Wednesday, May 23, 2007

எம்.ஜி,ஆரையே எதிர்த்தவன்டா இந்த ஆபிசர்

"இந்த கத்திரி வெயில் இழுத்து வச்சு நம்ம தோலை இஸ்திரி போட்டுச் சோலியை முடிச்சுரும் போலிருக்கே.. என்ன சித்தப்பூ சாப்பிடக் கிளம்பல்லயா?"
சவுண்டு விட்டுகிட்டே பருத்தி வீரன் சித்தப்பூ சீட் பக்கம் வரும் போது மணி ஒண்ணே முக்கால்.

சித்தப்பு கம்ப்யூட்டர்ல்ல கண்டபடி மூழ்கி கிடந்தார். எதோ எக்ஸ்ல் ஷீட் திறந்து சார்ட் எல்லாம் போட்டு சென்னை சூட்டை இன்னும் கிளப்பிக் கொண்டிருந்தார்.

"சித்தப்பூ என்ன இது? ஏன் இப்படி?"

"கருத்துக் கணிப்பு நடத்தப் போறேன்.. இந்த வடக்கத்திகார பாஸ் இருக்கானே.. அவனை என்னப் பண்ணலாம்ன்னு நம்ம ஆபிஸ் மகா ஜனங்களைக் கேக்க்ப் போறேன்...

ஆப்ஷ்ன் 1 ஓட விட்டு அடிக்கணும்

ஆப்ஷன் 2 நிக்க வ்ச்சு அடிக்கணும்

ஆப்ஷ்ன் 3 கட்டி வ்ச்சு அடிக்கணும்

வா நீயும் வந்து கருத்துச் சொல்லிட்டுப் போ.."

"சித்தப்பூ எதுக்கு இந்தக் கொலவெறி?"

"என் ஆன் சைட் கனவுக்குக் காத்து புடுங்கி விடுறதே இந்த பான்பராக் மண்டையனுக்கு நாலு வருசமா வேலையாப் போச்சு.. ஒவ்வொரு அப்ரேசலிலும் ஒரே ஆப்பை ஒவ்வொரு இடத்துல்ல் வச்சுட்டுப் போயிடுறான்"

"அப்படி என்னப் பண்ணான்?"

"ஒவ்வொரு வாட்டியும் YOU HAVE TO IMPROVE YOUR COMMUNICATION அப்படின்னே ரெக்கார்ட் ஓட்டுறான்"

"அதுவும் ரைட் தானெ போன வாட்டி இங்கிட்டு வந்த அட்லாண்டிக் கிளையண்ட் கிட்ட WE ALL CALL NIC NAMES.. HE PARUTHI VEERAN THAT IS COTTON SOLDIER.. ME.. CHITTAPOO.. அப்படின்னு நீ சொல்ல...

""WHAT U SHIT BOO" அப்படின்னு அந்த ஆளு மூக்கைப் பொத்த... தெரியுமே உன் இங்கிலீஸ் அறிவு எங்களுக்கு."

"லேய் கோடு அடிக்கத் தானே சம்பளம் கொடுக்குறாய்ங்க.. இங்கே என்ன இங்கிலீஸ் பாடம் எடுக்கவா நாங்க மருதையில்ல மாறி மாறி பஸ் புடிச்சு வந்தோம்"

"நோ டென்சன் சித்தப்பு.. பாஸ் மேட்டருக்கு வா..."

"முந்தா நாள், மூணு நாள் குடும்பமா மூணாறு போயிட்டு ஊருக்கு வந்த அவன் வீட்டு ஏசி வேலை செய்யல்லன்னு என்னைய பிடிச்சுக் காய்ச்சுறான்ய்யா.. மனுசனா அவன்?"

"அவன் வீட்டு ஏசி புதுசா ஆச்சே!!! போன மாசம் வாங்குனது தானே.. உன் தம்பி கடையிலே வாங்கி நீ தானே சித்தப்பு கொடுத்த்.. ஏசி என்னாச்சாம்?"

