Saturday, April 14, 2007

ஆல் இன் ஆல் அழகுராஜ் ஸ்பீக்கீங்

ஸ்ப்ப்பா.. சென்னையிலே வெயில் கொளுத்து கொளுத்துன்னு கொளுத்துதுங்க... இதுல்ல மண்டையிலே இருக்க மூளையெல்லாம் தண்ணியா உருகி... ஆவியா... விசா வாங்கிட்டு ஆல்ப்ஸ் மலையைச் சுத்திப் பாக்குறேன்னு வெளிநாடு போயிருச்சு..

இந்த நேரத்துல்ல தம்பி வெட்டி.. நமக்கு ஒரு வேலைக் கொடுத்துருக்கார்.. அண்ணே அழகுன்னா என்னன்னு உங்கப் பாணியிலே சொல்லுங்கன்னு....( கேக்குது... உனக்குன்னு பாணி ஏணின்னு பில்டபு எல்லாம் ஒவரு ந்னு நீங்க சொல்லுறது.)

அழகு.. அழகு..அப்படின்னு சொன்ன ஓடனே நமக்கு டக்குன்னு ஞாபகம் வந்தது நம்ம வைதேகிக் காத்திருந்தாள் படத்துல்ல நம்ம கவுண்டர் கலக்குன காமெடி கேரக்டர் ஆல் இன் ஆல் அழகுராஜ் தான்... ஆமாங்க... காமெடிங்கறது எம்புட்டு அழகு.. வாழ்க்கைங்கற பயணத்துல்ல அப்பப்போ சிலிப் ஆகி சிலிண்டர் தீந்து... சிங்கி அடிச்சுட்டு நிக்கும் போது.. இந்தக் காமெடி தாங்க வாழ்க்கைக்கு அழகு சேக்குதுன்னு நான் நம்புறேன்... தன்னைப் பார்த்து சிரிக்கக் கற்று கொண்ட எந்த மனிதனும் வாழ்க்கையில் தோற்றதாய் சரித்திரம் இல்லை...சோ அழகுன்னா மொத சாய்ஸ் காமெடி தான்..

அப்புறம் எதோ ஒரு மாலை நேரத்தில் ஆங்கிள் ஆங்கிளா அலுவலகத்தில் கடமை வீரனா ஆபிசர் பணியாற்றி ஆப்புகளை வாங்கி அலமாரியில் அடுக்கிக் கொண்டிருக்கும் போது.. செல் அலறும்...
எடுத்துப் பார்த்தா எதோ தெரியாத நம்பர் வரும்...
ஆமாங்க ஸ்பீக்கிங்... எஸ்... ஹவ் கேனை ஐ ஹெல்ப் யூ... எனத் தெரிந்த ஆங்கில எழுத்துக்களைக் கோர்த்து வியர்த்துக் கொட்டி முடிக்கும் முன...
டேய் கேனை யூ கேன் ஹெல்ப் மீடா... என்னையத் தெரியல்லயா.. ராமன்டா.. கொரட்டூர் ராமன்.. மந்தை வெளி பஸ் ஸ்டாண்ட்..பிகர் எல்லாம் மறந்துப் போச்சா.. பிகர்ன்னு சொன்னதும் பளிச்சுன்னு பல்ப் எரியும் பழைய நட்பு மறுபடியும் புதுசாப் பூக்கும்...
மாப்பூ... எப்படிடா இருக்கே.. இப்போ எங்கே இருக்கன்னு.. விசாரணைகள் தொடரும் அந்த நட்பின் தருணங்கள்.. ஆமாங்க நட்பு ரொம்ப அழகானது..

