Tuesday, June 12, 2007

பல்லேலக்கா பல்லேலக்கா - THE PREVIEW

சிவாஜியில் சூப்பர் ஸ்டார் அறிமுகமாகும் பாடல் காட்சி பல்லேலக்கா..பல்லேக்கா ஸ்பெஷல் ப்ரீவியூ உங்களுக்காக...

பாடல்: நா. முத்துகுமார்
பாடியது: பாடும் நிலா பாலு, ரைஹானா, பின்னி

பல்லே லக்கா பல்லே லக்கா



Female Chorus:

சூரியனோ...சந்திரனோ...யாரிவனோ..
சட்டுன்னு சொல்லு...
சேர பாண்டிய சூரனும் இவனோ...
சொல்லு சொல்லு...சட்டுன்னு சொல்லு..
(சூரியனோ... )

பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கேட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ.....

Male Chorus :

ஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
ஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா...
ஒட்டு மொத்த மக்களுக்கா...
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா...








Male:
காவிரி ஆறும், கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா?
ஒஹோ...தாவனி பெண்களும், தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா? நம்ம களத்து மேடு...
கம்மாகரை கரிசகாடு..
செம்மண் அள்ளி தெளிக்கும் ரோடு....

ஏய்...சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி...
படுப்படு படுவென போர்த்திய புல்வெளி...
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி...
சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி...
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி...
கடகட கடவென கடக்கிற காவிரி...
விறுவிறு விறுவென மடிக்கிற வெற்றிலை...
முறுமுறு முறுமுறுவென முறுக்கிய மீசைகள்...
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
(சூரியனோ..)









சரணம் 1:

Male:
எலேய்...
கிராமத்து குடிசையில கொஞ்ச காலம் தங்கி பாருலேய்...
கூரையின் ஒட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிபாருலேய்...
கூவும் செல் போனின் நச்சரிப்பை அணைத்து ,
கொஞ்சம் சில் வண்டின் உச்சரிப்பை கேட்போம்...
வெறும் காலில் செருப்பின்றி நடந்து ,
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்...
மழலைகள் ஆவோம் !

Female:
ஆல மரத்துக்கு ஜடைகள் பின்னிதான் பூக்கள் வைக்கலாமேய்...

Male :
ஊர் ஓரம்...அய்யனாரிடம் கத்தி வாங்கிதான் பென்சில் சீவலாமேய்...
( ஏய்...பல்லே லக்கா )













சரணம் 2:

Male:
ஏலேய்..லேய்..
அஞ்சறை பெட்டியில ஆத்தவோட ருசியிருக்கும்...
அம்மியில் அரைச்சு ஆக்கிவெச்ச நாட்டு கோழி பட்ட கெளப்பும்...

ஏலெய்..
ஆடு மாடு மேல உள்ள பாசம்..
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்..
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்...
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்..
மண்ணு எங்கும் வீசும்...

Female:
பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடி போகும்!

Male:
பங்காளி..பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்..
( ஏய்...பல்லே லக்கா )





COOL !!!!!!!!!!!!!!!!!!!!!


சிவாஜி கவுண்ட் டவுண் ஆரம்பம்

13 comments:

ILA (a) இளா said...

அதாவது உலகத்துல கருத்தை காப்பி அடிச்சு பார்த்து இருக்கேன், பதிவை காப்பி அடிச்சு இப்பதான்யா பார்த்து இருக்கேன். Original is Here

G.Ragavan said...

// ILA(a)இளா said...
அதாவது உலகத்துல கருத்தை காப்பி அடிச்சு பார்த்து இருக்கேன், பதிவை காப்பி அடிச்சு இப்பதான்யா பார்த்து இருக்கேன். Original is Here //

இளாஜீ, காப்பியைக் காப்பியாகக் காண்பர் காப்பியைக் காப்பியாக ஆத்தா தவர்-னு தெருவள்ளுவர் சொல்லீருக்காருப்பு! அது தெரியாதா? NDMKல இருந்துக்கிட்டு இப்பிடிப் பேசலாமா?...பேசலாம். :)

ILA (a) இளா said...

