Wednesday, April 25, 2007

கலாட்டாக் கச்சேரிங்கோ - ஜாலி கைஸ் அன்ட் கேர்ள்ஸ்ஓஹோ கச்சேரி பிலிம்ஸ் கம்பெனிக்கு டைடல் பார்க்ல்ல இடம் வேணும் கிடைக்குமான்னு விசாரிக்கச் சொல்லி நம்ம சராவை அனுப்பி மாசக் கணக்காச்சு பயலைக் காணும்....அவனும் விடாம பெரிய பெரியத் தலகளைச் சந்திச்சு நம்ம விசயம் பேசிகிட்டுத் திரியறதாக் கேள்வி..

சரி டைடல் பார்க் இல்லாட்டியும் பரவாயில்ல.. வேற பார்க் எதுல்லாவது ஆபிஸ் தொறக்கலாம்ன்னு நான் யோசிக்கும் போது நம்ம துபாய் பய கோபி பொங்கி அண்ணே நம்ம கிடேசன் பார்க் மரத்தை எல்லாம் வெட்டு வெட்டுன்னு வெட்டி சும்மா சூப்பரா ஆபிஸ் போட்டுருவோம்ண்ணேன்னுப் பாச மழைப் பொழிஞ்சுட்டான்.

படத்துச் சூட்டிங் கூட அங்கனத் தெரிஞ்ச ஷேக் வீட்டு கொல்லையிலே வச்சுக்கலாம்.. பூஜைக்கு நம்ம அபிஅப்பாவைக் கூப்பிட்டுறலாம் ( துபாய் கிடேசன் பார்க் ஓனர் நம்ம அபி அப்பாவுக்கு பிரண்ட்டாம் இல்ல) அப்புறம் பைனான் ஸ்க்கு அண்ணாச்சி... பினாத்தலார்ன்னு ஆட்டயப் போட்டுரலாம்.. அண்ணாச்சிக்கும் பினாத்தலாருக்கும் சும்மா ஒரு கெஸ்ட் ரோல் கொடுத்தா துபாய் கலெக்ஷ்ன் கேரண்டிண்ணே.. அம்புட்டு பேன் ஸ்ண்ணே...அப்படின்னு கிட்டத் தட்ட என்ன துபாய்க்கு கடத்த திட்டம் போட்டப்போத் தான் டவுசர் பாண்டி பாஞ்சி வந்தான்... மூச்சு வாங்க வாங்க... என்னியப் பார்த்தான்.

அண்ணே... இந்த பாப் வூல்மரைப் போட்டாய்ங்களே அவ்ங்களைப் பிடிச்சுக் கொடுத்தா எதாவது இனாம் கொடுப்பாயங்களாண்ணே... அப்பாவியாய் கேட்டான்
அடப் பாவி.. டேய் வேர்க்குது வெளியே போயிட்டு வரேன்னு போனே வெஸ்ட் இன்டீஸ்க்கேப் போயிட்டுக் கொலைக்காரங்கக் கூட கோக் குடிச்சுட்டு வந்தமாதிரி இல்ல பேசுற.. வெகுளியாப் பேசுறீயா இல்ல வில்லங்கமாப் பேசுறீயான்னு தெரியல்லயே.. மனசுக்குள் மவுத் விட்டு பேசிட்டு மவுனமாய் அவனைப் பார்த்தேன்..

ஏன் கேக்குற?

இல்லண்ணே.. எனக்கென்னமோ அது நம்ம ஜீயும் .. இம்சையக்காவுமா தான் இருக்குமோன்னு கன்பர்ம் டவுட்டாக் கீதுண்ணே

அவங்க என்னடா பண்ணாங்க பச்சப் புள்ளங்க ஆச்சேடா...

அய்யோ அப்படி எல்லாம் முடிவு பண்ணிராதீங்க.. பாப் ஆல்பம் போடப் போறோம்ன்னு அவிங்க கம்ப்யூட்டர்ல்ல எழுதி வச்சிருக்கதை நான் எழுத்துக் கூட்டிப் படிச்சுட்டேண்ணே.. எத்தனைத் தமிழ் படம் பாக்குறோம் இப்போ எல்லாம் வில்லன்வ.. இப்படி கம்ப்யூட்டர் பொட்டியில்லேத் தாண்ணே கொலை மேட்டர் எல்லாம் குறிச்சு வைப்பாய்ங்க.. நம்ம விசய், அசித், எல்லாம் அதை வச்சு கண்டுபிடிப்பாய்ங்க.. ஏன் நம்ம அந்நியன் விக்ரன் கூட அப்படி கொலைக்கு கம்ப்யூட்டர்ல்ல தாண்ணே அப்ளிகேஷ்ன் போடுவார்..என்னிய ஏமாத்த முடியுமா?

