Wednesday, January 10, 2007

கொத்தனார் கொண்டாட்டம்

வணக்கம் மக்கா,

முக்கியச் செய்திகள் வாசிப்பது கச்சேரிகாரன்.

இன்று அதிகாலை நியூயார்க், வாஷிங்க்டன் உட்பட்ட முக்கிய அமெரிக்க நகரங்களிலும், லண்டன், பெர்லின், ஜுரிக், ரோம், பாரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களின் முக்கிய வீதிகளிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும், தமிழ் நாட்டின் பெருநகரங்களில் இருந்து குக்கிராமங்கள் வரையில் தமிழ் மணக்கும் பல இடங்களில் இந்த போஸ்ட்டர் ஒட்டப்பட்டிருந்தது....




போஸ்ட்டர் குறித்தச் செய்திகளை எமது சிறப்பு நிருபர் கில்லி பையன் அவ்வப்போது ஓசி செலபேசிகள் மூலம் நமக்கு அளித்தப் படி உள்ளார்.

வலையுலகில் மட்டுமின்றி இதுவரை மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட, கண்டுபிடித்ததாய் சொல்லப்ப்டும் அனைத்து கிரகங்களிலும் இந்த போஸ்ட்ர்கள் தென்படுவதாய் அப்போலோ விண்கலப் பயணிகளும் தெரிவித்து உள்ளனர். நாசா விஞ்ஞானிகளும் சேட்டிலைட் புகைப்படங்களில் இந்த போஸ்ட்டர்கள் தென்படுவதாகக் கூறியுள்ளனர்.

போஸ்ட்டர்களின் பின்னணியில் பின்னூட்டப் புயல் என்றும் பின்னூட்ட நாயகன் என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் இலவ்சக்கொத்தனாரின் அண்டம் தழுவிய ரசிகர்கள் இருப்பதாய் தெரிய வந்துள்ளது என உலக உளவுப் படை தலைவர் போலீஸ்காரர் சிக் ஷாம்பு தெரிவித்தார்.

இந்தப் போஸ்ட்டர் தாங்கியச் செயதியை இன்னும் பல இடங்களில் வேறு உருவங்களிலும் காணலாம் என உளவுப் பிரிவு மூன்றாவது கண் பிரிவுத் தலைவர் நைட் ஈகிள் கூறியுள்ளார்.

சற்று முன் கிடைத்தச் செய்தி..
இன்றோடு வலைப் பதிய துவங்கி ஓராண்டு முடித்த நிலையில் கொத்தனாரை வாழ்த்த அவரது ரசிகர்கள் பெரும் திரளாய் அவர் வலையகம் சென்று முண்டியடித்த நிலையில் உள்ளனர். ஆனால் வழ்க்கமாய் வூடு கட்டுவது போல் இன்று வூடு கட்டாமல் அவர் அதிசயமாய் தன் அலுவலக வேலைப் பார்ப்பதாய் கிடைத்தச் செய்தியால் அவர் ரசிகர்கள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் இது பற்றிய சிறப்பு செய்திகளை அறிந்துக் கொள்ள தவறாது பின்னூட்ட பகுதியைக் க்ளிக்கிக் கொண்டிருங்கள்...
ஹேப்பி பிளாகிங் கொத்ஸ் :)))

23 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

Happy Bloggings கொத்ஸ் !!! :)))

கலக்குறீக தேவு !! ஆமா அருமை அண்ணன் பின்னுட்ட மன்னனை புகழ்ந்துதானே இந்த பதிவு ?? ;)))))))))))))))

Unknown said...

//ஆமா அருமை அண்ணன் பின்னுட்ட மன்னனை புகழ்ந்துதானே இந்த பதிவு ?? ;))))))))))))))) //


அப்பூ பாண்டி இதுல்ல ஓனக்கு என்னய்யா சந்தேகம்?

சங்கத்தின் முதல் அட்லாஸ் வாலிபன்... நம் அண்ணனை இதுக்கு மேலயும் பாராட்ட ஆசைத் தான் ஆனா நிதி நிலைமை சரியில்லாதக் காரணத்தினால்.. மன்ற கண்மணிகள் கையேந்துவதை அண்ணன் அனுமதிக்காத காரண்த்தினாலும் இந்த அள்வில் இப்போது நிப்பாட்டிக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

//இன்று வூடு கட்டாமல் அவர் அதிசயமாய் தன் அலுவலக வேலைப் பார்ப்பதாய் கிடைத்தச் செய்தியால் //
தூக்கத்தில் ஆழ்ந்திருக்கப் போறாருங்க.. பாவம் :)

G.Ragavan said...

