Monday, January 29, 2007

ஷில்பா அக்கா கெலிச்சுட்டாங்க


மக்கா ஷில்பா அக்காவை அந்த வெள்ளைக்கார பொண்ணு?? ( பொம்பளையா) கண்ட மேனிக்குக் கலாய்ச்சு அக்கா கண்ணைக் கசக்கி கண்டப்படி பீல் ஆனதுல்ல டோனியில்ல ( அதான் இங்கிலாந்து பி.எம்..) இருந்து நம்ம தாஸ் ( அதாங்க நம்ம மத்திய அமைச்சர் ப்ரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி) வரைக்கும் சோக்கா ஸ்டேண்ட்மென்ட் கொடுத்து சூடுக் கிளப்புனாய்ங்க..

இப்போ ஆட்டம் முடிஞ்சுப் போச்சு.. நேத்து ராத்திரி அக்காவுக்கு அடிச்சுது ஜாக் பாட்.. பெரிய அண்ணம் ஷோவில்ல அக்கா கெலிச்சுட்டாங்க.. நம்ம மைக்கேல் ஜாக்சன் உடன் பிறப்பு தோத்துட்டாராம்..

அக்கா சொம்ம ஓலக் அழகியான புள்ளங்க எல்லாம் ஒரு மாதிரி பிலீங்கா சவுண்ட் உடுவாங்களே அந்த மாதிரி சவுண்ட் எல்லாம் விட்டு இங்கிலாந்து டி.வி யிலே கடும் அலப்பரை கொடுத்துப் பின்னிட்டாங்க இல்ல..

இருக்காதா பின்னே.. அக்காவுக்கு பரிசு பணம் நூறு ஆயிரம் பவுண்ட் இல்ல கிடைச்சிருக்கு..

அது மட்டுமா..ஹாலி வுட்ல்ல நரி பிக்சர்ஸ்(FOX PICTURES) படம் ஒண்ணு..

சன் அப்படிங்கற பத்திரிக்கைக்குப் பேட்டி.. அதுக்கு சன்மானம் ஒரு 100 மில்லியன் பவுண்டாம்..

நிறைய விளம்பர வாய்ப்பு..

டாகுமெண்டரி படம்...

அக்காவைப் பத்தி பொஸ்தகம் போடப் போறாய்ங்களாம்..

மொத்தத்துல்ல அக்கா தக தக தங்க வேட்டையாடிட்டாங்கன்னு வைங்க..

சரி தமிழ்ல்ல நம்ம வைகைப் புயலோட அக்கா ஒரு படம் பண்றதா ஒரு வதந்தி வந்துச்சே அது உண்மையாகுமா..? அப்படி ஒரு படம் வந்தா தியேட்டர்ல்ல கட் அவுட் பீர் அபிஷேகம்ன்னு பொளந்துக் கட்டலாம்.. தமிழனுக்குக் கொடுத்து வச்சிருக்காப் பார்ப்போம்

அக்கா வெள்ளைக் காரங்களும் பரவாயில்ல... நம்மூர் மாதிரி ஓங்க கண்ணீருக்கு கரெக்ட் ஆகி ஓங்களுக்கு நல்ல கலெக்ஷ்ன் கொடுத்துட்டாங்க...

ஆல் ரைட் மக்கா.. அக்கா ஷில்பா ஷெட்டிக்கு கச்சேரி சார்பாப் பெரிய அண்ணன் ஷோவில் வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்குறோம்..

24 comments:

நாமக்கல் சிபி said...

தேவ்,
இந்த கண்ணீர் சென்டிமெண்ட் எல்லா நாட்டிலும் வொர்க் அவுட் ஆவுதே!

ஆனாலும் நம்ப அபியக்காவுக்கு இன்னும் ஒரு விடிவு காலம் பொறக்க மாட்டேங்குது! அவங்களும் தினமும் ஒரு தடவையாவது கண்ணீர் விடுறாங்க!
:(

செந்தழல் ரவி said...

அக்கா கண்ணை கசக்கியே கெலிச்சு, புதிய அத்தியாயம் படைச்சுட்டாங்க ரோய்...!!!!!

ஒரு வேளை கிளிசரின் ரெண்டு டப்பா உள்ளார கொண்டுபோயிருப்பாங்களோ ??

சதயம் said...

நம்ம பதிவர் ஒலகத்துலே கூட ஒரு மூத்த பதிவர் தன்னோட அழுவாச்சியாலே மட்டுறுத்தல் கொண்டு வந்தார் இல்லையா?

சதயம்

இலவசக்கொத்தனார் said...

இந்த பதிவிலும் 'நல்ல' படங்கள் போடாத தேவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தேவ் | Dev said...

//தேவ்,
இந்த கண்ணீர் சென்டிமெண்ட் எல்லா நாட்டிலும் வொர்க் அவுட் ஆவுதே!