அடப் பாவி வேலைத் தேட அப்ளிகேஷ்ன் போடணுமா கம்ப்யூட்டரத் திறடா ஒரு படத்துல்லாவது சொல்லிக்கொடுங்கய்யா.. பாருங்க கொலைக்கு ரெஸ்யூம் அனுப்ப இன்ட்ர்னேட் இங்கிதம் இல்லாம இங்கே ஒரு ஜீவன் சொல்லுது.. ம்ம்ம் நீ மேல சொல்லுடா ராசா..

லாஜிக் இல்லாத தமிழ் படங்களைப் பார்த்து ஒரு பிரிட்டானிக்காவா மாறி இருந்த டவுசர் பாண்டி பரபரப்பாச் சொன்னான்...

அண்ணே அந்த பாகிஸ்தான் கோச் பேர் பாப் வூல்மர்.. இப்போ இவங்க போடப் போற ஆளு பேர் பாப் ஆல்பம்.. நல்லா யோசிங்க.. ரெண்டு பேர்ல்லயும் பாப் இருக்கு அதுன்னால... அவன் சிரியசாப் பேச பேச எனக்கு சிறுமூளையிலே சின்னதா டென்ட் விழுந்த பிலீங்க் வந்துருச்சு...

டேய் பாண்டி எப்படிடா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க... ஸ்டெப் கட்டிங்..பங்க் கட்டிங்.. இப்படி வகையா முடியெல்லாம் வெட்டுறீங்க.. ஆனா உங்களுக்கு பாப் ஆல்பம்ன்னா அது இசை சம்பந்தமான மேட்டர்ன்னு தெரியாதா... அடக்கொக்காமக்கா பாப் ஆல்பம்ன்னா பாப் வூல்மர் தம்பின்னு சொல்லுறீயடா...உன்னிய... அப்படின்னு நான் கையை ஓங்க...

வாசல்ல முகம் தெரியாத அளவுக்கு மூஞ்சி முழுக்க பொதர் வளத்துகிட்டு..,கர் புர்ன்னு கண்டபடி சவுண்ட் விட்டுகிட்டு ஏரியாவே அலறுர மாதிரி சொய்ங்ங்னு ஒரு சவுண்ட் வேற சேத்துக் கொடுத்துகிட்டு ஒரு பார்ட்டி நம்ம வீட்டு வாசல்ல நின்னுச்சு...

அய்யோ கரடிங்கண்ணா.. அப்படின்னு சின்னப் பய டவுசர் கதறிகிட்டு கொல்லைக் கதவைத் திறந்துட்டு ஓட ...

அய்யோ அரட்டை அரங்கம் நடத்த நம்ம வீட்டுக்கு வீராச்சாமியார் வீறு கொண்டு வந்துட்டார்ன்னு நான் வீல்ன்னு அழுக.... அய்யோ அந்த ஆறு நிமிசம் கொடுமையோ கொடுமை..

அண்ணே அழாதீங்க... நான் தாண்ணே உங்க பாசக்கார ஜீ... அப்படின்னு பய டோப்பாவைக் கழ்ட்ட எனக்கு உசுரு திரும்பி வந்துச்சு

டேய் என்னடா இது கோலம்.... புதரகம் போய் தலையிலே பொதரைச் செட் பண்ணியிருக்க...அந்தப் பொதரை மொத்தமாச் சாயச் சட்டிக்குள்ளே விட்டு எடுத்துருக்க... ஜன்னல் எல்லாம் மூடுன இந்த வீட்டுல்ல கருப்பு கண்ணாடி போட்டுகிட்டு நான் நிக்குற திசைய ஒரு குத்து மதிப்பாப் பாத்துப் பேசுற...கழுத்துல்ல என்னடா இது யாரோ எப்பவோ சேவிங் முடிச்சு தூக்கியெறிஞ்ச முக்காப் பிளேட்.. அட பாவி கையிலே காப்பு அதுவும் எதோ மெஷினுக்குள்ளே கையோடு விட்டு வளைச்சு நெளிச்சு இருக்கு.. டேய் அந்த ஊரு பிச்சக்காரன் அசந்த நேரம் அவன் துணியை அடிச்சிட்டியாடா.. அங்க அங்க திறந்த மேனியா இருக்கு... டேய் திருடுனா ஷூவை ஒரே ஆளுகிட்டத் திருடக் கூடாதா.. இப்படி காலுக்கு ஒரு கலர் ஷூவா எடுத்துருக்கீயேடா...

