Wednesday, January 31, 2007

போக்கிரி பொங்கல்


வணக்கம் மக்கா,

பொங்கல் வச்சு மூணு வாரம் போயிருச்சு.. நம்ம மணிரத்னம் படம் பார்த்துபுட்டு நம்ம உள்ளூர் அசல் தமிழ் படங்களைப் பார்த்து ஒரு நாலு வார்த்தைச் சொல்லாம இருக்க முடியுமா?

ஆழ்வார், போக்கிரி, தாமிரபரணி மூணும் பொங்கலுக்குப் பொங்கிய படங்கள்.. பொங்கல் ஓட்டத்துல்ல தலயின் ஆழ்வார் மூணாவது வாரமே மூச்சு திணறி உள்ளூர்ல்ல முக்காடுப் போட்டுருச்சு. தளபதியின் போக்கிரியும் , விஷாலின் ( அவருக்கும் எதாவது பட்டப்பெயர் சிக்கிரம் கொடுங்கப்பா) தாமிரபரணியும் போட்டக் காசுக்கு பங்கம் வராம வசூல் கொடுத்துகிட்டு இருக்குதாம்

முதல்ல போக்கிரி... தளபதி ஏன் இந்த கொலை வெறி? அப்படின்னு அலறலாம் போல இருக்கு.. திருப்பாச்சியிலே தூக்குன ஆயதத்தை இன்னும் கீழே வைக்கமா படத்துக்குப் படம் போட்டுத் தள்ளிகிட்டு இருக்கார்..




இயக்கம் பிரபு தேவா... மாஸ்ட்டர் காரம் அதிகம்.. ஆனா காரம் பிடிக்கிற கூட்டம் ஒண்ணு இருக்கே,, அவ்ங்களுக்கு கொடுத்தக் காசுக்கும் அதிகமான மெனு.. போட்டுத் தாக்கிட்டார்.

இசை மணி ஷர்மா.. மசாலா படத்துக்கு ஏத்தாப்புல்ல வாசிச்சு இருக்கார். வசந்த முல்லை பாடல் கொஞ்சம் வித்தியாசம்.. பிரபு தேவா - விஜய் நடனத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு.. ஓப்பனிங் பாட்டுல்ல தேவாவும் விஜயும் கொஞ்சமே ஆடுகின்றனர்.. சும்மா விசிலுக்காக..




அசின்.. ம்ம்ம் பெரிய ஹிரோ படத்துல்ல வேற என்ன ரோல் கிடைக்கும்.. காதலிக்கலாம்.. ஆடலாம்..பாடலாம்.. அழலாம்... முடிந்த வரை ஈடுபாட்டுட்டுன் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

காமெடி,வடிவேலு வழக்கம் போல் வலிக்க வலிக்க அடி வாங்கி சிரிக்க வைக்கிறார். சுட்டும் விழி சுடரே பாடலில் அசினோடு போடும் ஆட்டம் செம லொள்ளு சபா... பிரகாஷ் ராஜ் அலிபாயாகக் கொஞசமே வந்து அழிச்சாட்டியம் பண்ணுகிறார். குறிப்பாக காவல் துறை விசாரணைக் காட்சியில் கலக்குகிறார். நெப்போலியன் போலீஸ் கமிஷனராக் கச்சிதம். பத்திரிக்கையாளர் சந்திப்பு காட்சியில் நன்றாகவே செய்திருக்கிறார்.
படத்தில் இது தவிர விஜயின் அப்பாவாக நாசர், நண்பர்களாக சிரிமன், வையாபுரி, மற்றும் இதர வேடங்களில் ஆனந்தராஜ், பான் பராக் ரவி என ஏகப் பட்டப் பேர்கள் வந்து போகிறார்கள். அசினை அடாவடியாய் காதலிக்கும் போலீஸ்கார வில்லன் கேரக்டர், மற்று அசினின் தம்பியாக வரும் சிறுவன் என படத்தை நக்ர்த்த உதவும் பாத்திரங்களும் உள்ளன.

