Monday, April 30, 2007

தேங்க் யூ சங்கம் and சிங்கம்ஸ்

ஒரு வழியா எனக்கு லீவ் ஓ.கே ஆயிருச்சு மக்கா...

இது வரைக்கு 4356 லீவ் லெட்டர் கொடுத்து..

356 லெட்டர் தொலைக்கப்பட்டு...
900 லெட்டர் கிழிக்கப்பட்டு...
600 லெட்டர் காரணம் சரியில்ல என்று ரிஜெக்ட் செய்யப்பட்டு...
700 லெட்டர் ஏன் எதுக்கு இப்படி கேள்வியாக் கேட்டு...
800 லெட்டர் சும்மாவே நிராகரிக்கப்பட்டு...

கடைசியா ஒரு 999 லெட்டர் ஸ்பெலிங் மிஸ்டேக்ன்னு அநியாயமாக் காரணம் சொல்லி ரிஜெக்ட் ஆச்சு

இப்போக் கடைசியா நேரடியா ஹாட் லைன் போட்டு தலக்கு தொடர்பு கொண்டு கெஞ்சி கதறி.. லீவ் வேணும்ன்னு நான் கேட்டப்போ...

தல நான் பாராட்டுற மகராசன்... எம்புட்டு நாள் ராசான்னு தாய்ள்ளத்தோடு கேட்க...

தல பார்த்து நீயே சொல்லுத் தல ஒரு வருஷமா இங்கிட்டு இருந்திருக்கேன்... நீ லீவு கொடுத்தா... நானும் நானா இருப்பேன் தல...

ம் அப்படின்னு போன்ல்ல அவர் தெய்வீக குரல்ல முனங்கன்ன தல...

ஆமா நீ சங்கத்துல்ல இருந்தே ஓய்வு எடுக்கக் கூடாதா.... வெளியே போய் தான் ஓய்வெடுக்கணுமா? அப்படின்னு வரலாற்று சிறப்பு வாய்ந்த டவுட்டைத் தல எடுத்து விட...

தல ஸ்கூல் எல்லாம் லீவ் விட்டா ஸ்கூலுக்கு வான்னு சொல்லமாட்டாங்கத் தல...
ஆபிஸ்ல்ல கூட அப்படித் தான் தல.. நம்ம சங்கத்துல்லயும் லீவுக் கொடுத்தா அப்படியே கொடு தல அப்படின்னு பூகோள பதிலை நான் சொல்ல...

ம்ம்ம் நீ கூட விளங்கற மாதிரியே பேசுற.. ஆனாலும் வில்லங்கமாத் தான் இருக்குமோன்னு எனக்கு ஒரு டவுட்... ஆமா சங்கத்துக்கு லீவ் விட்டுட்டு வெளியே போய் என்னிய வச்சு காமெடி கீமெடி பண்ண மாட்டியே....அப்படி ஏதாச்சும் நடந்துச்சு.... இந்த பிளாக் பூமி கலவரப் பூமியா மாறிரும்... ரத்தம் பீறிட்டு ஓடும்.. ஏன்னா நான் பெரிய ரவுடின்னு நானே சொல்லி உனக்குத் தெரிய வேண்டியது இல்ல...

அப்படின்னு எனக்கு லீவ் ஓ.கே.வா தல...

ஓ.கே மாதிரி தான்..

அப்படின்னா நான் சங்கத்தை விட்டு வெளியே போகலாமாத் தல...

போலாம் ஆனா லீவு முடிஞ்சு வரணும்.. வரும் போது தலக்கு தலப்பாக் கட்டு பிரியாணியும் மத்தச் சிங்கத்துக்கு எல்லாம் குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டுத் தான் புரியுதா?

கண்டிப்பாத் தல...

தல தல தான்...

கண்ணீர் மல்க தலக்கு போன்ல்ல உம்மா கொடுத்துட்டு சங்கம் விட்டு கிளம்பும் போது சங்கத்துக் கட்டடத்தில் யாரும் இல்லாத காரணத்தினால்

சங்கப் பலகையில் பெரிசா எழுதி வைத்து விட்டு புறப்பட்டுட்டான்

மீண்டும் சந்திக்கும் வரை .... தேங்க்யூ சங்கம் and சிங்கம்ஸ்

16 comments:

நாகை சிவா said...