"ஏசிக்கு எல்லாம் ஒண்ணூம் ஆகல்ல.. கரண்ட் இல்லப்பா அதான் ஏசி வேலை செய்யல்ல"

"அதுக்கு நீ என்னப் பண்ணுவ பாவம்"

"ஊருக்குப் போறதுக்கு முன்ன.. கரண்ட் பில் கட்டிடு ப்ளிஸ்ன்னு எங்க கிட்டச் சொல்லிட்டுப் போனான்.. நான்.... உனக்கேத் தெரியும் ப்ராஜக்ட் பிசியிலே மறந்து வேலையிலே மூழ்கிட்டேன்... அதை எல்லாம் ஒரு தப்புன்னு..." சித்தப்பு சொல்லும் போதே பருத்திவீரனோடு எங்களுக்கும் டென்சன் ஆகிப் போச்சு."

"யோவ் எதாச்சும் அசிங்கமாத் திட்டிற போறேன்.. போய்யா போய் பொழப்பைப் பாரு..." பருத்திவீரன் கிட்டத்தட்ட கையை ஓங்கிட்டான்.

"வேணாம் நான் எல்லாம் அரசியல்வாதி தெரியும் இல்ல.. கட்சிக்காரன்லேய்... அதுவும் மருத திமுககாரன் சொல்லிபுட்டேன்" சித்தப்பு சீற

"இங்கே பாருடாக் கூத்தை.. சித்தப்பு நீ எல்லாம் கட்சிகாரனா!!!.... அதுவும் திமுகவா!!! ஆளும் கட்சி பெயரைச் சொல்லி அல்வாக் கிண்டுற பார்த்தியா"

"லேய் சின்னப் பயலே நான் உண்மையாவே திமுக தான்லேய்.. இன்னிக்கு ஊருக்குப் போய் பேண்ட்ட கழட்டிப் போட்டேன்னு வை..."

"ஊர்ல்ல இருக்க நாய் எல்லாம் சேந்து ஒண்ணா தொரத்தும் உன்னிய வேற என்ன?"

"ஏலேய் சின்னப் பயலே பேண்ட்டை அவுத்துட்டு வேட்டியக் கட்டுனேன் வை.. அதுவும் கரை வேட்டி.. ஊர்குள்ளே எனக்கு எம்புட்டு மருவாதை தெரியுமா"

"சொல்லுறதை ஒழுங்காச் சொல்லு.. வேட்டி ஒழுங்காக் கட்டத் தெரியுமா ஓனக்கு?"

"மருதைக் காரன் கிட்ட பேசுற நீயு... காலேஜ்க்கே கரை வேட்டி கட்டிகிட்டு கக்கத்துல்ல பொஸ்தகத்தை வச்சுகிட்டு போனவன் நான்"

"தெரியுது... அந்தப் பொஸ்தகம் வாய் இருந்தா எப்படி கதறி இருக்கும்ன்னு"

"லேய் நான் உண்மையா திமுககாரன் தான்டா... எங்க தாத்தா.. அப்பா எல்லாம் கட்சிகாரங்கடா நம்புடா"

பருத்திவீரன் மோவாயைத் தடவிகிட்டு நின்னான்.

"சரி நீ திமுகன்னா நான் கேக்குற கேள்விக்கெல்லாம் கரெக்ட்டாப் பதில் சொல்லிரு பாப்போம்"

"திமுக கொடியிலே கருப்பு மேல வருமா சிவப்பு மேல வருமா?"

"கருப்பை மேல வச்சு கட்டுனா.. கருப்பு மேல வரும்...அதே மாதிரி சிவப்பை மேல வச்சு கட்டுனா சிவப்பு மேல வந்துரும்... இதெல்லாம் ஒரு கேள்வியாம் வென்று..."

"சித்தப்பு உன் பதிலை உங்க கட்சித் தலைமை கேட்டதுன்னு வை.. உன்னை மேல வச்சு கட்டி கீழே தீ வச்சுருவாங்க.. அப்புறம் நீ ராக்கெட் மாதிரி விண்வெளிக்கே ஆன் சைட் போயிருவே..."

"கொடியை விடு... மொழிப் போர் தெரியுமா?"