தெலுங்குல்ல போக்கிரி பார்த்தவங்க கேக்குற கேள்வி..
தமிழ்ல்ல இந்தப் படம் ரீமேக் எதுக்கு? டப்பிங்கே போதுமேன்னு
அந்த அளவுக்கு ஈ அடிச்சான் காபி அடிச்சு இருக்காங்க படத்தை.. அதிலும் மகேஷ் பாபு ( தெலுங்கு போக்கிரி ஹிரோ) நடை, உடை, செருமுறது, மூக்கு உரியறது, முக்குறது,முனகுனறதுன்னு ஒண்ணு விடாம சூப்பராக் காப்பி அடிச்சு இருக்கார் இளைய தளபதி விஜய்..

கடைசி காட்சிகளில் போலீஸ் அதிகாரியாக விஜய் வரும் போது.. எதுக்குடா தளபதி தீடிரென்னு என்.சி.சியிலே சேந்துட்டார்ன்னு பயங்கர டவுட் வந்துருச்சு.. அப்புறமாத் தான் புரியுது போலீஸ் உடுப்பு நம்ம தளப்திக்கு அந்த லுக் கொடுக்குதுன்னு... விஜய்.. போலீஸ்க்குன்னு ஒரு மிடுக்கு இருக்கு அதைக் கொஞ்சமாவ்து செஞ்சு இருக்கலாம்... சரி அடுத்த முறை சரியாப் பண்ணிருங்க..

அப்புறம்.. அந்த முதல் பைட்ல்ல...ஒரு பைட்டரை தமிழ் நாட்டுல்ல என்னை யார்ன்னு தெரியாத முதல் ஆள் நீ தான்னு சொல்லி சொல்லி அடிப்பார்...நல்ல வேளை எஙக் பாட்டி எல்லாம் உங்க கண்ணுல்ல படல்ல அவங்களுக்கும் நீங்க யார்ன்னு தெரியாது..

"பொங்கலுக்குச் செம கலெக்ஷன்... ''
"நான் முடிவு எடுத்துட்டா என் பேச்சை நானேக் கேக்க மாட்டேன்" போன்ற வசனங்கள் விசில்களுக்கு குறி வைத்து எழுதப்பட்டுள்ளன.. விசில்களையும் அள்ளுகின்றன்...

"தளபதி தளபதி.. இவனை எதிர்த்தா அதோ கதி.. " பாட்டும் அந்த வகையே...

விஜய்க்குன்னு ஒரு ரசிகர் வட்டம் இருக்கு அந்த வட்டத்துக்குள்ள அடங்கணும்ன்னு விஜய் முடிவு பண்ணிட்டார்ன்னு அவரது சமீபக் காலப் படங்கள் சொல்லுது.. இன்னும் ரசிகர்கள் வட்டம் பெரிசாகணும்ன்னா.. கொஞ்சம் கதை இருக்கப் படத்துல்லயும் நடிக்கணும்ங்க...

மொத்ததுல்ல அடுத்த ரஜினி என்ற இலக்கை நோக்கி பயணிப்பதாய் நம்பிக்கொண்டிருக்கும் இளைய தளபதி ஜஸ்ட் மிஸ்ஸாகி அடுத்த விஜயகாந்த் ஆகி விடுவோரோன்னு சந்தேகிக்கத் தோன்றுகிறது..

போக்கிரி ரசிகர்களின் வசூல் மழையில்.. மழை அடுத்து வரும் வாரங்களிலும் தொடருமான்னுப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

25 comments:

பொன்ஸ்~~Poorna said...

//தெலுங்குல்ல போக்கிரி பார்த்தவங்க கேக்குற கேள்வி.. தமிழ்ல்ல இந்தப் படம் ரீமேக் எதுக்கு?//
சமீபத்துல வந்த எல்லா படமும் அப்படித்தானே தேவ் :)))

// கடைசி காட்சிகளில் போலீஸ் அதிகாரியாக விஜய் வரும் போது.. எதுக்குடா தளபதி தீடிரென்னு என்.சி.சியிலே சேந்துட்டார்ன்னு பயங்கர டவுட் வந்துருச்சு.. //

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ம்ஹும்.. நம்ம வெட்டிப்பயல் டெவில் ஷோ எல்லாம் வெச்சி என்ன புண்ணியம்? இப்படிக் கவுத்துட்டாரே தலைவர்!!

