Monday, April 16, 2007

உன்னாலே உன்னாலே

ஒரு ராத்திரி தூக்கம் போச்சு - உன்னாலே உன்னாலே

டிக்கெட்க்கு செலவு பண்ண காசு நட்டமாப் போச்சு - உன்னாலே உன்னாலே

இப்படி கதையே இல்லாத படத்தை எல்லாம் நான் பார்த்தேன் பாரு - உன்னாலே உன்னாலே

வெயில் கொடுமைத் தாங்கல்லன்னு ராவுல்ல ஓப்பன் ஏர் தியேட்டருக்குப் போவலாம்ன்னு வந்து இந்தக் கொடுமையிலே குளிச்சுட்டேனே - உன்னாலே உன்னாலே

ஒரு ராத்திரி ஒழுங்கா வீட்டுல்ல தின்னுட்டு போர்த்திப் படுத்து தூங்கியிருந்தா இந்த அவஸ்தை வந்திருக்குமா....

உன்னை எல்லாம் கொன்னாலே கொன்னாலே என்ன?


சனிக்கிழமை ராத்திரி பிராத்தனா தியேட்டருக்கு நைட் ஷோப் போயிட்டு வர்ற வழியிலே நம்ம நட்பு நம்மைத் திட்டிய மொழிகளில் சென்சார் செய்து மிஞ்சிய் வார்த்தைகளை உங்கள் பார்வைக்கு வச்சிருக்கேன்...

பிகு: சாரி ஜிவா... எவ்வளவோ முயன்றும் உங்க படைப்புக்கு என்னாலே என்னாலே விமர்சனம் எழுத முடியல்ல...


வலிக்குது..திங்கட்கிழ்மை ஆச்சு.. இன்னும் வலிக்குது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...


இத்தோட இதை எல்லாம் நிறுத்திக்கங்க.. நாங்க எல்லாம் பாவம்ய்யா

24 comments:

MyFriend said...

first huh?

MyFriend said...

Unnale Unnale rocks! (aanal, naan innum padam paarkkala.. ;-))

MyFriend said...

Jeeva padamnna oru speciality irukkumnnu ethirparthen.. neengga chappunnu aakkideenggale anna?

MyFriend said...

hmm.. time kidaikkum pothu kandippa parthuddu solren. :-)

மனதின் ஓசை said...

நாலு பேர் நல்லா இருக்கனும்னா எதுவுமே தப்பில்லே

மனதின் ஓசை said...

//first huh? /

பிரண்டூஊஊஊ.. கொஞ்சம் பதிவையும் படிங்க.. அது மொக்க பதிவா இருந்தாலும் :-))))

உங்கள் நண்பன்(சரா) said...

தேவு உண்மையாலே சொல்லுத? நான் இன்று இரவு போகலாம் என்றிருந்தேன், உன்னாலே யோசிக்கவேண்டியுள்ளது மக்கா! பாடல்களை டீவியில் பார்க்கும் பொழுது நல்லா "கலர்"ஃபுல்லா எடுத்திருந்தாய்ங்க!

அன்புடன்...
சரவணன்.

Ayyanar Viswanath said...

உங்க தியாகத்தை பாராட்டுறேன் ..அப்படியே புதுசா வந்திருக்க படம் எல்லாத்தையும் பாத்துட்டு இந்த மாதிரி ஒரு நொந்த பதிவு போட்டிங்கன்னா நாங்க உசாரா இருப்போம்
:))

ILA (a) இளா said...

பாடாவதி படத்தை பார்க்கப்போகாமல் இருப்பது-உன்னாலே உன்னாலே

எந்த மொக்கை படத்தையும் பார்த்து விமரிசனம் எழுத முடிவதும்-உன்னாலே உன்னாலே

நந்தா said...

என்னங்க படம் அவ்வளவு மோசமாவா இருக்கு? ஜீவா அவ்வளவு மோசமாவா எடுத்திருக்காரு?

Unknown said...

மை ஃபிரெண்ட் - வருகைக்கு நன்றி.. படத்தில் பாடல்கள் அருமையாக இருந்த காரணமே படத்திற்கு நல்ல ஒரு ஓப்பனிங் கிடைக்கக் காரணம்.. கிடைத்த ஓப்பனிங்கை ஜீவாத் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பது என் கருத்து மட்டுமில்ல நான் பார்த்தக் காட்சியில் என்னோடு படம் பார்த்த ரசிகர்களின் கருத்தும் அதுவே..

Unknown said...

