Saturday, May 16, 2009

மொத்தமாக வென்றது அதிமுக தான்

கருத்துக் கணிப்புகளை மீறி திமுக கூட்டணி இந்த நாடாளுமன்றத்தில் வென்றது வரலாறு ஆகிவிட்டது....தமிழகத்தில் உண்மையில் வென்றிருப்பது யார் என ஆழமாக யோசித்துப் பார்த்தால்...மறுக்கமுடியாத உண்மை தெரிய வரும்....ஆம் அதிமுக தான் வென்றிருக்கிறது.....

தென் மண்டலப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற பின் அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி சொன்ன சொல் என்ன....
தென் மண்டலத்தில் திமுக நிச்சயம் ஜெயிக்கும்.....சொன்னதைச் செய்தும் காட்டி விட்டார்...

வட தமிழ்நாட்டில் குறிப்பாக திமுகவின் கோட்டையாம் தென்சென்னையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமு கழக வேட்பாளர் மண்ணைக் கவ்வியது போலவோ...திருவள்ளூரில் திமு கழகம் வீழ்ந்தது போலவோ... கொங்கு மண்டலத்தின் கரூரில் முக்கிய வேட்பாளர் தோல்வி கண்டதைப் போலவோ தென்மண்டலத்தில் திமுக எங்கும் மூக்கு உடைபடவில்லை... சும்மா நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது திமுக தென்மண்டலத்தில்... மதுரையில் அழகிரியும் சாதனை வெற்றி பெற்றுள்ளார்...

அதான் சொல்லுறோம் மொத்த வெற்றி பெற்றிருப்பது அழகிரி திமுக தானே.... அதாங்க அதிமுகன்னு கமுக்கமாச் சொன்னோம்..


வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...அப்படியே மக்களுக்கும் எதாவது நல்லது செய்யுங்க மக்கா..நல்லா இருப்பீங்க...

16 comments:

அபி அப்பா said...

சத்தியமா இதே மேட்டரை தான் இப்ப டைப்பிகிட்டு இருந்தேன். மிகசரியா சொன்னீங்க தேவ்!

கோபிநாத் said...

\\அதான் சொல்லுறோம் மொத்த வெற்றி பெற்றிருப்பது அழகிரி திமுக தானே.... அதாங்க அதிமுகன்னு கமுக்கமாச் சொன்னோம்..
\\

அண்ணே...வார்த்தையில விளையாடிங்க ;)))

கலக்கல் ;))

இராம்/Raam said...

அண்ணே..... :))

ILA said...

ங்கொய்யால

தேவ் | Dev said...

//அபி அப்பா said...
சத்தியமா இதே மேட்டரை தான் இப்ப டைப்பிகிட்டு இருந்தேன். மிகசரியா சொன்னீங்க தேவ்!
//
நீங்களே ஒத்துகிட்டதுல்ல எனக்கு சந்தோஷம் தான் அபி அப்பா..திமுகவின் எதிர்கால தலைமையில் வியத்தகு மாற்றங்கள் நிகழலாம் போலிருக்கே...

தேவ் | Dev said...

// கோபிநாத் said...
\\அதான் சொல்லுறோம் மொத்த வெற்றி பெற்றிருப்பது அழகிரி திமுக தானே.... அதாங்க அதிமுகன்னு கமுக்கமாச் சொன்னோம்..
\\

அண்ணே...வார்த்தையில விளையாடிங்க ;)))

கலக்கல் ;))
//

எதோ நம்ம லெவலுக்கு முடிஞ்ச விளையாட்டு கோபி :)))

தேவ் | Dev said...

// இராம்/Raam said...
அண்ணே..... :))
//

ஹி..ஹி....!!!!

தேவ் | Dev said...

// ILA said...
ங்கொய்யால
//

சொல்லுங்க அய்யாலே ....:)))

இருமேனிமுபாரக் said...

இதுக்கு பெயர் தான், சொல்லி அடிக்கிறது... அழகிரி தான் ஜெயிக்கப் போவதை முன்னரே சொல்லி விட்டார். அது எப்படி என்று அவருக்கும் மதுர மக்களுக்கும் மட்டும் தான் தெரியும் மக்கா... கயவாளி கம்யுனிஸ்டை அடிச்சாரு பாரு அதுக்கே ஒரு ஸல்யுட் வைக்கலாம்.

Anonymous said...

ராமதாஸ் ஒரு செத்த பாம்பு பாவம் அதை அடிக்காதீர்கள்

ஆயில்யன் said...

//மொத்தமாக வென்றது அதிமுக தான்"//

உண்மைதான் பட் அதுல கூட அஞ்சா நெஞ்சனுக்கு கொஞ்சம் சோகம்தானாம் - ஒன்றரை லெட்சம் ஓட்டுதான் டிபரென்ஸ் காமிச்சிருக்கோம் ஏன் 3 லட்சம் வர்லைன்னு பீலிங்காயிட்டாராம் !

எது எப்படியோ இனிவரும் காலத்தில் தலைநகர மாற்ற வாய்ப்புக்கள் இருக்கும் போல...! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தமிழகத்தின் அடுத்த முதல்வரை அடையாளம் காட்டியுள்ள இந்தப் பதிவு வரலாற்றில் இடம் பெறப் போகிறது! :)))

அபி அப்பா - சரி தானே? :))

BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...

எப்பிடிங்ண்ணா இப்ப்டி எல்லாம் புகுந்து விளையாடறீங்க..

பட்டயக் கிளப்பிடீங்க போங்க..

Anonymous said...

சூரியனை பார்த்து நாய்கள் குரைத்தால் சூரியனுக்கு ஒன்றும் ஆக்கப்போவதில்லை பாவம் நாய்கள்

Anonymous said...

அன்றைக்கும் இன்றைக்கும் நக்கி பிழைப்பவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும் அன்று எம்ஜிஆரை நக்கி பிழைத்தார்கள் இன்று ஜெயலலிதாவை

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

நல்லா கிளப்பறாய்ங்கய்யா பீதிய.. :))

tamil10