Wednesday, January 17, 2007

விவசாயியுடன் பொங்கலோ பொங்கல்

வணக்கம் மக்கா,

அட நாட்டுல்ல இப்போ என்ன விசேஷம்ன்னாலும் டி.வி.காரயங்க கையிலே கேமராவைத் தூக்கிட்டு ஒரு மைக்கையும் கொண்டாந்து நீட்டி கதைக் கேக்குறது வழக்கமாப் போயிருச்சு...
நம்ம கச்சேரியில்லும் அதையே அப்படியே கொஞ்சம் டிக்காஷனை லைட்டாப் போட்டு காப்பி ஆத்திருவோம்ன்னு முடிவு பண்ணி உக்காந்து கண்டப் படி யோசிச்சதுல்ல வந்தது தான் டைட்டில் கார்ட்.. விவசாயியுடன் பொங்கல்...

ஊருக்கெல்லாம் சோறு போடுற மவராசன்... அந்த மண்ணின் மைந்தனோட பொங்கல் நாளை செலவிட்டுற வேண்டியது தான்னு கிளம்பி போனோம்ங்க...
விவசாயப் பூமியை பாக்கணும்ன்னா.. (அங்கே தானேங்க விவசாயி இருக்கார்)... வரப்பு ஓரமா நடக்கச் சொன்னாயங்க... நாமளும் நடந்தோம்ங்க..

விவசாயிக்குப் போன் போட்டுட்டு போனா உசிதம்ன்னு அங்கிட்டு வரப்பு பக்கமா ஓமப் பொடி பொட்டலம் கொடுத்துட்டு நமக்கு பொங்கல் வாழ்த்துச் சொன்ன புண்ணியவான் ஒருத்தர் சொன்னாருங்க..

ஆஹா விவசாயி மக்கள் எல்லாம் நெல்லும் கையுமா அலைஞ்சக் காலம் போய் இப்போ செல்லும் கையுமா அலையுறாங்களே நல்ல முன்னேத்தம் தான்னு கூட வந்த வெட்டி பய ஒருத்தன் புளங்காகிதப் பட்டுச் சொன்னான்.

சரின்னு ஓமப்பொடியைக் கொறிச்சுகிட்டு போன் நம்பரை அழுத்துனா... டொய்ங்.. டொய்ங்ன்னு ஒரே பிஸி... யப்பா ராசா... சந்தோஷம்ய்யா ஊர் பசியை ஆத்துற நம்ம விவசாயியை மக்கள் மறக்காம பொங்கல் அன்னிக்கு போன் போட்டு போன்ல்லயே பொங்கி வாழ்த்துச் சொல்லி ஆனந்தப் படுத்துறாங்கடான்னு எங்களுக்கு இன்னும் குஷியாயிடுச்சு.

ஒரு பத்து நிமிசம் கழிச்சு போன் லைன் கிடைச்சுது...

"ஹாய்...ஹலோ... ஹவ் ஆர் யூ.. ஹோ ஐ யாம் வெரி ஹேப்பிய்யா.. டூ டே ஹேப்பி பொங்கல்யா..."

நாம் நம்மை அறிமுகப்படுத்தி அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தைக்கு நகரும் முன்னே மறுமுனையில் இருந்து எடுப்பா வெள்ளைக்காரனை வெள்ளாவியிலே வச்சு வெளுத்து விட்டாப்பல்ல தெறிச்சு விழுந்தது இங்கிலீஸ்.

விவசாயிக் கூட பொங்கல் வைக்கலாம்ன்னு கூட்டிட்டு வந்து வில்லங்கமா எங்கிட்டோ மாட்டி விடப் பாக்குறானோன்னு கூட வந்த கில்லி பையனை நான் சந்தேகமாப் பாக்க...

"அண்ணே இது டூ தவுசண்ட் நாட் நாட் செவன்... இந்தியா வளருதுண்ணே... ஒரு இங்கிலாந்து விவசாயி இங்கீலிஸ் பேசுனா நீங்க இப்படி சந்தேகப் படுவீயளாண்ணே... ஏன் ஒரு அமெரிக்கா விவசாயி இங்கீலிஸ் பேசுனா இப்படி எதுல்லயோ மிதிச்ச மாதிரி ஓங்க முகம் மாறுமா... சொல்லுங்கண்ணே..."