"பிச்சுருவேன் பிச்சு... மொழி போராம்.. எவன் சொன்னான் எடுபட்ட பைய.. போன வாரம் தான் குடும்பத்தோட சத்யம் போய் பார்த்தோம்... எங்க அப்பத்தாவுக்கு கூட ரொம்ப பிடிச்சு இருந்துச்சு...சோதிகா என்னமா நடிக்குது.... அய்யோ அந்த சொர்ணமால்யா ம்ம்ம்ம் ( ஜொள்ளூ வழிகிறது) மொழி சூப்பர் படம் அதைப் போய் போர்ன்னு எவன் சொன்னான்"

ஆவேசமாச் சாமியாடிய சித்தப்புவை மெதுவாப் பிடிச்சு இழுத்து வச்ச பருத்தி வீரன்.. மொழிப் போர் பத்திக் கேட்டேன்... உங்க கட்சி 60ல்ல பண்ண அரசியல் போராட்டம் பத்திக் கேட்டா அது தெரியல்ல.. பிரகாஷ் ராஜ் எடுத்த மொழியைச் சொல்லுற நீ..இது தான் லாஸ்ட்... இத்தோட நீ இனிமே அரசியலேப் பேசக் கூடாது தெரியும்ல்ல...

"ஏலேய்.. எனக்கு வேணும்ன்னா விசய ஞானம் இல்லாம இருக்கலாம்.. ஆனா நான் எல்லாம் களப்பணின்னு வந்துட்டா பின்னிருவோம்.தெரியும்ல்ல.. அஞ்சு வயசுல்ல எங்க ஊருக்கு தேர்தல் பிரச்சாரம் பண்ண வந்த எம்.ஜீ.ஆரையே நான் எதிர்த்தவன் தெரியுமா? சொன்னா நம்பணும்"

எம்.ஜி.ஆர் அந்தப் பேரைக் கேட்டதும் பருத்திவீரன் கூட் மைல்ட்டா ஜெர்க் ஆயிட்டான்னு தான் சொல்லணும்...

"ஆமா அப்போ எனக்கு அஞ்சு வயசு..."

சித்தப்பு கொசுவர்த்தி சுத்த ஆரம்பிச்சார்.. எல்லாரும் ஆர்வமா உக்காந்துட்டோம்.
பாதி சாப்பாட்டுல்ல வாயைப் பொழந்தவங்க பொழந்தப் படியே கதைக் கேக்க ஆரம்பிச்சாங்க..

"எங்க ஊர்ல்ல தேர்தல் வந்துச்சு.. ஊர் முழுக்க எல்லா சுவத்துல்ல உதயசூரியனும் இரட்டை இலையும் மாறி மாறி வரைஞ்சு இருந்தாங்க..."

அப்புறம்

"ஆட்டோ கட்டி தெருவில்ல புழுதி பறக்க ஓட்டுக் கேட்டு நிதம் பிரச்சாரம் பட்டையக் கிளப்பிச்சு..."

ம்

"அப்படி ஒரு நாள் நானும் எங்க கூட்டுச் சேக்காளிகளும் தெரு முனைக் கடையிலே கமர்கட்டும் கடலை முட்டாயும் கடன் சொல்லிச் சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது..

ஊர் முழுக்க பரபரப்பு ஆயிருச்சு...

எங்க ஆத்தாக் கிழவி கூட மேக்கப் எல்லாம் போட்டுகிட்டு ஊர் எல்லைக்குப் போய் நின்னுகிச்சு...
எங்கம்மாவுக்கு லேசா பயம் இருந்தாலும் அவிங்களும் பக்கத்து வூட்டு அத்தையக் கூட்டிகிட்டு அப்பாவுக்குத் தெரியாம எல்லைக்குப் போயிட்டாங்க...

ஊரே காத்து கிடந்துச்சு...

என் கையிலே இருந்த கடலை மிட்டாயும் கம்ர்கட்டும் தீரப் போற நேரம் வந்துசுடுச்சு....

ஒரே சவுண்டு.. சும்மா பெரிய குழாய் ஸ்பீக்கர் எல்லாம் வச்சு எம்.ஜி.ஆர் பாட்டு முழங்குது... தூரத்துல்ல சர் சர்ன்னு கார்களா வருது...

ஊரே பொங்குது....

ஒரு கார் கண்ணாடி திறந்து இருக்கு உள்ளே.... ஆமா எம்.ஜி.ஆர்....எல்லாரையும் பார்த்து சிரிச்சுகிட்டே டாட்டாக் காட்டிகிட்டேப் போறார்...