ஆமா இது யார் எங்கேயோப் பார்த்த மாதிரி இருக்கு?
சீ... ஜட்டி கூட போடாம அய்யோ.. எங்க வீட்டு தங்கமணி கொஞ்சமா நம்ம வம்புக்கு இழுக்க...
அய்யோ அது வெயில் காலம்மா... அவனை அவச்ரத்தில்ல போட்டோப் பிடிச்சாங்களா அதான் அம்மா அவ்சரமாய் நம்ம பக்கம் சவுண்ட் கொடுக்க..
நமுட்டுச் சிரிப்போடு அப்பா பேப்பரில் மூழ்க...
நமக்குப் பின் வந்த சந்ததிப் பொக்க வாய் காட்டி நடப்பது எதுவும் புரியாமல் எல்லோரும் சிரிக்கிறாங்களே நாமும் சிரிப்போம்ன்னு அதுவும் சிரிக்க... குடும்பம் எவ்வளவு அழகான விஷயம்.. அழகின் பட்டியலில் குடும்பம் முக்கியமானதுங்க நமக்கு..

சுட்டெரிக்கும் சூரியப் பூமிங்க எங்க சென்னை.... தாவி வர்ற வங்கக் கடல் கூட ஒரு லிமிட்டோட நின்னுட்டு சைலண்ட்டா ரிட்டர்ன் போயிரும்.. அப்படிப் பட்ட அனல் பூமியை இந்த மே மாசம் மழி ஒண்ணு வந்து ரொமான் ஸ் பண்ணும் பாருங்க... அய்யோ நம்ம பூமி அப்படியே கூல் ஆகி குழைந்து குழந்தையாயிருவார்.. கோடை மழை செம் அழகு... இந்தா இன்னிக்கு இந்தப் பதிவை தட்டிகிட்டு இருக்கும் போது நம்ம சென்னையிலே மழைக்கும் மண்ணுக்கும் காதல் வந்தல்லலோ வந்தல்ல்லோ.. கோடையில் பெய்யும் மழை எனக்குக் கோடி அழகு..

இப்போ எல்லாம் வேலைங்கற பேர்ல்ல ஆணியை அடுக்கி வச்சு புடுங்க விட்டுறாயங்க... அப்படி அழுது வடிஞ்சு ஆணியைப் புடுங்கிப் பொங்கி ஒரு கோவத்துல்ல பொட்டியைப் பிரிச்சு வீசிராலம்ன்னு உக்காந்து இருக்கும் போது.. யப்பா இருக்கீயான்னு நம்ம இணையத்தின் இணைப்பு வழியா வந்து விழுற அந்த ஒண்ணு இரண்டு வார்த்தைகள் அழகு... அப்படியே கொஞ்சம் பேசிட்டு வேலையைத் தொடருறோம் பார்த்தீங்களா அது இன்னும் அழகு...
கொய்யாலே சேட்டிங் சேட்டைக்கு இப்படி ஒரு அழகு பிலீங் கொடுத்ததுக்கு நம்ம ராம் எனக்குக் கோடி நன்றி கட்டாயம் சொல்லுவான் பாருங்க..

கல்லுக்குள்ளே இருக்க சிலையழகு சிற்பிக்கு மட்டும் எப்படி தெரியுதுன்னு நானும் நிறைய மண்டைக் காஞிச்யிருக்கேன்...அப்போ எல்லாம் தோனாதப் பதில் இப்போ அழகு பதிவுப் போட உக்காந்தாத் தானா வருது...ஆமாங்க ஒவ்வொன்ணும் அழகு.. ஒவ்வொரு விதத்துல்ல அழகு..எல்லாமே அழகு.. அந்த அழகை நாமத் தான் பாக்கத் தவறிடுறோம்.. ச்சே என்ன ஒரு சிந்தனை.. ஆமாங்க நம்ம அழகு பட்டியல்ல சிந்தனைகளுக்கும் ஒரு இடம் நிச்சயம் உண்டு.. கதை, கவிதை, ஓவியம், இலக்கியம், இசை, திரைப்படம், பதிவு இப்படி நான் ரசித்த எத்தனையோ விஷ்யங்கள் சிலப்பல அழகிய சிந்தனைகளின் வெளிப்பாடு தானே.. என் ரசனைக்கு தீனிப் போடும் அத்த்னை சிந்தனைகளுமே கொள்ளை அழகு தான் போங்க...

