பிறந்தாங்க, இன்னும் எங்க சொந்தம் எல்லாரும் அங்கதான்!

நல்ல ஊர்!

Deekshanya said...

நல்ல விமர்சனம்!

Unknown said...

//நம்ம கைப்பூ பட கதைச் சுருக்கம் மொழி மாறுன போது கதையே மாறிப் போச்சு.

இன்னுமா இந்த சப் டைட்டில் மோகம்? :))))//


நம் அருமை இமசை அரசனுக்கு நேர்ந்த் கதி பாவம் குருவுக்கும் நேரக் கூடாதுன்னு நீங்க தவிக்கிற தவிப்பு எனக்குப் புரியுது.. இருந்தாலும் ஓழுங்கான சப்-டைட்டில் போடலாம் இல்லையா...

Unknown said...

//கிளியோபாட்ராவா? ஜுமாஞ்சி பாத்தது...தமிழில். தேட்டர் இன்னமும் நல்லாயிருக்கா?//

பரவாயில்ல ஜி.ரா. ரொம்ப மோசமில்லை ஓரளவுக்கு நல்லாவே இருக்கு.

//குருவைத் தமிழ்ப்படுத்தும் போது குஜராத்துன்னே போட்டிருக்கலாம். தப்பில்லைன்னுதான் தோணுது. எலஞ்சின்னு போட்டுட்டு பண்பாட்டுக் கொலை செய்றத விட....அது தாவலை.//

அதே தான் என் கருத்தும்.. தூத்துக்குடி மக்கள் கருத்தும் அதான். படம் பாத்துட்டுப் போனவங்க அதைத் தான் சொன்னாங்க..

//படம் பார்க்கனுங்குற விருப்பம் எனக்கு மொதல்லயிருந்தே இருக்கலை. இத்தன விமர்சனங்களைப் படிச்ச பிறகும் அப்படியொரு விருப்பம் எனக்கு வரும்னா.....மன்னிக்க. வராது.//

ஜி.ரா. இப்படி எல்லாம் ஒதுங்கிப் போகக் கூடாது நீங்களும் பாத்துட்டு ஒரு இரண்டு வரி விமர்சனமாவதுப் போடுங்க...

Unknown said...

//என்னது தூத்துக்குடியா? நானும் அந்த ஊர் பிரஜைதான். அம்மா அப்பா எல்லாரும் அந்த ஊர்லதான் பிறந்தாங்க, இன்னும் எங்க சொந்தம் எல்லாரும் அங்கதான்!//

நீங்களும் நம்மூரா? சந்தோசம்ங்க.. ஊர் பக்கம் எல்லாம் போறீயளா?

//நல்ல ஊர்! //

கண்டிப்பா சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா!!!

Unknown said...

//நல்ல விமர்சனம்!//

நன்றி தீக்ஷ்ன்யா

Anonymous said...

thoothukudi poiyum unga velaya paatheengala :P veetla onnum sollalaya :D------- rasigai

Unknown said...

//thoothukudi poiyum unga velaya paatheengala :P veetla onnum sollalaya :D------- rasigai //

எங்கிருந்தாலும் கடமைத் தவற முடியுமா? அப்புறம் உங்களை மாதிரி ரசிகைகள் எல்லாம் படிக்க நான் எப்படி விம்ரசனம் எழுத முடியும்...

Unknown said...

//நல்ல விமர்சனம் தேவ்,

இன்னிக்குதான் இந்த படத்தைப் பார்க்கலாமின்னு ஐடியா, அதுக்கு முன்னாடி உங்க விமர்சனம் படிச்சது நல்லா இருக்கு :)//

முதலில் வந்து பின்னூட்டம் போட்ட தம்பி ராமுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

(யப்பா. பின்னூட்டத்திற்கு பதில் போட லைட்டாத் தாமதம் ஆனதுக்கு வெயிட்டா போராட முடிவெடுத்த தம்பியே உன் கோவத்தை அண்ணனுக்காக அடக்கி கொள்....)

சரி நீ படம் பாத்துட்டீயா இல்லையா?

G.Ragavan said...

// //படம் பார்க்கனுங்குற விருப்பம் எனக்கு மொதல்லயிருந்தே இருக்கலை. இத்தன விமர்சனங்களைப் படிச்ச பிறகும் அப்படியொரு விருப்பம் எனக்கு வரும்னா.....மன்னிக்க. வராது.//

ஜி.ரா. இப்படி எல்லாம் ஒதுங்கிப் போகக் கூடாது நீங்களும் பாத்துட்டு ஒரு இரண்டு வரி விமர்சனமாவதுப் போடுங்க... //

ஐயோ! தேவு...ஏற்கனவே சிவப்பதிகாரம், பொய்யின்னு வாங்குன சூடு இன்னும் ஆறலை. அதுக்குள்ள மக்கள் ஆழ்வார் போக்கிரின்னு ரெண்டு சூட்டோடு வந்து கதறிக்கிட்டு இருக்காங்க. இப்படி ஒரு நெலமைல இந்திச் சூடு வேற தேவையா? நான் தாங்க மாட்டேன் சாமி. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தோட ஒரிஜினல் டிவிடி வாங்கிக் குடுங்க. பத்து வாட்டி பாத்துட்டு பத்து விதமா விமர்சனம் எழுதுறேன். இதெதுக்குங்க ரஸ்க்கு...இல்ல இல்ல ரிஸ்க்கு.