ஆனாலும் நம்ப அபியக்காவுக்கு இன்னும் ஒரு விடிவு காலம் பொறக்க மாட்டேங்குது! அவங்களும் தினமும் ஒரு தடவையாவது கண்ணீர் விடுறாங்க!
:(//

ஆமாங்க தளபதி கண்ணீர் வச்சு கோலம் போட்டே எல்லா அக்காவும் பேங்க் பேலன்சை நல்லா ஏத்திடுறாங்க... அபியக்கா கோலம் போட்டு முடிக்கும் போது பாருங்க.. அவங்க இப்போத் தானே புள்ளி வச்சுகிட்டு இருக்காங்க.. இன்னும் எவ்வள்வு நாள் ஆகுமோ முழு கோலமும் போட்டு முடிக்க....ஹ்ம்ம்

தேவ் | Dev said...

//அக்கா கண்ணை கசக்கியே கெலிச்சு, புதிய அத்தியாயம் படைச்சுட்டாங்க ரோய்...!!!!!//
ரவி டிவியிலே இதையேத் தான்ய்யா சொன்னாய்ங்க... இது புது சரித்திரமாம் இல்ல...கலக்குறாங்கப்பா அக்கா

//ஒரு வேளை கிளிசரின் ரெண்டு டப்பா உள்ளார கொண்டுபோயிருப்பாங்களோ ?? //
கண்ணுக்குள்ளே கிளிசரின் டப்பா ஸ்டாக் வச்சிருப்பாங்கய்யா அக்கா..

தேவ் | Dev said...

//நம்ம பதிவர் ஒலகத்துலே கூட ஒரு மூத்த பதிவர் தன்னோட அழுவாச்சியாலே மட்டுறுத்தல் கொண்டு வந்தார் இல்லையா?//

அப்படிங்களா?!!!

தேவ் | Dev said...

//இந்த பதிவிலும் 'நல்ல' படங்கள் போடாத தேவை வன்மையாகக் கண்டிக்கிறேன். //

கொத்ஸ் வெயிட்டீஸ் அக்கா கச்சேரிக்குன்னு ஸ்பெஷல் போஸ் தர்றதாச் சொல்லியிருக்காங்க..
என்ன ஒரு போஸ்க்கு ஆயிரம் பவுண்ட் வரை டிஸ்கவுண்ட் பண்றேன்னு சொல்லியிருக்காங்க..

அதுக்கு கச்சேரி சார்பில் லண்டன் மாநகர கச்சேரி கேட்கும் மக்கள் மன்றம் நிதி சேகரிப்பில் இருக்காங்க.. நிதி ரெடியானதும் உங்களுக்கு நிச்சயம் 'நீதி' கிடைக்கும்

இராம் said...

அக்கா கெலிக்க இந்தியனுக பூரா பேத்தயும் அசிங்கப்படித்திட்டாய்ங்கே.....

காசு வருதுனா என்னத்தையும் செய்யுதுக.... கலிகாலம்:)

செந்தில் குமரன் said...

///
சன் அப்படிங்கற பத்திரிக்கைக்குப் பேட்டி.. அதுக்கு சன்மானம் ஒரு 100 மில்லியன் பவுண்டாம்..
///

என்னங்க 100 மில்லியன் பவுண்டா? சரியாப் பாருங்க.

வல்லிசிம்ஹன் said...

இந்த அக்கா அவங்க தங்கச்சி
எல்லோரும் துபாயில் ஒரு 'mall'
பக்கம் வந்தால் என்னை மாத்ரி சக இந்தியர்கள் அந்தப் பக்கம் ஷாப்பிங் செய்ய முடியாது.
அப்படி ஒரு தேவதை உபசாரம்.இல்லை அப்படி அட்டென்ஷன் கிடைக்கலைன்னால்
போச்சு.
ஆட்டம்தான்.!

kjey said...

//ஒரு வேளை கிளிசரின் ரெண்டு டப்பா உள்ளார கொண்டுபோயிருப்பாங்களோ ??//
:D
she won by sympathy votes.however :):))) she did very well.

ஜி said...

என்ன தேவ் பொசுக்குன்னு அக்கான்னு சொல்லிட்டீங்க....

இந்திய நாயகி...
அழுகாச்சி ஜெயிச்சாச்சி...

இனி இந்திப் படத்துலையும் இன்னொரு ரவுண்ட் வருவாங்க போலிருக்கு...

நாமக்கல் சிபி said...

//அபியக்கா கோலம் போட்டு முடிக்கும் போது பாருங்க.. அவங்க இப்போத் தானே புள்ளி வச்சுகிட்டு இருக்காங்க.. //

அடக் கடவுளே! இப்பத்தான் புள்ளியே வெக்குறாங்களா?

Anonymous said...

Our KUSBU Madam also waiting for a Drama. She cried. NO ONE worried.

மாசிலா said...