அண்ணே உங்களுக்கு ஓலகம் தெரியாதுண்ணே.. உள்ளூர்ல்ல உக்காந்துகிட்டு கச்சேரி பண்றவர் கிட்டே ஓலக மீசிக் பத்தி எப்படி பேசற்து... ஆல் மை டைம்... ஆனா ஒண்ணுண்ணே இப்படி கெட் அப்பா இருந்தா தான் வெரி குட் சொல்லி வெள்ளைக்காரன் வேர்ல்ட் டூர் அரேஞ்ச் பண்ணுறான்... இப்போ நான் இங்கே வந்தது.. நம்மூர் மக்களுக்கு பாப் சாங் அறிமுகப் படுத்த...இங்கே பார்டா.. இதுக்குள்ளே நம்ம டவுசர் பாண்டியும், கோபியும் வந்து நம்மக் கூட உக்காந்துகிட்டாங்க...

ஐயாம் கோபி ப்ரம் கிடேசன் பார்க் துபாய் நைஸ் மீட்டிங்க் யூ அப்படின்னு கேப்ல்ல கைக் கொடுக்க

ஓ கிடேசன் பார்க் நைஸ் ப்ளேஸ்.. ஐ ஹேவ் பிக் பேன் தேர்.. திஸ் கை அபி டேட், பாஸ்ட் பவுலர், பிரதர், மூன்பிரெண்ட், டெவில்பாண்டிங், பிளாபரார், டூ மெனி பேன் ஸ் ...

"தம்பி நீ சொன்ன பேர்ல்ல ஒரளவுக்கு விளங்குது... அது யார் டெவில் பாண்டிங்.. ரிக்கி பாண்டிங் ரிலேட்டிவ்வா?"

"அண்ணே.. திங் அவுட் ஆப் த பாக்ஸ் அப்போத் தான் விளங்கும்.. நல்லா யோசிங்க இல்ல இங்க கச்சேரி மக்கள் கிட்டே உதவி கேளுங்க.. அங் ஓ.கே கோபிஸ்.. சம்மர் முடிச்சுட்டு ஐ வில் சீ யூ இன் துபாய்..இங்கே கன்டிரி சாங்க்ஸ் விஷ்யமா ஆராச்சி பண்ண என் ட்ரூப் கூட்டிட்டு வந்துருக்கேன்.. அந்த கன்டிரி சாங்க்ஸ் அப்படியே பிக் அப் பண்ணி என் வேர்ல்ட் டூர்ல்ல யூஸ் பண்ணப் போறேன்.. சோனி ஸ்பான்ஸர் பண்ணுறேன்ன்னு சொல்லியிருக்காங்க...

சோனியா அம்மா இதெல்லாம் பண்ணுறாங்களான்னு டவுசர் பாண்டி அப்பாவியாய் என் காதைக் கடிக்க.. அவனுக்கு நான் விளக்கம் சொல்லி வில்லங்கத்தை விலக்க வேண்டியதாப் போச்சு

சரிண்ணே.. கச்சேரின்னு பேர் வச்சுருக்கீங்களே.. உங்களுக்குப் பாட வருமா?

இல்ல

"சரி எதாவது வாசிக்க வருமா?"

இல்லஇந்த மைக் செட் , ஆர்க்கெஸ்ட்ரா.. இப்படி எதாவது டெக்னிக்கலா தெரியுமா?

இல்ல

சரி.. பாடத் தெரியாது, வாசிக்கத் தெரியாது, ம்ம் டெக்னிக்கலா எதுவும் தெரியாது ஆனா கச்சேரின்னு பேர் மட்டும் வ்ச்சுக்குவீங்க... கலாய்ப்பீங்க... ஐ வில் ஸ்டாப் ஆல் திஸ் அப்படின்னு முதுகுல்ல இருந்து ஒரு லாங் சைஸ் வீச்சரிவா எடுத்து ஜி தம்பி கீழே வச்சது...