அப்பாடா!!!!!!!!1

:-))))))

நாகை சிவா said...

356
900
600
700
800
999

4355

அந்த 1 எங்க?

கோபிநாத் said...

\\மீண்டும் சந்திக்கும் வரை .... தேங்க்யூ சங்கம் and சிங்கம்ஸ் \\

அப்ப போலியா ;)))

நாகை சிவா said...

இப்படி உயிருக்கு உயிராக பழகியும் அந்த 1 மறைத்து வீட்டீர்கள் பாத்தீங்களா! :-(

Anonymous said...

அந்த ஒன்னுதாங்க இது

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-((((((((

.:: மை ஃபிரண்ட் ::. said...

பாசத்துக்குரிய அண்ணாவே!!!

என்னது இது சின்ன புள்ளத்தனமா!!!!

தேவ் | Dev said...

என் விடுமுறைக்கு அன்பான ஆதரவு நல்கிய சிங்கம் புலி சிவாவுக்கு என் நன்றி...

மை ஃபிரண்ட் தங்கச்சிம்மா.. ஒய் ஒய் திஸ் கொஸ்ட்டீன்.. லீவ் முடிஞ்சு அதாவது ஆறு மாசம் கழிச்சு வந்து மீட் பண்ணுறேன்

மனதின் ஓசை said...

??

நல்லா இருந்தா சரி. (நீயும் சங்கமும்)..:-))))

இம்சை அரசி said...

:((((((((((((((((((((((((((((((((((

தேவ் | Dev said...

மனதின் ஓசையாரே இதுல்ல காமெடி எதுவுமில்லைன்னா உன் வாழ்த்துக்களுக்கு நன்றி ராசா

தேவ் | Dev said...

இம்சை அரசி தங்கச்சி நோ சில்லி பீலிங்க்ஸ் :))))))))))))))))))

உங்கள் நண்பன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்(வார்த்தையே வரமாட்டேங்குது தேவு!, வார்த்தையுடன் அடுத்த பின்னூட்டதில் வர்ரேன்!)

உங்கள் நண்பன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்......
தேவு ஏன் இந்த லீவ்! அதுவும் 6மாசம்! முடிந்தவரை உடன்வர முயலவும்! நீ இல்லாமல் சங்கம் நிச்சயம் வெறிச்சோடும், உன் இடத்தை யார் நிரப்புவார்கள்(இப்படித்தான் சிம்ரம் போகும்போதும் அழுதாய்ங்க! அப்புறம் நயனைப் புடிக்கலையா அடங்குடானு புலிப்பாண்டி சொல்லுறது கேட்குதா?)

அந்த ஆளு என்னடானா கலியாணம் பண்ணப் போறென்னு காமெடி பண்ணுரான், நீயும் போற!ஐயகோ! இனி யாரு இருக்கா எங்களுக்கு, நீ போய்டைனா சில "வெட்டி"த்தனமான "புலி"களின் உறுமல் அடங்காமல் கேட்குமே!இதற்க்கு "ராயல்"தனமான "தம்பி"களின்சப்போர்ட் வேறு இருக்கும்,

mee first புகழ் தங்கையின் பின்னூடமில்லாமல் எப்படி உன்னால் உயிர்வாழ முடியும்,நெஞ்சு பொறுக்குதில்லையே!


உன்னைப் பாத்துதான் சங்கத்திற்கே வந்தேன்!(ஹிம் ஏன் உன்னைப் பார்த்துத்தான் தமிழே கத்துக்கிட்டேன்னு சொல்லேன்,அடங்க மாட்டெங்குறானையா இந்த அப்ரண்டீசு, அந்த ஆளே ஏதோ நல்லமனசு பண்ணி இப்போத்தான் எடத்தைக் காலி பண்ணூறான், இவன் பீலிங்ஸ் விடுரதைப் பாத்தா திரும்ப வந்திடுவான் போலாயே!--மீண்டும் அதே புலிதான் தல!)


அன்புடன்...
சரவணன்.

மின்னுது மின்னல் said...

வென்று(ம்) வருக !!!

தேவ் | Dev said...

சரா பாசக்காரா இம்புட்டு பெரிய பின்னூட்டமாஅ? வேணாம்ய்யா கண்ணு கட்டுதுப்பா...

மின்னலு - நன்றிங்க

tamil10