இலவசக் கொத்தனாரின் ஓராண்டுச் சாதனைகளைச் சொல்வதற்கு வலைப்பூவில் இடமே இல்லை. இதெல்லாம் சாதனையா என்று அவரது பதிவுகளைச் சொல்ல வைக்கும் அளவிற்கு அவரே அடுத்தடுத்து பெருஞ்சாதனைப் பதிவிடுவதில் அவரே வல்லவர். அப்பேர்ப்பட்ட பின்னூட்ட நாயகனை....வலைப்பதிவின் வயாக்கராவை...முதன்முதலில் வாழ்த்திய..வரவேற்ற..பின்னூட்டமிட்ட பெருமை எனக்குச் சேரும் என்று மிகமிகத் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
http://www.blogger.com/comment.g?blogID=20766087&postID=113688358896723305
கொத்தனார் வாழ்க வாழ்க என்று அகில உலகமும் பொங்கல் கொண்டாடுகிறது. தீபாவளி கொண்டாடுகிறது. கிருஸ்துமஸ் கொண்டாடுகிறது. ஈத் கொண்டாடுகிறது. என்னென்னவெல்லாம் பண்டிகைகள் உண்டோ அத்தனையும் கொண்டாடுகிறது. இந்த நாளை நாமும் பின்னூட்ட நாளாகப் பெருமைப் படுத்திக் கொண்டாட வேண்டும்.

Unknown said...

//தூக்கத்தில் ஆழ்ந்திருக்கப் போறாருங்க.. பாவம் :) //


பொன்ஸ் இந்த்க் குற்றச்சாட்டை நான் வன்மையாக மறுக்கிறேன்.. எங்கள் தலைவர் தமிழ் பின்னூட்டங்களின் நலனுக்காக தன் துயில் மறந்த மகான்... அந்த மாபெரும் மனித்னைப் பார்த்து தூங்கி விட்டார் என நீங்கள் சொல்லுவது மிகவும் தவறு... :)

Unknown said...

//அப்பேர்ப்பட்ட பின்னூட்ட நாயகனை....வலைப்பதிவின் வயாக்கராவை...முதன்முதலில் வாழ்த்திய..வரவேற்ற..பின்னூட்டமிட்ட பெருமை எனக்குச் சேரும் என்று மிகமிகத் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.//


பின்னூட்டப் புயலுக்கு முதல் பின்னூட்டமிட்ட ஆன்மிக சிங்கம் ஜி.ரா. வருக வருக...

Unknown said...

//கொத்தனார் வாழ்க வாழ்க என்று அகில உலகமும் பொங்கல் கொண்டாடுகிறது. தீபாவளி கொண்டாடுகிறது. கிருஸ்துமஸ் கொண்டாடுகிறது. ஈத் கொண்டாடுகிறது. என்னென்னவெல்லாம் பண்டிகைகள் உண்டோ அத்தனையும் கொண்டாடுகிறது. இந்த நாளை நாமும் பின்னூட்ட நாளாகப் பெருமைப் படுத்திக் கொண்டாட வேண்டும்.//

ஜி.ரா, அருமையான யோசனை.. இத்னை உடனடியாக அமுல்ப்டுத்துவோம்.

ஜனவரி 10 இந்த ஆMடு முதல் இனி ஒவ்வொரு ஆண்டு பின்னூட்டத் திருநாளாகக் கொண்டாடப்படும்.
உலக தமிழ் பின்னூட்டாளர்கள் அனைவரும் இதைக் கொண்டாடி பட்டயக் கிளப்புமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்,

ரவி said...

சூப்பர்....கொத்தனார் விக்கியில் கலக்குறதுக்கு இந்த பதிவு மூலமா ஒரு வாழ்த்து...!!!

இம்சை அரசி said...

ஹை.... பின்னூட்ட நாயகனுக்கே பின்னூட்டம் போடற வாய்ப்பா??!!!!

how lucky im????!!!!!!!!

சேதுக்கரசி said...

இலவசக்கொத்தனார் என்றால் ஃப்ரீ மேசன் Free Mason என்று நினைத்திருன்தேன். பாப் தி பில்டர் என்பதும் பொருந்துமோ? :)

ILA (a) இளா said...