ஜி தம்பி கதை ஒண்ணு எழுதி இன்டர்வெல் விட்ட மாதிரியே நானும் இங்கேயே இன்ட்ர்வெல் விடுறேன்..

அன்ணே உச்சா வருதுண்ணே.. இருடா நானும் வர்றேன் அப்படின்னு அந்த அருவாளைப் பாத்துகிட்டே எந்தரிச்சேன்...ஏனுங்க இன்டர்வெல் விட்டா போயிட்டு வ்ர்றது மரபு தானுங்களே...

இன்னும் வரும்....

48 comments:

Anonymous said...

me first?

Anonymous said...

//அவங்க என்னடா பண்ணாங்க பச்சப் புள்ளங்க ஆச்சேடா...//

அண்ணா!!!!அவங்க ரெண்டு பேரும் பச்ச புள்ளங்களா?இது எல்லாம் கொஞ்சம் ஓவர்!!அடடா ரெண்டு பேரும் ஆல்பம் எல்லாம் போட போறாங்களா? :-)))

Anonymous said...

//டேய் என்னடா இது கோலம்.... புதரகம் போய் தலையிலே பொதரைச் செட் பண்ணியிருக்க...அந்தப் பொதரை மொத்தமாச் சாயச் சட்டிக்குள்ளே விட்டு எடுத்துருக்க... ஜன்னல் எல்லாம் மூடுன இந்த வீட்டுல்ல கருப்பு கண்ணாடி போட்டுகிட்டு நான் நிக்குற திசைய ஒரு குத்து மதிப்பாப் பாத்துப் பேசுற...கழுத்துல்ல என்னடா இது யாரோ எப்பவோ சேவிங் முடிச்சு தூக்கியெறிஞ்ச முக்காப் பிளேட்.. அட பாவி கையிலே காப்பு அதுவும் எதோ மெஷினுக்குள்ளே கையோடு விட்டு வளைச்சு நெளிச்சு இருக்கு.. டேய் அந்த ஊரு பிச்சக்காரன் அசந்த நேரம் அவன் துணியை அடிச்சிட்டியாடா.. அங்க அங்க திறந்த மேனியா இருக்கு... டேய் திருடுனா ஷூவை ஒரே ஆளுகிட்டத் திருடக் கூடாதா.. இப்படி காலுக்கு ஒரு கலர் ஷூவா எடுத்துருக்கீயேடா...//

ஜி அண்ணா...US போய் இப்படி மாறிட்டீங்களா?ஹி ஹி.அப்படியே எங்க ஊர் பசங்களை பார்த்த மாதிரி இருக்கு;-)

மனதின் ஓசை said...

//இன்னும் வரும்....//

:-)))))

மனதின் ஓசை said...

//இல்லண்ணே.. எனக்கென்னமோ அது நம்ம ஜீயும் .. இம்சையக்காவுமா தான் இருக்குமோன்னு கன்பர்ம் டவுட்டாக் கீதுண்ணே//

:-))

வாழக்கம் போலவே கலக்கல் நடை.

//அய்யோ அரட்டை அரங்கம் நடத்த நம்ம வீட்டுக்கு வீராச்சாமியார் வீறு கொண்டு வந்துட்டார்ன்னு நான் வீல்ன்னு அழுக...//

இருடி.. வீராச்சாமி CD (யாருக்கும் தெரியாம) வாங்கி அனுப்பரேன்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

புது கச்சேரி ரெடி!!!!

டிக்கேட் கவுண்டரை ஓப்பன் பண்ணிடலாமா? ;-)

அபி அப்பா said...

கிடேசன் பார்க் சார்பாக ஒரு நன்றி வச்சுகிட்டு "ஸ்டாட் மீசிக்":-))))

அபி அப்பா said...

//புது கச்சேரி ரெடி!!!!

டிக்கேட் கவுண்டரை ஓப்பன் பண்ணிடலாமா? ;-)//

தங்கச்சி இருக்கியாம்மா வாம்மா இன்னிக்கு இந்த அங்கில் வீட்ல தான் மட்டன் குழம்பு:-))

அபி அப்பா said...

இருங்க கும்பி குடும்மத்தை அழைச்சுட்டு வாரேன்:-))

Anonymous said...

கச்சேரிக்கு வந்து ரோம்ப நாள் ஆகிவிட்டது
ம்.. சிரிக்க சிந்திக்க என்று இருக்கிறது..
உங்கள் பதிவு..

