Tuesday, October 31, 2006

மனதோடு மழைக்காலம்

வணக்கம் மக்கா,

தீவாளி வந்து செலவு புயல் அடிச்சு ஓயஞ்சு அதனால பர்ஸ்,பாக்கெட் மற்றும் இதர துட்டு தங்கும் இடங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு அதற்கான நிவாரணங்கள் தேடி மனம் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நேரத்துல்ல... மறுபடியும் புயல்ன்னு ரேடியோ டி.வியில்ல எல்லாம் சொன்னா மனம் என்ன பாடு படும்ய்யா கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க...

நம்ம ஆபிஸ்க்கும் நான் குடியிருக்க வீட்டுக்கும் கிட்டத்தட்ட ஒரு 10 - 12 கிலோமீட்டர் தூரம் இருக்கும்... நடுவில்ல அடையாறுன்னு ஒரே ஒரு ரிவர் இருக்கு..லண்டனுக்கு தேம்ஸ் மாதிரி தென்சென்னைக்கு இந்த அடையார்...( இதை யாராவது லண்டன் மக்கள் வாசிச்சா கண்டபடி உணர்ச்சி வசப் படக்கூடாது ஆமா.. அடையார்ல்ல ஜெயிச்ச கவுன்சிலர் ஓட்டுக் கேட்டு வரும் இதைச் சொன்னப்போ நாங்க யாருமே டென்சன் ஆகல்ல தெரியுமா?)

சரி நான் என் கதைக்கு வரேன்ங்க.. இந்த் ஒரே ஒரு ஆறு தான் இருக்கு.. ஆனாப் பாருங்க ஒரு அரை மணி மழை ரொம்ப பொங்கி புனல் எடுத்துச்சுன்னு வைங்க... அது என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியல்ல எங்க வீட்டுல்லருந்து அடையாறு போறதுக்குள்ளே ஒரு இருபது இருபதைஞ்சு ஆறு உற்பத்தி ஆயிடுதுங்க...

இங்கேத் தான் இந்தப் பதிவைப் படிக்கிற விஞ்ஞானிகள் ரொம்ப ஆழமாக் கவனிக்கணும்

மழை வந்தாலும் வெயில் அடிச்சாலும் நான் ஆபிஸ்க்குப் போறது என்னமோ என் பியரோ பைக்ல்ல தான்.. ஆனாப் பாருங்க வெயில்ல ரோடு மாதிரி காட்சி தர்ற இடங்கள் எல்லாம் மழை பெஞ்சா ஆறு மாதிரி மாறிடுது.. அந்தச் சமயத்துல்ல நம்ம பைக் பாவம் ஆத்துல்ல இறங்கவே பதறி உதறும்... அப்போ அதோட என்ஞின் கொடுக்குற அந்த சவுண்ட்டைக் கேட்டா...

"ஏன்டா படிச்சவன் தானே நீயு... அறிவிருக்கா ஓனக்கு நிலத்துல்ல ஓடுற என்னை இப்படி தண்ணியிலே இறக்கி கொல்லப் பாக்குறீயே கிராதகா.. இதுல்ல 24ஆம் புலிக்கேசி மாதிரி என் முதுகுல்ல ஓக்காந்துகிட்டு வேற இருக்க...பாவி.. படுபாவிபயலே..."

இந்த சவுண்டையும் மீறி ஆத்துல்ல இறங்கி ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்கி காலைத் தூக்கி கிராஷ் கார்ட்ல்ல வச்சிகிட்டு ஜொய்ங்ன்னு முன்னேறுவேன்ங்க... இஞ்சின் சவுண்ட் ஆத்து தண்ணி நாம் போட்டுருக்க அம்சமான ஷூ பேண்ட் எல்லாத்து மேலயும் காறித் துப்பும் பாருங்க... சும்மாத் தனியா எல்லாம் துப்பாது.. அங்கிட்டு இங்கிட்டு திறந்துப் பொங்கி வழியுற கழிவுத் தண்ணியோடு கூட்டணிப் போட்டுத் துப்பும்.

அடப் பொட்டித் தட்டி வெள்ளைக் காரனுக்கே எடுப்பு வேலைப் பாத்து இருக்க அம்புட்டு மானத்தையும் என்னிக்கோத் தொலைச்ச நமக்கு இந்த துப்பல்ஸ் எல்லாம் சாதாரணம்ப்பா...