நம்மள ஒருகாலத்ல ஆட்டிபடச்ச இங்கிலீஷு காரங்கள ஒரே மூட்டா அவுங்க நாட்டுலியே போய் கெலிச்சி நம்ம முன்னூர்கள் மானத்த காப்பாத்தின அக்காவுக்கு ஒரு 'ஜெ!'.
அப்பிடீன்னா இந்தியா அதுக்குள்ள வல்லரசா ஆயிடிச்சா?
இவ்ளோ சீக்கிரமாவா?

தேவ் | Dev said...

//அக்கா கெலிக்க இந்தியனுக பூரா பேத்தயும் அசிங்கப்படித்திட்டாய்ங்கே.....//
அட என்னப்பா மானம் காத்த மங்காத்தான்னு அக்கா வரும் போது நம்ம இந்திய மக்கள் கொடி ஆட்டி ஆட்டம் போட்டதை நீ பாக்கவே இல்லையா..

//காசு வருதுனா என்னத்தையும் செய்யுதுக.... கலிகாலம்:) //

ராயல் எதுக்கு இவ்வளவு பிலீங்க்..

தேவ் | Dev said...

//என்னங்க 100 மில்லியன் பவுண்டா? சரியாப் பாருங்க. //

அட ஆமாங்க செந்தில் எல்லா டிவியிலும் அப்படித் தாங்கச் சொன்னாங்க.. காசு பாக்குற பத்திரிக்கைப் போல இருக்கு...

தேவ் | Dev said...

//இந்த அக்கா அவங்க தங்கச்சி
எல்லோரும் துபாயில் ஒரு 'mall'
பக்கம் வந்தால் என்னை மாத்ரி சக இந்தியர்கள் அந்தப் பக்கம் ஷாப்பிங் செய்ய முடியாது.
அப்படி ஒரு தேவதை உபசாரம்.இல்லை அப்படி அட்டென்ஷன் கிடைக்கலைன்னால்
போச்சு.
ஆட்டம்தான்.! //

என்னங்க இதுக்காகப் போய் வருத்தப் பட்டுகிட்டு.. இது இந்தியர்ங்கற முறையிலே பெருமை கொள்ள வேண்டிய விஷயம் இல்லியா.. ஒண்ணு பண்ணுங்க அடுத்த முறை இவிங்க அங்கே வரும் போது நீங்களும் கையிலே ஒரு இந்தியக் கொடியைத் தூக்கிட்டுப் போய் நில்லுங்க.. ஒரு வேளை உள்ளே போக அனுமதி கிடைச்சாலும் கிடைக்க்லாம்.. ட்ரை பண்ணிட்டுச் சொல்லுங்க..:)

தேவ் | Dev said...

//she won by sympathy votes.however :):))) she did very well. //

may be she will get another 100 million pounds to write a book on how to win thru ur tears? :)

book will b a sure hit with Indians

தேவ் | Dev said...

//என்ன தேவ் பொசுக்குன்னு அக்கான்னு சொல்லிட்டீங்க....

இந்திய நாயகி...
அழுகாச்சி ஜெயிச்சாச்சி...

இனி இந்திப் படத்துலையும் இன்னொரு ரவுண்ட் வருவாங்க போலிருக்கு... //

ஏன் ஜி .இந்தி மட்டும் தானா டமீல் மூவிஸ்ல்ல எல்லாம் அக்கா நடிக்க மாட்டாங்களா?

டமில் நாட்டுல்ல கூட அக்காவை வரவேற்க நாங்க ரெடியாத் தான் இருக்கோம்.. மேக்..மேக்..மேம்\க்..மேக்கரீனா

தேவ் | Dev said...

//அடக் கடவுளே! இப்பத்தான் புள்ளியே வெக்குறாங்களா? //

ஆமா இவ்வளவு நாளாப் பெருக்கித் தண்ணி எல்லாம் தெளிச்சு வச்சுட்டாங்களே.. இனி புள்ளி ஸ்டார் ஆயிருக்கு..:)

தேவ் | Dev said...

//Our KUSBU Madam also waiting for a Drama. She cried. NO ONE worried.//

ம்ஹ்ம்.. என்ன கொடுமை இது சரவணன்...பிரபு சந்திரமுகில்ல சொல்லுற டயலாக் இந்த விஷ்யத்துக்கு ஒத்துப் போகுது பாருங்களேன்..

தேவ் | Dev said...

//நம்மள ஒருகாலத்ல ஆட்டிபடச்ச இங்கிலீஷு காரங்கள ஒரே மூட்டா அவுங்க நாட்டுலியே போய் கெலிச்சி நம்ம முன்னூர்கள் மானத்த காப்பாத்தின அக்காவுக்கு ஒரு 'ஜெ!'.
அப்பிடீன்னா இந்தியா அதுக்குள்ள வல்லரசா ஆயிடிச்சா?
இவ்ளோ சீக்கிரமாவா? //


ஷில்பா அக்காத் தான் இந்தியாவை வல்லரசு ஆக்குனாங்களா.. அட்ரா சக்கை.. அட்ரா சக்கை..

tamil10