Unknown said...

//ஐயோ! தேவு...ஏற்கனவே சிவப்பதிகாரம், பொய்யின்னு வாங்குன சூடு இன்னும் ஆறலை. அதுக்குள்ள மக்கள் ஆழ்வார் போக்கிரின்னு ரெண்டு சூட்டோடு வந்து கதறிக்கிட்டு இருக்காங்க. இப்படி ஒரு நெலமைல இந்திச் சூடு வேற தேவையா? நான் தாங்க மாட்டேன் சாமி. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தோட ஒரிஜினல் டிவிடி வாங்கிக் குடுங்க. பத்து வாட்டி பாத்துட்டு பத்து விதமா விமர்சனம் எழுதுறேன். இதெதுக்குங்க ரஸ்க்கு...இல்ல இல்ல ரிஸ்க்கு. //


என்ன ஜி.ரா. போக்கிரி ஆழ்வாருக்கே பயந்தா எப்படி? அடுத்து நம்ம டயாலாக் டயனோசர் பேரரசும் நம்ம வல்லவன் சிம்புவும் இணைந்து ஒரு படம் பண்ணப் போறதா ஒரு செய்தி உலாவிகிட்டு இருக்கு அந்தப் படத்துப் போஸ்ட்டரைப் பார்க்கக் கூட பயப்படுவீங்கப் போலிருக்கு. ..

Sridhar Narayanan said...

நல்லா இருக்கு விமர்சனம் தேவ். உங்கள் சேவை தொடர்க.

ஜிரா ஆனாலும் 'பொய்'யை ரொம்ப கிழிச்சிட்டார். நான் பார்த்த வரையில் பாலசந்தரோட 'ஜன்னல்' சீரியல் மாதிரிதான் இருந்தது. ரொம்ப மோசம் இல்லை.

அப்புறம் 'வீராசாமி' விமர்சன்ம் எப்போ? நீங்க போட முடியலனா அந்த பணியை ஜிரா-கிட்ட ஒப்படைங்க. ரொம்பவும் காய்ஞ்சு போய் இருக்கார். :-))))

G.Ragavan said...

// என்ன ஜி.ரா. போக்கிரி ஆழ்வாருக்கே பயந்தா எப்படி? அடுத்து நம்ம டயாலாக் டயனோசர் பேரரசும் நம்ம வல்லவன் சிம்புவும் இணைந்து ஒரு படம் பண்ணப் போறதா ஒரு செய்தி உலாவிகிட்டு இருக்கு அந்தப் படத்துப் போஸ்ட்டரைப் பார்க்கக் கூட பயப்படுவீங்கப் போலிருக்கு. //

பாத்தீங்களா...இதுக்குத்தாங்க நானும் சொல்றேன். துட்டத்தைக் கண்டா தூர வெலகுன்னு. லார்டு ஆப் லபக்தாஸ், ஹாரி பாட்டரும் பிச்சுப் போட்ட பரோட்டாவும், கிரானிகில்ஸ் ஆப்பு நாறுனியா மாதிரி நல்ல இங்கிலீசுப் படமாப் பாக்கலாம்னு உக்காந்தா இப்ப பிளட் டயமண்டு, டெயூஸ் பிகாலோன்னு படங்கள் வருது. சரீன்னு கன்னடம் பக்கம் வந்தா...தாங்க முடியலை. வெட்டி மாதிரி தெலுங்குக்கும் தாவ முடியலை. மலையாளம் நம்மளப் பாத்து முறைக்குது. இதெல்லாம் நமக்கெதுக்கு. கிட்டப்பா பாகவதர் நடிச்ச ஏதாவது படம் இருந்தாக் குடுங்க. இல்ல ரோஸ் பேண்ட்டு போட்டுக்கிட்டு எம்.ஜி.ஆர் ஆடிப் பாடுன படம்னாலும் சரிதான்.

ஜி said...

அருமையான அலசல்... நானும் ஹிந்திலத்தான் பாத்தேன்.. ஆனா, சப்-டைட்டில் இல்ல.. அதுனால, பாதி புரியல... தமிழ்ல திரும்ப பாக்கணும் :))

ILA (a) இளா said...

கன்னடத்துல கேட்டா "குரு சென்னாதீரா?