நான் திடமா முடிவு பண்ணிகிட்டேன் எனக்குள்ளே...

கார் கிட்ட வந்துருச்சு...

நான் அப்பவும் என் முடிவுல்ல பயங்கர உறுதியா இருக்குறேன்...

கார் பக்கமா வந்துருச்சு....

எல்லாரும் கத்துறாங்க...

நான் முடிவு பண்ணிட்டேன்.. எனக்குள்ளே இருந்த வீரம் என் முடிவை செயல் படுத்த இது தான் டைம்ன்னு சொல்லிருச்சு...

அப்புறம் என்ன கையை நல்லா மடக்கிட்டேன்...

கார் என் கிட்ட வந்துருச்சு...

எல்லாரும் நல்லா கையை விரிச்சு எம்.ஜி.ஆருக்கு டாட்டாக் காட்டுனாங்க..

அவ்ரும் பதிலுக்கு டாட்டா காட்டுனார்..

ஆனா நான் கடைசி எம்.ஜி.ஆருக்கு வரைக்கும் டாட்டாக் காட்டவே இல்ல தெரியும்ல அதுவும் எம்.ஜி.ஆர் டாட்டாக் காட்டியும் கூட நான் டாட்டாக் காட்டவே இல்ல...

சித்தப்பு சொல்லி முடிச்சுட்டு பெருமையா எங்களை எல்லாம் பாக்க....
அவ்வளவு தான் அம்புட்டு டிபன் பாக்ஸ்ல்லயும் மிச்சம் இருந்த மொத்தச் சோறும் சித்தப்பு மூஞ்சியிலே போய் பேஸ் க்ரீம் கண்க்காக உக்காந்துக்குச்சுங்கறதை நான் தனியாச் சொல்லணுமா என்ன?

53 comments:

Unknown said...

தேவ்
கலக்கிட்டீங்க... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது... சித்தப்பூவா இளவரசுவைப் போட்டா புகுந்து விளையாடிருவாரு

//சித்தப்பு உன் பதிலை உங்க கட்சித் தலைமை கேட்டதுன்னு வை.. உன்னை மேல வச்சு கட்டி கீழே தீ வச்சுருவாங்க.. அப்புறம் நீ ராக்கெட் மாதிரி விண்வெளிக்கே ஆன் சைட் போயிருவே..."//

:-))))

தொடருங்க களப் பணியை :-)


ஒரே ஒரு குறை... க்ளைமாக்ஸ் சொஞ்சம் சப்புன்னு இருந்தது...

சீரியஸா படங்களுக்கு காமெடி டிராக் எழுத முயற்சி செய்யுங்க...

நாகை சிவா said...

//"எம்.ஜி,ஆரையே எதிர்த்தவன்டா இந்த ஆபிசர்" //

சாட்ல பார்த்து நம்ம டி. விஜய. ரா. பத்தினு துள்ளி ஒடியாந்தேன்.... :-(

நாகை சிவா said...

ஏதோ ஒரு படத்தில் விவேக்(???) நான் எம்.ஜி.ஆர் க்கே டாடா காட்டியவன் என்று வந்த டயலாக் சைட்டா உல்டா அடிச்சிட்டீங்க போல.... ;-)

ஆரம்பம் அமர்க்களம்... அதிலும் கட்சிக்காரன்....

Anonymous said...

நல்ல வேளை,எம்ஜிஆர் உசிரோட இல்லை.இல்லையென்றால் நொந்து போய் இருப்பார் ;-)

நந்தா said...

//சீரியஸா படங்களுக்கு காமெடி டிராக் எழுத முயற்சி செய்யுங்க...//

தேவ் உங்களை வெச்சு காமெடி பண்ண பார்க்கிறாங்க.

உண்மையைச் சொல்லுங்க. நீங்கதானே சித்தப்பூ.

இலவசக்கொத்தனார் said...

தேவு தம்பி, எங்கயோ போயிட்டப்பா. என்னென்னவோ சொல்லத் தோணுது, உள்ளம் துடிக்குது. ஆனா அதெல்லாம் பப்ளிக்கா சொன்ன உன் கதி என்ன ஆவும் அப்படின்னு தெரியுங்கறதுனால தனி மடலா அனுப்பறேன்.