இல்லன்னு நான் முகத்தை மூணு தடவை ஆட்டி தொங்க விட்ட பொறவு கில்லி பையன் மதன் கிட்ட முக்கா ரூவா போஸ்ட் கார்ட்ல்ல கேக்க வேண்டிய கேள்வியை எங்கிட்டக் கேட்டான்.

"ஒரு இந்திய அதுவும் திராவிட அதுவும் நம்ம தமிழ் விவசாயி இங்கீலிஸ் பேசுனாத் தப்பா? பதில் சொல்லுங்கண்ணே" ன்னு கவுண்டரிடம் செந்தில் அடம் பிடித்ததுப் போல் நம்ம கில்லி பையன் அடம் பிடித்தான்.

எனக்குப் பதில் தெரியல்ல.. அதுன்னாலே தலையை மேலும் கீழும் நடுவில்ல அப்படியே இடமும் வலமும் ஆட்டிட்டு அப்பாடான்னு கவுத்து வச்சேன். அப்படியே வரப்பு முடிஞ்ச இடத்துல்ல குருப்பா இளந்தாரிக நின்னு ஒரு மஞ்ச கலர்ல்ல ஓடாம ஓரமா நின்னுகிட்டு இருந்த டிராக்டர் முன்னால கரும்பு இரண்டைக் கட்டி விட்டு பின்னாலே பொங்கப் பானையை எல்லாம் பெயிண்ட அடிச்சு தொங்க விட்டுகிட்டு இருந்தாயங்க...

அங்கிட்டு டிராக்டர் பின்னாலே ஒருத்தன் லேசா மவுத் ஓரம் லீக்காக கையிலே இருந்தக் கரும்பை வளைச்சு வில் மாதிரி வச்சுகிட்டுப் போஸ் கொடுத்துகிட்டு நின்னான்.. அவன் இடுப்புல்ல ஒரு அரை கிலோ இஞ்சியை கட்டி வச்சிருந்தான் ஏன்னு யோசிச்சும் எனக்கு விளங்கல்ல...கூட வந்த கில்லி பையன் அவனைப் பார்த்து வில்லங்கமாச் சிரிச்சான்...

எது எப்படியோ வரப்போரம் வந்துட்டோம்..
இந்தா டிராக்டர் நிக்குது..
சுத்தி இளந்தரிங்க எல்லாம் வருத்தம் தொலைச்சு வாலிப முறுக்கோடு நிக்காயங்க...

நிச்சயமா இந்த வருசப் பொங்கல் விவசாயப் பொங்கல் தான்னு கண்ணு குளுந்துப் போச்சு

எதிரே அவ்வை சம்முகி படத்துல்ல கமலஹாசன் பாடுற வேலை.. வேலை.. காலையிலும் வேலை.. மாலையிலும் வேலை பாட்டைப் பாடிகிட்டே வந்து நம்ம மேலே இடிச்சவர்... தழலாக் கொதிச்சுட்டார்...

பாட்டு நல்ல பாட்டு.. அதுவும் நாட்டு மக்கள் சந்தோசப் படுற மாதிரி நல்லாவேக் கருத்தாப் பாடுறீயளேன்னு நான் பாராட்ட....

சீக்கிரம் ஓம்மக் கூட ஒரு கச்சேரி வச்சிருவோம்ய்யா தனிக்கச்சேரி செல்லாது கூட கச்சேரி பண்ண இந்த ரெஸ்யூம்ஸ்ல்ல இருந்து செலக்ட் பண்ணிட்டு கால் பண்னுங்கன்னு சொல்லிட்டு மறுபடியும் அதே வேலைப் பாட்டு பாடிகிட்டு நடந்தார்.

இது என்னக் கூத்து... ரெஸ்யூம் வாங்கறவருக்கும் விவசாயிக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு நான் மண்டைக் காஞ்சி நிக்குறேன்...

அப்பூ அது ரெஸ்யூம் அல்ல அதற்கான அழகானத் தமிழ் சொல் என்னன்னு சொல் பார்ப்போம்... அழகான பிள்ளை முகம்...

சாமின்னு நம்ம கில்லி பையன் பயந்து பம்ம..