நேசமுடன்..
-நித்தியா

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பாஆஆஆ...


என்ன கூட்டம் என்ன கூட்டம்.. நான் பதில் போடுறதுக்கே வழி விடாம மறைச்சிட்டு இருக்கானுங்களே!!!!

இராம் said...

இதுவும் ஒரு கும்பி பதிவு தானா??? :)

இராம் said...

அட மாடு ஓடலை.... அப்போ கும்பி தான் :)

மனதின் ஓசை said...

//சிரிக்க சிந்திக்க என்று இருக்கிறது..
உங்கள் பதிவு..//

இந்த நக்கல்தானே வேனாங்கறது...

மனதின் ஓசை said...

//டிக்கேட் கவுண்டரை ஓப்பன் பண்ணிடலாமா? ;-)
//

யாரும் இல்லாத கவுன்டர்ல யாருக்கு டிக்கெட் விக்கறீங்க???

மனதின் ஓசை said...

//இருங்க கும்பி குடும்மத்தை அழைச்சுட்டு வாரேன்:-)) //

வரதுக்குள்ள பொழுது சாஞ்சிடும் போலிருக்கே..
பொண்டாட்டி வையும் வூட்டுக்கு போவனும்... சீக்கிரம் வாங்க..

ஜி said...

//டேய் திருடுனா ஷூவை ஒரே ஆளுகிட்டத் திருடக் கூடாதா.. இப்படி காலுக்கு ஒரு கலர் ஷூவா எடுத்துருக்கீயேடா...//

ஹே மேன். திஸ் இஸ் பேஸன். எஃப் டீ.வி யெல்லாம் பாக்குறது இல்ல. கண்ட்ரீ பனானா. யூ ஸீ. லாஸ்ட் வீக் கூட ஆஞ்சலினா ஜூலி இதத்தான் யு. என் ல பேசுனாங்க.

மனதின் ஓசை said...

//இதுவும் ஒரு கும்பி பதிவு தானா??? :)//

என்னா கேள்வி இது..

கும்பிதான் கும்பிதான்..கும்பியேதான்

ஜி said...

//அண்ணா!!!!அவங்க ரெண்டு பேரும் பச்ச புள்ளங்களா?இது எல்லாம் கொஞ்சம் ஓவர்!!//

அப்போ பச்சைத் தமிழன். இப்போ வெள்ளைத் தமிழன்

மனதின் ஓசை said...

//ஹே மேன். திஸ் இஸ் பேஸன். எஃப் டீ.வி யெல்லாம் பாக்குறது இல்ல. கண்ட்ரீ பனானா. யூ ஸீ. லாஸ்ட் வீக் கூட ஆஞ்சலினா ஜூலி இதத்தான் யு. என் ல பேசுனாங்க. //

#@$%^^(*#%%&??????

ஜி said...

//இன்னும் வரும்....//

எத்தன??

மனதின் ஓசை said...

////இன்னும் வரும்....//

எத்தன??

//
மொதல்ல நீங்க உங்க அருவா கத எத்தன வரும்னு சொல்லுங்க..

ஜி said...

//மொதல்ல நீங்க உங்க அருவா கத எத்தன வரும்னு சொல்லுங்க.. //

அது இன்னும் ஒன்னுதான் அடுத்ததுல முடிச்சிடலாம் :)))

ஜி said...

//ஜி அண்ணா...US போய் இப்படி மாறிட்டீங்களா?ஹி ஹி.அப்படியே எங்க ஊர் பசங்களை பார்த்த மாதிரி இருக்கு;-) //

இஜிட்... அவுங்கள நான் சந்திகணுமே.. உங்க மலேசியா, சிங்கப்பூர் பத்தியும் ஒரு பாப் ஆல்பம் போடலாம்னு இருக்கேன். யூ நோ மை ஃபிரண்ட்... ஸீ ஆல்ஸோ ஒரு சான்ஸ் கேட்டாங்க. இந்த அக்டோபர்ல நான் உங்கள மீட் பண்றேன். மீன் டைம், அடுத்த வேர்ல்ட் கப்புக்கு ஒரு ஆல்பம் போட சொல்லிருக்காங்க. அதுக்காக ஒரு ரிகர்ஸல் பண்ண வேண்டி இருக்குது. சகிரா இருக்குதுல, அது கூட அதுல ஒரு குத்தாட்டம் போடுது. ஸைட்ல நமிதா. அதுல நடுவுல அருவாள வச்சிட்டு ஆடுறதுக்குத்தான் தேவ்வ கூப்டுலாம்னு இருந்தேன்....