//இன்றோடு வலைப் பதிய துவங்கி ஓராண்டு முடித்த நிலையில் கொத்தனாரை வாழ்த்த அவரது ரசிகர்கள் பெரும் திரளாய் அவர் வலையகம் சென்று முண்டியடித்த நிலையில் உள்ளனர். //
10--20 தேய் 10 20 தேய் அப்படின்னு டிக்கெட் போட்டு விக்கிறாங்கன்னா பார்த்துக்கங்களேன்

Unknown said...

//சூப்பர்....கொத்தனார் விக்கியில் கலக்குறதுக்கு இந்த பதிவு மூலமா ஒரு வாழ்த்து...!!!//

ரவி.. அண்ணனுக்கு வெறும் வாழ்த்து தானா? பின்னூட்டத் திருநாள் விஷ்யத்தை நாடெங்கும் பரப்பி நல்ல பெயர் எடுக்க வேண்டாமா?

இலவசக்கொத்தனார் said...

நம் முதலாண்டு அப்ரெய்ஸல் ஜிரா பண்ணும் பொழுது இருந்த டென்ஷனினால் அடக்கி வாசிக்க வேண்டியதாய் போயிற்று. அதான் அலுவலக வேலை செய்யற மாதிரி சீன் காட்ட வேண்டியதாப் போச்சு. அது நல்ல படியா முடிஞ்சுதா, இப்போ நிம்மதியா நடமாட முடியுது.

மத்தபடி நான் ஆபீஸ் போனாலே தூங்கறேன் என கொடி பிடிக்கும் யானைப்படைக்கு என் கண்டனங்கள். நான் வீட்டில் இருந்தாலும் தூங்குவேன் என்பதை மறைத்து இது போன்ற அனாவசிய குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் அப்படையின் நோக்கம் நாம் அறியாததா?

ஆனால் அதற்கு மயங்காமல், நம் இயக்கப் பணிகளைத் தொடர்ந்த தம்பி தேவை என்ன சொல்லிப் பாராட்டுவது. உன்னை நினைக்கும் பொழுதே என் கண்ணில் நீர் கோர்க்கிறதடா தம்பி.

பின்னூட்டப் பெருநாள் என்ற ஒரு கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்த ஆன்மீகச் செம்மல், சொற்சித்தர் அண்ணன் ஜிரா அவர்களுக்கு என் நன்றிகள்.

மற்றபடி இங்கு வந்து வாழ்த்தி இருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் என் மேலான நன்றிகள்.

Unknown said...

//ஹை.... பின்னூட்ட நாயகனுக்கே பின்னூட்டம் போடற வாய்ப்பா??!!!!

how lucky im????!!!!!!!! //

அய்யோ அரசியக்காவே வந்து வாழ்த்திட்டாங்க... ம்ம் கலக்கல்ஸ்.. தலைவருக்கு ராயல் பேமிலியில்ல கூட பேன்ஸ் ப்பா

Unknown said...

//இலவசக்கொத்தனார் என்றால் ஃப்ரீ மேசன் Free Mason என்று நினைத்திருன்தேன். பாப் தி பில்டர் என்பதும் பொருந்துமோ? :) //

அண்ணன் அவதாரங்களில் இது சும்மா ஒண்ணே ஒண்ணு ஜஸ்ட் சேம்பிள்

Unknown said...

//10--20 தேய் 10 20 தேய் அப்படின்னு டிக்கெட் போட்டு விக்கிறாங்கன்னா பார்த்துக்கங்களேன் //

இளா நோ சீட்டீங்...தலைவர் வலையுலகில் எல்லாமே இலவசம் தான்.. தலைவரில் புகழுக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது ஆமா

வல்லிசிம்ஹன் said...

தேவ்,

இப்படி ஒரு புன்னகைப் பதிவு படிச்சு ரொம்ப நாளாச்சு.

ஏழு கண்டங்கள்,பதினாறூ உலகங்கள்
எல்லாவற்றிலும்,
பொங்கலுக்கு முந்தின வாரமே ''கொத்தனார் கொண்டாட்டங்கள்''
ஆரம்பிக்கப் பட்டதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் சொல்லுகின்றன.:-)
நல் வாழ்த்துகள்.

Unknown said...

//நம் முதலாண்டு அப்ரெய்ஸல் ஜிரா பண்ணும் பொழுது இருந்த டென்ஷனினால் அடக்கி வாசிக்க வேண்டியதாய் போயிற்று. அதான் அலுவலக வேலை செய்யற மாதிரி சீன் காட்ட வேண்டியதாப் போச்சு. அது நல்ல படியா முடிஞ்சுதா, இப்போ நிம்மதியா நடமாட முடியுது.//

அப்ரேசலை அசால்ட்டாய் கடந்த எங்கள் அண்ணன் கொத்தனார் கொற்றம் வாழ்க..
அப்ரேசலை அழகாய் நடத்தி அண்ணனுக்கு மார்க் அள்ளிப் போட்ட ஆன்மீக மேலாளர் ஜி.ரா வாழ்க..