நாமக்கல் சிபி said...

//எதுக்குடா தளபதி தீடிரென்னு என்.சி.சியிலே சேந்துட்டார்ன்னு பயங்கர டவுட் வந்துருச்சு.. அப்புறமாத் தான் புரியுது போலீஸ் உடுப்பு நம்ம தளப்திக்கு அந்த லுக் கொடுக்குதுன்னு... //

:)))

விமர்சனத்திற்கு நன்றி தேவ்!

ரவி said...

////நான் முடிவு எடுத்துட்டா என் பேச்சை நானேக் கேக்க மாட்டேன்" ///

இதெல்லாம் டூ மச்சா தெரியலியா இளைய தளபதிக்கு...மூஞ்சியை நோக்கி கையை காட்டிக்கிட்டு இதை சொல்லி சொல்லி, கண்ணை குத்திக்கப்போறார்...சொல்லிவைங்க...

எவன எடுத்தாலும் பஞ்சு டயலாக்குன்னு கிளம்பிடுறானுங்க...இனிமே கஞ்சா கருப்பு கூட பஞ்சு டயலாக் கேட்பான் போலிருக்கு...

ரத்த களறி ரண களறி ஆக்கிடுறானுங்க...சும்மா கிடந்த கொல்ட்டி விஷால் இப்போ தண்டவாளத்துல அருவாளை சாணை புடிச்சுக்கிட்டிருக்கான்...எந்த காலத்துல எகிறி எகிறி அடிக்க ஆரம்பிச்சானோ பைட்ட்டுன்னாலே அப்பல் லேயர்லதான் இருக்கான்...பூமிக்கே வரமாட்டேங்கிறான்..

எதுல போயி முடியுமோ ?

Anonymous said...

Dear sir,

The thing is the movie is a telugu remake as you might have known. I also request you to see the telugu originals and comapre the same with these remakes. Obviously you would feel the tamil ones do gross injustice to the originals. Especially Vijay looks comical in many of the telugu movies he has remade.

You can take Vaseegara which was a remake of Venkatesh's Nuvvu Naaku Nachav and also Ghilli which is remake of Mahesh Babu's Okkadu.

ஜி said...

//இளைய தளபதி ஜஸ்ட் மிஸ்ஸாகி அடுத்த விஜயகாந்த் ஆகி விடுவோரோன்னு சந்தேகிக்கத் தோன்றுகிறது//

சூப்பர் காமெடி... பாத்தவுடனே சிரிப்பு வந்திடுச்சு... :))))

G.Ragavan said...

ஹா ஹா ஹா சீவிச் சிங்காரிச்சு மூக்கறுக்குறதுன்னு சொல்வாங்க. ரொம்பச் சரியாச் செஞ்சிருக்கீங்க.

வரவர மாமியா கழுத போல ஆனாளாங்குறது விஜய்க்குப் பொருந்தும்னே நெனைக்கிறேன். திரும்பத் திரும்ப ஒரே படத்தைப் பாக்குற மாதிரி இருக்கு. இப்படியே இன்னும் ரெண்டு படம் குடுத்தாப் போதும். வேற ஒன்னும் நான் சொல்லலை. அவருக்கு வேற மாதிரி ரோல்களும் பொருந்தித் தொலைய மாட்டேங்குது. படிச்சவன் வேசமும் சரியில்லை. பட்டிக்காட்டு வேசமும் பொருந்தி வரலை. ரவுடி கெட்டப்பு மட்டுந்தான் பொருந்தி வருது. என்ன செய்றது!

Anonymous said...

Dev,
Nalla vimarsanam. Pona vaaram Kumudamla Vijay interview kuduntirrukaar..athila masala formula la nadikarthu onnum thappu ellai ..MGR kooda athai thaan follow panninaar nu sollu irrukaar..aana verum entertainer aaga mattum irrukka virumbina ..variety roles kidaikaathu ..kazhugaai parakka mudiyaama ..oor kuriviyaai than errukka mudiyum nu Vijay purinjikanum ..antha visayathila "vidhiyaasam"aa pannanum nu nenaikira / try panra "thala" Ajith Yevalawoo paravaa illai ..