சிறுவனே.. தமிழில் பேசினால் சாமியா.. இல்லையப்பா நானும் உன்னைப் போல் இறையாசி வேண்டி குன்றம் நோக்கி கைக்கூப்பும் ஆசாமி தானடா.. கேட்டாயா என் சொல் ஒரு சொல் என நம் பக்கம் பார்க்க.. என் கண்ல்ல கிட்டத் தட்ட கண்ணீர் பொங்கல்.

அவரும் அவர் பாட்டுக்கு புன்னகைச் சிந்திப் போக...

" நம்பர் 12 அப்படின்னு போட்ட டீ- ஷ்ர்ட் கீழே ஜீன் ஸ் பேண்ட் போட்டுகிட்டு படு ஸ்டைலா ஒருத்தர் மாடியிலே இருந்து இறங்கி ஓடி வந்தார்....

தாரை தப்பட்டை எல்லாம் முழங்க....
ஊர் நாட்டு மக்கள் எல்லாம் பொங்கி ஆர்பரிக்க....

"விவசாயி ... விவசாயி... கடவுள் என்னும் மொதலாளி கண்டெடுத்தத் தொழிலாளி.. விவசாயி..."ஸ்பீக்கர் அலற....

டேய் என்னடா நடக்குது இங்கே.. விவசாயிக் கூட பொங்கல்ன்னு சொல்லி இங்கே கூட்டிட்டு வந்தே வந்துப் பார்த்தா விதம் விதமா மக்கள் என்ன என்னமோப் பேசிக்கிறாங்க... ஒண்ணும் புரியமாட்டேங்குது...சொல்லுடா...

"அண்ணே இவர் தாண்ணே விவசாயி... இவர் தமிழ் உலகின் பிரபல பதிவர்... அவருக்கு இன்னிக்குப் பொறந்த நாளும் கூட அதான் அவரோட சேர்ந்து நாமளும் பொங்கல் கொண்டாடலாம்ன்னு .. என் இழுத்தான்.

"அட பாவி...சரி சரி... இதுவும் நல்ல விஷயம் தான் வந்தது வந்தோம்.. விவசாயிக்கு உரக்கப் பொறந்த நாள் வாழ்த்தும் சொல்லிருவோமா...."

விசில் அடித்து உற்சாகமா பொங்கலோ பொங்கல்... மாட்டுக்கு பொங்கல்.. நம்ம விவசாயிக்கும் பர்த் டே பொங்கல்... அப்படின்னு நம்ம கில்லி பையன் பீட் கிளப்ப ஆரம்பிச்சுட்டான்..

15 comments:

ஜி said...

அட... விவசாயிக்கு பொறந்த நாள் பொங்கலா?

வாழ்த்துக்கள சொல்லிடுங்க தேவ்

நாமக்கல் சிபி said...

ஆஹா! நம்ம விவசாயிக்குப் பொறந்த நாளா!

வாழ்த்துக்கள்!

இலவசக்கொத்தனார் said...

பிறந்த நாள் காணும் (கண்ட) விடிவெள்ளி விவசாயி வாழ்க!

துர்கா|thurgah said...

என்னடா கதை எப்படியோ போகுதேன்னு பார்த்தேன்.உங்கள் புதுமையான பொங்கல்+ பிறந்த நாள் வாழ்த்து அருமை. :)

G.Ragavan said...

ஐயிரண்டு திங்களாய் அன்னையிடம் வளர்ந்து தையிரண்டு வந்த போது மண்ணிலே பிறந்த விவசாயிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

மாட்டுப் பொங்கல்தால் அவர் மண்ணிலே நம்மோடு மாட்டும் பொங்கல். ஏன்? விவசாயியின் தோழன் மாடுதானே? அந்த மாட்டுக்குரிய பொங்கல் அன்று பிறந்ததன் மூலம் தன்னுடைய பெருமையை நிலை நிறுத்திக் கொண்டார்.

"அண்ணே ஒரு சந்தேகம்னே"

என்ன சந்தேகம்?

"விவசாயிங்குறது தமிழ்ச் சொல்லா? உழவர்ங்குறது தமிழ்ச்சொல்லா?"

அடிங்ங்ங்ங்ங்ங்ங்ங்

சுதர்சன்.கோபால் said...

வாழ்த்துகள்!!!

புதுமையான பொங்கல்+ பிறந்த நாள் வாழ்த்து அருமை.

நாமக்கல் சிபி said...