வல்லிசிம்ஹன் said...

நல்ல விமரிசனம் தேவ்.

மணிரத்னம் படத்துக்கு ஏற்றமாதிரி மணியா எழுதிட்டீங்க.
உங்க கிட்ட எடிட்டிங்
கொடுத்து இருக்கலாம்.:-)
மாயா பஜார் விமரிசனம் எழுதுங்களேன்.
1956 ரிலீஸ்:-)

கைப்புள்ள said...

படம் பாத்த எஃபெக்டு வருதப்பா உன் விமர்சனத்தைப் படிச்சதும்.

//அப்படியே நம்பிருவான் மணி...சோ ப்ளீஸ் திங்க்...
மொத்ததில் குரு ஒரு நம்பிக்கையின் கதை... நிச்சயம் பார்க்கலாம்.. முடிந்தால் இந்தியிலேப் பாருங்கள் தமிழ் சப் டைட்டில்களோடு.//

அப்படீங்கற? இந்தியிலேயே பாக்க முயற்சி பண்ணறேன்.
:)

Anonymous said...

தேவ், நல்ல விமர்சனம். நான் ஹிந்திலதான் பாத்தேன்! உங்கள் விமர்சனம் நல்லாருக்கு! அந்த முதல் ஐஸ் பாட்டுல கொஞ்சூண்டு தமிழ்நாடு வருமே - ஓகேனகல் மாதிரி இருந்தது - அப்புறம் பாபனாசம்/ஸ்ரீவைகுண்டம் கோவில் கோபுரம் ஏதோ இருந்ததோ? நிச்சயம் தமிழ் நாடு தான் - ஒரு இரண்டு ஸெகண்டு பாட்டுல! :) ... இதெங்கப்பா குஜராதிலன்னு நாங்க நினச்சோம்! :) நான் எதோ மணி சென்டிமென்ட் போல்ருக்குன்னு நினைச்சேன்!
இரண்டாவது தடவை பாக்கும்போதுதான் அடடா மிதுன்தான் நானாவான்னு அசந்துட்டேன் - செம ஆக்டிங் இல்ல?

Unknown said...

//நல்லா இருக்கு விமர்சனம் தேவ். உங்கள் சேவை தொடர்க.//

நன்றி வெங்கட்..சேவையா... ஆகா என்னிய வச்சு கீமெடி காமெடி பண்ணலீயே நீங்க?

//ஜிரா ஆனாலும் 'பொய்'யை ரொம்ப கிழிச்சிட்டார். நான் பார்த்த வரையில் பாலசந்தரோட 'ஜன்னல்' சீரியல் மாதிரிதான் இருந்தது. ரொம்ப மோசம் இல்லை. //

ஜி.ரா. பொய் பத்தி பொய் சொல்லிட்டாரா?? சரி விடுங்க ஜி.ரா கிட்ட ஜன்னல் பத்தி எழுதச் சொல்லுவோம்...

Unknown said...

//அப்புறம் 'வீராசாமி' விமர்சன்ம் எப்போ? நீங்க போட முடியலனா அந்த பணியை ஜிரா-கிட்ட ஒப்படைங்க. ரொம்பவும் காய்ஞ்சு போய் இருக்கார். :-)))) //

என்னங்க நீங்க நம்ம செந்தழல் ரவி.. வீராச்சாமிப் பத்தி எழுதுன விமர்சன் இன்னுமா ஓங்க கண்ணுல்ல படல்ல...ச்ரி ஓங்க ஆசயை ஏன் கெடுப்பானேன்.. ஜி.ராவை வலுக்கட்டாயமா வீராச்சாமிக்கு அனுப்பி விம்ர்சனம் எழுத வச்சிருவோம்ய்யா.. ஜி.ரா ரொம்ப நல்லவர் ஆமா.. உங்க ஆசையக் கண்டிப்பா நிறைவேத்துவார்

Unknown said...

//பாத்தீங்களா...இதுக்குத்தாங்க நானும் சொல்றேன். துட்டத்தைக் கண்டா தூர வெலகுன்னு. லார்டு ஆப் லபக்தாஸ், ஹாரி பாட்டரும் பிச்சுப் போட்ட பரோட்டாவும், கிரானிகில்ஸ் ஆப்பு நாறுனியா மாதிரி நல்ல இங்கிலீசுப் படமாப் பாக்கலாம்னு உக்காந்தா இப்ப பிளட் டயமண்டு, டெயூஸ் பிகாலோன்னு படங்கள் வருது. சரீன்னு கன்னடம் பக்கம் வந்தா...தாங்க முடியலை. வெட்டி மாதிரி தெலுங்குக்கும் தாவ முடியலை. மலையாளம் நம்மளப் பாத்து முறைக்குது. இதெல்லாம் நமக்கெதுக்கு. கிட்டப்பா பாகவதர் நடிச்ச ஏதாவது படம் இருந்தாக் குடுங்க. இல்ல ரோஸ் பேண்ட்டு போட்டுக்கிட்டு எம்.ஜி.ஆர் ஆடிப் பாடுன படம்னாலும் சரிதான். //

ஜி.ரா.. நீங்க கேக்குற எதாவ்து படத்துக்கு உங்களை விமர்சனம் பண்ண வைக்கலாம்ன்னு எனக்கும் ஆசைத் தான் ஆனா மக்கள் விருப்பம் என்னவோ உங்களை வீராச்சாமி பார்க்க வைக்கிறதா இலல் இருக்கு!!!!! :)

Unknown said...