Cool'a விட்டுடீங்களே, என் பதிவிலையும் இப்படி கேள்வி வந்துச்சு, அதான் அப்படியே தள்ளி விட்டாச்சு.
வ.வா.சவில் உண்மையாவே கவுண்டவுன் வெச்சு இருக்கோமே அதையும் சொல்லி இருக்கலாமே தேவ்?

மனதின் ஓசை said...

//அதாவது உலகத்துல கருத்தை காப்பி அடிச்சு பார்த்து இருக்கேன், பதிவை காப்பி அடிச்சு இப்பதான்யா பார்த்து இருக்கேன். Original is Here//

இளா .. அழூவாதப்பா.. பாட்ட
போட்ட சரி..தலைவர் படத்த போட்டியா??

நாகை சிவா said...

இளா நமக்குள்ள என்ன, காப்பியோ டீ யோ ஏதோ அடிச்சா சரி தானே!

நீங்க பாட்டு மட்டும் தானே போட்டீங்க... படம் காட்டுனீங்களா..

அதுவும் தலைவரோட அம்மன் இருக்குற மாதிரி....

நாகை சிவா said...

இளா அண்ணாத்த... நீங்க ஒரு தடவை மீள் பதிவு என்று சொல்லி வேற ஒருவரின் பதிவை உங்க பதிவில் போட்டதாக ஞாபகம் அதுக்கு பேர் என்னாங்கண்ணா....

களவாணி said...

உண்மையிலேயே கூல்தான். படங்கள் அருமை. எங்கேருந்துங்க இந்த மாதிரி படமெல்லாம் கெடைக்குது????

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ILA(a)இளா said...
அதாவது உலகத்துல கருத்தை காப்பி அடிச்சு பார்த்து இருக்கேன், பதிவை காப்பி அடிச்சு இப்பதான்யா பார்த்து இருக்கேன். Original is Here//

இளா...
இது உங்களுக்கே அடுக்குமா?
தேவ் போட்டா மாதிரி நீங்க ஒரு படமாச்சும் போட்டிருக்கீங்களா அந்தப் பதிவுல? அதுவும் குறிப்பா வயித்துல சிவாஜி படம்!

படங்காட்டி வாழ்வாரே வாழ்வார் - மற்றெல்லாம்
இடுப்பாட்டி பின் செல்பவர்
என்ற குறளை விவசாயி நீங்க மறக்கலாமா? :-)

பாட்டின் முக்கிய கருத்தான COOL என்பது ஒங்க பதிவில் இல்லவே இல்லை! அது தான் பாட்டின் சாராம்சம்!
எனவே தேவின் பதிவே ஒரிஜினல் என்பதே BOSS-இன் தீர்ப்பு!

Unknown said...

இளா என்னது சின்னப்புள்ள மாதிரி சிணுங்கல்.... பாருங்க எல்லாரும் உங்களைப் பார்த்து

பப்பி ஷேம் சொல்லுறாங்க....

Unknown said...

ஜி.ரா. அந்தக் கட்சி இன்னுமா இருக்கு... வாழ்க வளர்க NDMK

Unknown said...

வாங்க செந்தில் ப்ரிவீயூ காட்டிட்டு போனவன் இப்போத் தான் படம் பாத்துட்டு திரும்ப வந்துருக்கேன் சாரி லேட்டாயிருச்சு... நீங்க இன்னேரம் படமேப் பாத்துருப்பீஙக்ளே.. சிவாஜி எப்படி?

Unknown said...

மனதின் ஓசையாரே, தம்பி புலிக்குட்டி.. விடுங்கப்பா இளாவுக்கு சிவாஜி படத் தியேட்டர்ல்ல குருவி ரொட்டியும் குச்சி முட்டாயும் வாங்கிக் கொடுத்தா மறுபடியும் செட் ஆயிடப் போறார்.. நான் பாத்துக்குறேன்

Unknown said...

ரவி சங்கர் சும்மா உங்க தீர்ப்பைக் கேட்டு பதிவெல்லாம் அதிருதுல்ல.... COOL...

இளா இதுக்கு மேலயும் காப்பின்னு அடம் பிடிச்சா ஆபிஸ் ரூம் தான் உங்களூக்குச் சொல்லிட்டேன்.

tamil10