ஆனா ராசா, உம்ம ரேஞ்சே வேற லெவலா போயிக்கிட்டு இருக்கு. நல்லா இருடே!

களவாணி said...

எம்.ஜி.ஆரை எதிர்த்த ஆபிசர்! வாழ்க!!! வாழ்க!!!

எம்.ஜி.ஆரை எதிர்த்த ஆபிசர்! வாழ்க!!! வாழ்க!!!

ராஜா said...

okkanthu yosipingalo ???

doctor bill anuparan settlemet kasu anupunga ...

ஜி said...

good one Dev... kalakkitteenga :))

Vino said...

கலக்கிட்டீங்க தேவ்!!!

//ஆனா அதெல்லாம் பப்ளிக்கா சொன்ன உன் கதி என்ன ஆவும் அப்படின்னு தெரியுங்கறதுனால//

என்ன ஆகும் தலைவா?

என்ன ஆனாலும் சரி பருத்திவீரன் உஙகளை காப்பத்துவார்

Santhosh said...

கலக்கல் மாப்பி பின்னிட்டேபோ. இதுல மருதகார தம்பி நம்ம புது கைப்பு ராயலு தானே?

கப்பி | Kappi said...

:)))

கலக்கல்ண்ணா:))

மணிகண்டன் said...

கலக்கிட்டிங்க தேவ்..எம்.ஜி.ஆரையே எதிர்த்த உங்க தைரியத்தை பாரட்டறேன் :)

G.Ragavan said...

தேவு, சூப்பரப்பு...

அந்த ஷிட் யூ பூ....அட..அங்கங்க நகைச்சுவைய அள்ளித் தெளிச்சிருக்கீறய்யா..பிரமாதம். பிரமாதம்.

கதிரவன் said...

கலக்கல் காமடி தேவ் :-))

இத கலைஞர் படிச்சார்னா ,அவருக்கு இருக்கற டென்ஷன் நிச்சயம் கொஞ்சம் குறையும்

அனுசுயா said...

உண்மைய சொல்லுங்க சித்தப்பூ நீங்கதான. நல்ல காமெ‍டி வருதுங்க உங்களுக்கு. :)

Unknown said...

//கலக்கிட்டீங்க... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது... சித்தப்பூவா இளவரசுவைப் போட்டா புகுந்து விளையாடிருவாரு//

நன்றி நிலாக்கா

//சீரியஸா படங்களுக்கு காமெடி டிராக் எழுத முயற்சி செய்யுங்க...//

சீரியசாக் காமெடி எப்படி எழுதுறது அதை உக்காந்து இல்ல யோசிக்கணும்

//தொடருங்க களப் பணியை :-)//
உங்களை மாதிரி பெரியவங்க ஆசியோடு நிச்சயம் தொடருவோம்ல்ல

Unknown said...

//சாட்ல பார்த்து நம்ம டி. விஜய. ரா. பத்தினு துள்ளி ஒடியாந்தேன்.... :-( //

புலி அவர் ஆபிஸர் இல்லப்பா கமாண்டர்.. அந்தத் தலைப்புப் பார்த்தா அடிச்சுப் புரண்ட்டு வந்து சேர் கண்டிப்பா அது அவரைப் பத்தித் தானிருக்கும்... இது நம்ம ஆபிசர் பதிவுப்பா

Unknown said...

//ஏதோ ஒரு படத்தில் விவேக்(???) நான் எம்.ஜி.ஆர் க்கே டாடா காட்டியவன் என்று வந்த டயலாக் சைட்டா உல்டா அடிச்சிட்டீங்க போல.... ;-)//

சாரி அந்தப் படத்தை நான் பார்க்கல்ல அப்படின்னு நான் பொய் சொல்லமாட்டேன்... பட் ஆபிசர் பாத்தாரான்னு எனக்குத் தெரியாதுப்பா:))

//ஆரம்பம் அமர்க்களம்... அதிலும் கட்சிக்காரன்.... //
நன்றி புலி

Unknown said...

//நல்ல வேளை,எம்ஜிஆர் உசிரோட இல்லை.இல்லையென்றால் நொந்து போய் இருப்பார் ;-) //


எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தால் நம்ம ஆபிசர் இந்தக் கதையைச் சொல்லியிருக்கவே மாட்டார். நல்ல பிள்ளையாய் எம்.ஜி.ஆரூக்கு டாட்டா காட்டிட்டு போயிருப்பார் :)))

Unknown said...