//நாலு பேர் நல்லா இருக்கனும்னா எதுவுமே தப்பில்லே //

மனதின் ஓசை - என்னப்பாச் சொல்ல வர்றே.. ஜீவா-அந்தப் புது ஹீரோ- சதா-புது ஹீரோயின் தனிஷா (காஜோலின் தங்கையாம்) அவங்கத் தான் அந்த நாலு பேரா.. தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனைப் பார்த்து இந்த் டயலாக் சொல்லுறீயா நீயு?

Unknown said...

சரா.. உனக்கு சன் தொலைக்காட்சிகளில் வரும் சிரீயல்கள் பிடித்தால் இந்த படம் உனக்குப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.. அதாவது காரணமில்லாத காட்சி அமைப்புக்கள்.. படத்தை நகர்த்த வேண்டுமே என்ற சலிப்பில் சொருகப் பட்டிருக்கும் நாடகப்பாணி துணுக்குக் காமெடி காட்சிகள் (தில் சாத்தா ஹைய் இல இருந்து அப்பட்டமாய் உருவப்பட்டிருக்கும் காட்சியும் அதில அடக்கம்) இப்படி படம் எதிர்பார்ப்புகளைத் தகர்க்கும் இடங்களாய் பலவற்றைச் சுட்டிக்காட்ட முடியும்

Unknown said...

அய்யனார் நான் பரவாயில்ல எங்க ஊர்ல்ல தியேட்டர் டிக்கெட் 30 ரூபா தான்... ஆனா இதையே சத்யம், சங்கம், ஐனாக்ஸ், மாயாஜால்ன்னு கொட்டிக் கொடுத்துப் பார்த்துட்டு தலையிலேக் கொட்டிகிட்டே வந்தவங்க எல்லாம் எந்த பட்டியல்ல சேக்குறது.. என்னையே தியாகின்னு கூப்பிட்டு அவ்ங்களைப் பீல் பண்ண வச்சிராதீங்க.. அந்தப் பட்டத்தை உங்க சார்பா அவ்ங்களுக்கு நானேக் கொடுத்துடுறேன் :-)

Unknown said...

//பாடாவதி படத்தை பார்க்கப்போகாமல் இருப்பது-உன்னாலே உன்னாலே

எந்த மொக்கை படத்தையும் பார்த்து விமரிசனம் எழுத முடிவதும்-உன்னாலே உன்னாலே //

தமிழன் என்று சொல்லடா.. திரைப்படம் அரங்கில் வார இறுதியில் நில்லடா...:)))

Unknown said...

//என்னங்க படம் அவ்வளவு மோசமாவா இருக்கு? ஜீவா அவ்வளவு மோசமாவா எடுத்திருக்காரு?
//

ஜீவாவின் இந்த முயற்சி நிச்சயமாய் பாராட்டும் படியோ ரசிகர்கள் ஏற்கும் படியோ இல்லை என்பது என் கருத்து நந்தா.

Sridhar Narayanan said...

//அய்யனார் நான் பரவாயில்ல எங்க ஊர்ல்ல தியேட்டர் டிக்கெட் 30 ரூபா தான்//

--ன்னு சொல்லிட்டு

//சனிக்கிழமை ராத்திரி பிராத்தனா தியேட்டருக்கு //

இப்படி தாந்தோன்றித்தனமா செலவு செய்திருக்கியேப்பு... நீயும் ஒரு தியாகச் செம்மல்தான்.

கோபிநாத் said...

அண்ணாத்த நீ வாழ்க....இது மேல சொல்லறதுக்குள்ள துக்கம் தொண்டையை அடைக்குது.

Syam said...

இந்த படத்த பாக்க பிரார்தனா வரைக்கும் போனீங்களா...

ஏய்யா இம்புட்டு நல்லவங்களா நீங்க :-)

Anonymous said...

நான் தப்பிச்சேன்.கண்டிப்பாக இந்த படத்தை நான் பார்க்க மாட்டேன்.நன்றி தேவ் அண்ணா ;)

நாகை சிவா said...

நீ எம்புட்டு சொன்னாலும் இந்த படத்தை நாங்க பாப்போம். ஒரே ஒரு டயலாக்காக - பபுள் கம் டயலாக்.

என்ன மனச தேத்திட்டு தான் படத்தை பாக்க ஆரம்பிப்போம்... அதுனால பெரிசா வலி இருக்காதுனு நினைக்கிறேன். பாக்கலாம்.

காலப் பறவை said...

nanum padam pakanumnu thampa irunthan....ini pogala

காலப் பறவை said...

wasta

Anonymous said...

nalla vimarsanam dev :) rasigai

tamil10