Unknown said...

//மத்தபடி நான் ஆபீஸ் போனாலே தூங்கறேன் என கொடி பிடிக்கும் யானைப்படைக்கு என் கண்டனங்கள். நான் வீட்டில் இருந்தாலும் தூங்குவேன் என்பதை மறைத்து இது போன்ற அனாவசிய குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் அப்படையின் நோக்கம் நாம் அறியாததா? //

அண்ணே எப்படை வந்தாலும் அதை அழிக்க நம் அன்பின் மருத்துவர் எஸ்.கே அய்யா லேட்டஸ்ட் ஆயின்மென்ட் தருவதாக நமக்கு வாக்குத் தந்துள்ளார்.. அதனால் நமக்கு கவலை இல்லை.. கொத்தனார் கொண்டாட்டம் எதற்கும் அஞ்சி நின்று விடாது இதை அனைத்துலகக் கொத்தனார் புகழ் பரப்பும் கோடானு கோடி தொண்டர்களின் சார்பாகக் கூறிக் கொள்கிறேன்.

Unknown said...

//ஆனால் அதற்கு மயங்காமல், நம் இயக்கப் பணிகளைத் தொடர்ந்த தம்பி தேவை என்ன சொல்லிப் பாராட்டுவது. உன்னை நினைக்கும் பொழுதே என் கண்ணில் நீர் கோர்க்கிறதடா தம்பி.//

இது போதும்ண்ணே... இந்த பீலிங் ஒண்ணு போதும்.. சிமெண்ட் சேக்காமல்லெ இன்னும் ஓனக்காகவே ஓராயிராம் வூடு கட்டுவேன்ண்ணே... (கண்ணு கட்டிகிச்சுப்பா)

Unknown said...

//பின்னூட்டப் பெருநாள் என்ற ஒரு கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்த ஆன்மீகச் செம்மல், சொற்சித்தர் அண்ணன் ஜிரா அவர்களுக்கு என் நன்றிகள்.//

அன்டார்ட்டிக்கா ரசிகர் மன்றம் பின்னூட்ட நாளை இப்போவேக் கொண்டாட ஐஸ் ஹவுஸ் எல்லாம் கட்டி வச்சுருக்காங்க.. அதுக்கு ஓப்பன் பண்ண நம்ம ஜி.ரா அண்ணனை இன்வைட் பண்ண ஆசப் படறாங்க.. அப்படியே அவர் அங்கே வந்ததும் உலகம் சுற்றும் செந்தமிழ் சித்தர் பட்டமும்... ஆறு கிலோ கப் ஐஸும், மூணு கிலோ குச்சி ஐசும் அவருக்கு கிப்ட்டாக் கொடுக்கப் ப்ரியப்படறாங்க.. நீங்க ஓ.கே. சொன்னாப் போதும்ண்ணே..

Unknown said...

//இங்கு வந்து வாழ்த்தி இருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் என் மேலான நன்றிகள். //

அண்ணன் ரூட்ல்ல நானும் நன்றிச் சொல்லிக்கிறேன்ங்கோ

Unknown said...

//தேவ்,

இப்படி ஒரு புன்னகைப் பதிவு படிச்சு ரொம்ப நாளாச்சு.//

வாங்க வல்லி சிம்ஹன், தலைவர் கொத்தனாரின் வாழ்க்கை லட்சியமே எல்லாருக்கும் இலவசப் புன்னகை கொடுப்பது தானே... அவர் தொண்டன் நான்.. அவர் கட்டளையைக் கடைப்பிடிக்கிறேன் அவ்வளவு தான்.. அதுக்காக நீங்க என்னை ஓவராப் புகழக் கூடாது. ஹி..ஹி..

//ஏழு கண்டங்கள்,பதினாறூ உலகங்கள்
எல்லாவற்றிலும்,
பொங்கலுக்கு முந்தின வாரமே ''கொத்தனார் கொண்டாட்டங்கள்''
ஆரம்பிக்கப் பட்டதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் சொல்லுகின்றன.:-)
நல் வாழ்த்துகள். //

தாங்க்ஸ்ங்கோ...

tamil10