ஆங் விஞ்ஞானிகளே உங்களைப் பதிவைப் படிக்கச் சொல்லிட்டு நான் நொந்தக் கதையைச் சொல்லிகிட்டு இருந்தா எப்படி?

இப்படி ஒரு ஆறு தாண்டி மறு ஆறு தாண்டி பாவம் நம்ம பைக் ஒரு கட்டத்துல்ல என்னோட அராஜகம், கொடுமை, முடிச்சவிக்குத் தனம் எதையும் சகிக்க முடியாம..

"போடா நீயும் ஒன்னோட எனக்கு இருக்க சவகாசமும்ன்னு ஒரு பெரிய உறுமல் போட்டுட்டு... புகையை வெளியே என் மொகம் இருக்கத் திசைப் பார்த்துக் கக்கிட்டு "காந்திகிரி" பண்ண ஆரம்பிச்சுடுது.. ( அதான்ங்க ஒத்துழையாமை இயக்கம்)

அதை எம்புட்டு கெஞ்சியும் கொஞ்சியும் பயனில்லாமல்.. செல்லத்தைக் கையிலேடுத்து ( செல் போன் தான்) " Hello I am stuck in the Rain.. u know the roads are flooded.. heavy traffic.. my bike has developed rainophobia.. அப்படின்னு பைக் டாக்டருக்குப் படிச்சவன் மாதிரி அளந்து விட்டுட்டு முடிவா I Will coming a lil late to the aaapis.." ன்னு சொல்லுவேன்.

ஒவ்வொரு வாட்டி மழை வரும் போது இது தான் நடக்குது.. இது தான் நடக்கும் போல இருக்கு...

இது தீருவதற்கு ஒரு வழி சரியான சாலைகள், நகரத்தின் கட்டமைப்பினை மழையை எதிர்கொள்ளும் அளவிற்கு தயார் செயவது.. இதையெல்லாம் அரசியல்வாதிங்க.. கழகத்துக்காரங்கத் தான் செய்யணும் செஞ்சிருக்கணும்.. அவிங்க செய்யல்ல.. அதுக்குண்ணு நாம சும்மா இருக்க முடியுமா சொல்லுங்க...

இங்கே தான் மகாகனம் பொருந்திய விஞ்ஞானிகளே நீங்க வர்றீங்க...

இதைச் சமாளிக்க இன்னொரு வழி நீர்/நிலம் இரண்டுல்லயும் ஓடுற பைக் கண்டுபிடிக்கிறது..

அது உங்க கையிலேத் தான் இருக்கு.. எப்படியாவது அப்படி ஒரு பைக் கண்டுபிடிச்சு சல்லிசா என்னிய மாதிரி ஏழை பாழை வாங்கி ஓட்டுறதுக்கு வசதியான விலையிலே மார்க்கெட்ல்ல விட்டீங்கன்னா.. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்லல வண்டிக் கடன் வாங்கி ஓட்டிப் பொழைச்சுக்குவோம் சாமி..

நடு ரோட்டுல்ல நிக்கும் போது என்னப் பொழுதுபோக்கு காதுல்ல எப்.எம் ரேடியோ தான்.. அதுல்ல போட்டாங்கப்பா ஒரு பாட்டு.. படம் பேர் மனதோடு மழைக்காலமாம்... அதான் தலைப்பா வச்சிட்டேன் நல்லாயிருக்கா...


Ok Chennaittes enjoy the rain...hehehe

10 comments:

நாகை சிவா said...

என்ன போர்வாள் நீங்க....

உங்க வண்டிய நீங்க சரியா மெயிடன் பண்ணல போல.... நம்ம பஜாஜ் செல்லம் எந்த ஆத்துலயும் கொஞ்சம் நிந்தி வருவான். அதுவும் தி.நகர், அம்பத்தூர், பாடி ஏரியாவில், 4 அடி தண்ணியிலும் சும்மா அசராம வருவான். இதுல இன்ன ஒரு மேட்டர் என்னனா, ஒவ்வொரு ஆத்தை தாண்டியும் வண்டிய ஸ்டார்ட் பண்ணி தர ஒரு கோஷ்டி நிக்கும். அந்த கோஷ்டிக்கு நம்ம ஆள் இது வரைக்கும் வேலை வச்சதே இல்ல

நீங்க உங்க வண்டிய பிகர் மாதிரி மெயிடன் பண்ணனும் சாமி

இலவசக்கொத்தனார் said...