//தேவ் உங்களை வெச்சு காமெடி பண்ண பார்க்கிறாங்க. //

அப்படிங்கறீங்க... ச்சே நிலாக்கா நல்லவிதமாத் தான் சொல்லுறாங்க நம்புங்க நந்தா...

//உண்மையைச் சொல்லுங்க. நீங்கதானே சித்தப்பூ. //

அய்யோ நந்தா நான் எம்.ஜி.ஆரைப் பாத்தப்போ எனக்கு ஏழு வயசு நான் எல்லாம் ஒழுங்கா அவருக்கு டாட்டாக் காட்டிட்டேன்ய்யா.. சித்தப்பூ காட்டல்ல... நான் 'அவர்' இல்லை

Unknown said...

//தேவு தம்பி, எங்கயோ போயிட்டப்பா. என்னென்னவோ சொல்லத் தோணுது, உள்ளம் துடிக்குது. ஆனா அதெல்லாம் பப்ளிக்கா சொன்ன உன் கதி என்ன ஆவும் அப்படின்னு தெரியுங்கறதுனால தனி மடலா அனுப்பறேன்.

ஆனா ராசா, உம்ம ரேஞ்சே வேற லெவலா போயிக்கிட்டு இருக்கு. நல்லா இருடே!//

தலைவரே நான் எங்கேப் போனாலும் என்றும் உங்கத் தொண்டன் தான்... இப்போச் சொல்லுங்க நம்ம யாருக்கு டாட்டாக் காட்டணும் யாருக்கு டாட்டாக் காட்டக் கூடாதுன்னு,.. நான் அதுக்கு அப்படியே கட்டுப்பட்டு நடக்கிறேன்... எக்குத் தப்பா எதாவது சொல்லிக் கட்டுப்போட்டு நடக்கவிட்டுராதீங்க தலைவரே,,,:))

Unknown said...

//எம்.ஜி.ஆரை எதிர்த்த ஆபிசர்! வாழ்க!!! வாழ்க!!!

எம்.ஜி.ஆரை எதிர்த்த ஆபிசர்! வாழ்க!!! வாழ்க!!! //

அடப் பாவி செந்திலா :(((

Unknown said...

//okkanthu yosipingalo ???

doctor bill anuparan settlemet kasu anupunga ... //


இதெல்லாம் யோசிக்கவே வேணாம் நம்ம சித்தப்பூ வீர வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் அவ்வளவு தான் அவர் கதையைச் சொல்லணுமன்னா சொல்லிக்கிட்டேப் போகலாம்...

ஆமா டாக்டர் பில்லுக்கு இங்கிட்டு எதுக்கு... சென்னைக் கச்சேரி மெடிக்கல் இன்ஸ்யூரன்ஸ் இன்னும் ஆரம்பிக்கல்லயே..

Unknown said...

//good one Dev... kalakkitteenga :)) //

Thanks Zee:)

Unknown said...

//கலக்கிட்டீங்க தேவ்!!!

//ஆனா அதெல்லாம் பப்ளிக்கா சொன்ன உன் கதி என்ன ஆவும் அப்படின்னு தெரியுங்கறதுனால//

என்ன ஆகும் தலைவா?

என்ன ஆனாலும் சரி பருத்திவீரன் உஙகளை காப்பத்துவார் //

நன்றி வினோ...

காப்பாத்துவாரா அவரா... பருத்திவீரரை அப்படி எல்லாம் நல்லவர் நாடு போற்றும் வலல்வர்ன்னு டக்குன்னு முடிவு கட்டிராதீங்க.. நம்மளை நாமேத் தான் காப்பத்திக்கணும் அதுவும் இந்த சித்தப்பு பருத்திவீரன் ரெண்டு பேத்துகிட்ட இருந்தும் :)))

Unknown said...