//அருமையான அலசல்... நானும் ஹிந்திலத்தான் பாத்தேன்.. ஆனா, சப்-டைட்டில் இல்ல.. அதுனால, பாதி புரியல... தமிழ்ல திரும்ப பாக்கணும் :)) //


இந்திக் கத்துகிட்டு மறுபடியும் இந்தியிலே வேணும்ன்னாப் பாருங்க ஜி.. தமிழ் வேணாம்...:)

Unknown said...

//கன்னடத்துல கேட்டா "குரு சென்னாதீரா? //

இளா ஏன் இப்படி?

Unknown said...

//நல்ல விமரிசனம் தேவ்.//
நன்றிங்க..

//மணிரத்னம் படத்துக்கு ஏற்றமாதிரி மணியா எழுதிட்டீங்க.
உங்க கிட்ட எடிட்டிங்
கொடுத்து இருக்கலாம்.:-)
மாயா பஜார் விமரிசனம் எழுதுங்களேன்.
1956 ரிலீஸ்:-) //

மாயா பஜார் தானே பண்ணிருவோம்... ஆமா அது எப்போ எந்த தியேட்டர்ல்ல ஓடுது?

Unknown said...

//படம் பாத்த எஃபெக்டு வருதப்பா உன் விமர்சனத்தைப் படிச்சதும்.//

டாங்க்ஸ் கைப்பு

//அப்படீங்கற? இந்தியிலேயே பாக்க முயற்சி பண்ணறேன்.
:) //

கைப்ஸ் நீ இன்னுமா குரு பார்க்கல்ல.. ???!!!!

Unknown said...

//தேவ், நல்ல விமர்சனம்.


நான் ஹிந்திலதான் பாத்தேன்! உங்கள் விமர்சனம் நல்லாருக்கு! //

நன்றி மதுரா

//அந்த முதல் ஐஸ் பாட்டுல கொஞ்சூண்டு தமிழ்நாடு வருமே - ஓகேனகல் மாதிரி இருந்தது - அப்புறம் பாபனாசம்/ஸ்ரீவைகுண்டம் கோவில் கோபுரம் ஏதோ இருந்ததோ? நிச்சயம் தமிழ் நாடு தான் - ஒரு இரண்டு ஸெகண்டு பாட்டுல! :) ... இதெங்கப்பா குஜராதிலன்னு நாங்க நினச்சோம்! :) நான் எதோ மணி சென்டிமென்ட் போல்ருக்குன்னு நினைச்சேன்!//

மணி நெல்லைக்காரர் தானே.. ஊர் பாசம் இழுக்கத் தானே செய்யும்.. நெல்லையின் அழ்கினைத் திரையில் பிரமாண்டமாய் காட்டியவர் மணி என்றால் அது மிகையாகாது


//இரண்டாவது தடவை பாக்கும்போதுதான் அடடா மிதுன்தான் நானாவான்னு அசந்துட்டேன் - செம ஆக்டிங் இல்ல? //

கண்டிப்பா அசர் வைக்குற நடிப்புங்க.. மிதுன் மிரட்டியிருக்கார் நடிப்புல்ல

Anonymous said...

i am aasath

Guru - Roll model of Middle class on nowdays. But is it good for society?

Guru encourage the LOTTERY type of Share market by his worst experience. Did you also heard all of the incidence are have good by its' nature or due to such inciatives done by the rebelions/Patriots.

Life hasn't fill with BUSINESS only. All things including the commedity at market also have the constant value through its' Usage Value. Beyond the destroy of this system, all of them have valued by its market value including the all relationship also. If you understand and accept it, see the film behind the scenerio ... you should find the new era of paradise on the earth ...It hasn't market .... There peoples work for society only not for capitalist market or Lottery type Share Market ....

Kalam/Ambany also the characters of promoters of Lottery system throughout the world. They want to the super power of india through this and weapons of IT services to the NASA. Do you accept this joke. But it has real factor. We have becomes Buffoons.

Through this film Ishu also the ambassodor of the beaty of World bank. He accept her slaveness through the accept of Dowry gotted Ambani and supporting his thieft

tamil10