ஜி said...

//சிரிக்க சிந்திக்க என்று இருக்கிறது..
உங்கள் பதிவு..//

இப்படி சிந்திக்க வைக்கும் பல பதிவுகளை இட்டதால், போர்வாள் இன்று முதல் 'சிந்தனைச் சிற்பி' என்றழைக்கப்படுவார்

Anonymous said...

//இஜிட்... அவுங்கள நான் சந்திகணுமே.. உங்க மலேசியா, சிங்கப்பூர் பத்தியும் ஒரு பாப் ஆல்பம் போடலாம்னு இருக்கேன். யூ நோ மை ஃபிரண்ட்... ஸீ ஆல்ஸோ ஒரு சான்ஸ் கேட்டாங்க. இந்த அக்டோபர்ல நான் உங்கள மீட் பண்றேன். மீன் டைம், அடுத்த வேர்ல்ட் கப்புக்கு ஒரு ஆல்பம் போட சொல்லிருக்காங்க. அதுக்காக ஒரு ரிகர்ஸல் பண்ண வேண்டி இருக்குது. சகிரா இருக்குதுல, அது கூட அதுல ஒரு குத்தாட்டம் போடுது. ஸைட்ல நமிதா. அதுல நடுவுல அருவாள வச்சிட்டு ஆடுறதுக்குத்தான் தேவ்வ கூப்டுலாம்னு இருந்தேன்.... //

சீன் போடும் மன்னா!சவுண்ட் அதிகமாக இருக்கு!!ஓவரா இல்லை?உங்களுக்கே சகிரா யாருன்னு நான் சொல்லிதான் தெரியும்!

ஜி said...

//இன்னும் வரும்....//

இந்தப் பதிவில் இம்சையக்காவைப் பற்றி ஒன்றும் சொல்லாததால், இது ஆணாதிக்கப் பதிவு என்று குற்றம் சுமத்தப்பட்டு மனித வள மேம்பாட்டுத் துறைச் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வருகின்றது. ஆகையால், அடுத்தப் பதிவில் இம்சையரசியைப் பற்றிய நல்ல அரியத் தகவல்களையும் வழங்குவீர்கள் என்று நம்பிக்கை தீர்மானம் ஏற்றுவீர்கள் என்று கச்சேரி கனவான்களெல்லாம் ஒருசேரக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜி said...

//உங்களுக்கே சகிரா யாருன்னு நான் சொல்லிதான் தெரியும்!//

உங்க பக்கத்து வீட்டுப் பாட்டி சங்கீதாவ சொல்லல. நான் சொல்றது பாப் உலக பரபரப்புக் கன்னி சகிராவ சொன்னேன். அது கூட தெரியாம... ஐய்யோ... ஐய்யோ...

Anonymous said...

//உங்க பக்கத்து வீட்டுப் பாட்டி சங்கீதாவ சொல்லல. நான் சொல்றது பாப் உலக பரபரப்புக் கன்னி சகிராவ சொன்னேன். அது கூட தெரியாம... ஐய்யோ... ஐய்யோ... //

அய்யோ ஜி அண்ணாவுக்கு கண்ணுத் தெரியவில்லை.நானும் அதே சகிராவை பத்திதான் சொன்னேன்.அன்னைக்கு hips don't lie பாட்டு கேட்டு யார் இந்த figure என்று அனைவரையும் கேட்டு கொண்டிருந்தீர்களே!!ஏன் அண்ணா இந்த வரட்டு கௌரவம் எல்லாம்?என் பக்கத்து வீட்டில் எல்லாம் சீனர்கள் மட்டுமே.சங்கீதா பாட்டின்னு யாருமே இல்லை அண்ணா ;-)சகிரா ன்னு எழுதினால் உங்களுக்கு சங்கீதா பாட்டின்னு கண்ணுக்கு தெரியுதா?

கோபிநாத் said...

அண்ணாத்த கலக்கல் கச்சேரி ;-))

கோபிநாத் said...

\\இன்னும் வரும்....\\\

இன்னும் வருமா? ஹைய்யா........ஜாலி ;))

இம்சை அரசி said...