//கலக்கல் மாப்பி பின்னிட்டேபோ. இதுல மருதகார தம்பி நம்ம புது கைப்பு ராயலு தானே? //

வா பங்கு... ராயல் தம்பி ஆபிஸ்ல்ல ராயலுக்கு பருத்திவீரன்னு ஒரு பேர் இருக்குன்னு நான் கேள்விப்பட்டேன்.. உண்மையா அப்படின்னு ராயல் தம்பி தான் சொல்லணும். :00

Unknown said...

//:)))

கலக்கல்ண்ணா:)) //

காஞ்சிபுரத்து குணக் கோபுரமே வாய்யா.. வாழ்த்துக்கு நன்றி

Unknown said...

//கலக்கிட்டிங்க தேவ்..எம்.ஜி.ஆரையே எதிர்த்த உங்க தைரியத்தை பாரட்டறேன் :) //

ஆக எனக்கு திரியிலே தீயை வ்ச்சு விண்வெளியை என் கண்ணுல்ல ஓய மாட்டீங்கப் போலிருக்கே மணி...

எதித்தது சித்தப்பு..அதைப் பத்தி எழுதுணது மட்டும் தான் நானு..:)))

Unknown said...

//தேவு, சூப்பரப்பு...

அந்த ஷிட் யூ பூ....அட..அங்கங்க நகைச்சுவைய அள்ளித் தெளிச்சிருக்கீறய்யா..பிரமாதம். பிரமாதம். //

வாங்க ஜி.ரா.. நம்ம சித்தப்பு இன்னும் இந்தி பேசுன கதை எல்லாம் இருக்கு... வட நாட்டு பிள்ள ஒண்ணு ஒரு புராஜக்ட்க்கு இங்கிட்டு வந்தப்போ இந்தி படத்துப் போஸ்ட்டர் பார்த்து படிச்சே இந்தி பழகுனார நம்ம சித்தப்பு அந்தக் கதையையும் சொல்லுறேன்..

Unknown said...

//கலக்கல் காமடி தேவ் :-))//
நன்றி கதிரவன்

//இத கலைஞர் படிச்சார்னா ,அவருக்கு இருக்கற டென்ஷன் நிச்சயம் கொஞ்சம் குறையும் //

இது கொஞ்சம் ஓவரானப் பாராட்டுத் தான் எனக்கேத் தெரியுது.. இருந்தாலும் ஓ.கே அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன் :)))

Unknown said...

//உண்மைய சொல்லுங்க சித்தப்பூ நீங்கதான. நல்ல காமெ‍டி வருதுங்க உங்களுக்கு. :) //

எல்லாம் சித்தப்பு சகவாச தோசம்ங்கோ...

ஆனா சித்தப்பு நான் இல்லங்க.. அது மட்டும் உண்மை..:))

இலவசக்கொத்தனார் said...

//வட நாட்டு பிள்ள ஒண்ணு ஒரு புராஜக்ட்க்கு இங்கிட்டு வந்தப்போ இந்தி படத்துப் போஸ்ட்டர் பார்த்து படிச்சே இந்தி பழகுனார நம்ம சித்தப்பு//

தெலுங்கா இந்தியா? சரியாச் சொல்லு!! :))

தருமி said...

என்னங்க இது ?
நானும் இதே மாதிரி எம்.ஜி.ஆரை 'எதிர்த்தேன்.' ஆனா என்ன, எனக்கு அப்போ வயசு 20+; மதுரை நியூ சினிமா தியேட்டர் பக்கம் நடந்தது. ஆனா, நீங்க ரொம்ப பிஞ்சிலே பழுத்திட்டீங்க போலும்.

Dubukku said...

:))
இந்தப் பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.

http://www.desipundit.com/2007/05/24/aabisar/

இம்சை அரசி said...

கலக்கல் அண்ணா...

ROTFL :))))))))))))

இம்சை அரசி said...

எம்.ஜி.ஆரை எதிர்த்த வீர சித்தப்பு நீங்கதான்னு யார்கிட்டயும் நான் சொல்லவே மாட்டேனே... ;)

கதிர் said...

செம காமெடி தேவ். :))

கதிர் said...

இது பயங்கர காமெடியாக இருப்பதால்

மியூச்சுவல் பண்டிட்டில் இணைத்துள்ளேன்.

இப்படிக்கு
அசிஸ்டண்ட் டுபுக்கு

கதிர் said...

டுபுக்காரே கோச்சிக்கப்படாது

சும்மா தமாசுக்காக

உடன்பிறப்பு said...