என்ன நட்சத்திரம் கட்டமைப்பு பத்தி பேசிட்டாரு இப்போ நீங்களா? அதான் இப்போ மாடி ரயில் எல்லாம் இருக்கில்ல அதுல ஏறி போக வேண்டியதுதானே. இருக்கறதை ஒழுங்க உபயோகிச்சாதானே அவங்களும் அடுத்தது கட்ட பார்ப்பாங்க. அதவிட்டுப்புட்டு இப்படி பைக்கில்தான் பாத்ரூம் கூட போவேன்னு அடம் புடிச்சா எப்படி?

ஜொள்ளுப்பாண்டி said...

தேவண்ணா எனக்கும் இதே மாதிரி நீர் நிலத்திலே ஓடுரமாதிரி பைக் இருந்தா நல்லா இருக்குமேன்னு யோசனை பண்ணிகிட்டு இருந்தேன் நீங்க சொல்லிபுட்டிங்க.:))

ஆனா நம்ம சிவாத்தம்பி சொல்ற மாதிரி வண்டிய பிகர் மாதிரி மெய்ண்டெய்ண் பண்ணினா சும்மா கும்முன்னு இருக்கும் ( No silly fellings plz ) வண்டியத்தேன் சொல்லுறேன் ;)))

கைப்புள்ள said...

//நடு ரோட்டுல்ல நிக்கும் போது என்னப் பொழுதுபோக்கு காதுல்ல எப்.எம் ரேடியோ தான்.. அதுல்ல போட்டாங்கப்பா ஒரு பாட்டு.. படம் பேர் மனதோடு மழைக்காலமாம்... அதான் தலைப்பா வச்சிட்டேன் நல்லாயிருக்கா...//

தலைப்பு நல்லாருக்கு. பாட்டு நல்லாருந்துச்சா?

Unknown said...

//நீங்க உங்க வண்டிய பிகர் மாதிரி மெயிடன் பண்ணனும் சாமி //

பிகர் தானே ஒண்ணுக்கு ரெண்டாவே மெயின்டேன் பண்ணுவேன்ன்னு தல சொன்ன மாதிரி நானும் சொல்லுவேன்னு நினைச்சீயா புலி.. நெவர்... வண்டியத் தள்ளிகிட்டே போறேன் விடு.. நீ வில்லங்கத்தை டெகரேட் பண்ணி வீட்டுக்கு அனுப்புற வேலைப் பாக்குற ஆளா இல்ல இருக்க?!!

Unknown said...

//அதான் இப்போ மாடி ரயில் எல்லாம் இருக்கில்ல அதுல ஏறி போக வேண்டியதுதானே. //

ஆகா மாடியிலே தண்ணி வந்த கதையெல்லாம் இவருக்குத் தனி பதிவு போடணும் போல இருக்கே

Unknown said...

//இப்படி பைக்கில்தான் பாத்ரூம் கூட போவேன்னு அடம் புடிச்சா எப்படி? //

கொத்ஸ் என்ன இது.. நான் எப்போ பைக்ல்ல பாத்ரூம் போறதாச் சொன்னான். சின்னப் புள்ளல்ல இருந்து அதெல்லாம் நான் ஒழுங்கா டாய்லெட்ல்ல தான் போவேனாக்கும்... :)))

Unknown said...

//தலைப்பு நல்லாருக்கு. பாட்டு நல்லாருந்துச்சா? //
கேக்க சுமார் தான் ஆனா அந்தச் சாலக்குடி அதிரம் பள்ளி அருவி காட்சிகள் சன் ம்யூசிக்ல்ல பார்க்கும் போது குளிர்ச்சியோ குளிர்ச்சி

Santhosh said...

Good ones dev..

//"குடிகாரன் பேச்சு... விடிஞ்சாப் போச்சு..." //
sontha selavula suniyam pola iruku :))

Unknown said...

Thank u Santhosh :)

tamil10