இப்போ அழகா இந்த ஆட்டத்தை இன்னொரு ரவுண்ட் கொண்டுப் போக நான் கூப்பிடும் மூன்று பேர்

அனுசுயா
LUCK LOOK
பினாத்தல் சுரேஷ்

ஓ,கே . மக்கா அழகிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

9 comments:

இராம் said...

அண்ணே,

அழகான பதிவுண்ணே... வீட்டம்மா'கிட்டே அடிவாங்கிறதே கூட அழகா சொல்லிருக்கீங்க... :)

Anonymous said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

தல இங்கையும் ஒரே வெயில் தான். உங்க பதிவை படிச்சவுடன் அப்படியே ஜில்லுன்னு ஜஸ் தண்ணி குடிச்சது மாதிரி இருக்கு.

காமெடி, நட்பு, குடும்பம்னு ஒவ்வொன்றும் நகைச்சுவையுடன் அட்டகாசமாக எழுதியிருக்கீங்க.

கோபிநாத் said...

\\சுட்டெரிக்கும் சூரியப் பூமிங்க எங்க சென்னை.... தாவி வர்ற வங்கக் கடல் கூட ஒரு லிமிட்டோட நின்னுட்டு சைலண்ட்டா ரிட்டர்ன் போயிரும்.\\

அட அட என்னமா எழுதியிருக்கீங்க தல ....பின்னிட்டிங்க ;)

\\கொய்யாலே சேட்டிங் சேட்டைக்கு இப்படி ஒரு அழகு பிலீங் கொடுத்ததுக்கு நம்ம ராம் எனக்குக் கோடி நன்றி கட்டாயம் சொல்லுவான் பாருங்க..\\

ராம் இது என்னப்பா புதுகதை.....பல உள்குத்து இருக்கும் போல இருக்கு.....ஒழுங்கா உண்மையை சொல்லிடு

கோபிநாத் said...

\\என் ரசனைக்கு தீனிப் போடும் அத்த்னை சிந்தனைகளுமே கொள்ளை அழகு தான் போங்க...\\

என்னமா சிந்திக்கிறிங்க தல....மொத்தத்தில் ஆறும் அருமை...அருமை...அருமை ;-))))))))

இலவசக்கொத்தனார் said...

தேவ்,

உங்க கிட்ட அழகு வந்த உடனே உங்களுக்குள் இருக்கும் கதாசிரியன் வருவான்னு நினைச்சேன். ஆனா வ.வா.ச. உறுப்பினன் வந்துட்டானே? கடமை உணர்ச்சு? :))

அப்புறம் மை ஃபிரண்டு நிறைய பேரு கூப்பிட்டாச்சு. வேணும்னா மாத்துங்க.

வெட்டிப்பயல் said...

அழகு அருமை...

நீங்க சொல்ற எல்லாமே அழகு தான்...

மனதின் ஓசை said...

அழகை பற்றிய ஒரு அழகான ப்திவு..

//தன்னைப் பார்த்து சிரிக்கக் கற்று கொண்ட எந்த மனிதனும் வாழ்க்கையில் தோற்றதாய் சரித்திரம் இல்லை...//
//ஆமாங்க ஒவ்வொன்ணும் அழகு.. ஒவ்வொரு விதத்துல்ல அழகு..எல்லாமே அழகு.. அந்த அழகை நாமத் தான் பாக்கத் தவறிடுறோம்.//

தத்துவம் எல்லாம் வேற சொல்ற.. நல்லாத்தான் இருக்கு...
:-)


//மண்டையிலே இருக்க மூளையெல்லாம் தண்ணியா உருகி... //


கவிதைக்கு பொய்யழகுன்னு கேள்விப்பட்டு இருக்கேன்.. கட்டுரைக்குமா?

அனுசுயா said...

I have posted my tag dev. Thanks for tagging. :)

tamil10