ஆஹா!!! என்னது இதெல்லாம். இன்னும் வரும்னு சொல்லிப்போட்டு என்னய வச்சு காமெடி கீமெடி பண்ணிப்பிடாதீங்க பாசமலரே! அன்பில் விளைந்த வாச மலரே!!

உங்கள் நண்பன் said...

//கிடைக்குமான்னு விசாரிக்கச் சொல்லி நம்ம சராவை அனுப்பி மாசக் கணக்காச்சு பயலைக் காணும்//

டைட்டல் பார்க்லயும் எல்லாப் பார்க் போல ஃபிகருங்க அதிகமா இருந்தது, ஹி ஹி அதான் போன வேலைய மறந்துட்டேன்! அவசரப்பட்டு அப்ரசண்டீச மாத்தீடாத ஆமா! (ஹிம் ஓசீல உனக்கு அசிஸ்டெண்டா எவன் வேலை பார்ப்பான்?)

அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன் said...

//அபி அப்பா said...
இருங்க கும்பி குடும்மத்தை அழைச்சுட்டு வாரேன்:-))
//

தனிக்கடுதாசி போட்டும்,ஆள்மேல் ஆள் அனுப்பியும் (அது எப்படீங்க ஆளுக்கும்மேல ஆள் அனுப்புறதுனு கேட்கப்படாது)அபிஅப்பா கூப்பிடதால் இன்று இங்கே மட்டன் சாப்பிட ஏற்பாடாகியுள்ளது!

உங்கள் நண்பன் said...

கச்சேரி கலக்கல் தல! பழையபடி வா ஏதாவது படம் எடுப்போம்! அப்படியே இந்தத் தபாவாவது "டிஸ்கசனுக்கு" கூட்டிக்கினு போ!

இராம் said...

/ஆஹா!!! என்னது இதெல்லாம். இன்னும் வரும்னு சொல்லிப்போட்டு என்னய வச்சு காமெடி கீமெடி பண்ணிப்பிடாதீங்க பாசமலரே! அன்பில் விளைந்த வாச மலரே!!//

போ.வா,

செகண்ட் பார்ட் நான் போடுறேன்.... :)))

Syam said...

//அது இன்னும் ஒன்னுதான் அடுத்ததுல முடிச்சிடலாம் :))) //

முடிக்கறதுலயே குறியா இருக்கராய்ங்கப்பா....ஏற்கவனவே ரெண்டு பேர போட்டு தள்ளிட்டீங்க :-)

கப்பி பய said...

:))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

அடடே! இன்னைக்கு கதையில நிறைய கேரக்டர் எண்ட்ரி ஆயிருக்கே! ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இல்லண்ணே.. எனக்கென்னமோ அது நம்ம ஜீயும் .. இம்சையக்காவுமா தான் இருக்குமோன்னு கன்பர்ம் டவுட்டாக் கீதுண்ணே//

டவுட்டே இல்லை.. இவீங்கதான்!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அடப் பாவி வேலைத் தேட அப்ளிகேஷ்ன் போடணுமா கம்ப்யூட்டரத் திறடா ஒரு படத்துல்லாவது சொல்லிக்கொடுங்கய்யா.. //

ரிப்பீட்டே!!

இப்படித்தான் எல்லாருமே ஒரு டைப்பா அழையிறாங்க போல.. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஐயாம் கோபி ப்ரம் கிடேசன் பார்க் துபாய் நைஸ் மீட்டிங்க் யூ அப்படின்னு கேப்ல்ல கைக் கொடுக்க//

அய்யே!! நடுவுல துரைக்கு என்ன இங்கிலீஸு?

.:: மை ஃபிரண்ட் ::. said...

இம்சையக்காவை பற்றி நீங்கள் இந்த பதிவில் எழுதாமல் விட்டு விட்டீர்கள்..

அடுத்த பதிவுல கண்டிப்பா போடனும்.. சரியா??

CVR said...

படித்தேன்
சிரித்தேன்
ரசித்தேன்

வாழ்த்துக்கள்!! :-)

ஜி said...

//போ.வா,

செகண்ட் பார்ட் நான் போடுறேன்.... :))) //

Repeate..... Raam podattum :)))

நாகை சிவா said...

கூத்து அடிக்க ஒரு கூட்டமா கிளம்பி இருக்கீங்க போல...

ம்ம்ம் நடத்துங்க...

david santos said...

Thanks for you work and have a good weekend

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10