விவசாயி பிறந்த நாளை பொங்கலாக கொண்டாடுகிறோம்!!! :-))

அருமை அருமை!!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விவா!!!

ஜொள்ளுப்பாண்டி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விவசாயி !! :)))

சந்தோசமும்
மகிழ்ச்சியும்
பீரும் நுரையும் போல
பொங்கலாக
பொங்க என்
வாழ்த்துக்கள் !! ;)))))

இராம் said...

மாட்டு பொங்கல் அன்று பிறந்த விவசாயிக்கு (belated) பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அருட்பெருங்கோ said...

/விவசாயிக்குப் போன் போட்டுட்டு போனா உசிதம்ன்னு அங்கிட்டு வரப்பு பக்கமா ஓமப் பொடி பொட்டலம் கொடுத்துட்டு நமக்கு பொங்கல் வாழ்த்துச் சொன்ன புண்ணியவான் ஒருத்தர் சொன்னாருங்க../

ஓ ... மப்பொடி பொட்டலம் ????

/தழலாக் கொதிச்சுட்டார்.../

ஹி ஹி இப்பக் கொஞ்சம் கூல் ஆகிட்டார் போல!!!

/அழகான பிள்ளை முகம்... /

ஐயோ ஐயோ அதப்பாத்துதான்யா நானும் ஏமாந்தேன்...

சரி சரி நானும் வெவசாயி @ உழவர்க்கு வாழ்த்து சொல்லிக்கறேன்!!! :)))

உங்கள் நண்பன் said...

வலையுலகில் எங்களுக்கெல்லாம் முன்னோடியாக முன்னத்தி ஏர்பிடித்து உழும் அன்புச் சகோதரர் இளாவிற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இதைத் தெரிவித்த "இனமான" டைரக்டர் நண்பர் தேவுக்கு நன்றி!(நான் வலையுலகில் அதிக விடுமுறை எடுத்ததை ஒரு பதிவில் சுட்டிக்காட்டிய அன்புக்கு நன்றி தொடர்ந்து தொந்தரவு செய்ய முயற்சிக்கிறேன்!)


அன்புடன்...
சரவணன்.

ILA(a)இளா said...

ஜி, சிபி,கொத்ஸ்,துர்கா,ஜி.ரா,ஓமப்பொடி, வெட்டி, பாண்டி,இராமு, அருட்பெருங்கோ, உங்கள் நண்பன் - எல்லாத்துக்கும் என்னோட நன்றிங்கோ. கச்சேரி நண்பா, உன்னை என்ன சொல்லி நன்றி சொல்ல, மனம் கசியுதடா

தேவ் | Dev said...

நம்ம சகா விவசாயிக்கு வாழ்த்துச் செண்டுகள் பகிர்ந்த பாசமலர்கள் ஜி, தளபதி சிபி, பின்னூட்டப் புயல் தலைவர் கொத்தனார், துர்கா, ஆன்மீக இமயம் ஜி.ரா., ஓமப்பொடியார்,இணையத் தளபதி வெட்டிபயல், தம்பி ஜொ.பா, பாசக்கார பய ராயல் ராம், காதல் முரசு அருட்பெருங்கோ, என் பாச நட்பு சரா,

எல்லோருக்கும் நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

தேவ் | Dev said...

//கச்சேரி நண்பா, உன்னை என்ன சொல்லி நன்றி சொல்ல, மனம் கசியுதடா //

அப்பூ விவசாயி வெறும் பீலிங்ல்ல கசியுது மசியுதுன்னு மேட்டரை மூடப்பிடாது...

விருந்து வைக்கோணும்.. டிராக்டரை அனுப்பி வைங்க... வந்து ஒரு வெட்டு வெட்டிட்டுப் போறோம்..

என்ன பங்காளிஸ் ஓ.கே தானே?

தேவ் | Dev said...

!(நான் வலையுலகில் அதிக விடுமுறை எடுத்ததை ஒரு பதிவில் சுட்டிக்காட்டிய அன்புக்கு நன்றி தொடர்ந்து தொந்தரவு செய்ய முயற்சிக்கிறேன்!)

வாய்யா சரா இந்த முயற்சியத் தான் நான் ஒங்ககிட்ட எதிர்பாக்குறேன்.. சீக்கிரம் வாய்யா.. சீக்கிரம் வாய்யா..

tamil10