Ravusuparty Ramanath

Unknown said...

பொன்ஸ்,

ஒரு காலத்துல்ல தலைவர் ரஜினி படமெல்லாம் இந்தியிலிருந்து தமிழுக்கு வரும்..ஆனாத் தமிழ்ல்ல தலைவர் தனியாக் கலக்கியிருப்பார் அவர் பாணியிலே. இந்தியிலே பெரு வெற்றி பெற்ற ஹ்ம் படம் தான் தமிழ்ல்ல பாட்ஷாவா வந்துச்சு.. அதுல்ல ரஜினியின் தனி தன்மைத் தெரியும்.. போக்கிரில்ல என்னன்னா விஜய் அப்பட்டமா அப்ப்டியே ம்கேஷ் பாபுவைக் காப்பி அடிச்சி இருப்பது கொடுமை.

Unknown said...

//நம்ம வெட்டிப்பயல் டெவில் ஷோ எல்லாம் வெச்சி என்ன புண்ணியம்? இப்படிக் கவுத்துட்டாரே தலைவர்!! //

பொன்ஸ் படம் என்னமோ ஹிட் தான்.. தலைவர் கவுக்கல்ல.. இப்படியேப் போனா கவுந்துடுவார்ன்னு தான் சொல்ல வர்றேன்.

Unknown said...

//விமர்சனத்திற்கு நன்றி தேவ்! //

வாங்க சிபி.. உங்க கலாயத்தல் திணைக்கு அருமையான மேட்டர்ங்க போக்கிரி சோ டோன்ட் மிஸ் இட்:)))

Unknown said...

//இதெல்லாம் டூ மச்சா தெரியலியா இளைய தளபதிக்கு...மூஞ்சியை நோக்கி கையை காட்டிக்கிட்டு இதை சொல்லி சொல்லி, கண்ணை குத்திக்கப்போறார்...சொல்லிவைங்க...

எவன எடுத்தாலும் பஞ்சு டயலாக்குன்னு கிளம்பிடுறானுங்க...இனிமே கஞ்சா கருப்பு கூட பஞ்சு டயலாக் கேட்பான் போலிருக்கு...

ரத்த களறி ரண களறி ஆக்கிடுறானுங்க...சும்மா கிடந்த கொல்ட்டி விஷால் இப்போ தண்டவாளத்துல அருவாளை சாணை புடிச்சுக்கிட்டிருக்கான்...எந்த காலத்துல எகிறி எகிறி அடிக்க ஆரம்பிச்சானோ பைட்ட்டுன்னாலே அப்பல் லேயர்லதான் இருக்கான்...பூமிக்கே வரமாட்டேங்கிறான்..

எதுல போயி முடியுமோ ? //

ரவி இது எல்லாம் கோட்டையிலே போய் முடியும்ங்கறது அவங்க அதாங்க நாய்கர்களி கனவு..கணக்கு.. ஆனா உணமியிலே இதெல்லாம் படம் பாத்துத் தொலையற் நமக்கு ஒன்ணு சிரிச்சி சிரிச்சு வயித்து வலியிலோ இல்ல இப்படி எல்லாம் படமெடுத்து நோகடிக்கிறாங்களேன்னு கவலியில தலை வலியிலோ போய் முடியுது :))

Unknown said...

//Dear sir,

The thing is the movie is a telugu remake as you might have known. I also request you to see the telugu originals and comapre the same with these remakes. Obviously you would feel the tamil ones do gross injustice to the originals. Especially Vijay looks comical in many of the telugu movies he has remade.

You can take Vaseegara which was a remake of Venkatesh's Nuvvu Naaku Nachav and also Ghilli which is remake of Mahesh Babu's Okkadu. //

Thanks Ripwanwinkle for your visit and comment. you have given some facts to check out too.. I completely endorse ur views. keep visiting. :)

Unknown said...

//சூப்பர் காமெடி... பாத்தவுடனே சிரிப்பு வந்திடுச்சு... :))))//

படம் பாருங்க.. கிளைமேக்ஸ்ல்ல நீங்க சிரிக்காம படம் பாக்கவே முடியாது..:))

Unknown said...