நம்ம உதயசூரியனை எம்.ஜி.ஆருக்கு காட்டி இருக்கலாமே

Dubukku said...

தம்பி
//டுபுக்காரே கோச்சிக்கப்படாது
சும்மா தமாசுக்காக//

எதுக்கு கோச்சிக்கபடாது?
ஒன்னும் பிரியலையே....??

Unknown said...

//தெலுங்கா இந்தியா? சரியாச் சொல்லு!! :)) //

ஹம் ஆப் கே ஹை கோன்....
ஹம் ஆப் கே ஹை கோன்....

அப்படின்னு தான் சித்தப்பு மனப்பாடம் பண்ணிகிட்டு இருந்தார் அது இந்தி தானுங்களே கொத்ஸ்

Unknown said...

//என்னங்க இது ?
நானும் இதே மாதிரி எம்.ஜி.ஆரை 'எதிர்த்தேன்.' ஆனா என்ன, எனக்கு அப்போ வயசு 20+; மதுரை நியூ சினிமா தியேட்டர் பக்கம் நடந்தது. ஆனா, நீங்க ரொம்ப பிஞ்சிலே பழுத்திட்டீங்க போலும். //

வாங்க தருமி மருதையிலே ஒரு குரூப்பாத் தான் இருந்து இருக்கீய... ஆளுக்கு ஆள் இதே காரியத்தைப் பண்ணியிருக்கீங்களே...சித்தப்பு உங்க மாணவரான்னு விசாரிக்கணுமே... :)))

Unknown said...

//:))
இந்தப் பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.

http://www.desipundit.com/2007/05/24/aabisar/ //


நன்றிங்க டுபுக்கு சாரே

Unknown said...

//கலக்கல் அண்ணா...

ROTFL :))))))))))))


எம்.ஜி.ஆரை எதிர்த்த வீர சித்தப்பு நீங்கதான்னு யார்கிட்டயும் நான் சொல்லவே மாட்டேனே... ;) //

டாங்க்ஸ்மா தங்கச்சி.. சித்தப்பு வேறு நான் வேறு.. அவர் புகழ் பாடும் சிறு தொண்டன் மட்டுமே நான்...:))

Unknown said...

//செம காமெடி தேவ். :)) //

டாங்க்ஸ் தம்பி

Unknown said...

//இது பயங்கர காமெடியாக இருப்பதால்

மியூச்சுவல் பண்டிட்டில் இணைத்துள்ளேன்.

இப்படிக்கு
அசிஸ்டண்ட் டுபுக்கு //

ஆமா க்ரோத்தா டிவிடண்டாச் சொல்லிருங்கப்பா

Unknown said...

//
நம்ம உதயசூரியனை எம்.ஜி.ஆருக்கு காட்டி இருக்கலாமே //

இந்த ரோசனை ஏன் எனக்கு உதிக்கமாப் போயிருச்சு.. இதுக்குத் தான் உடன்பிறப்பு வேணும்ங்கறது..:)))

Unknown said...

//இது பயங்கர காமெடியாக இருப்பதால்

மியூச்சுவல் பண்டிட்டில் இணைத்துள்ளேன்.

இப்படிக்கு
அசிஸ்டண்ட் டுபுக்கு //

தம்பி
//டுபுக்காரே கோச்சிக்கப்படாது
சும்மா தமாசுக்காக//

எதுக்கு கோச்சிக்கபடாது?
ஒன்னும் பிரியலையே....??

இதான் மேட்டர் டுபுக்கு சாரே

Anonymous said...

இப்படி ஏதாவது மேட்டர் இருக்கும்ன்னு தேடினேன் கண்ணுல சிக்கல...நன்றி க்ளியர் பண்ணினதுக்கு.

தம்பி - ஹைய்யோ இதுக்குத் தானா..:)) நோ டென்ஷன்...

Syam said...

ROTFL....

சித்தப்பு இம்புட்டு வீரனா....:-)

ராஜா said...

தேவ்,

பயர்பாக்சில் நன்றாக தெரிந்த உங்கள் பதிவு புதிய உருமாற்றத்திற்கு பிறகு சரியாக தெரியவில்லை, கவனிக்கவும்.

tamil10