வழக்கமான தேர்தல்கள் போல அல்லாமல் எந்த ஒரு அலையும் இல்லாமல் ஆழமாம அமைதியாக இந்த பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது...தமிழகத்தில் இந்த முறை இன்னார் தான் வெல்வார் என உறுதியாக கூற முடியாத படி இரண்டு கழகங்களும் சம பலத்தோடு களம் கண்டு மோதி முடித்துள்ளன...
திமுக தன் சொந்த வாக்கு வங்கி பலம்...ஒரளவு கூட்டணி வாக்கு வங்கியின் துணை பலம்..மற்றும் ஏராள தாரள வைட்டமின் 'ப' கொண்டு களம் சந்தித்த தேர்தல் இது..திமுகவைப் பொறுத்த வரை இந்த தேர்தல் ஒரளவு விசேஷமானது..கழகத் தலைவர் கலைஞர் பெரிதும் பிரச்சாரத்திற்கு சென்று உடன்பிறப்புக்களை உற்சாகப்படுத்த முடியாத ஒரு சூழல்..திமுக்வின் எதிர்காலத் தலைவர் எனப் பல காலமாக இளவரசராக வலம் வரும் தளபதி மு.க.ஸ்டாலின் பெருமளவு பிரச்சாரப் பாரம் மட்டுமன்றி களகண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ள தேர்தல் இது...அவருக்கு இது ஒரு சவால் எனவே கூறலாம்.. கலைஞரின் மதுரை மைந்தன் அழகிரி கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பேற்ற பின் சந்திக்கும் முதல் தேர்தல்...திமுகவைப் பொறுத்தவரை கலைஞருக்கு அடுத்த தலைமுறை முன்னின்று சந்திக்கும் அதி சவாலானத் தேர்தல் இது...சிங்கத்தின் வாரிசுகளின் திறன் வெளிப்பட வேண்டிய தேர்தல் இது...
கள அரசியல் சூழல் அறிந்தவர்கள்..தொடர்ந்து கவனிப்பவர்கள்...தளபதியின் இந்தத் தேர்தல் அணுகுமுறையை வெகுவாக பாராட்டவே செய்கிறார்கள்...திமுக உடன் பிறப்புக்களுக்கும் தளபதியின் இந்த் மாற்றம் தித்திப்பாகவே இருக்கிறது... மதுரைக்காரரின் உற்சாகமும் உத்வேகமும் பல இடைத்தேர்தல்கள் மூலம் நாடறிந்த செய்தி...
கனிமொழி, தயாநிதி என திமுகவின் இளைய முகங்கள் வெகு சிரத்தையாய் தேர்தல் களத்தில் வளைய வந்தது திமுகவின் தேர்தல் அணுகுமுறையை பெருவாரியாக மாற்றி அமைத்து இருந்தது...திமுகவின் வரலாறு அறியாத சென்னைத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு "ப" வைட்டமின் நல்ல முறையில் அளிக்கப்பட்டதாய் களத்தில் இருந்து வரும் செய்திகள் திமுகவின் வெற்றி வேட்கையை உறுதி செய்கிறது... வந்த வைட்டமின்கள் ஒரே இடத்தில் ஒதுக்கப்படாமல் ஓட்டுக்களாய் வடிவெடுக்க உடன்பிறப்புக்கள் உண்மையாகவே பல இடங்களில் உழைத்துள்ளனர்..
இலங்கைப் பிரச்சனை திமுகவிற்கு எதிரான ஒரு அஸ்திரமாக எதிரணியால் பயன்படுத்தப்பட்டாலும்..உண்மையில் அது தமிழக வாக்காளர்களில் பெரும் பகுதியினர் மத்தியில் ஒரு பெரிய விஷயமாகவே எடுபடவில்லை...
திமுகவுக்கு எதிராக அதிமுகவின் கூட்டணி பலம்...வாக்கு கணக்கு...பத்திரிக்கைகளின் பலமான ஆதரவு..அதுவும் குறிப்பாக வட இந்திய தொலைக்காட்சி மற்றும் இணையங்களின் ஆதரவு இல்லாத ஒரு நிலைமையை உருவகப்படுத்துவதாகத் தெரிகிறது...திமுக அரசின் பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்பதே உண்மை நிலவரம்...
திமுக தலைவர் கருணாநிதி மீதும் அவர் தம் குடும்ப அரசியல் மீதும் மக்கள் தனிப்பட்ட முறையில் வெறுப்பும் கோபமும் கொண்டிருப்பது உண்மை என்றாலும்..திமுக அரசின் செயல்பாடு குறித்த பெரிய அங்கலாய்ப்பு குரல்கள் கேட்கவில்லை என்பது உண்மை...
ஒரு கழகத்தின் மீது உள்ள திருப்தியில் இன்னொரு கழகத்தை ஆதரிக்கும் தமிழக மக்கள் இந்த முறை எந்த ஒரு பெரிய அதிருப்தியையும் சந்திக்காத நிலையில்...கலைஞர் மற்றும் அவர் குடும்பத்தினர் செய்யும் அரசியல் மீது கொண்டுள்ள கோபத்தை திமுக என்ற கட்சியின் மீதும் அது நடத்தி வரும் அரசு மீதும் காட்டுவார்களா என்பது பில்லியன் டாலர் கேள்வி...
நான் சொல்லுவது முரணாக கூட அமையலாம்..ஆனாலும் அதிக அளவில் ஓட்டுப் பதிவு...களத்தில் கடைசி நேரம் வரை ஓயாது திமுககார்கள் காட்டிய சுறுசுறுப்பு...இதை எல்லாம் வைத்து பார்த்தால் திமுக கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு எனப் படுகிறது,,,,
எல்லா யூகங்களும் இன்னும் 12 மணி வரைத் தான் தாங்கும்.. நம்ம பங்குக்கும் கச்சேரி வைச்சாச்சு...
இனி முடிவுகளை எதிர்நோக்குவோம் பாஸு
6 comments:
திமுக கூட்டணிக்கு, பட்டை நாமம் மட்டுமே!
உங்கள் வாய்க்கு சரக்கரை தான் போட வேண்டும்
very good
திமுக கூட்டணி அதிக இடங்களில் முந்தும் ஆரம்ப அறிகுறிகள் தெளிவாக தெரிகின்றன..போக போக என்னா ஆகுதுன்னு பார்ப்போம்
// manippakkam said...
திமுக கூட்டணிக்கு, பட்டை நாமம் மட்டுமே!
//
???!!!!
;))
Post a Comment