//ஹா ஹா ஹா சீவிச் சிங்காரிச்சு மூக்கறுக்குறதுன்னு சொல்வாங்க. ரொம்பச் சரியாச் செஞ்சிருக்கீங்க.

வரவர மாமியா கழுத போல ஆனாளாங்குறது விஜய்க்குப் பொருந்தும்னே நெனைக்கிறேன். திரும்பத் திரும்ப ஒரே படத்தைப் பாக்குற மாதிரி இருக்கு. இப்படியே இன்னும் ரெண்டு படம் குடுத்தாப் போதும். வேற ஒன்னும் நான் சொல்லலை. அவருக்கு வேற மாதிரி ரோல்களும் பொருந்தித் தொலைய மாட்டேங்குது. படிச்சவன் வேசமும் சரியில்லை. பட்டிக்காட்டு வேசமும் பொருந்தி வரலை. ரவுடி கெட்டப்பு மட்டுந்தான் பொருந்தி வருது. என்ன செய்றது! //

ஜி.ரா நீங்க எஸ்கேப்பா.. போக்கிரி பாக்கலியா? மொதல்லப் பாருங்க... ப்ளிஸ் பாத்துட்டு பொலம்புன்னா அந்த சொகமேத் தனிங்க...

Unknown said...

//Dev,
Nalla vimarsanam. Pona vaaram Kumudamla Vijay interview kuduntirrukaar..athila masala formula la nadikarthu onnum thappu ellai ..MGR kooda athai thaan follow panninaar nu sollu irrukaar..aana verum entertainer aaga mattum irrukka virumbina ..variety roles kidaikaathu ..kazhugaai parakka mudiyaama ..oor kuriviyaai than errukka mudiyum nu Vijay purinjikanum ..antha visayathila "vidhiyaasam"aa pannanum nu nenaikira / try panra "thala" Ajith Yevalawoo paravaa illai ..

Ravusuparty Ramanath //

வா ராமனாதா,
நீ குங்குமம் பேட்டி மட்டும் தான் படிச்ச.. டி.வியில்ல எல்லாம் கலக்கிட்டாரமே தளபதி.. அதை மிஸ் பண்ணிட்டியேப்பா... என்னச் சொன்னாலும் அவங்க எல்லாம் அப்படித்தான் படம் எடுபபாங்க.. நாமளும் அதையேத் தான் பாப்போம்..:))

கோபிநாத் said...

இளைய தளபதி ஜஸ்ட் மிஸ்ஸாகி அடுத்த விஜயகாந்த் ஆகி விடுவோரோன்னு சந்தேகிக்கத் தோன்றுகிறது

Hats Off!!!

Venkatesh subramanian said...

hello bass vimarsanam super namala mathri alunka than epadi 5 kodi 10 kodi selavu pani kenathanmana padam elam eduka mudiyum ethula ulaka cinimava pathi vera pesuvanu ka nan partha 2 world best padam 1)the way home 2)children of heaven mothamai 30 lacks than selavu pani irupankanu nenakiren antha mathri padam nama epa entha mathiri padam eduka poramo thariyala

பிரசாத் said...

படம் பார்த்து நொந்து நூலானவர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்துகொள்ளுங்கள். அதிலும் அந்த க்ளமாக்ஸ் சீன் சூப்பர் காமடி. ஒரு I.P.S அதிகாரியாgஅ விஜய் சகிக்கமுடயவில்லை. ஷேவ் பண்ணாத மூஞ்சி, கலைந்த தலை, ஏதோ ஒரு டொக்கு வாட்ச்மேன் மாதிரி இருக்கு.காசுக்குப்பிடித்தகேடு.

Unknown said...

//இளைய தளபதி ஜஸ்ட் மிஸ்ஸாகி அடுத்த விஜயகாந்த் ஆகி விடுவோரோன்னு சந்தேகிக்கத் தோன்றுகிறது

Hats Off!!! //


:))
நன்றி கோபி

Unknown said...

//Veerasamy - Review yeppo Dev???? //

ஆர்யா, உங்க ஆசையை ஏன் கெடுப்பான் ஏன்? அதையும் பார்த்து அனுபவிச்சு விமர்சனம் எழுதிருவோம்ய்யா

Unknown said...

//hello bass vimarsanam super namala mathri alunka than epadi 5 kodi 10 kodi selavu pani kenathanmana padam elam eduka mudiyum ethula ulaka cinimava pathi vera pesuvanu ka nan partha 2 world best padam 1)the way home 2)children of heaven mothamai 30 lacks than selavu pani irupankanu nenakiren antha mathri padam nama epa entha mathiri padam eduka poramo thariyala //
வாங்க வெங்கடேஷ்,

நல்லத் தகவல்கள் கொடுத்து இருக்கீங்க.. தொடர்ந்து நம்ம கச்சேரிக்கு வாங்க.. மக்களுக்கு இப்படி தகவல்கள் தாங்க.. நீங்கச் சொன்ன அந்த் படஙக்ளின் டி.வி.டி கிடைத்தால் நான் கண்டிப்பாகப் பார்க்கிறேன் நன்றி வெங்கடேஷ்

Unknown said...

//படம் பார்த்து நொந்து நூலானவர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்துகொள்ளுங்கள். அதிலும் அந்த க்ளமாக்ஸ் சீன் சூப்பர் காமடி. ஒரு I.P.S அதிகாரியாgஅ விஜய் சகிக்கமுடயவில்லை. ஷேவ் பண்ணாத மூஞ்சி, கலைந்த தலை, ஏதோ ஒரு டொக்கு வாட்ச்மேன் மாதிரி இருக்கு.காசுக்குப்பிடித்தகேடு. //

வாங்க பிரசாத்..நீங்க மதுர பார்க்கலீயா.. அதுல்ல தளபதி ஐ.ஏ.எஸ் ஆபீசராம்.. இன்னும் தமாசா இருக்கும்..
அடுத்து அழகிய தமிழ் மகன் படத்து டிக்கெட்டுக்குச் சொல்லிவச்சுருவோமா? :))

Barath said...

ஆழ்வார் எவ்வளவோ பரவாயில்லை. விகடன் விமர்சனம் கூட இப்போ சரி இல்லை. இந்த போக்கிரி படத்துக்கு போய் 40 மார்க் குடுத்து இருக்காங்க. எல்லாம் விதி.

Unknown said...

//ஆழ்வார் எவ்வளவோ பரவாயில்லை. விகடன் விமர்சனம் கூட இப்போ சரி இல்லை. இந்த போக்கிரி படத்துக்கு போய் 40 மார்க் குடுத்து இருக்காங்க. எல்லாம் விதி.//

ஆழ்வார் பாக்குற பாக்கியம் எனக்குக் கிடைக்கல்லங்க..
:(

Anonymous said...

[URL=http://www.wallpaperhungama.in/details.php?image_id=13415][IMG]http://www.wallpaperhungama.in/data/thumbnails/117/Minissha Lamba-91.jpg[/IMG][/URL]

[URL=http://www.wallpaperhungama.in/details.php?image_id=13240][IMG]http://www.wallpaperhungama.in/data/thumbnails/117/Minissha Lamba-90.jpg[/IMG][/URL]

[URL=http://www.wallpaperhungama.in/details.php?image_id=13236][IMG]http://www.wallpaperhungama.in/data/thumbnails/117/Minissha Lamba-87.jpg[/IMG][/URL]

[URL=http://www.wallpaperhungama.in/details.php?image_id=13234][IMG]http://www.wallpaperhungama.in/data/thumbnails/117/Minissha Lamba-85.jpg[/IMG][/URL]


[url=http://www.wallpaperhungama.in/cat-Minissha-Lamba-117.htm][b]Minissha Lamba Sexy Wallpapers[/b][/url]

Photo gallery at WallpaperHungama.in is dedicated to Minissha Lamba Pictures. Click on the thumbnails into enlarged Minissha Lamba pictures, intimate photographs and debarring photos. Also validate discernible other Pictures Gallery through despite Turbulent quality and Strong Boldness appearance scans, movie captures, talkie promos, wallpapers, hollywood & bollywood pictures, photos of actresses and celebrities

tamil10